<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நாணயமான கருத்து கணிப்பு


முன்னூட்டம் ::

இந்த கருத்து கணிப்பு என் பார்வையில் எனக்கு தோன்றியதின் அடிப்படையில் எழுதப்பட்டது... இதற்கு எந்த சூட்கேஸ் பிண்ணனியோ, கட்சி அபிமான வரலாறோ, புவியியல் கட்டுப்பாடுகளோ கிடையாது... மூளையை கூட உபயோகிக்கவில்லை. இது முழுக்க முழுக்க என் அனுமானம் மட்டுமே. இது "ஒரு" மாதிரி இருந்தால் நான் மட்டுமே காரணம் அல்ல..

முன்வைப்பு தீர்மானங்கள் ::

சென்ற தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு விகிதாச்சார அடிப்பு அடையில் இந்த அலசல் முன்னெடுக்கப்படுகிறது... சென்ற தேர்தல் மைய அரசின் தலைவிதியை நிர்ணயிக்க நடந்தது என்றாலும் என்னை பொறுத்த வரை (என் குடும்ப) வாக்கு வங்கியில் ஒரு மாற்றமும் இல்லை.. சென்ற தேர்தலுக்கு பிறகு இன்று வரை ஆளும் அரசாங்கத்தின் செயல்களால் ஆதாயம் பெற்ற பொது மக்களின் ஓட்டுக்கள், அரசாங்கத்தின் செயல்களால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் பாதக ஓட்டுக்கள், கூட்டணி மாற்றங்கள் காரணமாக ஏற்பட்ட மக்களின் மனநிலை மாற்றங்கள், நடிகர்கள் மற்றும் துக்கடா கட்சிகளின் காரணமாக ஏற்படப்போகும் ஓட்டு பிரிப்புகள் போன்ற விஷயங்கள் நம் அரித்மெட்டிக் லாஜிக்குக்கு ஒத்துவராது என்பதால் அவை கணிப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறன...

அரித்மெட்டிக் ::

போன தேர்தலில் தொகுதிகள் 40. இந்த தேர்தலில் தொகுதிகள் 234.. குத்து மதிப்பாக 40 x 6 = 234. பெரிய அளவில் அலைகள் ஏதும் இல்லாத இந்த தேர்தலுக்கு சைக்ளோட்ரான் அரித்மெட்டிக் துல்லியமாக இருக்கும் என்பது என் கணிப்பு... அந்த அரித்மெட்டிக்படி தெளிவாக வரையறுக்கப்பட்ட இந்த தேர்தல் முடிவுகள் கீழ்க்கண்ட பட்டியலில் காணலாம்.


இது தற்போதைய நிலவரம்தான்... தேர்தலுக்கு சற்று முன் மீண்டும் ஒரு கருத்து கணிப்பு எடுக்கும் எண்ணம் உள்ளது... போன தேர்தல் போலவே இந்த தேர்தலிலும் மேற்கண்ட மாகாணங்களில் அதிமுக, மதிமுக, விசி போட்டியிடவில்லையெனில் இந்த கருத்து கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை...

குறிப்புகள் ::

அ) எதையாவது நினைத்துக்கொண்டு, அதை உண்மை என்று தீவிரமாக நம்பி, அதற்கு சைக்ளோட்ரான் யுக்தி என்று ஒரு பெயரும் கொடுத்து, இப்படியெல்லாம் எழுதும் உங்கள் பெயர் second half சேதுவா என்று பின்னூட்டம் இட நினைப்பவர்கள் தயவு செய்து ஒரு முறை முன்னூட்டத்தை படித்துவிட்டு உங்கள் வசதிக்காகவே இருக்கும் கீழ்க்கண்ட இன்ஸ்டண்ட் பின்னூட்டங்களில் ஒன்றை உபயோகப்படுத்தவும்.

இன்ஸ்டண்ட் பின்னூட்டங்கள் ::

அ) ஒரே ஒருவரின் அனுமானத்தை எழுதி அதை கருத்து கணிப்பு என்று எப்படி கூறலாம் என்று சிலர் கேட்கிறார்கள். இவர்களின் அறியாமையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.. ஒரே ஒருவருடையது என்றாலும் கருத்து கருத்துதானே.. தன் கருத்தை (மட்டும்) தானே கணித்தால் அது கருத்து கணிப்பு ஆகாதா..

