<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தாம்ப்ராஸ்


சமீப காலத்தில் நடைபெற்ற நகைச்சுவையில் ஒன்று பிராமண சங்க மாநாட்டு கோஷங்கள். இன்னொரு நகைச்சுவை இந்த மாநாடு சம்பந்தமாக - ஒரு சில யோசிக்க வைக்கும் கருத்துக்கள் தவிர்த்த - வலைப்பதிவு சமூகம் எழுப்பும் கோஷங்கள்.

*

பிராமணர் மாநாட்டில் கலந்து கொண்டதால் திராவிடர் கழக பீரங்கியான உண்மை நாளேடுக்கு சாலமன் பாப்பையா பேச்சு வியாபாரியாகிவிட்டார். இவ்விழாவில் கலந்து கொண்ட மீனவ பிரதிநிதியும் இவர்களின் விமர்சனத்துக்கு தப்பவில்லை. ஆக இதை ஒரு செய்தியாக இல்லாமல் தனது விமர்சனத்தோடும் சேர்த்து வழங்கியிருக்கும் உண்மையில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பது தெரியவில்லை. எப்படியும் உண்மைக்கு பிராமண சங்கத்திடமிருந்து விளக்க கடிதங்களும் வரப்போவதில்லை. ஆக இப்போதைக்கு உண்மை சொல்வதே மெய்...

*

தான் எல்லாரையும் விட நல்லா உரை எழுதுவேன் என்று சுஜாதா சொன்னார் என்று அர்த்தம் தொனிக்க சிலர் சுஜாதா பேச்சுக்கு உரை எழுதுகிறார்கள். சுஜாதா சொன்னது, "நமக்கு தமிழ் தெரியாது என்றார்களே, அவர்களையெல்லாம் விட நான் சிறப்பாக உரை எழுதுகிறேன்" என்று... இது சுஜாதா சிலருக்கு விட்ட "வாய்ஸ்" என்பதாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர உவேசாவுடன் எல்லாம் ஒப்பு நோக்க கூடாது.

சினிமா பிரபலங்களையெல்லாம் எதுக்கு முக்கியத்துவம் கொடுத்து தூக்கி விடணும், அவனுங்களுக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு என்று முழங்கியவர்கள் எல்லாம் பாலசந்தர், டெல்லி கணேஷ், பிரமிட் நடராஜன் குறித்த பிம்பங்கள் உடைந்ததற்கு ஆச்சரியப்படுகிறார்கள். எனக்கு கமல் கலந்து கொண்டிருந்தால் வேண்டுமனால் ஒரு வேளை பிம்பம் உடைந்திருக்கலாம். தமிழ் சினிமாவோடு அவ்வளவாக பரிச்சயமில்லாதவர்களுக்கு பாலசந்தர் பிராமணர் என்று அறிந்ததை விட இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

விவேக்குக்கு கிடைத்த தர்ம அடியோடு பாலசந்தருக்கு கிடைத்த தர்ம அடியை ஒப்பீடு செய்தும் வருத்தப்படுகின்றனர் சிலர். விவேக்கோடு அந்த விழாவில் கலந்து கொண்ட செந்திலுக்கோ, தேவர் இன குட்டி தலைவர் கார்த்திக்கிற்கோ கிடைக்காத எதிர்ப்பு ஏன் விவேக்குக்கு மட்டும் என்று யோசித்தால் அதற்கு விவேக்கின் சாதி காரணமல்ல என்பது புரிய வரும். விஜய் தன் சொத்தை காப்பாற்ற ஜெயலலிதாவை சந்திப்பதற்கும் விஜயகாந்த் கல்யாண மண்டபத்தை காப்பாற்ற கருணாநிதியை சந்திப்பதற்கு உள்ள வித்தியாசம்தான். அந்த படத்திற்கு வசனம் நான் எழுதியதில்லை என்று சொல்ல முடியாத அளவில் காமெடி ட்ராக்கை தானே எழுதும் விவேக், படத்துக்கு படம், அடப்பாவிங்களா... இந்த சாதி வெறிய உடவே மாட்டீங்களாடா... பாரதிய பாருங்கடா... அப்துல் கலாம பாருங்கடா என்றெல்லாம் முழங்கிவிட்டு சின்னதாய் ஒரு ப்ரச்னை என்றவுடன் தேவர் இனத்தின் பலம் தெரியுமாடா உங்களுக்கு எனும்போது வரும் விமர்சனம் சாதீய நோக்கில் எழுப்பப்படுவதல்ல...

அமெரிக்காவின் KKK மாதிரி தமிழ்நாட்டில் தம்பிறாஸ் என்கிறார் ஒருவர். தம்பிறாஸ் மட்டும்தான் KKKவோடு ஒப்பு நோக்க உபயோகப்படுமா அல்லது எல்லா சாதி சங்கங்களுமா என்பதை சற்று விளக்கினால் நல்லாயிருக்கும். ஒட்டு மொத்த பிராமணர்களையும் லாரியில் ஏற்றினால் லாரிக்கு 4 பேர் குறைவார்கள் என்கிறார் ஒருவர். இவ்வளவு குறைந்த கூட்டத்தை பார்த்து ஏன் இவ்வளவு எதிர்ப்பு, பயம் என்றெல்லாம் தெரியாததால் இதை நகைச்சுவை துணுக்காக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 30 வருடமாக அடக்கி வைக்கப்பட்டவர்கள் இப்பொழுது சீறியிருக்கிறார்கள் என்பது நகைச்சுவை அல்ல. யார் அடக்கி வைத்திருந்தது... அரசாங்கம் தரும் இட ஒதுக்கீட்டு முறையை அடக்கி வைத்திருப்பது என்பதாக கொண்டால், இட ஒதுக்கீட்டில் பேலன்ஸ் வரும் வரை இது போன்ற மேலும் சில கூட்டங்கள் நடக்கும் என்பதை பார்க்க தயாராக வேண்டியதுதான்.

அஞ்சரை பெட்டி லாஜிக்கில் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, எல்லா இடத்திலும் ஏதாவது வேறொன்றை தூவி சமையல் செய்யும் முற்போக்கு சிந்தனாவாதி சங்கத்தை சேர்ந்த நண்பர்களால் சந்தடி சாக்கில் குஷ்பு விவகாரமும் இதிலே இழுக்கப்படுகிறது. அறிவுஜீவிகளான இவர்கள்தான் குஷ்பு விவகாரத்தை ஆதரித்தவர்கள் என்ற பல்லவி காலம் கடந்த மந்திரமாகிவிடும் போலிருக்கிறது. மீண்டும் இதை பற்றி பேசினால் இந்தியா டுடே, கற்பு என்று ஆரம்பத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதால் விட்டு விடுதலையாவோம்.

*

இட ஒதுக்கீடு பற்றி மாநாட்டில் பேசியதை பற்றி அலட்டிக்கொள்ள தேவையில்லை. எந்த ஒரு அரசியல் கட்சியும் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சொல்லி தன் கழுத்தை தானே அறுத்துக்கொள்ளாது. வி.பி.சிங்கின் மண்டல் பரிந்துரைகளின் போது வட இந்தியாவில் தீக்குளிப்பு எல்லாம் நிகழ்ந்த போது தமிழகத்தில் நடந்த சம்பவங்களை அசை போட்டால், அரிவாளோடு சங்க கூட்டத்தில் வேண்டுமானால் வலம் வரலாமே தவிர தலைவன் சொல்லிவிட்டானே என்று வெளியில் அரிவாளோடு உலா வருவது எல்லாம் நடைமுறையில் நிகழ வாய்ப்பில்லை.

சரஸ்வதி ராமநாதனின் கலப்பு மணம் பற்றிய பிற்போக்கு சிந்தனை தவிர்த்து பார்த்தால் இதில் பேசிய எல்லாரும் கூட்டத்தை பார்த்தவுடன் வரும் உற்சாகத்தில், மேடையிலும் ஒத்த கூட்டம் உடன் இருக்கும் mob mentalityல் பேசியதை தவிர புதிதாக ஒன்றும் இல்லை... ஆனால் மற்ற சாதி கூட்டத்திற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம், இதில் பேசியவர்கள் சாதாரண குட்டி செயலாளர்கள் அல்ல. மாறுபட்ட சிந்தனை வட்டத்தில் இயங்கும், கருத்துக்களை பரவலாக சமூகத்துக்கு சொல்லும் வாய்ப்பு உள்ள அறிவு ஜீவி கூட்டத்தை சேர்ந்த பலர் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு பேசியிருக்க வேண்டும். முதலில் இந்த கூட்டத்தில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுமா என்பதையே யோசித்திருக்க வேண்டும்.

