<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நன்றிக்கடன் - ஈஸ்ட்மென் கலர்


ப்ளாஷ் நியூஸ் ::
தமிழக வரலாற்றில் முக்கிய திருப்பமாக வைகோ திமுகவில் இணைந்து விட்டார். (வைகோ கட்சி அல்ல, வைகோவே) அரசியல் வட்டாரம் தீப்பற்றி எரியும் இந்த பரபரப்பான நள்ளிரவு நேரத்தில், அறிவாலயம் வாசலில் நின்றிருந்த மக்களின் கருத்தாக பிரபல நாளிதழில்::

சுப்பிரமணி, அரசு மருத்துவர் :: இன்றக்கும் நாகரீக (?!) அரசியல் நடத்தும் வெகு சில அபூர்வ தலைவர்களில் வைகோ ஒருவர். புலிங்கள மதிமுக வெளிப்படையா ஆதரிக்கும், திமுக வெளிப்படையா ஆதரிக்காதுங்கறது தவிர திமுக மதிமுக இடையே கொள்கை அளவிலயும் ஒரு வித்தியாசமும் இல்லை. எனவே இரட்டை குழல் துப்பாக்கியாக செயல்பட்ட இயக்கங்கள் ஒற்றை குழல் பீரங்கியாவது நல்லதுதானே. வைகோ எதற்கு தனியாக கட்சி நடத்தி கஷ்டப்பட வேண்டும். வைகோவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டால் வைகோவின் முடிவு சரிதான்.

கந்தன், டீக்கடைக்காரர் :: இப்ப பாத்தீங்கன்னா, கருணாநிதி அளவுக்கு தமிள்ல வெளையாட இன்ன்னிக்கும் மதிமுகவுலயும் செரி, திமுகவிலயும் செரி ஆள் கெடையாதுங்க.. ஸ்டாலின் கூட்டம் போட்டா, அல்லாரும் தூக்கம் வராம இருக்க நெறைய டீ வாங்கி குடிப்பாங்க, கடைக்கு யாவாரம் நல்லா ஆவும்.... வைகோ பேசினா சும்மா பாய்லருக்கு அடியில வச்ச கரியில வெச்ச கங்கு கணக்கா தீப்பொறி பறக்கும். மயங்காத ஆளே கெடியாது. முன்னாடி தீப்பொறி ஆறுமுகம் வகையறாவும் தீப்பொறி பறக்க பேசும், ஆனா பாதி பேச்சுல ஆடியன்ஸ¤க்கு போதை தெளிஞ்சிட்டா பேஜாராய்டுவாங்கோ. அத்தால நல்லா பேசுற வைகோ திமுகவுக்கு போறது திமுக வளர்ச்சிக்கு நல்லதுதாங்கோ..

பெயர் சொல்ல விரும்பாதவர் (தொழில் வலைப்பதிவாளர் என்றார்) :: வைகோ வெளியேற்றப்படுவதற்கு முன் திமுகவில் கருணாநிதிக்கு அடுத்த சக்தி வாய்ந்த தலைவர் அவர்தான். கொலைப்பழி எல்லாம் சுமத்தினாலும் வைகோ வெளியேற்றப்படுவதற்கு உண்மையான ஒரே காரணம் வாரிசு அரசியலை பற்றிய அவரின் விமர்சனம்தான் என்று பாமரத்தனமாக இவ்வளவு நாள் நினைத்திருந்தேன். கொலைப்பழியுடன் வைகோ வெளியேற்றப்பட்ட காலகட்டத்தில் வை. கோபால்சாமி, கருணாநிதி ஆகியோரை சந்தித்த ஒரு அனுபவ கட்டுரை படித்த பின் அது அப்படி இல்லை, ஐ.பி அறிக்கை உண்மை, கருணாநிதி உண்மையிலேயே பயந்திருந்தார் என்பதெல்லாம் தெரிய வருகிறது. நாப்பது நாட்கள் கெடு கொடுத்து வைகோவிடமிருந்து பதில் வராமல் போனதாலேயே வைகோ வெளியேற்றம் நடந்தது என்று தெரிகிறது. ஆக வைகோ தானாகவே வெளியேறி அவரே இணைந்து கொள்வதால், இதில் வெட்கப்படவோ வேதனைப்படவோ வருத்தப்படவோ ஒன்றுமில்லை.

