<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

திராவிட இயக்கத்தலைவர் ஜெயலலிதா


கருணாநிதிய திராவிட இயக்கத்தலைவர்னு சொல்றாங்களே, அப்படீன்னா திமுக திராவிட இயக்கமா? ராமதாஸ் inc, வைகோ inc எல்லாம் திராவிட இயக்கமா... வீரமணி கார்ப்பரேஷன் திராவிட இயக்கம்னு பேடண்ட் வாங்கிடுச்சான்னு கேட்டப்பலாம் முறைச்ச மகாஜனங்க, ஜெயலலிதாவும் திராவிட இயக்கத்தலைவர்தானேன்னு கேட்டதுதான் போச்சி, என்னமோ கவுண்டமணி காமெடிய (உயர் சிந்தனை பிரிவு Simpsons) பாத்தா மாதிரி விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க...


எலே இத பத்தியெல்லாம் பேச உனக்கு வயசு பத்தாதுன்னு சொல்றவங்க இந்த பதிவுக்கு அந்துமணி ஸ்டைல்ல "பார்த்தது, கேட்டதுன்னு" தலைப்பு வச்சிக்குங்க... ஆனா கருணாநிதி திராவிட இயக்க தலைவர்னா ஏன் ஜெயலலிதா இல்லைன்னு கேள்வி மண்டைய கொடயுது

விக்கிபீடியா, முக்கிய திராவிட மொழிகளாக தெலுங்கு (530 இலட்சம்) , தமிழ் (450 இலட்சம்) , கன்னடம (280 இலட்சம) , மலையாளம் (275 இலட்சம) என பட்டியலிடுகிறது.. இது தவிர சிறிதும் பெரிதுமாக சுமார் 75 திராவிட மொழிகளும், தென்னிந்தியா மட்டுமின்றி மத்திய, வட இந்தியாவிலும் (குறைந்த அளவு) திராவிட மொழி பேசும் மக்கள் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறது.

இதில் திராவிடர்களின் முன்னேறத்துக்காக துவங்கப்பட்ட கழகத்துக்கு தமிழ்நாட்டை தவிர மற்ற இடங்களில் இருக்கும் திராவிடர்களின் முன்னேற்றத்தை பற்றி ஆர்வம் இருக்கிறதா , இருந்தாலும் அங்கிருக்கும் திராவிடர்களிடம் சென்று உங்களை முன்னேற்றப்போகிறேன் என்று ஜல்லியடித்தால் அவர்கள் இவர்களை ஜல்லியால் அடிக்காமல் இருப்பார்களா என்பது நமக்கு தேவையில்லாத விஷயம்... இந்த கழகத்தில் கணக்கு கேட்டவர் முதல்வர் ஆசை வந்ததும் திராவிடர்களை முன்னேற்றுகிறேன் அண்ணா (இல்லை அண்ணா திராவிட என்று ஒரு இனம் உண்டா?) என்று புறப்பட்டு விட்டார். இவர்கள் கர்நாடகத்திலும் கொஞ்சம் போல திராவிடர்களை (கன்னட சலுவாலிலே தூங்கும் நேரமாக பார்த்து) முன்னேற்றுகிறார்கள் போல் தெரிகிறது... அதுல இருந்து குருமா ரெடியானவுடன் கறிவேப்பிலை போடவும் என்பது மாதிரி எல்லாரும் "திராவிட" என்று தூவிவிடுகிறார்கள். லேட்டஸ்டா விஜயகாந்த். எப்போதும் தமில் என் பேச்சு, தமில் என் மூச்சு என்றவர், தமிளை தவிர வேறு மொளி படங்களில் கூட நடிக்காத தமிளன் நான் என்றவர், ஏன் தமிழை தமது கழகத்தின் பெயரில் வைக்கவில்லைன்னு ஏடுகொண்டவாடுவுக்கே வெளிச்சம். சரி ஒட்டுமொத்த திராவிடர்களுக்கும் தலைவராகனும்னு (கட்சி பெயரளவிலாவது) இருக்க ஆசை வர்றதில் தப்பில்லை...

ஆனா திராவிட?

திமுக பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டது... கொள்கை அளவில் இல்லாமல் பதவி அளவில் என்றெல்லாம் ஜல்லியடித்தாலும், இது திராவிட இயக்க கொள்கைகளுக்கு ஊதிய சங்கில்லையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க...

