<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கூழ், களி, வாத்து மற்றும் இதர பல...


இப்பதிவில் இன்றைய திகதிக்கு மிகவும் முக்கியமான விஷயங்களான

கூழ் சாப்பிடும் முறைகள்?
களி சாப்பிட எளிமையான 5 வழிகள்?
உலக பதிவுகளில் முதல் முறையாக ஃப்ரஷ் வாத்து படம் பிடிப்பது எப்படி?
போன்ற விஷயங்களை நாம் பார்க்க இருக்கிறோம்.

****

கூழ் சாப்பிடும் முறைகள்

கூழ் கிண்டுபவர்கள் வீட்டிலிருந்து அழைப்பு வந்தால் நீங்கள் மறக்காமல் எடுத்துச்செல்ல வேண்டியது :: உங்கள் வாய், பல், நாக்கு, பாலீதீன் கவர், ரயில்வே கால அட்டவணை... அன்பாக கூழ் தருபவரிடம் இதையெல்லாம் கடனாக வாங்குவது டூ மச் அல்லவா...

கூழாளி உங்களுக்கு கூழ் பரிமாறும் விதத்தை வைத்தே உங்களுக்கு தேவையான சமாச்சாரங்கள் என்னவென்று அறிய முடியும். தேவையற்ற பொருட்களை பைக்குள் வைத்து விடவும். அவர்கள் வீட்டு வாண்டு நம் பொருளை பார்த்து விட்டு அதை கேட்டால், தர்மசங்கடமான நிலையை தவிர்க்க அதை கொடுத்துவிட்டு அப்புறம் அந்த குழந்தையை ஏமாற்றி எப்படி நம் பொருளை மீட்பது என்று எண்ணுவதிலேயே நேரம் போய்விடும். கூழ் சுகத்தை அனுபவிக்க முடியாது...

அவர்கள் குவளையிலேயோ, தம்பளிலேயோ கொடுத்தால், கூழ் குடிக்கும் நிலையில் இருக்கின்றது என்று அர்த்தம். உங்கள் வாய், நாக்கு ஆகியவற்றை நீங்கள் இப்போது உபயோகிக்க வேண்டும். முதலில் குவளையை வாயில் வைத்து குடிக்கும் பாவனையில், ஆனால் குடிக்காமல் கூழின் மணத்தை மட்டும் நுகரவும். பின் குவளையை சற்றே சாய்த்து ஒரு சொட்டு அளவில் கூழை ருசி பார்க்கவும். கூழ் ருசியாக இருந்தால் சுவாரசியமாக பேசிக்கொண்டே மேலும் குடிக்கலாம்... கூச்சம் பார்க்காமல் இன்னொரு குவளை கேட்டு வாங்கி குடிக்கவும்.

முக்காலே மூணு வீசம் கூழ், குடிக்க சகிக்காமல் இருப்பதற்கான சாத்தியம்தான் அதிகம்... இந்நிலையில் நீங்கள், நீட்டி முழக்கி ஒரு காமெடி நாடக நடிகரின் பாணியில் "எந்த வூட்டுல எந்த பொண்டாட்டி கூழ் பண்ணாலும் குடிக்க முடியலையேப்பா" என்று ஜோ கடியுங்கள்... அவர்கள் விழுந்து எழுந்து விழுந்து எழுந்து சிரிப்பார்கள். சிரிப்பின் இடையில் எந்திரிக்கும் சைக்கிள் கேப்பில் கூழை ப்ளாஸ்டிக் பேக்கில் ஊற்றிக்கொள்ளுங்கள். இப்போது நிம்மதியான ஒரு மனநிலை வரும். "அட சும்மா தமாசுக்கு... கூழ் சூப்பர்" என்று சொல்லிவிட்டு அதை ஒரே மடக்கில் குடிப்பதாக பாவலா செய்யவும். கவனம்... ஓவர் ரியாக்ட் செய்து மாட்டிக்கொள்ளாமல் செய்வதுதன் இங்கு மிகவும் அவசியம்.

அவர்கள் தட்டில் கூழ் கொடுத்தால், உங்களுக்கு ரயில்வே அட்டவணை தேவைப்படுகிறது என்று அர்த்தம். ரயில்வே அட்டவணையில், அவர்கள் வீட்டுக்கு மிக அருகில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு எப்போது அடுத்த ரயில் வருகிறது என்று பார்க்கவும். ஸ்டேஷனுக்கு 1/2 பர்லாங் தூரத்தில், ரயில் வரும் 20 நிமிடம் முன்னால் சென்று காத்திருக்கவும். ரயில் வரும் சத்தம் கேட்டால், தண்டவாளம் மிக அருகில் வந்து ரயில் வருகிறதா என்று ஒரு தடவைக்கு இன்னொரு தடவை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இவ்விஷயத்துக்கு டைமிங் மிகவும் அவசியம். யாராவது உங்கள் செய்கைகளை கவனிக்கிறார்களா என்று சுற்றிப்பாருங்கள். ரயில் சரியாக 300 அடி தூரத்தில் இருக்கும் போது, தண்டவாளத்தை நோக்கி ஓடுங்கள். குனிந்து கூழை தண்டவாளத்தில் வைத்து விட்டு மீண்டும் பழைய இடத்துக்கு வந்து நின்று கொள்ளுங்கள். ரயில் கூழின் மேல் கடந்து சென்ற பின்னால் உங்கள் கூழ் சாப்பிடும் பதத்தில் இருக்கும்... இப்போது பல்லை உபயோகித்து சாப்பிடவும்.

