<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

முரசொலி இதற்கும் கார்ட்டூன் போடுமா?


‘‘கோயம்பேட்டில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக உங்களின் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம் இருக்கும் நிலத்தையும் மத்திய அரசு கையகப்படுத்துவதில்தானே பிரச்னை ஆரம்பிக்கிறது. மண்டபம் இடிபடுவதில் உங்களுக்கு வருத்தமா?’’


‘‘நான் பதில் சொல்ல வேண்டிய கேள்விதான் இது... சில விஷயங்களைத் தெளிவுபடுத்திடற வேண்டியதுதான். பாலத்துக்காக அரசு கையகப்படுத்தும் இடங்களைச் சேர்ந்தவங்களில் 161 பேர் எங்க சொத்துக்களை இடிக்கக் கூடாதுனு கேட்கிறாங்களாம். அந்தப் பட்டியல்ல என் பெயர் இல்லை சார். மண்டபத்தை இடிக்கிறாங்களா... இடிக்கட்டும், எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனா, அதை வெச்சு என்னை அசிங்கப்படுத்த முயற்சி பண்ணா, நான் என் கச்சேரியை ஆரம்பிச்சிருவேன்.

என் மண்டபம் இருக்கிற இடத்தில் பாலம் வரலை. பாலத்துக்கான தரைவழிப் பாதைதான் வரப்போகுதாம்னு சொல்றாங்க. அதையும்கூட மண்டபத்துக்குப் பெருசா சேதம் வராம, முன்னாலேயோ பின்னாலேயோ பக்க வாட்டிலேயோ கொண்டு போக முடியும்னு அந்தத் துறை அதிகாரிகளா இருக்கிற சில நண்பர்களே சொன்னாங்க. மண்டபத்தைச் சுற்றி இருக்கிற இடங்களைத் தர்றோம்னு சொன்னால், மண்டபம் தான் வேணும்னு கேட்கிறாங்க. ரைட்டு, நான் அவங்க ரூட்டில் இடிச்சிருவேனோனு, அதுக்கு முன்னால் என் மண்டபத்தை இடிச்சுடணும்னு பார்க்கிறாங்களோ என்னவோ?’’

‘ஒரு விஷயமாக என்னைச் சந்திக்க வந்த விஜயகாந்த், வெளியே போய் எதற்காக என்னைச் சந்தித்தாரோ அதை அப்படியே மறுத்தார்’ என தி.மு.க. தலைவர் கருணாநிதி, நீங்கள் பொய் சொன்னதாகச் சொல்கிறார். உங்கள் பதில் என்ன?’’

‘‘படிச்சேன், சிரிச்சேன்! கலைஞரை பல முறை பல விஷயங்களுக்காகச் சந்திச்சிருக்கேன். ஆனால், இந்த முறை மட்டும் வீடு தேடி வந்தவனை, போட்டோ எடுத்து, அதை பிரஸ் நியூஸா கொடுத்து அரசியல் ஆக்கியது அவர்தான். நான் பொய் சொல்லலை. இன்னமும் நாகரிகம் கருதி, சில உண்மைகளைச் சொல்லாமல் இருக்கேன் என்பதுதான் உண்மை!’’

‘‘கிட்டத்தட்ட இருபது கோடி ரூபாய் சொத்து என்கிறார்கள். இழப்பின் வலியை எப்படித் தாங்குகிறீர்கள்?’’

‘‘வாழ்க்கையில் பல இழப்புக்களைச் சந்திச்சுப் பழக்கமாகிருச்சு. ஒரு கல்யாண மண்டபத்தை வெச்சு என்னை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மக்கள் எனக்குக் கொடுத்த காசை மக்களுக்கே திருப்பித் தர்றதா நினைச்சுட்டுப் போயிருவேன். நான் சின்ன வயசிலிருந்தே கொடுத்துப் பழக்கப்பட்டவன் சார். இரண்டரை ஏக்கர் நிலத்தை ஆதிதிராவிட மக்களுக்காக இலவசமாகக் கொடுத்தேன். வருஷத்துக்கு 25 லட்ச ரூபாயை இல்லாதவங்களுக்குக் குடுக்கிறதுக்காகவே சம்பாதிக்கிறவன். நான் என் சொத்துக்களை வித்துதான் மாநாடு நடத்தினேன். என்னைப் பார்த்து ‘பொது வாழ்க்கைக்கு வந்த விஜயகாந்த் கல்யாண மண்டப விவகாரத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது’னு புத்திமதி சொல்றார் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு. ஹலோ, நான் அரசியலுக்கு வர்றப்பவே காசோட வந்தவன். ஆனா, அரசியலுக்கு வந்து சம்பாதிச்சவங்க எனக்கு அட்வைஸ் பண்றாங்க. என் சொத்தை இதோ நான் சந்தோஷமா தர்றேன். மக்களுக்கு நல்லதுன்னா, என் மண்டபத்தை விட்டுக்கொடுக்கிறேன் சார் பெருமையா!’’

