<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தமிழகம் காஷ்மீர் ஆகுமா?


இந்த வார தத்துவம்ன்ற தலைப்புலதான் இது வெளி வந்திருக்கும்.. ஆனா பாருங்க, யாராவது மறந்து போய் பழக்க தோஷத்துல த(பி)த்துவம்னு படிச்சிட்டா?


அதாவது, இது அதாகுமா, அது வேறெதாவதாகுமா, பேன் பெருமாளாகுமா அப்படீன்னெல்லாம் உதார் உடுறது தொன்று தொட்டே வர்றதுதான்னு வச்சிக்கோங்க... அட நம்ம விஜயகாந்து கூட என்னன்னு சொல்லையின்னாலும் தமிழ்நாட்ட மாத்திருவேன்னு சொல்லியிருக்காரு... கொஞ்ச நாள் முன்னாடி நம்ம சென்ட்ரல் மினிஸ்டரு மணிசங்கரு மயிலாடுதுறைய துபாய் ஆக்குவேன்னாரு... அப்புறம் ஒரு 10 லோடு மணல் அடிச்சிட்டு ஒட்டகம் வாங்க வடநாட்டு பக்கம் போனவருதான் ஆளயே காணோம்...

சரி தமிழ்நாட்டு கோட்டா முடிஞ்சிதே, யாராவது

கர்நாடகா கிர்கிஸ்தானாகும்
கேரளா க்ரோஷியாவாகும்
பீஹார் பஹ்ரைனாகும்
ஆந்திரம் ஐக்கிய நாடுகள் சபையாகும்

அப்படின்னு சொல்வாங்கன்னு வெயிட்டிங்க்ல இருந்த சமயம், திருப்பியும் நம்ம வைகோ
தமிழகம் காஷ்மீர் ஆகும்னு சொல்றாரு...

இந்த இடத்தில் ஒரு டிஸ்க்ளெய்மர் கார்டு :: "தமிழகம் காஷ்மீர் ஆகும்"ன்ற ஒரு ஸ்டேட்மெண்ட பத்தி மட்டும்தான் இங்க பேசறோம். அது சம்பந்தமா அவரு சொல்ற மத்த விஷயங்களுக்கு இவ்விடத்தில் தற்காலிகமா பொடா.

பொதுஜனங்க கிட்ட, தமிழகம் காஷ்மீர் ஆகும்னு சொல்றாரே இதுக்கு இன்னாபா அர்த்தம்னு கேட்டேன்...

சி சென்டர் பொதுஜனம் என்ன சொல்லுதுன்னா :: அடஇப்ப ஒரு கூட்டத்துல
எதிர் வரும் தேர்தலில் நம்மை எதிர்ப்பது எரிமலையாகவே இருந்தாலும், அவர்களைத் தகர்த்தெறிந்து தமிழ் இனத்தின் மானத்தை காக்க வேண்டும்னு சொல்லிகிறாரு... அத்தால இவர எதுக்கறவங்க செல பேரு சாதா மலை, செல பேரு எரிமலை... எரிமலையா இருந்தாலும் அது பொங்காத சமயமா பாத்து டைனமைட்டு வக்கணும்... இல்ல பொங்கிகினு இருக்குணு வையி, அதுல தண்ணி ஊத்தி புஸ்ஸாக்கிட்டு டைனமைட்டு வக்கணும்... அத்த செஞ்சாத்தான் தமிழ் எனத்தோட மானம் கப்பலேறாதுன்னு எல்லாம் ஆராய்ச்சி செய்வியா? தலைவரு பேச்செயெல்லாம் அனுபவிக்கனும், ஆராயக்கூடாது... அவரு பேச பேச நரம்பெல்லாம் சொம்மா முறுக்கேறும் நைனா... அதோட கபால்னு கெளம்பிடணும்...

ஏ சென்டர் பொதுஜனம் என்ன சொல்லுதுன்னா :: ஒரு வேளை தீவிரவாதத்தால் சிதிலமடைந்து இருக்கும் காஷ்மீர் பகுதியில் அகதிகளாக இருக்கும் மக்களை குறிப்பிட்டு, இலங்கையில் பலாலி விமான தளத்திற்கு இந்தியா உதவி செய்யும் வேளையில் அதனால் சிங்கள இராணுவத்தின் கை ஓங்கும் என்பதால் போர் எனில் தமிழ் மக்கள் அகதிகளாக பெருமளவில் வருவதை குறிக்கும் வண்ணம் அப்படி சொல்லியிருக்கலாம்...

பி சென்டர் பொதுஜனத்துக்குதான் இதுல கன்ப்யூசன்... சரி உடுன்னு செவனேன்னு இருந்த நேரத்துல இன்னிக்கி மகா நடிகன்னு ஒரு படம் டி.வில போட்டான். அதுல அரசியல்வாதியா வர்ற பி.வாசு கேரக்டர் இதே வசனத்த பேசும்... "எலேய் இன்ன மாதிரி இன்ன மாதிரின்னா தமிழ்நாடே காஷ்மீராகும்னு இவங்களுக்கு நாம காமிக்கணும்டா"ன்னு... அவரு சொல்ற அர்த்தம் வேற மாதிரி... அதாவது காஷ்மீர்னா இப்பல்லாம் உடனே ஞாபகம் வர்றது வன்முறையும் துப்பாக்கி சத்தமும்தான அந்த ரெஃபரன்ஸ்ல எச்சரிக்கை கொடுப்பாரு... (வைகோ சொன்னதும் இதே அர்த்தத்தில்தான் என்பது இத பதிந்த பிறகே எனக்கு தெரிய வந்தது. விபரம் பின்னூட்டப்பெட்டியில்..)

ஒரே கன்பூசன்... இந்தியா, இலங்கை ராணுவ ஒப்பந்தம் தடுத்து நிறுத்தப்பட்டதில் மதிமுக முக்கியப் பங்கு வகித்தது. இதை மக்களிடம் மதிமுக தொண்டர்கள் எடுத்துக் கூற வேண்டும்னு தலைவர்
சொன்னத செஞ்சிகிட்டு இருக்கிற தொண்டர்கள்ல யாராவது ஒருத்தர் அத தற்காலிகமா பெண்டிங்க்ல வச்சிட்டு இந்த கொயப்பத்த போக்க ஒதவி செய்ங்கப்பா...

*

ஆசியா டைம்ஸ் பத்திரிக்கையில்
விடுதலைப்புலிகளுக்கும் தாலிபான்களுக்கும் தொடர்பு என்ற தலைப்பில் வந்த செய்தி கண்ணில் பட்டது. பாகிஸ்தானிய உளவு அமைப்பை மேற்கோளாக்கி உடனடி பணம் மற்றும் போதை பொருட்கள் ஆகியவற்றுக்கு ஈடாக அக்-கய்தா புலிகளிடமிருந்து ஆயுதங்கள் வாங்குவது, புலிகளின் ஆயுதப்பாதையை உபயோகிப்பது போன்றவை குறித்து ஆசியா டைம்ஸ் பாகிஸ்தானின் தலைமை பொறுப்பில் உள்ள ஒருவரால் (மின்னஞ்சல் முகவரியோடு) எழுதப்பட்ட இந்த கட்டுரை குறித்த மேலதிக தகவல்களை யாராவது விரிவாக அலசலாம்.



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


பள்ளியில் படிக்கும் பொழுது இந்திய வரைபடம் மிக அழகாக இருப்பதாக எனக்கு தோன்றும். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தலைப்பகுதி தான் என்று நினைப்பேன். மிக அழகாக நெளிந்து செல்லும் அந்த வரைபடத்தில் இருக்கும் அழகான காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால் அந்த அழகிய தலைப்பகுதியில் பெரும் பகுதி உண்மையில் நம்மிடம் இல்லை, வரைபடத்தில் மட்டும் அந்த பகுதியை சேர்த்து கொண்டு உரிமை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம் என்று தெரிந்த பொழுது கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

நம் இந்திய வரைபடத்தின் தலைப்பகுதியில் ஒரு பகுதி பாக்கிஸ்தானிடமும், மற்றொரு பகுதி சீனாவிடமும் இருக்க எஞ்சிய காஷ்மீர் சர்சைக்குரிய பகுதியாக இந்தியாவிடம் இருக்கிறது. தீவிரவாதிகளுக்கும், இராணுவத்திற்கும் நடக்கும் சண்டையில் அந்தப் பகுதி ரத்த பூமியாக மாறி அடக்குமுறை, விசாரணைகள், மனித உரிமை மீறல்கள் இவற்றுக்கிடையே காஷ்மீர் மக்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவும், பாக்கிஸ்தானும் கிரிக்கெட் விளையாடி தங்கள் நல்லுறவை மேம்படுத்த நினைக்க இந்த இரு நாடுகளின் உறவில் பகடை காய்களாக இருப்பது காஷ்மீர் மக்கள் தான். அவர்களின் கோரிக்கை தான் என்ன ? அவர்கள் இந்தியாவுடன் இருக்க நினைக்கிறார்களா, பாக்கிஸ்தானுடன் இணைய விரும்புகிறார்களா அல்லது சுதந்திர காஷ்மீர் வேண்டும் என்று நினைக்கிறார்களா ?

