<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கலாச்சார த். தூ.. யவர்கள்


Thanks: LE COIN DE L'ENIGME
ஃபாஸிஸ்டுகள் ஒன்று கூடி கலாச்சாரத்தேர் இழுக்கிறார்கள்...

புடவை கட்டி என்றிருந்த கலாச்சாரத்தை விமான நிலையம் என்றால் "காட்டி" என்றாக்கிய மகளிர் அணி இன்று புடவையை இறக்கி துடைப்பத்தை தூக்கும் அளவு வளர்ச்சி அடைந்திருக்கிறது...

அடங்க மறு என்று அறைகூவல் விடுத்தவன் அடக்கி ஆள ஆசை கொள்கிறான்... தளைகளை களைய புறப்பட்டவன் தனக்குத்தானே மாயவிலங்கு பூட்டி தேட முடியாத அளவு சாக்கடை சகதிக்குள் புதைந்துவிட்டது கண்டு மருகி நிற்கிறது கூட்டம்.

உழைப்பிற்கு காசு கேட்டவர்களை விபச்சாரிகள் என்றவன் செருப்பெறிவதை தமிழ் பண்பாட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டமாக கருதுகிறான்... சாதிக்காக சமுதாயம் வெட்டியவனோ மும்பைக்கு "நாடு" கடத்த கோருகிறான் ...

நீ ஒழுங்கா இருந்தா அவன் ஏண்டி தறிகெட்டு போகப்போறான் என்கிறது பண்பாடு... அதற்கு கணவனே கண்கண்ட தெய்வம் மட்டுமல்ல 'கள்' ஆனாலும் கணவன் 'full' ஆனலும் புருஷன்தான்...

அடிச்சே கொல்றானா... அங்கியே கெடந்து செத்தாலும் பரவாயில்ல, இங்க மட்டும் வாழா வெட்டியா வராத என்கிறது கலாச்சாரம்...

அவன் ஆம்பிளைடி, அப்படித்தான் இருப்பான் பொம்பள நீ அனுசரிச்சி போவியா என்பதன் பெயர் காட்டுபஞ்சாயத்து...

கையை பிடித்து இழுத்தவர் மாமனாராய் மட்டுமல்ல கௌரவமான ஆம்பிளையாகவும் இருப்பதால் கைது செய்ய முடியாது... நீ எல்லாரும் பார்க்க கோர்ட்டில் உன் புருஷனுடன் கை கோர்த்து நட... ஜோரா ஒரு முறை கைதட்டுங்க... ஆடுறா ராமா... ஆடுறா ராமா... என்கிறது நாட்டு பஞ்சாயத்து

போர்னோ சைட்டில் படம் டவுன்லோடு ஆகும் காத்திருப்பில் பியர் திறந்து கொண்டே, கேவலம் ஒரு நடிக நம்ம பண்பாட்ட கேவலப்படுத்திட்டா பாருடா என்று எக்காளமிடுகிறது அயல்நாட்டு தமிழ்பாடு


ஓட்டு போடும் வயது வந்தால் காதலிப்பதா... கைது செய்கிறேன்... போய் அம்மா அப்பாவை அழைத்து வா என்று சொன்ன கமிஸார் கமிஷனர் வாழும் ஊரில் கல்யாணத்துக்கு முன் பாதுகாப்பாக உடலுறவா... அபச்சாரம் அபச்சாரம்...

தமிழ் சொந்தங்களே, அவசரப்பட்டு செருப்பையும் துடப்பத்தையும் கீழே போட்டு விடாதீர்...தமிழன் பாதுகாப்பற்று உடலுறவு கொள்வானா என்றெல்லாம் எண்ணாமல், நமது கலாச்சாரத்தையே கேவலப்படுத்தும் "பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை அணிவீர்" என்ற விளம்பரத்துக்கு தார் அடிக்க திரண்டு வாரீர்...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


பின்னிட்டீங்க தல!
 



