<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கையால் எழுதிய கடிதங்கள்


கையெழுத்து கடிதங்கள் வழக்கொழிந்து போன இன்றைய காலகட்டத்தில் பழைய கடிதங்களை படிப்பதே ஒரு அலாதி சுகம்தான். "பொங்கும் மங்கலம் எங்கும் பொங்குக" என்று மாடு, ஏர்கலப்பை, கரும்பு படத்துடன் கூடிய 10 பைசா அட்டையில் "அன்புள்ள தாத்தா பாட்டிக்கு, அன்பு பேரன் அனுப்பும் வாழ்த்து" என்று எழுதி அனுப்பிய கார்டிலிருந்து பதின்ம வயதில் சமூக விழுமியங்களை நண்பர்களோடு அலசிய 15 பைசா கார்டு வரை ஒரு மூட்டை நிறைய கடிதங்கள் இரு டஜன் பாச்சா உருண்டைகளோடு பரணில் தூங்கியதை இறக்கலாம் என்று சென்ற முறை இந்தியா சென்றிருந்த போது தேடிப்பார்த்தால் காணோம்.

ஒரு நாள் முழுவதும் பரணில் எலிகளோடு போராடியபின் அக்கடிதங்கள் எல்லாம் வெந்நீர் போட உபயோகப்படுத்தப்பட்ட விஷயம் சொல்லப்பட்டது. "கொஞ்சமாவது உங்களுக்கு இலக்கிய ஆர்வம் இருக்கா, பொக்கிஷங்கள இப்படி செல்லாக்காசாக்கி கரியாக்கிட்டீங்களே... உங்கள் மாதிரி ஆளுங்களாலத்தான் பல அரிய பொக்கிஷங்கள இழந்தோம். உவேசா மட்டும் இல்லையின்னா..." என்ற என் ஆதங்கம், "அடங்குடா" என்ற வந்த சத்தத்தில் அடங்கியது.

"என்னடா பொக்கிஷம். எந்த கார்ட எடுத்தாலும், "கண்ணே உன் கண்ணுக்கு ஈடாகுமா அந்த சூரியன். நீ ரொம்ப அழகா இருக்க... நாளக்கி சாயங்காலம் சிவன் கோயில் தெப்பகுளத்துல உனக்காக காத்திருக்கேன். வரும்போது மஞ்சுளாவையும் ரோஸியையும் கூட்டிகிட்டு வா"ன்னு எழுதியிருக்க. அதையே காப்பி எடுத்து மஞ்சுளாவுக்கும் ரோஸிக்கும் தனித்தனியா அனுப்பியிருக்க.. அதை யாரும் வாங்காம திருப்பி அனுப்பியிருக்காங்க... இதெல்லாம் காவியமாடா? கெரகம், அப்ப ஏதோ ஒருதலை காதல்ல அலஞ்சிகிட்டு இருந்தேன்னு நினைச்சேன், நீ தறுதலை காதலால்ல அலஞ்சிகிட்டு இருந்திருக்க..."

"ஆமா அடுத்தவங்க கடுதாசியெல்லாம் நாகரீகம் இல்லாம எதுக்கு படிக்கிறீங்களாம்"


"இது ஒண்ணுதான் கொறச்சல்.. எழுதனுதுதான் எழுதுன, ஒரு இன்லண்டு லெட்டர்ல எழுதி தொலைக்க கூடாது. கார்டுல எழுதியிருக்க. போஸ்ட் மேன்ல இருந்து எல்லாரும் படிச்சி ஏற்கனவே ஊர் உலகத்துல போன மானம்தான்... இப்ப என்ன நாகரீகம் வேண்டிகிடக்கு"


"என் வாழ்க்கை எப்பவுமே ஒரு திறந்த புத்தகம்"னு நான் மொனக ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே எல்லாரும் எடத்த காலி பண்ணிட்டாங்க.

ஒரு நாள் மேஜையை நகர்த்தும் போது மேசை ஆடாமல் இருக்க நான்காக மடித்து வைத்திருந்த ஒரு பழுப்பு காகிதம் கிடைத்தது. பிரித்தால் என் பதின்ம வயதில் சமூக விஷயங்களை குறித்து எழுதியிருந்த கடிதம்.