சாதிய அடக்குமுறை கொள்கை இன்னும் பெரியார் காலத்திலேயே நின்னுகிட்டிருக்கு. உயர் சாதியினர் கீழ் சாதியினர் மேல் செய்த அடக்குமுறையை குறிப்பிட பெரியார் உபயோகித்த பார்ப்பன/பிராமனீய எதிர்ப்புலயே இன்னும் இருக்கிறார்களே தவிர, ஐந்து அடுக்குகளாக உயர் சாதியினர் தாழ்ந்த சாதியினர் மேல் செய்யும் அடக்குமுறைக்கு இன்னமும் தீர்வு கண்டபாடில்லை... மலம் அள்ளுறதை ஒழிச்சி சட்டமெல்லாம் போட்டாங்களே அது சுத்தமா ஒழிஞ்சி போச்சா, அத ஏன் ஒரு சாதிக்காரன் மட்டும் இன்னமும் செய்யறான் அத பாருங்கடான்னா, கோயில்ல மந்திரம் ஓதறது ரொம்ப முக்கியம்னு போராடரானுங்க... பல நூறு கோடி கொட்டி எலக்ட்ரானிக் பூங்கா கட்டுவோம், ஆனா வாங்குற கூலிய ஃபுல்லா அடிச்சாத்தான் வேலை செய்வது மட்டுமல்ல வாழவே முடியும்ன்ற நிலையில செப்டிக் க்ளீன் பண்றவன் வேலைய செய்ற மெசின் வாங்க காசில்ல...

பெண் குழந்தைகள் கொலை ஒரு தொடர்கதை.. இதுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண ஒரு தொலை நோக்கு திட்டமும் இல்லை... சுயமரியாதைங்கிற வார்த்தை அரசியலில் வழக்கொழிந்து ரொம்ப நாளாச்சி... பகுத்தறிவுத்தொண்டர்கள் மட்டுமல்லாது தலைவர்கள் வீடுகளிலும் கடவுள் பக்தி பெருக்கெடுத்து ஓடுது. இறை நம்பிக்கையோடு தொடர்புடைய நோன்பு கஞ்சியை கட்சி வேறுபாடில்லாமல் குடிக்கிறார்கள்.. குங்குமம் வைப்பது காட்டுமிராண்டித்தனம் என்று தொண்டர்களுக்கு அறிவுரை கூறும் தலைவர் மனைவிக்கும் மறுமகளுக்கும் அதை சொல்வதில்லை. அவர்களின் தனிமனித உரிமையை மதிக்கிறேன் என்கிறார். அவரு கட்டின கோயில்ல பூசை என்னா புனஸ்காரம் என்னா ஒரே தடபுடல்தான்.. எதிர்க்கட்சி அம்மாவோ பொதுமக்களின் வாழ்க்கையை உருட்றதுக்கு கூட சோழி உருட்டுகிறார்..

இதெல்லாம் சரி. இன்றைய so-called திராவிட இயக்கங்களுக்கு தாய்க்கழகமான திராவிட கழகம்? அதையேன் கேட்கறீங்க, அங்கன தலைவர் உட்பட யாருக்குமே இந்த கழகம் எதுக்கு, கல்வித்தொழிற்சாலைகள் மெயின்டனென்ஸ் (வசூல்) தவிர வேற வேலை எதுனா இருக்கா? கல்யாணம் நடத்தறத தவிரவும் ஏதாவது செய்ய முடியுமான்னெல்லாம் தெரியாம கெரோன்னு இருக்காங்க. கழகத்துக்காக சொத்துங்கறது போயி சொத்துக்காக கழகம்னு ஆயிடுச்சி... பொழைக்க வழி வாலாட்டுறதுதான்னு தலைவர் முடிவு பண்ணி அத அப்பப்போ விடாம செஞ்சிகிட்டும் இருக்காரு. இதுல திராவிடமாவது ஒன்னாவது... அட போங்கப்பா...

போயி வெளக்குமாறு, செருப்பு எதுனா இருந்தா எடுத்துகிட்டு சித்தாள் வேலைக்கு ஆளெடுக்குற அரசமரத்தாண்ட வாங்க... கலாச்சாரம் காக்க ஆளெடுக்கிறாங்களாம். ரவைக்கு க்வார்டரும் கோழி பிரியாணியும் க்யாரண்டி...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


This comment has been removed by a blog administrator.
 