கல்யாணத்துக்கு வரன்கள் பரிமாறிக்கொள்வது, சங்க கட்டிடத்திலோ கல்யாண மண்டபத்திலோ கூடி டீ வடை சாப்பிட்டு சாதியில் இருக்கும் பணக்கார ஆட்களில் சிலரை மைக் கொடுத்து பேசச்செய்து நன்றாக படித்த அந்த சாதி மாணவர்களுக்கு அங்கே ஸ்காலர்ஷிப்போ நோட்டு புத்தகமோ கொடுப்பது என்பதை மீறி கூட்டம் போடுவது, முழக்கம் இடுவது, எதிர்கால திட்டங்கள் பலனளிக்க தன் சாதி ஆள் ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியத்தை கூட்டத்துக்கு தெரியப்படுத்துவது, முக்கியமாக தன் பலத்தை எதிராளிக்கு உணர்த்த தீர்மானம் போடுவது என்று வரும்போது எல்லா சாதி சங்கங்களுமே ஒரே அஜெண்டாவில்தான் வருகின்றன. எல்லா சாதி சங்கங்களையுமே விஷப்பாம்புகள் என்று கருதும் எனக்கு, கட்டுவிரியனுக்கும் நல்ல பாம்புக்கும் வித்தியாசம் இல்லையா என்ற ஆராய்ச்சி எல்லாம் அவசியமற்றதாகிறது.


தொடர்புடைய சுட்டிகள் :
பிராமண சாதிச் சங்க மாநாடு
நாட்டு நடப்பு - பிராமணர் சங்கக் கூட்டம்


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நான் நல்லவனா? கெட்டவனா? தெரியலையேப்பா ;)
 



---தான் எல்லாரையும் விட நல்லா உரை எழுதுவேன் ---
சுஜாதா 'கஜினி' படத்தை எத்தனை தபா பார்த்தாரோ (தன்னம்பிக்கை/தலைக்கனம் வசனம்)

---தேவர் இன குட்டி தலைவர் கார்த்திக்கிற்கோ கிடைக்காத எதிர்ப்பு ---
புரியலியே! அவரும் 'இது நம்ம பூமி' என்று பங்காளி சண்டையிலிருந்து பகுத்தறிவு வரை உதிர்த்திருக்காரே.

---ஒத்த கூட்டம் உடன் இருக்கும் mob mentalityல் பேசியதை ---

அருமையான அவதானிப்பு. ஆனால், கூட்டாளி இருக்கிறார்களே என்று கும்பல்/குழு மனப்பான்மை இல்லாமல் யார் பேசுகிறார்கள் ;-)

ஊர் ஏதாவது சொல்லுமே என்று அக்கம்பக்கத்துக்கு பயந்து நடப்பது, mob mentality-க்கு எதிர்ப்பதம்?

புகழ் பெற்றவர்கள் எது செய்தாலும் ஊடகம் ஆசையாக கவனிக்கிறது. செந்தில் என்பவர் நகைச்சுவை நடிகராக இல்லாமல், வருடா வருடம் தேவர் ஜெயந்திக்கு சென்றால் பிரச்சினையில்லை. பிராட் பிட் சொவ்வறை வல்லுநராக அழகிய மனைவியை விவாகரத்து செய்தால் செய்தியில்லை.

எஸ். ராமகிருஷ்ணன் வசனம் எழுதினால் புனித பிம்பம் கலைவதால் கோபம் எழலாம். துவேஷம் பார்த்தவர்கள், மீண்டும் பார்ப்பேன் என்று சொன்னால் வருத்தமாக இருக்கும்? (உங்களின் பதிவு மாதிரி கோர்வையாக வரவில்லை; புல்லட் பாயிண்ட் மாதிரி நோட் செய்து வைத்திருக்கேன்... :-)
 



சாதி என்பது பிறப்பால் கிடைத்த அடையாளம். அந்த அடையாளத்தை பெருமையாகவோ சிறுமையாகவோ இல்லாமல் வெறுமே சுமக்கலாம். சுஜாதாவும் பாலசந்தரும் அனைவரையும் போலவே மொழி, பாஷை, உணவு, பழக்கவழக்கங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்று சாதி அடையாளங்களை அவர்களின் குடும்பத்துக்குள் வைத்துக்கொள்வதை யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமையோ நியாயமோ இல்லை. ஆனால் வீட்டுக்கு வெளியே பிறப்பால் கிடைத்த அடையாளத்தை விடவும் அவர்களின் புத்தியால், சிந்தனையால், திறமையால் பெற்ற கலைஞர்கள் என்ற மிகப்பெரிய அடையாளமே போதுமானது. இவர்கள் இந்த அமைப்பின் அழைப்பிதழை நிராகரித்திருந்தாலே போதுமானது. ஆழ்ந்த சிந்தனை, செழுமையான கல்வி பின்புலம், பரந்த வெளிவட்டம் போன்றவை கொண்ட இவர்களே ஜாதி சங்கத்துடன் தம்மை அடையாளப்படுத்தி தங்களை குறுக்கிக்கொண்டால் சாதிச்சூழலிலேயே வாழும்/வாழ வைக்கப்படும் நிலைமை கொண்ட மனிதர்கள் அத்தளையை அறுப்பதற்கான சந்தர்ப்பங்களை பற்றிய சந்தேகம் அதிகமாகிறது. வைசியர், சத்திரியர் என்று யாராக இருந்தாலும் அதை மட்டுமே ஒரு பெருமையாக பேசினால் என்னளவில் பெரிய மதிப்பெல்லாம் தரமாட்டேன். சாதியை முன்னிறுத்தி வைக்கும் ஒவ்வொரு அடியும் கற்காலத்தை நோக்கிய பயணத்திற்கான அடியாகவே நான் பார்க்கிறேன்.

*

சதீஷ், "நான் யார்?" பெரிய பெரிய மகான்களுக்கே விடை கண்டுபிடிக்க முடியாத எவ்ளோ பெரிய கேள்விய இவ்ளோ சாதாரணமா கேட்டுட்டீங்க?
 



உங்கள் பதிவை விட மேலே எழுதியுள்ள உங்களது பின்னூட்டம் நன்றாக இருக்கிறது.
 



இப்பொழுதெல்லாம் நான் உயர்ந்த இடத்தில் வைத்திருந்த(க்கும்) எழுத்தாளர்களின் எழுத்துக்கும் செயலுக்கும் நிறைய வித்தியாசங்கள்.
 



//உண்மையில் எவ்வளவு உண்மை இருக்கும் என்பது தெரியவில்லை.//

தினமலரும் இந்துவும் திராவிடரையும் தமிழரையும் எப்படியெல்லாம் டெக்னிக்கா மட்டம் தட்டறாங்களோ அதைவிட வெளிப்படையாகவே உண்மை எழுதுகிறது என்று எனக்கு தோன்றுகிறது.

//எனக்கு கமல் கலந்து கொண்டிருந்தால் வேண்டுமனால் ஒரு வேளை பிம்பம் உடைந்திருக்கலாம்//

கமல் இப்படி லூசுத்தனமாக உளற மாட்டார் என்று நினைக்கிறேன்.
விவேக் பற்றி சொல்லி இருப்பது சரி என்று தோன்றுகிறது.

//இவ்வளவு குறைந்த கூட்டத்தை பார்த்து ஏன் இவ்வளவு எதிர்ப்பு, பயம் என்றெல்லாம் தெரியாததால் இதை நகைச்சுவை துணுக்காக எடுத்துக்கொள்ளலாம்//

பயம்தான் அய்யா..ஏனென்றால் எல்லாம் சதிகாரர்கள்...மத்தவன அடிச்சிக்க வைச்சிட்டு சிரிச்சுட்டு "வன்முறை கூடாதுடா அம்பி என்பார்கள்" என்பதாக அவர் நினைத்திருக்கலாம். வரலாறு அதைத்தான் சொல்கிறது.


//அறிவு ஜீவி கூட்டத்தை சேர்ந்த பலர் இன்னும் கொஞ்சம் பொறுப்புணர்ச்சியோடு பேசியிருக்க வேண்டும்.
முதலில் இந்த கூட்டத்தில் தம்மை அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டுமா என்பதையே யோசித்திருக்க வேண்டும்.//

உள்ளிருப்பது வெளியே வந்துதான் தீர வேண்டும்.அறிவாளி நல்லவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மை.
 



// If "you" (not you per se) were born for a King/Emperor/President will you feel proud of your birth. Please think over it and answer!.. //

அது "சிந்திக்க" அந்த இளவரசருக்கு எவ்வளவு வாய்ப்பு கிடைக்குதுங்கறத பொறுத்துன்னு நினைக்கிறேன் சதீஷ். என்னால ரொம்பவும் hypotheticalஆ யோசிக்க முடியல. ஒரு வேளை நம்ம சித்தார்த் (எ) புத்தர கேட்டா தெரியும்னு நினைக்கிறேன்.
 



//சுஜாதாவும் பாலசந்தரும் அனைவரையும் போலவே மொழி, பாஷை, உணவு, பழக்கவழக்கங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்று சாதி அடையாளங்களை அவர்களின் குடும்பத்துக்குள் வைத்துக்கொள்வதை யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமையோ நியாயமோ இல்லை. ஆனால் வீட்டுக்கு வெளியே பிறப்பால் கிடைத்த அடையாளத்தை விடவும் அவர்களின் புத்தியால், சிந்தனையால், திறமையால் பெற்ற கலைஞர்கள் என்ற மிகப்பெரிய அடையாளமே போதுமானது. இவர்கள் இந்த அமைப்பின் அழைப்பிதழை நிராகரித்திருந்தாலே போதுமானது. ஆழ்ந்த சிந்தனை, செழுமையான கல்வி பின்புலம், பரந்த வெளிவட்டம் போன்றவை கொண்ட இவர்களே ஜாதி சங்கத்துடன் தம்மை அடையாளப்படுத்தி தங்களை குறுக்கிக்கொண்டால் சாதிச்சூழலிலேயே வாழும்/வாழ வைக்கப்படும் நிலைமை கொண்ட மனிதர்கள் அத்தளையை அறுப்பதற்கான சந்தர்ப்பங்களை பற்றிய சந்தேகம் அதிகமாகிறது.//

Spot on, mugamoodi
 



முகமூடி,
உங்களின் பதிவில் கூறப்பட்ட கருத்துக்கள் மீது எனக்கு பல குழப்பங்களும்,விமர்சனங்களும் தோன்றியது. ஆனால் பின்னூட்டமாக நீங்கள் கூறிய கருத்துக்களில் எனக்கு முழு உடன்பாடு உண்டு ஒன்றைத் தவிர...