ஆ) நான் எப்போதும் அண்ணன் தொல்.திருமா அல்லது அய்யா இராமதாசு ஆகியோரை மட்டுமே வழிபடுவது வழக்கம்.. ஆனால் தேர்தல் என்று வந்தால் நான் கண்டிப்பாக நம்பிக்கை வைப்பது க்ரீன் பார்ட்டியின் மீதே.. காரணம் அவர்கள்தான் எனக்கு பிடித்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதை தவிர க்ரீன் பார்ட்டி மீது ஒரு வெங்காய அபிப்ராயமும் இல்லை.. வெங்காயம் என்றவுடன் ஞாபகம் வருகிறது... விளக்கெண்ணெயில் வெண்டிக்காய் போட்டு வழவழ அவியல் செய்து கொண்டிருந்தேன்.. பாதியில் விட்டுவிட்டு கருத்து சொல்ல வந்துவிட்டேன்... அதை முடிக்க வேண்டும், வருகிறேன்.. நன்றி. (குறிப்பு :: க்ரீன் பார்ட்டியும் திருமா பார்ட்டியும் என் தொகுதியில் எதிர் எதிரே நின்றால் என் நிலைப்பாடு என்ன என்றெல்லாம் கேட்டு என்னை கடுப்பேற்றாதீர்கள்)

இ) போன தேர்தலின் போது சான்ப்ரான்சிஸ்கோ, நியூயார்க் மாகாண நிலவரம் குறித்து நான் அலசிய அலசலை ஏனோ அப்போது வெளியிட முடியவில்லை.. சரி, எழுதியது வீணாக்க வேண்டாம், அடுத்த தேர்தலின்போது வெளியிட்டுக்கொள்ளலாம் என்று பழைய பேப்பர்காரனுக்கு கூட போடாமல் சேமித்து வைத்திருந்தேன்.. பார்த்தால் நீர் காரியத்தையே கெடுத்த்துவிடுவீர் போலிருக்கிறதே.. தயவு செய்து அம்மாகாண கணிப்பை நீர் எழுதிவிடாதீர். இப்போதாவது என் எழுத்தை வெளியிட ஒரு சந்தர்ப்பம் கொடும்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நான் எப்போதும் அண்ணன் தொல்.திருமா அல்லது அய்யா இராமதாசு ஆகியோரை மட்டுமே வழிபடுவது வழக்கம்.. ஆனால் தேர்தல் என்று வந்தால் நான் கண்டிப்பாக நம்பிக்கை வைப்பது க்ரீன் பார்ட்டியின் மீதே.. காரணம் அவர்கள்தான் எனக்கு பிடித்த கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதை தவிர க்ரீன் பார்ட்டி மீது ஒரு வெங்காய அபிப்ராயமும் இல்லை.. வெங்காயம் என்றவுடன் ஞாபகம் வருகிறது... விளக்கெண்ணெயில் வெண்டிக்காய் போட்டு வழவழ அவியல் செய்து கொண்டிருந்தேன்.. பாதியில் விட்டுவிட்டு கருத்து சொல்ல வந்துவிட்டேன்... அதை முடிக்க வேண்டும், வருகிறேன்.. நன்றி. (குறிப்பு :: க்ரீன் பார்ட்டியும் திருமா பார்ட்டியும் என் தொகுதியில் எதிர் எதிரே நின்றால் என் நிலைப்பாடு என்ன என்றெல்லாம் கேட்டு என்னை கடுப்பேற்றாதீர்கள்)
 



வெண்டைக் காயை எங்களூரில் வெண்டை என்று அழைப்போம், பக்கத்து மாநிலமான கர்நாடகத்தில் பெண்டக்காய் என்று சொல்லுவார்கள். மலயாளத்தில் வெண்டெக்கா என்று பாவிப்பார்கள். ஆங்கிலத்தில் ஓக்ரா (OKRA ) என்று சொல்லுவதும் உண்டு.