//பல நூறு கோடி கொட்டி எலக்ட்ரானிக் பூங்கா கட்டுவோம், ஆனா க்வார்டர் அடிச்சிட்டு செப்டிக் (tank) க்ளீன் பண்றவன் வேலைய செய்ற மெசின் வாங்க காசில்ல...//

உண்மையை விளம்பும் பதிவு. ஓட்டு நிலவரத்தப் பத்தியெல்லாம் கண்டுக்காதீங்க :)
 



"பல நூறு கோடி கொட்டி எலக்ட்ரானிக் பூங்கா கட்டுவோம், ஆனா க்வார்டர் அடிச்சிட்டு செப்டிக் க்ளீன் பண்றவன் வேலைய செய்ற மெசின் வாங்க காசில்ல..."

முகமூடி, கேள்வி கூட சரியா கேக்கத்தெரியலை. என்ன பதிவு எழுதறீங்க?

இப்படி கேக்கணும்.

"ஆயிரம் கோடிக்கணக்கில ஊழல் பண்ண காசில சன் டிவி எம்பையர் கட்டத்தெரியுது.. ஆனா குவாட்டர் அடிச்சிட்டு கிளீன் பண்றவன் வேலையை செய்யறதுக்கு மெஷின் வாங்க காசில்ல.."

அதுதான் தலைவர் அப்பவே பாடினார். ஊருக்கெல்லாம் வெளிச்சம் போட கொடுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்து விட்டார் நகர சபையில...

ஆனா, நெகட்டிவ் ஓட்டு குத்துற கோஷ்டிங்களுக்கு அதெல்லாம் தெரியுங்கிறீங்களா? தெரியும். ஆனா, காமராஜருக்கு இருந்த அக்கறையில நூத்துல ஒரு பங்கு இருந்திருந்தா இவ்வளவு பணத்துக்கு தமிழ்நாட்டில ஒருத்தன் அந்த வேலையை பண்ண வேண்டியிருந்திருக்காது. ஆனா இவங்களுக்கு அத ஒழிக்கிறது நோக்கமில்லையண்ணா. அந்த வேலை தமிழ்நாட்டில நடந்துகிட்டிருக்கவரக்கும், அத காமிச்சி பாப்பானை அடிச்சிக்கிட்டே நம்ப பிஸினசை ஓட்டலாம். தலித், தலித் நிலையில அமுக்கி வைக்கப்பட்ட இதர ஜாதிகள் எல்லாம் ஓட்டு குத்தும். அத பேசி முற்போக்காகவும் ஒரு கும்பல் ஆகும். அதுதான் காரணம்.

நான் உங்களூக்கு நெகட்டிவாவு குத்தலை பாசிட்டாவும் குத்தலை. அதெல்லாம் கண்டுக்காதீங்க..
 



கூறியது திராவிடர், ஆனால் அவர்கள் அதற்கு பொருள் கொண்டது தமிழரே. அடிப்படையிலேயே பகுத்தறிவற்றச் செயல்.

எம்.ஜி.ஆர். மலையாளி, டாக்டர் ஹண்டே கன்னடியர் ஆனால் கன்னடியரான ஈ.வே.ராமசாமி நாயக்கர் பகுத்தறிவுப் பகலவன், தமிழ்த் தலைவர். அடித்துக்கொள்ள ஆயிரம் கைகள்தான் வேண்டும்.

எனக்குத் தெரிந்த ஒரே திராவிடர் ராஹுல் டிராவிட்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



ஒரு திருத்தம் : ஃபுல் அடிச்சாத்தான் வேலை செய்வது மட்டுமல்ல வாழவே முடியும்ன்ற நிலையில இருக்குற தொழிலாளி செய்யிற வேலைய செய்யற மெசின்னு சொல்லியிருக்கணும்... க்வார்ட்டர்னு சொல்லிட்டேன்..

நன்றி vow... ஓட்டு நிலவரத்த பத்தியெல்லம் ஒரு கவலையுமில்ல... ஆனா இத ஒரு பெரிய விஷயமா நினைச்சி வேல மெனக்கட்டு மாங்கு மாங்குன்னு நெகட்டிவ்ல குத்திகிட்டு கம்யூட்டர் முன்னாடி ஒரு சீவன் ஒக்காந்திருக்கறத நினைச்சேன், சிரிச்சேன்...

அனானி, காமராஜயே வார்த்தை ஜோடனையில மயங்கி தோக்கடிச்சவங்கதானே நாம... இன்னி வரக்கும் காமராஜ் ஆட்சிய கொண்டாருவோம், அண்ணா ஆட்சிய கொண்டாருவோம், எம்ஜிஆர் ஆட்சிய கொண்டாருவோம்னுதான் சொல்றாங்களே தவிர, யாருக்காவது நாங்க போன தடவை தந்த ஆட்சிய தருவோம்னு சொல்ல தில் இருக்கா ?? இவங்க எல்லாம் திராவிட இயக்கமாம்...
 