//சாதி என்பது பிறப்பால் கிடைத்த அடையாளம். அந்த அடையாளத்தை பெருமையாகவோ சிறுமையாகவோ இல்லாமல் வெறுமே சுமக்கலாம். //

சுமப்பதும் தேவையில்லாதது.
ஒருவர் நினைத்தால் அவரது சாதி அடையாளங்களை முற்றிலும் தவிர்த்து (சுமப்பது உட்பட) வாழ முடியும்.
உதாரணம்: சாதி தவறென்று உணரும் ஒரு பிராமணன் அவனது குழந்தைக்குப் பூணூல் என்னும் சடங்கையும் சாதி வழி வந்த சமிபிரதாயங்களையும் கற்பிக்காமல் இருக்க முடியும். இங்கு பிராமணர் என்பது ஒரு உதாரணமே.

இறுதியாக நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை. சிரமங்கள் இருக்கத்தான் செய்யும்.
சுமப்பது(ம்) சிரமம் என்று நினைப்பவனுக்கு , அந்த சுமையை இறக்கி வைக்க முயற்சி செய்வதால் வரும் சிரமம் ஒரு சிரமமே அல்ல.

சரி சரி வாங்க பொங்கல் விழா கொண்டாடுவோம். :-)))
 



'கைபர் போலன்' கணவாய்ப் பகுதிக்கு தங்களைக் கொண்டு செல்ல ஒரு 'புதிய விமான ஓடுதளம்' அமைக்க வேண்டும் என்று பார்ப்பனர்களே முழக்கமிட்டபின்னர் நமது 'முகமூடி' என்ன செய்வார் பாவம்!

உங்கள் பதிவுக்குப் பின்னால் தளும்பி நிற்கும் அடக்கவியலாக் குற்றவுணர்ச்சிக்கும், இருதலைக் கொள்ளிபோல் தாங்கள் தவிக்கும் தவிப்புக்கும் - என் ஆழந்த வருத்தங்கள்!

'கமல்' இந்தச் சங்க மாநாட்டுக்குப் போகவில்லையே எனும் உங்கள் வருத்தத்தையும் சந்தடி சாக்கில் - சொல்லியதற்கு நன்றி!

'சமஸ்கிருதத்தையும், ஹிந்தியையும் தமிழ்நாட்டில் கட்டாயப்பாடமாக்க வேணும்' என்கிற தீர்மானம் பற்றிய உங்கள் மேலான அபிப்ராயத்தையும் சொல்லி விட்டீர்களென்றால் நன்றாக இருக்கும்.

"கடப்பாரைய்யை முழுங்கி ஏப்பம் விடுவது எப்படி" என்பதை தயைகூர்ந்து - ஒரு பதிவாகப் போடுமாறு 'விஞ்ஞாபித்துக்' கொள்கிறேன்!
 



நாட்டாமை, சதீஷ், இ.கொ, பாஸ்பாலா, தருமி, விஜயன், முத்து, ஆழ்கருத்து சொன்ன செந்தில்முருகன், நிலா, மனக்குமுறல், கல்வெட்டு, உளவியல் ஆராய்ச்சியாளர் நியோ அனைவருக்கும் நன்றியும் பண்டிகை கால வாழ்த்துக்களும்.

*

பாலா, குழு மனப்பான்மை பற்றி ஒரு நாவலே எழுதலாம், நேரம் கிடைக்கும் போது (என்று சொல்லி தற்காலிகமாக எஸ்கேப்)

*

பிறப்பு வழி அடையாளத்தை விருப்பம் கொண்டு அறுப்பவர்களை பற்றி ஆட்சேபம் இல்லை, ஆனால் அவசியமில்லை/வலியுறுத்த தேவையில்லை என்பதே என் கருத்து. பொங்கல் பண்டிகையே கூட பிறப்பு வழி வந்த அடையாளம்தானே...
 



>> பொங்கல் பண்டிகையே கூட பிறப்பு வழி வந்த அடையாளம்தானே... >>

ஹஹ்ஹா!!

தமிழ் ஒழிக! தமிழன் ஒழிக! தமிழுணர்வு ஒழிக!-னு நீங்க போடற கோஷம் நல்லாக் கேக்குதுங்க! :)
 



//பிறப்பு வழி அடையாளத்தை விருப்பம் கொண்டு அறுப்பவர்களை பற்றி ஆட்சேபம் இல்லை, ஆனால் அவசியமில்லை/வலியுறுத்த தேவையில்லை என்பதே என் கருத்து.//

ஓரளவு சரிதான். ஆனால் இதே வாதத்தை அந்தப்பக்கமாக ஏதாவது skinheads வந்தால் அவர்களிடமும் எடுத்துச் சொல்லுங்கள் ;-)
 



//சாதி என்பது பிறப்பால் கிடைத்த அடையாளம். அந்த அடையாளத்தை பெருமையாகவோ சிறுமையாகவோ இல்லாமல் வெறுமே சுமக்கலாம். //

//பிறப்பு வழி அடையாளத்தை விருப்பம் கொண்டு அறுப்பவர்களை பற்றி ஆட்சேபம் இல்லை, ஆனால் அவசியமில்லை/வலியுறுத்த தேவையில்லை என்பதே என் கருத்து.//

முகமூடி,
மறுபடியும் கொயயப்புறீங்களே :-))

நான் வலியுருத்தவும் இல்லை. அவசியம் என்றும் சொல்லவில்லை. அப்படி இருந்தால் நல்லது. அப்படி இருக்கவும் முடியும் என்று சொல்கிறேன்.

நீங்கள் சொல்லும் சாதி அடையாளச் சுமை(பிறப்பு வழி அடையாளம்ம்) நல்ல சுமை என்று நீங்கள் நினைத்தால் சுமந்து கொள்ளுங்கள்.அது தவறு என்று மனம் உணரும் பட்சத்தில் அதை தூர எறிவது தான் நல்லது. அது பாவச்சுமை.

உண்மையிலேயே இந்த சாதி இந்தியாவில் எப்படி மனுவால் திணிக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியவில்லையா? தெரிந்தும் சும்மா இருந்துவிட்டுப் போகட்டும் என்பது போல் பேசுகிறீர்கள்.

//பொங்கல் பண்டிகையே கூட பிறப்பு வழி வந்த அடையாளம்தானே...//

இல்லை.
இந்த சாதியைப் போய் பொங்கலுடன் ஒப்பிடுகிறீர்களே? "மனு" கூறும் பிறப்பால் வரும் சாதி அடையாளத்துக்கும் தமிழனாய் தன்னை உணர்வால் உணர்வதுக்கும் வித்தியாசம் உள்ளது.

வேண்டுமானால் பொங்கல் பற்றிய எனது பதிவுகளைப் பார்க்கவும்.

அமெரிக்காவில் நான் ஹலோவின் கொண்டாடுகிறேன்.ஹலோவின் எனக்கு பிறப்பால் வந்த அடையாளம் கிடையாது. தான் வாழும் சமூகத்துடன் இணைத்துக் கொள்வது. மகிழ்ச்சியில் பங்கு கொள்வது.

தமிழ் அடையாளம் என்பது பிறப்பால் வருவது இல்லை. உணர்வால் வருவது.
தமிழ் நாட்டில் பிறந்த அனைவரும் தன்னை தமிழராக உணர்வதில்லை (அடையாளப் படுத்திக் கொள்வது). நமது வலைப்பதிவுகளிலேயே பலர் உள்ளனர். பலர் இன்னும் தமிழ் சமூகத்துடன் இணைத்துக் கொள்ள விரும்பாமல் விலகி இருக்கவே விரும்புகிறார்கள். அது தெரியும்தானே?

சரி விடுங்கள் நம்பிக்கையாளர்களிடம் விவாதம் பலனில்லை. அவரவர் நம்பிக்கையை அவர்களே கேள்விக்குள் கொண்டுவராதவரை.... பிறர் ஒன்றும் செய்ய முடியாது.

பொங்கல் பண்டிகையை பிறப்பால் வந்த ஒன்றாக அடையாளப் படுத்த வேண்டாம் என்று கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். அனைத்து மதத்தினரும் இதில் பங்கு கொள்ள வேண்டும் என்று நான் படாதாபாடு ( இப்படி நானே என்னைய சொல்லிக்கலேனா பின்ன யாரு சொல்றது) படுகிறேன் கெடுத்து விடாதீர்கள் அய்யா!

உங்களுக்கும் ,நண்பர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கல் போல் என்றும் பொங்கட்டும்.

பொங்கல் வாழ்த்துகள்.