ஆனால் வெண்டிக்காய் என்று எழுதி உமது சாதிப்பற்றை இந்த தமிழ் கூறும் நல்லுகத்துக்கு தெரிய வைத்தமைக்கும் , விளக்கெண்ணெய் வெண்டைக்காய் பொரியல ,தமிழ் சமையல் குறிப்புக்கும் நன்றி.
 



எப்படியோ, தேர்தல் முடியும் வரை, 'வேறு' வகையில் சிரிக்க வைத்து எங்கள் ஓட்டுகளை பெறலாம் என நினைக்கிறீர்கள் போல!!

என் கருத்துக்கணிப்புப்படி, கிழக்கு அமெரிக்க பகுதிகளிலும் இதே நிலைதான் என்று பக்ஷி சொல்கிறது!!
 



//விளக்கெண்ணெயில் வெண்டிக்காய் போட்டு வழவழ அவியல்//

அடடே ஆரஞ்சுக் கவுண்டியில வெண்டிக்காய் சரி... விளக்கெண்ணெய் கூடவா கெடைக்குது? நடாத்தும் ஓய் ;-)
 



இ) போன தேர்தலின் போது சான்ப்ரான்சிஸ்கோ, நியூயார்க் மாகாண நிலவரம் குறித்து நான் அலசிய அலசலை ஏனோ அப்போது வெளியிட முடியவில்லை.. சரி, எழுதியது வீணாக்க வேண்டாம், அடுத்த தேர்தலின்போது வெளியிட்டுக்கொள்ளலாம் என்று பழைய பேப்பர்காரனுக்கு கூட போடாமல் சேமித்து வைத்திருந்தேன்.. பார்த்தால் நீர் காரியத்தையே கெடுத்த்துவிடுவீர் போலிருக்கிறதே.. தயவு செய்து அம்மாகாண கணிப்பை நீர் எழுதிவிடாதீர். இப்போதாவது என் எழுத்தை வெளியிட ஒரு சந்தர்ப்பம் கொடும்...
 



இத்தனை துல்லியமான கருத்துக்கணிப்பை இப்போதுதான் பார்க்கிறேன். இது தவறானால் தீக்குளிக்கவும் தயார். Back with a bang.. (ரெண்டு நாள் கேப் உட்டாலும் இப்படி சொல்றதுதான் மரபு!)

ஆமா, என்ன நம்ம பக்கம் வரதே இல்லை?
 



இந்த வாட்டி அதிமுக பாஹா-விலயும் போட்டியிடறாங்க போலிருக்கு!.
 



ஒரே ஒருவரின் அனுமானத்தை எழுதி அதை கருத்து கணிப்பு என்று எப்படி கூறலாம் என்று சிலர் கேட்கிறார்கள். இவர்களின் அறியாமையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது.. ஒரே ஒருவருடையது என்றாலும் கருத்து கருத்துதானே.. தன் கருத்தை (மட்டும்) தானே கணித்தால் அது கருத்து கணிப்பு ஆகாதா..
 



Mugamudi, the name itself show your guts, you are talking about arithmetic, anything multiplied by zero is zero, everybody knows, (no need to put frame to display) I am silent reader of this blog (Reason for this silent is, I can read and speak Tamil can't write, simply I can describe myself with your desi language is I am ABCD, but love Tamil, want to master in Tamil). You are talking about election in India ,is third rated, have you ever analyze politician in USA (my country). only difference between Lallu, PMK, Thriumavalvan and Bush is dress code. Don't go for cheap publicity, there are lot of way in Tamil nadu, this blog is to have healthy and knowledge sharing media don't spoil by your third rated thinking. You have right to publish or ignore this comments. I don’t care what you are going to do. But you will have tough time in English blog (I know you are initiate some topic), I will come there with my real name and address. If you have guts, publish this and come to English blog that promoted by Kasi. I saw your profile, you are writing long time

By
Sundar
 



:)
நீராவது algorithm வெளியிட்டதற்கு நன்றி
 



பின்னூட்டத்தை அப்படியே வழிமொழிந்த அனாநிநாதருக்கு நன்றி.

