<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

வால் நட்சத்திரத்தால் ஏற்படும் பாதிப்புகள்


வால் நட்சத்திரத்தின் தோற்றம் எப்படியோ ஆனால் அதன் குணாதிசயம் அதன் இருப்பிடத்தை பொறுத்து மனிதர்களுக்கு பயத்தையே உண்டு பண்ணியிருக்கிறது. இப்பொழுதும் வால் நட்சத்திரம் அருகில் வருகிறதென்றால் அதை பெரும்பாலானோர் ஜாலியாக பார்க்க, ஒரு சிறு கூட்டம் அதை ஒரு எச்சரிக்கை + பயத்தோடே பார்க்கிறது.

வால் நட்சத்திரத்தின் தோற்றமே அதற்கு அப்படி ஒரு பெயர் வருவதற்கு காரணம்... அரிஸ்டாட்டில்தான் முதன்முதலில் தனது குறிப்புகளில் kom என்று பதிகிறார். அதற்கு "தலை முடி" என்று அர்த்தம், வால் நட்சத்திரத்தின் வாலை குறிக்கும் விதத்தில்... பின்பு அவரே kometes என்ற பதத்தை, "நீளமான முடியை அணிந்த" என்ற பதத்தில் உபயோகிக்கிறார். அதுதான் கிரேக்கத்திலிருந்து லத்தீனுக்கு போகும்போது comet, வால் நட்சத்திரம் என்றானது...

இவை பொதுவாக சூரியனுக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் காணப்படும்.. இதற்கு ஒரு நியூக்ளியஸ் மண்டையும் அதை சுற்றி ஒளிவட்டமும் (நெபுல்ஸ் கோமா என்பதை இப்படி மொழிமாற்றம் செய்வதற்கு தமிழ்த்தாய் மன்னிப்பாளாக) இருக்கும். ஒளிவட்டம் 24 லட்சம் கி.மீ அளவு கூட பெரிதாக இருக்கும்.. முட்டை வடிவ வால்தான் இதன் சிறப்பம்சம். இவை ஆபத்தான வாயுக்களான அமோனியா, மீத்தேன், கார்பன் டைஆக்ஸைடு மற்றும் தண்ணீரால் ஆனவை.

ஆஸ்டிராய்டுகள் என்பவை வால் நட்சத்திரத்தின் தம்பிகள் (என்று சொல்லலாமா தெரியவில்லை). இவை பாறைகள் + உலோகத்தால் ஆனவை. இந்த கூட்டணி தங்கள் பாதையில் அமைதியாக பயணம் செய்யும் வரை ஒரு ப்ரச்னையும் இல்லை. ஆனால் இவை சில சமயம் உணர்ச்சி வசப்பட்ட்டு நமக்கு அருகில் வந்துவிடும். அப்பொழுதெல்லாம் நமக்கு ஆபத்துத்தான்.

நியோ எனப்படும் Near Earth Objects பூமிக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளை ஆராய்வதற்கும் தேவைப்பட்டால் அவற்றின் பாதையை மாற்றி அமைப்பதற்கும் ஏற்படுத்தப்பட்ட ஒரு கூட்டமைப்பு
B612 Foundation இப்பொழுது கூட Apophis என்னும் ஆஸ்டிராய்டு பூமிக்கு மிக அருகில் செல்லப்போவதால் 2036ல் பூமியின் மேல் மோதலாம் என்ற கணிப்பில் நாசா மற்றும் B612 இருவரும் How to Deal with Apophis என்ற கேள்வியுடன் செயலாற்றி வருகிறார்கள்..

இன்னும் 30 வருடம் கழித்து தமிழில் வலைப்பதிவு என்று ஒரு சமாச்சாரம் இருந்தால் எழுதுவதற்காக "அன்புள்ள அஃபோபிஸுக்கு" எனற தலைப்பை ரிசர்வ் செய்து வைக்கிறேன்.

****

வால் நட்சத்திரத்தை வைத்து பல (மூட) நம்பிக்கைகள் இருந்தாலும் அடுத்த செய்தி வாலை பற்றியதாக இருந்தாலும் இதற்கும் வால் நட்சத்திரத்துக்கும் எந்த சம்பந்தம் இல்லை... படத்தில் இருக்கும் குழந்தையை அனுமாரின் உருவமாக மக்கள் பார்க்கிறார்கள். வால் அளவு 4 இன்ச்... அனுமாரை போல இந்த குழந்தையின் உடலிலும் 9 இடங்களில் புள்ளிகள் இருப்பதாக கேள்வி. இந்த குழந்தையின் தாத்தா இக்பால் குரேஷி கோயில் கோயிலாக சென்று இந்த குழந்தையை காட்டுகிறார், மக்கள் வரிசையில் நின்று தரிசித்து காசு கொடுக்கிறார்கள்... உங்களுக்கு தெரிந்த "வாலு"க்கும் (லாலுவுக்கு அல்ல) நீங்கள் இது போல வால் வைத்து கற்பனை செய்து பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


முகமூடி,

இந்த பதிவை படிச்சிட்டிருக்கும்போது நீங்க என் பின்னுலகம் ப்ளாக்ல போட்ட பின்னூட்டம் gமெய்ல்ல பாப் பண்ணிச்சு. நன்றிங்க.

அப்புறம் வால் நட்சத்திரம் தோனும்போதெல்லாம் உலகத்துல ஒரு அற்புதம் நடக்கும்னு ஒரு ஐதீகம் இருக்கே. உண்மைதானா.