*

அன்புள்ள நண்பா,

நேற்று வழக்கம் போல் நாம் கூடும் டிம்பர் மார்ட் அருகில் நீ வந்து நம் குழுவை காணாமல் ஏமாந்து திரும்பியதை அறிந்து வருந்தினேன். ஒத்த கருத்துடைய நம் நண்பர்கள் மட்டும் கூடி பேசி களிக்க, இடையூறு தராத டிம்பர் மார்ட்டும், அக்கவுண்டில் டீயும் தம்மும் சளைக்காமல் தரும் நாயர் கடையும் இன்றும் வசதியானதுதான். ஆனால் நான்கு பேர் மட்டும் கூடிய காலம் மலையேறிப்போச்சி. பஸ்ஸ்டாண்டுக்கு அருகில் இருந்ததால், போற வர்றவன் எல்லாம் "ஹாய் மச்சி, எங்க இங்க"ன்னு சும்மா விசாரிக்க வந்து, நம் வெட்டி அரட்டையில ஆர்வமாகி நம்ம ஜோதியில ஐக்கியம் ஆக, நேத்து சும்மா தலைய எண்ணினா 23 பேர் இருந்தானுங்க... பல சமயம் எவன் என்னா பேசறான்னே தெரியாம சந்த கடை மாதிரி ஆகிப்போச்சி. முக்கியமா அவனவன் பாதியில கெள்ம்பிற்றானுங்க, கடைசியில நாயர் கடையில காசு கொடுக்கிறப்ப தாவு தீந்துடுது. அதனால சுடுகாட்டுக்கு பக்கத்துல இருக்கிற ஆத்தா கடையில சபைய கூட்டிட்டோம். ரொம்ப நாளக்கி அப்புறம் நம்ம ஒரிஜினல் சபா 4 பேரோட கூடுனது வித்தியாசமா இருந்திச்சி. உங்கிட்ட சொல்ல முடியல. நீ (மட்டும்) இனிமே ஆத்தா கடைக்கி வந்துடு.

நிற்க. இந்த கடித்த்தில் நான் சொல்ல இன்னுமொரு முக்கிய விஷயம் இருக்கிறது. இதுவரை வாழ்க்கையை பற்றிய மற்றவர்களின் அனுபவத்தையும் அவர்களின் பார்வையையும் மட்டுமே பார்த்து வந்த எனக்கு வாழ்க்கையை அருகிலிருந்து உணர்ந்து பார்க்கும் ஒரு அரிய சந்தர்ப்பம் நேற்று வாய்த்தது. அதை பற்றி உன்னிடம் பகிர்ந்து கொள்ள விருப்பம். மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் வாழ்க்கையை பற்றிய ஒரு குழப்பமான எண்ணங்களில் சிக்கியிருந்த எனக்கு நேற்று கிடைத்த அனுபவம் தெளிவான பார்வையை வழங்கியதில் மகிழ்ச்சி. யதார்த்தத்துக்கும் ·பேண்டஸிக்கும் உள்ள வித்தியாசங்களையும் யதார்த்தத்துக்கு கிடைக்காத உற்சாக வரவேற்பு ·பேண்டஸிக்கு கிடைப்பதையும் கண்கூடாக கண்டபோது ஏற்பட்ட வெறுப்பை என்னவென்று சொல்வது. ஆம். சிவாஜியின் தத்ரூபமான நடிப்பிற்கு அமைதியாக இருந்த ரசிகர்கள் சிலுக்கு சுமிதா ஆடிய க்ளப் டான்ஸின் போது ஆடிய கூத்தும், அடித்த விசிலும், கிழித்தெறிந்த டிக்கெட்டுக்களையும் பார்த்த போது சமூக விழுமியங்களின் மீது வெறுப்புதான் வந்தது. ரீகல் திரையரங்கில் நடக்கும் வாழ்க்கை படம் சீக்கிரம் ஹவுஸ்புல் ஆவதால் முன்கூட்டியே செல். இல்லையெனில் நீயும் என்னை போலவே 2 ரூ டிக்கெட் வாங்கி வாழ்க்கையை மிகவும் அருகிலிருந்து பார்க்க வேண்டிய நிலை வரும்.

