<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

IndiBlog தேர்தல்


ரொம்ப நாளைக்கு முன்பு, பத்ரி பதிவில் இருந்த ஒரு படத்தை க்ளிக்கி சென்ற போது, தேசி ப்ளாக் அவர்ட் என்ற பெயரில் வலைப்பூவுக்கு தேர்தல் எல்லாம் நடக்கிறது என்பதையும் சென்ற வருடம் தேர்தல் நடக்கும் அளவு ப்ளாக் விஷயங்களில் சமூகம் தூள் பறத்திக்கொண்டிருக்கும் நிலையில் வலைப்பூ என்றாலே என்னவென்று தெரியாத நிலையில் நான் இருந்திருக்கிறேன் என்பதையும் அறிந்தேன். சென்ற வருட அவார்ட் வின்னர் பத்ரி.

இந்த வருடம் இதை பற்றிய அறிமுகம் பாஸ்டன் பாலாவால் தரப்பட்டிருந்தது(1). "எப்படி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டாங்களே" என்று நான் புலம்பும் அளவு ஒரு பிரிவில் அவர் பர்சனல் பார்வை இருந்தாலும், அவர் கொடுத்திருந்த சுட்டியை பிடித்து இண்டிப்ளாக்கீஸ் சென்று "நமக்கு நாமே" திட்டத்தில் என் ப்ளாக்கை பரிந்துரைத்துக்கொண்டேன்.

சிலர் தவறாக நினைத்தது போல் இது சிலரால் சிலருக்கு மட்டுமே நடந்த தேர்தல் அன்று. யார் வேண்டுமானாலும் பரிந்துரைத்துக்கொள்ளலாம் என்ற அளவில்தான் இது இருந்தது. இருந்தாலும் பாஸ்டன் பாலா(1), ஐகாரஸ் ப்ரகாஷ்(2) ஆகியோரின் பதிவுகளை படிக்க தவறியிருந்தால் இத்தேர்தலை பற்றி அறிந்திருக்க முடிந்திருக்காதுதான்.

தேசி ப்ளாக் அவார்ட் பற்றி தமிழ் வலையுலகில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது நான் சில விஷயங்களை சொல்ல விரும்பி எழுத ஆரம்பித்து பின்பு சில தனிப்பட்ட காரணங்களால் நிறுத்தி விட்டேன்.

சென்ற வருட
அடிப்படையில், இந்த வருடம் **** வரலாம் என்பது என் கணிப்பாக இருந்தது. தனிப்பட்ட முறையில் என் பதிவு போட்டியில் இல்லாமல் இருந்திருந்தால் நான் ****வுக்கு ஓட்டு போட்டிருப்பேன்.

இன்று சன்னாசியின் பதிவில்(7) இந்த தேர்தலின் முடிவுகள் குறித்த அறிவிப்பும் வெற்றி பெற்ற முகமூடிக்கு வாழ்த்துக்களும் என்று பார்த்த போது உண்மையிலேயே நம்ப முடியவில்லை.

இத்தேர்தலை பற்றிய அறிமுகம் தந்த பாஸ்டன் பாலாவுக்கும், முடிவு அறிவிப்பினை முந்தித்தந்து முதல் வாழ்த்து அளித்த சன்னாசிக்கும் எந்த காரணத்தினால் எனக்கு ஓட்டு போட்டிருந்தாலும், வாக்களித்த அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

*

Indian weblog awards 2005

முடிவுகள்
ஓட்டு நிலவரம்

*

IndiBlog தேர்தல் சம்பந்தமாக எனக்கு தெரிந்து வந்த தமிழ்ப்பதிவுகள்

#1.
வலைப்பதிவுகள் - 2005 : இண்டிப்ளாக்ஸ் குறித்த பாஸ்டன் பாலாவின் அறிமுகம் மற்றும் பர்சனல் பரிந்துரைகள்

#2.
போடுங்கய்யா ஓட்டு... : தேர்தலில் தமிழ்மணம் பங்குபெறுவது குறித்த ஐகாரஸ் பிரகாஷின் அறிமுகம் மற்றும் பிரச்சாரம்

#3.
தேர்தல் துவங்கியது.. : தேர்தல் துவங்கியது என்ற ஐகாரஸ் பிரகாஷின் அறிவிப்பு

#4.
போடுங்கம்மா ஓட்டு நம்ம தமிழ்மணத்தப் பாத்து : ஓட்டு போடுவது எப்படிஎன்பது பற்றி பவுல்ரவிசங்கரின் விளக்க பதிவு