*

நெல்லியப்பன், இப்போதான்யா இலக்கிய சுத்தமா பேசுகிறீர்.

*

எஸ்.கே. கிழக்கு அமெரிக்க கருத்து கணிப்பு நீங்க ஒண்ணு போடுறது..

*

குஷும்பர்.. எலி அம்மணமா ஓடக்கூடாதே.. கேஸ்டர் ஆயில் (எ) விளக்கெண்ணய் என்ற வார்த்தையில் கூட எதுவும் உள்குத்து உண்டா?

*

துளசி, நியூசி தேர்தல் கணிப்பு ஒண்ணு போடுங்க.

*

சுரேஷ்.. விரைவில் ப.ம.க மாநாடு பிரம்மாண்டமான முறையில் நடக்க இருக்கிறது. தீக்குளிக்க தயாராக வரவும்.

*

எனக்கு தெரிஞ்ச ஒரே பாஹா, பாஹா சிக்கன்ல இருக்கிற பாஹாதான் பெத்த ராயுடு. நீங்க எந்த பாஹாவ சொல்றீங்க (ஒரு வேளை மாஹேவை சொல்றீங்களோ)

*

இராம்ஸ், என்னதான் அறிவாலயத்தில் "எப்படி பேசுவது"ன்னு வகுப்பெடுத்தாலும் சொல்லிக்கொடுத்த படி அப்படியேவா பேசுவது.. கொஞ்சம் கலந்து கட்டி அடிங்க.. அப்பால நானும் அறிக்கை கொடுக்க வசதியா இருக்கும்ல..

*
anony sundar ;))) people like you make the world an interesting place dude..

*

அல்காரிதம் அநாநி.. நான் வெளியிட்டது அல்காரிதம் இல்லைங்கோ.. அல்காரிதம்னா ஒரு குறைந்தபட்ச லாஜிக்காவது வேணும். அரித்மெட்டிக் என்பது எண் கணிதம்... குத்துமதிப்பா நமக்கு தோணின நம்பர்கள எழுதி எதாலயாவது பெருக்கி ரிசல்ட் கொண்டு வருவது சைக்ளோட்ரான் அரித்மெட்டிக் (கோப்பிரைட் : முகமூடி)
 



life is indeed harsh :)

//English blog that promoted by Kasi.// whats this mugamoodi?
 



//குஷும்பர்.. எலி அம்மணமா ஓடக்கூடாதே.. கேஸ்டர் ஆயில் (எ) விளக்கெண்ணய் என்ற வார்த்தையில் கூட எதுவும் உள்குத்து உண்டா?//

நௌக்கா மக்கா ஆரஞ்சுக் கவுண்டியில வெளக்கெண்ணெய் கிடைக்கின்றதா என்ற கேள்வியில் என்ன உள்குத்தய்யா இருக்க முடியும்? எனக்குத் தெரிந்தவரை இணையத்தில் எலிக்குட்டியை வைத்து மூன்றாம் சோதனை மட்டுமே செய்யத் தெரியும்.

மற்றபடி குசும்பன் பயன்படுத்தக் கூடாத சொல்அகராதி இருந்தால் சொல்லவும். தன்யனாவேன். ;-)

ஆமாம் விளக்கெண்ணெய் குடித்திருக்கின்றீர்களா? உவ்வேக் என்று குமட்டல் வருமென்று கேள்வி.

(இதில் உள்குத்தேதுமில்லை என்று உறுதி கூறுகின்றேன் :-)
 



//தீக்குளிக்க தயாராக வரவும்//

நெருப்பாற்றில் நீந்தி வந்தவன் நான். தலைவன் ஆணையிட்டால் ஆயிரம் பேரை டீ குடிக்கவைக்கவும் தயாரான என்னிடமே உங்கள் திருவிளையாடலைத் தொடங்கி விட்டீரா?

மாநாட்டு செலவு முழுவதும் ரஷ்யச்செயலாளர்தானே பாத்துக்கப்போறார்? இந்த அரேஞ்ச்மெண்ட்டையும் அவர்கிட்டயே விட்டுடுங்க.
 



சரி, உங்க கருத்து ??