<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

குஷ்புவும் நானும்



ஏன் உங்களையே மீண்டும் மீண்டும் தாக்குகிறார்கள்?

‘‘பழைய பிரச்னையில் நான் கவலைப்பட்டது, உடம்பு சரியில்லாமல் இருந்த குழந்தையை ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டுப் போக முடியலை என்கிற வருத்தம்தான். தூங்கிட்டு இருந்தால் எழுப்பி, விஷயம் இதுதான் என்று சொல்லலாம். ஆனால், தூங்குகிறவன் மாதிரி நடிக்கிறவனை யாராலும் எழுப்ப முடியாது. அதனால் எதுவேண்டுமானாலும் சொல்லட்டும் என்று ஒரு கட்டத்தில் அமைதியாகிட்டேன். அப்புறம் சிம்பிள் லாஜிக் இருக்கு. எளிதான உண்மையும் அதுதான். அதாவது, எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக் கொள்கிற போக்குதான். இதற்காக கண்ணீர் வடித்துக் கொண்டு மூலையில் உட்காரமுடியாது. முன்னிலும் அதிகமாக சுறுசுறுப்பு அடைந்திருக்கிறேன். தெளிவாகியிருக்கிறேன். என்னை யாரும் இனி அசைத்துப் பார்க்க முடியாது.’’

உங்களை வேதனைப்படுத்தியதின் உச்சம், நீங்கள் இந்தத் தேர்தலில் அரசியலுக்கு வருவதாக இருக்குமா?

‘‘அவசியம் இல்லை. social reformer ஆக இருக்கணும் என்றுகூட அவசியமில்லை. குமுதத்தில் பிரார்த்தனைன்னு யாரோ முகம் தெரியாத, அவதிப்படுகிற ஒரு மனுஷனுக்காக, மனம் உருகுவீங்க இல்லையா? அதுமாதிரிதான். சாதாரண மனுஷியாக இருந்து, தினமும் ஒரு நன்மை செய்துகிட்டுப் போய்கிட்டே இருக்கலாம். அதற்கு அரசியல் தேவையாக இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை.’’

எப்படி எல்லாவற்றிலும் இருந்து மீள்கிறீர்கள்?

‘‘நீங்க எல்லோரும் குஷ்பு என்ன பண்ணுவாங்களோன்னு கவலைப்பட்டுகிட்டு இருக்கும்போது, நான் லேண்ட் மார்க் போய் என் குழந்தைகளுக்கு புக்ஸ் என்னவெல்லாம் கிடைக்கும்னு தேடிட்டு இருந்தேன். நம்ம சந்தோஷத்தையும் யாரும் அள்ளிக்கிட்டுப் போக அனுமதிக்கக்கூடாது. சுயமரியாதையை விட்டுக்கொடுத்திட்டு, நல்ல வாழ்க்கை எனக்குக் கிடைச்சாலும், அதை வேண்டாம் என்று நினைப்பவள் நான். நான் சுந்தரோடு வாழ்வது அன்பும், அக்கறையும் இணைந்து அவரவர் சுயமரியாதைக்கு இழுக்கு வராமல் ஒரு உறவுமுறை. பகிர்வு. ஒரு கத்தல் இல்லை. கூச்சல் இல்லை. இந்த மனோபாவம்தான் காப்பாற்றுகிறது. சந்தோஷமான குடும்பம் கைகொடுக்கிறது. ஆனால், பெரிய கொடுமை என்னவென்றால், குறிப்பிட்ட டி.வி.யில் செய்தி ஆரம்பிப்பாங்க. அவர்களுக்கு குஷ்புன்னு சொல்லி ஆரம்பிக்கவே தெரியாது. பாவம் ‘தமிழ்ப் பெண்களைப் பற்றித் தவறாகச் சொன்ன குஷ்பு!’ என்று முழங்கித்தான் ஆரம்பிப்பார்கள். என்ன செய்யச்சொல்றீங்க!’’

