<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அப்படி போடு அறுவாள - ஆகஸ்டு டாப் 10


டாப் 10 :
கொடைக்கானல் மலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வந்த காரை காட்டு எருமை ஒன்று வழிமறித்தது. காரை சிறிது நேரம் உற்றுப் பார்த்த காட்டு எருமை பின்னர் தன் வழியே மலைப் பகுதிக்குள் சென்று மறைந்தது (பின்னர் அந்த எருமைக்கு வேப்பிலை அடித்து முற்றிலும் குணப்படுத்திவிட்டதாக எருமையார் குடும்பத்தார் கூறினர்)

டாப் 09 : திருப்பதி வெங்கடேச பெருமாளை நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் தரிசனம் செய்தார்
( ரஜினிகாந்தை ஏழுமலையான் சந்தித்தார்னு செய்தி போடற அளவு முத்தாம இருக்கே, அதுவரைக்கும் சரிதான்)

டாப் 08 : தமிழர்களிடம் வரலாற்று அறிவு மிகவும் குறைவாக இருக்கிறது, என்று உலகத் தமிழ்க் கல்வி இயக்க இயக்குனர் பேராசிரியர் சுப்பிரமணியம் கூறினார் (ரொம்ப சரி.. இல்லையின்னா திருப்பியும் ஓட்டு போடுவோமா சொல்லுங்க)

டாப் 07 : சிறையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு வைகோ எழுதிய கடிதங்கள் அனைத்தும் "சிறையில் விரிந்த மடல்கள்' என்ற பெயரில் புத்தகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. (இது மாதிரி நிறைய புத்தகம் எழுதணும்னு அப்பாவி தொண்டன் ஆசைப்படுறான்.. செய்வீங்களா வைகோண்ணா...)

டாப் 06 : போதுமான ஆசிரியர்கள் இல்லாத சுயநதி பொறியியல் கல்லூரிகளுக்கு, குறைபாடுகளைச் சரி செய்து கொள்ள ஒரு மாத கால அவகாசம் கொடுத்து அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது - அண்ணா பல்கலை துணைவேந்தர் (கட்டிடமே இல்லாம பல பேரு கல்லூரி நடத்திகிட்டு இருக்காங்க. நீங்க இதப்போயி பெருசா பேசிகிட்டு. அதோ பாருங்க ஒரு பையன் பொண்ணு கூட பேசறான்... ஓடுங்க ஓடுங்க பிடிங்க அவன... )

டாப் 05 : இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தயாரித்து, இயக்கி, நடித்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நியூ படம் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி அப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. (அப்படியே 1937ல வந்த ஒரு படம் ஆபாசமா இருக்காம்.. அதையும் ஒரு தபா பாத்துட்டு தடை செஞ்சீங்கன்னா, பசங்க எல்லாம் உருப்படியா இருக்கும்)

டாப் 04 : இந்த நேரத்தில் மாணவர்களை அரசியலுக்கு அழைக்கவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பேட்டை ரவுடிகளும், பிளேடு பக்கிரிகளும், பொறுக்கிகளும் வந்துவிடுவார்கள் - கல்லூரி விழாவில் காளிமுத்து. (என்னங்க நீங்க... வாழும் உதாரணமா இருந்துகிட்டு இதெல்லாம் நீங்க வாய் வார்த்தையா வேற சொல்லணுமா... அம்மா.தி.மு.க.வ பாத்தா தெரியாதா)

டாப் 03 : நம் கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் பொறுப்புடன் இல்லாமல் குடிப்பழக்கத்துடன் இருந்தால் உடனே எனக்கு கடிதம் எழுதுங்கள். நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் - டாக்டர் ராமதாஸ் (
அதை போதை தெளிந்த பின் எழுதுங்கள். போன முறை வந்த ஒரு கடிதத்தையும் படிக்க முடியவில்லை... என்னது ஒரு வேளை நானூ.... எந்த கட்சி பத்திரிக்கைடா நீ... )

டாப் 02 : இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் கோவை மாநாடு மிகச் சிறந்த மாநாடாக இருந்தது. அதற்கு என்ன காரணம்? பழனிச்சாமி, கோவை ராமநாதன் இவர்களெல்லாம் ஒற்றுமையாக இருந்தது தான் காரணம். நான் அதைப் பற்றி அதிகமாக பேசி என்னுடைய கண்ணே பட்டு விடக் கூடாது என்ற காரணத்தால், திருஷ்டி பட்டுவிடும் என்ற காரணத்தால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன் (கண்ணு, திருஷ்டி... காலம் செய்த கோலமடா, கடவுள் செய்த.... அடுத்த தடவ மீட்டிங் பேக்ரவுண்டா பெரியார் படத்த வரையரதுக்கு முந்தி கொஞ்சம் எலுமிச்சம் பழமெல்லாம் வச்சி சுத்தி போடுங்க)

