<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஒரு படம் இரு விமர்சனம்


முந்தின நாள் இரவு விடிய விடிய ஆடிய ஆட்டத்தின் பலனாக ஹாலில் அங்கங்கே உருவங்கள் தூங்கிக்கொண்டிருந்தன... வார நாட்களில் தூக்கமாக வரும் எனக்கு வீக்கெண்டில் மட்டும் விடிகாலையே முழிப்பு வந்துவிடும்.. டைம் வேஸ்ட் செய்கிறோம் என்ற குற்ற உணர்ச்சி...

கே டிவி கனெக்சன் வாங்கினோம்னு பேருதான், 15 நாளாச்சி அத ஆன் செஞ்சே.... என்னதான் நடக்குது அதுல... திருப்பினா பேக்ட்ராப்ல பயங்கர புயல் அடிக்க, யாரோ ஒரு மவராசன் பாய்மர கப்பலோட கொடிக்கம்பத்த புடிச்சி சரசரன்னு ஏறுறாரு... சிவாஜியா இருக்குமோன்னு நினைக்கிறதுகுள்ள அரை கண்ண முழிச்சி என்ன நடக்குதுன்னு பார்த்துகிட்டு இருந்த ஒரு உருவம் "வஞ்சிக்கோட்டை வாலிபன்"னு ஒரு கத்து கத்திகிட்டு வாரி சுருட்டி வாகா படுத்தான்...

"அடப்பாவி எதுக்குடா இப்படி கத்துற"
"எவ்வளவு நாளா இத பாக்கணும்னு இருந்தேன்.. ரொம்ப நாளாச்சி பாத்து"
"ஓ பாத்த படத்துக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டமா"
"ஆமா, கண்ணும் கண்ணும் கலந்து ஒரு பாட்டு போதுமே, எவ்வளவு தடவ வேணும்னாலும் பாக்கலாம்"
"கண்ணும் கண்ணும் கலந்தா, நம்ம வீரப்பா சபாஷ் சரியான போட்டின்னுவாரே அந்த பாட்டா"
"அதேதான்"

நானும் படம் பார்க்க உட்கார்ந்துவிட்டேன்.. காரணம் இருக்கிறது.. அப்பொழுது ஏதோ ஒரு வீட்டில் ஒரு சின்ன ஹாலில் இருந்த ஒரு சின்ன ப்ளாக் & ஒயிட் டிவியின் முன் சம்மணம் போட கூட இடம் இல்லாமல் உட்கார்ந்திருந்த ஊர்க்கூட்ட இம்சையின் நடுவில் பார்த்துக்கொண்டிருந்த ஏதோ ஒரு பெயர் தெரியாத பாட்டு நிகழ்ச்சியில் வந்த "கண்ணும் கண்ணும்" பாடலின் வைஜயந்திமாலா நெஞ்சில் ஒட்டிக்கொண்டார்.. மறுநாள் இஸ்கோலில் கனவுக்கன்னி யார் என்ற கேள்விக்கு எல்லா பயல்களும் ராதா என்று சொல்லும்போது நான் மட்டும் வைஜயந்திமாலா என்று ஆரம்பித்துதான் எனது கனவுக்கன்னி பட்டியலை ஒப்பித்தேன்.. (ஆமா பின்ன கனவுக்கன்னின்னு ஒருத்தர மட்டும் சொன்னா மத்தவங்க கோச்சிக்க மாட்டாங்க?) இன்றும் அந்த பட்டியல் நீண்டிருக்கிறதே தவிர மாறவில்லை...


