<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பின்நவீனத்துவ அரசியல்


முட்டைகளை அடைகாத்து முட்டை ஓட்டை தன் அலகினால் லேசாக உடைத்து குஞ்சு முட்டையிலிருந்து வெறியேற வழி செய்து குஞ்சுகளைத் தன் வெதுவெதுப்பான சிறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்து தானியங்களைத் தின்பதற்கு கற்றுக்கொடுத்து எல்லாம் ஒழுங்கான தாள லயத்துடன் நடந்து கொண்டிருக்கும்போதே ஆகாயத்திலிருந்து சரேலெனப் பாய்ந்து குஞ்சுகளைத் தன் காலிடுக்கில் எடுத்து செல்லும் பருந்துகளுக்கு மிஞ்சிப் பிழைக்கும் குஞ்சுகள் ஒன்பது கூட இல்லை என்றால் இந்த உலகில் ஒழுங்கு எங்கே உள்ளது?

ஸீரோ டிகிரி நாவலிலிருந்து. இதை படிக்கும்போது ராமதாஸ், திருமா, ஜெயலலிதா ஞாபகத்துக்கு வந்தால் ஆசிரியர் பொறுப்பல்ல.

*

தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு ஆகியவற்றில் இருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை ஆகியவையாக ஆனால் அதற்கு பின்நவீனத்துவம் என்று பெயர். எந்த ஒழுங்கிற்கும் வராது போனால் ரொம்ப அருமையான பின்நவீனத்துவம் என்று சொல்கிறார்கள்.

திண்ணையில் வந்த ஒரு கட்டுரையில் இருந்து சுடப்பட்டதில் இருந்து சுடப்பட்டது.

*

.... அடுத்தவரின் சார்பு நிலையை குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்று சர்டிபிகேட் கொடுக்க முடிகிறது உங்களால்... அடுத்த எலக்சனில் பாமக கூட்டணி வகிக்கும் கட்சி வி.சிக்களுக்கு இடம் கிடையாது என்று கை விரித்தால் தனக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து வி.சிக்கு இடம் தருவோம் என்று பாமக் சொல்லும்பட்சத்தில் சந்தோஷமடைவோம்... அதுவரை காழ்ப்புணர்ச்சி அது இது என்றெல்லாம் சொல்லாமல், முடிந்தால் நடுநிலைமையோடு....

முகமூடி, நவம்பர் 21, 2005

*

போட்டோல கைகள் இணையலை! பொத்திய கைகளுக்குள் விரலைப்பிடிச்சி சீட்டுபேரம் நடக்கறாப்படிதான் தெரியுது! பேரம் படியாமப்போகட்டும்! அன்னைக்கு இருக்கு இதைவிட தமாசு!

இளவஞ்சி, வலைப்பதிவர். நவம்பர் 17, 2005

*

கேள்வி :- அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து உள்ளீர்களே. மனநிலை எப்படி உள்ளது.

திருமாவளவன் :- மகிழ்ச்சியாக இருக்கிறேன். அ.தி.மு.க-விடுதலை சிறுத்தை இயக்க கூட்டணி மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. மக்கள் இந்த கூட்டணிக்கு மகத்தான வெற்றியை வழங்குவார்கள்.

மாலைமலர், பிப்ரவரி 28, 2006

*

திருமாவளவன் :: அ.தி.மு.க.,வுடன் விடுதலை சிறுத்தைகள் கூட்டணி வைத்து கொண்டதற்காக மகிழ்ச்சி அடையவில்லை.

