<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சனி டி.வி


இன்னிக்கி நம்ம வூட்டுக்கு சன் டி.வி கனெக்சன் வருதுங்கோ... கூட்டி கழிச்சி பாத்தா ஒரு அஞ்சாறு வருசம் இருக்கும் சன் டி.விய ஒளுங்கா பாத்து... அப்ப மட்டும் எங்க ஒளுங்கா பாத்தோம். பிட்டு பிட்டா பாத்ததுதான்...

ஒரு நா பகல்ல வீட்டுல இருக்க சொல்ல "கோகிலா எங்கே போறா" அப்படீன்னு ஒரு நாடகம் போட்டான். செம த்ரில்லர்பா அந்த கத.. நாடகம் ஆரம்பிக்க சொல்ல படா சோக்கா தீம் பாட்டுன்னு ஒரு சங்கதி. அது முடிஞ்சவுடனே விளம்பரம்... அப்பால ஆரம்பிச்சிது நாடகம். என்ன மாதிரி பிட்டு பிட்டா மெகா பாக்குறவனுங்க வசதிக்காக முன் கதை சுருக்கம்னு ஒரு பத்து நிமிசம் நேத்து போட்ட கதைய காமிக்கிறான்... அப்புறம் இன்னிக்கி கத ஆரம்பிக்கிது...

கோகிலா மளிக வாங்க கடைக்கி போறாப்புல கதை. அவ செருப்ப தேடுறதுல ஆரம்பிச்சி போடுற வரக்கும் கேமிரா அவ செருப்பயே சுத்துது.. அப்புறம் கூடய தூக்கிகிட்டு தெருவுல இறங்கி நடக்க ஆரம்பிக்கிறா... தெருவுல ஆள் நடமாட்டமே இல்ல... மெதுவா கேமிரா அவ பின்னாடியே போவுது... எனக்கு மனசு பக்கு பக்குன்னு அடிச்சிக்க ஆரம்பிச்சிட்டுது. என்னமோ ஆவ போவுது கோகிலாவுக்கு, ஆள அரவமே இல்லாத இந்த ரோட்டுல இவ எதுக்கு பகல் 11 மணிக்கு தனியா போறான்னு மனசு பரபரங்குது... இப்போ தெரு மொனக்கி வந்திட்டா... அய்யோ திரும்புறப்ப வில்லன் நின்னுகிட்டு இருக்க போறான். அவள என்னமோ பண்ண போறான்னு டென்சன் கூடுது... இந்த நேரம் பாத்து விளம்பரம் போட்டான்யா... சபிச்சிகிட்டே உக்காந்திருக்கேன். வெயில் தணிக்க வாங்குன 'ஆச்சி மோர்' பாக்கெட் பிரிக்காம அப்பிடியே இருக்கு... 10 நிமிசம் விளம்பரம் முடிஞ்சி திருப்பியும் ஆரம்பிச்சிது கத... இப்ப கோகில தெருவ திரும்பிட்டா... 10 அடி போனப்புறம் பாத்த ஒரு நாய் ஓடுது... அய்யோ இது நல்ல சகுனம் இல்லியே வில்லன் இப்ப வரப்போறானான்னு பாத்தா அவன் வரக்காணோம். கொஞ்சம் நிம்மதி... நடக்குறா நடக்குறா... நடந்துகிட்டே இருக்கிறா... அடுத்த தெரு முனையும் வந்திடுச்சி... இந்த தெரு முனையில வில்லன் இருப்பானோன்னு ஒரு பயம் வந்திச்சா... அப்ப மறுபடி விளம்பரம்.... விளம்பர ப்ரேக்ல தபால் எடுக்கலாம்னு வெளில போனா அப்பத்தான் போஸ்ட் மேன் வந்திருந்தாரு. அவரு கிட்ட ஒரு 5 நிமிசம் கடல போட்டுட்டு அய்யோ கோகிலா எங்கியாவது போயிட போறான்னு பதறி அடிச்சி வந்தா அப்பவும் கோகிலா நடந்துகிட்டு இருந்தா... அடங்கொக்கமக்கா... இவ உண்மையிலேயே எங்கதாண்டா போறான்னு யோசிக்க ஆரம்பிக்கிறப்ப இன்னொரு வயசான அம்மா எதுத்தாப்புல வராங்க.. அவங்க கோகிலாவ நிறுத்தி "ஏண்டி கோகிலா நான் கேள்விபட்டது உண்மையா"ன்னு கேக்க, அந்த கேள்வியில அதிர்ச்சி ஆகுற கோகிலா முகபாவத்த ஃப்ரீஸ் பண்றதோட அன்னிக்கி எபிஸோடு முடிஞ்சி போச்சி...

