<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கேபிள் மசோதாவும் சில கேள்விகளும்


தமிழக ஆளுர் சுர்ஜித் சிங் பர்னாலாவை, திமுக தலைவர் கருணாநிதி & தயாநிதி மாறன் இன்று சந்தித்து கேபிள் டிவி நிறுவனங்களை தமிழக அரசு கையகப்படுத்துவதற்கான புதிய சட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். கேபிள் டிவி தொடர்பான அதிகாரம் மத்திய அரசின் கையில் உள்ளது என்றும், இதில் மாநில அரசு தலையிட உரிமையில்லை என்றும் கூறிய கருணாநிதி, முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ள மசோதா சட்ட விரோதமானது. இதற்கு ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இதை தொடர்ந்து இன்று பிற்பகலில் பேராசிரியர் அன்பழகன் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து சட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தினர்.

இதுல இவங்க எல்லாம் உண்மையிலேயே சட்டத்த பாதுக்காக்கத்தான் இவ்ளோ துடிக்கிறாங்கன்னு சொல்ற ஆறு மாசக்குழந்தைங்கள்லாம் கொஞ்சம் ஒத்துங்க.. நம்ம அறிவுப்பசி அண்ணாசாமிக்கு செல கேள்விகள் கீதாம்.

அ) ஜெயா ப்ளஸ் செய்தி அலைவரிசைய தொடங்கவும் சொந்தமா டெலிபோர்ட் அமைக்கவும் 2004லயே அனுமதி கிடைக்க அதனால விலை உயர்ந்த நவீன கருவிகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து, நிர்மாணிக்கப்பட்டு விட்ட நிலையில் நேரடி ஒளிபரப்பு வசதியை பயன்படுத்துவதற்கான உரிமத்தை அளிக்கக் கோரி மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் 2004ம் ஆண்டு மே மாதம் விண்ணப்பிச்சும், பலமுறை நேரில் வலியுறுத்தியும், கடிதம் மூலமும் நினைவூட்டியும், அப்லிங்கிங் வசதிக்கான உரிமத்தைக் கொடுக்காமல் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் இழுத்தடிப்பு செய்கிறது. இத கொஞ்சம் விசாரிச்சு என்னன்னு சொல்லுங்கன்னு ஜெயா உயர்நீதிமன்றத்துல கேஸ் போட்டு, அத விசாரிச்ச உயர் நீதிமன்றம், ஜெயா டிவியின் கோரிக்கையை சட்ட விதிகளுக்குட்பட்டு உரிய முறையில் பரிசீலித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு உத்தரவிட்டதே, அதுக்கும் ஆளுநர் கிட்ட எதிர்ப்பு தெரிவிச்சீங்களா அமைச்சர் சார்?

ஆ) பொது வாழ்க்கைக்கு வந்த விஜயகாந்த் கல்யாண மண்டப விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாதுன்னு சொன்ன மாதிரியே பொது வாழ்க்கைக்கு வந்த தயாநிதி கேபிள் டிவி விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளாக்கூடாதுன்னு அறிக்கை தயாரிச்சி அப்புறம் அத கிழிச்சிப்போட்டுட்டாராமே டி.ஆர்.பாலு, உண்மையா?

இ) "ஏங்க, சன் டிவியில இப்படியெல்லாம் அபாண்டமா சொல்றாங்களே, இருட்டடிப்பு செய்றாங்களே, இதயெல்லாம் ஒரு வார்த்தை ஏன்னு கேட்க கூடாதான்னு கேட்டா மட்டும் சன் டிவி குழுமத்துக்கும் தமக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்றாரே தலைவரு, இப்போ திரண்டு போயி ஆளுநர சந்திக்கிறாரே, இதத்தான் தான் ஆடாட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்றாங்களோ?