*

மாலுமியான ஜெமினி ஒரு முறை புயலில் சிக்கும் கப்பலை தன் சாதுரியத்தால் காப்பாற்ற அதற்கு பரிசாக கிடைக்கும் பணத்தை கொண்டு வாழ்க்கையை ஆரம்பிப்பார். அந்நாட்டு சேனாதிபதி (பி.எஸ்.வீரப்பா) ஜெமினியின் தங்கையை கடத்த அப்போது தப்பிக்க முயலும் தங்கை இறந்துவிடுவார். தங்கையின் மரணத்துக்கு பழி வாங்க புறப்படும் ஜெமினி கைது செய்யப்பட்டு சேனாதிபதியால் மரண தண்டனை வதிக்கப்படுவார். சிறையில் தன் தாயை சந்திக்கும் ஜெமினிக்கு அவரின் பழைய கதை சொல்லப்படும்... அந்த ஊர் ராஜாவின் இரண்டாம் மனைவியின் அண்ணனான சேனாதிபதி அரசனை கொன்று அரண்மனைக்கு தீவைத்து நாட்டை கைப்பற்றுவார். அப்போது அரசரின் விசுவாச திவான் சிறுவயது இளவரசரையும், இளவரசியையும்(பத்மினி) காப்பாற்றி படகில் ஏறி தப்பிவிடுவார்.. திவானின் மனைவி தமது குழந்தைகள் (ஜெமினி அவர் தங்கை) படகில் அனுப்ப முயலும்போது சிறை பிடிக்கப்பட குழந்தகள் மட்டும் படகில் சென்று விடுவர். அப்போது அவர்களை காப்பாற்றும் கப்பலிலேயே அவர்கள் வளருவர். அப்புறம்தான் படகு, புயல், பரிசு எல்லாம்... தாய் சிறையிலேயே உயிர்துறக்க ஜெமினி சிறையிலிருந்து கடலில் குதித்து தப்பி வேறொரு கப்பலால் காப்பாற்றப்படுவார். அதில் ஜெமினி அடிமை ஆக்கப்படுவார். இவர்கள் கப்பல் ரத்தினத்தீவு எனும் ஊரில் இருக்கும்போது அடிமையான ஜெமினியின் அழகில் ரத்தினத்தீவு இளவரசி (வைஜயந்திமாலா) மயங்குவார். ஆனால் ஜெமினி கடமை அழைப்பதாக சொல்ல பல பெட்டிகள் வைரம் கொடுத்து அனுப்பி வைப்பார்... அங்கே திவான் பத்மினியையும் இளவரசரையும் அழைத்துக்கொண்டு நாட்டுக்கே திரும்புவார். உள்நாட்டு கலகம் ஆரம்பிப்பதாக ஏற்பாடு. ஆனால் திவான் மீண்டும் சிறை பிடிக்கப்படுவார். பத்மினி ஜெமினியால் காப்பாற்றப்படுவார். வைர வியாபாரியாக அரண்மனைக்குள் நுழையும் ஜெமினி அரசி மற்றும் வீரப்பாவின் ந்ம்பிக்கையை பெற்று அவர்களை ஒரு விருந்துக்கு அழைப்பார். அதற்குள் ஜெமினியை தேடி வைஜய்ந்தி வருவார். ஜெமினி பத்மினியை காதலிப்பதாக வைஜயந்தி நினைக்க, எதிராக பத்மினி நினைக்க அதற்குள் ஒரு பாட்டு. போட்டி நடனத்தின் இடையில் வீரப்பாவின் வேடத்தில் சென்று தன் அப்பாவை சிறை மீட்பார் ஜெமினி. பிறகு உண்மை தெரிய, சண்டை நடுவில் வைஜயந்தி வீரப்பாவால் கொல்லப்பட இறுதியில் வீரப்பா ஜெமினியால் கொல்லப்படுவார். ஜெமினி பத்மினி திருமணம். சுபம்.

*

இனி விமர்சனம்... இது எனது முதல் பட விமர்சனம்... எனவே வார்த்தைகளை இன்னும் எப்படி சிறப்பாக அமைக்கலாம் என்று அனுபவசாலிகள் சொல்லி திருத்தினால் தன்யனாவேன்... அதன் மூலம் மேலும் பல விமர்சனங்கள் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு...

மேலும் இன்றைய தமிழ் வலைப்பூ குமுகாய சூழ்நிலைக்கு ஏற்றவாறு காலமாற்றத்தை அனுசரிக்கும் முகமாக சாதா விமர்சனம் மட்டும் இல்லாமல் செக்கூலர் விமர்சனமும் இணைக்கப்படுகிறது.

**

வஞ்சிக்கோட்டை வாலிபன் - விமர்சனம் (சாதா)

திடுக்கிடும் திருப்பங்கள் என்று எதுவும் இல்லை. அடிமையாக இருந்தாலும் இளவரசிக்கு காதல் வரும் என்று எதிர்பார்த்தபடியே ஒரே கோட்டில் பயனிக்கிறது கதை. படத்தின் பிற்பகுதியில் நிறைய நாடகத்தனம்.. ஆனால் 2006லும் படம் முடியும் வரை உட்கார வைக்கும் சுவாரசியம் இருந்தால் அன்றைய காலகட்டத்தில் இது எந்தளவு சுவாரசியமாக இருந்திருக்கும், எவ்வளவு வரவேற்பை பெற்றிருக்கும் என்பதை உணர முடிகிறது. டெக்னிகல் சமாச்சாரங்களில் பொதுமக்களுக்கு அந்தளவு பரிச்சயம் இல்லாத அந்த காலகட்டத்தில் படகு தத்தளிப்பது போன்றவை back-drop காட்சிகள் என்பதே புரியாத வண்ணம் தத்ரூபமாக அமைத்திருக்கிறார்கள். செட்டிங்க்ஸும் அபாரம்... அரண்மனை எரியும் காட்சி மினியேச்சர் என்பது அப்பட்டமாக தெரியும் அளவு மிகவும் அமெச்சூரிஷ்ஷாக இருப்பதை மட்டும் கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்...