இது பற்றி யாருக்கும் கவலையில்லை. தில்லியில் இருந்து கொண்டு நாம் காஷ்மீர் எங்களுடையது என்றும், லாகூரில் இருந்து அவர்கள் காஷ்மீர் அவர்களுடையது என்றும் கூறிக் கொண்டிருக்கிறோம். நாம் காஷ்மீர் இந்தியாவை விட்டு பிரிவதை விரும்பவில்லை. பாக்கிஸ்தானும் காஷ்மீர் சுதந்திரம் அடைவதை விரும்பவில்லை. தன் நாட்டின் ஒரு பகுதியாகத் தான் காஷ்மீர் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது.

நம்மிடம் உள்ள காஷ்மீரே சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்க பாக்கிஸ்தானிடம் இருக்கும் காஷ்மீரும் எங்களுடையது தான் அதனை கைப்பற்றியே தீருவோம் என்ற வீரவசனத்தை சங்பரிவார் கும்பல் வீரதுறவிகள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். நடைமுறையில் சாத்தியம் இல்லாதது.

உண்மையில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமானது தானா ? இது பற்றி படிக்க தொடங்கிய பொழுது காஷ்மீர் பிரச்சனையை இந்தியா கையாண்ட விதம், ஒரு இந்தியனான என்னாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை. சுருக்கமாக கூறினால் காஷ்மீர் பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுதலை பெற்று இந்தியாவின் பிடியில் சிக்கிக் கொண்டது என்பது தான் உண்மை. இந்தப் பிரச்சனையின் உண்மை நிலையை இந்தியா அரசு இயந்திரமும், ஊடகங்களும் மூடி மறைக்கவே நினைக்கின்றன. பொய்ச் செய்திகளும் திட்டமிட்டு பரப்ப படுகின்றன.

1947ல் இந்தியா விடுதலையான பொழுது இந்தியா, பாக்கிஸ்தான் என்ற இரு நாடுகளுடன் சேராமல் காஷ்மீர் தனி நாடாக இருந்தது. காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஹிந்து. ஆனால் பெரும்பான்மை மக்கள் முஸ்லீம். அதனால் தனி நாடாக இருப்பது அவருக்கு வசதியாக இருந்தது. பிரச்சனையும் இல்லை. காஷ்மீர் மற்றும் பாக்கிஸ்தான் இடையேயான சாலைகள், வர்த்தகம் போன்றவற்றை இருக்கும் நிலையில் அப்படியே பராமரிக்க பாக்கிஸ்தானுடன் ஒரு ஒப்பந்தமும் செய்து கொண்டார் (standstill agreement ). ஆனால் இந்தியாவுடன் அவர் இது போன்ற ஒரு ஒப்பந்தத்தை செய்து கொள்ள வில்லை.

இந்தியா காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள நினைத்தது. அதனால் இத்தகைய ஒரு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

1947ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாக்கிஸ்தானின் பஸ்தூன் பழங்குடிகள் காஷ்மீர் மீது படையெடுத்த பொழுது, ஸ்ரீநகரில் இருந்து தப்பி ஜம்மு வந்து இந்தியாவின் உதவியை நாடிய ஹிரி சிங் இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஒரு ஒப்பந்தத்தை 1947ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி செய்து கொண்டார் (Instrument of Accession). இந்த இணைப்பு ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்தியாவுடன் சேர்ந்தாலும், பாதுகாப்பு, வெளியுறவு, போன்ற துறைகள் மட்டும் தான் மைய அரசிடம் இருக்கும். எஞ்சிய துறைகள் காஷ்மீர் அரசின் வசம் இருக்கும்.

1947, அக்டோபர் 27ம் தேதி இந்திய படைகள் ஸ்ரீநகரில் நுழைந்தன. காஷ்மீர் இந்தியா வசம் வந்தது. காஷ்மீரின் நிலப்பரப்பில் 3ல் 2 பங்கு இந்தியாவிடமும், பாக்கிஸ்தான் கைப்பற்றிய 1 பங்கு ஆஸாத் காஷ்மீர் என்று பாக்கிஸ்தானிடமும் உள்ளது.

காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததை பாக்கிஸ்தானும், காஷ்மீரின் பெருவாரியான முஸ்லீம் மக்களும் ஏற்கவில்லை. தன்னிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்ட நிலையில் மன்னர் ஹரி சிங்கிற்கு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க எந்த அதிகாரமும் இல்லை என்று பாக்கிஸ்தான் வாதிட்டது. மேலும் பெருவாரியான காஷ்மீர் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுடன் இணையவே விரும்பியதும், பாக்கிஸ்தானின் வாதத்திற்கு வலுசேர்த்தது.

அப்பொழுது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன் இந்த இணைப்பு தற்காலிகமானது தான் என்றும், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ அவர்கள் இணைந்து கொள்ள ஒரு ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீரின் மக்களின் விருப்பத்திற்கேற்ப சுயநிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்தார். இதனை காந்தி, நேரு போன்ற தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

1948ம் ஆண்டு இந்தியா இந்தப் பிரச்சனையை ஐ.நா. சபையிடம் முறையிட்டது. காஷ்மீரில் ஒட்டெடுப்பு நடத்தப்பட்டு அம் மக்களின் விருப்பத்திற்கேற்ப காஷ்மீர் இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணையலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஒப்புக் கொண்டனர். இன்று வரை அந்த ஓட்டெடுப்பு - Plebiscite நடத்தப்படவே இல்லை.

இடைக்கால ஏற்பாடாக மார்ச் 5, 1948ம் ஆண்டு, சேஷக் அப்துல்லா காஷ்மீரின் "பிரதமராக" நியமிக்கப்பட்டார். ஆம்...ஆரம்ப காலங்களில் காஷ்மீரின் முதல்வரை பிரதமர் என்று அழைப்பது தான் வழக்கம். இந்தியாவிற்கு தனி அரசியல் சாசனம், காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் என்பதும் வழக்கில் இருந்தது. அதாவது இந்தியாவின் பாதுகாப்பில் காஷ்மீர் "தனி நாடாக" சுயாட்சியுடன் இருந்தது. மற்ற மாநிலங்கள் போல இல்லாமல் காஷ்மீருக்கு என்று தனி அரசியல் சாசனம் இருக்க வாய்ப்பளிக்கும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து தரும் 370ம் சட்டப்பிரிவும் உருவாக்கப்பட்டது.

1951ம் ஆண்டு காஷ்மீரின் முதல் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலை தான் இந்தியா, ஒட்டெடுப்புக்கு இணையாக கூறிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் இந்தியாவின் ஆதரவு பெற்ற சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 75 இடங்களிலும் சேஷக் அப்துல்லா வெற்றி பெற்றார். இதில் 73 இடங்களில் சேஷக் அப்துல்லாவின் ஆதரவாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சிய இரு தொகுதிகளிலும் அப்துல்லாவின் எதிர் போட்டியாளர்கள் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்கள். அதனால் மொத்தமுள்ள அனைத்து தொகுதிகளிலும் சேஷக் அப்துல்லா வாகை சூடிக் கொண்டார்.

ஆனால் உண்மையில் காஷ்மீர் மக்கள் இந்த தேர்தலில் கலந்து கொள்ளவில்லை. தேர்தலை புறக்கணித்தனர். அது மட்டுமில்லாமல் தேர்தலும் முறையாக நடக்க வில்லை. மைய அரசின் உதவியுடன் சேஷக் அப்துல்லாவின் எதிர்ப்பாளர்களாக கருதப்பட்டவர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தத்தில் சேஷக் அப்துல்லாவின் வெற்றிக்கு காஷ்மீர் மக்களின் ஆதரவை விட மைய அரசின் அதரவு தான் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு முழு காரணம் அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர் லால் நேரு.

