<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

உலக வலைபதிவர் மாநாடு - மேல்விபரங்கள்


வலைபதிவர்
டெலிகான் மாநாடு நடந்து ரொம்ப நாளாச்சே... ஈ ஓட்டிகிட்டு கிடக்கறதுக்கு ஆராவது வலைப்பதிவு மாநாட்டுக்கு கூப்பிட்டாலாவது போயிட்டு வரலாமேன்னு நினைச்ச நேரத்துலதான் சின்னவன் உலக வலைபதிவர் மாநாடு! நடத்துறதா சொல்லி கூப்பிட்டாரு... உடனே ஒத்துகிட்டேன். ஓட்டல் பில்ல மத்தவங்க தலையில கட்டிரலாம், தைரியமா வாங்கன்னு சின்னவன் சொன்னதும் ஒரு கூடுதல் காரணம்.

மாநாடு நடந்த ஓட்டல் நம்ம வீட்டுல இருந்து ஆட்டோவுல போனா அரை மணி நேரப்பயணம்தான்... ஆனா போனவாரம் நம்ம தரைவழி போக்குவரத்து அமைச்சர் போட்ட புது சட்டத்துல 6 மணிநேரம் ஆச்சுது. அதாவது இங்கிலீஷ்காரன் இன்ஜின் கண்டுபிடிச்சதுல இருந்து அயல்நாட்டு மோக அடிமைகள் வாழும் தமிழகத்துல நம்ம பாரம்பரிய வாகனங்களான குதிரை வண்டிகளும் மாட்டு வண்டிகளும் அருகிப்போயிட்டுது. அதனால இனி சிங்கில்ஸ்னா குதிரையிலயும், 1-5 பேருன்னா ஒத்த மாட்டு வண்டியிலயும், >5ன்னா எருமை மாட்டு வண்டியிலயும்தான் போகணும்னு ஆர்டர். அமைச்சரோட ஒண்ணுவிட்ட அத்தை மாமனாருதான் குதிரைங்க சப்ளைக்கு மொத்த ஆர்டர். இன்னும் பெல்ஜியத்துல இருந்து ஆர்டர் பண்ண குதிரைங்க எல்லாம் வராததால ஒத்த மாட்டு வண்டிக்கு பார்ட்னருக்கு வெயிட்டிங் 2 மணிநேரம், பயணம் ஒரு 4 மணிநேரம்னு மொத்தம் 6 மணிநேரம்.

அங்க போனப்புறம் பாத்தா வெளில ஒரே கூட்டம்... பின்ன ஒட்டக வண்டியும், பூனாவுல இருந்து நடந்தே தேஞ்ச செருப்பும், கட்டுமரமும் வெளில இருந்தா சனங்க கூடாதா..

ஒரு வழியா கூட்டம் ஆரம்பிச்சுது.. என்ன நடந்ததுன்னு சின்னவனின் பதிவில் நீங்க பாத்துருக்கலாம். சின்னவன் ஒட்டம் பிடிச்சவுடன் அல்லாரும் சாப்பிடறதுல மும்முரமாயிட்டோம்...

சாப்பிட்டு முடிச்சப்புறம்தான் தெரிஞ்சுது, ஆரும் சோமபானத்த பத்தி நினைக்கவேயில்லைன்னு... பரிமாறுபவர கூப்பிட்டு சோம பானம் ஆர்டர் சொன்னா இல்லைங்கறார். சரி சுறா பானமாவது இருக்கான்னு கேட்டா அதுவும் இல்லையாம். தென்னங்கள்ளு, பனங்கள்ளு, பட்டை எதுவுமே இல்லையாம்... அப்புறம் தமிளர் ஒருத்தர் பொங்கி எழுந்து போராடுவோம்னு சொன்னப்புறம் ஆளனுப்பி வரவழைக்கிறேன்னு சொன்னாரு...