உங்களைத் தாக்க அவங்களுக்கு என்ன தனிப்பட்ட காரணம் இருக்கு?

‘‘அவர்களுக்கு insecurity, அவங்க சேனலில் ஒரு கேம் ஷோ நடக்குது. என்னோட ‘ஜாக்பாட்’ பெரிய வெற்றி. அதை டி.ஆர்.பி. ரேட்டிங்கில் ஒழிச்சுக்கட்டணும். இப்படி ஏதேதோ இருக்கு. எனக்கும் அவங்களுக்கும் தனிப்பட்ட எந்தப் பிரச்னையும் கிடையாது. யாரையும் எனக்குத் தனிப்பட்டுத் தெரியாது. அவங்களுக்கு என்மேல் ஒரு பிரச்னை என்றால், அர்த்தம் இருக்கு. அதாங்க கேம் ஷோ. அதுதான். வேறென்ன?’’


‘எதையும் சொல்லாமல், இந்தியா டுடே நிருபரையே சந்திக்காமல் இருந்திருக்கலாம் சாமி’னு நினைச்சதுண்டா?

‘‘‘இந்திய டுடே’ கிட்டே சொன்னதை நான் மறுத்ததேயில்லையே. மற்ற பேட்டிகளைத்தானே ‘அப்படிச் சொல்லவில்லை, என்று சொன்னேன். சொல்லாததைப் போடும்போது, சொல்லவில்லை என்றுதானே சொல்லமுடியும்!

உங்க Dimension மாறிப்போச்சு. அறிவுஜீவிகள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டினார்கள். திடீரென்று எல்லாமே மாறியது. எப்படி?

‘‘நான் என்றைக்கும் Selfmade Person. நமக்கு ஒரு பெண் புத்திசாலியாக இருக்கக்கூடாது. எனக்கே பயங்கர சந்தோஷம். பெரிய அறிவுஜீவிகள் கைகொடுத்ததும் இவ்வளவு பெரிய தைரியம் எனக்கு எப்படி வந்ததுன்னு தெரியலை. சமுதாயப் பொறுப்பு அவங்க கையில்தான் இருக்குன்னு சிலபேர் நினைச்சிட்டு இருந்தாங்க இல்லையா, அவங்களுக்கு விழுந்தது அடி. நானே நிறைய மாறியிருக்கேன். பெண்களின் பிரச்னை என்னென்னு கவனிக்க ஆரம்பிச்சிருக்கேன்.’’


நன்றி & முழுமையான பேட்டியை படிக்க :: குமுதம்

*
டிஸ்கி 1 :: மேலே இருக்கும் படத்துக்கும் பேட்டிக்கும், பேட்டிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாய்களின் பின்புறம் ஆராய்ச்சியாளர் ஒருவரின் படம் கட் ஆகியிருக்கலாம், அல்லது மறைந்து மறைந்து வெளிப்படும் அவர் குணத்திற்கேற்ப மறைந்திருக்கலாம்.

டிஸ்கி 2 :: வேறு பதிவில் நான் சொல்லியிருக்கும் சில வார்த்தைகளை படம் பிடித்து போட்டு நான் சொல்வதையே குஷ்புவும் சொல்வதால் குஷ்புவும் நானும் ஒன்றே என்று ஹைஜாக்கர்ஸின் கிடா வெட்டு மாநாட்டு அறிக்கை வெளிவர இருக்கும் அறிவு சீவி சூழ்நிலையில் (அட டேவுடா) ஒரு ட்ரெயிலர் போல் "குஷ்புவும் நானும்" என்ற தலைப்பு வைக்கப்படுகிறது.