#5.
இந்தியப் பதிவுகள் - 2005 : தன்னுடைய ஓட்டு எந்த பதிவுகளுக்குஎன்பது பற்றிய பாஸ்டன் பாலாவின் குறிப்புகள்

#6.
தமிழ் வலைப்பதிவுகளும் இண்டிப்ளாக்ஸ் தேர்தலும் : இது பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை என்ற சுந்தரமூர்த்தியின் எண்ணங்கள்

#7.
Indibloggies முடிவுகள் : இண்டிப்ளாக்கிஸ் முடிவு குறித்த அறிவிப்பும் வெற்றி பெற்றவருக்கு சன்னாசியின் வாழ்த்தும்



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


கூட்டணி கட்சிகள் துணைவில்லாமல் தனித்து போட்டு இர்ட்டு தேர்தலில் வென்றிருக்கும் பமக தலைவருக்கு வாழ்த்துக்கள்

எப்ப தேநீர் விருந்து ?
 



Well done. Congrats !!!
Kalakiteenga ponga :)
 



'பொதுவாக என் மனசு தங்கம்' என்று தலைவர் ஸ்டைலில் பாட நெனச்சேன்... இப்படி 'கண்ணா... ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா? உனக்கு ஒரு சாக்லேட் வேணுமா, இரண்டு சாக்லேட் வேணுமா? என்று கேட்டா என்ன சொல்வாய்?' என்று மன்னன் ஸ்டைலில் கேக்க வச்சுட்டீங்களே ;-))

வாழ்த்துக்கள்! (தண்ணி பார்ட்டி எப்ப :)
 



வாழ்த்துக்கள்.
 



Congratulations.
 



வாழ்த்துகள் முகமூடி!
 



அட...சூப்பரு!அட...சூப்பரு!
(அத்தனை பேரை எப்படி கவுத்து ஓட்டு வாங்கினீங்கன்னு எனக்கு தனியா சொல்லுங்க மாமேய்...! அடுத்த தபா நானும் நிக்கலாம்னு பாக்குறேன்! ஹி ஹி)மத்தபடி சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்ன்னு இன்னும் எத்தனை வலை பதியப்படபோகுதோ.?!
 



தலை! வாழ்த்துகள்..

பிரசாரம் (மனசுக்குள்ளே) பண்ண எங்களுக்கெல்லாம் ஒரு நன்றி கிடையாதா?
 



83 வாக்குபெற்று ஜெயித்ததற்கு வாழ்த்துக்கள்!

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை!

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை!!
- a tamil film song

smileys here ->
:-) | ;-) | :-)))
 



வாழ்த்துக்கள் முகமூடி!
 



//மத்தபடி சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்ன்னு இன்னும் எத்தனை வலை பதியப்படபோகுதோ.?!//

மாயவரத்தான்: "கந்தன் புத்தி கவட்டுக்குள்ள"ன்னு ஒரு பழமொழி உங்க ஊருப் பக்கம் இருக்கா தலைவா? ;-)
 



பரிசு கிடைச்சாச்சு;(அதில பாத்தீங்களா? தமிழ் ப்ளாக்-களுக்கு மட்டும் ஸ்பான்ஸர்களே இல்லியா, என்ன? ஒரு t-shirtகூட இல்லியா? அநியாயம்'பா?) பொறுப்பு ஜாஸ்தியாயிருச்சு - அடுத்தது life time ahciever award தான். முன்னே போங்க..வாழ்த்துக்கள்
 



தலைவா, பேமேண்டு பேசியப்படி இன்னும் வரலையே? இதுதான் தேர்தல் வாக்குறுதியின் லட்சணமா? இதுக்குத்தான் வாக்கு
போடுவதற்கு முன்னாடியே முக்குத்தியோ, பிளாஸ்டிக் குடமோ, பச்சை நோட்டோ வாங்கியிருக்கணும் :-)
 



வாழ்த்துகள் முகமூடி !!!!
 



வாழ்த்துக்கள் முகமூடி!
 



வாழ்த்துக்கள் முகமூடி எனது வாக்கை உங்களுக்கும் தமிழ்மணத்திற்கும் போட்டிருந்தேன். தமிழ் மணம் தவறி விட்டது. அடுத்தமுறை பார்க்கலாம்.....
 



தேநீர் விருந்தா? U mean tea party? அதுக்கென்ன அவசியம் இப்போ சின்னவன். எல்லாம் அடுத்த எலக்சனுக்கு முந்தி பாத்துக்கலாம்.

