<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

இந்தியாவுக்கு maxim ஒத்துவருமா?


maxim தனது முதல் இதழிலேயே டூ-பீஸ் அழகியின் உடலோடு குஷ்பு முகத்தை ஒட்டு வேலை செய்து ‘‘Of course I am a virgin if you don’t count from the behind’’ என்று அடைமொழியும் கொடுத்து புதிய விவகாரம் ஒன்றை கிளப்பியிருக்கிறது. டிரஸ்ஸரின் முன் நிற்பது போல் இருக்கும் அந்த படத்தின் டிரஸ்ஸர் கண்ணாடியில் dinner with rajini என்று sticky pad செய்தியும், கண்ணாடி சட்டத்தில் ரஜினி, கமல், ஐஸ்வர்யா, ஜெயலலிதா(?) புகைப்படங்களும் குத்தப்பட்டிருக்கின்றன. டூ பீஸ் உடையில் நிற்கும் ஒரு பெண்ணின் முகத்தில் குஷ்பு முகத்தை மார்ஃப் செய்திருப்பது நன்றாகவே தெரிகிறது. போனால் போகிறது என்று குஷ்பு பற்றி ஒரு சிறு குறிப்பு...


படத்தின் பக்கவாட்டில் 100% போலி என்று பொடி எழுத்து உபகருத்து.. குஷ்பு ஆட்சேபம் தெரிவித்தை அடுத்து மாக்ஸிம் எடிட்டர் மன்னிப்பு கோரியிருக்கிறார். அப்போது அவர் விட்ட கருத்து :: ‘‘We respect and celebrate women in our magazine. We never intended to offend Khushboo and apologise to her,’’ இதில் முதல் பாதி எவ்வளவு நகைச்சுவையானது என்பது மாக்ஸிம் படித்தவர்களுக்கு புரியும்.

மாக்ஸிம் மீது பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதிலிருந்து தடுக்கும் ஒரு சட்டப்பிரிவை மீறியதற்காக காவல்துறையில் புகாரும் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கும் பதியப்போவதாக குஷ்பு தெரிவித்திருக்கிறார்.


இந்தியன் எக்ஸ்ப்ரஸ் செய்தி
தினமலர் செய்தி

*

இந்தியாவில் இப்போதுதான் ஆரம்பிக்கப்பட்டாலும் மாக்ஸிம் பத்திரிக்கைக்கும் இந்தியா/இந்தியர்களுக்கும் நெடிய வரலாறு இருக்கிறது.

நவம்பர் 2000 மாக்ஸிம் இதழில் வந்த ஒரு சிற்றுரை :: "காந்தியை வெறுப்பதற்கு 3 காரணங்கள்". அதன் மொழிபெயர்ப்பு ::

1. அவர் ஒரு கேவலமான கணவர். காந்தி மனித குலத்தையே நேசித்திருக்கலாம், ஆனால் 1906ல் இருந்து தன் மனைவி கஸ்தூரிபாவை நேசிப்பதை நிறுத்துவிட்டார். உறவு கொள்வதை தடை செய்த அவர், ஒரு முறை ஆத்திரத்தில் (குறைந்த ரத்த அழுத்தத்தால் இருக்கலாம்) கஸ்தூரிபாவை வீட்டை விட்டே துரத்த இருந்தார்.

2. அவர் ஒரு மட்டமான அப்பா. மகாத்மா தன் பிள்ளைகளும் தன்னைப்போலவே துறவிவை போல வாழ வேண்டும் என்று நினைத்தார். எந்தளவு என்றால் அவரின் மூத்த மகன் ஹரிலால் தன் தந்தையை புறக்கணித்து, இஸ்லாம் மதத்தை தழுவி, ஒரு குடிகாரனாய் சாகும் அளவிற்கு.