Mugamoodi,

The issue was blown up because Khushboo defended her words and gave another interview to Dailythanthi.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=211956&disdate=9/24/2005

In that she said the following

``GÁ ÚTyzeh LP]• ÙR¡«TYŸL· G‹R LXÖNÖW†ÛR T¼½ ÚTrf\ÖŸL·? R–²SÖyz¥ ÙNeÍ T¼½ ÙR¡VÖRYŸL· C£ef\ÖŸL[Ö? GšyÍ T¼½ ÙR¡VÖRYŸL· C£ef\ÖŸL[Ö?

‡£UQ†‰eh ˜Á `ÙNeÍ' ÛY†‰eÙLÖ·[ÖR B-ÙT G†RÛ] ÚTŸ C£ef\ÖŸL·?
"
I think these words were uncalled for. Do you think that most of the people in TN are having pre-marital sex???
 



Excellent! Keep it up!
 



கொஞ்சம் இதையும் பாருங்களேன்
ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்

 



அருமை முகமூடி. சும்மா நச்சுன்னு இருக்கு.

என்னுடைய தருமனும் தருமமும் படித்துப் பார்த்தீர்களா?
 



பின்னி பெடலெடுத்துட்டீங்க.
 



இந்த விசயத்தில் திருமாமீதும் ஏனையோர் மீதும் என்பார்வை உங்களைப் போன்றதே.
நல்ல பதிவு. நன்றி.
 



nethi adi thalaiva,
supero super...
paratta varthaigale illai
 



என்ன சொல்றதுன்னு தெரியல முகமூடி சார்
 



என்னப்பா நடக்குது?

குஷ்பு என்ன சொன்னாங்க,'கல்யாணத்துக்கு முன்னாலே எல்லாப் பொண்ணுங்களும் செக்ஸ் வச்சுக்கணுமுன்னா?'
இது அவுங்கவுங்க சொந்த விருப்பம் இல்லையா? அப்படி வச்சுக்கறவங்க இந்தக் கழிசடை( ங்கறது தெரியாமத்தான்!)
கிட்டே இருந்து நோய் பிடிச்சுக்கப்போகுது, தேவையில்லாம புள்ளைங்களைவேற பொறந்துறப்போகுது. அதனாலே
ஜாக்கிரதையா இருங்கோ'ன்னு சொன்னது மெய்யாலுமா தப்புங்கறீங்க?

இது உலகத்துலே இருக்கற எல்லாப் பொம்பிளைங்களுக்கும்தானே?

ச்சின்னச்சின்னதா வீடுங்க வச்சுக்கிட்டு இருக்கற ஆம்புளைங்க, குறிப்பா அரசியல்வாதிங்கதான் ச்சும்மா இருக்கற
பொம்பிளைங்களை உசுப்பிவிட்டுகிட்டு கலாட்டா செய்யறாங்க.

விதவைத் திருமணம் செய்யறதை ஆதரிக்கிறீங்கல்லே, அப்ப அந்தப் பொண்ணு ரெண்டாங்கல்யாணம் செய்யறப்ப
'கன்னிப் பொண்ணு'ன்னு விளம்பரம் செய்யணுமா?

அட போங்கப்பா. போய் வேலையைப் பாருங்க.
 



நன்றி சுதர்சன். ராம்கி, அனானிஸ், பாண்டி, கொழுவி & கணேஷ்.

ராகவன் உங்கள் கருத்தை இன்னும் முழுமையாக படிக்கவில்லை... ஆரம்பித்தேன், ஆனால் இன்னும் முடிக்கவில்லை. தைக்கும் அளவு சொல்லியிருப்பீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

துளசியக்கா... இங்க நிறைய பேருக்கு என்ன நடக்குதுன்னு புரியலைங்கிறது ஒரு பக்கம். ஆனா தலைவரு சொன்னதுக்கு மேல சிந்திக்க வேணாமுன்னும் சிலரு மட்டையடிக்கிறாங்க. அவங்கள ஒன்னும் பண்ண முடியாது. சில தலைவருங்க கருத்து சொல்லாம இருக்காங்க. அது எவ்வளவோ மேலு... அவங்களுக்கு நன்னி...
 