அன்புடன்,
கல்வெட்டு (எ) பலூன் மாமா
 



முகமூடி,
நான் சொன்னதை நீங்கள் மேற்கோள் காட்டியிப்பதால் ஒர் சின்ன விளக்கம்.
விவேக் அளவுக்கு இல்லேன்னாலும் பாலசந்தர் சமூகமுறையில் கொஞ்சம் வேறு நிலைப்பாடோடு முன்னர் இருந்ததாக தான் நினைத்தேன். ஒருவேளை அறிவுசீவி கும்பல்கள் தலையில் வைத்து ஆடியதால் எனக்கு இவ்வித புரிதல் வந்திருக்கலாம். இன்று அவர் இவ்விதம் பேசியதற்கு அதே இடங்களில் எதிர்பை எதிபார்த்து ஏமாந்ததால் அந்த பின்னூட்டம். மற்றபடி விவேக்கிற்கு கிடைத்த எதிர்பை கண்டிப்பாக குறைசொல்லவில்லை என்பதைபுரிந்து கொண்டிருப்பீர்கள். அதே அளவு பாலசந்தருக்கும் அதைவிட அதிகமாக சுஜாதாவிற்கும் கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அவ்வளவுதான்.
சரிங்க டோண்டு பதில்களை படிச்சதும் BP ஏகத்துக்கு மேல போச்சு...(இந்த வயசுக்கு இது ரொம்ம அதிகம்னு ஏற்கனவே டாக்டர் சொல்லிட்டார்). சிலர் எழுத்துக்களை பார்த்து ஆத்தா உள்ள வந்து இறங்கியிருக்கும் போது எதுவும் எழுத கூடதுன்னு எனக்கு நானே போட்டுகிட்ட கட்டுப்பாடு. எனவே இப்போ இதபத்தி என்ன எழுதினாலும் வார்த்தைகள் எல்லை மீறிவிடும் என்பதால் இதுகுறித்தான முழுகருத்தையும் பிறகு முடிந்தால் எழுதுகிறேன்.
 



//சாதி என்பது பிறப்பால் கிடைத்த அடையாளம். அந்த அடையாளத்தை பெருமையாகவோ சிறுமையாகவோ இல்லாமல் வெறுமே சுமக்கலாம். சுஜாதாவும் பாலசந்தரும் அனைவரையும் போலவே மொழி, பாஷை, உணவு, பழக்கவழக்கங்கள், பண்டிகை கொண்டாட்டங்கள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்று சாதி அடையாளங்களை அவர்களின் குடும்பத்துக்குள் வைத்துக்கொள்வதை யாருக்கும் கேள்வி கேட்கும் உரிமையோ நியாயமோ இல்லை. ஆனால் வீட்டுக்கு வெளியே பிறப்பால் கிடைத்த அடையாளத்தை விடவும் அவர்களின் புத்தியால், சிந்தனையால், திறமையால் பெற்ற கலைஞர்கள் என்ற மிகப்பெரிய அடையாளமே போதுமானது. இவர்கள் இந்த அமைப்பின் அழைப்பிதழை நிராகரித்திருந்தாலே போதுமானது. ஆழ்ந்த சிந்தனை, செழுமையான கல்வி பின்புலம், பரந்த வெளிவட்டம் போன்றவை கொண்ட இவர்களே ஜாதி சங்கத்துடன் தம்மை அடையாளப்படுத்தி தங்களை குறுக்கிக்கொண்டால் சாதிச்சூழலிலேயே வாழும்/வாழ வைக்கப்படும் நிலைமை கொண்ட மனிதர்கள் அத்தளையை அறுப்பதற்கான சந்தர்ப்பங்களை பற்றிய சந்தேகம் அதிகமாகிறது. வைசியர், சத்திரியர் என்று யாராக இருந்தாலும் அதை மட்டுமே ஒரு பெருமையாக பேசினால் என்னளவில் பெரிய மதிப்பெல்லாம் தரமாட்டேன். சாதியை முன்னிறுத்தி வைக்கும் ஒவ்வொரு அடியும் கற்காலத்தை நோக்கிய பயணத்திற்கான அடியாகவே நான் பார்க்கிறேன்.//

நண்பர்களே இந்த முகமுடிக்கு பின்னால் இருப்பது

//>> பொங்கல் பண்டிகையே கூட பிறப்பு வழி வந்த அடையாளம்தானே... >>//

இது புரியாம முகமூடியை மகாத்மா ஆக்க பாக்குறீங்களே...

எத்தனை பிறப்பு(ஜென்மம்) எடுத்தாலும் பிறப்பால் கிடைத்த அடையாளத்தை அவர் இழக்க தயாராக இல்லை.

வாழ்க சிந்தனைச் சிங்க முகமுடி

பொங்கல் வாழ்த்துகள் - உங்களுக்கு உரியது இல்லை என்றாலும்
 



பொங்கல் பண்டிகை பிறப்பு வழி வந்தது என நான் சொன்னது நான் தென்னிந்தியாவில் (சங்கராந்தி என்ற பெயரில் ஆனால் பொங்கல் பண்டிகையின் அனைத்து conceptகளுடன் இது தமிழகத்தை தவிர்த்த வேறு பிராந்தியங்களிலும் கொண்டாப்படுகிறது) பிறந்ததினால் அதை கொண்டாடுகிறேன் என்ற அர்த்தத்தில்... வேறு ஏதோ தேசத்தில் பிறந்திருந்தால் இதை இதே முறையில் நான் கொண்டாடப்போவதில்லை. ஹாலோயீன் "கொண்டாடும்" கல்வெட்டு பக்ரீத்தோ, ஈஸ்டரோ கொண்டாடுகிறாரா என தெரியவில்லை.. கிறிஸ்துமஸ் அன்று நண்பரின் வீட்டுக்கு சென்று சாப்பிடுவதோடு என் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுகின்றன. சாதி ரீதியான அடையாளம் வலுக்கட்டாயமாக பின்பற்றினால் ஒழிய காலப்போக்கில் நீர்த்துப்போகிறது என்பதே என்னளவில் நான் கண்ட நிதர்சனம். என் பண்டிகைக்கால நடவடிக்கைகள் ஒரு சில கேள்விகளால் மாறினாலும் பல என் சூழலால் மாறியவை. இன்று நான் பிறந்த சாதிக்கென ஏதாவது தனிப்பட்ட அடையாளம் உள்ளதா என எனக்கு தெரியாது. ஆக வீட்டுக்குள் பேசும் பாஷை, கறி நாள் அன்று மாட்டுக்கு ஓய்வு கொடுத்து சன் டிவி பார்ப்பதா அல்லது கறி சாப்பிட்டு ஜல்லிக்கட்டு கொண்டாடுவதா, ஆவணி அவிட்டத்தில் ப்ராமணர் வீட்டில் பூணுல் அல்லது புரட்டாசியில் ஷத்திரியர் வீட்டில் பூணுல் போன்ற அடையாளங்கள் skin heads categoryல் வருமா, வீட்டுக்குள் இவற்றை சுமப்பது racial என்ற அடிப்படையில் வருமா என்பதெல்லாம் எனக்கு தெரியவில்லை. ஆக ஏதோ ஒரு அடையாளத்தை வீட்டுக்குள் வைத்துக்கொள்வதை கேள்வி கேட்பது அவசியமில்லாதது. முதலில் வெளியில் நடப்பதை தடுத்து நிறுத்த வழி வகை காண்பது prioritize செய்யப்பட வேண்டும் என்பதே நான் சொல்ல வந்தது. அந்த நடவடிக்கைகளில் கட்டுவிரியனுக்கும் நல்ல பாம்புக்கும் உள்ள வித்தியாசத்தையெல்லாம் ஆராய்ச்சி செய்வதை விடுத்து எல்லா சாதி சங்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வோம்.

"வெறுமே சுமக்கலாம்" என்று நான் சொன்னது சுமந்தே ஆக வேண்டும் என்ற அர்த்ததில் இல்லை என்பதை இந்த முறையாவது தெளிவாக சொல்கிறேன் என நினைக்கிறேன்.
 



இயற்கைக்கும், மனிதகுல நாகரீக வளர்ச்சியின் முக்கிய நிகழ்வான வேளாண்மைக்கும் - தமிழர்கள் மகிழ்வோடு எடுக்கும் விழா 'பொங்கல்' திருநாள்.

இதற்கும் 'நான் பிரம்மன் தலையிலிருந்து பிறந்தவன்; பிராமணன் - சூத்திரர்களையும், பஞ்சமர்களையும் ஆளப் பிறந்தவன்' - என்கிற மமதை தொனிக்க - அதை மீள வலியுறுத்தி நிலை நிறுத்துகிற "ஆவணி ஆவிட்ட" பூணூல் விழாவுக்கும் என்ன தொடர்பு?

கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவர்களிடம் இது போன்ற அடிப்படை நேர்மையை எதிர்பார்க்கலாம்.

'கடப்பாரை முழுங்கி கஷாயம் வைத்துக் குடிக்கிற'வர்களிடம் எப்படி எதிர்பார்ப்பது?

விவேக்கை 'அடப்பாவி? அப்துல் கலாமுக்கு இது தெரியுமாடா?' என்று கலாய்த்தபோது இருந்து வீரம் - இன்று சுஜாதா, பாலச்சந்தர் போன்ற பார்ப்பனர்களை விமர்சனம் செய்யுமிடத்தில் காண முடியாதது ஏனோ?!