3. அவர் ஒரு லாயக்கற்ற முன்மாதிரி. அவரின் பட்டினிப்போராட்டங்களும், ஒல்லியான உடல்வாகும் சமாதான முறை போராட்டகாரர்களுக்கு நம்பமுடியாத ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியது. Dr. மார்ட்டின் லூதர் கிங், மதர் தெரசா மற்றும் ஏனைய தலைவர்கள் காந்தியால் தூண்டப்பட்ட, முறை தவறிய சாப்பாட்டால் ஏற்படும் கோளாறுகளால் வாழ்க்கை முழுக்க அவதிப்பட்டார்கள்.

இதை படித்து கொதித்த இந்தியர்கள் கடுமையாக கண்டனம் எல்லாம் தெரிவித்தாலும் அதை பற்றி மாக்ஸிம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை என்பதும் பின்பு நொந்து போய் மாக்ஸிம் பத்திரிக்கை படிக்காதீர்கள் என்று தங்களுக்குள் சங்கிலி அஞ்சல் பரிமாற்றம் மட்டும் நடந்திக்கொண்டார்கள் என்பதும் புகை மூட்ட ஞாபகம்.

மீண்டும் மாக்ஸிம் பத்திரிக்கை 2003ல் "சண்டை போடுவது உடல் கட்டுக்கோப்பாக இருக்க உதவுகிறது" என்ற தலைப்பில் ஒரு கார்ட்டூன் போட்டது... அப்போது வந்த பொடி எழுத்து உபகருத்து - "teach those pacifists a lesson about aggression"



இந்த முறை எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக மாக்ஸிம் மன்னிப்பு கேட்டது...

*

ஒரு காலத்தில் தொடர்ச்சியாகவும் இப்போது எப்போதாவதும் maxim மற்றும் அதன் தம்பியான stuff ஆகிய பத்திரிக்கைகளை படிப்பது வழக்கம்.. படிப்பது என்பதை விட பார்ப்பது என்பதுதான் பொருத்தம். இரண்டுமே மகா மகா குசும்பு பிடித்த பத்திரிக்கைகள். அதில் எழுதப்படும் கமெண்டுகள் படுபயங்கர இரட்டை அர்த்தங்கள் நிறைந்ததாகவும் நிறைய கட்டுரைகள் அதிர்ச்சியூட்டக்கூடியதாகவும் இருக்கும். பல சமயம் அதில் வரும் பேட்டிகள் பேட்டி கொடுத்தவர் சொன்னது என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியாததாக இருக்கும். இந்த பத்திரிக்கையை அயல்நாட்டு பதிப்பு ரேஞ்சிலேயே தாங்க இன்னும் இந்தியா தயாராக இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. ஒன்று இந்தியாவுக்காக stripped down version தயாரிக்க வேண்டும். இல்லை அடிக்கடி ஏற்படும் முதுகு வலிக்கு ஏதுவாக ஹோல்சேலில் மெத்தை வாங்க வேண்டியதுதான்.

அறிவுப்பசி அண்ணாசாமி : பெண்/பெண்மை இழிவு படுத்தப்பட்டிருப்பதை கண்டித்து இந்த முறையும் பண்பாட்டு காவலர்கள் ஊர்வலம் போவாங்களா?



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


எப்ப பதிவு எழுதினாலும் யாராவது சைக்கிள் கேப்ல வந்து எதாவது பிரிவுல பதிவ சேர்த்திட்டு போயிடறாங்க. இந்த பதிவு சிறுகதை/கவிதையா? ஆனாலும் இவ்ளோ குசும்பு ஆகாதப்பு ;))
 



Khushboo refuses to accept Maxim's apology: மன்னிப்பு கேட்பவன் வீரன்; மன்னிக்க தெரிஞ்சவன் மனுசன்?

கிசுகிசுக்களை விட மேக்ஸிம் மாதிரி கிண்டல்கள் நேரடியானவை. ஊர் வம்பு போட்டுத் திளைக்கும் மிஸ்டர் மியாவ் (விகடன் குழுமம்), இந்தியா டுடே ஆகியோர் மீதும் வழக்குத் தொடுக்கலாமே.
 



