<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சன் டிவியில் தோன்றுவது எப்படி?


வேல வெட்டி இல்லாத உங்க ஆளுங்க ஒரு 5 பேர சேத்துக்கோங்க... திருவல்லிக்கேணி பக்கமா போயி கோனார் வீடு எங்க இருக்குன்னு கேளுங்க. அதிகாலை மற்றும் மாலை நேரத்தில் கோனார், மாட்டோட வீடு வீடா பால் கறக்க போயிருப்பார். அதனால மத்த நேரத்துல போயி அவரு மாடு எங்கன்னு கேளுங்க... பொதுவா பால் கறக்கறதோட அவரு வேலை முடியுது.. அதுக்கப்புறம் தீனி திங்க அதுங்க எங்க போவுதுன்னு அவருக்கே தெரியாது.. இருந்தாலும் ஒரு முயற்சிதான். அவருக்கு தெரியலையின்னாலும் ஒன்னும் பாதகம் இல்ல... அப்படியே தெருத்தெருவா போனீங்கன்னா ஏதாவது ஒரு சந்துல மாடு போஸ்டர தின்னுகிட்டு இருக்கும்... இப்பல்லாம் நிறைய அலைய தேவையில்லாம ஏகப்பட்ட போஸ்டருங்க கிடைக்குதாம்... அதனால சீக்கிரமே மாட்டை ஸ்பாட் பண்ணிடலாம்... அதுக்கப்புறம் குஷ்பு அல்லது சுகாசினி படம் போட்ட போஸ்டரை தின்னுகிட்டு இருக்குற மாடா பாருங்க... அதான் உங்க டார்கெட்..


இப்ப உங்க நண்பர்கள்ல ஒருத்தர் மாட்டோட வால பிடிச்சிக்கணும். இன்னொருத்தர் மாட்டுக்கு பாவ்லா காமிக்கணும். இன்னொருத்தர் படார்னு அது வாயில இருக்கற போஸ்டர பறிச்சிக்கணும்... நடுவுல வால் பிடிக்கிறவர் மாடு எக்குதப்பா உதைக்காம இருந்தா அவரு அதிர்ஷ்டம் இல்லாத ஜென்மம். ஒதச்சி பல்லு மொகறை பேந்திச்சின்னாதான அப்பால தலைவர் எதுனா பாத்து போட்டு குடுப்பாரு... அப்பத்தான் டிவியிலயும் ஒரு கெத்தா இருக்கும்... அதனால வால் பிடிக்கிறப்போ மாடுகிட்ட எதுனா சில்மிசம் பண்ண சொல்லுங்க...

பக்கத்துல 1 ரூபா போன் இருந்தா சன் டிவிக்கு ஒரு போன போட்டு இந்த மாதிரி, இந்த மாதிரி, ஒரு போராட்டம் பண்லாம்னு இருக்கோம், உங்க டைமுக்கு ஏத்த மாதிரி மிச்ச ஏற்பாடெல்லாம் பாத்துக்கலாம். டைம் சொல்லுங்கன்னு சொல்லுங்க... இதுக்காகவே இப்ப ஒரு டீம் காத்துகினு இருக்காம். அவங்க ஆம்புலன்ஸ விட வேகமா வந்திருவாங்க.. அப்புறம் நீங்க எல்லாம் சேந்து "தமிழ் பண்பாட்ட சீர்குலைத்த குஸ்புவை கண்டிக்கிறோம்" அப்படீன்னு கத்தணும்... இன்னும் உங்களுக்கு தெரிஞ்ச கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லலாம். போன தபா நீங்க கடன் கேட்டு கொடுக்காத ஆள மனசுக்குள்ள நினைச்சீங்கன்னா ஆக்டிங் தத்ரூபமா வரும்... ஒரு 10 நிமிசம் கத்திட்டு ஏற்கனவே கிழிஞ்சி பரிதாபமா இருக்கற போஸ்டர கொளுத்துங்க... உங்க பார்ட்டு முடிஞ்சிது... அப்பால வீட்டுக்கு போயி "கணவருக்காக" சீரியல் பாத்துட்டு ஒரு க்வாட்டர் போட்டீங்கன்னா, மிட்நைட் மசாலா போடுவாங்க.. அப்படியே தமிழ் பண்பாட்டுக்காக நீங்க ஆற்றிய அரும்பணிய நெனச்சி பெருமிதம்+போதையோட தூங்குங்க...

