<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

புதுவை சட்டமன்ற தேர்தல்


தெலுங்கு, மலையாளம் பேசும் சிறுபான்மை யேனாம், மாஹேயை விட்டால் இனம், நிறம், மொழி, கலாச்சாரம், உணவு பழக்கம், விழாக்கள், பண்டிகைகள், பொழுதுபோக்கு என்பற்றில் வித்தியாசமே இல்லாத புதுவை, காரைக்காலை உள்ளடக்கிய பாண்டிச்சேரியில் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளின் தாக்கம் முக்கியமானது.

*

2001 பாண்டிச்சேரி தேர்தலுக்காக பிப்ரவரியில் தே.ஜ.கூவில் இருந்து வெளியே வந்து மார்ச்சில் ஜெயலலிதாவுடன் ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக்கொண்டார் பாமக நிறுவனர் ராமதாஸ். 2001ல் ஒரு வன்னியரை பாண்டிச்சேரியின் முதல்வர் நாற்காலியில் அமர வைப்பேன் என்ற ராமதாஸின் கொள்கை (அ) ஆசையின் படி, பாமக அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் முதல் பாதி ஆட்சியில் பாமக முதல்வரும் அடுத்த பாதி ஆட்சியில் அதிமுக முதல்வருமாக பாண்டியை ஆளுவது என்ற அந்த உடன்படிக்கையோடு தேர்தலை சந்தித்தது அதிமுக கூட்டணி.

காங்/தமாகா/சிபிஐ கூட்டணி 13 (11+2+0)
திமுக/புதுவை மக்கள் காங்/பாஜக/விசி கூட்டணி 12 (7+4+1+0)
அதிமுக/பாமக கூட்டணி 3 (3+0)
மற்றவர் 2

என்றது ரிசல்ட் நிலவரம்.

அரசியல் பார்வையாளர்களின் கூற்றுப்படி, காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு காரணம் அப்போதைய முதல்வர் சண்முகத்தின் ஆட்சியின் கிராமப்புறங்களின் ஏழை மக்களை மனதில் கொண்டு தீட்டப்பட்ட செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் நிறைகள். காங் ஜெயித்தது பெரும்பான்மை கிராமப்புறங்களில், திமுக ஜெயித்தது பெரும்பான்மை நகர்ப்புறத்தில். அதிமுக கூட்டணி பெற்ற செய்தி : முதல் பாதி இரண்டாம் பாதி என்று என்ன, மாதா மாதம் கூட முதல்வர் பதவியை வைத்து ரிலே ரேஸ் ஆட நீங்கள் தயாராகுங்கள், ஆனால் நாங்கள் தயாராக இல்லை. பாமகவுக்கு 0/10, அதிமுகவுக்கு 3/20 என்பது ராமதாஸின் ஜாதி அரசியலை தமிழகத்திலிருந்து பாண்டிக்கு கடத்துவதிலேயோ, அவரின் வன்னிய முதல்வர் கோஷத்தையோ புதுவையின் பெரும்பான்மையினரான வன்னிய இனத்தவர் உட்பட்ட பாண்டிச்சேரி மக்களுக்கு ஏற்புடையதில்லை என்பதன் வெளிப்பாடே... ஜாதி அரசியல் பாண்டியில் எடுபடாது.

*

பாமக சார்பில் பேராசிரியர் ராமதாஸ¤ம் பாஜக சார்பில் லலிதா குமாரமங்கலமும் போட்டியிட்ட 2004 பாராளுமன்ற தேர்தல்தான் புதுவை இந்தியாவோடு இணைந்த பிறகு, பாராளுமன்றத்துக்காக காங்கிரஸ் போட்டியிடாத முதல் தேர்தல். பாஜகவும் பாமகாவும் முதல் முறையாக புதுவையில் போட்டியிட்டன.

இதுவே காங்கிரஸ்/வேறு கட்சி என்றால் கண்டிப்பாக வெற்றி என்று சொல்லிவிடலாம். இப்போது பாமக/பாஜக மோதல் என்பதால் சொல்வது கடினம் என்பதுதான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பான்மையினர் சொன்னது. பாஜகாவே தங்களின் வெற்றியின் சாதகமாக இதைத்தான் குறிப்பிட்டது. அப்போது காங்கிரஸ¤க்கு இத்தொகுதியை கொடுக்காத ஏமாற்றம் தந்த சோர்வில் இருந்த தொண்டர்களுக்கு முதல்வர் ரங்கசாமியும் பிரதேச காங் தலைவர் நாராயணசாமியும், இது காங்-பாஜக பலப்பரிட்சை என்று சொல்லி அவர்களுக்கு உற்சாகம் தர ஓவர்டைம் வேலை பார்த்தனர்.