டாப் 01 (அ) ட்ரீம்வொர்க்ஸ் பேக்டரி : வரும் தேர்தலில் நாம் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இதற்கடுத்து வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நம் கட்சியுடன் கூட்டணி சேர மற்ற கட்சிகள் போட்டி போடும் நிலையை நாம் உருவாக்க வேண்டும்...'' - பாட்டாளி மக்கள் கட்சி செயற்குழு கூட்டத்தில் ராமதாஸ், பேச்சு.

நான் வேற எதுக்கு வீணா... விடுதலை சிறுத்தைகள் அமைப்பாளர் திருமாவளவன் பேச்ச கேளுங்க : "இந்த ஆண்டு அல்ல, வருகிற ஆண்டும் அல்ல, 2011ம் ஆண்டு இந்த விடுதலை சிறுத்தைகளின் ஆட்சி அமையும். அப்போது எங்கள் கட்சி கொடி கோட்டையில் பறக்கும். நமது கட்சி தோழர்கள், இன்றில் இருந்து 2011ம் ஆண்டு என்ன நடக்கும் என்று தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட நமது ஆட்சி அமையும் என்று சொல்ல வேண்டும். இதற்காக நமது கட்சியின் பெயரை புதுடில்லியில் பதிவு செய்து உள்ளேன்...''


சூப்பர் டாப் : எஸ்.ஜே. சூர்யா எடுத்த ‘நியூ’ படத்தில் ஆபாசம் இருக்கிறது. ஆனால், ஆரம்பத்திலேயே அந்தப் படத்துக்கு தடை போடாமல் சென்ஸார் போர்டு என்ன செய்து கொண்டிருந்தது? காலம் தாண்டி எஸ்.ஜே. சூர்யாவுக்கு இவ்வளவு நெருக்கடிகள் கொடுப்பதைப் பார்த்தால், இது அவரைப் பிடிக்காதவர்கள் செய்கிற செயலோ என்று எண்ணத் தோன்றுகிறது. - தயாரிப்பாளர் கே.ராஜன்.

ஒருவேளை சூரியா போராளி அய்யாவுக்கும் மருத்துவர் அய்யாவுக்கும் நெருக்கமானவராகவோ இருப்பாரோ... அவரு "தமிழரா" இல்லையான்னு அய்யாவோட "தம்பி" ஆய்வு செஞ்சி ஒரு அறிக்கை விட்டா, கடலூர்ல போஸ்டர் அடிக்கற ப்ரஸ்காரங்களுக்கும், உள்குத்து ஆராய்ச்சி செய்யரவங்களுக்கும் வசதியா இருக்கும் ;-))

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


---டாப் 10 : ஓ.பன்னீர் செல்வம் வந்த காரை காட்டு எருமை ஒன்று வழிமறித்தது. காரை சிறிது நேரம் உற்றுப் பார்த்த காட்டு எருமை பின்னர் தன் வழியே மலைப் பகுதிக்குள் சென்று மறைந்தது ----

தன்னை விட பெட்டர் மந்தையைப் பார்த்த திருப்தி யாருக்குக் கிடைத்தது என்று சொன்னார்களா?


---டாப் 09 : திருப்பதி வெங்கடேச பெருமாளை நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் தரிசனம் செய்தார் ---

ஏதோ... அடுத்த ஹீரோயினும் உதட்டைக் கடிக்குமளவு வெற்றியடைய வேண்டுதலா?


---டாப் 08 : தமிழர்களிடம் வரலாற்று அறிவு மிகவும் குறைவாக இருக்கிறது, என்று உலகத் தமிழ்க் கல்வி இயக்க இயக்குனர் பேராசிரியர் சுப்பிரமணியம் கூறினார் ---

அனைத்து கிண்டர்கார்டனிலும் ஹிஸ்டரி வகுப்புத் தொடங்க அரசு உத்தரவு பிறப்பிக்குமா?


---டாப் 06 : போதுமான ஆசிரியர்கள் இல்லாத சுயநதி பொறியியல் கல்லூரிகளுக்கு, குறைபாடுகளைச் சரி செய்து கொள்ள ஒரு மாத கால அவகாசம் கொடுத்து அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது ----

நோட்டிஸை கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டது மாணவராமே?