டிஸ்கி 3 :: அறிவு சீவிகளின் சந்தேகத்தின் பலன் என்ற -பெயரில் வெளிவரும் யாருக்கும் புரியாத எழவு நடையை படித்து ஏகப்பட்ட பேர் பொம்மைகளை விடாமல் உடைத்தால் ஒருவேளை நான்தான் குஷ்புவோ என்று எனக்கே சந்தேகம் வந்தால் நான் மட்டுமாவது தெளிவடைய வசதியாக "குஷ்புவின் ரசிகன் என்பதை தவிர குஷ்புவுக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமுமில்லை" என்பதை என் பதிவில், நான், எனக்காக மட்டும் ஒரு டிஸ்கியாக விட்டுக்கொள்கிறேன்.

டிஸ்கி 4 :: குஷ்புவுக்கு மட்டுமா நடந்தது எனக்கும்தான் நடந்தது என்று யாருக்கேனும் சொல்ல தோன்றினால் தாராளமாக சொல்லலாம். ஆனால் அது 1000 வார்த்தைகள் தாண்டி இருந்தால் தயவு செய்து அதை உங்கள் பதிவில் வெளியிட்டு ஒரு சுட்டியாக மட்டும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன். அதை மீறி ஒரு பதிவு + அப்பதிவுக்கு வந்த 70 பின்னூட்டம் எல்லாத்தையும் ஒரே பின்னூட்டமாக தந்தால், அதில் குஷ்பு சம்பந்தப்பட்டதை தவிர வேறு விஷயங்களை வெளியிட இயலாது என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


என்னெய்யா இது. எப்பப்பார்த்தாலும், எதுக்கெடுத்தாலும் Finding Nemo வுல Mine Mine Mineன்னு கத்திட்டு வர்ற பறவைக்கூட்டத்தில இருந்து தவறி வந்த மாதிரி "நான் நான்னு" உலகமே உன்னைச்சுத்திக்கிட்டுத்தான் போறதுமாதிரி எடுத்து விடுற. FEMA Brown கொடுத்திருக்குற வாக்குமூலமா நாளக்கி.
 



இருக்கற நூத்துக்கணக்கில் நமக்கு தெரிஞ்ச ரெண்டும் இருக்கும் போலிருக்கே!

என் கிட்டயும் ரெண்டு இருக்குங்க. அதத்தான் சொன்னென். Aragorn மற்றும் Arwen. சந்தேகம் இருக்கறவங்க தனிமடல்ல தொடர்பு கொண்டா நம்ம குட்டிஸோட படங்கள பொதுவில அனுப்பறேன். நல்லா விளையாடுவாய்ங்க! பயங்கர காமெடியாயிருக்கும்!
 



அனானிமஸ், உங்கள் கருத்து பதிவை பற்றியதென்றால் டிஸ்கி 1 ஐ பார்க்கவும். டிஸ்கிகளை பற்றியதென்றால் :: நாற்றத்தை நீங்கள் உணரவில்லையெனில் அதற்கு காரணம் உங்களுக்கு மூக்கடைப்பேயன்றி சாக்கடைகள் இன்னும் சுத்தமாகவில்லை... சாக்கடைகள் நீங்கள் நினைப்பதை விடவும் ஆழமானவை. take it easy.
 



உட்டு தொலைங்களேன் பாசு இந்த கருமத்த. உங்களுக்கு எழுத வேற விஷயமா இல்ல. நீங்க உங்க மனசாட்சி படி தப்பு செய்யலன்னு நெனைக்கிறீங்க, அது தான் முக்கியம் & அது தான் matters. அதுக்கு மேல நீங்க என்ன விளக்கினாலும் அத நம்பனும்னு நினைக்கிறவங்க தான் நம்புவாங்க.
இத மேல மேல aggravate பண்ணாம, உங்க வழக்கமான பதிவுகள போடுங்க, அத தான் வாசகர்கள் விரும்பறோம்/விரும்பறாங்க.
 