அன்புடன், நான்தான்.


*

உணர்ச்சி மேலீட்டில் முகவரி எழுதும் இடத்திலெல்லாம் கடிதத்தையே எழுதி போஸ்ட் பண்ணியிருந்தது, கடிதம் திரும்பி வந்த பிறகே உறைத்தது. அப்போது பார்த்து மேஜை ஆடியதால் அதற்கு கீழே போனதுதான் இப்பொழுதுதான் மீண்டும் கிடைத்தது.

*

இந்த கார்டு எழுதிய பிறகு காலேஜ் சேர்ந்து விட்டதால் அப்புறம் கடிதம் எழுத வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. வீட்டிலிருந்து வரும் "நன்றாக படி" கடிதத்தை பார்த்தால் மனசு மாறி படிக்க தோன்றினால் என்ன செய்வது என்று "ஹாஸ்டல்ல போன் இருக்கு, இனி கடிதம் எல்லாம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. ஹாஸ்டலுக்கு போன் பண்ணுங்க" என்று சொல்லிவிட்டதால் வந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு கடிதங்களும் நின்று போனது. ஹாஸ்டலுக்கு போன் வந்தபோதெல்லாம், லேடீஸ் ஹாஸ்டல் போனுக்காக காத்திருந்த துரோகிகள், "அவரு இல்லீங்க சினிமாவுக்கு போயிட்டாரு" என்று அவதூறு பரப்பியது தனிக்கதை.


காலேஜில் இருந்த நாலு வருஷமும் சளைக்காமல், "நலம். நலமறிய பணம் அனுப்பவும்" என்று தந்தியில் நான் அனுப்பிய ஹைக்கூக்களை எல்லாம் சேர்த்து வைக்க என் வீட்டில் இருந்தவர்களுக்கு ஏன் தோன்றவேயில்லை என்பது இன்றுவரை எனக்கு புரியாத புதிர்தான்...




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//"பொங்கும் மங்கலம் எங்கும் பொங்குக" என்று மாடு, ஏர்கலப்பை, கரும்பு படத்துடன் கூடிய 10 பைசா அட்டையில் //

10 பைசா அட்டையா? கொயப்புதே :-)

தொடர்ந்து "confidential" இல்லாத கையால் தட்டச்சு செய்த இமெயில்களையும் தெகிரியம் இருந்தா பிரசுரிக்கவும் ;-)
 



ஏதோ கலைஞர் உடன்பிறப்பே
என்று எழுதிகிறமாதிரி நம்ம தலையும் கட்சி தொண்டர்களுக்கு எழுதி இருக்கிறாரா என்று பார்த்தால் அந்த காலத்து கடிதம்


அவசியமான பதிவொன்றை எழுதியுள்ளீர்கள் மிக்க நன்றி !


// அதையே காப்பி எடுத்து மஞ்சுளாவுக்கும் ரோஸிக்கும் தனித்தனியா அனுப்பியிருக்க
//

இதேமாதிரி என்னிடமும் ஏகப்பட்ட கடிதங்கள் இருக்கு, நான் எழுதியதும், பொண்ணுங்க வாங்கிக்காமால் திருப்பி கொடுத்தும். அதை எல்லாம் பப்ளிகா போட்டா அவ்வளவுதான். தொரத்தி வந்து அடிப்பாங்க

இருந்தாலும் காத்துல கலந்து அடிக்கும் கோழி குருமா smell போல அப்பப்ப நானும் கொஞ்சம் பிளாஷ் பேக்கிறதுதான்.


பின் குறிப்புகள்:

1. I think , I might have missed the "idukais" you are talking about but can guess the author(s) !

2. ஆஹா , இந்த பதிவை பார்த்து எத்துனை பேர் உணர்ச்சி வசப் பட போறாங்களோ !
 



அடாடா,
ரொம்ப நாள் கழிச்சு அரசியல், உள்/வெளி/சைட்/ஆழக் குத்தெல்லாம் இல்லாத அக்மார்க் முகமூடி பதிவு.