Some more analysis: BBC NEWS | South Asia | Magazine targets the 'Indian lad'
 



Dear முகமூடி,

அமெரிக்க பத்திரிக்கைகள் வெளிப்படையாகத்தான் எழுதுவார்கள்.நகைச்சுவையாகத்தான் எழுதுவார்கள்.அவர்கள் ஜனாதிபதியை படு ஓவராக கிண்டல் செய்தெல்லாம் படம் போடுவது,கார்ட்டூன் போடுவதெல்லாம் சகஜம்.

சில சமயங்களில் ஓவராக எதையாவது செய்துவிட்டு முழிப்பதும் உண்டு.காந்தி விஷயத்தில் நடந்தது இதுதான்.

குஷ்பு விவகாரம் வேறு மாதிரி.அவதூறாய் எழுதியது அமெரிக்கா பத்திரிக்கை என்பதால் வழக்கு தொடர்ந்தால் 10, அல்லது 20 மில்லியன் கிடைக்கும்.காம்ப்ரமைஸ் பேசினால் 1 அல்லது 2 மில்லியன் கிடைக்கும்.

மேக்ஸிம் எனக்கு பிடித்த மேகஸின்.படித்தால் பொழுது போவதே தெரியாது.அவன் மேல் உங்களுக்கு என்ன திடீர் கோபம்?

ஆன்லைனில் இந்தியாவில் பிளேபாய்,penthouse கூட கிடைக்கிறது.மாக்ஸிமை போய் எதிர்த்துகொண்டு..என்னாங்கோ நீங்க
 



லிங்க் கொடுத்தீங்கனாக்கா, தீர படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.
 



ஜிகிடி, இந்த விவகாரம் வெளிவந்தவுடனேயே மாக்ஸிம் சென்னையில் விற்றுத்தீந்துவிட்டதாக தகவல்.

*

பாபா, விவகாரம் இரண்டு விதமானது. ஒன்று மாக்ஸிம் படிக்க ஸ்வாரசியமாக இருக்கும், இளைஞர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை. (BPO இளைஞர்களை குறிவைத்திருப்பதாக சொல்கிறார்கள். ) ஆனால் படங்கள். மிஸ்டர் மியாவ் பக்கத்தையே பஸ்ஸிலோ ட்ரெயினிலோ படிக்க (பார்க்க) தயங்கும் நிலையில் இருக்கும் இடத்தில் மாக்ஸிம் பத்திரிக்கையை பொது இடத்திலோ, ஆபிஸிலோ அல்லது வீட்டில் எல்லாரும் இருக்கும்போதோ பார்க்க இந்தியா இன்னும் தயாராகவில்லை என்றே கருதுகிறேன். ஹாஸ்டலிலும் தனி அறை இளைஞர்களிடமும் இது புழங்கும்.

இரண்டு, செய்திகள். VHP, சிவசேனா, PMK, VC என்பதெல்லாம் விடுங்கள். கற்பு விவகாரத்தில் அயல்நாட்டு தமிழ் இளைஞர்களின் கருத்துக்களை பார்த்த போது மாக்ஸிம் இந்தியாவில் எந்த நிலைப்பாடு எடுக்கும் என்பது கேள்விக்குறிதான். மாக்ஸிம் பொருத்த வரை புனிதம் என்பதே நகைச்சுவைக்குறியது. அப்படியிருக்க பக்கத்து தெரு எம்.எல்.ஏவிலிருந்து மதப்பெரியவர்கள் வரை யாரையும் விட்டு வைக்காமல் பதம் பார்த்தால் என்ன ஆகும்? உம். காந்தி விவகாரம் இந்திய எடிஷனில் வந்திருந்தால் கிடைக்கும் ரியாக்ஷன்.