குழலி,

அவரவர் மனசாட்சியிடம் கேட்க சொல்லியிருக்கிறீர்கள்... "கலாச்சார த். தூ.. யவர்கள் நூற்றுக்கு நூறு எடுப்பார்கள் என நம்புவோமாக..." என்று அடுத்தவர் மனசாட்சிக்குள் புகுந்து பார்க்க ஆசைப்படுகிறீர்கள். உங்கள் தளமும் என் தளமும் வேறென்று ஸ்வீட் ஸ்டாலிலேயே தெரிந்து கொண்டேன். சும்மா விளம்பரம் கொடுத்திருப்பீர்கள் என்றெண்ணாமல், இப்பதிவில் சுட்டி கொடுத்ததால் உங்கள் பதிவுக்கு தொடர்பானதாக எண்ணியே உங்கள் பதிவில் "நாங்க உண்மைய சொன்னா, அது திருமாவுக்கும் ராமதாஸுக்கும் புடிக்காம போய் எதையாவது தூக்கிகிட்டு மகளிர் அணி வூட்டு முன்னாடி வந்திருச்சின்னா... இதில் எந்த கேள்விக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதையும் உங்க சன நாய்க தலைவர்களிடம் கேட்டுச்சொல்லுங்கள்..." என்று சொன்னேன். அதன் அர்த்தம் இதில் பல விஷயங்களை நமது தலைவர்கள் தமது கலாச்சார குறியீடாக கொள்வார்களே... இதற்கெல்லாம் பதில் சொல்லும் அளவு உனக்கெவன்டா சுதந்திரம் கொடுத்தது என்று கோர்ட்டுக்கு இழுப்பார்களே என்பதுதான். "உண்மையை எங்களிடம் ஏன் சொல்கின்றீர் உம்ம மனசாட்சியிடம் சொல்லுங்கள்" என்பது உங்கள் பதில்... நன்றி குஷ்புவும் தன் மனசாட்சியோடு இருந்திருக்கலாம். இனி தமிழகத்தில் அனைவரும் இதே பாணியை கடைபிடிப்பார்களாக.

என்னை பொறுத்த வரை உங்களின் பல கேள்விகள் - இவையெல்லாம் ஆணாதிக்க கூறுகள்தானே என்று சொல்ல முயலும் உங்கள் நோக்கத்தில் பார்த்தால் - அர்த்தமற்றவை. உங்களின் கேள்விகள் உங்கள் வாழ்க்கை முறையை ஒத்து உள்ளது. உங்கள் வாழ்வும், உங்கள் வாழ்க்கை சூழலும் நீங்கள் கேட்ட பல கேள்விகளை கேட்க வைக்கிறது. உடனே ஏதோ ஒரு கேள்வியை பிடித்து இதிலென்ன தப்பிருக்க முடியும் என்று தொங்காதீர்கள். உலகம் பெரிசு என்பதை உணராவிட்டாலும் பரவாயில்லை... அர்த்தமற்றது என்று நான் சொன்னவற்றை தவிர மற்றதற்கு ஆம் சொல்லும் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை உணருங்கள்.. அவர்கள் எல்லாம் தாம் முற்போக்குவாதிகள் என்றோ ஆணாதிக்கத்தை அறுத்தவன் என்றோ தினமும் கண்ணாடி முன் நின்று பெருமைப்பட்டுக்கொள்வதில்லை. அவர்களின் வாழ்க்கை முறையே அப்படித்தான். உங்களால் அவர்களை புரிந்து கொள்ள முடியாது. அதிக பட்சம் அவர்களை பற்றி அறியக்கொடுத்தால் நீங்களும் உங்கள் நண்பர்களும் 'நல்ல குடும்பமடா' என்று எள்ளி மகிழலாம்.

