<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்


அக்கணத்தை அனுபவித்து நடனம் ஆடிக்கொண்டிருந்த
Thanks: Life Magazineஅந்த அழகான வாலிபர்களை புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞரின் அப்போதைய ஒரே நோக்கம் :: ப்ளாஷ் வெளிச்சத்தை கூரையில் அடித்து அதன் பிரதிபலிப்பில் படம் பிடிக்க வேண்டும் என்பதே. அதன் மூலம் அந்த அழகான யுவ யுவதிகளின் மேல் வெளிச்சம் "அடி"க்காமல் அவர்கள் கவனம் சிதறாமல் அவர்கள் உலகை அவர்கள் அனுபவித்திருப்பர் என்பது அவரின் எண்ணம். கலைஞர் : லைஃப் பத்திரிக்கையின் ஆஸ்தான Nila Leen

காலம் : 1947


போன முறை நூலகம் சென்றிருந்த போது பழைய புத்தக விற்பனையில் சொற்ப விலைக்கு "The Best of Life - Subscribers Special Edition" எனும் பொக்கிஷம் கிடைத்தது. Life பத்திரிக்கையில் 1946-1966 காலகட்டத்தில் வெளிவந்த காலத்தை வெல்லும் புகைப்படங்கள் ஒரு தொகுப்பாக.

அதில் The Challenge of youth-watching :: following the kids into "The Gap" என்னும் தலைப்பில் இளைஞர்கள் வாழ்க்கை - தலைமுறை இடைவெளி பற்றிய குறிப்பில் வந்த புகைப்படம் இது (ஸ்கான் செய்யப்பட்டது. பெரிதாக்க சுட்டவும்). இந்த 1947 புகைப்படத்துக்கும், இங்கே இல்லாத ஒரு 1966 புகைப்படத்தையும் குறித்து Life இவ்வாறு எழுதுகிறது.

From the starry-eyed young dancers at the left to the calorific couple* at right, there is clear evidence of a quantum jump. It began when young people's activities were looked on with affectionate approval by nostalgic parents and ended with the era of the Generation Gap. About the time the Silent Generation of the Eisenhower years gave way to the Beatlemaniacs, the chances in youth escalated exponentially.

* 1966 ஆண்டு கலிபோர்னியா கார்னிவலில் மேலாடை இன்றி சுதந்திரமாக ஆடிக்கொண்டிருந்த இளம் ஜோடியின் படம் மற்றும் கட்டுரையின் இதர படங்களை இங்கு வெளியிட விரும்பவில்லை.

Thanks: Life Magazineகுறிப்பு : இப்படங்களை வெளியிட்டு, கலாச்சாரம் நாசமாகப்போகிறதே என்ற சமூக அக்கறையில் லைஃப் பத்திரிக்கை எதுவும் எழுதியதா, அதன் அடிப்படையில் துல்ஸா ஷெரீஃப் அந்த ஹோட்டல் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என்பது பற்றியெல்லாம் செய்தி இல்லை.


இடது பக்கத்தில் இருப்பது 1971 ஏப்ரம் 2 ம் தேதியிட்ட Life பத்திரிக்கையில் வந்த, சமுதாயத்துக்கு முக்கியமானது என்று அக்காலகட்டத்தில் அது கருதிய விஷயத்தை அலசும் ஒரு கட்டுரை குறித்த அட்டைப்படம்.

யாருக்காவது இது பேசக்கூடாத விஷயமாக இருந்து இப்படத்தை கலாச்சார அவமதிப்பாக கருதினால் தயவு செய்து செருப்பு, துடைப்பத்துடன் மகளிர் அணியை அனுப்பி விடாதீர்கள். அதற்கு பதிலாக கேஷுவல் ஷீ மற்றும் யூரேகா X35 வேக்குவம் க்ளீனர் பேக் ஆகியவற்றுடன் அனுப்புவது மிகுந்த பலன் தரும், குறைந்த பட்சம் எனக்காவது.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நான் சொல்ல நினைச்சதை என்ன விட அழகாச் சொன்னீங்க

:)
 



அவுத்துப் போட்டு ஆடினார்கள். சரி. பொது இடத்தில் இல்லையே. தனிப்பட்ட பார்ட்டியில் தனிப்பட்டவர்கள்தானே ஆடினார்கள். அந்தப் புகைப்படக்காரர் மேல் முதலில் உரிமை மீறல் வழக்குப் போட வேண்டும்.
 



உங்க பேரு காமா சோமா (!?)ன்னு இருந்தாலும் உங்க பின்னூட்டம் ஆழமா இருக்கு ;-)

***

நன்றி ராகவன்.. போலியன் இந்த பதிவ எப்படி புரிஞ்சிகிட்டாரோ தெரியல அப்படி ஒரு பின்னூட்டம் கொடுத்திருக்காரு...

உரிமை மீறல்.. தனி மனிதர்களுக்கு உரிமை இல்லை என்றுதானே இவர்கள் ஆர்ப்பாட்டமே... அதுவும் பத்திரிக்கைகாரர்களுக்கு வானமே எல்லை. பல சமயங்களில் ஏதாவது விஷயங்களில் பாதிக்கப்படும் குழந்தைகளின் மேலேயே கருணை காட்டாமல் அவர்களின் எதிர்காலம் பற்றியெல்லாம் கவலைப்படாமல் புகைப்படம் பிடித்து போடும் இந்த கீழ்த்தர ஜந்துக்களிடமா இதையெல்லாம் எதிர்பார்க்க முடியும்.
 



அதற்கு பதிலாக கேஷுவல் ஷீ மற்றும் யூரேகா X35 வேக்குவம் க்ளீனர் பேக் ஆகியவற்றுடன் அனுப்புவது மிகுந்த ///

that is mugamoodi punch..
 



சரி, உங்க கருத்து ??