Valid points mugamoodi.

I will write more when i have access to tamil typing.
 



This comment has been removed by a blog administrator.
 



//யாருக்காவது நாங்க போன தடவை தந்த ஆட்சிய தருவோம்னு சொல்ல தில் இருக்கா ?? //

சூப்பர்.. :))
 



முகமூடி,
உங்களுக்கு தனிமடல் ஒன்று அனுப்பியிருக்கிறேன் .பார்க்கவும்.
 



அழிக்கப்பட்ட முதல் பின்னூட்டத்தில் (தவறான புரிதல்) ஒரு திருத்தம்... ஓட்டு நிலவரம் பாத்தா சிரிப்புத்தான் வருது... திராவிட பாரம்பரியம் எதுல இருக்கோ இல்லியோ, (கள்ள) ஓட்டு (capturing)ல நல்லாவே இருக்கு... ;-))

***

ஸ்க்ரிப்ட் எழுதி கள்ள ஓட்டு போடும் தொழில்நுட்ப அல்லக்கை அண்ணாவுக்கு, stat counter சும்மா ஒரு எண்ணிக்கைக்கு.. அதை ஆராய்ச்சி செய்வது எனக்கு வழக்கமில்லை/நேரமுமில்லை... வலைப்பதிவு என்பது எனக்கு வாழ்க்கையில்லை... கள்ள ஓட்டு போடுவதற்கு தைரியம் வேண்டும் என்று சொல்லும் உம்மை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. get a life.

***

நன்றி பெனத்தலார் (கட்சிக்காரங்க ரேஞ்சுல பேர் வச்சிக்கறீங்க) & இராம்ஸ்...

ஜோ உங்கள் அஞ்சல் பெட்டியை பாருங்கள்.
 



//யாருக்காவது நாங்க போன தடவை தந்த ஆட்சிய தருவோம்னு சொல்ல தில் இருக்கா ?? //

அர்த்தமுள்ள கேள்வி!
 



//கர்நாடகத்திலும் கொஞ்சம் போல திராவிடர்களை (கன்னட சலுவாலிலே தூங்கும் நேரமாக பார்த்து) முன்னேற்றுகிறார்கள்

:-)))))))))))))))))))))))))
 



ஒக்காமக்கா.. தல.. இயக்கத்தலைவரைக் கேட்குறீங்க.. மொதல்ல இப்போ இருக்குற எத்தனை பாமர தொண்டனுக்கு தெரியும் திராவிடம், திராவிடர்னா என்னனு..

இந்த பதிவுக்கான ஒன்லைனர் வெளம்பரம்..

திராவிடர்னா என்னமா ?????????

பிகு: அதில் வரும் "மா" முடிவுக்கு அர்த்தம் கற்பிக்காதீர்கள் ;-)


-
செந்தில்/Senthil
 



Pottu thaakunga Mugamoodi, Naanga solli solli aluththup poitom. The dravida kunjoos in the net world called me Anti Tamil anti Dravida Unarvaalan for telling the same thing. Also write about the great traits of these dravidian parties their leaders and goons like pattam, silai, samadhi, etc etc. Go ahead.

Regards
 



The so called Dravidian parties introduced fascism to tamils. The dravidian parties should be named Fascism Munnetra Kazhagam. PMK is the most dangerous version of this fascist movement as evidenced from their assault on Khushbhoo and Suhasini. If Ramadoss becomes CM, he will talibanize tamil culture.

(I am sorry for not writing in Tamil but I don't know how to type in Tamil fonts).
 



திராவிடர்னா மாமா!
 



In my personal opinion,

No party has principles and all are corrupted. They just calculate seats.

But religious and castiest parties like BJP, PMK are dangerous for the state and country.
 



நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் முகமூடி
 



இளவஞ்சி, ராம்கி, யாத்ரீகன், ஈழநாதன், கிருக்கன், அனானிஸ் உங்கள் அன்புக்கு நன்றி

டி.ராஜ், // கருணாநிதி சென்ற ஆட்சிய முன்னிறுத்தியே ஓட்டு சேகரிக்க முயன்றதாக நினைவு // ஓ... அவர தோத்துப்போனதுக்கு காரணம் இதுவா... நான் தமிழ்நாட்ட ஜாதிக்காடாக்க முயற்சி செய்த அவரது திட்டத்துக்கு ( எவ்ளோ கட்சிகள் கூட்டணி.. 137+?) மக்கள் கொடுத்த தீர்ப்புன்னுள்ள நினைச்சேன்..

