<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மான் வேட்டை



உன் குரலில் உண்மையிருக்கலாம்...
ஆனால் சிறுத்தைகளுக்கோ அது வேட்டைக்கான அழைப்பு...

காடு சுதந்திரமானதுதான்...
ஆனால் சிறுத்தைகளின் ஆளுகைக்குட்பட்டது...
இனியாவது ஒலியெழுப்பு முன் அனுமதி வாங்கு...

மென்னியில் ஆழப்பதிந்த பற்கள் வலியேற்படுத்தும்தான்
ஆனால்
கதறியது போதும்..
மௌனமாய் இரு...
இது பசிக்கான வேட்டையல்ல,
வெறும் ருசிக்கான வேட்டை...
சிறுத்தைக்குக்கு விளையாட வேறோர் இரை கிடைக்கும்,
அப்போது உனக்கு விடுதலை கிடைக்கும்...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


மற்ற மான்களும் சிறுத்தை வேட்டைக்கே உதவிடும்.

தானும் ருசிக்கப் படும் வரை அடங்கியே வாழும்!

மானுக்கு ஏன் கொம்பு?சிறுத்தைத் தடங்களே போதும்.
 



//காடு சுதந்திரமானதுதான்...
ஆனால் சிறுத்தைகளின் ஆளுகைக்குட்பட்டது...//

அட அப்படியா?

//இனியாவது ஒலியெழுப்பு முன் அனுமதி வாங்கு...//

யாருக்கிட்ட?
 



back to form !!!
 



அது நாடென்றல்லவா நினைத்திருந்தேன்..
 



மற்ற மான்களும் சிறுத்தை வேட்டைக்கே உதவிடும்.... அவற்றிற்கு ஏன் கொம்பு... சிறுத்தைத் தடங்களே போதும்... அருமையாய் சொன்னீர்கள் சுரேஷ்...
 



apdipodu... அட அப்படியா? இந்த கேள்வி எனக்கும் பல இடங்களில் பல தடவை வந்தது... உங்களிடம் கேட்கலாம் என்றிருந்தேன்... உங்களுக்கே தெரியவில்லையா?

****

சுதர்சன்... காட்டை (இப்போதைய) நாட்டோடு ஒப்பிட்டு கேவலப்படுத்தாதீர் என்று சொல்ல வருகிறீர்கள்... புரிகிறது

***

சின்ஸ், நன்றி
 



செய்வது சிறுத்தைகள் என்பதாலேயே.. அது பசிக்காக செய்தாலும் , ருசிக்காக என்று வாதிடும் வேடர்களும் இருப்பார்கள்.. !

இந்த வேடர்கள், சிங்கங்கள் ருசிக்காக எதை புசித்தாலும்... பாவம் அதற்கு பசி என்று சொல்லுவார்கள்.. இல்லையெனில் . .. ருசிக்காகவே என்று இருந்தாலும் என்ன தப்பு என்பார்கள்..

இங்கே அந்த வேடர்களுக்கு பசியா, ருசியா என்பது பிரச்சனை இல்லை... சிறுத்தையா இல்லை வேறு விலங்கினமா என்பதில் தான் அவர்கள் கவனமெல்லாம்..

சில வேடர்கள் தான் அது சிறுத்தையா , சிங்கமா என பாராமல் .. பசியா, ருசியா என்று பார்க்கிறார்கள். ..என்ன செய்வது..

ஏன் சிறுத்தையென்றால் பிடிப்பதில்லை?? சிங்கமோ, நரியோ , கரடியோ.. பிடிக்கிறது..
சிங்கம், கரடி, நரி மீதான பாசம் என தோன்றவில்லை.. சிறுத்தையை பிடிக்கவில்லை.. அவ்வளவே..
காரணம்: சிறுத்தைகளின் தவறாகவும் இருக்கலாம்..
வேடர்களுக்கும் , சிறுத்தைகளுக்கும் மட்டுமே வெளிச்சம் ! எதுவாக இருந்தால்லும் லாபம் என்னவோ விலங்குகளுக்கு மட்டுமே, வேடர்களுக்கு இல்லை..
 