தினமலர், மார்ச் 1, 2006


*

...விடுதலை சிறுத்தைகளும், பா.ம.க.வும் ஒரே அணியில் இருக்க விரும்பி கூட்டணியில் எங்களை சேர்க்க ராமதாஸ் முயற்சித்தார். ஆனால் கருணாநிதி பா.ம.க. உள் ஒதுக்கீடு செய்யலாம் என்று சொல்லி அக்கட்சியின் வலிமையை குறைத்து மதிப்பிட்டார். பந்தியில் இடம் இல்லை. வேண்டுமானால் பா.ம.க. இலையில் பங்கு போட்டுக்கொள்ளலாம் என்பதுதான் அதன் பொருள். கிட்டத்தட்ட எச்சி இலையை எடுப்பது போன்றதுதான் அது. ஒடுக்கப்பட்ட மக்களை இந்த வார்த்தை காயப்படுத்தியது. (அப்படியா??) இந்த நிலையில் பா.ம.க. தரப்பில் கலைஞர் இது போன்ற வார்த்தையை சொல்லி இருக்க வேண்டாம் என்று கூறுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அது நடக்கவில்லை...

மாலைமலர், பிப்ரவரி 28, 2006

*

திருமாவளவன் :- ஆனாலும் தேர்தலில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்காகத்தான் முழுமூச்சாகப் பாடுபடுவோம். இதில் நட்பு(க்) கட்சி என்று பார்க்க முடியாது. எதிரணியில் யார் போட்டியிட்டாலும் கடுமையாக எதிர்ப்போம்.

தினமணி செய்தியென தேர்தல் வலைப்பதிவு

*

... வாழ்க்கைமுறையில் பெரிய மாற்றமில்லாமல், எந்த வித விழிப்புணர்ச்சியும் இல்லாமல், எந்த வித முன்னேற்றமுமில்லாமல் இரண்டு சமூகங்களும் அடித்துக்கொண்டு செத்தபோதெல்லாம் இவர்கள் இணைய மாட்டார்களா என சிறுவயதிலிருந்தே ஆதங்கப்பட்டவன் நான், அந்த சூழலில் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இந்த இணைப்பு எத்தனை முக்கியமென...எத்தனை தேவையென. இளவஞ்சி அவர்கள் சீட்டுக்காகவோ, சுயநலத்திற்காகவோ அல்லது என்ன எழவுக்காக இணைந்தாலும் இந்த இணைப்பு இரு சமூக மக்களிடம் பெரும் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டுள்ளது என்பது உண்மை...இது மற்றவர்களுக்கு புரிகிறதோ இல்லையோ எம் போன்றவர்களுக்கு புரியும்....

...மிதி வண்டி மோதிக்கொண்டால் கூட கலவரம் வெடித்த நிலை மாறி இன்று ஒரே வாகனத்தில் ஒரு புறம் பாமக கொடியும் ஒரு பக்கம் விடுதலை சிறுத்தை கொடியையும் கட்டிக்கொண்டு ஒன்றாக கூட்டங்களுக்கு செல்வதையும் ஒன்றாக பணியாற்றுவதும் வார்த்தைகளால் சொன்னால் அந்த சூழலை பார்க்காதவர்களுக்கு சத்தியமாக இந்த இணைப்பின் மாற்றம் புரியாது....

குழலி, வலைப்பதிவர். நவம்பர் 18, 2005

*

திருமாவளவன் :: ஏழு கட்சி கூட்டணி வைத்துக்கொண்ட கருணாநிதிக்கு எட்டாவது கட்சியாக விடுதலை சிறுத்தைகளை சேர்த்து கொள்வதில் என்ன தயக்கம்?

தினமலர், மார்ச் 1, 2006

*

கேள்வி :- ஈழப்பிரச்சினையில் வேறு கொள்கையுடைய அ.தி.மு.க.வுடன் சேர்ந்து உள்ளீர்களே?

திருமாவளவன் :- ஈழத்தமிழர் பிரச்சினையில் எங்களுக்கு என்ன நிலைப்பாடு இருக்கிற தோ அதே நிலைப்பாடு அ.தி.மு.க.வுக்கும் இருக்கிறது.

மாலைமலர், பிப்ரவரி 28, 2006

*

கேள்வி :- பா.ம.க.வை அழைக்க வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் நீங்கள் பேசுவீர்களா?

தமிழ் பாதுகாப்பு இயக்க போராளி திருமாவளவன் :- அந்த நிலை பா.ம.க.வுக்கு இல்லை. அவர்கள் பேசுவதற்கான 'சேனல்' இருக்கிறது.