‘‘இது அரசியலாக்கப்படுவதுதான் வருத்தமா?’’

‘‘ஆமா, அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கல்யாண மண்டபத்துக்கு கார் பார்க்கிங் எங்கேனு கேட்டப்போ முன்னாடி இருக்கிற இடத்தைக் காட்டினாங்க. அப்புறம் மாநகராட்சி அந்த இடத்தைப் பூங்காவாக்கணும்னு பிரச்னையை ஆரம்பிச்சதும் சினிமாவில் செட் போடற மாதிரி திடீர்னு ரெண்டு சேர் போட்டு, கொஞ்சம் பூச்செடிகள் வெச்சு அதில் சாயங்காலம் ஆட்களை உட்காரவெச்சு அது ஒரு பூங்காவாதான் இயங்குதுனு காட்டினாங்களே. அரசாங்கம் கேட்டதும் அந்த இடத்தைத் தூக்கிக் கொடுத்திருக்க வேண்டியதுதானே. அவங்ககிட்ட இல்லாத சொத்து சுகமா... காசு பணமா? அறிவாலயத்துச் சொத்துக்கு ஆபத்துனா மட்டும் சட்டப்படி சந்திப்பாங்களாம். என் மண்டபத்துக்கு பிரச்னைனா, பெருசா எடுத்துக்கக் கூடாதாம். நல்ல காமெடிங்க இது!

போக்குவரத்து வசதிக்காக கோயம்பேட்டில் பாலம் கட்டணும்னு கல்யாண மண்டபத்தை இடிக்கப்போறீங்க, சரி. அதே மாதிரி சென்னையில் கோடம்பாக்கம் மேம்பாலம்னு ஒண்ணு இருக்கே... தினம்தினம் டிராஃபிக்கில் திணறுதே. அதை ஏன் சின்னதா கட்டினாங்கனு விசாரிச்சுப் பாருங்க, ஒரு வரலாறு இருக்கும். ஏன், ஸ்டாலின் மேயரா இருந்தப்போ அதை இடிச்சு இன்னும் பெருசா கட்டியிருக்கலாமே. பாலத்துக்குக் கீழே முரசொலி இருக்கு, அதனால்தான் அதைத் தொடலைனு மக்கள் சொல்றாங்களே, அது உண்மையா... பொய்யா? கோயம்பேடு பாலமா, கோடம்பாக்கம் பாலமா எது சென்னைக்கு முதலில் முக்கியம்னு மக்களிடம் கேளுங்க சார், அவங்க பதில் சொல்வாங்க! பொது வாழ்க்கைக்கு வர்றவங்க எப்படி இருக்கணும், இருக்கக் கூடாதுனு எனக்கு சில பேர் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. நானும் சொல்றதுக்கு நிறைய இருக்கு... ஒவ்வொண்ணா மக்கள் மன்றத்தில் எடுத்துவைக்கிறேன். எனக்கு எஜமான், மக்கள்தான்!’’

நன்றி & முழுப்பேட்டி படிக்க ::
விகடன்



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


பண்பட்ட அரசியல் தலைவர் போல் பேசியிருக்கிறார் விஜய்காந்த்.வாழ்த்துக்கள்.
 



well said vijaykanth
 



விஜயகாந்த் நாகரீகமா நடந்துக்கற மாதிரிதான் தெரியுது. இன்னும் முழு அரசியல்வாதியாகலையோ என்னவோ. தேர்தல் நேரத்தில என்ன பண்றார்ங்கறதுலதான் அவர் கேரக்டர் தெரியும்னு நினைக்கிறேன்.
 