ரயில் கூழை கடக்கும் போது கூழ் உடைபடாமல் ரயில் தடம் மாறும் சாத்தியமும் இருப்பதை மறுப்பதற்கில்லை... உங்கள் கூழ் அனுபவத்தில் ரயில் தடம் மாறினால், கொடுங்க உங்க கைய... கங்கிராஜுலேஷன்ஸ்... நீங்கள் அடுத்த செய்முறைக்கு எந்த கஷ்டமும் படத்தேவையில்லை.

****


களி சாப்பிட எளிமையான 5 வழிகள்

1. கெட்டி கூழ், ரயில் தண்டவாளம், அதிர்ஷ்டசாலி
2. துப்பாக்கி
3. வீச்சறுவாள்
4. கையெறி குண்டு
5. அமைச்சர் மீது புகார்

****

உலக பதிவுகளில் முதல் முறையாக ஃப்ரஷ் வாத்து படம் பிடிப்பது எப்படி?

வாத்து படம் பிடிக்க தேவையானவை:

அட்லஸ்
கேபிள் வசதி உள்ள தொலைக்காட்சி
ஸ்னோ பூட்ஸ்
குளிர் கோட்டு, மங்கி கேப், கையுறை
சுருட்டு அல்லது பீடி
ஜாக் டானியல்ஸ்
சாக்கு பை அல்லது ஹாட் பேக்
கேமரா அல்லது மனம்

முதலில் அட்லஸை விரியுங்கள்.. வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய மூன்று திசைகளில் எந்த திசையில் உங்கள் வீட்டுக்கு மிக அருகில் பனிப்பிரதேசம் இருக்கிறதென்று பாருங்கள். தெற்கு வேண்டாம்... தென் ஹெமிஸ்பியரில் ஏதோ மாநாடு நடக்கிறதாம். களியும் அதை உடைக்க சுத்தியலும் தருகிறார்களாம். சுத்தியலால் மண்டை உடையும் சாத்தியமும் இருப்பதால் அத்திசையை தவிருங்கள்...

ஆச்சா.. இப்போது நீங்கள் கண்ட பிரதேசத்தில் பனி இருக்கிறதா என்று கேபிள் தொலைக்காட்சியில் பார்க்கவும். பெண் அறிவிப்பாளினி வானிலை அறிக்கை சொன்னால் நொடியில் சேனல் மாற்றி ஆண் அறிவிப்பாளன் சொல்லும் சேனலுக்கு செல்லுங்கள்... அறிவிப்பாளினியின் உடை, கம்மல் அலங்காரங்களை வீட்டுக்காரம்மா பார்த்தால் உங்கள் பயண நோக்கம் பக்கத்து கடைத்தெருவோடு முடிந்து வாத்துக்கு பதில் உங்களை நீங்களே படம் எடுக்கும் நிலைக்கு ஆளாவீர்கள்.

பனிப்பிரதேசத்தை பற்றி தெரிந்த பின், மற்ற அனைத்து சமாச்சாரங்களையும் எடுத்துக்கொண்டு நடந்தோ, ஓடியோ, பஸ் பிடித்தோ சௌகரியத்துக்கு ஏற்றார் போல் அவ்விடத்தை அடையவும். இப்போதுதான் பொறுமை மிகவும் அவசியம்... ஓடு வாத்து ஓட உறு வாத்து வருமளவும் காத்து நிற்குமாம் (பெரிய) வாத்து என்பதற்கேற்ப நீங்கள் மறைந்திருந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். சுருட்டு, ஜாக் டானியல்ஸ் ஆகியவற்றை துணைக்கழைத்துக்கொள்ளலாம்.

உங்கள் அதிர்ஷ்டம் அங்கே ஒரு வாத்து சோர்ந்து போகிறது பாருங்கள்... பனி தாங்க முடியவில்லை அதனால்... நம் ஹீரோ(யினி) அவர்தான்... காத்துக்கொண்டே இருங்கள். சற்று நேரம் கழித்து அது பனிக்குளிரில் உறைந்து விடும். உடனே நீங்கள் வைத்திருக்கும் சாக்குப்பை அல்லது ஹாட்பேக்கில் உறைந்த வாத்தை போட்டுக்கொண்டு வெது வெதுப்பான குளம் இருக்கும் திசையில் விரைந்து செல்லுங்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து. உங்களுக்கு. ஏனெனில் இன்னும் நீங்கள் சாப்பிடவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். வெது குளத்தை அடைந்ததும் அந்த உறை வாத்தை ரிலீஸ் செய்யவும்.