முகமூடி,

உள்குத்தும் வெளிக்குத்துமா தமிழ்ப்படம் போல ஒரே வயலன்ஸா இருக்கு தமிழ்மணம். நச்சுன்னு ஒரு நல்ல பதிவா போட்டு தரத்தை உயர்த்துங்க. உங்க முத்திரை இல்லாத இந்த மாதிரி பதிவுகள் நல்லா இல்லை :-(
 



நன்றி ராம்ஸ், பார்த்தா, நிலா..."என்ன விளக்கினாலும் அத நம்பனும்னு நினைக்கிறவங்க தான் நம்புவாங்க"ன்னு அமேதியாத்தான் இருந்தேன். எனக்கும் விட்டு விடுதலையாவனும்னுதான் ஆச... ஆனா பாருங்க, இங்கிலாந்துல மாடு அம்மான்னு கத்துது, தமிழ்நாட்டுல குழந்தை அம்மான்னு கத்துது... ஆக மாடும் குழந்தையும் ஒண்ணுன்னு அறிவு சீவி தெய்வம் நச்(ஞ்)சுனு logical reasoningல அருள் பாலிக்கிறது, அத பாத்து ஆத்தா, தெய்வமேன்னு அடிப்பொடிங்க உணர்ச்சி கொந்தளிப்புல நெக்குருகறதுன்னு பாக்குறப்போ செல சமயம் புல்லரிச்சி போயிடறேன்.
 



//முன்னிலும் அதிகமாக சுறுசுறுப்பு அடைந்திருக்கிறேன். தெளிவாகியிருக்கிறேன். என்னை யாரும் இனி அசைத்துப் பார்க்க முடியாது.’’//
//தினமும் ஒரு நன்மை செய்துகிட்டுப் போய்கிட்டே இருக்கலாம். அதற்கு அரசியல் தேவையாக இருக்கும் என்று நான் நினைக்கவேயில்லை.’’//
//நம்ம சந்தோஷத்தையும் யாரும் அள்ளிக்கிட்டுப் போக அனுமதிக்கக்கூடாது//
//இந்திய டுடே’ கிட்டே சொன்னதை நான் மறுத்ததேயில்லையே. மற்ற பேட்டிகளைத்தானே ‘அப்படிச் சொல்லவில்லை, என்று சொன்னேன்.//

குஷ்பு எவ்வளவு பக்குவமா பேசறாங்க பாருங்க முகமூடி சார்....
அருமையான பேட்டிக்கும் தகவலுக்கும் நன்றி....
 



இந்தப் புகைப்படத்தை ஜெயா பயன்படுத்தினால்:

'நான் பாவம் தனியாக ஓநாய்களின் கூட்டணியை எதிர்த்து நிற்கிறேன்'

கலைஞரின் பதிலடி:

'கோயில் பூனை சுருவத்துக்கு அஞ்சாது ; ஆனால், அம்மையாரோ ருசி கண்ட பூனை. எலி அழுதால் பூனை விடுமா?'

செல்வியின் பதில் அறிக்கை:

'புலிக்குப் பிறந்தது பூனை ஆகாது; ஆனால் ஸ்டாலின் எலியாக இருப்பதால் கருணாநிதி புலியும் அல்ல. பூனையும் அல்ல!'
-----

---இங்கிலாந்துல மாடு அம்மான்னு கத்துது, தமிழ்நாட்டுல குழந்தை அம்மான்னு கத்துது.---

தமிழரை மிருகத்துடன் ஒப்பிடுகிறீர்களா :ஓ!
 



This comment has been removed by a blog administrator.
 



Well, as the message to the concerned is conveyed, it's Gone now, search not in the catch!!
 



முகமூடி... ரொம்ப நாளாச்சு உங்க டாப்டென் பதிவு வந்து.... ஒன்னு எடுத்து விடுங்க..
 



'ippO kushbuu'vin maanathtin vilaiyai avangaLE 3 kOdi-nnu sollittaanga!
iththOda indha pirachchinaiyai vidunga!"
 



சரி, உங்க கருத்து ??