அப்படித்தான் இயேசு கிறீஸ்து பிறந்திருந்த போது ஒரு வால் நட்சத்திரம் தோனிச்சின்னு சொல்வாங்க. அது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலேன்னாலும் இப்பவும் கிறீஸ்துவங்க அத நம்பறாங்க.
 



//உங்களுக்கு தெரிந்த "வாலு"க்கும் (லாலுவுக்கு அல்ல) நீங்கள் இது போல வால் வைத்து கற்பனை செய்து பார்த்தால் அதற்கு நான் பொறுப்பல்ல
//
ஹி ஹி
 



//அதை பெரும்பாலானோர் ஜாலியாக பார்க்க, ஒரு சிறு கூட்டம் அதை ஒரு எச்சரிக்கை + பயத்தோடே பார்க்கிறது.//

அது...!!:-))
எது?
 



I didnt like the timing and the title of this post; I wish to register my disapproval:-(
 



"தலை முடி"யில் ஆரம்பித்து "வாலில்" முடித்திருப்பது தங்களின் எழுத்துத் திறமைக்குச் சான்றாக விளங்குகிறது!

//தாத்தா .... கோயில் கோயிலாக சென்று இந்த குழந்தையை காட்டுகிறார், மக்கள் வரிசையில் நின்று தரிசித்து காசு கொடுக்கிறார்கள்... //

வாயுள்ள பிள்ளை மட்டுமல்ல வாலுள்ள பிள்ளையும் பிழைத்துக் கொள்ளும் போல!!

- comment posted by ஞானபீடம்
 



Your BLOg title is "mugamuudi's satire" and your post and timing of the post simply fits the actul meaning of 'satire'!
[Webster meaning: 'satire'-- a literary work in which vices, follies, stupidities, abuses etc. are held up to ridicule and contempt and the art of writing them.]

I enjoyed the posting in a humerous way !
 



வேறெங்கும் செல்லாமல் இங்கு வந்து இப்பதிவை பார்த்திருந்தால் இது ஒரு சாதாரண பதிவு.. ஆனால் ராங் டைமிங் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இது இப்பொழுது அமைந்து விட்டது..

இப்ப பின்னூட்டத்துக்கு ஸ்மைலி போடுவதில்லையா, அது போல பதிவுக்கே ஸ்மைலி என்று போட்டு படித்துப்பாருங்கள், அர்த்தம் வேறயாக இருக்கும் ;-))

அபவாதமாக ஏதும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கருதினால் தெரியப்படுத்தவும் ;-)) அதுவரை அடி ஆத்தி ஞாபீயின் ஏஜண்டா என்பதை அறியப்படுத்தவும்..

***

// Your BLOg title is "mugamuudi's satire" // sk, இப்படி எங்கங்க இருக்கு //
 



Arun's 'pathivugal' has you linked thus! That's how I came to this site!!
 



Here is a copy from Arun's page! I have "" "" you!

Blogroll
Kasi
Thamizmanam
Srikanthd
Thinnai
Udhaya
Kiruba's blog
Badri
PKS
BB
Halwa city
Satire by Kusumban
Scientific Masala
Radhakrishnan
""Mugamoodi's satire""
Sudhar
Karaikudi kavignar
Srikanth Meenakshi
Ganesh's English blog
Boston Balaji
Dondu Raghavan
Me and My Movies
Murali
Venkat's musings
Mayavaraththaan
Guru's Cinema musings
Rajini Ramki
Anbudan Bala
Namakkal Raja
Train Commute & Moblog
Chakra
 



உள்குத்தா? குசும்புக்கு அளவேயில்லையா? ;)
 



கவலைப்படாதீங்க முகமூடி...வழக்கம் போல் திரித்து விட்டார்கள் :-)

அடி ஆத்தீ... இவ்வளவு ரிசர்ச் வேலை பண்றீங்களே ;-)
 



"வால் நட்சத்திரத்தால் ஏற்படும் பாதிப்புகள்" என்ற இந்த பதிவு "வலை நட்சத்திரத்தால் ஏற்பட்ட பாதிப்பு" என்பது மட்டும் புரிகிறது!

வழக்கம்போல திரிச்சிட்டோம்! :) இல்லைன்னா இந்த பதிவுக்கு ஒரே அர்த்தம்தான்! :) (அடடா.. இன்னொரு ஸ்மைலி.. இந்த ஸ்மைலி தொல்லை தாங்கலையப்போவ்வ்வ்வ்..)
 



This comment has been removed by a blog administrator.
 



It's almost a week! When is the next post??!!
 



Hmm. This photo was in my blog long time back. isnt ?

hehehe
 



வாங்க சின்னவன்.. ரொம்ப நாளா ஆளக்காணோம். உங்க பதிவுல(யும்) இந்த படம் இருக்குது ஹிஹி..
 



//ரொம்ப நாளா ஆளக்காணோம். உங்க பதிவுல(யும்) இந்த படம் இருக்குது ஹிஹி..


Vacation time :-)
 



//முகமூடி யார்??
முகமூடி யார் ??

முகமூடி யார் என்று உங்களில் பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கக்கூடும்.இன்னும் அவர் யார் என்று தெரியாத "கோயிஞ்சாமியா " நீங்கள் ? கவலை வேண்டாம். !!

அக்டோபர் 28
இந்த தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்றுதான் முகமூடியின் முகத்திரை கிழியப்போகிறது ....

//

மேலே இருப்பது சின்னவன் பதிவில் இருந்து எடுத்தது ..
அக்டோபர் 28 கடந்து 2 மாதங்கள் ஆகிவிட்டது.இன்னும் திரை கிழியவில்லையே :P
 



சரி, உங்க கருத்து ??