எத்தனை எள்ளல், துள்ளன், கேலி, கிண்டல், நக்கல், நையாண்டிகள்?

மயிரு குடுத்தால் தமிழ் வளருமா? என்றெல்லாம் 'சனநாயக' கமெண்ட்டுகள்!

இப்போ 'இவாள்'னதும் பொத்திக்கிட்டாச்சோல்லியோ!

சமத்து! :)
 



குழந்தை பிறப்பு, மொட்டை அடித்து காது குத்து, கல்யாணம், கருமாதி போன்ற நிகழ்வுகளில் ஒவ்வொரு சாதிக்கு ஒவ்வொரு நடைமுறை. எனக்கு கிடைக்கும் பட்டத்தை பற்றியெல்லாம் கவலை கொள்வதை விடுத்து, எத்தனை மகாத்மாக்கள் தங்கள் பிறப்பால், சாதியால் கிடைத்த சடங்கு நிகழ்வுகளில் தங்கள் அடையாளத்தை துறந்திருக்கிறார்கள், அது எவ்விதமானது என்று தெளிவாக உணர்ச்சிவசப்படாமல் சொன்னால் மற்ற பத்தாம்பசலிகளுக்கு வசதியாக இருக்கும்
 



வழவழா_கொழகொழா எதற்கு இவ்வளவு பாடு படறீங்க... கல்வெட்டு பொங்கலை பற்றி குறிப்பிட்டிருந்ததால், அவருக்கு சொன்ன பதிலில் அதை ஒரு referenceஆக குறிப்பிட்டிருந்தேன்... உடனே இதுதான் சாக்குன்னு "எனக்கு உள்ளது இல்லையெனினும்" பொங்கல் வாழ்த்துன்றார் ஒருத்தர். முதல்ல எல்லாத்தையும் முழுசா படிங்க, கண்டபடி உணர்ச்சிவசப்பட அவசியம் இருக்காது...
 



கல்வெட்டு பக்ரீத்தோ, ஈஸ்டரோ கொண்டாடுகிறாரா?

கொண்டாடுகிறார்.
இவை மட்டும் அல்ல அவர் கிறிஸ்துமஸும் கொண்டாடுவார்.

ஆம்.

முகமூடி,
சக மனிதர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ள சாதி/மதம் தேவை இல்லை.
நான் குவைத்தில் இருந்த போது பக்ரீத் கொண்டாடினேன். இஸ்லாம் பண்டிகையின் கடுமையான விரதங்கள்/அது சார்ந்த சிக்கல்களால் தொடர முடியவில்லை.

மறுபடியும் சொல்லிக் கொள்வது. எனக்கு மதங்களிலோ சாதிகளிலோ நம்பிக்கை கிடையாது.அவை கூடாது என்பதே விருப்பம். இருந்தாலும் பிறரின் கொண்டாட்டங்களின் (பூசை,புணஸ்கார,விரதங்கள்,நோன்புகள், சாமி கும்பிடுதல் தவிர்த்த) மூலம் மனிதர்களோடு மனிதனாக கலந்து வாழவே விரும்புகிறேன்.

பிறப்பாலோ அல்லது வேறு காரணங்களாலோ வரும் அடையாளத்தின் மூலம் எனக்குப் பிடிக்காத எதையுமே நான் "சும்மா சுமப்பதற்குக்கூட" ஏற்பதில்லை. எனக்குத் தெரிந்தது மனிதம் மட்டுமே.

நான் கொண்டாடுவதற்கு சாட்சியாக எல்லாப் படங்களையும் எனது பதிவில் போட முடியும். ஆனால் அது முகமூடி என்ற தனி ஒருவருக்கு எனது நிலையை விளக்கமட்டுமே பயன்படும். எனவே எனது வலைப்பதிவின் profile படத்தையே நான் எனது இந்த வருடம் கிறிஸ்துமஸ் கொண்ட்டாத்திற்க்கா வைத்து இருந்த "கிறிஸ்துமஸ் மரம்" இருக்கும் படமாக போடுகிறேன்.

மரம் வைத்தால் போதுமா? ஜீஸசைக் கும்பிட்டாயா என்று முகமூடி கேட்கலாம். அய்யா நான் கடவுள் விசயத்தில் தருமி மாதிரி. அதையும் தாண்டி மதம் சாதிகளை எப்போதே கடந்து வந்து விட்டேன். இந்த வருடம் கிறிஸ்துமசின் போது நண்பர்களின் குழந்தைகளுக்கு பலூன் செய்து கொடுத்து சிறப்பாகக் கொண்டாடினோம். நான் செய்யும் ஈஸ்டர் பன்னி ( bunny ஐ தமிழில் எழுதினால் இப்படிதான் வருகிறது என்ன செய்ய ) குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்த வருடம் வேறு வேலை காரணமாக பள்ளிக் குழந்தைகளின் ஈஸ்டர் விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.

முகமூடி மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
 



கல்வெட்டு, ஹாலோயீனுக்கு மாறுவேஷம் போட்டு குழந்தைகளை அழைத்து செல்வதோ, பக்கத்து வீட்டில் மரம் வைத்திருக்கிறார்கள் என்று குழந்ததகள் கேட்டால் நம் வீட்டிலும் மரம் வைப்பதோ, ஈத்தின் போது பிரியாணி வாங்கி சாப்பிடுவதோ "கொண்டாடுவது" என்கிறீர்கள் நீங்கள். அதை முறையாக பின்பற்றுபவர்கள் தவிர்த்த மற்றவர்கள் செய்வது "கொண்டாட்டத்தில் பங்கு கொள்வது" என்கிறேன் நான். இதையெல்லாம் அமெரிக்காவில் நான் உட்பட பலரும் தவறாமல் செய்வதுதான். சாமியோ, சம்பிரதாயமோ உங்கள் நம்பிக்கைக்கு ஏற்ப நீங்கள் நடந்து கொள்ளுங்கள், மற்றவர் செய்வதையும் மதியுங்கள் என்கிறேன் நான்.

* வீட்டுக்குள் மட்டும்
* "வெறுமே சுமக்கலாம்" என்று நான் சொன்னது சுமந்தே ஆக வேண்டும் என்ற அர்த்ததில் இல்லை

என்று மீண்டும் மீண்டும் குறிப்பிட்டாலும் "மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்று ஏன் திருப்பி திருப்பி சொல்கிறீர்கள், அதன் அர்த்தம் என்ன, அதை யாருக்காக சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நன்றி.
 



// உடனே வந்த சாதரண கேள்வி நீங்க தீபாவளிய அப்படி கேப்பீங்களான்னுதான்? // ஆம் தீபாவளியும் நான் இந்தியாவில் பிறந்ததினால் வந்த அடையாளம்தான் என்பதை ஒரு முறைக்கு மூன்று முறை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் ;))
 



>> ஆம் தீபாவளியும் நான் இந்தியாவில் பிறந்ததினால் வந்த அடையாளம்தான் என்பதை ஒரு முறைக்கு மூன்று முறை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் >>

அப்போ 'இந்தியாவில' பிறந்த எல்லோரும் 'தீவாளிய' கொண்டாடியே தீரணும்னு சொல்றீங்களா?!!

அல்லது "கொண்டாட்டத்தில் பங்கேற்றால"் போதுமா?!

இந்த ரெண்டும் செய்யாவிட்டால்?

அவன் இந்தியன் இல்லைன்றீங்களா?

என்னப்பா இது?

பி.கு:

புதுச் சட்டை எடுப்பது, பட்டாசு வெடிப்பது, சுவீட்டும், பின்னால தீவாளி லேகியமும் சாப்பிடுவது -- இதெல்லாம் 'தீபாவளிய கொண்டாடுவது' ஆகாது - என்பது முகமூடியாருக்குப் புரியும்ணு நினைகிறேன்!

Do you get the point now?! ;)
 



//மற்றவர் செய்வதையும் மதியுங்கள் என்கிறேன் நான். //
அய்யோ நான் எங்கே அடுத்தவர் செய்வதை மதிக்க வேண்டாம் என்றேன்.

//மனம் இருந்தால் மார்க்கம் உண்டு" என்று ஏன் திருப்பி திருப்பி சொல்கிறீர்கள், அதன் அர்த்தம் என்ன, அதை யாருக்காக சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நன்றி.//

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு --> சாதியை சும்மா சுமப்பதற்காக சுமப்பவர்களுக்காக சொல்லப்பட்டது. அவ்வளவே.

..

ஹலோவின்,கிறிஸ்துமஸ் போன்றவற்றை நான் எப்படிக் கொண்டாடுகிரேன் என்று விளக்க முடியும். அது வேண்டாம். மேலும் மேலும் விவாதம் வளரும்.

அன்புடன் சக வலைப்பதிவராக ஒரே வேண்டுகோள்:

தயவு செய்து பொங்கலை சாதி மத பிறப்பு அடையாளங்களுடன் சம்பந்தப்படுத்த வேண்டாம்.
உங்கள் வாதத் திறமையால் நீங்கள் இதைச் செய்ய முடியும்.
தமிழனுக்கு என்று ஒரு உருப்படியான கொண்டாட்டமும் இல்லை.
பொங்கல் தமிழனுக்கென்று (சாதி, மத விவகாரங்கள் இல்லாத ) உலக முழுவதும் ஒரு பொதுக் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்.
உங்களின் உதவி தேவை. அவ்வளவே.
 