தேசிய அளவில் எந்த அலையும் இல்லாத நிலையில், தமிழகத்து மாநில பிரச்னைகளான 2 லட்சம் அரசாங்க ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை அரசு ஒடுக்கியது, 3 லட்சம் போக்குவரத்து ஊழியர்களின் சலுகைகளை பறித்தது, குடிநீர் பஞ்சம், காவேரி பிரச்னையை அரசு கையாண்ட விதம் போன்ற விஷயங்களில் மக்களுக்கு அரசு மேல் இருந்த கோபத்தை பலமாக்கி திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, சிபிஐ, சிபிஐ(மா), முஸ்லீம் லீக் என்ற மாபெரும் கூட்டணியோடு தேர்தலை சந்தித்த ஜ.மு.கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணியை தேர்தல் பார்வையாளர்களே எதிர்பாராத வகையில் தமிழகம்-புதுவையில் துடைத்து எறிந்தது.

போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது ஜ.மு.கூ. புதுவையில் பேராசிரியர் ராமதாஸ் வெற்றி பெற்றார்.

காங். செயலாளர் நாராயணசாமி புதுவை மக்களுக்கும், வெற்றிக்காக உழைத்த திமுக தலைமையிலான ஜ.மு.கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவிக்கும் உறையில் பாமக பிரமுகர் எம். ராமதாஸின் வெற்றியை ஆளும் காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைக்கு மக்கள் தந்த தீர்ப்பாக எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

*

ஒருவரின் கல்வியறிவு, ஆளுமைத்தன்மை, கடந்து வந்த பாதை, மக்கள் செல்வாக்கு போன்ற விஷயங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒருவரின் ஜாதி அல்லது மதம் அடிப்படையில் முதல்வராக்குவோம் பிரதமராக்குவோம் என்ற கோஷம் ஆபாசமானது. ஆனால் அடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் ஜாதி முதல்வர் கோஷத்துடன் புதுவையை அணுக ராமதாஸ் முயற்சிக்கலாம். ஆனால் போன முறை போல், வெளிப்படையாக அறிவித்து பின்பு பாதி பிரச்சாரத்தில் மக்கள் மனநிலை அறிந்து அடக்கி வாசித்தது போல் அல்லாமல், இந்த முறை வேறு யுக்திகளை மேற்கொள்ளலாம். தேர்தலுக்கு முன் கூட்டணி எப்படி அமைந்தாலும், தேர்தலுக்கு அப்புறம் தமிழகத்தில் தொங்கு சட்டமன்றம் அமையும் பட்சத்தில், தமிழகத்திற்கு இத்தனை எம்.எல்.ஏக்களுக்கு பதில் புதுவையில் முதல்வர் பதவி என்ற பேரம் தொடங்கும். அப்படி ஒரு சூழ்நிலையில், புதுவையில் திமுக/அதிமுக அல்லாத ஏதாவது ஒரு கட்சிக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலை ஏற்பட்டு விட்டால் தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளுமே பேரத்துக்கு படியும் என்பதுதான் உண்மை. இந்த பேரத்தில் உடன்பாடு இல்லையெனில் ஏதாவது ஒரு கூட்டணிக்கு தெளிவான அறுதிப்பெரும்பான்மை கொடுப்பதே புதுவை மக்கள் முடிவாக இருக்க வேண்டும்.

*

மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்புதான். ஆனால் எந்த கூட்டணியோடு தேர்தலை சந்தித்தனரோ அதே கூட்டணியோடுதான் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விடுத்து இந்திய ஜனநாயக வழிமுறைகளில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி கூண்டோடு கூடு தாவி குதிரை பேர ஊழலில் மக்களை கண்கட்டி ஏமாற்றுவது என்ற சமுதாயத்தை பீடித்த நோய் முற்றிப்போய்விட்டது.

தேர்தலில் முடிவு தெரிந்ததற்கு பிறகு கூட்டணி தாவுவதை போன்ற மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம் வேறொன்றுமில்லை. ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்று நம்பி ஓட்டு போடும் ஜனங்களை ஜனநாயக விதிமுறைகளில் இடம் இருக்கிறது என்று காரணம் காட்டி இன்னொரு கட்சி ஆட்சி அமைக்க வைக்கும் அவலத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கையாலாகத்தனத்துடன் வேடிக்கை பார்க்க வைக்கும் அவலம் நிறுத்தப்பட வேண்டும். இதற்கான சட்ட வரைவை கொண்டு வர எந்த கட்சிக்கும் ஆண்மை இருக்காது என்பதுதான் நிதர்சனம்.

