<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

என் ஓட்டு சஆஅஇ கட்சிக்கே


சும்மா பாலர் பாடத்திலிருந்து குலுக்கி போட்டு எழுதப்பட்டதல்ல இந்த தலைப்பு. சர்வஜன ஆத்மீக அரசியல் இயக்கம் (Estd: தெரியாது. தலைமை அலுவலகம்: கோவை) என்ற கட்சி தேர்தல் அறிவிப்பு கூட வெளியாகாத நிலையில் கோவையில் உள்ள 14 சட்டசபை தொகுதிகளுக்கும் தனது வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தமிழ்நாட்டின் அனைத்து இதர தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேடிக்கொண்டிருப்பதாக ஒரு
செய்தி வெளியாகியுள்ளது.

ஏப்ரல் ஒன்றுக்கு இன்னும் நாள் இருக்கும் நிலையில் இதை தமாஷ் என்று நினைக்க முடியாது. இவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கும் கட்சியை பார்ப்பது அரிது என்பதால் இந்த தேர்தலில் என் ஓட்டை இக்கட்சிக்கே அளிக்க முடிவு செய்திருக்கிறேன். விஜயகாந்து, கார்த்திக்குக்கு இவ்விஷயம் தெரிய வரும்போது இவர்களோடு கூட்டணி வைக்கும் சாத்தியமும் இருப்பதால் இப்பொழுதே என் ஓட்டை ரிசர்வ் செய்து வைக்கிறேன்.

இன்னும் வெளிநாட்டிலிருந்து ஓட்டு போடுவதற்கான மசோதா நிறைவேறவில்லை என்று எனக்கு மெயில் தட்டும் அன்பர்கள் அதற்கு முன்பாக கட்சி அமைப்போடு தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் தேர்தல் கமிஷனில் பதிய வேண்டும் என்று சஆஅஇ கட்சிக்கு ஒரு அஞ்சலை தட்டிவிட்டு, அப்படியே அக்கட்சியில் இருக்கும் 14 தொண்டர்களை பற்றிய விபரங்களையும் அறிந்து எனக்கு தெரியப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். 14 என்ற எண் அக்கட்சி சார்பாக போட்டியிடுபவர்கள் அக்கட்சி தொண்டர்களாகத்தான் இருக்க முடியும் என்ற அனுமானத்தோடு எழுதப்பட்டது, தவறாகவும் இருக்கலாம்.

*

இக்கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையெனில், கேரக்டர் குறித்து வருங்கால முதல்வர் அண்ணன் விஜயகாந்த் அவர்களாலேயே விசாரிக்கப்பட்டு படிப்பு மற்றும் மாவட்ட தலைமைப்பொறுப்பை ஏற்று நடத்தும் திறமை ஆகியவற்றை நன்கு கவனித்து பின்பே நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்ட, நடமாடும் நகைக்கடை புகழ் ஆதிகேசவனின் கூட்டாளி என்றும் தேடப்படும் குற்றவாளி என்றும் காவல்துறை பதிவேடுகளில் உள்ள
எம்.கணபதி அவர்களை சார்ந்த தே.மு.தி.கவுக்கே எனது ஓட்டு என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//சும்மா பாலர் பாடத்திலிருந்து குலுக்கி போட்டு எழுதப்பட்டதல்ல இந்த தலைப்பு.//

நிர்வாகியோடு மோத நினைத்தால் நேரடியாக மோதும் துணிச்சல் உமக்கு உண்டு என்று எமக்குத் தெரியும்; ஆனாலும் இந்த முறை இப்படி மறைமுகமாக கணை தொடுப்பது ஏன் ஏன் ஏன்?

//தலைமை அலுவலகம்: கோவை//

மேற்படி எனது கருத்துக்கு வலு சேர்க்கும் ஒப்புதல்!

//...வேட்பாளர்களை தேடிக்கொண்டிருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது//

ஒரு செய்தி போதுமா? விமர்சிக்க, ஆராய்ந்து பார்த்து ஆதாரத்தோடு புட்டு இடியாப்பம் செய்யவேண்டாமா? இல்லாவிட்டால் இனிக்குமா பாயாசம்?

//என் ஓட்டை ரிசர்வ் செய்து வைக்கிறேன்.//
தமிழ், தமிழ்?

//அவர்களை சார்ந்த தே.மு.தி.கவுக்கே எனது ஓட்டு..//

வாக்களித்தபின் வாக்குச் சாவடிக்கு வெளியே வந்து பத்திரிக்கையாளர்கள் கேட்கும்போது மட்டுமே சொல்ல வேண்டிய super கருத்து!

//posted by முகமூடி at 10:48 PM on Jan 11 2006 //

நேரத்தோடு படுக்கைக்குச் செல்வது உடல் நலத்திற்கு நல்லது!

இந்த பதிவுக்கு நன்றிகள் பல!

smileys here ->
:-)) ;-) :-))))
 



smileys here too ->
:-)) ;-) :-))))
 



அடப்பாவிகளா... உள்குத்து ஆராய்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா??
 



சின்ன அண்ணாச்சி, அதான் வந்தாச்சே!.
ஏதாவது பதிவு போடறது...?
 



சரி, உங்க கருத்து ??