சாட்டையடி கேள்விகள், பலர் புண்பட்டிருக்கலாம் என்றெல்லாம் உங்களை நீங்களே பாராட்டி மகிழ்கிறீர்கள். ஏமரா மன்னன் கதையாக நுனிப்புல் மேய்ந்து உங்கள் மீது ஒளிவட்டம் பாய்ச்சும் கூட்டம் வேறு அதிகமாகிவிட்டது.. உங்க ரேஞ்சே வேற என்பதை தவிர வேறென்ன சொல்வது...
 



அனானிமஸ்,

``என் பேட்டிக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் எந்த கலாசாரத்தை பற்றி பேசுகிறார்கள்? தமிழ்நாட்டில் செக்ஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்கிறார்களா? எய்ட்ஸ் பற்றி தெரியாதவர்கள் இருக்கிறார்களா?
திருமணத்துக்கு முன் `செக்ஸ்' வைத்துக்கொள்ளாத ஆண்-பெண் எத்தனை பேர் இருக்கிறார்கள்?

என்றிருக்கிறது அந்த பேட்டியில். இப்பொழுதெல்லாம் விடலைப்பசங்க யாரு பெரியவங்களுக்கு மரியாதை தர்றா என்று சொல்லப்படுவதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அதன் அர்த்தம் பெரியவங்களுக்கு மரியாதை தராத விடலைகளின் எண்ணிக்கை கூடி விட்டது என்பதாகவே அர்த்தம் கொள்கிறேன்
 



You spoke the truth. It is really sad to see that our leaders have chosen to be the guardian of morality which they themselves lack so much.
 



தனிமனிதத் தாக்குதல்களைக் குறைச்சு சம்பவங்களை மட்டும் உங்கள் பாணியில் உரிச்சீங்கன்னா இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
 



// உழைப்பிற்கு காசு கேட்டவர்களை விபச்சாரிகள் என்றவன் செருப்பெறிவதை தமிழ் பண்பாட்டுக்கு ஆதரவாக நடக்கும் போராட்டமாக கருதுகிறான //
இன்னும் என் பார்வையை அகலப்படுத்த வேண்டும். காலம் கற்றுக்கொடுக்குமென்று நம்புகிறேன். உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள்
 



//தமிழ் சொந்தங்களே, அவசரப்பட்டு செருப்பையும் துடப்பத்தையும் கீழே போட்டு விடாதீர்...தமிழன் பாதுகாப்பற்று உடலுறவு கொள்வானா என்றெல்லாம் எண்ணாமல், நமது கலாச்சாரத்தையே கேவலப்படுத்தும் "பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை அணிவீர்" என்ற விளம்பரத்துக்கு தார் அடிக்க திரண்டு வாரீர்...//
 



//தமிழ் சொந்தங்களே, அவசரப்பட்டு செருப்பையும் துடப்பத்தையும் கீழே போட்டு விடாதீர்...தமிழன் பாதுகாப்பற்று உடலுறவு கொள்வானா என்றெல்லாம் எண்ணாமல், நமது கலாச்சாரத்தையே கேவலப்படுத்தும் "பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறை அணிவீர்" என்ற விளம்பரத்துக்கு தார் அடிக்க திரண்டு வாரீர்...//

யெப்பா என்னா பன்ஞ்சுபா(punch) இது! களக்கீட்டீங்க
 



nalla article boss!
 



அட போங்கப்ப,

குஷ்பு, தன் மாமவை பற்றி சொல்ல போய், அதங்க சுந்தர் சி,
படித்தவர்கள் கன்னித் தன்மையை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று சொன்னார்.
அதற்கு இவ்வளவு எதிர்ப்பா, ரொம்ம ஓவரா தெரியலையா ?

கொப்பரதேங்கா !
 



திருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும்

மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்தி விட்டன. குறிப்பாக, பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப் போலத்தான் மக்களில் சரிபகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிப்போடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிராமணன் - சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன் - பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?

"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?