ரொம்ப நல்லாருக்கு. நல்லா சிரிச்சேன். உங்க வாழ்க்கையைப் பார்த்துன்னு தப்பர்த்தம் பண்ணிக்காதீங்க.
 



//அரசியல், உள்/வெளி/சைட்/ஆழக் குத்தெல்லாம் இல்லாத //

ராம்ஸ் அதே அதே..

ஏதோ என்ன மாதிரி இருக்குரவன்னுக்கும் புரியுது.
 



//இல்லையெனில் நீயும் என்னை போலவே 2 ரூ டிக்கெட் வாங்கி வாழ்க்கையை மிகவும் அருகிலிருந்து பார்க்க வேண்டிய நிலை வரும்.//

ரெம்ப நல்ல பதிவு.
 



//. I think , I might have missed the "idukais" you are talking about but can guess the author(s) !
//
அட இதிலேயும் உள்குத்தா? அது என்னது?? கடிதங்கள் மீம் நடக்குது தெரியும். ஆனாலும், இதுக்கு அதுகளுக்கு சம்பந்தம் இருக்கறாப்பல தெரியலியே! :((

வர வர ஒன்னுமே புரியமாட்டேங்குது.
 



இணையத்தில் ஞானபீடம் உலவாத போது குழப்பம் ஏற்படுத்த உலவும் சின்ன நாரதர்கள் கவனத்திற்கும், அவர்களால் குழப்பப்பட்டவர்களுக்கும் ஒரு டிஸ்க்ளெய்மர் ::

இதற்கும் வேறு எதற்கும் சம்பந்தம் இல்லை. கடிதம் சம்பந்தமான இதர இடுகைகள் ஒன்றை கூட நான் இன்னும் படிக்கவில்லை
 



குசும்பன் // 10 பைசா அட்டை // அந்த பொங்கல் அட்டையின் விலை 10 பைசா. க்ரீட்டிங்க்ஸ் கடைக்கு ஒரு அட்டை வாங்க போனால் 10 அட்டை இலவசம் (சுடுவது என்பது இலக்கியப்பெயர்) அதற்கு 15 பைசா ஸ்டாம்பு ஒட்ட வேண்டியிருந்தது. அதற்குத்தான் உன் பாடு என் பாடு.

confidential விஷயங்களை கையால் நான் தட்டச்சுவதில்லை. finger print ப்ராப்ளம். வாய்ஸ் ரெகக்னிஷன் நிரலி ஊஸ் பண்ணுவது வயக்கம். ஆனால் அதையெல்லாம் வெளியிடும் அளவு தெகிரியம் வரவில்லை என்பதை தைரியமாக தெரிவித்துக்கொள்கிறேன்

*

வாய்யா சின்னவரு. அரசியல் இல்லாம பதிவு எழுதினாலும் உங்கள மாதிரி ஆளுங்க கலைஞரு அது இதுன்னு அய்யம்பேட்டை வேலை பண்றீங்களே. பொண்ணுங்க திருப்பி கொடுத்தாங்களா. இல்ல அவங்க அண்ணங்களா...

ஏற்கனவே ஐநா சபையில ஆரம்பிச்சி சிலுக்குவார்ப்பட்ட வரைக்கும் தர்ம அடி அல்லோலகல்லோலபடுது. இதுல வெள்ளிந்தியா போட்ட பதிவுக்கெல்லாம் எதுக்கய்யா பின் குறிப்பு கொடுத்து எரியிறதுல எண்ணைய ஊத்தறீங்க. (உங்களுக்கும் ஞாபீக்கும் ஒரு போல்ட்டு டிஸ்கி பின்னூட்டம் போட்டுருக்கேன் பாருங்க)

*

வாங்க ராமநாதன். சின்னவன் குத்தையெல்லாம் நம்பி மோசம் போகாதீங்க. நிறுவனத்தலைவர் எப்பவுமே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதில்லை என்ற நம்பிக்கையை மட்டும் நம்பி வைங்க. // நல்லா சிரிச்சேன். உங்க வாழ்க்கையைப் பார்த்துன்னு // அதான் எல்லாம் பண்றதாச்சே... அதுல என்ன பெரிய விஷயம்... :)

*

கார்த்திக், என்னோட பதிவு அனைத்துமே அனைவருக்கும் புரியும் வண்ணம் இருக்குமே...