கல்வெட்டு, அனைவரும் உங்களை போன்று நினைத்தால் நன்றாகத்தான் இருக்கும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பொதுக்கொண்டாட்டமாக பொங்கல் இருப்பதை பற்றி யாருக்கு என்ன மாற்று கருத்து இருக்க முடியும்... நீங்கள் சொல்லவில்லையெனினும் உழவர் திருநாளை தமிழர் திருநாள் என்று அழைக்க விரும்பும் நண்பர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு எனக்கு தெரிந்த - ஆந்திரா, கர்நாடாகாவை தாய் மாநிலமாக கொண்ட - தெலுங்கு, கன்னட நண்பர்களுக்கும் சங்கராந்தியை தமிழர் திருநாள் என்ற அடைமொழியோடு கொண்டாட முடியுமா என்று விண்ணப்பித்து மடல் அனுப்பியிருக்கிறேன்... இது நையாண்டி இல்லை. இது பற்றி விரிவாக பேச இப்போது விருப்பம் இல்லை.

*

சோழநாடன், நீங்கள் எங்கெங்கு எதிர்ப்பை எதிர்பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. உங்கள் ஏமாற்றத்தில் நானும் பங்கு கொள்கிறேன். விவேக்குக்கு மட்டும் ஏன் அதிகளவு எதிர்ப்பு என்பதைத்தான் நான் சொல்ல முயற்சித்தேன், மற்றபடி விவேக்கிற்கு கிடைத்த எதிர்பை நீங்கள் குறைசொல்லவில்லை என்பதை புரிந்தே இருக்கிறேன். உங்களின் முழுகருத்த்தையும் நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள், அறிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்.
 



முகமூடி,
புரிதலுக்கும் பதிலுக்கும் நன்றி. நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் மன்னிக்க.
பொங்கலுக்கு நான் நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றியடையட்டும்.
இங்கு பதில் இட்ட அனைவரும் அதே எண்ணத்தில்தான் இருக்கிறோம். என்ன சின்னச் சின்ன உரசல்கள்.
பங்காளிச்சண்டை கூட இல்லாத தமிழ் சமுதாயம் என்ன சமுதாயம்.

கொண்டாடுவோம் பொங்கலை தமிழர் கொண்டாட்டமாக.
 



தமிழர் திருநாள் என்பதை விட பொங்கல் பண்டிகையும் இந்துக்கள் பண்டிகையாக தான் பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய நாண்பர்களோ, கிருஸ்துவ சகோதரர்களோ பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்பதை அடித்துச் சொல்லுவேன். (புதுப்படங்கள் ரிலீஸ், டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது எல்லாம் 'கொண்டாட்டங்கள்' லிஸ்ட்டில் வராது அல்லவா?). எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருக்கும். அப்படி ஓரிர்வர் கொண்டாடுவதாக வந்து யாரும் சொல்ல வேண்டாம். அப்படியிருக்கையில் பொங்கலை கொண்டாடாதவர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லை என்ற நிலைப்பாடு அவர்களுக்கும் பொருந்துமா என்பதை அறிவு 'ஜீவி'கள் விளக்கவும்.
 



சோழநாடன் அவர்களே,

ரத்த அழுத்தமானி இப்போது என்ன ரீடிங் கொடுக்கிறது?

இதற்கு முன்னால் என்னுடைய இஸ்ரேல் பற்றிய ஒரு பதிவை படித்து விட்டு ஒரு வலைப்பதிவர் டென்ஷன் ஏகத்துக்கு ஏறி, அதற்கு டைவர்ஷனாக போன வருடம் ஏப்ரல் 1 அன்றைக்கு தனக்கு கல்யாணம் என்று அறிவிப்பு தர பலர் அவருக்கு வாழ்த்து சொல்ல, விஷயம் புரியாமல் நானும் வாழ்த்துரைக்கலாம் என்று அவர் பின்னூட்டப் பெட்டி பக்கம் சென்றேன். நல்ல வேளையாக கடைசி பின்னூட்டத்தில் அவர் டோண்டுவின் இஸ்ரேலிய பதிவு அளித்த டென்ஷன் காரணமாக அவ்வாறு உண்மையல்லாததை உரைத்ததாக எழுதியிருக்க ஓசைப்படாமல் வாபஸ் ஆனேன்.

அந்தப் பதிவர் ஈழநாதனா அல்லது டி.ஜே. தமிழனா அல்லது வேறு யாரவதா என்பது இப்போது என் நினைவில் இல்லை.

உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

இப்பின்னூட்டமும் என் வழமையான தனிப்பதிவில் பின்னூட்டமாக உடனேயே நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



மாயவரத்தான்,
//பொங்கலை கொண்டாடாதவர்கள் அனைவரும் தமிழர்கள் இல்லை என்ற நிலைப்பாடு அவர்களுக்கும் பொருந்துமா என்பதை அறிவு 'ஜீவி'கள் விளக்கவும்.//

இந்தப் பதிவில் அதிகமாக பின்னூட்டம் புரிந்தவர்களில் நானும் ஒருவன். நான் நீங்கள் நினைக்கும் அறிவு ஜீவி கிடையாது. வாதங்களுக்கு விளக்கம் சொல்வதைவிட உங்களை இதை தமிழர் திருநாளாக பார்க்கச் சொல்கிறேன். பிரிவினை வாதங்களும் மடக்கு வாதங்களும் பேசுவதி விடுத்து ,எப்படி இணையலாம் என்று பார்ப்பவன் நான்.மற்றவை உங்கள் விருப்பம்.
 



//இஸ்லாமிய நாண்பர்களோ, கிருஸ்துவ சகோதரர்களோ பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்பதை அடித்துச் சொல்லுவேன்.//

மாயவரத்தான்,
உம்மையெல்லாம் எந்த லிஸ்ட்-ல சேர்க்குறதுன்னே தெரியல்ல..அடிச்சு வேற சொல்லுறாராம்..எதுவும் தெரியாட்டா மூடிகிட்டு இரும் ஓய்!
 



நீங்கள் சொல்லவில்லையெனினும் உழவர் திருநாளை தமிழர் திருநாள் என்று அழைக்க விரும்பும் நண்பர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு எனக்கு தெரிந்த - ஆந்திரா, கர்நாடாகாவை தாய் மாநிலமாக கொண்ட - தெலுங்கு, கன்னட நண்பர்களுக்கும் சங்கராந்தியை தமிழர் திருநாள் என்ற அடைமொழியோடு கொண்டாட முடியுமா என்று விண்ணப்பித்து மடல் அனுப்பியிருக்கிறேன்... இது நையாண்டி இல்லை. இது பற்றி விரிவாக பேச இப்போது விருப்பம் இல்லை.


idhellamum thamiznadathan irundhudhu.
 



// idhellamum thamiznadathan irundhudhu. // இதெல்லாம் தமிழ்நாடாத்தான் இருந்தது, தெலுங்கு கன்னடமெல்லாம் தமிழிலயிருந்துதான் உருவாச்சின்னு சொல்லிகிட்டு சங்கராந்திய தமிழர் திருநாள்னு கொண்டாடுங்கன்னு உண்மையிலேயே அவங்களுக்கு மெயில் அனுப்பி சொல்ல முடியும்னு நினைக்கிறீங்களா ஆதிரை?
 



முகமூடி ,

பொங்கல் பற்றிய உங்கள் கருத்துகள் சிலருக்கு புரியவில்லையென்று நினைக்கிறேன் .. சிலருடைய நோக்கம் உங்களை எரிச்சல் படுத்துவதுதானேயன்றி வாதத்த்துக்காக இல்லை என நினைக்கிறேன் .

//கிருஸ்துவ சகோதரர்களோ பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில்லை என்பதை அடித்துச் சொல்லுவேன்//

உங்களுக்கு தெரியவில்லை என்று சொல்லுங்கள் ..தமிழ் கிறிஸ்தவ திருவிழாக்கள் பற்றி இங்கு பார்க்கவும் .

எல்லா தமிழர்க்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள் ..
 



சூரியனை வழிபடுவதுதான் பொங்கல் என்றால் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுவதில்லை .. சூரியனை படைத்த இறைவனுக்கு நன்றி கூறும் விழாவாகத்தான் இதை நாங்கள் நினைக்கிறோம் .
நான் பொங்கல் கொண்டாட முடியாத நிலையில, என்னை 'மதிய விருந்துக்கு' ஒரு தமிழ் கிறிஸ்தவ நண்பனும் இரவு விருந்துக்கு ஒரு தமிழ் இந்து நண்பனும் அழைத்திருக்க , ஆகா இதுவல்லவா தமிழர் திருநாள் என மகிழ்ந்திருக்கும் வேளையில், மாயவரத்தானிடமிருந்து இப்படியொரு பின்னூட்டம்
 



முகமூடி பிராமணர் மாநாட்டில் மயிர் கொடுத்து சமஸ்கிருதம் வளர்ப்பது பற்றி எடுக்கப்பட்ட முடிவைப்பற்றி நீங்கள் ஏதாவது சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

மாயவரத்தான் இந்துவோ தமிழரோ எதுவாயினும் தங்கள் பிறப்பின் மேன்மை பற்றி/மற்றவர்களை விட தான் சிறந்தவன் என்பதை பறைசாற்றிக்கொள்ள பொங்கல் கொண்டாடப்படுவதில்லை.அது மண்ணுக்கும் இயற்கைக்கும் நன்றி செலுத்தும் ஒரு நிகழ்வு அவ்வளவே அதன் ஒரு அங்கமாக பிள்ளையார் பிடித்தலையும் இந்துக்கடவுள் வழிபாட்டையும் புகுத்தியது யார் என்று சொல்லத்தேவையில்லை.