மதிமுக தொண்டர் :: தலைவர் திமுகவில் ஜாயின் பண்ண உட்கட்சியில எதிர்ப்புன்னு சொல்றாங்கோ... தலைவரோட முடிவுக்கு செயற் குழு, பொதுக்குழு, செகண்ட் லைன் தலைவர்கள்னு யாரும் முட்டுக்கட்டை போட முடியாதுங்க. எங்களது ஜனநாயக கட்சி. ரெண்டாம்கட்ட (ரெண்டுங்கெட்டான்னு படிக்காதீங்க) தலைவர்கள்னு பாத்தா எங்க கட்சியில யாரும் கிடையாதுங்க.. வைகோவோட எல்லா கட்டமும் முடியுது. திமுகவும் பாமகவிலயாவது அடுத்த வாரிசை கோடி காமிச்சிட்டாங்க. எங்க கதிய நெனச்சி பாத்தீங்களா... வைகோ அரசியல் துறவு பூண்டால் மதிமுக கூடாரம் உடனே காலின்னு கவலையா இருந்தோம்... இப்ப கவலையே இல்ல.. நாங்க சந்தோஷமா கூண்டோட தாவிட்டோம். தாய்க்கழகத்துடன் இணைந்ததில் சந்தோஷம்தாங்க.

மண்ணெண்ணய் டின்னோடு இருந்த ஒரு தொண்டர் :: திமுகவுல இருந்து தலைவர அபீட் ஆக்கிட்டாங்கன்னவுடனே அந்த அமீபா முளை ஆட்டு மந்தை கோழைகங்க பாட்டுக்கு தற்கொல பண்ணிகிட்டானுங்க... அவனுங்களுக்கு இன்னும் எதுவும் செய்ய முடீலயே, எதுனா செய்யனுமேன்னு தலைவர் எப்ப பாரு கவலையாவே கீறாரு. தலைவர பாத்து, இங்க பாரு தலைவா, எப்பியோ செத்தவனுங்களுக்காக இப்ப எதுக்கு உனக்கு மனக்கிலேசம். இத்தோட எல்லாத்தையும் மூட்ட கட்டு. இல்லையின்னா என்னயே கொளுத்திகினு சாவேன்னு சொல்லத்தான் சீமெண்ண கேனோட வந்தேன். தலைவரு நல்ல விசயம் பண்ணிட்டாரு. அபீட் ஆக்கின கச்சியிலயே தலைவர சேத்திக்கினாங்கோன்னு தெரிஞ்சா இனி அவனுங்க ஆத்மாவும் சாந்தமாவும்.

*** மனைவி (நேற்று அரசியலுக்கு வந்தவர்) :: ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் காத்து நிற்பதுதான் வைகோவின் நீண்ட கால திட்டமாக இருக்க முடியும் என்பதை குழந்தைகள் கூட சொல்லும். ஆக வெளியே இருந்து கஷ்டப்படுவதை விட உள்ளேயே இருந்து ஆட்டத்தை ஆடுவதே வைகோவின் எதிர்காலத்துக்கு நல்லது. வைகோவின் முடிவு நல்ல முடிவு.

நாஞ்சில் சம்பத் :: மதிமுகவிற்கு திமுக ஓட்டு வங்கியை எந்த விதத்திலும் விட்டு கொடுக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக விருப்பமில்லாவிட்டாலும் வயசான காலத்தில் மிகுந்த மனக்கஷ்டத்தோடு செய்யும் வேலையான, மதிமுகவை விட அதிக தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்கும் அந்த கஷ்டமான வேலையை இனி தலைவர் கலைஞர் விட்டொழிப்பார் என்பதை நினைக்கும் போது தளபதி வைகோவின் முடிவை வரவேற்கிறேன்.

எல்.ஜி, செஞ்சியார் கூட்டாக :: மதிமுகவோ திமுகவோ எங்களுக்கு ஒரு வித்தியாசமும் இல்லைங்க. மதிமுகவில் இருந்தால் எப்படியும் வைகோ மனசுத்தி காரணம் காட்டி பதவி வாங்கித்தரப்போவதில்லை. திமுகவிலோ மனதில் இடம் என்று காரணம் காட்டி பதவி தரப்போவதில்லை... ஆக இலவு காத்த கிளி தங்க கூண்டில் இருந்தால் என்ன தகர கூண்டில் இருந்தால் என்ன?

பெயர் சொல்ல விரும்பாத திமுக குட்டித்தலைவர் :: தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சேர்(த்)ந்தாலும் இங்கே அவருக்கு மரியாதை கிடைக்காதுங்க. ரொம்ப கேவலப்படுத்துவாங்கன்னு அதிமுக விற்கு போகாம கொஞ்சமா கேவலப்படுத்துற திமுக கூட்டணியில இருந்த வரைக்கும் கிடைச்ச மரியாதைய விட இப்போ ரொம்ப குறைஞ்சிடும். பேசாம புலிக்கு வாலாக இருப்பதை விடவும் எலிக்கு தலையாகவே இருந்திருக்கலாம் (யோவ், இது பழமொழி... புலின்னு மிருகத்த சொன்னேன், எதுனா சிக்கல்ல மாட்டி வுட்றாத)

அட, எல்லா தரப்பு மக்களையும் பேட்டி எடுத்திருக்கானே, என்ன பத்திரிக்கை இதுன்னு முதல் பக்கத்தை பார்த்தா தினமூடி...