---டாப் 05 : இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தயாரித்து, இயக்கி, நடித்து வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நியூ படம் ஆபாசம் நிறைந்திருப்பதாக கூறி அப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.---

புது(நியூ)ப் படங்கள் ஆபாசம் நிறைந்திருப்பதை ஊடக வன்முறை, நியு படத்துக்கு மட்டும் கற்பித்து சிறுபான்மையினரை குறி வைக்கிறதாமே?

---டாப் 04 : இந்த நேரத்தில் மாணவர்களை அரசியலுக்கு அழைக்கவும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இல்லாவிட்டால் பேட்டை ரவுடிகளும், பிளேடு பக்கிரிகளும், பொறுக்கிகளும் வந்துவிடுவார்கள் - கல்லூரி விழாவில் காளிமுத்து.---

இந்தப் பெயரில் அனைத்தும் வலைப்பதிவுகள் இருக்கிறதே என்கிறார் வலைப்பதிவர்.


---டாப் 03 : நம் கட்சியில் இருக்கும் உறுப்பினர்கள் பொறுப்புடன் இல்லாமல் குடிப்பழக்கத்துடன் இருந்தால் உடனே எனக்கு கடிதம் எழுதுங்கள். நான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் - டாக்டர் ராமதாஸ்---

'Drink Responsibly!' என்பதன் மொழியாக்கம்தானே என வினவுவது அன்புமணி.

---டாப் 02 : இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் கோவை மாநாடு மிகச் சிறந்த மாநாடாக இருந்தது. அதற்கு என்ன காரணம்? பழனிச்சாமி, கோவை ராமநாதன் இவர்களெல்லாம் ஒற்றுமையாக இருந்தது தான் காரணம். நான் அதைப் பற்றி அதிகமாக பேசி என்னுடைய கண்ணே பட்டு விடக் கூடாது என்ற காரணத்தால், திருஷ்டி பட்டுவிடும் என்ற காரணத்தால் இதோடு நிறுத்திக் கொள்கிறேன்---

ஒற்றுமை இல்லாதவர்களை விட்டுவிட்டு இணைந்த கைகளை பாஸிட்டிவாகப் பேசும் கலையை ஸ்டாலினுக்குக் கற்றும் கொடுக்கிறார்.
 



// தன்னை விட பெட்டர் மந்தையைப் பார்த்த திருப்தி //
// இந்தப் பெயரில் அனைத்தும் வலைப்பதிவுகள் இருக்கிறதே என்கிறார் வலைப்பதிவர் //
// 'Drink Responsibly!' என்பதன் மொழியாக்கம்தானே என வினவுவது அன்புமணி //

;-))

இது கூட நன்றாக இருக்கிறதே.. படிப்பவர்கள் தங்களின் கமெண்டை போட்டால் வித்தியாசமாகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது... மற்றவர்களும் தங்கள் கமெண்டை போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

அன்புமணி பே ஏரியாவுக்கு வந்த பொழுது அவரின் பேச்சை கேட்க நேர்ந்தது.. தமிழில் பேச மிகவும் கஷ்டப்பட்டாலும் முயற்சி செய்து கடைசிக்கு கொஞ்சம் முன்பு வரை தமிழிலேயே பேசினார். அதை பற்றிய விமர்சனம் செய்யலாம் என்று இருந்தேன்,
 



This comment has been removed by a blog administrator.
 



முகமூடி, சேப்பு கலர்லே கமெண்ட் போட்டு ஒருத்தர் பட்ட பாடு போதாதா? நல்ல தைரியம் தான் உங்களுக்கு! :-))
 



ராமதாஸ் குடிபோதையில் பேசுவது போன்ற தொனியில் எழுதியிருப்பது போன்று எழுதியுள்ளீர்களே.. அவர் குடிப்பாரா?

Over to Kuzali ....

நாராயணா ...நாராயணா ...
 



//Over to Kuzali ....//
வந்துட்டேன்....

//ராமதாஸ் குடிபோதையில் பேசுவது போன்ற தொனியில் எழுதியிருப்பது போன்று எழுதியுள்ளீர்களே.. அவர் குடிப்பாரா//

சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ள முகமூடியின் விளக்கத்திற்காக நானும் காத்திருக்கின்றேன்.
 



முகமூடி அண்ணாத்தே! நானும் ஒரு தபா டிரை உடுறேன்! கண்டுக்காத...

10. எருமையார் போவதற்குமுன் ஓபி காட்டில் கள்ளும்முள்ளும் குத்தி கஷ்டப்படாமல் இருக்க சைக்கிள் அளிப்பதாக உறுதியளித்ததாக ஆப்தரெக்கார்டு செய்தி கூறுகிறது.