மறுநாள் சன் செய்திகள் பாருங்க... அதுல உங்க நியூஸ் வரும்... "சுகாசினியை கண்டித்து தமிழ்நாடெங்கும் கொடும்பாவி எரித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்" அப்படீன்னு நீங்களே எதிர்பார்க்காத பில்டப் எல்லாம் கொடுத்து செய்தி வரும். இந்த ந்யூஸ வீடியோ புடிச்சி கட்சித்தலைமைக்கு அனுப்புங்க... மூன்றாவது வட்டத்தை சேர்ந்த நாலாவது தெருவுக்கு அமைப்பு செயலாளர் பட்டம் கிடைக்கும்... எதுக்கும் தமிழ் முரசும் வாங்கி பாருங்க... மேட்டர் பஞ்சத்துல, மந்திரிக்கப்பட்ட தாயத்து இலவச இணைப்போட ஒரு வேளை உங்க போராட்டம் செய்தியா வந்தாலும் வந்திருக்கும்...

***

நேற்று வழக்கறிஞர் ஒருவர் தலைமையில் நடந்த மாபெரும் போராட்டம் (?!) சன் டிவியில் பார்த்ததை ஒட்டி எழுதப்பட்டது... ஈ காக்கா இல்லாத ரோட்டில் தலைவரோடு சேர்த்து அறுவராக இருந்த போராட்ட குழுவுக்க்கு ஒரு கோரிக்கை : அடுத்த முறை முன்னேற்பாடா நல்ல தீப்பெட்டி அல்லது லைட்டர் கொண்டு செல்லவும். ஒரே ஒரு பாதி கிழிஞ்ச சுகாசினி போஸ்டரை கொளுத்துவதற்கு நீங்க பட்ட பாடே பரிதாபமாக இருந்தது. இந்த லட்சணத்தில் சன் தனது செய்தியில் சொன்னது போல் உண்மையிலேயே நீங்க கொளுத்த முயற்சித்தது கொடும்பாவியா இருந்திருந்தா உங்க நெலம என்ன ஆயிருக்கும்னு கற்பனையே பண்ணமுடியலையேப்பா...



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தமிழர்களுக்கு வர வர வேறவேலையே இல்லபோல....
போற போக்க பாத்த உன்மையிலேயே கொம்பு முளைத்திரும் போல 'o'
 



This comment has been removed by a blog administrator.
 



:-))))))))))))
 



//மேட்டர் பஞ்சத்துல, மந்திரிக்கப்பட்ட தாயத்து இலவச இணைப்போட //

இதத்தான் முகமூடியிசம் (முகமூடி டச்) அப்படீன்னு சோல்வாங்களோ? :-))
 



நல்லாவே இருக்கு. ஆமா, அங்க உக்காந்துகிட்டு சன் டி.வி. பாத்துக்கிட்டா இருக்கீங்க?
 



:-))))))
 



//அப்பால வீட்டுக்கு போயி "கணவருக்காக" சீரியல் பாத்துட்டு ஒரு க்வாட்டர் போட்டீங்கன்னா, மிட்நைட் மசாலா போடுவாங்க.. அப்படியே தமிழ் பண்பாட்டுக்காக நீங்க ஆற்றிய அரும்பணிய நெனச்சி பெருமிதம்+போதையோட தூங்குங்க...//

Боже Мой.. Молодец. Мне Очень Понравилось.
 



தேர் நிலைக்குத் திரும்பியதா?
(back to form?)

மழை வெள்ளம், நிவாரணப்பணிகள், நட்வர் சிங் விவகாரம், ரூபாய் வீழ்ச்சி இன்னபிற எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி கொடும்பாவி எரித்தலும் குஷ்பூ சுஹாசினி வழக்குகளும் முன்னிலைப்படுத்த வேண்டிய கட்டாயம்தான் என்ன? இத்தனைக்கும் சன் டிவிக்கு தேவையான "அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கான" சாத்தியக்கூறுகள் வேறு இடங்களில் அதிகமாக இருந்தும்!!
 



நன்றி துளசியக்கா & ரம்யா.. எவ்ளோ நாளாச்சி உங்கள (சிரிப்ப) பாத்து..

***

முகமூடியிசம்: நல்லாயிருக்கு இந்த வார்த்தை பிரயோகம் கல்வெட்டு, நன்றி..