ஆட்சிக்காக ஆளுபவரை கவிழ்ப்பது, பொய் கேஸ் போடுவது, ஏழை பணக்காரன் காதல் போன்றவை இன்றைய காலம் வரை மாறாமல் இருப்பது ஆச்சரியமே. என்னதான் ஆடை அவிழ்ப்பு எல்லாம் நிகழ்த்தினாலும் வைஜயந்திமாலாவின் கண்ணசைவில் கிடைக்கும் போதையை இன்றைய நடிகைகள் கொண்டு வரவே முடியாது என்பதுதான் உண்மை. இன்றைய காலகட்டத்தில் "தலைகள்" என்ன பஞ்ச் வசனம் பேசி என்ன பயன் "சபாஷ் சரியான போட்டி" வசனத்துக்கு ஈடாகுமா இவர்களின் திரையை நோக்கி விரல் நீட்டி விடும் வசனங்கள் ?

**

ஜெமினி கணேசன் எனும் பார்ப்பனர் - வெள்ளை பூண்டு, கோடாலி, பெருங்காய மஞ்சள் கூட்டு விமர்சனம். (செக்கூலர்)

ஆரிய நாட்டிலிருந்து வந்த ஜெமினி கணேசன், ஒரு பார்ப்பனர் என்று தெரியாமலேயே இஸ்லாம் மத பெரியவரான கப்பல் தலைவர் பாம்புக்கு பால் வார்த்த கதையாக பதினாயிரம் வராகன்களை கொடுத்து பிழைத்துக்கொள்ளும்படி சொல்வார். திராவிட குணம் என்பது கிஞ்சித்தாவது இருந்திருந்தால், இல்லை அய்யா, நான் கடமையைதானே செய்தேன் என்று ஜெமினி மறுத்திருப்பார். ஆனால் ஆரிய ஜெமினியோ முதலாளி விசுவாசம் சிறிதும் இல்லாமல் வெட்கம் கெட்ட தனமாக அந்த பணத்தை வாங்கிக்கொண்டு இதுகாரும் தன்னையும் தன் தங்கையையும் பாதுகாத்த தன் முதலாளியையும் சக தொழிலாளிகளையும் விட்டு விட்டு தன் வழியை பார்க்க போகிறார்...

தங்கை இறந்த பின் பழி வாங்க போன இந்த கசுமாலத்தை ஐயா பி.எஸ்ஸு.வீரப்பர் அவர்கள் தமிழர் பண்பாட்டின் படி மன்னிப்பது மாபெரும் தவறு. இதுவே வேறு யாராவதாக இருந்திருந்தால் மரண தண்டனை இல்லாமல் ஆயுள் தண்டனை தந்த பெரியவர் வீரப்பா அவர்களை உயிர் வாழும் காலம் வரை நன்றியோடு நினைத்திருப்பர். ஆனால் ஆரிய புத்தி என்ன என்பதை ஜெமினி படத்தின் இறுதி சண்டையில் கொஞ்சம் கூட நன்றி விசுவாசம் இல்லாமல் அய்யா வீரப்பரை கொல்வதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இவை எல்லாவற்றையும் கூட மன்னிக்கலாம். ஆனால் இதை பாருங்கள்... அடிமையாக ரத்தினத்தீவுக்கு வரும் ஜெமினி ரத்தினத்தீவின் இளவரசி வைஜயந்தியின் கருணையால்தான் உயிரே பிழைப்பார். பாம்பு குட்டி பார்க்க அழகாக இருந்தாலும் குணத்தால் பாம்புதான் என்பதை உணராமல் பழங்குடி இனத்தை சேர்ந்த வைஜயந்தி ஆரியரான ஜெமினியின் மீது மையல் கொள்வார். ஆனால் ஜெமினியோ பொய் சொல்லி, பல பெட்டிகள் வைரம் வைடூரியங்களையும் இளவரசியிடமிருந்தே வஞ்சகமாக அபகரித்து - இளவரசியே மனமுவந்து தந்ததாக இருந்தாலும், அவர் அப்பாவி... விவரமான ஜெமினி அதை தவிர்க்காமல் சூடு சொரணை அற்று ஏற்றுக்கொள்வது அபகரிப்பே - அதை கொண்டு மெயின் லேண்டிற்கு போய் பத்மினியை காதலிப்பார்.. ரத்தினத்தீவு ஒரு பழங்குடியினர் வாழும் பூமி என்பதை காண்பிக்க ஆளுயர கடவுள் வழிபாடு மூலம் உணர்த்த விரும்பும் இயக்குனர், பொருத்தமான காட்சி அமைப்பு என்று பழங்குடியினர் நரபலி எல்லாம் கொடுப்பார்கள் என்ற தோற்றத்தை உருவாக்க முயல்கிறார்.. அனேகமாக இப்படத்தின் கதையை சுஜாதாவின் தாத்தாதான் எழுதியிருக்க வேண்டும்.