9. ஜாக்கிசானை அடுத்து திருப்பதி பெருமாளின் வசூலை மிஞ்சப்போகும் சூப்பர்ஸ்டார்! - தமிழ்மணத்தில் அடுத்த பதிவு!

8. அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக தமிழர்கள் அனைவரும் செல்வி பார்த்து இலங்கை பற்றிய வரலாற்று அறிவை வளர்த்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தினார்!

7. "சிறையில் விரிந்த மடல்கள்'ளை அடுத்து இன்னும் 6 மாதங்களில் "நெஞ்சில் கிடைத்த இடங்கள்" வரக்கூடும் என கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!

6. கல்லூரிகளுக்கு அஞ்சல் முகவரி இல்லாததால் நோட்டீசு புறா காலில் கட்டி அனுப்பப்பட்டுள்ளது!

5. உத்தரவின் தொடர்ச்சியாக படம் பார்த்த அனைவரும் மனதிலிருந்து அதை அழித்துவிடவேண்டுமென்றும் இல்லையெனில் உம்மாச்சி கண்ணைகுத்திவிடுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது! மேலும் "அ..ஆ.."க்கான தடைச்சான்றிதல் 2018ல் வழங்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது

4. மாணவர்கள் வராவிட்டால் அதிமுகவினர் அரசியலுக்கு வந்துவிடுவார்கள் என பூடகமாக கட்சித்தொண்டர்களுக்கு எதிராக பேசிய காளிமுத்துவுக்கு பையனூர் பங்களாவில் மண்டகப்படி! - ஜூனியர் கழுகு

3. அப்படியே வீட்டுல அண்ணன் தம்பி தகராறு, குழாயடி சண்டை, காய்கறி பேரம் இதையெல்லாமும் எழுதுங்க... எலக்சன் வர்ற வரைக்கும் தைலாபுரத்துல எனக்கும் போர் அடிக்குது! - மருத்துவர் ராமதாசு

2. அப்போ கட்சில ரெண்டே ரெண்டுபேருதான் ஒத்துமையா இருக்காங்களா? அதுவும் அந்த ரெண்டுபேருமே ஸ்டாலினும், அழகிரியும் இல்லையா? அடடா?

1. என்னத்தை போட்டி போடறது? வர்ற எலக்சனுல கூட்டு அதிமுகன்னா அதுக்கு அடுத்து 2011ன்ல கூட்டு திமுகவோடதானே? இதுல என்னய்யா போட்டி, குழப்பம்?

சூப்பர் டாப் : ஜோக்குக்கே ஜோக்கு எழுதற அளவுக்கு நமக்கு பத்தாதுங்க!
 



This comment has been removed by a blog administrator.
 



இந்த மூளைவளர்ச்சியில்லாதவன் புரியாமல் தடுமாறிக்கொண்டுள்ளேன், நீங்கள் விளக்கினால் நலம்.
 



ரம்யா, சேப்பு கலர்ல கமெண்ட் போட்டாலும் அதுல பச்சை கலர் வாடை அடிக்காம இருக்கறதால ஒன்னும் ப்ரச்னை வராது.. என்ன சொல்றீங்க ;-)

கலக்கல் இளவஞ்சி.. அதிலும் 10, 7, 5, 3, 2 ஆகியவை கலக்கலோ, கலக்கல்.
 



// ராமதாஸ் குடிபோதையில் பேசுவது போன்ற தொனியில் //
// முகமூடியின் விளக்கத்திற்காக //

"போன முறை வந்த ஒரு கடிதத்தையும் படிக்க முடியவில்லை... என்னது ஒரு வேளை நானூ.... எந்த கட்சி பத்திரிக்கைடா நீ... " என்றுதான் எழுதியிருக்கிறேனே தவிர எந்த இடத்திலேயும் ராமதாஸ் குடிபோதையில் இருப்பார் என்ற தொனியிலோ, யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் குடிக்கலாம் என்ற தொனியிலோ, அப்படியே குடித்தாலும் அவரை "சவுக்கால் அடிக்கும்" தகுதி யாருக்கும் இருக்காது என்னும் தொனியிலோ எழுதவில்லை என்பது நான் எழுதியதை மீண்டும் மீண்டும் படித்தால் தெரியும்.

"போன முறை வந்த ஒரு கடிதத்தையும் படிக்க முடியவில்லை... என்னது ஒரு வேளை நானூ பொறுமையா படிக்காம, அவசரமா படிச்சதால இருந்திருக்கலாமா.. எந்த கட்சி பத்திரிக்கைடா நீ", என்பதே முழுமையான வாக்கியம் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

மெயின் நாரதர் லீவில போயிருக்காரேன்னு பாத்தா குட்டி நாரதர்கள களத்துல இறக்கிவிட்டுட்டுத்தான் போயிருக்கார் போல... (பெருமூச்சுடன்) நாராயணா... நாராயணா
 



// இந்த மூளைவளர்ச்சியில்லாதவன் // குழலி, என்ன இது புதுசா அடைமொழியெல்லாம் வச்சிறுக்கீங்க...
 