காஷ்மீரின் பிரதமராக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பின்பு, இந்தியாவுடனான இணைப்பிற்கு எதிராகவும் காஷ்மீருக்கு விடுதலை வேண்டும் என்றும் சேஷக் அப்துல்லா தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். அது குறித்தும் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை காஷ்மீரின் சட்டசபையில் நிறைவேற்ற மறுத்தார். இதனால் 1953ம் ஆண்டு சேஷக் அப்துல்லா கைது செய்யப்பட்டார். நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த அப்துல்லா, நேருவாலேயே கைது செய்யப்பட்டார்.

சேஷக் அப்துல்லாவிற்கு பிறகு காஷ்மீரின் பிரதமராக பக்ஷி குலாம் முகம்மது என்பவர் இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். காஷ்மீரின் சட்டசபையும் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இதன் பிறகு சாதிக் என்பவர் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் பிரதமராக இருந்த பொழுது காஷ்மீரின் பிரதமர், ஜனாதிபதி என்று அழைக்கும் வழக்கம் மாறி முதலமைச்சர், கவர்னர் என்று அழைக்கும் முறை அமலுக்கு வந்தது. இவ்வாறு காஷ்மீர் படிப்படியாக இந்தியாவின் ஒரு மாநிலமாக மாற்றப்பட்டது. இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணம் ஜவகர்லால் நேரு தான்.

ஆரம்ப காலங்களில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணயம், காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப தங்களை இந்தியாவுடனோ, பாக்கிஸ்தானுடனோ இணைத்துக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்த ஜவகர்லால் நேரு, பிறகு அதனை மாற்றிக் கொண்டு காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார். பிரிட்டிஷாரின் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய நேரு, காஷ்மீர் மக்களின் விருப்பத்திற்கெதிராக அவர்களின் நாட்டை எதனால் இந்தியாவுடன் இணைக்க ஆர்வம் காட்டினார் ?

இதற்கு முக்கிய காரணம் காஷ்மீரை சார்ந்த அவருடைய பாரம்பரியம். காஷ்மீரி பண்டிட்களின் பூர்வீகமான காஷ்மீரை பாக்கிஸ்தானுக்கு கொடுக்க அவர் விரும்பவில்லை. தன்னுடைய பூர்வீக பூமியை தன்னுடன் வைத்துக் கொள்ள பெரும்பான்மையான காஷ்மீர் முஸ்லிம்களின் விருப்பத்தை துச்சமாக நினைத்தார். இதற்காக அவர் தேர்தல் முறைகேடு போன்றவற்றையும் கையாண்டார். 1951 தேர்தல் தொடங்கி இன்று வரை காஷ்மீர் மக்களின் உண்மையான ஆதரவு பெற்ற தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெற முடிவதில்லை. இந்திய அரசின் ஆதரவு பெற்ற தலைவர்கள் தான் காஷ்மீரில் வெற்றி பெற முடியும்.

இவ்வாறு ஆரம்பித்த காஷ்மீர் பிரச்சனை தான் இன்று காஷ்மீர் இளைஞர்களை ஆயுதம் ஏந்த வழிவகுத்துள்ளது. பாக்கிஸ்தானின் தூண்டுகோள் இருக்கிறது என்றாலும் அவர்களின் போராட்டம் நியாயமற்றது அல்ல.

காஷ்மீர் பிரச்சனைக்கு காரணம் நேருவின் பொறுப்பற்ற, சுயவிருப்பத்தால் எழுந்த தவறு தான். வரலாற்றின் முன் இந்த பிரச்சனையின் குற்றவாளி ஜவகர்லால் நேரு தான். அவர் இந்த பிரச்சனையை கையாண்ட விதம் தான் இன்றைக்கு இது ஒரு மிகப் பெரிய தீவிரவாத பிரச்சனையாக உருவாக காரணம்.

இந்த பிரச்சனையின் காரணமாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் நடந்த 4 போர்கள், அதில் மடிந்த உயிர்கள், தினமும் மடியும் மனித உயிர்கள், காஷ்மீர் மக்களின் இன்னல், இந்திய இராணுவத்திற்கு இந்த பிரச்சனையின் காரணமாக செலவிடப்படும் பெரும் தொகை என்று இன்றைக்கும் இந்தப் பிரச்சனை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் இன்று இது தேசத்தின் கொளரவ பிரச்சனையாகி தீர்வு காண முடியாத சிக்கலான விடையமாகி விட்டது. 1948ல் தீர்க்கப்பட்டிருக்க வேண்டிய பிரச்சனை 2005 வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதில் பாதிக்கப்பட்டுள்ள காஷ்மீர் மக்களின் நிலை தான் பரிதாபமானது. அவர்களுக்கு வேண்டியது நிம்மதியான வாழ்க்கை. காஷ்மீர் இரண்டாக துண்டிக்கப்பட்டதால் பக்கத்து ஊர்களில் கால்நடையாக சென்று தங்கள் உறவினர்களை பார்த்து விடக் கூடிய தூரத்தில் இருந்த காஷ்மீர் மக்கள் தூண்டிக்கப்பட்டு விட்டனர். தங்கள் உறவினர்களை இன்று பாஸ்போர்ட், விசா போன்றவற்றை பெற்று தான் பார்க்க வேண்டிய நிலை. அதை பெறுவதற்கு தேவைப்படும் பணம். பெறுவதில் உள்ள சிக்கல். குறைந்தபட்சம் தங்கள் சொந்தங்களை சுலபமாக பார்க்க கூடிய சலுகையையாவது எதிர்பார்க்கின்றனர்.

பாக்கிஸ்தான் அதிபர் முஷ்ரப் இந்த பிரச்சனையை மன்மோகன் சிங் பிரதமராக இருக்கும் பொழுதே தீர்த்து விட வேண்டும் என்று கூறுகிறார். இந்தப் பிரச்சனை தீர்க்க கூடிய பிரச்சனை தானா ? என்ன தீர்வு உள்ளது இந்தப் பிரச்சனைக்கு ?

இப்படி ஆகுமென கூறுகிறாரோ?
 



பிருந்தன், பஸ்தூன் பழங்குடிகளின் படையெடுப்புக்கு பின் ஹரி சிங் இந்தியாவிடம் உதவி கோரிய போது படேலின் கருத்துக்களை நேரு புறக்கணித்ததாலேயே காஷ்மீர் விவகாரம் பின்னாளில் விகாரமானது என்பதாக அறிந்திருந்தேன். அது பற்றி பிறிதொரு நாள் எழுதுவதாக உத்தேசம். அதற்கு பிந்தைய காலகட்டம் குறித்த உங்களின் விளக்கமான கருத்துக்கு நன்றி. எப்படியிருப்பினும் காஷ்மீர் ப்ரச்னை ஆனதற்கு நேரு முக்கிய காரணம் என்பதில் நம் இருவருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.

வைகோவின் பேச்சில் இருக்கும் எழுச்சியை நான் ரசிப்பவன். ஆனால் பலாலி விமான தளத்திற்க் இந்தியா உதவி செய்தால் தமிழகம் காஷ்மீர் ஆகும் என்று அவர் சொல்லும் போது, தற்போதைய காலகட்டத்தில் அது வேறு விதமான தோற்றத்தையே தருகிறது. அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை தெளிவாக சொல்ல வேண்டும் என்பதே என் கருத்து.
 



முதல் பாதி முகமூடிக்கே உரிய நக்கல்..அத விடுங்க...இரண்டாவது பாதியில
விடுதலைபுலிகளுக்கும் தாலிபான்களுக்கும் தொடர்பு ஒரு போடு போடறாரு பாருங்க..அங்க தான் நிக்கறாரு முகமூடி...
ஈழத்தை சேர்ந்த நண்பர்கள்(விடுதலைபுலிகளை ஆதரிப்பவர்கள்) அதற்கு பதில் கூற கண்டிப்பாக கடமைப்பட்டவர்கள்.இது பற்றி இணைய ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
 



சரியா தவறா என்பது வேறு...ஆனால் வைகோ என்ன சொல்ல வருகிறார் என்று உண்மையிலேயே முகமூடிக்கு புரியவில்லையா?அவரோட இமேஜுக்கு ஏத்த மாதிரி டான்ஸ் ஆடறாரு.. அவ்ளோதான்...நீங்களே சொன்ன மாதிரி அனுபவிக்கனும்..ஆராயக்கூடாது....