ரத்தினத்தீவு பழங்குடியினர் வாழும் பூமியாக இல்லாமல் மேட்டுக்குடி நாடாக இருந்திருந்தால் ஜெமினிக்கு வைஜயந்தி மீது காதல் என்று கதையையே மாற்றியிருப்பர். ஒரு பழங்குடி இனத்தின் இளவரசி அளவில்லாத காதலை ஜெமினி மீது வைத்திருக்க அதை ஏற்றுக்கொள்ளாமல் கடல் கடந்து மேட்டுக்குடி வர்க்கத்தை சேர்ந்த பத்மினியை காதலிப்பது போன்று காண்பிப்பதை தடுக்காமல் சென்ஸார் போர்டு என்ன கிழித்துக்கொண்டு இருந்தது என்பதுதான் நமது கேள்வி. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஒரு இளவரசியாக இருந்தாலும் தாழ்த்தப்பட்டவரின் ஆசை என்பது கிள்ளுக்கீரையா? பழங்குடியினத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக வைஜயந்தியின் காதல் தோல்வி துயரத்தையும் அவர் அவமானப்படுவதையும் அணு அணுவாக காண்பிப்பது தமிழ் சினிமா என்பது உயர்குடி ஆதிக்கத்தில் எப்படியெல்லாம் சீரழிந்தது என்பதை சொல்லாமல் சொல்கிறது.. இதனால்தான் அம்பேத்கார் தமிழ் சினிமா பார்ப்பதையே தவிர்த்தார்.. மேலும் 1855 ஆகஸ்டு 37ம் தேதி விடுதலை இதழ் இதை பற்றி என்ன சொல்கிறது என்று பார்த்தால்.............




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


விமர்சனம் போரடிச்சுதப்பா... (நாளை - வியாழன் ஒரு மணிக்கு கேடிவியில் 'அம்பிகாபதி' போடுறாங்க. அதற்காவது ஒரு 'நச்' விமர்சனம் வேண்டுகிறேன்)
 



+குத்துப் போட்டாச்சு.
 



// விமர்சனம் போரடிச்சுதப்பா // ரெண்டு டைப் விமர்சனம் இருக்கு. அதுல எது? இல்ல ரெண்டுமேவா? இதுதான மொத விமர்சனம், போக போக பிக்கப் பண்ணிரலாம்.

// அதற்காவது ஒரு 'நச்' விமர்சனம் // "நச்" விமர்சனத்துக்கு நாற்பது வழிகள்னு புஸ்தகம் எதுவும் இருந்தா கொஞ்சம் சொல்லுங்க?

// வியாழன் ஒரு மணிக்கு கேடிவியில் // போடலாம்தான்.. ஆனா ஆபிஸ்ல கே.டிவி கனெக்சன் வாங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க..

**

வாங்க விமர்சன வித்தகியே.. +க்கு நன்றி.. எனது கன்னி விமர்சனப்பதிவு நல்லா இருந்ததா? அப்படியே நச் விமர்சனம் எழுதுவது எப்படின்னு உங்க அனுபவ டிப்ஸ் கொஞ்சம் கொடுங்க.. பாருங்க பாபா போரடிக்குதுங்குறாரு...
 



தலைவா,

உண்மை நிலவரம்
கதைச் சுருக்கம் - ரொம்ம்ம்ப நீளம்.
வஞ்சிக்கோட்டை வாலிபன் - விமர்சனம் (சாதா) - ஓக்கே.இன்னும் கொஞ்சம் சுவாரசியமா இருந்திருக்கலாம்.
விமர்சனம். (செக்கூலர்) - :-D

ஆனால் கட்சி விதிகளின் படி

விமர்சனம்னா நம்ம தலைவர் விமர்சந்தான். பேஷ் பேஷ் ரொம்ப நல்லா இருக்கே. சாதா விமர்சனம் பெட்டரா, செக்யூலார் விமர்சனம் பெட்டரான்னு கேட்டா எப்படி சொல்லறது. பாலும் வேணும் சக்கரையும் வேணும். அப்போதானே பாயாசம்.... தலைவர். வாழ்க. கட்சி. வாழ்க.
 