ஈ) நாட்டுல 40 பேர் செத்தா கூட உடல்நிலை காரணமா குட்டி தலைவர்கள களப்பணிக்கு அனுப்பற தலைவரும் சரி வூட்டுல உக்காந்து அறிக்கை வுடுறதோட கடமைய முடிச்சிக்கிற அமைச்சர் & எம்மெல்லே பெருமக்களும் சரி, மத்திய அமைச்சர் வூட்டு நாய் காணாம போனா கூட குடு குடுன்னு போயி ஆளுநர சந்திக்கிறாங்களே, அது ஏம்பா?



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


இப்ப்பத்தான் பார்த்தா ஏற்கனவே ஆப்புன்னு ஒரு பதிவுல இதுல வந்த சில மேட்டருங்கள மக்கள் பேசியிருக்காங்க..

பொதுமக்கள் மனசாட்சிய பிரதிபலிப்பது மட்டுமே பச்சோந்தி மக்கள் கட்சி நிறுவனத்தலைவரின் முக்கிய அம்சம். அதன் இன்னொரு சாட்சி இந்த பதிவுன்னு இப்பவாவது பொ.மக்களுக்கு புரிஞ்சா சரி..
 



இந்தப்பிரச்சினையில் கவனிக்க வேண்டிய இன்னும் ஒரு அம்சம் சன் டிவி நேற்றைய செய்திகளில் கூட்டம் சேர்த்த முறை!

நக்கீரன் கோபாலில் ஆரம்பித்து, இன்றுவரை யாரெல்லாம் ஜெ அரசால் பழிவாங்க்ப்பட்டார்கள் என்ற பட்டியல் போட்டு, தேர்தல் பயத்தால் இந்த நடவடிக்கை என்றும் கூறி, தேர்தலுக்கும் எஸ்.சி.விக்கும் உள்ள தொடர்பை வெளிச்ச்ம் போட்டிக்காட்டி, நாளை உங்கள் நிறுவனமும் அரசால் எடுத்துக்கொள்ளப்படலாம் என்று ஒரு அனைவருக்குமான பயமுறுத்தல் - ரொம்பத்தான் ஆடிப்போய்விட்டார்கள்!

With Best Regards,
penathal Suresh
 



//பொதுமக்கள் மனசாட்சிய பிரதிபலிப்பது மட்டுமே பச்சோந்தி மக்கள் கட்சி நிறுவனத்தலைவரின் முக்கிய அம்சம். அதன் இன்னொரு சாட்சி இந்த பதிவு//

இதை நிருபிக்க கூட மாயவரத்தானின் பதிவு தான் தேவைப்படுது பாருங்க. இதிலே இருந்து என்னா தெரியுதுன்னா செய்திகளை முந்தித் தருவது(ம்) மாயவரத்தானின் வலைப்பூ தான். அதான் நம்பர் 1.
 



Well said mugamoodi.. !!!
 



Mugamoodi and Mayavarathan hate DMK.It is too much to expect them to analyse this issue objectively.
This bill even if enacted will be
struck down by the courts.So you can get some petty pleasure for now.
 



How does a company start a cable provider service in India? Jaya could have bought Hathway or started a new competitor in the market.

State Govt. taking over could be beneficial to Maran bros., when Stalin comes to power :-)
 



எந்த பாவமும் செய்யாத விஜய்காந்தின் 20 கோடி ரூபாய் மண்டபத்தை வீணாய் இடித்ததன் விளைவு தான் இது.

ஆனாலும் அரசு வணிகத்தில் தலையிட்டு நன்றாக ஓடும் ஒரு வணிக நிறுவனத்தை கையகப்படுத்தியது தவறு.சன்டீவி மற்ற மாநிலங்களிலும் புகழ்பெற்று விளங்குகிறது.உதயா,ஜெமினி என ஆந்திரா,கர்நாடகா மாநிலங்களிலும் ரசிக்கப்படுகிறது.வடநாட்டுக்கு போட்டியாய் தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு சேனல் இருப்பது தமிழனுக்கு பெருமைதான்.

ஆனால் இது Monopoly என்பதாய் மாறிவிடக்கூடாது.அதை நெறிமுறைப்படுத்த வேண்டுமே தவிர அரசு கையகப்படுத்துவது என்பது தவறு.
 