துணி காயப்போட மாடிக்கி போன அப்பத்தா வந்து 'எலேய் இன்னிக்கி என்னடா நடந்திச்சி"ங்குது.. என்னத்தன்னு சொல்வேன்... "வெறும் நடைதான் அப்பத்தா வேற ஒண்ணுமில்ல"ன்னேன்... அது என்னய நம்பாம "வர வர இவன் என்னய மதிக்கவே மாட்டேங்குறான்"னு அப்பாகிட்ட ஒரே புலம்பல்.

அப்புறம் இங்க வந்தப்புறம் சன் டிவி வாங்கணும்னே என்னவோ தோணல... ஆமா அங்க இருந்தப்பியே டிவி பாத்ததில்ல.. ராத்திரி ராதிகா நாடகம் போடறப்ப அஞ்சி நிமிசம் பாக்குறாப்புல உக்காந்திருப்பேன். யுவராணி வந்தா ஒரு பத்து நிமிசம் பாக்குறது வளக்கம். இல்லயின்னா வில்லன் வாசு வற்றப்போ "போயிட்டு வரேன்"ன்னு மெதுவா சொல்லீட்டு அவங்க நாடக சுவாரசியத்துல இருக்க சொல்லவே அப்பீட் ஆயிடுவேன். மிட்நைட் திரும்பி வரப்போ இப்ப எதுக்கு கச்சேரின்னு பேசாம இருந்திடுவாங்க. மறுநா காலையில இனிமே நாடகத்துக்கு நடுவுல எஸ்கேப் ஆவற வேல வச்சிக்காதன்னு ஒரு வார்னிங் வரும். அது அன்னிக்கி நாடகம் ஆரம்பிக்கிற வரைக்கும்தான்... ராதிகா சேச்சி வாள்க..

போன வருசம் வாங்கலாம்னு சின்னதத ஒரு ரோசன வந்தப்போ, பொங்கல் சமயத்துல நண்பன் வீட்டுல பாத்தா சன் டிவி ஓடிகிட்டு இருந்திச்சி.. தூர்தர்சன் ரேஞ்சுக்கு காடி கலர்ல பெயின்ட் அடிச்சி மாடு பட கட்டவுட்டு வைக்க போருன்னு ஒரு செட்டிங்கு. இந்தப்புறம் விசயலச்சுமி நவநீதகிருஸ்னன் கோஷ்டி அந்தப்புறம் புஷ்பவனம் குப்புசாமி கோஷ்டி. நடுவுல நம்ம கங்க அமரன். புரியாத விசயம் என்னன்னா கங்கை அமரன் எதுக்கு வெள்ள கலர் சுடிதார்லயே இந்த மாதிரி பங்சனுக்கு வராருன்னு.. அடப்பாவி அதுக்கு பேரு குர்தான்னான் என் ·ப்ரண்டு.. குர்தான்னா நம்ம வைரமுத்து போடுறதாச்சே... கங்கை அமரன் டைட் பேண்டு, பாக்கெட் இல்லாத நீள சட்டை, துப்பட்டா எல்லாம் போட்டா அது சுடிதானேன்னா ஒத்துக்க மாட்டேங்கிறாய்ங்க.. சரி பங்சனுக்கு போவோம். இவங்க ஒரு பாட்டு பாட அவங்க அதுக்கு எசப்பாட்டு பாடன்னு ஒரே கூத்து. கிராமத்துலயிருந்து வந்திருந்த அவங்க கெழவி "என்னா கருமாந்திரமடா அது... ஒரே நாராசம். அத நிறுத்தி தொல"ன்னு கூப்பாடு. அப்புறம் பாட்டி பாடுன பாட்ட கேட்டுகிட்டே பொங்க சாப்பிட்டோம். அத்தோட அந்த ஐடியா அப்பீட்டு.

