<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மந்திர கீர்த்தியும் ஆட்டுக்குட்டிகளும்


மந்திர கீர்த்தி :: ஏண்டா கோடங்கி... உன்னய நம்ம ஆடுகள கட்டித்தான வக்க சொன்னேன். எங்கடா போச்சி அதுங்க, பட்டியில காணும்


கோடங்கி :: எதுய்யா.. நம்ம சோமறி ஆட்டையா சொல்றீங்க

மகீ :: இவன் ஒருத்தன் தமிளுநாட்டுல இருந்துகிட்டு ஒளுங்கா தமிள் பேச தெரியாம.. அது சோமறி ஆடில்லடா... செம்மறி.. நான் அத மட்டும் கேக்கலடா அல்லா ஆட்டையும்தான்

கோ :: அதுங்க எங்கனா மேய போயிருக்குங்க.. போயி புடிச்சாரேன்...

கொஞ்ச நேரத்தில் செம்மமறி, வெள்ளாடு, குறும்பாடு மூன்றும் வருகின்றன

மகீ ஆடுகளிடம்:: இந்தா உங்கள பக்கத்து தோட்டத்துக்கு மேய போவேண்டாம்னு எத்தன தடவ சொல்றது... அங்க ஏன் போறீங்க...

ஆடுகள் :: (மண்டைய ஆட்டி) நீங்க சொன்னா சரிதான்

மகீ :: உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்...நான் சொல்ற தோட்டத்த தவிர மத்த எடமெல்லாம் ஒரே குப்ப...

ஆடுகள் :: (மண்டைய ஆட்டி) நீங்க சொன்னா சரிதான்

மகீ :: 10 வயல் தள்ளி ஒரு காடு இருக்கு, குளத்துக்கு அந்தாப்புல ஒரு கழனி இருக்கு.. அங்க மட்டும் போய் மேயிங்க.. அங்கதான் ஒங்க மொதலாளிக்கு மதிப்பு

ஆடுகள் :: (மனதுக்குள்) இவன் தொல்லை தாங்க முடியல... தானும் தோட்டம் வாங்க மாட்டான். இருக்கற தோட்டத்தையும் நொள்ள சொள்ளன்னுகிட்டு (ஆனாலும் பழக்க தோஷத்தில் மண்டைய ஆட்டி) நீங்க சொன்னா சரிதான்

மகீ, கோடங்கியிடம் :: அது சரி நம்ம வெள்ளாட்டுக்கு என்னமோ கண்ணூல கோளாறுன்னு ஆத்தா சொல்லிச்சே, அத புடிச்சி நம்ம கண்டாக்டருகிட்ட கூட்டிப்போ... நான் அப்பால வரேன்

****

கண் மருத்துவமனை

மருத்துவர் வெள்ளாட்டிடம்:: என்ன வெள்ள... இப்படி பேசாம இருந்தா எப்படி.. அந்த போர்டுல இருக்கற முதல் லெட்டர படி

வெள்ள :: (உறுமலாக) தமிழ்.. தமிழ்..

மருத்துவர் :: அட உனக்காக நான் புதுசா போர்டா செய்ய முடியும்... இருக்கறத அட்ஜஸ்ட் பண்ணி படிப்பியா... முதல் எழுத்து என்ன

வெள்ள :: வருணாசிரமக்கொள்கை..

மருத்துவர் :: அய்யோ அய்யோ.. ரெண்டாவது லைனை படி

வெள்ள :: சமஸ்கிருத ஓநாய்கள்

மருத்துவர் :: அதில்லப்பா.. சரியா படி

வெள்ள :: ஆரிய மாயை

மருத்துவர் :: கிழிஞ்சது கிருஷ்ணகிரி

வெள்ள :: கிருஷ்ண என்பது வடமொழி... அய்யனார்னு தனித்தமிழில் சொல்..

மருத்துவர் :: இன்னும் கொஞ்ச நேரம் இவன்கிட்ட பேசினா நாம மென்டல் டாக்டர பாக்கணும் போலருக்கேப்பா...

அப்போது நர்ஸ் குறுக்கே போகிறார்...

வெள்ள:: காவி காவி... காவிக்கூடாரம்

மருத்துவர் :: அடச்சை.. கருமம் புடிச்சது... எத பாத்தாலும் காவி காவின்னுகிட்டு...

அப்போது மந்திர கீர்த்தி வருகிறார்..

மருத்துவர் :: ஏங்க நல்ல கிராக்கிய நம்ம தலையில கட்டினீங்க... அதுங் கண்ணுல ஒண்ணும் கோளாறு இல்ல.. என்ன கேட்டா இது பூட்ட கேஸு... நீங்க வேணா எதுனா கோயில்ல போயி வேப்பில அடிச்சா சரிப்படுமா பாருங்க...

****

செட்டிநாடு அருகில் இருக்கும் தமிழ்த்தாயின் திருக்கோவில்


கோடங்கி அங்கிருக்கும் கல்வெட்டை எழுத்துக்கூட்டி :: க..ரு...ணா..நி..தி... அ..வ..ர்..க..ளின்.. பெ..ரு.. மு.ய..ற்..

மகீ வருகிறார் :: எலே கோடங்கி இங்கன என்ன பண்ற.. பூசாரி எங்க...