என்ன முகமூடி !! survival of the strongestல் அதிக நம்பிக்கை உண்டா...
எனக்கு survival of the fittest தான் ரொம்ப பிடிக்கும்
 



வீ.எம்... கடந்த சில நாட்களாக உங்கள் கருத்துக்களை பார்த்து வருகிறேன். தங்கருக்கு ஒரு நியாயம் குஷ்புவுக்கு ஒரு நியாயமா என்ற எண்ணத்தை அடித்தளமாக கொண்டே எல்லா இடங்களிலும் உங்கள் வாதம் இருக்கிறது. முதலில் அதை பற்றி தெளிவு பெருங்கள். நிறைய பேர் அது குறித்து பேசி இருக்கிறார்கள். நீங்கள் இஷ்டப்பட்டால் விச்சுவின் இந்த பதிவில் இருந்தும் ஆரம்பிக்கலாம்.

நீங்கள் ஏற்கனவே உங்கள் நிலையில் தெளிவாகவே இருப்பதாக கருதினால், என் பதிவுக்கு வருகை தந்து கருத்திட்டதற்கு நன்றி
 



நன்றி கணேஷ்.

survival of the fittest :: அந்த சித்தாந்தம்தான் காவலர்கள் என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது
 



இது மான் வேட்டையல்ல காட்டு பன்றி
வேட்டை. மானில் கவரிமான் பற்றி படித்ததுண்டா? பன்றியின் குணம் அனைவரும் அறிந்ததே. பன்றியின் கறி மூலசூட்டுக்கு நல்லது என்று எங்கோ படித்த நினைவு.
 



சில பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அலட்சியப்படுத்தும் மனநிலைக்கு வந்து நாளாச்சி வீ.எம்

//செய்வது சிறுத்தைகள் என்பதாலேயே.. அது பசிக்காக செய்தாலும் , ருசிக்காக என்று வாதிடும் வேடர்களும் இருப்பார்கள்.. !

இந்த வேடர்கள், சிங்கங்கள் ருசிக்காக எதை புசித்தாலும்... பாவம் அதற்கு பசி என்று சொல்லுவார்கள்.. இல்லையெனில் . .. ருசிக்காகவே என்று இருந்தாலும் என்ன தப்பு என்பார்கள்..

இங்கே அந்த வேடர்களுக்கு பசியா, ருசியா என்பது பிரச்சனை இல்லை... சிறுத்தையா இல்லை வேறு விலங்கினமா என்பதில் தான் அவர்கள் கவனமெல்லாம்..

சில வேடர்கள் தான் அது சிறுத்தையா , சிங்கமா என பாராமல் .. பசியா, ருசியா என்று பார்க்கிறார்கள். ..என்ன செய்வது..

ஏன் சிறுத்தையென்றால் பிடிப்பதில்லை?? சிங்கமோ, நரியோ , கரடியோ.. பிடிக்கிறது..
சிங்கம், கரடி, நரி மீதான பாசம் என தோன்றவில்லை.. சிறுத்தையை பிடிக்கவில்லை.. அவ்வளவே..
காரணம்: சிறுத்தைகளின் தவறாகவும் இருக்கலாம்..
வேடர்களுக்கும் , சிறுத்தைகளுக்கும் மட்டுமே வெளிச்சம் ! எதுவாக இருந்தால்லும் லாபம் என்னவோ விலங்குகளுக்கு மட்டுமே, வேடர்களுக்கு இல்லை..
//
இந்த பின்னூட்டத்தை படித்துவிட்டு ஒரு முறை யார் எழுதியது என்று மீண்டும் பார்த்தேன் வீ.எம், மகிழ்ச்சி...

நன்றி
 



:)

ஆனா ஒண்ணு தல, மான் முன்னாடி குட்டி சிறுத்தைகிட்ட ரொம்ப கொம்பு சீவிடுச்சுன்னு காட்டில இருக்கற நரி, முயல், தவளைக்கெல்லாம் தெரிஞ்சுபோக அதுனால சிறுத்தைங்களுக்கு கோவமாப் போச்சு. காத்துகிட்டு இருந்து இப்போ ரவுண்ட் கட்டி பெரிய சிறுத்தையெல்லாம் பிராண்டறாங்க..இதுல ருசி, பசினெல்லாம் இல்ல. காட்டுக்கு யார் குட்டி ராஜான்னு கௌரவப் பிரச்சனை. காட்டில இதெல்லாம் சகஜமப்பா..