//ஹரி சிங் இந்தியாவிடம் உதவி கோரிய போது படேலின் கருத்துக்களை நேரு புறக்கணித்ததாலேயே காஷ்மீர் விவகாரம் பின்னாளில் விகாரமானது //



அந்த படேலின் கருத்துகள் என்ன என்பதையும் சுருக்கமாக போடுங்கள் முகமூடி...தெரிஞ்சுக்குவோம்.
 



முத்து இப்ப கொஞ்சம் சுருக்கமா :: ஹரி சிங்கிற்கு காஷ்மீரை இந்தியாவுக்கோ பாகிஸ்தானுக்கோ தருவதற்கு விருப்பமில்லை என்றாலும், 1947 செப்டம்பரில் காஷ்மீரை இந்தியாவோடு இணைவதற்கு உடன்படுகிறார். ஆனால் நேருவுக்கு முதலில் தன் நண்பர் ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டு காஷ்மீரின் பிரதம மந்திரியாக்க வேண்டும் என்பது விருப்பம். இதற்கு ஹரி சிங் உடன்படவில்லை.

அக்டோபரில் கொலை, கற்பழிப்பு, சூறையாடல் என்று களேபரமாக கூலிகள் காஷ்மீருக்குள் நுழையும் போது, வேறு வழியில்லாமல் அக்.26 அன்று இணைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட உடன்படுகிறார் ஹரிசிங். அதே நாளில் தில்லியில் மவுண்ட் பேட்டன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நடந்ததை மானெக் ஷா சொல்கிறார் : "நேரு வழக்கம் போல யுனைடெட் நேஷன்ஸ் செல்வது பற்றி பேசுகிறார். சவ சவ என்று பேசிக்கொண்டே போகிறார், படேல் "ஜவஹர்லால், உங்களுக்கு காஷ்மீர் வேண்டுமா வேண்டாமா" என்று கடுப்பாகும் வரை". அதற்கு பின்பு இந்தியப்படைகள் காஷ்மீர் சென்ற போது கூலிகள் ரொம்ப தூரம் வந்திருந்தனர்.

1947 டிசம்பரில் படேலின் கடும் எதிர்ப்பையும் மீறி ராணுவ நடவடிக்கை இல்லாமல் காஷ்மீர் விவகாரத்தை UNக்கு கொண்டு செல்வது என்ற முடிவு எடுக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் நேருவுக்கு மவுண்ட்பேட்டன் தம்பதியிடம் இருந்த பாசம். இந்த நடவடிக்கையிலிருந்து மாநிலங்களை இணைக்கும் பணியின் இரும்பு மனிதரான பட்டேல் இணைப்பு விவகாரத்திலிருந்தும் ஒதுக்கப்படுகிறார். இச்சமயத்தில் அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்தது காந்தியின் குறுக்கீட்டினால் தடுக்கப்படுகிறது. பட்டேல் காஷ்மீர் விவகாரத்திலிருந்து விலகியது (விலக்கப்பட்டதே) நிலைமை நினைத்து பார்க்க முடியாத அளவு மோசமானதற்கு காரணம். சர்தார் படேல் சொல்வது போல் "If Jawaharlal Nehru and Gopalaswamy Iyanger had not made Kashmir their close preserve separating it from my portfolio of Home & States I would have tackled the issue as purposefully as I had already tackled the Hyderabad problem."

***

// வைகோ என்ன சொல்ல வருகிறார் என்று உண்மையிலேயே முகமூடிக்கு புரியவில்லையா? //

எனக்கு புரியிறது இருக்கட்டும். அந்த ஸ்டேட்மெண்ட படிச்சதும் உங்களுக்கு என்ன புரிஞ்சிதுன்னு சொல்லுங்க..
 



முகமூடி,

//எனக்கு புரியிறது இருக்கட்டும். அந்த ஸ்டேட்மெண்ட படிச்சதும் உங்களுக்கு என்ன புரிஞ்சிதுன்னு சொல்லுங்க.. //

என்னுடைய அதே கேள்வியின் அடுத்த வரியை படிக்கவும்


//1947 செப்டம்பரில் காஷ்மீரை இந்தியாவோடு இணைவதற்கு உடன்படுகிறார். ஆனால் நேருவுக்கு முதலில் தன் நண்பர் ஷேக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டு காஷ்மீரின் பிரதம மந்திரியாக்க வேண்டும் என்பது விருப்பம்//

Some confusion..he was under custody already for any reason?
 



ஓ.. நான் கூட அகதிகள் விஷயமாகத்தான் பேசுகிறார் என்று தப்புக்கணக்கு போட்டுவிட்டேன்..

இப்பத்தான் இது வைகோவின் குரல் என்ற பதிவை பார்த்தேன்..
அதில் வைகோ சொன்னதாக ::

"எங்களுக்கு வன்முறை மீது நம்பிக்கை இல்லை. ஆனால் சிறிலங்காவுக்கு நீங்கள் உதவி செய்தால் எங்கள் தமிழ்நாட்டு இளைஞர்களைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாடு இன்னொரு காஸ்மீரமாகிவிடும். இதை அப்படியே அந்த அதிகாரிகளுக்குச் சென்றடையுமாறு குறிப்பெடுத்து அனுப்புங்கள்"

இதை விட பொறுப்பில்லாமல் கேனத்தனமாக பேச முடியாது.
 



// he was under custody already for any reason? //

ஹரி சிங்கால் ஷேக் அப்துல்லா சிறை வைக்கப்பட்டிருந்தார். தன் ரத்தம் (அரசியலில் முதல் உபிச?) என்று நேருவால் அழைக்கப்பட்ட இவரை விடுவிக்க நேரு அடித்த ஸ்டண்ட் - நுழைவதற்கு தடை செய்யப்பட்ட காஷ்மீருக்குள் சென்றே தீருவேன் என்று நேரு ஒரே அடம் - இன்னொரு கூத்து.
 



//இந்த பிரச்சனையின் காரணமாக இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் நடந்த 4 போர்கள்//

இரண்டு போர்கள் மட்டுமே காஷ்மீருக்காக நடைபெற்றன.

1971ல் நடந்த போர் பங்களாதேஷுக்காக நடைபெற்றது, 1998ல் கார்கில் போர் கொஞ்சம் லடாக்கிலும் கொஞ்சம் காஷ்மீரிலும் நடந்த்து.
 



சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவி வழங்குவதை யார் எதிர்த்தாலும் அவர்கள் 'கொள்கை' அளவில் முகமூடிக்கு எதிரிகளே என்று தெரிந்ததால் வை.கோ. வின் பேச்சுக் குறித்த உங்கள் பதிவையிட்டு ஆச்சரியமில்லை. காஷ்மீர் என்ற உவமானம் குறித்த உங்கள் விளக்கம் அருமை.

கடைசிப்பத்தியில் குறிப்பிட்டிருக்கும் செய்தி தொடர்பாக....
அமெரிக்காதான் புலிகளுக்கு ஆயுதங்கள் வழங்குகிறது, பணமும் வழங்குகிறது, அவர்களை வழிநடத்துகிறது என்றுகூட இணையத்தில் குறிப்பாக தமிழ்மணத்தில் அங்கத்துவமாயிருக்கும் வலைப்பதிவுளிற்கூட சொல்லப்படுகிறது (ஆம். மின்னஞ்சல் முகவரியோடுதான்). இதுபற்றியும் ஆராயலாம். சுவாரசியமாகவிருக்கும்.

பெண்கள் விபச்சாரம் செய்துதான் புலிகளுக்குப் பணம் சேர்க்கிறார்கள் என்பதுவரை பலவாறான 'கதைகள்' ஏற்கெனவே உலவவிடப்பட்டன. ஆகவே இப்போது வந்த கதை ஆச்சரியத்துக்குரியதன்று. நேபாளப்போராளிகளுக்குப் புலிகள் பயிற்சி கொடுத்தார்கள் என்பதுமுதல், பயிற்சி கொடுத்த கதைகளும் பலவுண்டு. செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் புலிகள் தான் பயிற்சி கொடுத்தார்கள் என்று சிங்கள அரசு சொன்னதுவரைகூட ஆராயலாம்.