நான் மட்டும் வைஜயந்திமாலா என்று ஆரம்பித்துதான் எனது கனவுக்கன்னி பட்டியலை ஒப்பித்தேன்.. (ஆமா பின்ன கனவுக்கன்னின்னு ஒருத்தர மட்டும் சொன்னா மத்தவங்க கோச்சிக்க மாட்டாங்க?) இன்றும் அந்த பட்டியல் நீண்டிருக்கிறதே தவிர மாறவில்லை...//

அப்ப இன்னும் வைஜயந்திமாலா உங்க கனவுகன்னி பட்டியல்ல இருக்காங்களா?பாட்டி ஆயிட்டாங்க அவங்க....:-)))
 



இ.கொ :: விளம்பரத்தையும் சேத்தா படம் 4 மணிநேரம். அதான் சுருக்கமான கதையே நாவல் ரேஞ்சுக்கு நீண்டுபோச்சு.. சரி மணிரத்னம் பாணி சுருக் கதை சுருக்கம் ::

இளவரசிக்கு அழகன் மீது காதல். அழகனுக்கோ அபலை ராணியின் மீது காதல். அநீதியை வென்று நீதி ஜெயிப்பதே வஞ்சிக்கோட்டை வாலிபன். மீதியை வெள்ளித்திரையில் காண்க.

// தலைவர். வாழ்க. கட்சி. வாழ்க // தேர்தல் நேரத்துல இப்படியெல்லாம் சொல்லி கண்கலங்க வைக்கறீங்களே.. பழங்கதையெல்லாம் நினைச்சு மேடை போட்டு கதறணும் போல இருக்கே..
**
// இன்னும் வைஜயந்திமாலா உங்க கனவுகன்னி பட்டியல்ல இருக்காங்களா?பாட்டி ஆயிட்டாங்க அவங்க // செல்வன்... கடுகு சிறுத்தாலும் காரம் போகுமோ... பெருங்காய டப்பா காலியானாலும் வாசம் போகுமோ.. (இருந்தாலும் நம்ம பட்டியல்ல இருக்கற வைஜயந்திமாலா வ.கோ.வா வைஜயந்திமாலா மட்டும்தான்) உங்களுக்கு பிடித்த பழம்பெரும் நடிகை யார்?
 