'விடுதலை' 28.6.1973
 



அப்படி போடுங்கோ காஞ்சி. எல்லாத்தையும் போட்டுட்டு எழுதுனது யாருன்னு போடலையே!! ஏன் பயமா? விடுதலையில் எழுதியவனையும் குஷ்பூவைப் போல செருப்பால் அடிக்க வந்து விடுவார்கள் என்று? அட அப்படிச் சொன்னவர் ஏதோ சினிமா நடிகை குஷ்பூ அல்லவே, தமிழ் நாட்டின் தந்தை அல்லவா? பெரியார் அல்லவா? ஈ வெ ராமசாமி நாயக்கன் அல்லவா? ஏன் குஷ்புவை அடிக்கும் இதே கூட்டம் ஈ வெ ரா சிலைக்கு மாத்திரம் ரோஜாப்பூ மாலை போடுகிறது. செருப்பு மாலை போட வேண்டியதுதானே? அப்படி ஈ வெ ரா சிலைக்கு செருப்பு மாலையும், விளக்குமாத்தடியும் கொடுக்கும் தைரியம் இந்த திருமா ராமதாஸ் கும்பலுக்கு இருக்கிறதா? ஈ வெ ரா கெடுக்காத தமிழ் பண்பாட்டையா குஷ்பூ கெடுத்து விட்டார்? ஐயா ஈ வெ ரா சொன்னா அவருக்கு சிலை, தந்தை என்று பட்டம் (என்னமோ இவனுக்குத்தான் தமிழ்நாட்டுல அத்தைனை பேரும் பிறந்த் மாதிரி) அதையே குஷ்பூ சொன்னா செருப்படியா? விளக்குமாற்று பூசையா? என்னையா நியாயம்? ஆகவே திருமாவே, ராமதாசே, அனைவரும் வாருங்கள் நாம் தமிழ் பண்பாட்டை கெடுத்த ஈ வெ ராவின்சிலைக்கு செருப்புமாலை போட்டு விடு வந்து குஷ்பூவை கவனித்துக் கொள்ளலாம். வாருங்கள் ஈ வெ ராவின் சிலைக்கு விளக்குமாத்து பூசை போட்டு விட்டு வந்து குஷ்பூவை விளக்குமாற்றால் அடிக்கலாம். குஷ்பூவாவது ஒரு நடிகை, அவர் சொன்னது ஏதும் அம்பலம் ஏறப்ப்பொவதில்லை. மேலும் குஷ்பூ அப்படியெல்லாம் எல்லோரும் நடக்க வேண்டும் என்று அறிவுரை சொல்லவில்லை, பிரச்சாரம் பண்ணவில்லை, பத்திரிகை நடத்தவில்லை. குஷ்புவை யாரும் அன்னை என்று அழைத்து முக்கு முக்கு சிலை வைக்கவில்லை. ஆனால் ஈ வெ ராவோ தமிழினக் காவலர் ஆயிற்றே, பண்பாட்டுப் பாசறை ஆயிர்றே, ஆகவே அவரை அடித்து விட்டு குஷ்பூவை அடிப்பதுதானே நியாயமாக இருக்கும்?
 



//எல்லாத்தையும் போட்டுட்டு எழுதுனது யாருன்னு போடலையே!! ஏன் பயமா?//

இப்படியான கருத்தை சொல்வதற்கு பெரியாரைத் தவிர எவனுக்கும் தைரியம் கிடையாது. தற்போதைய "விளக்குமாரு" போராட்டம் என்பது தமிழ்நாட்டில் பெரியாரிஸத்தின் தோல்வியையே காட்டுகிறது. என்ன செய்வது?
 