இவற்றின் பின்னாலுள்ள பொய்களுக்கப்பால், இந்தப் பயிற்சிகொடுத்த கதைகளைக் கேட்கும்போது இனம்புரியாமலேயே (பெருமையில்?) புல்லரிப்பதென்னவோ உண்மைதான்;-)
---------------------------------
முத்து,
புலிகளின் 'வால்பிடிகள்' இதற்குப் பதில்கூறவேண்டிய பொறுப்புள்ளவர்களாக உங்களாற் பார்க்கப்படுவதன் காரணமென்ன? வீரப்பனுக்குப் பயிற்சி கொடுத்தது தொடர்பாகக்கூட பதில்கூறச்சொல்லிக் கேட்பீர்களோ என்னவோ?
---------------------------------
இது வால்பிடியின் பதிலன்று.
 



முகமூடி,

நேரு அடித்த கூத்துக்கள் இன்ட்ரெஸ்டாக உள்ளது...

வன்னியன்,

நீங்கள் சொன்ன விஷயங்களுக்கு நன்றி....நான் விடுதலைபுலிகள் மேல் மரியாதை உள்ளவன்.ஆனால் அவர்கள் மேல் குற்றச்சாட்டுக்கள் வரும்போது அது என்ன, ஏன் என்று தெரிந்துக்கொள்ள ஆர்வமும் கொண்டவன். சிலர் ஆதாரம் உள்ளது என்று உரல் எல்லாம் கொடுக்கும்போது அதற்கு விடுதலைபுலிகளின் பதில் என்ன என்று தெரிந்துக்கொள்ள ஆசைபடுகிறேன்.இதில் தப்பு இருப்பதாக எனக்கு தோன்றவில்லை..
வைகோவை பற்றிய விமர்சனத்தை விட இதுதான் முகமூடியின் தீவிரமாக குற்றச்சாட்டு என்று எனக்கு படுகிறது.

இதற்குமுன் வந்த எத்தனையோ ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை போலத்தான் இதுவும் என்றால் எனக்கு சந்தோஷம்தான்.(வால்பிடிகள் என்ற வார்த்தையை நான் ஆட்சேபிக்கிறேன்).
 



பெரும்பான்மை மதத்தவரின் வகுப்புவாதம் தேசபக்தி என்ற முகமூடியுடன் வெளிப்படும் என்று சொன்ன ஜவாஹர்லால் நேருவின் கூற்றை கஷ்டபட்டோ (அ) படாமலோ நிரூபிக்கிற உங்களுக்கு நன்றிங்க.!
 



முத்து,
பதிலுக்கு நன்றி.

விடுதலைப் புலிகளின் கருத்தென்பதற்கும் அவர்களை ஆதரிப்பவர்களின் கருத்தென்பதற்கும் 'பலமான' வித்தியாசமுண்டல்லவா? ஆதரிப்பவர்கள் எப்படி விடுதலைப்புலிகளின் கருத்தைப் பிரதிபலிக்க முடியும்?
'இந்தியத் தமிழர்'களின் கருத்தை வைத்து, அதுதான் இந்தியாவின் கருத்தென்று எடுக்க முடியுமா? மேலும், குறிப்பிட்ட சிலவற்றில் புலிகளை விமர்சித்துக்கொண்டே அவர்களை ஆதரிக்கும் சாத்தியக்கூறை மறுக்க முடியுமா? ஆதரவாளர்களிடையேகூட மேற்சொன்ன செய்தியைப் பற்றி மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாமென்ற நிலையிருக்கிறது.

மேற்சொன்ன 'தொடர்பு'க்கதை என்னைப்பொறுத்தவரை புறந்தள்ளக்கூடிய 'கதை'. அவ்வளவுதான். தேவைப்படுபவர்கள் தூக்கிவைத்துக்கொள்கிறார்கள். சிலர் சந்தேகம் கொள்கிறார்கள். சிலர் உண்மையென்றே நம்புகிறார்கள். நான் நம்பவில்லை என்பதைத்தவிர இது தொடர்பில் சொல்ல வேறெதுவுமில்லை. இதையெல்லாம் மறுக்க, ஆளாளுக்கு நாங்களும் புலனாய்வு அமைப்புக்களையல்லவா வைத்திருக்க வேண்டும். (எனக்கென்னவோ பெயர் வெளியிட விரும்பாத புலனாய்வு அதிகாரி என்ற பெயரும், ஒரு மின்னஞ்சல் முகவரியும் இருந்தாலே போதுமானதாகப்படுகிறது இப்போது:-) )நான் சொன்னதை வைத்துக்கொண்டே அதைப் பொய்யென்று நம்ப உங்களாலும் முடியாது. ஆகவே இதுதொடர்பில் மேலும் கதைக்க எதுவுமில்லை.

------------------------------
முகமூடி தந்த இணைப்பை வைத்து சும்மா ஒரு கருத்து மட்டும்...
உலக வல்லரசுகள், பிராந்திய வல்லரசு என்பவற்றின் கழுகுப்பார்வைக்கிடையால்தான் ஆயுதங்களைத் தங்களுக்கென்று பெற்றுக்கொள்கிறார்கள் புலிகள். (இதை ஏற்றுக்கொள்ளாதவர்கள், 'அமெரிக்காதான் புலிகளைப் போசி(ஷி)க்கிறது' என்று சொல்லும் வகையைச் சேர்ந்தவர்கள்) இதில் இந்தியா நேரடியாகவே மிகமூர்க்கமாக புலிகளின் ஆயுதக்கொள்வனவையும் விநியோகத்தையும் எதிர்க்கிறது. பலதடவை தாக்கியும் அழித்திருக்கிறது. இப்படியான நிலையில் இன்னொரு தரப்பிற்கு, அதுவும் உலகில் மிகமோசமாகத் தேடப்படும், கண்காணிக்கப்படும் ஒரு தரப்புக்கு தங்கள் கொள்வனவுப் பொறிமுறை, விநியோகப் பாதைகள் என்பவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், பயன்படுத்த விடவும் புலிகள் அடிமுட்டாள்களில்லையென்பது என் கணிப்பு. இந்த விசயத்தில் அப்படியிருந்திருந்தால் எப்போதோ புலிகள் தோற்கடிக்கப்பட்டிருப்பர்.

மேற்சொன்ன செய்தி பொய்யாயிருப்பதில் மகிழ்ச்சியோ, மெய்யாயிருந்தால் வருத்தமோ கொள்ளும் நிலையில் நானில்லை. மாறாக, இச்செய்தியை வைத்து புலிகளை, தமிழ்மக்களின் போராட்டத்தை ஒடுக்க ஏகாதிபத்தியங்கள் முயலாமலிருக்க வேண்டுமென்பதே என் அவா.
 



தமிழ்த் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தை முறியடிக்க, சர்வதேச சக்திகளின் மற்றொரு சதி முயற்சி! – military balance 2005 – 2006 வெளிட்டுள்ள விடயங்கள்.

www.tamilsociety.com இல் இது தொடர்பான விடயங்கள் உள்ளன.
 



வன்னியன்,

"சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவி வழங்குவதை யார் எதிர்த்தாலும் அவர்கள் முகமூடிக்கு எதிரிகள்"... பழைய என் பதிவுகளை கண்டிருக்கிறீர்கள் என தெரிகிறது. இது போன்று பேச்சு வரலாம், ஆனால் என் கருத்து அதைப்பற்றியதல்ல என்பதற்காகவே நான் கவனமாக வைகோவின் தமிழகம் காஷ்மீர் ஆகும் என்ற கருத்தை பற்றிய அல்லாத மற்ற விஷயங்களை பற்றி கருத்தொன்றுமில்லை என்றேன்.

தமிழகத்து இளைஞர்கள் ஆயுதமேந்தி தமிழகத்தை காஷ்மீர் போன்று ஆக்குவார்கள் என்று எதிர்காலத்தில் தமிழகத்தை ஆளும் ஆவல் கொண்ட தலைவன் ஒருவன் மத்திய அரசை எச்சரிக்கை செய்கிறான். எதற்காக? பலாலி சீரமைப்புக்கு இந்தியா உதவி செய்தால். இதை அபத்தக்களஞ்சியமாக பார்க்க "எதிரி" என்ற நிலைப்பாடெல்லாம் தேவையில்லை. சும்மா பார்வையாளனாக இருந்தாலே போதும். வெறும் வாளும் வேலும் கொண்டு தமிழகத்தை காஷ்மீராக்க முடியாது? இளைஞர்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் தேவைப்பட்டால் என்ன செய்வதாக உத்தேசமாம்? அதற்கும் திட்டம் இருக்கிறதாமா வைகோவிடம்?