மாலைமலர், பிப்ரவரி 28, 2006

*

// எப்போது இந்த பொய் பிரச்சாரம் //

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

என்ற குறளுக்கு ஒழுக்க சீலரைப் போல உலகத்தை ஏமாற்றும் வஞ்சகரைப் பார்த்து அவரது உடலில் கலந்துள்ள நிலம், நீர், தீ, காற்று, வெளி எனப்படும் பஞ்சபூதங்களும் தமக்குள் சிரித்துக் கொள்ளும் என்று பொருள் சொல்கிறார்கள்... இங்கு வஞ்சகர் என்பது ஒரு மனைவி மட்டும் கொண்டிருந்தாலும் நம்பியவரை கைவிடுதல், வாக்கு மாறுதல், நம்பகத்தன்மை இல்லாமை, சுயநலத்துக்காக பொதுநல சொத்துக்களுக்கு பங்கம் ஏற்படுத்துதல், சுயநலத்துக்காக அப்பாவிகளை உபயோகப்படுத்துதல், தனி மனித வன்முறை, பொது இடத்தில் நாகரீகம் இல்லாமல் கண்டபடி பேசுதல் போன்ற விஷயங்களை... இது உங்களுக்கும் தெரியும், இருந்தாலும் சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்லி மட்டையடித்தால் அதற்கு உண்மைத்தோற்றம் தரலாம் என்றுதான்...

முகமூடி, நவம்பர் 18, 2005

*

தன்னெஞ் அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்

திருவள்ளுவர் & திருவாளர் குழலி

*

தொடர்ச்சி, நீரோட்டம், தொகுப்பு, நேர்கோடு ஆகியவற்றில் இருந்து விலகி தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மை ஆகியவையாக ஆகும்பொழுது அதற்கு பின்நவீனத்துவம் என்று பெயர். எந்த ஒழுங்கிற்கும் வராது போனால் ரொம்ப அருமையான பின்நவீனத்துவம் என்று பொருள்.




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


பின்நவீனத்துவ அரசியல் கட்டுரை.?????????.........
 



நீங்க ஆசைப்பட்டது நடந்துடுச்சா?
 



// பின்நவீனத்துவ அரசியல் கட்டுரை? //

பின்நவீனத்துவமும் அரசியலும்னு ஒரு உம்மை தொகையோடத்தான் கொடுக்கலாம்னு இருந்தேன். ஆனா ஆழமான பதிவாயிடுச்சின்னா என்னன்னு இப்படி ஒரு தலைப்பு. இத பின்நவீனத்துவம் + அரசியல் கட்டுரை அல்லது பின்நவீனத்துவ அரசியல் + கட்டுரைன்னு எப்படி வேணுமின்னாலும் உங்க வசதிக்கேற்ப படிச்சுக்கலாம்.

அப்புறம் அரசியல் விமர்சனம் பண்ற உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் "கூட்டு என்பது மகிழ்ச்சி இல்லை இல்லை மகிழ்ச்சி இல்லை"ன்னு நாளொரு வண்ணமா தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மையா வர அரசியல் நிகவுகள பத்தி நாலு வார்த்தை சொல்லாம போனா என்ன மாதிரி அரசியல் கத்துகுட்டிங்க என்னத்த பண்றது??
 



// நீங்க ஆசைப்பட்டது நடந்துடுச்சா? //

நான் ஆசைப்பட்டது கிடக்கட்டுங்க சுதர்சன். அது பத்து பைசா பிரயோசனம் இல்லாதது. பிரயோசனமா நாம வேற விஷயம் பேசலாம் வாங்க.

என்ன எழவுக்காக இணைந்தாலும் இந்த இணைப்பு இரு சமூக மக்களிடம் பெரும் புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொண்டுள்ளதுன்னு எல்லாரும் சந்தோஷப்பட்டுகிட்டு இருக்கற காலகட்டத்துல இப்படி ஒரு முடிவு... தமிழ் களத்துல நண்பன், அரசியல் களத்துல எதிரிங்கறது எவ்வளவு பேருக்கு புரியும்னு தெரியல..