திடுக்கென முழிப்பு வந்தது.. அடச்சே... கனவு... இப்படியா கனவு அலைபாயிறது. முதல்ல இமயமலை பா(ப்)பாவ பாக்கணும். அதுக்கு முன்னாடி ஏன் இந்த கனவு வந்ததுன்னு கொசுவத்திய சுத்தினா...

*

எல்லாத்துக்கும் அந்த அறிக்கைதான் காரணமா இருக்கணும். நேற்று "திமுக கூட்டணியில் இடம்பெற்று அவர்களை வலுப்படுத்த போராடவோம்"னு மதிமுக மீண்டும் ஒரு உறுதிமொழி எடுத்ததா? தொகுதி எண்ணிக்கை, விரும்பிய தொகுதி அப்படீன்னு எதுனா விஷயத்துல அந்தர்பல்டி அடிக்கிறதுக்கு முந்தி இது சம்பந்தமா தலைவர் விட்ட அறிக்கைய படிக்கலாம்னு உக்காந்தேன். அதுல ஒரு துணுக்கு ரொம்ப ரோசனை பண்ண வச்சிடுச்சி.

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"
என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி கலைஞருக்கு நன்றி தெரிவித்துப்பேசியது 18ம் தேதி காலை பத்திரிக்கைகளில் வெளியாகிய சூழ்நிலையில் மதிமுக கூட்டணியில் நீடிக்கிறதா என்ற கேள்வி சர்ச்சைக்குள்ளானது குறித்து வேதனைப்படுகிறேன் - வைகோ

மேற்கோள் என்னவோ கலிங்கப்பட்டி பள்ளிக்கு கலைஞர் பதவி உயர்வு கொடுத்ததுக்குத்தான்... ஆனா, "குறள் சொல்லப்பட்ட போதும் கூட்டணி குழப்பம் வேதனை அளிக்கிறது" என்று வைகோ சொன்னத பாத்தா, அந்த குறள் திமுக அல்லது கருணாநிதிக்கு அவர் கொடுத்த "மெஸேஜ்/வாய்ஸ்" மாதிரி தோணுச்சி.

செஞ்சோத்துக்கடன் இருக்கே, அது எல்லாத்த விடவும் பெரிய விஷயம் இல்லியா? நமக்கு தெரிஞ்சது ஐஸ்பெர்க் மாதிரி... இன்னும் கருணாந்திக்கும் வைகோவிற்கும் இடையில் இருக்கிற தந்தை-மகன், அண்ணன்-தம்பி பாசத்தில் ஊரு உலகத்துக்கு தெரியாத, இன்னும் ஆயிரம் மேடையில் அழுதாலும் மாளாதுங்கற அளவுல எவ்வளவு கடன் இருக்கோ?

இப்ப அறிக்கை கொடுத்தவுடனே வைகோ கலைஞர பாக்க போவாரு. கோபாலபுரத்து எல்லைய தொட்டவுடனேயே கண்ணுல தண்ணி கட்டும். கருணாந்திக்கும் வைகோவ பாத்தா நா தழுதழுக்கும்... "தம்பி, உன்னிடம் மனம் திறந்து ஒன்று கேட்க விரும்புகிறேன்... உன் ஆதரவு பொதுவாக திமுக கூட்டணிக்கா அல்லது அண்ணன் தலைமையிலான திமுக கூட்டணிக்கா? ஒரு வேளை இந்த தேர்தலில் நம் கூட்டணி வெற்றி பெற்று நான் மீண்டும் பதவிக்கு வந்தால், என் உடல் நிலை காரணங்களால் சில மாதங்களிலேயே ஓய்வு பெற வேண்டும் என்று இப்போதே மருத்துவர் குழு சொல்லிவிட்டது... அந்நிலையில் உன் தம்பி ஸ்டாலின்தான் முதல்வராக திமுக ஓடத்தை திறம்பட வழிநடத்த வேண்டும் என்று திமுக பொதுக்குழு, செயற்குழு மற்ற எல்லா குழுக்களும் நான் வேண்டாம் என்று சொல்ல சொல்ல கேட்காமல் ஏற்கனவே தீர்மானமும் போட்டு விட்டார்கள்.