*

விடுதலைப்புலிகளை ஆதரிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் நூற்றுக்கணக்கில் வலைத்தளங்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் நான் இங்கு குறிப்பிட்டது ஏசியன் டைம்ஸ் என்ற அப்போதைய அச்சு, இப்போதைய இ-பத்திரிக்கையில் வந்த செய்தியை பற்றி. இது உங்களுக்கு புறக்கணிக்கக்கூடிய விஷயமாக இருக்கலாம். ஆனால் இது போன்ற விஷயங்களை கவனிக்க, கண்காணிக்க வேண்டியவர்களுக்கு பயன்பெறலாம். அவர்கள் இதற்கு விளக்கம் கூறினால் அறிந்து கொள்வதில் தவறொன்றுமில்லையே.

*

// இன்னொரு தரப்பிற்கு, அதுவும் உலகில் மிகமோசமாகத் தேடப்படும், கண்காணிக்கப்படும் ஒரு தரப்புக்கு தங்கள் கொள்வனவுப் பொறிமுறை, விநியோகப் பாதைகள் என்பவற்றைப் பகிர்ந்துகொள்ளவும், பயன்படுத்த விடவும் புலிகள் அடிமுட்டாள்களில்லையென்பது என் கணிப்பு // ஆயுதத்திற்காகவும் பணத்திற்காகவும் மட்டும் தாலிபான்களுடன் கூட்டு வைத்துக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும் என்று கருத்து வருவதற்கு முன் இது போன்ற கருத்தை தந்ததற்கு நன்றி.
 



இதுக்கு முன்னாடி தான் ஒரு பதிப்பு போட்டிருந்தீர்கள். எப்பொருள் யார் யார் வய் கேட்பினும்னு...

" ஒரு இனத்தின் அடிப்படை உரிமையான சுதந்திரமும் அது தொடர்பான செயற்பாடுகளும்" அதை மறுதலிக்கிற கூட்டத்திற்கு எப்போதும் உவப்பானதாக இருப்பதில்லை. அவர்கள் பார்வையின்'உண்மைகளை' சுதந்திரத்துக்காகப் போராடும் இனத்துக்கான எதிர்ப்புக்களை காட்டத்தான்.. சொல்லத்தான் செய்வார்கள். அப்படியான 'உண்மைகளை' சொன்னவர்களுடமே அதன் நம்பகத்தன்மையை விசாரித்தறிவது தான் சரியானது.

சுதந்திர இந்தியாவின் போராட்டக் காலத்திலும் அதன் பின்னால் வந்த மத்திய அரசுகளின் "நேர்மை " பற்றியும் அவை வழங்கும் "சமநீதி " பற்றியும் இந்தியக் குடியரசுக்குள் வாழுகின்ற பல இனங்களிடையே கேள்விகள் இருப்பது அங்கு இன்றும் இருந்து கொண்டிருக்கின்ற அதிருப்திகளிலிருந்தும் போராட்டங்களிலிருந்தும் நாங்கள் அறிந்து கொண்டிருக்கின்றோம். (ஒரு காலத்தில் தமிழ் நாட்டிலும் இருந்தது)

ஒரு சாராருக்கு சரி எனப் படுவது மறு சாராருக்கு அவர்களின் இருப்பு தொடர்பான கருது கோள்களுக்குப் பிழையானதாகப் படலாம். காஷ்மீர் தொடர்பான நேருவின் கருத்துகளும் காஸ்மீர் வாழ் முஸ்லீம் மக்களின் கருத்துகளும் இதற்கு நல்ல உதாரணங்கள்.

முகமூடி, வைகோவின் கருத்துக்கள் பற்றி நீங்கள் அவரிடம் தான் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். விடுதலைப் புலி வால்பிடிகளை விட நீங்கள் மிக அவர் அருகிலேயே இருக்கிறீர்கள். (வால்பிடி உங்கள் கருத்து இல்லாவிட்டாலும் இங்கு பாவிக்கப் பட்டதனால் அதை எடுத்துக் கொண்டேன்)

மற்றவர்களின் கருத்தை அறிவதற்கு முன் தமிழீழ மக்களின் சுதந்திரப் போராட்டம் பற்றியும் அதை முன்னெடுத்து வரும் விடுதலைப் புலிகள் பற்றியுமான உங்கள் கருத்தை முதலில் தெளிவு படுத்த வேண்டும்.

உலக வல்லரசுகளினதும் பிராந்திய வல்லரசுகளுனதும் மேலாதிக்கப் போட்டிகள் தான் இன்று உலகின் இத்தனை நெருக்கடிகளுக்கும் காரணம் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்களா?

எங்கள் முதுகில் இருக்கும் அழுக்கை மறந்து விட்டு மற்றவர் முதுகில் இருக்கும் அழுக்கை சுரண்டுவது எப்போதும் சுகமான பொழுது போக்கு.

பிற்குறிப்பு: சுப்பிரமணிய சுவாமியைத் தொடர்ந்து கவனித்து வந்தால் நிறைய 'ஆதாரபூர்வமான' தகவல்கள் உங்களுக்கு புலி எதிர்ப்பு சம்பந்தமாக கிடைக்கக் கூடும்.
 



முகமூடி,
உங்களை வலைப்பதிவில் முதன்முதல் வரவேற்றதே நான் தானென்று நினைக்கிறேன். (இதெல்லாம் பெருமைக்காக இல்லை. சும்மா.... ஏறத்தாள உங்கள் முழுப்பதிவையும் வாசித்திருக்கிறேன் என்பதற்காக.) குறிப்பிட்ட இரண்டு பதிவிலேயும்கூட பின்னூட்டங்களும் அதன் தொடர்ச்சியாக என் பக்கத்தில் தனிப்பதிவுமே போட்டிருக்கிறேன். நீங்கள் 'பொடா' போட்டுவிட்டதால் அதைவைத்து மேலதிகமாக எதுவுமில்லை. இருந்தாலும், இக்கருத்து மட்டில் எந்தளவுக்கு உங்களோடு கருத்தாடலாமென்பதற்கு அப்பழைய பதிவுகள் உதவும்.

மேலும், வை.கோ.வின் 'தமிழகம் காஷ்மீராகும்' என்ற கூற்று என்னைப் பொறுத்தவரை கேலிக்கிடமானதாகவே படுகிறது. அது சாத்தியமில்லையென்பது என்கணிப்பு. பலாலிக்கு உதவுவதால் அப்படியொரு நிலை வரக்கூடுமென்றால் எப்போதோ அது வந்திருக்க வேண்டும்.

அநாமி, உங்கள் தகவல்கள் ஆச்சரியமாக இருக்கிறது.
முஸ்லீம்களை வடக்கிலிருந்து கலைத்ததற்கும் அவர்கள்மேல் நடத்தப்பட்ட வன்முறைகளுக்கும் பழிவாங்க, நீங்கள் மேற்சொன்ன இயக்கங்கள் புலிகளுடன் பொருதுவார்கள் என்றல்லவா நினைத்திருந்தேன். நீங்கள் கூட்டாளியாக்கி விட்டீர்களே?
 



இந்தப் பதிவு மற்றும் பின்னூட்டங்கள் பற்றிய என் கருத்துக்கள்

1. தமிழகம் எக்காரணத்தாலும் காஷ்மீர் ஆகாது. ஆனால், இதற்கு முகமூடி கூறுவது போல் ("வெறும் வாளும் வேலும் கொண்டு தமிழகத்தை காஷ்மீராக்க முடியாது? இளைஞர்களுக்கு அதி நவீன ஆயுதங்கள் தேவைப்பட்டால் என்ன செய்வதாக உத்தேசமாம்? அதற்கும் திட்டம் இருக்கிறதாமா வைகோவிடம்?") ஆயுதமேந்தி போராட இயலாதவர்கள் என்ற காரணங்களெல்லாம் இல்லை. If Naxals in Andhra can do it, why not the people of Tamil Nadu? பெரும்பாலான தமிழகத்தினர் தங்களை இந்தியர்களாக உணருகிறார்கள். இந்தியாவின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கு ஒரு தமிழரைக் கண்டு விட முடியும் என்பதே இதற்கு ஆதாரம். அதாவது, இந்தியா என்னும் மைய நீரோட்டத்தில் கலந்து விடவே பெரும்பாலான தமிழர்கள் விரும்புகிறார்கள். ஆகவே, இந்தியாவிலிருந்து விலகி தனி நாடு கோரும் இயக்கம் எதுவும் இன்றைய நிலையில் சாத்தியமாகும் அறிகுறி எனக்குத் தெரியவில்லை.