***

ஆமாங்க தருமி... காசிக்கு போனாலும் கருமம் தொலையாதுன்னு சொல்வாங்களே.. கொஞ்ச நாள் முன்னாடியே சனி டி.வி கனெக்சன் வாங்கறத பத்தி ஒரு ப்ளொக் எழுதியிருந்தேனே..

***

Спасибо ..., но плизент, С или без водки? இராம்ஸ்..

***

"சாத்தியக்கூறுகள் வேறு இடங்களில் அதிகமாக இருந்தும்" எல்லாம் அரசியல்தான்... தமிழ் பண்பாட்டு காவல், எதிரிக்கட்சி டிவியின் ஆஸ்தான ஸ்டாருக்கு செக்மேட்... மட்டுமல்ல ஒரே கல்லுல பல "மாங்கா" சமாச்சாரமாச்சே...
 



அந்த கருமாந்திரத்தில் வரும் செய்திகளை இப்பொழுதும் வேலை மெனக்கெட்டு பார்த்துக்கொண்டிருக்கிறீர்களே!
 



"God moy.. Fine person. Greatly it was pleased to me."

இராமநாதனின் பின்னூட்டத்தை babelfishல் போட்டால் இதான் வருகிறது..இது என்ன சன் டி.வி ஸ்பெஷல் பின்னூட்டமா??
 



இதெல்லாம் அடுத்து வரப்போற தேர்தல் சர்க்கஸ்.


சன் என்ன எல்லா சாணலும்தான்..

சன் ஒன்ன காமிச்சா ஜெ வேறொன்ன காமிக்கிறாங்க.

எல்லாம் ஒரே குட்டையில ஊறுன மட்டைதான்
 



//எல்லாம் அரசியல்தான்... தமிழ் பண்பாட்டு காவல், எதிரிக்கட்சி டிவியின் ஆஸ்தான ஸ்டாருக்கு செக்மேட்... மட்டுமல்ல ஒரே கல்லுல பல "மாங்கா" சமாச்சாரமாச்சே...//
அடிங்க அடிங்க .... இப்போவெல்லாம் தமிழ்நாட்டில் New Delhi Tele Vision தான் அதிகமா பார்க்கிறாங்களாம்.... இந்த லட்சணத்தில போனா பின்ன எப்படி...

//நன்றி துளசியக்கா & ரம்யா.. எவ்ளோ நாளாச்சி உங்கள (சிரிப்ப) பாத்து..//
அப்படி இப்படி நீங்க தாய்க்குலங்கள் ஓட்டுக்களை வாங்கிட்டீங்க....

//Спасибо ..., но плизент, С или без водки? இராம்ஸ்..//
இப்படியே போனா அடுத்ததாக ருஷ்ய மொழி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிப்போம்.... சன் டிவில இப்படியும் தோன்றலாமே....
 



Mr.Mugamoodi
Dont you know that now buffaloes in Tamil Nadu and wherever Tamils live prefer posters of Asin or Trisha or Nayantara and refuse to eat posters showing Kushboo or Sushasini as part of their campaign to protect Tamil Culture :).By your post you have insulted the respect of those
buffaloes and hence we will
march towards your house with
100s of buffaloes as a protest. :)
 



//С или без водки? //
с Минеральной Водой или Обычной(!) :)

//அடுத்ததாக ருஷ்ய மொழி எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிப்போம்//
இளவஞ்சியின் பதிவில் கொடுத்த எச்சரிக்கையே இங்கும் கொடுக்கிறேன். ரஷ்யாவையும் ரஷ்யனையும் வம்புக்கிழுத்தால், தானாகவே வெடித்து விழாத மிக்-29K கள் மூலம் உங்கள் வீட்டிற்கு ஆந்த்ராக்ஸ் பார்ஸல் அனுப்பி வைக்கப்படும்.
 



:-)))))))
 



தல.. அப்படியே அதிக பின்னூட்டங்கள் வாங்குவது எப்படினு கோனார் நோட்ஸ் பலரும் போடுராங்க.. நீங்க போடும் போது.. அதுல.. இந்த மாதிரி பதிவு போடுறதையும் மறக்காம சொல்லுங்க ;-)

-
செந்தில்/Senthil
 



இறை நேசன், என்னங்க பண்றது... ஆலையில்லா ஊருக்கு இலுப்பை சக்கரை... ஆனா இலுப்பையை சாப்பிடுறதில்லை. வெறுமே பார்ப்பதோட சரி...