*

செல்வன், மாக்ஸிம் மீது கோபமெல்லாம் ஒன்றுமில்லையே... அதை எதிர்க்கும் தொனியிலா இருக்கிறது பதிவு? நான் முன்பு தொடர்ச்சியாக படித்ததற்கு காரணம் subscription... பின்பு அதை புதுப்பிக்கவில்லை. அதனால்தான் இப்பல்லாம் அப்பப்போ. மற்றபடி maxim & stuff நானும் ரசிப்பவை.

அண்ணாசாமி கேள்வி, பண்பாட்டு காவலர்கள் இப்போது என்ன நிலை எடுக்கப்போகிறார்கள் என்பது பற்றி. அனேகமாக, கற்ப பத்தியா பேசுன நல்லா வேணும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற ரீதியில் அபத்த அறிக்கைகள் வரலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

*

சின்னவன், இந்திய பதிப்பு லிங்க் தெரியாது. அமெரிக்க பதிப்பு

www.maximonline.com
www.stuffmagazine.com
 



சிரிப்பதா சிந்திப்பதான்னே தெரியல.

பின்னூட்டங்களில் கெட்டவார்தை எழுதுபவர்களைப் பார்த்து நாம் எழுதாமலாப் போகிறோம். நாம் எல்லோருமே ஒவ்வொரு விதங்களில் மூளை சலவை
செய்யப்பட்டிருக்கிறோம். நமது எதிர்வினைகளும் அதன் படியே இருக்கும்.

மகாத்மா பற்றிய பல ஜோக்குகளை நான் ரசித்திருக்கிறேன், அதனால் அவர்மேலுள்ள மரியாதை குறையவில்லை, நான் மதிக்காமல் போனாலும் அவர் மதிப்பொன்றும் குறையப்போவதில்லை. அவர் ஆய்வுக்கப்பாற்பட்டவரா? அவர் செய்ததெல்லாம், சொன்னதெல்லாம் சரியா? கிண்டலுக்ப்பற்பற்பட்டவரா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்.

குஷ்பு தமிழகத்தில் பலரிடம் என்ன கலவரத்தை ஏற்படுத்தினாரோ அதேதான் MAXIM அவருக்கு செய்திருக்கு. குஷ்பு கருத்துச் சுதந்திரப் படகிலேறி தப்பியவர், இப்போ ஏன் துடிக்கிறார்னு தெரியல.

முகமூடி சொல்லுவதுபோல 'இந்தியாவுக்கு இதுபோல அதிரடி பத்திரிகைகள் இப்போது தேவையா?' என்பது ஒரு விவாதிக்கப்படவேண்டிய கேள்வி. இதற்கு என் பதில், எந்த பத்திரிகையும் அதற்கென உள்ள வாசகர்களுக்கானது... அவரகளின் தேவைக்காக வந்துபோகட்டுமே..

குஷ்பு நடித்த ஓரங்கா ஸ்ரீலங்கா கொப்பரத்தேங்கா பாடல் எல்லாருக்கும் ஞாபகமிருக்கிறது. அதில் கமல்ஹாசனின் நுணுக்கமான செஷ்டைகளை கவனித்துப் பாருங்கள். MAXIM பிச்சை வாங்கும்.

உங்கள் கடைசிக் கேள்வியும் நியாயமானது..செஞ்சாலும் செய்வாங்க நம்ம அரசியல்வாதிங்க.

நம்ம ஊருல கருத்துச் சுதந்திரம் படும்பாடி இருக்கே....

Saturday Night Live, Jay Leno, Letterman எல்லாம் பாத்தா உள்நாட்டுப்போர்தான் நடக்கும்னு நினைக்கிறேன்.

(ஹ்ம்..இத எழுதினதுக்கு இன்னொரு பதிவே போட்டிருக்கலாம்)
 



'மேக்ஸிம்' பத்திரிக்கையை தடை செய்ய சரத்குமார் கோரிக்கை

குஷ்புவுக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறுகையில், முதலில் அந்தப் பத்திரிக்கையை தடை செய்ய வேண்டும். இதுபோன்ற ஆபாசமான, கீழ்த்தரமான செயல்களை ஏற்கவே முடியாது.