*

சிறில் ஒரே ஒரு பத்திய மட்டும் போட்டு நல்ல பதிவுன்னு சொல்லிட்டீங்களே. பத்தி பிடித்து பதிவை பாராட்டுகிறீர்களா, இல்ல பத்தியே ஒரு பதிவுக்கான விஷயம் கொடுக்குதான்னு என்ன ஆராய்ச்சி பண்ண வச்சிட்டீங்க...
*

உட்டு போன விஷயம் :)))))))) அல்லாரும் வேணுங்கற அளவு எடுத்துக்கோங்க.
 



பிற பதிவுகளில் ( இடுகைகளில் )


disclaimer : this weblog entry is a work of fiction. any actual resemblance to real life events is purely unintentional. © mugamoodi


போட்டுவிட்டு இந்த பதிவில் ( இடுகையில் ) போடாதற்கு என்ன அர்த்தம் என்று உங்களின் மனசாட்சியை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்.

உண்மையை சொன்னால், தமிழ் இலக்கியவியாதி அண்ணன் ஞாபீ யையும் என்னையும் குற்றம் சாட்டுவதுதான் நீர் கற்றுக் கொண்ட (கு)தர்க்கவாதமோ ?

ஹிஹி

:-)
 



//இராமநாதன் said...
அடாடா,
ரொம்ப நாள் கழிச்சு அரசியல், உள்/வெளி/சைட்/ஆழக் குத்தெல்லாம் இல்லாத அக்மார்க் முகமூடி பதிவு.//

:-)))))

Grow up Rams!
 



:-)))
 



//கையெழுத்து கடிதங்கள் வழக்கொழிந்து போன இன்றைய காலகட்டத்தில் பழைய கடிதங்களை படிப்பதே ஒரு அலாதி சுகம்தான்.//

அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.
---------

என் ஆதங்கம், "அடங்குடா" என்ற வந்த சத்தத்தில் அடங்கியது.

நீங்கள் ஏன் அடக்குமுறைக்கு பணிந்து போனீர்கள் என்பது என்பது இன்றுவரை எனக்கு புரியாத புதிர்தான்!
---------

மேசை ஆடாமல் இருக்க நான்காக மடித்து வைத்திருந்த ஒரு பழுப்பு காகிதம்

சமயோசிதம்!!
---------

அன்புள்ள நண்பா,

நல்லதொரு விளித்தலில் ஆரம்பித்துள்ள கடிதம்!

-------

ஒத்த கருத்துடைய நம் நண்பர்கள் மட்டும் கூடி பேசி களிக்க,

எதிர் கருத்துக்கள் இல்லாத ஜனநாயகக் குரல்வளை நெறிப்புக்கு ஆரம்பத்தில் அச்சாரம் போட்டதே நீர்தான் போலிருக்கிறது! எனினும் உண்மையை நேர்மையாய் வெளிக் கொண்டு வந்து சொன்னதற்குப் பாராட்டு(க்)கள் .

-------

இன்னும் ஏகப்பட்ட கருத்துக்களை முன்வைத்து புலனாய்வு செய்யத் திறன் இருந்தபோதும், இப்போதைக்கு இதுவே போதும் என்று எண்ணி இங்கேயே முடிக்கிறேன்!!

--------

இந்த நீண்ட பின்னூட்டத்தை ஒரு பதிவாக போடலாமா என்று எண்ணிய போதிலும், அநேக விஷயங்கள் இந்த பின்னூட்டத்தில் கொட்டிக் கிடப்பதால், இதற்கு எனது பதிவுகளின் வரிசையில் இடமளிக்க முடியவில்லை!!
------
 



//கார்த்திக், என்னோட பதிவு அனைத்துமே அனைவருக்கும் புரியும் வண்ணம் இருக்குமே... //

ஒருசில பதிவுகள் புரியவில்லை..

// ரீகல் திரையரங்கில் //

மதுரைல இருக்கே அதுவா ?.
 



சரி, உங்க கருத்து ??