***

ரம்யா, இந்த வேத்து மொழி பின்னூட்டத்துக்கு பின்னாடி ஒரு லாஜிக் இருக்குதுங்க... பெரும்பாலும் திருப்பியும் மொழிமாற்றம் செய்யப்படும்போது அர்த்தம் எக்குதப்பாத்தான் வரும். ஒரு குத்துமதிப்பா அதுக்கு பதில் சொல்ல வேண்டியதுதான். அது அந்த சைடுல இருந்தும் தொடரும்.. இது ஒரு புது விதமா இல்ல ;-))

***

டி.பி.ஆர். இங்க ஜெ வரதில்லைங்க.. அதுல வர காமெடிய கொஞ்சம் சொல்லுங்க...

***

ருஷ்ய மொழி எதிர்ப்பு போராட்டம்.. கணேஷ்... எதிர்கால திட்டம் பலமா இருக்குன்னு சொல்லுங்க...

***


// march towards your house with 100s of buffaloes // ரவி பீஹார்க்கே முதல் மந்திரியா ஆகிடலாம் போலருக்கே.. அவ்ளோ பெரிய ஊர்வலத்த சொல்றீங்க..

// refuse to eat posters showing Kushboo or Sushasini as part of their campaign // தமிழ் எருமைங்களா இருக்கும்... (க.காவலர்ஸே, தமிழன எருமைன்னு சொல்லலப்பா... இதுக்கும் வந்துடாதீங்க துடைப்பத்தோட)

***

// மிக்-29K // ஓவரா காசு கொடுத்து சவப்பெட்டி வாங்கினாருன்னு ஜார்ஜ் மேல கேஸ் போட்டாங்களே, இன்னமும் இந்த கருமத்த ரொம்ப டூ மச்சா காசு கொடுத்து வாங்கிகிட்டு தான இருக்கோம்... என்ன ஆட்டோமாடிக் சவப்பெட்டின்னா? (அது என்ன ரஷ்யா இந்தியாவுக்கு மட்டும்தான் மிக் தயாரிக்கிதா?)

***

நன்றி குமரன்... யாத்ரீகன், செல்லமா தட்றீங்களா, தாமரைக்கனி தட்டான்னு தெரியல. ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன் ;))
 



// (அது என்ன ரஷ்யா இந்தியாவுக்கு மட்டும்தான் மிக் தயாரிக்கிதா?)
//

அதெல்லாம் தெஹல்கா பாத்துக்கட்டும், உங்களுக்கு எதுக்கு? அதென்னவோ தெரியல, இந்த ஊர்ல ஒரு மிக் கூட கிழ விழுந்ததா செய்தி வர மாட்டேங்குது. நம்மூர்லதான் வானம் பொழிகிறது ரேஞ்சுக்கு இருக்கு.
 



அய்யே அத்த வுடு; "ஏன் வூட்டு செவுறு இடிஞ்சுபோச்சு நஷ்ட ஈடு குடுக்காம இந்த அதிகாரிங்க திண்ணுட்டுடாங்க கால 5 மணியீந்து குந்திகெடக்கோம் ஆரையும் காண "என்று நான்கு போர் சேர்ந்து சொன்னாபோதும்
 



Mugamoodi

I dont have Sun connection at my home. I dont want to subscibe for an anti social, anti Indian, anti people, propritery property of Mu.Ka & Sons and grandsons. He stole the people's money and built this Sun TV empire and now playing a stunt that he has no business with the Sun TV. What a great fraud and cheat. If you are really sincere in criticising Sun TV's arrogance and atrocities, follow me, cancel your subscription. You will get peace and productive time at hand. Believe me.

One of the happiest Tamils in USA who dont have a Sun TV at home.

Regards
 



// cancel your subscription //

நீங்க வேற. சன் டிவி கனெக்சன் வாங்கினதா பேருதான்.. எப்பவாவதுதான் அது வாங்கினதே ஞாபகம் வருது... நான் பொதுவா சைன்·பெல்ட், தட் 70ஸ் ஷோ, ·ப்ரண்ட்ஸ், சிம்ப்சன்ஸ் எல்லாம் பாத்தது போக இன்னமும் கொஞ்சம் காமெடி இருந்தா நல்லாயிருக்கும்னு தோணிச்சின்னா சன் நியூஸ் பாக்குறது...
 



pongappa! vera velai ethum ungalakku illaya?
 



சரி, உங்க கருத்து ??