பெனாத்தலார், அந்த காமெடியில தமிழ்முரசையும் சேத்து சொன்னாங்களே பாத்தீங்களா?

*

மாயவரத்தான், ராஜா வரதுக்கு முன்னாடி கட்டியங்காரன் வர்றது இயல்பான நடைமுறைதான். அதுக்காக கட்டியங்காரன் ராஜாவாகிவிட முடியுமா ;p

*

ரவி. அனாலிஸில் எல்லாம் பெரிய ஆளுங்க செய்யிற வேலை (உங்கள மாதிரின்னு ஒரு ஸ்மைலியோட சேத்துக்கிறேன்) நம்மது சிம்பிளா நாலு கேள்விதான். அதப்பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு சொல்லுங்க...

என்ன அனலிஸிஸ் பண்ணி நீங்க என்ன பத்திய hate dmk முடிவுக்கு வந்தீங்கன்னு தெரியல. மாயவரத்தான் பத்தி அவர்தான் சொல்லணும், என்னை பொறுத்த வரை முகமூடி திமுகவை மிகவும் விரும்புகிறான் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

இந்த கேபிள் மசோதாவை ஆராய்வது அவசியமற்றது. scv என்ற பெயரில் கேபிள் ஆப்பரேட்டர்களை கட்டாயமாக ஒன்றுபடுத்தி, மத்த இடத்துக்கும் சென்னைக்கும் இருக்கும் விலை விகிதாச்சாரம், சேனல்களின் எண்ணிக்கை எல்லாம் வித்தியாசம் பார்த்து மக்கள் எரிச்சலாகி கேபிள் இணைப்பு தருபவர்களிடம் சண்டை போட்டு, என்னங்க செய்யிறது நாங்க மாசா மாசாம் கட்டுற கப்பம்தான் இதுக்கெல்லாம் காரணம்னு அவங்க விளக்கம் சொல்லி புகார் காண்டம் முடிஞ்சி மக்கள் எல்லாத்துக்கும் பழகிப்போய்விட்ட இப்போது பொது மக்கள் புகார் என்பதெல்லாம் பம்மாத்து... இது ஜெயா தயாநிதிக்கு தரும் செய்தி. ஜெயா ப்ளஸ் டைரக்ட் நியூஸ¤க்கு மத்திய அமைச்சரகம் போடும் முட்டுக்கட்டைக்கு ஜெயாவுடைய ரியாக்சன் இது. பில் பாஸ் செய்யப்பட்டால் நல்லது, இல்லாவிட்டாலும் ஒன்றும் பாதகம் இல்லை என்ற கணக்குதான் இது.

*

பாலா, ஹாத்வே சென்னையில் அடி(க்கப்)பட்ட பாம்பு. இனி எந்திரிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஏற்கனவே ஏகப்பட்ட பேர் scv வசம் உள்ள நிலையில் ஹாத்வே கையகப்படுத்துவது வேஸ்ட். இப்போது இவர்களுக்கு தேவை சுடச்சுட நியூஸ் வழங்கும் வசதி. மத்தபடி ஸ்டாலின் பவரில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மீடியா மாறன் ப்ரோக்கள் வசம்தான்.

*

செல்வன், இது சன் டிவிக்கு எதிராக அல்ல. scvக்கு எதிரானதுதான். எந்த கேபிள் ஆப்பரேட்டரானாலும் சன் இல்லாமல் கேபிள் நடத்த முடியாது என்ற அளவில் சன் ராஜ்யம் பரந்து விட்டது என்பது அவர்கள் மார்க்கெட்டிங் திறமைக்கு உண்மையிலேயே பெருமைதான்.

*

அமைதி விரும்பி, கணிப்பு முடிவில் லயோலா என்று சொன்னபோது அவர்களின் போன கணிப்பு முடிவுகள் ஞாபகம் இருந்ததால் சிரிப்புதான் வந்தது.
 



சரி, உங்க கருத்து ??