நாம் இதனை தமிழர் திருநாளாகக் கொண்டாடுகிறோம் மற்றவர்கள் சங்கிராந்தியாகக் கொண்டாடுகிறார்கள்

முகமூடி நீங்கள் எல்லோரும் ஏப்ரலில் இந்துப் புதுவருடப்பிறப்புக் கொண்டாடுவதை வெஷாக்,என்றும் வைஷாகி என்றும் சிங்களவரும் வட இந்தியர்களும் கொண்டாடுகிறார்கள்.அவர்களையும் பெயரை மாற்றி இந்துப் புதுவருடப்பிறப்பாகக் கொண்டாட முடியுமா என்று மயில் அனுப்புங்கள்
 



ஜோ..நீர் பொத்துக்கிட்டு இரும். சும்மாவாச்சும் நான்க்கள் கொண்டாடுகிறோம் என்று தம்பட்டம் அடிக்க வேண்டாம். நீங்கள் தாண் (?!) ஜாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவர் தானே? கிறுஸ்துமஸை விட பொங்கல் பண்டிகையை தான் நாங்கள் சிறப்பாக கொண்டாடுகிறோம் என்று உறுதியாக கூற முடியுமா? இஸ்லாமிய நண்பர்கள் பேசும் போதே அடுத்தவர்கள் 'முஸிஈமா, தமிழா?' என்று தான் குறிப்பிட்டு பேசுவார்கள். அது தெரியுமா?!
 



மாயவரத்தான்,
உமக்கெல்லாம் மண்டையில மசாலா கொஞ்சமாவது இருக்குமென்று நினைத்தேன் .நிரூபித்து விட்டீர்!

கத்தோலிக்க தமிழ் கிறிஸ்தவர்கள் பொங்கல் கொண்டாடுற அளவுக்கு நீர் கொண்டாடுவதில்லை .அது மட்டும் உண்மை.

பொத்திக்கிட்டு போவுமையா!உம்ம சவடால வச்சுகிட்டு!!
 



அட, உண்மையை சொன்னா கோபம் பொத்திகிட்டு வருதே. நான் கேட்ட கேள்விக்கு ஒரு இக்கன்னா வெச்சு பதில் வேண்டாம். பொதுவாக கிருஸ்துவர்கள் பத்தி பதில் சொல்லவும். அது என்ன கத்தோலிக்க தமிழ் கிருஸ்துவர்கள்? தமிழக கிருஸ்துவர்களில் நூறு சதவிகிதம் கத்தோலிக்க தமிழ் கிருஸ்துவர்கள்தானா?

பரவாயில்லை. உமக்கு மண்டையாவது இருக்கிறதா?
 



ஜோ, மாயவரத்தான்,

உங்கள் இருவருக்கும் ஒரு வேண்டுகோள் !!!

இப்படி தனிமனித விமர்சனத்துடன் விவாதம் செய்வதை தயவு செய்து உடனே நிறுத்தவும்.

இருவருக்கும் (மற்றும் அனைவருக்கும்!) என் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா
 



onna irundhavangale pirichadhu edhu
endra araichi seyyalam.

dravida thirunaalnu sollalana punjab, haryana le kuda pongal iruku. pakistanle kuda dravida mozhi iruku.


ipoodhaiku pongal,baisaki,sankaranthi vazthukal avalavudhan.
 



நிச்சயமாக, இம்மாதிரி சாதி சார்ந்த மாநாடுகள் நடத்தி, கோஷம் போடுவதால் பாதகம் தான் அதிகமே ஒழிய, யாருக்கும் பயன் ஒன்றும் இல்லை. காழ்ப்புணர்ச்சி தான் இறுதியில் மிஞ்சுகிறது. கஷ்டத்தில் இருக்கும் ஒரு மனிதனை (அவன் எந்த சாதிக்காரனாகவும் இருக்கட்டும்!) பார்க்கும்போது, பெரும்பாலானவர்களுக்கு மனதில் ஒரு நொடிப்பொழுதாவது, 'உதவ வேண்டும்' என்ற எண்ணம் துளிர்ப்பதின் அடுத்த கட்ட வளர்ச்சி தான் மனிதநேயம்! அதைத் தழைக்க வைப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குள்ளது. இதைத் தவிர கூறுவதற்கு ஒன்றுமில்லை. நன்றி.
என்றென்றும் அன்புடன்
பாலா
 



Digression:
கூட்டணி கட்சிகள் துணைவில்லாமல் தனித்து போட்டு இட்டு தேர்தலில் வென்றிருக்கும் பமக தலைவருக்கு வாழ்த்துக்கள்.

எப்ப தேநீர் விருந்து ??

End of Digression
 



.
.
இண்டிப்ளாக் தேர்தலில் சி ற ந் த தமிழ் வலைப்பதிவாகத் தேர்வாயிருக்கும் முகமூடிக்கு வா ழ் த் து க ள்.
.
.
 



ஈழநாதன், உங்களின் கேள்விக்கு இந்த பதிவிலேயே பதில் இருக்கிறது. பிள்ளையார் பிடித்து இந்துக்கடவுள் புகுத்தி யாராவது வழிபாடு செய்தால் செய்துவிட்டு போகட்டும். உங்களை gunpointல் இப்படி யாரும் கட்டாயப்படுத்தாதவரை உங்கள் முறையில் சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

// அவர்களையும் பெயரை மாற்றி இந்துப் புதுவருடப்பிறப்பாகக் கொண்டாட முடியுமா என்று மயில் அனுப்புங்கள் // தலையை பிச்சிக்கலாம் போலருக்கு. இது நையாண்டி இல்லைன்னு சொன்னதை சீரியஸா எடுத்து இப்படி பேசறீங்களா. அதான் ஆதிரைக்கு பதில் சொன்ன போதே, இப்படியெல்லாம் மெயில் அனுப்ப முடியும்னு நினைக்கிறீங்களான்னு சொன்னேனே... அப்புறமும் எப்படி ஐயா... முந்தி சொன்ன மாதிரி தெலுங்கு கன்னட மக்களுக்கு தமிழர் திருநாள்னு கோரிக்கை, நீங்க கேக்கறீங்கன்னு சிங்களர், வட இந்தியர்னு மெயில் அனுப்பிகிட்டு இருந்தேன்னு வைங்க, அப்புறம் அவங்க எல்லாம் என்ன பாத்தா skin head வராண்டான்னு, amway ஏஜண்ட கண்ட பொதுஜனம் மாதிரி ஓடி ஒளிஞ்சிக்குவாங்க.

உழவர் திருநாளா தமிழர் தமிழர் திருநாளா, தமிழர் புத்தாண்டாக இதை கருத வேண்டுமா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து பண்டியகியின் ஆதாரமான சந்தோஷத்தையும் கொண்டாட்டத்தையும் இழக்க நான் தயாராயில்லை வெறுமே என் வழக்கத்தில் இதை கொண்டாடி சாதாரணமா வாழ்ந்துக்கறேன், உலக செக்கூலரிஸ்டு பட்டமெல்லாம் வேணாம், ஆள விடுங்க.

*

ஜோ, மாயவரத்தான் என்றில்லை, என்னையும் சேர்த்து நிறைய பேருக்கு பொங்கல் பண்டிகை கிறிஸ்துவர்கள், முஸ்லீம்களால் கொண்டாடப்படுகிறது என்பது புதுத்தகவல்தான். எங்கள் குடும்பம் கிராமத்தை விட்டு வந்துவிட்டாலும் நிலமும் மாடும் உழவும் எங்களின் வாழ்வாதாரமாக இருந்த காரணத்தால் உழவர் திருநாளுக்கு சம்பிரதாயமாக சூரியனுக்கு படையலிட்டு கொண்டாடுகிறோம். நிலம் வைத்துள்ளவர்கள் தவிர ஏனைய கிறிஸ்துவர்கள், முஸ்லீம்களும் பொங்கல் கொண்டாடுகிறார்களா?

*

தாஸு, ஆதிரை, பாலா, மாயவரத்தான், ஜோ உங்கள் கருத்துகளுக்கு நன்றி. சின்னவன், digression ப்ரோக்ராமில் அரசியல் (பமக) தூக்கலாக இருக்கிறது போல... சின்னவன் & கல்வெட்டு, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
 



//Mayavarathan,
You are worthless to argue with.//

Yes Joe, incase u dont have a valid point to argue with!