2. காஷ்மீர் பிரச்சினைக்கு படேலின் தீர்வு - ஹைதராபாத் விஷயத்தில் பெரும்பான்மை மக்களின் விருப்பம் இந்தியாவோடு இணைவதே. விடுதலை இயக்கம், காங்கிரஸ், ஆகியவை, இங்கும் கிளை விட்டுப் பரவியிருந்தன. Even today, people are fiercely patriotic and will wave the national flag in public, for any small excuse :) இந்நிலையில் படேலின் அணுகுமுறைக்கு ஒரு நியாயம் இருந்தது. அதே அணுமுறையை அவர் காஷ்மீர் விவகாரத்திலும் கடைபிடித்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாகியிருக்க வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால், அங்கு மக்களிடையே விடுதலை உணர்வு அதிகம். அதைக் கடந்து, அவர்களை அடக்கி ஒடுக்கி அவர்கள் மீது ஆட்சி செலுத்த முயன்றால் மேலும் கசப்புணர்வே மிஞ்சும். இன்றைய நிலையில், காஷ்மீரிகளுக்கு கொஞ்ச நஞ்சமாவது தனியுரிமையும் சுயமரியாதையும் மிஞ்சியிருக்கிறது (ஆக்கிரமிப்பு நிலையிலும்). அதுவே நேருவின் சாதனையாகும்.
 



This comment has been removed by a blog administrator.
 



டோண்டு சோன்னதையே நீக்கீட்டீங்களா? இது அசலா? போலியா?
 



திரு முகமூடி,

தமிழகம் காஷ்மீர் ஆவது என்று நீங்கள் நினைக்கும் திசையில் ஆகாது.
அது சற்றே கண்களை திறந்து வைத்திருக்கும் மக்களுக்கு எங்கிருந்து ஆபத்து வரும் என்று நன்றாகவே தெரியும்.
அது தெரிந்தாலும் கண்களை இறுக்க மூடிக்கொண்டு, பொலிடிகலி கரெக்ட் கத்தியால் கண்ணை குத்திக்கொண்டு, பாகிஸ்தானின் இஸ்லாமிய மதவெறி அமைப்பு லஷ்கர் ஈ தொய்பா பங்களூரில் குண்டு வெடிப்பதற்கு இந்திய அரசு பயங்கரவாதம்தான் காரணம் என்று உளறுபவர்களுக்கு விடிவுகாலம் இல்லை.
ஆனால் என்ன செய்வது?
அப்படி பேசினால்தான் முற்போக்கு என்று ஒப்புக்கொள்வார்கள் என்று இன்னொரு திசையில் மூளைச்சலவை ஆகிக்கிடக்கிறது.
தமிழகம் காஷ்மீர் ஆவதற்கு இன்னும் சில வருடங்கள் செல்ல வேண்டும். சவூதியிலிருந்து மதமாற்றம் செய்ய வரும் பணம் இன்று தொலைக்காட்சியாகவும், ஏசி கார்களாகவும் தீவிர பிரச்சாரகர்களாகவும் விரிந்திருக்கிறது. இந்த மதமாற்றம் மற்ற மதமாற்றங்கள் போல அல்ல என்பதை காலம் சென்று காஷ்மீர இந்துக்கள் உணர்ந்தார்கள். அதே போல அமைதி இஸ்லாம் என்று ஏதும் இல்லை என்பதையும் தாய்லாந்து மக்கள் காலம் சென்ற பின் உணர்ந்தார்கள். மாடரேட் இஸ்லாம் என்று ஏதும் இல்லை என்று காலம் சென்றபின்னர் பங்களாதேஷ் இந்துக்கள் உணர்ந்தார்கள்.

மற்ற மதங்கள் போல இஸ்லாம் இல்லை என்று படித்துப்படித்து சொல்கிறேன். எல்லோரும் காதுகளை மூடிக்கொண்டு நநநந என்று கத்துகிறார்கள்.

அவ்வாறு தமிழர்களுக்கு காலம் சென்று புத்தி வரக்கூடாது என்பதற்காகத்தான் நான் ப்ளாக் எழுதுகிறேன்.
இந்த மதமாற்றம் கிரிடிகல் மாஸை நெருங்கும்போது பல திசைகளில் வன்முறையாகவும் வெடிகுண்டுகளாகவும் வெடிக்கும். கேவலம், சுமார் 2000 மூளை சலவை செய்யப்பட்ட காஷ்மீர் இஸ்லாமிய தீவிரவாதிகளை இந்திய ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை என்பதை தமிழர்கள் மறந்திவிட்டார்கள். இஸ்லாமே உலகை ஆளும் என்று மூளை சலவை செய்யப்பட்ட ஒரு கும்பல் தன் எண்ணத்துக்கு மற்ற முஸ்லீம் இளைஞர்களையும் மாற்றி வருகிறது.

முஸ்லீம் பேராசிரியர்களும், பொறியியலாளர்களும், மருத்துவர்களும் இப்படிப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு துணையாக இருந்திருக்கிறார்கள் என்று செய்திகள் வந்தாலும், எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு பொலிடிகலி கரெக்ட் பிண்ணாக்கு பேசுகிறார்கள்.

சில சமயங்களில் எரிச்சல்தான் மிஞ்சுகிறது. முகத்தில் அறைந்தாலும் ஹி ஹி என்று இளித்துகொண்டு நீ என்னை அறைவதற்கு காரணம் அரச பயங்கரவாதம் தான் என்று அடித்தவனை சப்பைக்கட்டு கட்டுபவர்களை "வேணும் உங்களுக்கு" என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

சமீபத்து பதிவு

மலேசியாவில் மூர்த்தியின் மரணம் சொல்லும் சேதி
 



இளந்திரையன், தங்கள் கருத்துக்கு நன்றி. தமிழீழ மக்களின் சுதந்திரப்போராட்டம் பற்றியும் அதை முன்னெடுத்து வரும் விடுதலைப்புலிகள் பற்றியுமான என் கருத்தை சொல்ல ஆசைதான்...
பல்வேறு குழுக்களாக போராடி முதலில் சுதந்திரம் என்பது முக்கியம் என்பதாக, அதை வாங்கிவிட்டு பின்பு அதிகாரத்தை குறித்த யோசனைக்கு புலிகள் வந்திருக்கலாமோ என்று எனக்கு தோன்றியது. நல்லதோ கெட்டதோ புலிகளின் நடவடிக்கை மட்டுமே ஒரு இன மக்களின் எதிர்காலமாக அமைந்துவிட்டது பாக்கியமா அபாக்கியமா என தெரியவில்லை. இதை ஒரு கோர்வையாக நான் நினைப்பதைத்தான் படிப்பவரும் புரிகிறார் என்ற அளவில் சொல்ல இயலுமா என தெரியவில்லை... அந்த அளவு புலி வரலாறும் எனக்கு தெரியாது. ஆகவே இப்போதைக்கு மௌனமே சிறந்தது. முதலில் ஈழ மக்களுக்கு ஒரு எதிர்காலம் அமைய வேண்டும். பிறகு புலிகளை பற்றி சுதந்திரமாக பேசலாம்.

இதற்கு முன் புலிகள் குறித்த பேச்சு வந்த போது மு.மயூரன் பதிவில் நான் எழுதிய பின்னூட்டத்தை மட்டும் தற்போதைக்கு இங்கு தருகிறேன்.