சற்று நேரம் கழித்து உறை நிலை கடந்ததும் உறை வாத்து உயிரோடு எந்திரிக்கும்... இந்த இடத்தில் நிறைய பேருக்கு மயிர் கூச்செறியும், உடல் சிலிர்க்கும், புல்லரிக்கும், ஏற்படும் பரவச அனுபவத்தை வார்த்தையில் சொல்ல இயலாது குணாவாகிவிடுவார்கள்...

எந்திரித்த வாத்து நீர்நிலை கண்ட உற்சாகத்தில் நீந்த ஆரம்பிக்கும்... இது மறுஜென்மம் எடுத்த வாத்து... நீங்கள் எடுக்க போகும் படம்தான் இதுவரை வந்த வாத்து படங்களிலேயே ஃப்ரஷ் ஆனதென்று - நீங்கள் பிடித்த சுருட்டு மட்டும் பீடியால் தீய்ந்து போனது தவிர மிச்சமிருக்கும் - மார் தட்டி சொல்லிக்கொள்ளலாம்... இப்போது உங்கள் கேமராவால் வாத்தை படம் பிடியுங்கள். கேமரா இல்லாதவர்கள் மனதால் படம் பிடியுங்கள். என்ன ஒன்று வலைப்பதிவில் போட முடியாது... அல்லாரும் உங்களை ஒரு பூச்சி போல (அ) குட்டி வாத்து போல பார்ப்பார்கள்... ஆக மனம் இல்லாதவர்கள் அந்த பனிப்பிரதேசத்துக்கு மீண்டும் சென்று மிச்சமிருக்கும் ஜாக் டானியல்ஸை மூக்கு முட்ட குடித்து விட்டு உங்கள் மீது பனியை போட்டுக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள்.

எச்சரிக்கை :: படம் பிடித்து முடித்தவர்கள், தண்ணீரில் விட்ட வாத்தை எக்காரணம் கொண்டும் மீண்டும் பிடிக்க முயற்சிக்காதீர்கள்... உங்கள் உடை நனைந்து விடும்.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//தென் ஹெமிஸ்பியரில் ஏதோ மாநாடு நடக்கிறதாம். களியும் அதை உடைக்க சுத்தியலும் தருகிறார்களாம்//

உடனே பல சுத்தியல்களை அனுப்பி வைக்கவும். அதில் ஒன்று கொஞ்சம் கனம் கூடியதாகவே இருக்கட்டும்.
ஆர்டர் ஆர்டர்
 



"உடனே பல சுத்தியல்களை அனுப்பி வைக்கவும். அதில் ஒன்று கொஞ்சம் கனம் கூடியதாகவே இருக்கட்டும்" -
துளசி, அந்த ஸ்பெஷல் சுத்தியல் முகமூடியைச் செல்லமாகத் தட்ட தானே..?
 



போட்டுக் குடுத்திட்டீங்களே தருமி ஸார் :-)

சரி சரி தட்டுங்கள் திறக்கப்படும்

கூழுங்கள் கொடுக்கப்படும்

ஜாக்டானியல்ஸ் டபுள்ஸ் பேஷுதப்பா :_))
 



தல தலை சுத்துது.. !!!!!

என்ன ஆச்சு... ரெண்டு வலைப்பூக்களும் எனக்கு சுத்தமா புரியல (சந்தோஷமா ;-)

ஒரு க்ளூவாவது குடுங்க...

முக்கியமான விஷயம்.. உங்க முகமூடிக்கு பின்னால உள்ள பெயரை நான் கண்டுபிடிச்சிட்டேன்.. :-D
 



தலையை எந்த பாறையிலும் இடித்துக்கொள்ளாமல் எப்படி மென்ட்டல் ஆவது?

உடனடியாக வந்து தற்போதைய வலைப்பூ பதிவுகளை படியுங்கள் , அது போதும்..
 



முகமூடி அண்ணா,

என்ன ஆச்சு உங்களுக்கு? ஏனிந்தக் கொலை வெறி? ஏதாச்சும் சுவாரஸ்யமா இருக்கும்னு வந்தா இப்படி புசுக்குன்னு போச்சே. இருந்தாலும் கூழ் குடிப்பது, களி தின்னுவது பற்றிய பல அரிய யோசனைகளை வழங்கிய உங்கள் பெருந்தன்மை வாழ்க.

ஒரு சந்தேகம் - நம்ப அரசியல்வாதிங்க உள்ள இருக்கும்போது உண்மையாவே களி சாப்பிடுவாங்களா? இல்ல சிக்கன் அறுபத்தஞ்சும் லேம்(ப்) பிரியாணியும்தானா?
 



// என்ன ஆச்சு உங்களுக்கு? ஏனிந்தக் கொலை வெறி? //

அனானி தம்பி.. இந்த இடுகை வெளிவந்த தேதியை பார்த்தீர்களா.. சனி, செப்டம்பர் 17, 2005. அப்போது ஏகப்பட்ட களி & வாத்து பதிவுகள் வந்துகொண்டிருந்தன.. விபரம சரியாக ஞாபகம் இல்லை. அதையொட்டி போடப்பட்டது இந்த பதிவு.
 



சரி, உங்க கருத்து ??