காஞ்சி, எனக்கு குஷ்பு விவகாரத்தில் நுழையும் உத்தேசம் இல்லை. ஆனால் வேறு ஒரு சந்தேகம் // முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா? 'விடுதலை' 28.6.1973 // முஸ்லிம் ஏன் அப்படி செய்கிறான் என்றால் அவன் என்றோ எழுதப்பட்ட புனித நூலின் கருத்துக்களை இன்றும் அப்படியே பின்பற்றுவதால். நீங்கள் எடுத்தாளும் கருத்தும் 1973 என்று உள்ளது. சட்டத்திருத்தம் போல் கருத்து திருத்தம் ஏதும் காலாத்துக்கேற்ப மாற்றியெழுதப்பட்டிருக்கிறதா? 1973 கருத்துக்களை இன்னும் எத்துனை நூற்றாண்டுகள் பயன்படுத்துவீர்கள்? உங்களுக்கும் முஸ்லீமுக்கும் என்ன வித்தியாசம்? நன்றி.

குறிப்பு - முஸ்லீம்களை தவறான நோக்கில் எழுதவில்லை. என் கேள்வி வேறு.
 



பெண் விடுதலையில் நம்பிக்கைகொண்ட அம்மாமார்களே, தங்கரின் பேட்டியை குமுதம்
ரிபோர்ட்டரில் காணுங்கள். பெண் என்றால் கண்ணாகி போலதான் இருக்க வேண்டும்.
இதையே என் படங்களிலும் காட்டியிருக்கிறேன்னு பேட்டி குடுத்திருக்காருய்யா.
கள் ஆனாலும் கணவன் full ஆனாலும் புருசன்.
இதுதான் தமிழ் கலாச்சாரமாம். பெண்களை இழிவு படுத்தும் இவருடைய
வீட்டு வாசலில் கம்ப்யூட்டர், மவுஸ் கொண்டு சென்று போராட்டம் நடத்த வேண்டும்.
எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி பெண்களை அடிமைப்படுத்தும் கருத்தை
பேட்டியில் சொல்ல்வார்? இவர் மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம் செய்ய வாரீர்.
 



//என் படங்களிலும் காட்டியிருக்கிறேன்னு பேட்டி குடுத்திருக்காருய்யா//

ஆமாம். தமிழர் பண்பாட்டை நல்லாவே காட்டியிருப்பார்... அதாவது அவரைப் பொறுத்தவரை குருவி கொடஞ்ச கொய்யாப்பழமும், ஒரு விதவைப்பெண் முன்னாள் காதலனை அதுவும் வேறொரு பெண்ணை திருமணம் செய்து குழந்தைகளுடன் மகிழ்வாக குடும்பம் நடத்துபவனை நினைத்து "பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா..என்று கனவு காண்பதுவும்

அப்புறம் சொல்ல மறந்த கதையிலும் புஷ்பவனம் குப்புசாமியின் கதாபாத்திரத்தின் மூலமும், மிக நல்லவனாக சித்தரிக்கப்பட்ட கதாநாயகனின் முகத்தில் மாமனார் காறித்துப்புவதிலும் .. அவனது மனைவி இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எதிர்ப்பே காட்டாமல் வாயில்லா பூச்சியாக இருப்பதும்தான் அவருக்கு தமிழ் பண்பாடாக தெரிகிறது!!! கலிகாலம்.

இதையெல்லாம் ஆழ்மனதின் சீழ்பிடித்த எண்ணங்கள் என்று யாரும் சொல்லப்டாது... அவரை பொறுத்தவரை இதான் தமிழ் பண்பாடோ என்னவோ...


அதே அனானி ;)
 



சொல்ல மறந்தது..
தென்றல் படத்தில் உமாவின் பாத்திரப்படைப்பு... என்னத்த சொல்ல

அதே அனானி
 



தென்றல் படம் செயகாந்தன் வாழ்க்கையாமே ஆமாவா இல்லையா?
 



//முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.//

குழந்தை திருமணம் இன்று இந்து சமூகத்தில் ஒழிந்துவிட்டது. முகத்தை மூடி பெண்களை நடமாட விடும் பழக்கம் முஸ்லீம் சமூகத்தில் ஒழிந்துவிட்டதா? அல்லது ஒழியத்தான் வாய்ப்பு உண்டா?
 



http://thatstamil.indiainfo.com/news/2005/09/28/thankar.html
இதுகுறித்து தங்கர்பச்சான் கூறுகையில்,

நமது சமுதாயத்தில் ஒரு ஆண் எப்படி வேண்டுமானாலும் வாழ முடியும். ஆனால் பெண்களால் இப்படித்தான் வாழ முடியும் என்பதைத்தான் எனது திரைப்படங்களில் நான் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். தமிழ்ப் பெண்களுக்கென கலாச்சார¬ம், ஒழுக்க நெறியும் உண்டு.

அழகி, தென்றல், இப்போது வெளியாகியுள்ள சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி என எனது படங்கள் அனைத்துமே தமிழர் கலாச்சாரத்தையும், தமிழ்ப் பெண்களின் ஒழுக்க நெறியையுமே சுட்டிக் காட்டியுள்ளன.

அப்படிப்பட்ட எனக்கே சமீபத்தில் அவமானம் நேர்ந்தது. ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அதே அவமானம் நேர்ந்துள்ளது. திருமாவளவன் போன்றவர்கள் இதைத் தட்டிக் கேட்டுள்ளனர்.

இது ஆரோக்கியமானது, மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் நான் தூண்டி விட்டுத்தான் திருமாவளவன் தீவிரமாக இறங்கியுள்ளார் என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன், அதில் உண்மையும் இல்லை.

உண்மையில் எனக்கும், திருமாவளவனுக்கும் இடையே சில விஷயங்களில் கருத்தொற்றுமை இருந்தாலும், பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகளும் உண்டு. என÷வ் இந்தப் பிரச்சினைக்கும், எனக்கும், திருமாவளவனுக்கும் இடையே தொடர்பு எதுவும் இல்லை.

தமிழர்களின் உணர்வுகள்தான் இப்போது போராட்டத்தில் குதித்துள்ளன என்றார் தங்கர்பச்சான்.
 



"இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே"

ஐயா காஞ்சியாரே, மேலே சொன்ன உபதேசத்தை உதிர்த்தவர் உங்கள் தந்தைதானே? கல்யாணம் என்பதையே சட்ட விரோதம் ஆக்க வேண்டும் என்று ஊருக்கு உபதேசிக்கும் புடுங்கி என்ன மசுத்துக்கு ஒண்ணுக்கு ரெண்டு தடவ கல்யாணம் பண்ணிக்கிட்டானாம்? அதுவும் சாகப் போற வயசுல தன் பேத்தி வயசில இருக்குற ஒரு பெண்ணை? இந்த மாதிரி ஆளுங்களையெல்லாம் தந்தை என்றும் பெரியார் என்றும் சொல்லி உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்கிறீர்கள். தான் சொன்ன உபதேசத்தை தனக்குக் கூடக் கடைப் பிடிக்காதவனெல்லாம் தமிழர்களுக்குத் தந்தையாம்? பெரியாராம். வெங்காயம். உமக்கெல்லாம் வெட்கமாயில்ல? த்தூ ...
 



தேவை பெண்ணால் எழுதப்பட்ட ஒரு பெண் மதம்.
 



www.dinakaran.com/daily/2005/Oct/05/politics/PoliNews10.html
 



திருமணம் குறித்து காஞ்சி பிலிம்ஸ் இட்ட பதிவினை நான் ஆமோதிக்கிறேன். பண்பாடு, கலாச்சாரம், திருமணம், புனிதத்தன்மை என்றெல்லாம் பெண்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கின்ற நிலை ஒழிய வேண்டுமானால் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். திருமணம் என்ற ஒப்பந்தத்தில் (அப்படிச் சொல்வதும் இப்பொழுது ஃபாஷன்) இழப்பு என்றைக்கும் பெண்ணுக்குத்தான். அவன் உமி கொண்டு வருவான். அவள் அவல் கொண்டு வருவாள். இருவரும் ஊதி ஊதித் தின்பார்களாம்.
 



சரி, உங்க கருத்து ??