மயூரன் அழகாக சொல்லியிருக்கிறீர்கள்... இந்தியா என்ற நாடு தன்னுடைய நலனுக்காக செய்யும் ஒரு செயலாகவே இலங்கைக்கு செய்யும் உதவியை கருதினேன்.. அதற்கான என்னுடைய யூகத்தையும் கூறினேன். உடனே நீ தமிழர்கள் உயிரிழப்பதை விரும்புகிறாயா?? ஆயுதங்கள் கொல்லத்தானே வருகின்றன?? நீ ஒரு புலி எதிர்ப்பாளனா என்றெல்லாம் என்னை சிலர் கேட்டால் அதற்கு என் பதில் மௌனமாகத்தான் இருக்கும்... ஒரு காலத்தில் எங்கள் புலி நிலைப்பாடு வேறு, இப்போது காலம் வேறு. இந்திய பிரஜை - முக்கியமாக தமிழக பிரஜை புலிகளை ஆதரித்து பேசுவது சட்ட விரோதம். நான் முதலில் இந்திய பிரஜை. என் தனிப்பட்ட விருப்போ வெறுப்போ இங்கு முக்கியமில்லை. ஆகையால் நான் சொல்லும் கருத்துக்களில் என் தனிப்பட்ட நிலைப்பாட்டை பற்றி கவலை கொள்ளாமல் கருத்தை மட்டும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

மேலும் சிலர் புலிகளை எதிர்த்தால் அவர்கள் ஏன் அப்படி சொல்லுகிறார் என்று கேட்காமல் அவர்களை உடனே ஈழத்தமிழர் எதிர்ப்பாளர் என்று எப்படி முத்திரை குத்துகின்றனர். இந்த நிலை வரவேண்டும் என்றுதான் புலிகள் தங்களுக்கு எதிராக அல்ல, மாற்றாக கூட யார் வளர்ந்தாலும் அவர்களை தங்கள் சட்டப்படி காலி பண்ணிவிடுகிறார்களா? (சிறீசபாரத்தினம், பத்மனாபா எல்லாம் ஈழத்தமிழர் நலனுக்கு எதிரானவர்களா, அல்லது ஈழத்தமிழர் நலன் என்றால் இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று வகுக்கப்பட்ட புலிகளின் சித்தாந்தங்களுக்கு எதிரானவரா) எல்லோருமே புலிகளை மட்டுமே கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும் என்று ஏன் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். புலிகளை பிடிக்காமல் ஈழத்தமிழரை நேசிப்பது சாத்தியமற்றதா? இந்த கேள்வியெல்லாம் கேலி பேசுவதற்காக கேட்பது அல்ல... உங்கள் இந்த பதிவை போலவே நிதானமாக நீங்களோ அல்லது வேறு யாராவதோ தெளிவு படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையிலேயே.

*

மற்றபடி சையது சலீம் சாஜாத் சாமான்யப்பட்டவர் அல்ல என்கிறார் அநாமி. ஆகவே இவரை சுசாமியோடு ஒப்பீடு செய்வது குறித்து நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
 



வன்னியன், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது உங்கள் முதல் பின்னூட்டம். அட எப்படிடா இவருக்கு நாம ஒரு பதிவு எழுதியிருக்கோம் என்று தெரிந்தது என வியந்தேன். வை.கோ.வின் 'தமிழகம் காஷ்மீராகும்' என்ற கூற்று என்னைப் பொறுத்தவரை கேலிக்கிடமானதாகவே படுகிறது இத இதத்தான் நானும் சொன்னேனுங்கோ...

*

தகவல்களுக்கு நன்றி அநாமி.

*

If Naxals in Andhra can do it, why not the people of Tamil Nadu? தமிழ்நாட்டில் முன்பு நக்சல்கள் பலம் பொருந்திய அமைப்பாக இருந்தவர்கள்தான் VoW. (அவர்களை அடக்கித்தான் பெரும் புகழ் பெற்றார் வால்டர் தேவாரம்) ஆனால் பெரிய அளவு ஒரு ஆயுதப்போராட்டம் நடத்தக்கூடிய தீவிரமும் முனைப்பும் வைகோ சொல்லும் காரணியில் இல்லை. ஆயுதமேந்தக்கூடிய எவ்வளவோ நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அதற்கெல்லாம் ஆயுதமெடுத்திருந்தால் இந்நேரம் தமிழகத்தில் இரு புரட்சிகளாவது நடந்திருக்க வேண்டும். மற்றபடி, காஷ்மீர் விவகாரத்தை ஒரு நாள் விரிவாக பேசுவோம். நிறைய விவாதத்திற்கான விஷயம் இருக்கும் போல.

*

அனானி, டோண்டு போலியா உண்மையா என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்.

*

தங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஆரோக்கியம்
 



This comment has been removed by a blog administrator.
 



நான் ஒரு நவைசுவைக்காக அனுப்பிய முந்தைய பதிவை அழிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
 



This comment has been removed by a blog administrator.
 



சங்கு சக்கரம் & அனானிமஸ், நீங்கள் எழுதியதில் ஆபாசமாக எதுவும் இல்லையெனினும் தனிப்பட்ட சில காரணங்களுக்காக நீக்குவதற்காக வருந்துகிறேன்.
 



நண்பர்கள் காஷ்மீரப் பிரச்சனை குறித்து விரிவாக எழுதியிருந்தது கண்டேன்.
காஷ்மீரப் பிரச்சனை என்பது ஹரிசிங் இந்து , மக்கள் முஸ்லிம்கள் என்னுமளவில் ஆரம்பிக்கவில்லை. அதன் முன்னரே , பழங்குடியினரின் தாக்குதல்கள் இருந்தாலும், அவை skirmishes என்னுமளவிலேயே இருந்தன. இது 1947க்கு முன் முஸ்லிம் லீக் ஹிந்து - முஸ்லிம் விரோதத்தை விதைத்து வளர்த்தது போலவே , இந்த திடீர் காஷ்மீரத் தாக்குதல் இன,மத வெறியால் வந்த தாக்குதலே.
தனிநாடாக பாகிஸ்தான் வேண்டுமென ஐரோப்பாவில் 1945க்கு முன்னேரே பலம் திரட்டும் வேலை நடந்து வந்ததை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கண்டு, கண்டித்திருக்கிறார்.
நேருவின் காஷ்மீரக் காதல், லாஹூர் பித்து இந்தியாவின் காஷ்மீர வலுவை சிதைத்தது என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை. அவரது பஞ்சசீலக்கொள்கை சீனாவால் 1962-ல் படையெடுப்பால் நிராகரிக்கப்பட்ட பின்னரே கொஞ்சம் நிலைக்கு வந்தார். அதற்குள் எதிரிக்கு எதிரி நண்பன் என்று பாகிஸ்தானும், சீனாவும் கூட்டுசேர்ந்துகொண்டன. காரகோரம் கணவாய் , பெருஞ்சாலை சீனாவுக்கு பாகிஸ்தான் அன்பளிப்பாக வழங்கியது எந்த உரிமையில். காஷ்மீர மக்கள் பாகிஸ்தானில் இருக்க விரும்பினரா? அல்லது தனியாக இருக்க விரும்பினரா? தவறு என்பது இந்தியாவைமட்டும் சொல்லிப் பயனில்லை. இந்திய ராணுவம் அங்கு ஆக்ரமிக்கச் செல்லவில்லை. ராணுவம் அங்கில்லாதிருந்தால் இன்று டெல்லியும் இந்தியாவில் இருக்காது.
தனியாக ஒரு நாடாக காஷ்மீரம் இருக்க முயன்றிருந்தால் இன்று அது பாகிஸ்தானில் பலூசிஸ்தான் போல பின் தங்கிய மாகாணமாக இருந்திருக்கும். பாகிஸ்தானின் அரசியல் வரலாறு அப்படி. பஞ்சாபிகளும், சிந்திகளும் அங்கு அடித்துக்கொள்வது போல காஷ்மீரிகளும் அடித்துக்கொண்டிருப்பார்கள். அவ்வளவே.
தமிழ்நாடு அரசியல் எனக்கு இன்னும் புரிபடுவதில்லை. யார் யாருக்கு நண்பர்கள்/எதிரிகளென்பது எனது மரமண்டைக்கு புரிவதில்லை. தமிழ்நாடு ஒரு தமிழ்நாடாகவாவது இருக்குமா என்பது என் கவலை.
 



நன்றி சுதாகர்.

மனக்குமுறல். மத்தவங்க கஷ்டம், அவங்க மனசு பத்தி யோசிக்காம எழுதியது எதுன்ற உங்க பார்வைய கொஞ்சம் விரிவா சொன்னீங்கன்னா பதில் சொல்ல வசதியா இருக்கும். நன்றி
 



சரி, உங்க கருத்து ??