குடிதண்ணி லேசா கரிக்கிதுன்னு கடல் தண்ணிய குடிச்சானாம் ஒருதன்ற கதையா, ப.ம.கவோட சீட்ட பங்கு போட்டுக்கோங்கன்னு சொன்னது மரியாதை குறைச்சல்னு சொல்லிகிட்டு ஜெயலலிதாகிட்ட போயி சேர்ந்திருக்காரு திருமா. பமகவும் விசியும் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதான்னு இவங்களே சொல்லிகிட்டதுதானே, அதுவும் பாமக விசிக்கு உள் ஒதுக்கீடு பண்றேன்னு தான அதிக சீட்களுக்கு பேரம் பேசிகிட்டு இருந்தது. இப்ப மட்டும் எப்படி திடீர்னு மரியாதை குறைச்சலா தெரியுது... அது எப்படிங்க, தன்ன மதிச்சி பேச கூப்பிடலங்கறத "ஒடுக்கப்பட்ட மக்களை இந்த வார்த்தை காயப்படுத்தியது"ன்னு கூசாம சொல்ல முடியுது.

மிதி வண்டி மோதிக்கொண்டால் கூட கலவரம் வெடித்த நிலை மாறி இன்று ஒரே வாகனத்தில் ஒரு புறம் பாமக கொடியும் ஒரு பக்கம் விடுதலை சிறுத்தை கொடியையும் கட்டிக்கொண்டு ஒன்றாக கூட்டங்களுக்கு செல்வதையும் ஒன்றாக பணியாற்றுவதையும் பார்த்து புளகாங்கிதம் அடையும் நேரத்துல கஷ்டப்பட்டு ஒரு ஷேப்புக்கு கொண்டு வந்த கண்ணாடி ஜாடிய படீர்னு போட்டு உடைச்சிட்டாரு திருமா... ஜஸ்ட் ஒரு ஒன்பது சீட்டுக்காக. இந்த ஒன்பது சீட்டினால விசி என்ன சாதிக்க போகுது. அரசியல் கமிஷனின் அங்கீகாரம் கிடைச்சிட போகுதா? அல்லது தங்களது கூட்டணி தர்மத்தை நாளை அதிமுக மீறினால் அதனால அதிமுகவுக்குத்தான் அறைகூவல் விட முடியுமா? அட, ஒன்பதுக்கு ஒண்ணோ ரெண்டோ குறைச்சலா இருந்தாலும் பாமக உள் ஒதுக்கீடா திமுக கூட்டணியிலயே இருந்திருந்தா இவ்வளவு நாளா பொறுமையா எழுப்பிய இரு சமுதாய மக்களின் ஒற்றுமையே அப்படியே அடுத்த நிலைக்கு எடுத்து போயிருக்கலாமில்ல??
 



//கேள்வி :- ஈழப்பிரச்சினையில் வேறு கொள்கையுடைய அ.தி.மு.க.வுடன் சேர்ந்து உள்ளீர்களே?

திருமாவளவன் :- ஈழத்தமிழர் பிரச்சினையில் எங்களுக்கு என்ன நிலைப்பாடு இருக்கிற தோ அதே நிலைப்பாடு அ.தி.மு.க.வுக்கும் இருக்கிறது.//

இது! இது!

இது தேர்தல் கூட்டணி. இல்லை, தொகுதி உடன்பாடு மட்டுமே, திருமாவின் கொள்கைகளில் சமரசம் இல்லை என்று சால்ஜாப்பு சொல்லிக் கொண்டு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்த ராசாதிராசர்கள் படிக்க வேண்டிய விஷயம்.

திருமா சீரியஸாக ஜோக்கடிக்கிறார். அந்த விஷயத்தில் அசோகமித்ரன், சுந்தர ராமசாமி ஆகியோருக்கு இணையான திறமை வெளிப்படுகிறது. இலங்கைத் தமிழர் பிரச்னையில் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் ஒரே நிலைப்பாடுதானாமே.

ராம்வாட்சுகள்கூடவே திருமாவாட்சும் தேவைப்படுகிற நேரமோ இது!