கொஞ்ச நேரம் கழிச்சி ஞா... ஒருத்தருக்கு மட்டும் ஃபெர்மெண்டட் திராட்சை ரசமும் மற்றவர்களுக்கு பச்சை தண்ணீரும் கொடுத்தாங்க. கேட்டதுக்கு 65 வயசுக்கு கம்மியா இருக்கவங்க கெட்டுப்போவாம இருக்க பச்சை தண்ணீர் மட்டும்தான் தரணும்னு ஹெல்த் மினிஸ்டர் முடிவாம். அப்ப நாங்க தமிழ் வலைப்பூக்கள அடுத்த தளத்துக்கு எடுத்து செல்வது பத்தி பேசிகிட்டு இருந்தோம். அத கேட்ட பரிமாறுபவர் ஏற்கனவே மொட்ட மாடில இருக்கறத ஞாபகப்படுத்தி, அடுத்த தளத்துக்கு போக ஆசப்பட்டா தம்மால ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டார்.


அப்புறம் இது மாதிரி மாநாட்டுல பேசப்படும் "முக்கிய ப்ரச்னை" பத்தி பேசிட்டீங்களான்னு சர்வர் கேட்டப்புறம்தான் தெரிஞ்சுது, இதுவரைக்கும் அது பத்தி பேசவேயில்லையேன்னு... சரின்னு ஒரு 4 மணிநேரம் "முக்கிய" ப்ரச்னை பத்தி பேசுனோம்... இறுதியா "முக்கிய" ப்ரச்னைக்கு ஒரே தீர்வுன்னு எல்லாரும் ஏக மனதா ஒத்துகிட்டத பத்தி உங்களுக்கு சொல்ல ஆசைதான். சில பல அரசியல் காரணுங்களுக்காக சொல்ல முடியாத நிலையில இருக்கேன். வேணும்கிறவங்க தனி மடல் அனுப்புங்க...

அப்புறம் போட்டோ இல்லாமயா.. சைடுல கொடுத்திருக்கேன் பாருங்க. இடமிருந்து 3வதா கட்டம் போட்ட லுங்கியில இருக்கிறது நாந்தான்... கேமிரா கொஞ்சம் மக்கர் பண்ணிடுச்சி. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. சரி லேட்டாயிடுச்சி, அவிங்க அவிங்க பொளப்ப பாக்க போலாம்னு முடிவு செஞ்சு புறப்பட்டோம். கதவ பூட்றப்ப பாத்தா ரூமுக்குள்ள ஒருத்தர் மட்டும் பழரசம் தந்த சுகானுபவத்துல ஃபேன் சுற்றுகிறது, காத்து வீசுகிறதுன்னு கண்ணாடிய பாத்து பேசிகிட்டு இருந்தாரு...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தலைவா...
உன் ரேஞ்சே வேற !
"முக்கிய" ப்ரச்னை என்ன ?

:-)
 



//இடமிருந்து 3வதா கட்டம் போட்ட லுங்கியில இருக்கிறது //

ஐசக்கா ஐ!!! முகமீடி யாருன்னு போட்டாவுல கண்டுபுடிச்சிட்டேன்...

அட நீதானா அந்தக் குயில்? :-)
 



தலை! ரொம்ப அழகா இருக்கீங்க! திருஷ்டி சுத்தி போட சொல்லுங்க!

முக்கிய பிரச்சினை - அதுதான் அன்னிக்கு சென்னையிலே முக்கிய நபர்கள் கைதுன்னு பேப்பர்லேயே வந்துதே அப்பவே புரிஞ்சுடுச்சு.. யாரெல்லாம் முக்கி இருப்பாங்கன்னு!
 



:-(

:-)

:P
 



இந்த மு.மூ, இப்படித்தான்னு சொன்னா, ஞா.பீ. சண்டைக்கு வர்ரார், நீங்களே சொல்லுங்க் இது நாயமா?
 



இது போன்ற செல்லக்கடிகளால் அடிக்கடி
சிரிக்க வையுங்கள்.
 



லொள்ளு.

ஆமா, உங்க பக்கத்துலே வேட்டியைப் புடவையாட்டம் கட்டியிருக்காரே அவர் யாராம்?

தெளிவாச் சொல்லக்கூடாதா?
 



hahaha super thala... supre!
summa nachunu irukku thamizh maanadu.. :)
kuzhali - your turn now, continue..
 



தள்ளாத வயது என்றால்
எதையும் தள்ளாத வயது!
என்றே அர்த்தம்.. அர்த்தம்...

:-)
 



சரி, உங்க கருத்து ??