அப்போதைய நிலையில் கருணாநிதி தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதுதான் மதிமுகவின் "இலட்சியமே" தவிர ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் அல்ல என்று சொல்லி நட்டாற்றில் விட்டுவிடுவாயா? அல்லது,


(வளர்ப்பு) மகன் தந்தைக்காற்றும் உதவி அவன் (ரத்த) மகன்
முதல்வராய் பாராள்கிறான் எனும் சொல்


என்ற குறளுக்கேற்ப உன் இளவல் - என் மகன் ஸ்டாலினுக்கும் உன் நன்றிக்கடனை நீட்டிப்பாயா? இதனை உணர்ச்சிக்குவியலாய் இருக்கும் இப்போதே சொல்" இந்த பாசக்கேள்விக்கு வைகோ என்ன பதில் சொல்வாருன்னு ரோசனை வரதுக்கு முந்தியே தூங்கிப்போய்ட்டேன். அப்ப வந்ததுதான் இந்த திடுக் கனவு.




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//கருணாநிதி தலைமையிலான கூட்டணியில் இடம்பெறுவதுதான் மதிமுகவின் "இலட்சியமே" தவிர ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் அல்ல என்று சொல்லி நட்டாற்றில் விட்டுவிடுவாயா? //


பொருள் பொதிந்த கேள்வி அடங்கிய நல்ல செறிவூட்டப்பட்ட பதிவு இது!!


//உன் இளவல் - என் மகன் ஸ்டாலினுக்கும் உன் நன்றிக்கடனை நீட்டிப்பாயா? //


This is a million dollar question!
Answer cannot be simple!!!

catch 22
 



பல கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லியிருக்கிறது! இந்த அரசியல் காலத்தை தாண்டி நிற்கும் அரசியலன்று. கலைஞர், அவருடைய காலம் முடியும் வரை காக்க வைக்கவும் மாட்டார். தேர்தலில் தி.மு.க கூட்டணி ஜெயித்தவுடனேயே கேள்விக்கு விடை தெரிந்துவிடும்.

If there is single majority for DMK (120+), he will do what "J" did for Congress in 2001!
 



'kaRRinaip puutti Or kadalil paaychchinum,
naRRuNai avvadhu mudhalvar naaRkkaaliyE'!!!
 



மதிமுக முதலில் 10 தொகுதிகளில் ஜெயித்து முதலில் ஒரு கட்சியாக மாற வேண்டும். மரம் வெட்டும் கட்சிக்காரன் எல்லாம் 40 தொகுதி கேட்கும் போது நாணய அரசியல் நடத்தும் வைகோ 30 தொகுதிக்காக அம்மா கட்சியில்கூட சேரலாம் என்பது என் கருத்து.
 



மற்றொரு கருத்து...

முகமூடி(நம்பர் 1 வலைப்பதிவாளர்) :: சே!..வயித்தெரிச்சலா இருக்கு!
 



மார்ச் 02, 2006 செய்தி ::


திருச்சியில், திமுக மாநில மாநாடு நடைபெறும் இடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் பேனரை கட்ட மதிமுக தொண்டர்கள் முயன்றபோது, அதற்கு திமுக தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தடுத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில் திமுக மாநில மாநாடு நாளை தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. மாநாடு நடக்கும் திடலில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் உருவ கட்அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், மதிமுக தொண்டர்கள் தங்களது தலைவரான வைகோவின் பேனரை அங்கு எடுத்து வந்தனர். அதில் கருணாநிதியும், வைகோவும் இருப்பது போல இருந்தது. அந்த பேனரை வைப்பதற்கு அவர்கள் முயன்றபோது திமுகவினர் திரளாகக் கூடி பேனரை இங்கே வைக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், மதிமுகவின் பம்பரச் சின்னமும் பேனரில் இருந்ததால் திமுகவினர் இதை இங்கே வைக்கவே கூடாது என்று கடுமையாக எதிர்த்தனர். இதையடுத்து மதிமுகவினர் பேனரை தங்களுடன் எடுத்துச் சென்று விட்டனர்.

அதே போல கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற முறையில் தாங்கள் வைத்த வைகோவின் படங்களையும், மதிமுக கொடிகளையும் திமுகவினர் அகற்றி வருகின்றனர்.
 



// catch 22 // ஞானபீடம் இதுக்கு என்னய்யா அர்த்தம்

*

// தேர்தலில் தி.மு.க கூட்டணி ஜெயித்தவுடனேயே கேள்விக்கு விடை தெரிந்துவிடும் // அது திமுகவிற்கு கிடைக்கும் இடங்களை பொறுத்து. இல்லையின்னா குடுமிப்பிடிதான்.

*

குறளா வெண்பாவா SK

*

// மதிமுக முதலில் 10 தொகுதிகளில் ஜெயித்து முதலில் ஒரு கட்சியாக மாற வேண்டும் // பேருதான் பெத்த பேரு. மானம் மருவாதி நிறைய இருக்கு. என்ன பிரயோசனம்....

*

ஜோ உங்க தமாஷ¤க்கு ஒரு அளவே இல்லியா...

*

தங்கள் கருத்துக்களை பகிர்ந்த அனைவருக்கும் நன்றி
 



சரி, உங்க கருத்து ??