கணேஷ், survival of the strongest தான் மனுஷங்கள பொறுத்த வரைக்கும்னு நான் நினைக்கிறேன்.
 



வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்..
பாதை மாறிய பயணம்..
 



// பன்றியின் கறி மூலசூட்டுக்கு நல்லது என்று எங்கோ படித்த நினைவு. // நீங்க சாறு குடிப்பவரா? ஸாரி படிப்பவரா?

***

// சில பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அலட்சியப்படுத்தும் மனநிலைக்கு வந்து நாளாச்சி வீ.எம் // இது தன்னிறக்கமா, புலம்பலா, கர்வமா, செய்தியா ஒண்ணுமே புரியலையேப்பா... பதிவுகளையும் பின்னூட்டங்களையும் அலட்சியப்படுத்துவது சொந்த முடிவா குழலி... எனில் என்ன அளவீடுகள் வைத்திருக்கிறீர்கள்... ப்ரைவஸி கெட்டுபோகாதென்றால் எந்தெந்த சைட்/பின்னூட் எந்தெந்த அடிப்படை என்று சொல்லலாமே (உங்களுக்கே தெரியாது, அது உங்களை பின்பற்றுவோருக்கு சௌகரியமாக இருக்குமே என்பது)...

***

இராமநாதன், இன்னும் கொஞ்ச நாள்ல காட்டுல ஒரு திருவிழா நடக்கும் அப்ப பாருங்க குட்டி ராஜா ப்ரச்னைய... எலி, நரியெல்லாம் சிங்க தா(த்)தா கூட ஓடி போயி ஒட்டிக்கும்... சிறுத்த மட்டும் தனியா புலம்பிகிட்டு இருக்கும்... ஏன்னா மான் வேட்டை வேற மயில் வேட்டை வேற பாருங்க...
ஆமா இங்கிலிஸ்காரன் வேசத்துல இருக்கீங்களே... காரு ஓட்டும்போது காத்தாட வேட்டி கட்டிகிட்டு ஓட்டினா காரு ஓடாதான்னு இன்னும் உங்கள ஆரும் கேக்கலியா?

***

தெருத்தொண்டன் வர வர உங்க பேச்சே "%&#^$&" மாதிரி ஆகிப்போச்சி... 13 அர்த்தம் தெரியுது உங்க சிறுக்குரல்ல
 



நன்றி முகமூடி,
விச்சு வின் பதிவை ஏற்கனவே படித்துவிட்டேன் தல, கருத்தும் போட்டிருந்தேன்..
தங்கர் என்று இல்லை.. யாராக இருந்தாலும் ஏதோ ஒரு அவசரத்துல தப்பா ஒன்னு பேசிட்டா .. அதை எதிர்க்கலாம் னு தான் சொல்றேன்.. தங்கரும் எனக்கு ஒன்னுதான், குஷ்புவும் ஒன்னுதான்..

எனக்கென்னமோ ரெண்டு பேரும் பேசியது தப்புனு தோனுது..

சரி விடுங்க தல.. இந்த டாபிக் போரடிக்குது.. பேசினானங்க.. அப்படி சொல்லல .. பத்திரிகை தப்பா போட்டுடாங்கனு சொன்னாங்க.. அப்புறம் மன்னிப்பு கேட்டுட்டாங்க..
நாம அதை மறந்துட்டு.. வழக்கமான நம்ம பதிவுகளுக்கு போகலாம்..

ப ம க கட்சி வேலை நிறைய இருக்கு :) எப்போ மாநாடு அறிவிக்க போறீங்க?
கதை போட்டி மாதிரி வேற ஏதாச்சு போட்டி அறிவிச்சீங்கனா நல்லா இருக்கும் தல..
 



வேட்டையாடபடுபவற்றுள்
மான்களும் இருக்கின்றன

வேட்டையாடுவதோ
சிறுத்தைகள் மட்டும்ல்லை.

கொண்டாடிக்களிப்பதோ
நரிகள் மட்டுமே.
D.Selvaraju
 



சரி, உங்க கருத்து ??