மற்றபடி, மலரும் நினைவுகளை எடுத்துப் போட்டமைக்கு நன்றி. இந்தக் கூட்டணியைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து பதட்டத்தில் இருந்தவர்கள் இப்போது உங்களின் மலரின் நினைவுகளைப் படித்துவிட்டு, அடையப்போகிற எக்ஸ்ட்ரா டென்ஷன்களும் ஏராளமாக இருக்கும். இடையில் இட்லிவடை வேறு, இதோ வை.கோ. கிளம்பிவிட்டார். அணி மாறுகிறார் என்று புலி வருது கதை ரேஞ்சில் எல்லாருடைய வயிற்றெரிச்சலையும் கொட்டிக் கொள்கிறார் :-)

எனக்கென்னவோ, திருமா கொஞ்சம் அனுசரித்துத் தி.மு.க. தலைமையிலேயே தொடர்ந்திருக்கலாம் என்றே படுகிறது. ஏற்கனவே இன்னொரு கட்சியின் சின்னத்தில் (தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில்) சென்ற தேர்தலில் போட்டியிட்டபோது வராத கௌரவப் பிரச்னையா, பா.ம.க.வின் தொகுதிகளை உள்பகிர்ந்து கொள்ளும்போது வந்திருக்கும்? தி.மு.க.வுக்குத் திருமாவின்மீது ஆர்வம் இல்லை என்பது உண்மையின் ஒரு பகுதி என்றால், திருமாவுக்குத் தி.மு.க. மீது ஆர்வம் இல்லை என்பது உண்மையின் மறுபகுதி.

கருணாநிதியின் அணுக்கத் தொண்டர்களாகவும், அதே நேரத்தில் திருமா அண்ணனின் அன்புத் தம்பியுமாக இருந்தவர்கள் அஞ்ஞாதவாசத்தில் இருந்து திரும்பி வந்து உதிர்க்கப் போகிற முத்துகளையும் சேர்த்து வையுங்கள். பின்னர் உதவலாம்.

பழைய பார்முக்கு வந்துட்டீங்க முகமூடி! அடிச்சு ஆடுங்க.

வாழ்த்துகளுடன், பி.கே. சிவகுமார்
 



ஜெ நடத்திய மிகப் பெரிய நாடகம்: ராமதாஸ் ::

கூட்டணி தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டார் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் தனது பண்ணை வீட்டில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,

கூட்டணி விஷயத்தில் தம்பி திருமாவளவனின் முடிவு அவசரப்பட்டு எடுக்கப்பட்டதாகும். அவரை கூட்டணியில் சேர்ப்பதற்காக நான் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருந்தேன்.

திருமாவளவன் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடுமையான கருத்து எதையும் கொண்டிருக்கவில்லை. திருமாவளவனுக்கு எதிராகவும் அவர் எதையும் சொல்லவில்லை. ஆனால் அதற்குள் அவசரப்பட்டு அதிமுக அணியில் சேர்ந்து விட்டார் தம்பி.
 



வாங்க பி.கே.எஸ்ஸ¤ // திருமாவுக்குத் தி.மு.க. மீது ஆர்வம் இல்லை என்பது உண்மையின் மறுபகுதி. // இது என்ன புதுக்கரடி... அய்யா கூப்பிடலையின்னுதானே தம்பிக்கு வருத்தம். எவ்ளோ தடவை சொல்லி சொல்லி மாஞ்சு போறாரு. நீங்க என்னடான்னா...

// பழைய பார்முக்கு வந்துட்டீங்க முகமூடி // இது என்ன சைடு கிக்கு... எனக்கு ஏதுங்க பார்மு..
 



திருமாவை பேச்சு வார்த்தைக்கு கூப்டு அப்டியே அமுக்கிப்புட்டாங்க அம்மா-ன்னு பேசிக்கிறாய்ங்க, அதை தான் டாக்டர் சொல்லி இருக்காருன்னு நினைக்கிறேன்.
எது எப்படியோ, வைகோ-வுக்கு ஆசை காட்டிட்ட மாறி இருக்கு. பாப்போம்.
 