உங்களுக்கு பிடித்த பழம்பெரும் நடிகை யார்? //

சிம்ரன்
 



பாபா & இ.கொ விமர்சனத்தை ஏற்று பதிவில் முன்பு இருந்த நீளமான கதை சுருக்கம் மேலும் சுருக்கப்பட்டது.. இருவருக்கும் நன்றி... முன்பு இருந்த ஒரிஜினல் ::
புயலில் சிக்கி தடுமாறும் கப்பலை காப்பாற்றுவதற்கு பரிசாக கப்பல் தலைவர் பரிசு கொடுத்து பிழைத்துக்கொள்ளும்படி சொல்வார். ஒரு ஊரில் வீடு எடுக்கும் ஜெமினி தன் தங்கைக்கு வரன் பார்ப்பார். ஒரு நாள் ராஜ துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறை போகும் கைதிகளில் ஒருவருக்கு தாகம் எடுக்க தண்ணீர் கொடுக்கப்போகும் ஜெமினியின் தங்கை மீது சேனாதிபதி பி.எஸ்.வீரப்பாவின் பார்வை விழுகிறது.. தங்கைக்கு வரன் அமைய பெண் பார்க்க வருபவர்களுக்காக சில ஏற்பாடுகளை செய்ய ஜெமினி வெளியே போகும் சமயத்தில் வீரப்பா ஜெமினி தங்கையை கடத்தி செல்வார். வழியில் ஜெமினியின் கண் எதிரிலேயே அவர் தங்கை வண்டியிலிருந்து விழுந்து இறந்துவிடுவார். தங்கையின் இறப்புக்கு பழி வாங்க புறப்படும் ஜெமினி கைது செய்யப்படுவார். தன் தங்கையை தானே கொலை செய்த்தாக அவர் மீது கட்டுக்கதை சுமத்தி வீரப்பா அவருக்கு மரண தண்டனை வழங்குவார். சிறையில் தன் தாயை சந்திக்கும் ஜெமினிக்கு அவரின் பழைய கதை சொல்லப்படும். அந்த அரசாங்கத்தின் திவானின் மகன்தான் ஜெமினி. ராஜாவின் இரண்டாம் மனைவியின் அண்ணனான வீரப்பாவின் ஒரு துரோக செயலுக்காக அவர் தண்டிக்கப்படும் போது மன்னரை கொன்று அரண்மனைக்கு தீவைத்து நாட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார் வீரப்பா. அப்போது அரசரின் இரு குழந்தைகளையும் (பத்மினி அவர் தம்பி) காப்பாற்றி படகில் ஏறி தப்பிவிடுவார் திவான். திவானின் மனைவி ஜெமினியையும் அவர் தங்கையையும் படகில் வைக்கும்போது சிறை பிடிக்கப்பட குழந்தகள் மட்டும் படகில் சென்று விடுவர். அப்போது ஒரு கப்பல் அவர்கள் இருவரையும் காப்பாற்றும். அதிலேயே வளருவர் ஜெமினியும் தங்கையும். அப்புறம்தான் படகு, புயல், பரிசு எல்லாம். கதை சொல்லி முடித்ததும் கடமை முடிந்த தாய் உயிரை விட ஜெமினி சிறை கோட்டையிலிருந்து கடலில் குதித்து தப்பி வேறொரு கப்பலால் காப்பாற்றப்படுவார். அது இவரை அடிமையாக ஆக்கிக்கொள்ளும். இந்த கப்பல் ரத்தினத்தீவு எனும் ஊரை அடைந்ததும் பொருளை இறக்கும் அடிமையான ஜெமினியின் அழகில் ரத்தினத்தீவு இளவரசி வைஜயந்திமாலா மயங்குவார். ஆனால் இவர் கடமை அழைப்பதாக சொல்ல பல பெட்டிகள் வைரம் கொடுத்து அனுப்பி வைப்பார் இளவரசி. அங்கே பத்மினியும் வளர்ந்திருக்க திவான் இளவரசரையும் பத்மினியையும் அழைத்துக்கொண்டு நாட்டுக்கே திரும்புவார். உள்நாட்டு கலகம் ஆரம்பிப்பதாக ஏற்பாடு. ஆனால் திவான் மீண்டும் சிறை பிடிக்கப்படுவார். பத்மினியை எதேச்சையாக ஜெமினி காப்பாற்றி தன்னுடன் அழைத்து செல்வார். வைர வியாபாரியாக அரண்மனைக்குள் நுழையும் ஜெமினி அரசி மற்றும் வீரப்பாவின் ந்ம்பிக்கையை பெற்று அவர்களை ஒரு விருந்துக்கு அழைப்பார். அதற்குள் ஜெமினியை தேடி வைஜய்ந்தி வருவார். இங்கே நடப்பதை அறியாமல் ஜெமினி பத்மினியை காதலிப்பதாக வையந்தி நினைக்க, எதிராக பத்மினி நினைக்க அதற்குள் ஒரு பாட்டு. போட்டி நடனத்தின் இடையில் வீரப்பாவின் சாரட்டில் சிறைக்கு சென்று தன் அப்பாவை காப்பாற்றுவார் ஜெமினி. மறுநாள் உண்மை தெரிந்து க்ளைமேக்ஸ் சண்டை, சண்டை நடுவில் வைஜயந்தி வீரப்பாவின் கத்தியால் கொல்லப்படுவார். இறுதியில் வீரப்பா கொல்லப்படுவார். ஜெமினி பத்மினி திருமணம். சுபம்.
 



// உங்களுக்கு பிடித்த பழம்பெரும் நடிகை யார்? சிம்ரன் //
தங்கத்தலைவியை பழம் "பெரும்" நடிகை ஆக்கியதற்காக அகில உலக சிம்ரன் ரசிகர் மன்ற தலைவர் (ex) என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.. இதை கண்டித்து நாளை காலை அண்ணா சிலை முன்பு சிம்ரன் ரசிகர்கள் ஒரு பத்து பேராவது திரண்டு தீக்குளிக்க வேண்டும் என்பதே என் அவா (என்னது நானும் வரணுமா, நான் இப்ப அ.உ.அஸின்.ர.ம.தலைவர்... அதனால தலைவிகிட்ட ஒரு வார்த்தை கேட்டுகிட்டு ஹிஹி)
 



ஏற்கனவே இரண்டு பிரபல வலைபதிவர்கள் தாங்கள்தான் அகில உலக அஸின் இரசிகர் மன்ற தலைவர்கள் என்று சொல்லிக் கொண்டுத் திரிகிறார்கள். அப்புறம் பொறாமையால் இந்த பதவியை நீங்க அபகரித்துக் கொண்டீர்கள் என்று நிறைமதியாய் கமெண்டு வரப் போகுது பாருங்க
 