தல,
விஜயகாந்த் சொல்றது உண்மையா இருக்கும்னு தான் தோணுது, பாப்போம் என்ன நடக்குதுன்னு.

உமக்கு இண்டிப்ளாக்கிஸ்ல ஓட்டு போட்டதுக்கு ஒரு சரியான retribution இல்லியே!!!! உஷா அக்கா சொன்னது போல...!
 



செல்வன், சிவா, நிலா... தேர்தலில் ஜெயித்தால்தான் அவரின் உண்மையான கேரக்டர் தெரிய வரும்.

இராமநாதன், எதிர்ப்பை சாதகமாக்கும் குணம் இவருக்கு இருக்குமா என்பதை பார்ப்போம். ஓட்டு போட்டதுக்கு அவ்ளோ சத்தமா (மனசுகுள்ள) நன்றி சொன்னனே கேட்கலியா... பாருக்குள்ள (ஐ மீன் bar) சத்தமா இருந்ததுல கேட்டிருக்காது. உங்களுக்காக sambuca, cofee bean, lighter எல்லாம் அனுப்பியிருக்கிறேன். டிஷ்யூ தேவையில்லை இதற்கு. எப்படி இருக்கிறது என்று அனுபவித்துவிட்டு சொல்லவும்.
 



சூப்பர்(ஆ)ப்பு!
 



Sir, I will try my best tio retain my property. Will meet anyone and go to any extent, even if it reduces my name. But, once it is becoming inevitable, i will proudly announce that I am giving that to people wholeheartedly. Please praise my genoracity
 



நன்றாக கூறியுள்ளார் விஜயகாந்த்...பார்ப்போம்...கருணாநிதியை எதிர்த்துகிட்டு அரசியல் ஆரம்பிக்கறது சுலபம் ஜெயலலிதாவை எதிர்த்துகிட்டு ஆரம்பிக்கறதை விட.....

Krishna solrathum unmai than...athaiyum kannakil edukkavendum
 



//மக்கள் எனக்குக் கொடுத்த காசை மக்களுக்கே திருப்பித் தர்றதா நினைச்சுட்டுப் போயிருவேன்//

அது என்னங்க அது பிரச்சனைக்குறிய சொத்துக்களை மட்டும் மக்களுக்கு வழங்கும் கொடைவள்ளல்தனம்?!

பேட்டில எல்லாம் நல்லா இருக்கு... இது ஒன்னைத்தவிர...
 



இது பிரச்சினை சார்ந்த ஆதரவு மட்டுமே
(மற்ற அனைத்து கருத்துகளுக்கும் என்று பொதுமைப் படுத்திக்கொள்ள வேண்டாம்.. )

அல்லது என்றொரு மாற்றொன் றிருப்பின்
நல்லது நல்குமே காண்


(அங்கங்கே பாடலை போட்டுவிடுகிறேன், எதிர்காலத்தில் எப்படி சேகரிப்பது என்ற கவலையும் சேர்கிறது..)

பதிவுக்கு முகமூடிக்கும், தெளிவுக்கு விஜயகாந்த் அவர்களுக்கும் நன்றி.

எஜமானர்களின் சார்பில்,
பூங்குழலி
 



தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள் முகமூடி.
 



" என் சொத்தை இதோ நான் சந்தோஷமா தர்றேன். மக்களுக்கு
நல்லதுன்னா, என் மண்டபத்தை விட்டுக்கொடுக்கிறேன் சார் பெருமையா!’’


"அறிவாலயத்துச் சொத்துக்கு ஆபத்துனா மட்டும் சட்டப்படி
சந்திப்பாங்களாம். என் மண்டபத்துக்கு பிரச்னைனா, பெருசா
எடுத்துக்கக் கூடாதாம். நல்ல காமெடிங்க இது!"

நாலாவது பத்தியிலிருந்து ஐந்தாவது பத்திக்கு வருவதற்குள்
இவ்வளவு முரண்பாடா ? தெளிவா பேசறதுக்கே ரொம்ப நாளாகும்
போலிருக்கு.
 



ஒன்றுமில்லை சார் நடிகர் 20 கேட்டிருப்பார். கலைஞர் 2 என சொல்லியிருப்பார் இவர் மறுத்து இருப்பார் திருமணமண்டபம் இடிப்பு மிரட்டல் அவ்வளவுதான்.
 



சரி, உங்க கருத்து ??