அந்த பதிவுக்கு 100+ பின்னூட்டம் வந்துதே. இதுக்கு எவ்வளவு வருதுன்னு பாத்தா, அங்க பேசின யாரையுமே இங்க காணுமே? அதிர்ச்சியில வாய் பேச முடியாம ஆயிருச்சா? அதுக்கு மருத்துவரைப் போய் பாத்தாங்களா?

சுவாரசியாமா போகும்ன்னு எதிர்பாத்த பதிவு இப்படி சுரத்தே இல்லாம போச்சே.
 



// பேச்சு வார்த்தைக்கு கூப்டு அப்டியே அமுக்கிப்புட்டாங்க அம்மா // என்னங்க அம்மாவ சேல்ஸ்வுமன் ஆக்கிட்டீங்க... பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டாலும் போகாம புலி மாதிரி இருந்த வைகோ எங்க... போகும்போதே ஒரு முடிவோட போன திருமா எங்க... சரி புலி புலிதான் சிறுத்தை சிறுத்தைதான். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

அம்மா பத்து சீட்டுதான் தரதா முதல்ல நினைச்சாங்களாம்... ஆனா அம்மாவுக்கு ராசியான ஒன்பது சீட்டு போதும்னு... இது ஒரு ஜோக்கு... :)))) ஸ்மைலி போட்டுக்கறேன்பா... எதுக்கு வம்பு.
 



அய்யய்யோ இலவசக்கொத்தனார்... இணையத்துக்கு புதுசா.. இப்படி சபையில கேக்கக்கூடாத விஷயமெல்லாம் கேக்கறீங்களே... சரி உடுங்க தெரியாம பண்ணிட்டீங்க.. இது முத தடவங்கறதால மன்னிச்சு உங்களுக்கு சில பல (தனி) விளக்க மெயில்கள் அனுப்புவாங்க... படிச்சி பாத்து பதவிசா நீக்கு போக்கு தெரிஞ்சி நடந்துகோங்க... அதுக்கப்புறமும் இந்த மாதிரி சபையில ஏடாகூடமா கேள்வி கேட்டீங்கன்னா உங்க கதை கந்தல் சொல்லிபுட்டேன்...
 



//"கூட்டு என்பது மகிழ்ச்சி இல்லை இல்லை மகிழ்ச்சி இல்லை"ன்னு நாளொரு வண்ணமா தொடர்ச்சியின்மை, சிதறல், முடிவின்மை, மையமின்மையா வர அரசியல் நிகவுகள பத்தி நாலு வார்த்தை சொல்லாம போனா என்ன மாதிரி அரசியல் கத்துகுட்டிங்க என்னத்த பண்றது??//

ஹி ...ஹி...கூட்டணி ஃபைனல் அணி நிலவரம் வரட்டும்னே.. .பண்ணிடுவோம். இப்ப ஏதாச்சும் நாம் சொல்லக்கொள்ள அத்த அவங்க மாத்த அப்புறம் நாங்க பதிவை எடுக்கவேண்டி வரலாமில்லையா..அதுக்குத்தான்.

//ப.ம.கவோட சீட்ட பங்கு போட்டுக்கோங்கன்னு சொன்னது மரியாதை குறைச்சல்னு சொல்லிகிட்டு ஜெயலலிதாகிட்ட போயி சேர்ந்திருக்காரு திருமா//

பா.ம.க மட்டும் இல்லை..யார்கிட்டேயும் சீட் பங்கு போட முடியாது என்பது தான் திருமாவின் நிலை.எங்களையும் தனிக்கட்சியா மதித்து அழைத்து பேசவேண்டும் என்பதை அவர் ஏற்கனவே சொல்லியிருக்கிறார்.

தமிழ் தளத்தில் நண்பன்.அரசியல் களத்தில் எதிரின்னா என்ன தப்பு? நம்ம எல்லோரும் அப்படித்தான் என்று நான் நினைத்துக்கொண்டுள்ளேன்.:)))))


அதாவது விடுதலை சிறுத்தைகளும் பா.ம.க வும் ஒரே அணியில் தேர்தலை சந்திக்கவில்லை.அப்புறம் என்ன தாயா புள்ளையா பழகறது? எல்லாம் சும்மா பம்மாத்து அப்படிங்கிறீங்க?