நடிகை குஷ்பு இந்த விஷயத்தில் எடுத்துள்ள நிலைக்கு நான் ஆதரவாக உள்ளேன். நான் மட்டுமல்ல திரையுலகமே ஆதரவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

நடிகர், நடிகைகளை முன்மாதிரியாக ரசிகர்கள் கருதும் நிலையில் இதுபோன்ற புகைப்படங்களை பிரசுரிப்பது மிகவும் கேவலமானது, கண்டனத்துக்குரியது. இதுபோன்ற தொல்லைகள் தொடர் கதையாகி வருவது வருத்தம் தருகிறது என்றார் சரத்குமார்.
 



//
நடிகர், நடிகைகளை முன்மாதிரியாக ரசிகர்கள் கருதும் நிலையில் இதுபோன்ற புகைப்படங்களை பிரசுரிப்பது மிகவும் கேவலமானது,
//

:-) :-(
 



Excellent & crisp thoughts Cyril
 



ஞாநி - விகடன் ::

ஆபாசமான தோற்றத்தில் இருக்கும் ஒரு பெண்ணின் படத்தில் முகத்தை மட்டும் மாற்றி, குஷ்புவின் முகத்தை அதில் பொருத்தி, கன்னித் தன்மையைக் கிண்டல் செய்து வெளியிட்டிருக்கிறது, லண்டனில் இருந்து வெளியாகும் ஓர் ஆங்கிலப் பத்திரிகை. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பத்திரிகைத் துறையில் முதலீடு செய்ய அனுமதிக்கக் கூடாது என்று சிலர் போராடுவது நியாயம்தான் என்று தோன்றுகிறது. படத்துக்குக் கீழே ‘இது 100 சதவிகிதம் பொய்’ என்று அந்தப் பத்திரிகையே வெளியிட்டுவிட்டதாலேயே, செய்திருக்கும் அயோக்கியத்தனம் துளியும் குறைந்து விடாது. ‘இது பொய்தான்’ என்று கூடவே அறிவித்துவிடுவது சட்டப்படிகூட அந்தப் பத்திரிகையைக் காப்பாற்றாது. பத்திரிகைகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் இத்தகைய போக்கு, தமிழ் உள்பட உலகம் முழுவதும் சில கறுப்பு ஆடுகளால் பின்பற்றப்படுகிறது. இவற் றைக் கலாசாரக் காவலர்கள் கண்டு கொள்ளாவிட்டாலும், சக பத்திரிகையாளர் கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்.
 



feb 02 - தினமலர் சென்னையில் "மாக்சிம்' இதழ்கள் பறிமுதல் ::

சென்னை : நடிகை குஷ்புவின் ஆபாச படம் வெளியிட்ட ஆங்கில இதழ்களை சென்னையில் போலீசார் நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். பறிமுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

லண்டனிலிருந்து வெளியாகும் "மாக்சிம்' இதழின் இந்திய பதிப்பு தற்போது சென்னையில் அதிவேகமாக விற்பனையாகி வருகிறது. தனது முகத்தை மார்பிங் செய்து ஆபாச படம் வெளியிட்ட இந்த இதழ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடிகை குஷ்பு சென்னை நகர போலீஸ் கமிஷனர் ஆர்.நடராஜிடம் புகார் செய்தார். அப்புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு கமிஷனர் நடராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமிநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் இன்பதமிழன் மற்றும் போலீசார் சென்னையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னை பாரிமுனை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் கடைகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில், 110 மாக்சிம் இதழ்கள் சிக்கின. சென்னையில் மேலும் பல கடைகளில் இந்த இதழ்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த இதழ்களையும் பறிமுதல் செய்ய போலீசார் நேற்றும் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை இன்றும் தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
 



சரி, உங்க கருத்து ??