கோ :: அவரு ஆத்தாவுக்கு அபிசேகம் பண்ண எளநியோ என்னவோ கொறயுதாம் தோட்டத்துக்கு போயிருக்காருங்க...

மகீ :: எல்லாம் நேத்தே கொடுத்து விட்டேனேடா... என்னவோ... வெள்ளாட்டுக்கு நல்லானா சரிதான்...

பூசாரி ஓடி வருகிறார் :: வாங்கய்யா... சௌக்கியமா இருக்கீகளா.. இப்பல்லாம் நம்ம ஆத்தாவ நீங்க சரியாவே கவனிக்கிறதில்ல...

கோடங்கி :: நீங்க வேற... தமிளுக்கு, கலாசாராத்துக்கு, கண்ணியத்துக்குன்னு நெதம் ஒரு போராட்டம் இருக்கா... அய்யா ரொம்ப பிஸிங்க...

பூசாரி :: என்னமோ போங்கய்யா... ஆத்தாவுக்கு ஒரு படையல் போட்டா, தமிளுக்கு இன்னும் ஆயிரம் வருசத்துக்கு ஒரு ஆபத்தும் வராது... நம்பூதரிகிட்ட சோழி உருட்டி கூட கேட்டுபுட்டேன்.. நீங்கதான் மனசு வைக்கணும்..

மகீ :: எல்லாம் செஞ்சிரலாம் பூசாரி... பூசய ஆரம்பிங்க...

பூசாரி மந்திரம் சொல்கிறார் ::
(ராகமாக) கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லை...
(வசனத்தில்) பேர் ஊர் எல்லாம் சொல்லுங்க அர்ச்சனை பண்ணனும்
(ராகமாக) கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி...
(வசனத்தில்) என்ன இவனுக்குத்தான் வேப்பில அடிக்கணுமா.. கவலையே படாதீங்க... கலக்கி புடலாம்
(ராகமாக) கடவுளை பரப்புபவன் அயோக்கியன்...
(வசனத்தில்) தீபாராதனை நடக்குது பாருங்க... ஆத்தா நல்லருள் புரியாத்தா...

என்னங்கய்யா... வேப்பில அடிச்சிறலாமா...

(வெள்ளாட்டை நெருங்குகிறார்) இந்தா என்னாச்சி ஒனக்கு, ஆரு நீ... முனியா பேயா... மரியாதையா ஓடிடு...

பூசாரி பேயாட்டாம் ஆடுகிறார்...
ஆடுகள் மிரள்கின்றன...
எல்லா ஆடுகளும் ஒரு குரலில் கத்துகின்றன... அதுகளின் குரல் ஓநாய்களின் குரலாக இருப்பதை கண்டு ஊரே மிரள்கிறது...
ஒரே புகை மயம்...
திரை விழுகிறது...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


சொல்லாமல் விட்டுப்போனது ::

இந்நாடகம் LA Convention Centreல் போன வாரம் நிகழ்த்தப்ட்டது... இது சிங்கப்பூரில் சக்கப்போடு போட்ட நாடகமாம்... எனக்கு ஒன்றும் புரியவில்லை...

இது முடிந்தவுடன் "தமிழர் உடையாம் கோவணம் இருக்க ஜட்டி போட்டவன் மறத்தமிழனா மடத்தமிழனா" என்ற பட்டிமன்றமும் "கலாச்சார அதிர்ச்சியில் இருந்து கடவுளை காப்பாற்றுவது எப்படி" என்ற பகுத்தாய்வு கூட்டமும் நடைபெறுவதாக அறிவித்தனர்... நான் பாப்கார்ன் வாங்க சென்றவன் பக்கத்து தியேட்டரில் போடப்பட்ட ஆடிவெள்ளி படத்துக்கு சென்றுவிட்டேன்...
 



புரியற மாதிரி இருக்கு , ஆனா புரியாத மாதிரியும் இருக்கு..
எதுக்கும் காலையை ஒருக்கா படிக்கிறேன்.
 



கருணாநிதியை தாக்கி எழுதி இருக்கீங்க. நல்ல கற்பனை. ஆனா இதை தமிழ்நாட்டுல வந்து உங்க சொந்த பேர்ல எழுதலாமுல
 



இன்னும் ஆடுங்க வேணுமுன்னா இங்கிருந்து அனுப்பவா?
 



சிறுசு... நீங்க அந்த நாடகத்த பாத்தீங்களா... உங்களுக்கு புரியலையின்னா சொல்லுங்க, நான் தனியா விளம்பரம் தரேன்...

****

சிவாஜி... செம காமெடிப்பா உங்களுது

****

யக்கா... ஏற்கனவே இருக்கிற ஆடுங்க தொல்லையே தாங்க முடியல... இதுல இன்னுமா... ஆளவிடுங்கப்போய்...
 



Dear Mugamoodi

I dont think those semmariyaadus will understand this. Anyway keep writing. One day your continuous effort make atleast make one such aadu to think sane.

Thanks
Regards
Sa.Thirumalai
 



சொதப்பல் தல!
 



lol. இதில் வரும் சோ மறி ஆடு நான் நினைக்கும் ஆடா? வெள்ளாட்டையும் பார்த்த மாதிரி இருக்கிறதே. பலே 'உள்குத்து' தான். புரியாதவர்களுக்கு நான் ஒரு சுட்டி கொடுக்கவா தல.

- அனானி நண்பன்
 



சரி, உங்க கருத்து ??