நான் சன் டிவியில் விரும்பி பாத்தது சண்டே மாலை 3.30க்கு வரும் காமெடி, டெயிலி நைட் அர்ச்சனா வற்ற காமெடி டைம் (காமெடிக்காக மட்டும்) அப்புறம் விசுவின் அரட்டை அரங்கம். யார்னா பொம்பள எதுனா சமூக/குடும்ப கஸ்டத்த சொல்லி அழ அத பாத்து விசு கதறி கதறி அழன்னு ஒரே காமெடி ப்ளஸ் சென்டிமெண்டா பொளுது போவும்.

இன்னிக்கி சன் டிவி வந்தவுடனே முதல் வேளையா கோகிலா ஒழுங்கா போவ வேண்டிய எடத்துக்கு போயிட்டாளா இல்லயான்னு பாக்கணும். அப்புறம் தீம் பாட்டுல யானையெல்லாம் சும்மா பந்தாவா வற்ற நம்ம ராதிகாவோட நாடகம். விசு அளுவாச்சிக்கு நடுவுல சொல்ற பத்தாம்பசலி கருத்துக்கள கேக்கணும் போல இருக்கு... அட எல்லாத்தயும் ரெக்கார்டட் கேஸட்டா தேசி கடையில பாத்துக்கலாம்னு வச்சிக்கிங்க... ஆனா சன் டிவி வாங்குறதுக்கு ஒரு முக்கிய காரணம் இருக்கு... அது தினம் தினம் இன்னொவேட்டிவா நடக்குற லைவ் போராட்ட காமெடிங்க...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


U2 முகமூடி ???
 



Eye One Chins. Who is the Other One?
 



Other one அக்டோபர் 28ம் திகதி தெரிந்து விடும் !

அகில உலக தமிழ் வலைபதிவாளர்களிலேயே "சன்", "ஜெயா" ரீவீ பார்க்காத ஒரே ஆள் நான் தான் போல இருக்கு !
 



ம்... அப்போ இனிமேல் தினம் தினம் கலைஞர் முகமூடி வாயில் கலைஞர் கருணாநிதி விழுவார் போல...
 



மைடியர்பூதம் விமர்சனத்தை எதிர் பார்க்கலாமா?
 



// "சன்", "ஜெயா" ரீவீ பார்க்காத // நானும் ரீவீ பார்ப்பதில்லை சின்னவன் வெறும் டி.விதான்

// இனிமேல் தினம் தினம் கலைஞர் முகமூடி வாயில் கலைஞர் கருணாநிதி // என்னங்க குழலி, சன் டி.வி வைகோவ காமிக்கறதில்லை கலைஞர் கருணாநிதிய மட்டும்தான் காமிக்கிதுன்னு சொல்றீங்களா...

// மைடியர்பூதம் விமர்சனத்தை எதிர் பார்க்கலாமா? // இன்னும் இந்த டிஷ் நிறுவுறவன காணோம்.. அதனால நீங்க மைடியர் பூதம்னு சொல்றது எதுனா நாடகமா இல்ல ஐயாவ பத்தியான்னு தெரியலயே...
 



surian vizunguthu naattai waan vaziyaaka sunnet ithazvaliyaka thinakaran thamilmurasu kunkumam murosoli innum englishla waera!
 



ஒரு அவசரத்துக்கு தீர்க்க சுமங்கலி, கோலங்கள் மிஸ் செய்துவிட்டால், கதையை கேட்டுக்கொள்ள உங்கள் ஈமெயில் முகவரியைத் தருவீர்களா?
 



பெப்சி உமா வர்ரதில்லையா சன் டி.வி'ல?
 