அரசியலில் நீடித்து நிலைத்திருக்க இந்த தந்திரங்கள் தேவைதான், இல்லையெனில் காணாமல் போய்விடுவர் என்று சப்பை கட்டுவது சரியானதல்ல.. இது சரிதான் என்று சொல்ல ஆரம்பிக்கும் சமுதாயத்தில்

சாமியாராக நீடித்து இருக்க பாலியல் வன்முறை மற்றும் கொலை போன்ற தந்திரங்கள் தேவைதான்...
நிதி நிறுவனங்கள் வளர்ச்சிக்கு 30 சதவீத வட்டி என்ற கவர்ச்சியில் மக்களின் பணத்தை ஏப்பமிடும் தந்திரம் தேவைதான்...
குடும்பத்தை வாழவைக்க கன்னம் வைத்து திருடுவது என்ற தந்திரம் தேவைதான்...
ஒரு காரியத்தை செவ்வனே செய்து முடிக்க இலஞ்சம் என்று கொச்சைபடுத்தாமல் அன்பளிப்பு என்ற தந்திரம் தேவைதான்...

போன்ற கோஷங்களுக்கும் அர்த்தம் பிறக்க ஆரம்பித்துவிடும்.




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//ஒருவரின் கல்வியறிவு, ஆளுமைத்தன்மை, கடந்து வந்த பாதை, மக்கள் செல்வாக்கு போன்ற விஷயங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஒருவரின் ஜாதி அல்லது மதம் அடிப்படையில் முதல்வராக்குவோம் பிரதமராக்குவோம் என்ற கோஷம் ஆபாசமானது//.

அண்ணே., என்ன நேத்துதான் பிறந்து., இன்னைக்கு உலகத்த புதுசா பாக்கிற மாதிரி எழுதியிருக்கிங்க?., சாதி பாத்து மத்த கட்சியெல்லாம் சீட்டு குடுக்கலாம்., தெளிவா.. இதுதான் நோக்கம்னு சொன்னா கேள்வி கேட்கிறிங்க?.

//தேர்தலில் முடிவு தெரிந்ததற்கு பிறகு கூட்டணி தாவுவதை போன்ற மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனம் வேறொன்றுமில்லை//
இதில் நானும் உடன்படுகிறேன். ஆனா தெக்கேயிருந்து வடக்க வரை இது அங்கீகரிக்கப் பட்ட விதயமா இல்ல இருக்கு.

//இது சரிதான் என்று சொல்ல ஆரம்பிக்கும் சமுதாயத்தில்//
இத சரின்னு நான் சொல்லல., ஆனா நீங்க சொன்ன அத்தனையும் வைத்துதான் இங்கு ஒரு முன்னேறிய கட்சியோ., இனமோ., மடமோ இல்ல குடும்பமோ., தனி மனிதனோ இருப்பான்/இருக்கும்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? இந்த தந்திரங்களை செய்பவர்கள் அனைவரையும் கேளுங்கள்.
 



// சாதி பாத்து மத்த கட்சியெல்லாம் சீட்டு குடுக்கலாம்., தெளிவா.. இதுதான் நோக்கம்னு சொன்னா கேள்வி கேட்கிறிங்க? //

மரம், சாதி அடிப்படையில் எம்.எல்.ஏ ஆவதும் சாதி அடிப்படையில் முதல்வர், பிரதமர் ஆவதும் ஒன்றா? சாதி அடிப்படையில் உயர் பதவிகளை ஆக்ரமித்திருக்கிறார்கள் என்று பேசும் நீங்களா இப்படி சொல்வது? (என்னை பொறுத்த வரை சாதி ரீதியில் இடம் தருவதே ஆட்சேபத்துக்கிறியதுதான்)


// இதில் நானும் உடன்படுகிறேன். ஆனா தெக்கேயிருந்து வடக்க வரை இது அங்கீகரிக்கப் பட்ட விதயமா இல்ல இருக்கு //
யார்ங்க அங்கீகரிச்சா.. வக்கத்து போயி பாத்துகிட்டு இருக்கோம். அவ்வளவுதான்.

// இந்த தந்திரங்களை செய்பவர்கள் அனைவரையும் கேளுங்கள். //
தந்திரங்கள் செய்யும் அனைவரையும்தான் சாடினே. தகுதியான ஒரு மனிதனை என்று சொல்லாமல் முஸ்லீமைத்தான் முதல்வராக்குவேன் என்று சொன்ன ராம்விலாஸ் பஸ்வானை வைத்து எழுதியிருக்கலாம்.. ஆனால் தெரிந்த முகமாயிருந்ததால் ராமதாஸ் உபயோகப்பட்டார் அவ்வளவுதான்.
 



சரி, உங்க கருத்து ??