பா.ம.க வை எதிர்த்து போட்டியிடற சூழ்நிலை வராது என்கிறார் திருமா. பா.ம.கவும் ம.தி.மு.க வும் அ.தி.மு.க கூட்டணிக்கு வரவேண்டும் என்கிறார்.ஃபைனல் நிலவரம் வரட்டும்.தமாசு இருக்கு.

நாளைக்கு தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளும் ஒரே அணியில் இடம்பெறாது என்று என்ன நிச்சயம்? ராமதாஸ் உடைய ட்ராக் ரெகார்டு தெரியாதா உங்களுக்கு?

கருணாநிதியின் அணுக்க தொண்டராக இருக்கிற ஆட்கள் திருமா கூட்டணி மாறியபின்னரும் திருமாவை தாங்குவது ஏன் என்பது தான் நீங்கள் சிந்திக்கதக்கது.
 



வைகோ-மேட்டர் இன்னும் 48-மணி நேரத்தில தெரிஞ்சிடும்னு இட்லி வடை சொல்லி இருக்காரு பாக்கலாம் :)

நந்தன் வச்சிருக்கிற மாறி மொழுமாற்ற டப்பா போட்டீங்கனா கொஞ்சம் வசதியா இருக்கும், கருத்து சொல்ல
http://mkannadi.blogspot.com/
 



// தமிழ் தளத்தில் நண்பன்.அரசியல் களத்தில் எதிரின்னா என்ன தப்பு? // தப்பில்லீங்க, தப்பேயில்ல... ஒரு பக்கா அரசியல்வாதி தன்னோட, தன் கட்சியோட முன்னேற்றத்து என்ன செய்யணுமோ அதையேத்தான் செய்யறாரு திருமா, அத நான் தப்பே சொல்லல... ஆனா அவரயும் ஒரு சாதாரண அரசியல்வாதியா, அவரோட போலித்தனத்த நான் பேசுனா அப்ப மட்டும் உடனே தலித் தலைவர்ங்கற முகமூடிய அவருக்கு கொடுத்து போராடுறாங்களே அதத்தான் நான் சுட்ட விரும்பியது.

இவங்க ரெண்டு பேரும் வேற இடத்துல வேற கணக்கு போட்டு இணைந்த கைகள காண்பிச்சப்போ, என்னன்னவோ காரணங்கள எல்லாம் கண்டுபிடிச்சி இருட்டிலேயே கிடக்கும் இரு சமூக மக்களின் சமுதாய முன்னேற்றத்துக்கு கிடைத்த விடிவெள்ளின்னு எல்லாம் பேசிகிட்டோமே .. அன்னிக்கி நான் சொன்னனே, இது அரசியல் கணக்கு, லாப நஷ்டம் பாக்கும்போது சுயரூபம் தெரியும் அது வரைக்கும் அடக்கி வாசிங்கன்னு, அத பத்தி மட்டும்தான் இங்க பேசறேன்.

எதுக்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு, ஓடுற பஸ்ல ட்ரைவரு கைய கட்டி போட்டா நாமளும் சேந்து சாவோம்கறது கூட புரியாத நம்ம மக்காவுக்கு, தமிழ் தளத்துல நண்பன், அரசியல் தளத்துல எதிரி அப்படீன்னு எல்லாம் சொன்னா க்ளீனா புரியும்னு நீங்க சொன்னீங்கன்னா நமக்கு ஆட்சேபணையே இல்லீங்க...