//இப்படி தனிமனித விமர்சனத்துடன் விவாதம் செய்வதை தயவு செய்து உடனே நிறுத்தவும். //

நன்றி பாலா. பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும். நானாக தனி மனித தாக்குதல்களில் எப்போதுமே இறங்குவதில்லை. ஆனால் இப்போதெல்லாம் அப்படியாரும் தாக்க முயன்றால் சும்மா பார்த்துக் கொண்டு போக வேண்டாம் என்றும் முடிவெடுத்துள்ளேன். தவறென்று எனக்கு படவில்லை.மேலே உள்ள பின்னூட்டங்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும். என்றாலும் முகமூடியின் பதிவில் அதை ஆரம்பித்தது முகமூடியாருக்கு எதுவும் தரம சங்கடத்தினை ஏற்படுத்தியிருப்பின் மன்னிக்க.
 



//நிலம் வைத்துள்ளவர்கள் தவிர ஏனைய கிறிஸ்துவர்கள், முஸ்லீம்களும் பொங்கல் கொண்டாடுகிறார்களா?//
முகமூடி,
எங்கள் ஊர் முழுக்க முழுக்க ஒரு மீனவ ,கத்தோலிக்க கிராமம்.அங்கு யாருக்கும் விவசாயம் தொழில் கிடையாது .ஆனாலும் சிறுவயதில் பொங்கலன்று பொங்கல் போடாத (இந்து முறைப்படி இல்லாமல் இருக்கலாம்) வீடே கிடையாது .அது மட்டுமல்ல .தேவாலயத்தில் அன்றைய திருப்பலி பொங்கல் சிறப்பு திருப்பலியாக கடைபிடிக்கப் பட்டு ,பாதிரியார் அனைவருக்கும் பொங்கல் வழங்குவார் .

இது பற்றி என்னுடைய பழைய பதிவொன்றில் எழுதியிருக்கிறேன்.
தமிழ் கத்தோலிக்கரும் தாலி, குங்குமம் பிறவும் .முடிந்தால் வாசித்து பார்க்கவும் .

நேற்று கூட வசந்தன் ஈழத்தில் தேவாலயத்தில் பொங்கல் கொண்டாடுவது பற்றி எழுதியிருந்தார் . எல்.எல்.தாசு ஏற்கனவே எழுதியிருந்தார் .

இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .கண்ணை மூடிக்கொண்ட பூனைகள் பெரும்பான்மையானால் அது காலத்தின் கோலம் தான்!
 



//இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை .கண்ணை மூடிக்கொண்ட பூனைகள் பெரும்பான்மையானால் அது காலத்தின் கோலம் தான்!//
ஜோ: தமிழ் என்றால் மயிரைக் கொடுத்துக் காப்பது, இன்னபிற இழவெல்லாம் வரும்; மாயவரத்தானுக்கு தமிழ் மொழிப் பாதுகாப்பு என்பது ஒரு திருகிய கோணத்தில் தமாசாகத் தெரியும், ஆனால் அதேநேரத்தில் கிறிஸ்துவர்கள் தமிழர்களென்று நிரூபிக்க பொங்கல் பானையை வைக்கவேண்டும், முஸ்லீம்கள் 'முஸ்லீமா தமிழா' என்று கேட்பதாக (எங்கே கேட்டாரோ இந்த புராணத்தை கடவுளுக்கே வெளிச்சம், ஏதோ பிற பொதுஜனமெல்லாம் முஸ்லீம்களைப் பார்த்ததே இல்லை போல) பொத்தாம்பொதுவாக கழுத்தில் 'தமிள்க் கலாச்சாரக்' கத்தியை வைக்கவும் தெரியும். அதுதானே, ஆனாக்க அந்த மடம் ஆகாட்டி சந்த மடம் - தேவைப்பட்டால் தமிழ் அண்ட்ராயரைப் போட்டுக்கொள்ளவேண்டியது, தேவையில்லையென்றால் அண்ட்ராயர் நாடாவை மட்டும் உருவி அடுத்தவன் கழுத்தை நெரிக்கவேண்டியது - இதில் உங்கள் நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்? சங்கை எந்தக் காதில் ஊதுகிறீர்கள் என்று இன்னும் உங்களுக்குத் தெரியவில்லையா?
 



ஜோ, எங்கள் ஊரில் அப்படி இல்லை. உங்கள் ஊரில் இருக்கிறது. தெரிந்து கொள்ளத்தான் கேள்வி கேட்டேன். கேள்வியை எப்படி பார்க்கிறீர்கள் என்பது உங்கள் இஷ்டம்..

*

// தமிழ் என்றால் மயிரைக் கொடுத்துக் காப்பது //

சன்னாசி, இதை நானும் கூறியவன் என்ற முறையில் ::

பொதுவாக மைக் கிடைத்த உற்சாகத்தில் உளறும் பாக்கியவான்களை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி அது. என் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை போராடுவேன், உயிரை தருவேன் என்றெல்லாம் ரத்தத்தை சூடேற்ற, உசுப்பேற்றியவர்கள் வீதியில் கட்டவிழ உசுப்பேற்றியவர் ஏசியில் அழுவதை டிவியில் படம் பிடித்து ஒளிபரப்புவது காலகாலமாக நடக்கிறது.

இப்படியாக தமிழுக்காக உயிர் தருவேன் என்று போராடுவேன் என்று முழங்கினார் ராமதாஸ். அவர் முழங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதே, அவர் முழக்கத்திற்கு காரணமான குறைகள் அப்படியே இருக்க உயிர் வேண்டாம் மயிராவது தந்தீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது... தமிழ் என்ற வார்த்தையை அந்த பத்தியில் பார்த்தாலேயே உணர்ச்சிவசப்பட்டு, கேட்டதை விடுத்து மயிர் என்ற வார்த்தையை அரசியல்வாதி to தமிழ் ட்ரான்ஸ்பர் செய்யும் பலரை போலவேதான் நீங்களும் நினைக்கிறீர்களா?
 



முகமூடி,

//ஜோ, எங்கள் ஊரில் அப்படி இல்லை. உங்கள் ஊரில் இருக்கிறது. தெரிந்து கொள்ளத்தான் கேள்வி கேட்டேன்.//
உங்கள் கேள்வியை நான் சரியாக எடுத்துக்கொண்டு தானே பதில் சொல்லியிருக்கிறேன்..உங்கள் ஊர் என்று முன்பொருமுறை குறிப்பிட்டதை வைத்து ,உங்கள் ஊரில் எத்தனை சதவீதம் கிறிஸ்தவர்கள் இருப்பார்கள் ,அதில் எத்தனை பேரை உங்களால் கத்தோலிக்கராக அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று என்னால் ஊகிக்க முடிகிறது .அதனால் உங்களை நான் தவறாக எடுத்துக்கொள்ள வில்லை

//கேள்வியை எப்படி பார்க்கிறீர்கள் என்பது உங்கள் இஷ்டம்..//
என்னுடைய முந்தைய பதிலில் கடைசி பத்தி,உங்களுக்கல்ல ...ஒன்றும் தெரியாவிட்டாலும் அடித்துச்சொல்லுகிற மேதாவிகளுக்கு மட்டுமே.
 



என்னுடைய கருத்து பெரும்பான்மையான கிறுஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் பொங்கல் கொண்டாடுவதில்லை என்பது. அதற்கு ஆமாம், இல்லை என்று சொல்ல வேண்டியது தானே. தனி மனித தாக்குதல் ஏன்?

* எங்கள் ஊரில் (மட்டும்?) 'கத்தோலிக்க' கிருஸ்துவர்கள் 'உங்களை விட சிறப்பாக' கொண்டாடுகிறார்கள் என்று சொல்லுவது அதி மேதாவித் தனமா?

* என்ங்களை விட சிறப்பாக கொண்டாடுவதாக எப்படி சொல்கிறீர்கள்? வந்து பார்த்தீர்களோ? அல்லது 'அப்படிதான்' என்ற அனுமானத்தினாலா? அப்படியென்றால் யாரிங்கே உங்கள் வாதத்தின்படி 'அதி மேதாவி'?

* தமிழகத்தில் உங்கள் ஊரில் மட்டும் தான் கிருஸ்துவர்களா? அதுவும் தமிழகத்தில் கிருச்துவர்கள் என்றாலே உங்கள் ஊரில் வசிக்கும் கத்தோலிக்க கிருஸ்துவர்கள் மட்டும் தானா? இப்படியெல்லாம் லாஜிக்கலாக கேள்வி எழுப்பி மேலும் மேலும் உங்களை தர்மசங்கடப் படுத்த விரும்பவில்லை.

* அதே போல இன்னொரு நண்பர் 'இஸ்லாமியர்கள் மற்றவர்களை (இந்துக்களை) 'தமிழ்' என்று கூற மாட்டார்கள்' என்று குறிப்பிடுகிறார். நல்ல நகைச்சுவை. இஸ்லாமிய நண்பர்களே இதற்கு விளக்கம் கூறட்டும் என்று சொல்லுவேன்.
 



*எலெல்தாஸு அண்ணாச்சி, நீங்கள் கொடுத்த லிங்க் (எனக்கு) கிட்டவில்லை. என்ன அது?

* நான் பொதுவாக தான் குறிப்பிட்டேன். உங்களைப் போன்ற exceptional cases & பொதுப்படையான நண்பர்களை குறை கூற அல்ல.
 



//லாஜிக்கலாக கேள்வி எழுப்பி //
ஹா..ஹா..ஹா
 



http://lldasu.blogspot.com/2005/11/blog-post_29.html
 



சரி, உங்க கருத்து ??