செல்வி பாருங்க தல.. இதை விட சூப்பர் ஸ்லோ காட்சிகள் இருக்கு.. அப்படியெல்லாம் பன்னலைனா அப்புறம் எப்படி மெகா சீரியல நகர்த்த முடியும்??

அப்புறம் இன்னொரு காமெடி வேனும்னா.. ஜெயா நியூஸ் / சன் நியூஸ் சேனல் மாத்தி மாத்தி பாருங்க.. சூப்பரா இருக்கும்.. :)
 



unga bashaya padikkumbodhu neenga chennai vasiya illa gramavasiyannu theriyave mattengudhu ponga
 



ஹமீது, என்ன சொல்றீங்க நீங்க. முரசொலி இங்கிலிபீஸ¤ல வருதா? ஆஹா இது தெரிஞ்சா தமில் போ ராலி ராமதாஸ் கடுப்பாயி கட்சி மாறிடுவாரே, இப்ப என்ன செய்றது....

***

ஏங்க சுரேஷ். நக்கல்தான இது... சுமங்கலி கோலங்கள் எல்லாம் மிஸ் பண்ணா கதைய மின்னஞ்சல் வழியா தெரிஞ்சுக்கணுமா? உங்கள மாதிரி ஆளுங்களுக்காகத்தானே எப்ப பாத்தாலும் புரியிறா மாதிரி கத பண்றாங்க மெகா டைரக்டருங்க...

***

அதிமதுரா :: ஒரு காலத்துல ராப்பகலா நானு ஜொள்ளு விட்ட பெப்சி உமாவான்னு இருக்கு இப்ப வர்ற உமாவ பாக்க சொல்ல

***

நம்பி அன்பா சொல்றீங்களா அறிவுறுத்துறீங்களா பயமுறுத்துறீங்களா ஒன்னியுமே புரிய மாட்டேங்குதே. வெளில வேற ஒரே சத்தமா இருக்கு

***

வீஎம். இங்க ஜெயா (பு தலைவிய அப்படி சொல்லலாமான்னு தெரியலையே) டிவி தெரியறதில்லைங்க...

***

அனானி, நான் உடலால் மெற்றாஸ், உள்ளத்தால் கிராமத்தான்.
 



இன்னிக்குத்தான் இங்கே 'சிகரம் டிவி.'க்கு ஒருத்தர் வந்திருக்காரு. சன் அப்புறம் இன்னும் என்னவோ வருதாம் அதுலே. இப்ப வாங்குனா இலவசமா இன்ஸ்ட்டால் செய்வாங்களாம்.

நான் தான் டி.வி. பார்த்தா வேலைக்காகாதுன்னு சொல்லி வேணாம்னுட்டேன்.

ஒரு தமிழ்மெகாசீரியலும் பார்க்காத ஆள் இந்த உலகத்துலெயே நானாத்தான் இருப்பேனோ?
 



அக்கா
கவலை படாதீங்க..

நானும் அதே category தான்
 



நன்றி நம்பி

***

அது என்ன துளசியக்கா சிகரம் டிவி... வீட்டுல சன் டிவி வாங்குனதா பேர்தானே தவிர தெண்டமாத்தான் தூங்குது. நானும் மெகாரம்பங்கள பாக்குறதில்ல

***

சின்னவன் இங்கிலீஸ்ல பாத்தாலும் அது மெகா சீரியல்தான்.
 



Vanakkam sun and jaya tvs are they prodcasting in tamil or english.make sure wich languages community they are trying to cover.no one shuold wach these tvs.
 



என்னாச்சு முகமூடி பழைய பதிவெல்லாம் பயங்கரமா வெளிவருது.

ஆனா எல்லாமே நல்லாத்தான் இருக்கு
 



கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் நானும் வாங்கினேன்.
டி.வி.ஆர்ல நைட் போடுற பாட்டு+வணக்கம்தமிழகம்+மதியவேளை திரைப்படம் ரெக்கார்ட் பண்ணிட்றதால சீரியல் கில்லர்களிடமிருந்து தப்பிக்கிறோம்.
:))
 



god writting style
 



சரி, உங்க கருத்து ??