இதென்ன அக்கிரமமா இருக்கு?10, 12 வருஷமா நடிச்சுட்டு இருக்காங்க.அதனால் சொன்னேன்.அதுக்கும் முன்னாடி நடிச்ச நடிகைகள்ன்னா அமலா,சிலுக்கு,கவுதமி பிடிக்கும்.இப்ப நடிக்கறவங்க யாரையும் தெரியாது.சன் டிவி கனெக்ஷன் வாங்கலை.மெகா தொடரா போட்டு கொன்னுகிட்டிருக்கான்.இந்த ஒப்பாரியை கேட்க மாசா மாசம் 20$ தண்டம் அழறது தேவையா?
 



"வ.கோ. வா"
முதல் எழுத்து எல்லாம் 'வ'-ல ஆரம்பிக்குது.
'வஞ்சி' யாரு? ஜெ-வா?
நடுவுல 'கோட்டை'ன்னு வேற வருது.
'வாலிபன்'ன்னும் சொல்றீங்க!

ஆக மொத்தம்,'வாலிபன்'[இருக்கறதுக்குள்ளே] விஜய்காந்த்தான், 'வஞ்சி'யைத் தள்ளிட்டு, அடுத்த 'கோட்டை' முதல்வர்னு சொல்ல வர்றீங்க!

கதைச்'சுருக்கம்' படம் பார்த்த உணர்வைத் தருது!

உள்குத்து சரியா வந்திருக்கா?
 



Mr. Mask,

செக்கூலர் பகடி ரொம்ப தமாஷ்... :-)

திரை விமரிசனத்தில் என்னுடைய அணுகுமுறை:

1. புதிய படம் என்றால், படிப்பவர்களுக்குப் படம் பார்க்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்ய உதவுவது தான் முக்கிய நோக்கம். கதை/காட்சிகளை அதிகம் விவரிக்காவிட்டாலும் பரவாயில்லை, கதையின் களனும், விமரிசகர் கருத்தும் பளிச்சென்று இருக்க வேண்டும்.

2. பழைய படம் என்றால், படிப்பவர்கள் முக்கால்வாசி பார்த்திருப்பார்கள் என்ற வகையில் நினைவுகளை அசை போட, புதிய கோணங்களை உணர்த்த உதவ வேண்டும். அட, அப்படிக் கூட யோசிக்கலாமே போன்ற விஷயங்கள் சுவை கூட்டும். குறிப்பிட்ட பிரபலமான காட்சிகளை விவரமாக வர்ணிப்பதும் படிக்க சுவாரசியமாக இருக்கும். A sense of shared appreciation gives a fulfilling validation for the reader - I am not trying to be patronizing here, I have been that reader many, many more times than the writer.

3. திட்டுவதில் ஹாஸ்யமும், புகழ்ச்சியில் நேர்மையும் இருக்க வேண்டும்.

4. நான் கொஞ்சம் contrarian ஆக இருக்கவும் முயற்சி செய்வேன் - எல்லாரும் புகழும் படத்தில் இருக்கும் நொட்டைகளைக் கண்டுபிடிப்பதில் ஒரு அலாதி அல்ப சுகம் இருக்கிறது :-)

5. பல்லாங்குழி விமரிசனம் (எல்லா விஷயங்களை - நடிப்பு, காமெரா, இசை, இயக்கம் - பற்றியும் ஒரு வார்த்தையேனும் எழுதுவது) தேவையில்லை. ஆங்கிலப் படங்களில் பெரும்பாலும் இசையைப் பற்றி நான் எழுதுவதேயில்லை - எனக்கு அது சற்றும் புரிவதில்லை என்பதால்.

கடைசி - முக்கிய - விதி:

6. எழுதப்போகும் விமரிசனத்தைப் பற்றி யோசிக்காமல் படம் பார்க்க வேண்டும் :-)

Enjoy!
 



// ஏற்கனவே இரண்டு பிரபல வலைபதிவர்கள் தாங்கள்தான் அகில உலக அஸின் இரசிகர் மன்ற // இருக்கலாம்.. ஆனா நாங்கதான் ரிஜிஸ்டர்டு தலைமை மன்றம்.

*

// 10, 12 வருஷமா நடிச்சுட்டு இருக்காங்க // அதுக்காக சிம்ரன போயி பழம்பெரும்னு சொல்லிட்டீங்களே.. ஆயிரக்கணக்கான வருசமா இருக்குன்னு நிலாவ கிழவின்னு சொல்ல முடியுமா?