*

முத்து & பார்த்தா

மத்தபடி இது இறுதின்னு நானும் நம்பல... அ) மதிமுக வெளியேறலாம்.. அதிமுகவோடு கூட்டணி என்று சொல்லவில்லை... அப்போது கருணாநிதி விடுதலை சிறுத்தைகளை நேரடியாக கூப்பிட்டு பேசுவார். திருமாவும் அய்யாவின் அன்புக்கு கட்டுப்பட்டு சேருவார் ஆ) பாமக அதிமுகவுடன் கூட்டு சேரலாம்.... இவ்விரண்டில் ஏதாவது ஒன்று தொகுதி எண்ணிக்கை அல்லது விரும்பிய தொகுதி பேர நேரத்தில் நடக்கலாம்.
 



மார்ச் 04, 2006

ஜெவை சந்தித்தார் வைகோ: அதிமுகவுடன் கூட்டணி மதிமுகவுக்கு 35 சீட்கள் ஒதுக்கீடு

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள மதிமுகவுக்கு சட்டசபைத் தேர்தலில் 35 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் இருந்து வைகோ இன்று விலகினார். இன்று காலை 11 மணிக்கு அவர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சு நடத்தினார். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் நடந்த இச் சந்திப்பில் மதிமுகவுக்கு 35 தொகுதிகள் வழங்க அதிமுக ஒப்புக் கொண்டது.

இதையடுத்து இரு தலைவர்களும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

மதிமுகவுக்கு 22 சீட் தான் அதிகபட்சமாகத் தர முடியும் என திமுக தலைவர் கருணாநிதி நேற்று திருச்சி மாநாட்டில் திட்டவட்டமாக அறிவித்ததையடுத்து கூட்டணியை விட்டு விலகும் முடிவுக்கு வைகோ வந்தார்.

ஆரம்பத்தில் இருந்தே மதிமுகவை கூட்டணியில் இழுக்க அதிமுக பல வகைகளிலும் முயன்று வந்தது. அப்போது 45 சீட்களை வைகோ கோர் வந்தார். ஆனால், 30 இடங்களை மட்டுமே ஒதுக்க அதிமுக ஒப்புக் கொண்டது.

இதையடுத்து 40 சீட்கள் என்று இறங்கி வந்தார் வைகோ. நேற்று முழுவதும் இரு தரப்பினரும் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இதில் 35 சீட்கள் என்று முடிவானது.

இதையடுத்து நேற்றிரவே ஜெயலலிதாவை வைகோ சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான மதிமுகவினர் போயஸ் கார்டனில் குவிந்தனர். ஆனால், வைகோ வரவில்லை. இன்று தான் அந்தச் சந்திப்பு நடந்தது.

இன்று காலை 2 கார்களில் மதிமுகவினர் போயஸ் கார்டன் வந்தனர். முதல் காரில் வைகோகவும், கட்சியின் அவைத் தலைவரும் சசிகலாவின் உறவினருமான எல்.கணேசனும் இருந்தனர். கணேசன்நடராஜன் மூலமாகத் தான் இந்தக் கூட்டணியே ஏற்பட்டுள்ளது.

2வது காரில் பொருளாளர் கண்ணப்பன், முன்னாள் அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், கலைப்புலி தாணு உள்ளிட்ட மதிமுக முன்னணியினர் இருந்தனர்.

ஜெயலலிதாவின் வீட்டு வாசலில் வைகோவை, அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதையடுத்து வைகோவை வரவேற்றுப் பேசிய ஜெயலலிதாவுக்கு, தனது கட்சித் தலைவர்களை வைகோ அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் இரு தரப்பினருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் முதல்வர் ஜெயலலிதாவுடன் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது 35 தொகுதிகளை அதிமுக ஒதுக்க அதை வைகோ ஏற்றுக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவும், வைகோவும் கூட்டாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். ஜெயலலிதா கூறுகையில், மதிமுகவுடன் இணைந்து பொதுத் தேர்தலை சந்திக்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மதிமுகவுக்கு எங்கள் கூட்டணியில் 35 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்றார்.

வைகோ பேசுகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப் பெரும் வெற்றியைப் பெறும். அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியில் அமரும் என்றார்.

இதையடுத்து வைகோ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அடுத்ததாக விஜய்காந்துக்கு வலை வீசி வருகிறது அதிமுக.
 



சரி, உங்க கருத்து ??