பாஸ்டன், மன்னன் பாத்து ரொம்ப நாளாச்சி, மறந்தே போச்சி. தங்கத்தலைவி, கவர்ச்சிக்கன்னி குஷ்புவுக்காக அத இன்னொரு முறை பார்க்கலாம்னு இருக்க்கேன். அதுக்கப்புறம் கண்ணா... அப்படீன்னு ஆரம்பிச்சி ஒரு கருத்த் சொல்றேன். இப்ப டைம் சரியில்ல ;) தண்ணிதானே.. உங்களுக்காக ஸ்பெஷலா Goldschlager அனுப்பியிருக்கேன்... பெற்றுக்கொண்டு அடுத்த தபா நம்மள கண்டுக்கவும்.

ரம்யா ஊர்லயிருந்து வந்துட்டீங்களா, உங்ககிட்ட அங்கன்வாடி சம்பந்தமா சில விஷயங்கள் கேட்கவேணும். அதுக்கு முன்னாடி ஊரில் நிகழ்ந்த விஷயங்களை டைம் கிடைச்சா வலையேத்துங்க.

சுரேஷ், அதான் அவ்வளவு சத்தமா (மனசுகுள்ள) நன்றி சொன்னனே, கேக்கலையா உங்களுக்கு..

ஞானபீடம் 83 என்பது நியூமராலஜி படி எதையாவது குறிக்கிறதா? 83 *** வாக்குகள் என்பதில் ஏதும் உள்குத்து உள்ளதா? "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை" இது ரொம்ப பழைய பாட்டில்ல. புதுசா ரீமிக்ஸ்ல மாத்திட்டாங்களாமே?

தருமி, காகாப்ரியன் : அத ஏன் கேட்கறீங்க. தமிழ் புரவலர்கள் எல்லாம் எங்க போணாங்கன்னே தெரியல. தமிழ் வளர்ச்சிக்காக போராடிக்கிட்டு இருப்பாங்க, அவங்கள எதுக்கு தொந்தரவு பண்ணிகிட்டு. ஏழை தமிழின் வளர்ச்சிக்கு புரவலர் இல்லையென்பது தொன்று தொட்டு அரசியலில் சகஜமப்பா..

உஷா, அரசியலின் பாலபாடமே தேர்தலுக்கு முந்தியே கட் அண்ட் ரைட்டா பேரத்த முடிச்சிடணும். இல்லையின்னா அடுத்த தேர்தல் வரைக்கும் வெயிட்டிங்க்லதான் இருக்கணும்... (லட்டுகுள்ள மூக்குத்தி இருந்ததே, பாக்கலையா?)

இளந்திரையன் ஓட்டு போட்டத வெளியில சொன்னா சில பாதிப்புகள் ஏற்படலாம்னு பட்சி சொல்லுதே... கவனிக்கலையா நீங்க.

சின்னவன், டுபுக்கு, பாஸ்பாலா, இலவச கொத்தனார், தேன் துளி, ரம்யா, மாயவரத்தான், பெனாத்தலார், ஞானபீடம், ஜோ, தருமி, உஷா, பாலா, சுதர்சன், இளந்திரையன், காகா ப்ரியன் என்று இங்கு வந்து வாழ்த்து சொன்ன உங்களுக்கும் அங்கங்கு வாழ்த்து சொன்னவர்களுக்கும் மிகவும் நன்றி!

*

பொறாமை என்றதற்கு சொன்ன பதிலை lateral mixingல் கலந்து அடித்து நன்றி சொல்வதை கொண்டாட்டம் என்று ஒரு இதுவாக நினைத்து மண்டை காய்ந்து இருப்பவர்களுக்கும், அவர்கள் (மண்டை) குளிர உதவியாக இருக்கும் wikiக்கும், நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள உதவியாக இருந்த இந்த தேர்தலை நடத்திய Indibloggies நிர்வாகிகளுக்கும் நன்றி!!

;)))
 



தேர்தலும் !@#$%^ING ம்


( கெட்ட வார்த்தை இல்லைங்கணா, தேர்தலும் SOMETHING ம் தான் தலப்பு !! )
 



கெலிச்சதுக்கு கங்கிராஜ்லேசன்ஸ்,தல.
Smiley * 3
 



முகமூடி,

வாழ்த்துக்கள்!!
 



புது வருஷம்...புது அவார்டு...புது நண்பர்கள்...கலக்கறே சந்துரு!
 



முகமூடி, 6 வார வேலைகளை வீட்டிலேயும், அஃபீஸிலேயும் முடிச்சுகிட்டிருக்கேன்..அதான் இன்னும் ப்ளாக் பக்கம் வர முடியலை. தனி மடல் அனுப்புங்க அங்கன்வாடி பத்தி details வேணும்னா..
 



சரி, உங்க கருத்து ??