// dravidian parties should be named Fascism Munnetra Kazhagam //
// But religious and castiest parties like BJP, PMK are dangerous for the state and country. // மிகவும் சரி
 



// கருணாநிதி சென்ற ஆட்சிய முன்னிறுத்தியே ஓட்டு சேகரிக்க முயன்றதாக நினைவு // ஓ... அவர தோத்துப்போனதுக்கு காரணம் இதுவா... நான் தமிழ்நாட்ட ஜாதிக்காடாக்க முயற்சி செய்த அவரது திட்டத்துக்கு ( எவ்ளோ கட்சிகள் கூட்டணி.. 137+?) மக்கள் கொடுத்த தீர்ப்புன்னுள்ள நினைச்சேன்

Super Appu.
 



என்னுடைய மு.க.வுடன் சந்திப்பு என்ற பதிவில் நீங்கள் பின்னூட்டமிட்டபோது துவங்கிய பிரச்சினை இது. அப்போது நீங்கள் கூறியதுபோன்றே தனியாக ஒரு பதிவை காரசாரமாக எழுதியுள்ளீர்கள்.

டோண்டுவும் அவர் பங்குக்கு ஒரு தமாஷான (கேலியான?) பின்னூட்டத்தை இட்டுள்ளார்.

திராவிடம் என்றால் என்ன, யாரை உண்மையான திராவிட தலைவராக ஏற்றுக்கொள்வது என்பதல்ல இன்றைய பிரச்சினை.

ராமன் ஆண்டாலென்ன ராவணன் ஆண்டாலென்ன என்ற பாணியில் யார் வந்தாலும், அது அண்ணாவானாலும், மு.கவானாலும், ம.தி.ஆனாலும் ஜெ ஆனாலும் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டையை போலத்தானே இருக்கிறார்கள்? இதற்கிடையில் கோமாளித்தனம் செய்றதுக்கு சில டாக்டர்கள், புலிகள், சிறுத்தைகள் என தலைவர்கள், அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் சில வேலையற்ற தொண்டர்கள்..

ஊழல், ஊழல், ஊழல்..

சும்மாயிருந்த தமிழை செம்மொழி என்பார்கள்.. அது உன்னால்தான் ஆச்சு என்னால்தான் ஆச்சு என்பார்கள்..

இந்த அலங்கோல ஆட்சிகளிலிருந்து என்றைக்கு தமிழ்நாட்டுக்கு விடுதலை கிடைக்கப் போகிறதோ.. கடவுளுக்கே வெளிச்சம்!
 



//யாருக்காவது நாங்க போன தடவை தந்த ஆட்சிய தருவோம்னு சொல்ல தில் இருக்கா ?? //

ஜோக்கடிக்கிரீங்க. 4.5 வருடம் ஒரு கட்சியோடு சேர்ந்து மத்தியில்
ஆட்சி செய்துவிட்டு, எங்கள் ஆட்சியில் இந்தியா ஒளிரவேயில்லை. இனி என்றும்
ஒளிராமலிருக்க எங்களுக்கே மீண்டும் வாக்களியுங்கள்னு கேட்டாலும் மக்கள்
அவர்களுக்கே ஓட்டு போடறாங்க.

என்னத்த சொல்றது ?
 



//சும்மாயிருந்த தமிழை செம்மொழி என்பார்கள்.. அது உன்னால்தான் ஆச்சு என்னால்தான் ஆச்சு என்பார்கள்..//

அப்படிப்போடுங்க...
 



//யாருக்காவது நாங்க போன தடவை தந்த ஆட்சிய தருவோம்னு சொல்ல
தில் இருக்கா ?? //

அதெப்படி? எல்லார் ஆட்சியுமே ஊழல்தான். அதுலே எந்த ஊழல் நல்ல ஊழல்?

தானும் தன் குடும்பமும் மட்டும் முன்னேறுனாப் போதாதா?

'அடுத்தவன் எதுக்கு? ச்சும்மா ஓட்டுப் போட்டுட்டுப்போற கேனையனுங்கதானே?'

இப்படி ஒரு எண்ணம் மனசுலே இருக்குல்லே பெருந்'தலை'களுக்கு?
 



சரி, உங்க கருத்து ??