// மாசா மாசம் 20$ தண்டம் அழறது தேவையா? // தெண்டம்தான்.. நானும் மாசா மாசம் இத துண்டிக்கணும்னு நினைக்கிறேன்.. ஆனா நடக்குறதில்ல.. பாக்காமலே காசு தரோம்.

*

SK.. வஞ்சிக்கோட்டை வாலிபன் விஜயகாந்தா.. வாலிபர்கள் ராஜ்யத்தை பிடிப்பது சினிமாவுல தாங்க நடக்கும். நிதர்சனத்தில் வாலிபத்தை கோட்டை விட்டவர்கள்தான் கோட்டையை பிடிப்பார்கள்.

*

ஸ்ரீகாந்த்.. நீங்க நல்ல விமர்சன இலக்கணங்கள சொல்லியிருக்கீங்க.. நான் "கண்ட" இலக்கணத்துல எழுதியிருக்கேன்.. இனி விமர்சனம் (அப்படீன்னு ஒன்னு எழுதுனா) உங்க பாயிண்ட்ஸும் குசும்பனின் சினிமா விமர்சனம் For Dummies பதிவும், எந்த படம்கிறத பொருத்து உபயோகப்படும்னு நினைக்கிறேன் :))

// நினைவுகளை அசை போட, புதிய கோணங்களை உணர்த்த உதவ வேண்டும் // நான் மடிக்கணினியில மேஞ்சிகிட்டே படம் பாத்தேன். அதுல எங்க போயி புது கோணத்த கண்டுபிடிக்கிறது..

// எழுதப்போகும் விமரிசனத்தைப் பற்றி யோசிக்காமல் படம் பார்க்க வேண்டும் // இதுவரை விமர்சனம் எழுத தோன்றாததால் அப்படி செய்ததில்லை.. ஆனா மருந்து குடிக்கும்போது குரங்கை நினைக்காமல் இருக்கும் மனம் (உங்க tag line இல்ல தெனாலிராமன் கதை) இனி வாய்க்குமோ தெரியவில்லை..
 



//இதனால்தான் அம்பேத்கார் தமிழ் சினிமா பார்ப்பதையே தவிர்த்தார்

:-)
 



இந்த மாதிரி secular பட விமரிசனங்கள் நிறைய வரவேற்கப் படுகின்றன. இன்றைய தமிழ் கூறும் நல்லுலகின் முக்கியத் தேவையே இது இது இது தான். மேலும் சிவகவி, ஸ்ரீ வள்ளி, பால நாகம்மா போன்ற படங்களையும் பார்த்து எழுதவும். சாம்பிளுக்கு மூன்று படம் மட்டும் எழுதி இருக்கிறேன்.
 



அற்புதம்! இது ஒரு நகைச்சுவை கட்டுரையெனில் உங்களுக்கு அபரிதமான நகைச்சுவை உணர்வு!

அல்லாமல் இது தற்போதய வலையுலகில் காணக்கிடைக்கும் கட்டுரைகளுக்கான பதிலெனில் "சோ"த்தனமான உத்தியை "சோதா"த்தனமாக பயன்படுத்தியதில் உங்களுக்கு முழுவெற்றி! :)
 



ஆரிய நாட்டு முகமூடியே,
நான் கடைசியாக தியேட்டரில் பார்த்த இந்த திரைப் படங்களுக்கு உங்கள் செக்யுலர் கருத்துகளை சொல்லுங்கள் ஐயா

1. இளமை ஊஞ்சலாடுகிறது
2. அவள் அப்படித்தான்

இரண்டு படங்களிலும் ஆரிய அயோக்கியன் கமலும் கன்னட கபோதி ரஜினியும் திராவிட நங்கை ஸ்ரீப்ரியாவை காதலித்து கஷ்டபடுத்துவதைக் கண்டு என் திராவிட தோள்கள் தினவெடுத்தன. ஆரிய மனதோ அடங்கு என்றது. ஆனால் கன்னட கண்கள் கலங்கின.... நடுவில் வந்த பகுத்தறிவு வேதியியல் சோதனை எல்லாவற்றையும் மறக்கடித்தது.

அது இன்னப்பா "பகுத்தறிவு வேதியியல் சோதனை"

யோவ்! Analytical Chemistry Test ந்னு சொன்னா ஆங்கில வெறியன்னு ஆரிய நாடான சிரியாவிற்க்கு அனுப்பிடுவாங்க
 



சரி, உங்க கருத்து ??