//அடைமொழியெல்லாம் வச்சிறுக்கீங்க...//
எல்லாம் நீங்க தந்த அடைமொழிதானே...

இப்போ உங்க விளக்கத்தை படித்தேன், இருந்தாலும் உங்க திறமை வேறு யாருக்கும் வராதுங்கோ...

யாரும் அபத்தமாக எழுதும்முன் அவர்களுக்கு ஒரு செய்தி, மருத்துவர் இராமதாசுவும் தொல்.திருமாவும் எந்த காலத்திலும் குடி,புகைப்பழக்கம் இல்லாதவர் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். அது மட்டுமல்ல தனி மனித ஒழுக்கம் மிக்கவர்கள்(அட இப்போ இயம் பேசிக்கொண்டு ஒரு கும்பல் வந்து என்ன கொத்த போகின்றது)(ஒரு பத்திரிக்கை செய்தி அட ஏன் ஒரு கிசு கிசு கூட வரவில்லையே).

ஒருவேளை இதனாலேயே சிலருக்கு இப்படி இருப்பவர்களெல்லாம் தலைவர்களாக இருக்க தகுதியில்லாதவர்கள் என்று நினைக்கின்றனரோ! என்னவோ!
 



http://www.vikatan.com/jv/2005/sep/11092005/jv0701.asp

சர்ச்சை சாம்ராட்’ தங்கர் பச்சானின் Ôசிதம்பரத்தில் ஒரு அப்பாசாமிÕ படத்தில் மும்பை மயில் ஸ்வாதி வர்மா ஒரு கலக்கல் ஆட்டம் ஆடியிருக்கிறார் கிளுகிளு சமாசாரங்களுக்கு எதிராக புரட்சிப் பேட்டிகள் கொடுக்கும் தங்கர் ‘இந்த ஆட்டம் கதைக்கு அவசியம் தேவை’ என்கிறார்,...
 



// எல்லாம் நீங்க தந்த அடைமொழிதானே // குழலி, இத உங்கள பாத்து நான் எப்ப சொன்னேன்.. தங்கர் சொன்ன புண்மொழிய "வழிமொழிந்த" அடிப்பொடிங்கள இல்ல சொன்னேன்..

***

சந்தன வீரப்பர் கூட குடி,புகைப்பழக்கம் இல்லாதவர் ; தனி மனித ஒழுக்கம் மிக்கவர்னு சில பேர் சொல்ல கேள்விப்பட்டிருக்கேன் ; தலைவருக்கு உண்டான தகுதி உள்ளவர்னு இப்பத்தான் தெரிய வருது எனக்கு, தலைவரா ஏத்துக்கலாம்னா அவரு பாவம் உயிரோட இல்லியாமே.. தமிழரல்லாத ஜெ (நன்றி : திமுக), தமிழரான வீரப்பரை போட்டுத்தாக்குனதுக்கு 'தமிழர் பாதுகாப்பு பேரவை' போஸ்டர் ஏதும் ஒட்டுனாங்களான்னு யாருக்காவது தெரியுமா?

****
மும்பை மயில் ஸ்வாதி வர்மா கலக்கல் ஆட்டம்... தங்கர் ‘இந்த ஆட்டம் கதைக்கு அவசியம் தேவை’ என்கிறார்...

திருமாவுக்கும் மருத்துவருக்கும் (நன்றி திருமா விகடன் பேட்டி) நெருக்கமானவரான தங்கரே சொல்லிட்டாருல்ல... அப்ப சரியாத்தான் இருக்கும். எதுக்கும் மற்ற விபரங்களை, திருமாவோட "சிதம்பர...சாமி" பட விமர்சனம் ஆ.விகடன்ல வரும்போது தெளிந்து கொள்வோம்...
 



http://www.kalkiweekly.com/maghomepage.asp

''தங்கர்பச்சானை நான்தான்
காப்பாற்றினேன்''

- விஜயகாந்த் அதிரடி!
 



முகமூடி உங்களுக்கு எந்த தொல்லையும் இல்லியே....
 



தல திரும்பவும் ஆன் ட்ராக் ..சூப்பர் சூப்பர் கமெண்ட்ஸ் ... !!
இதோ என்னோட பதில் பிரிண்டிங்ல இருக்கு.. கொஞ்சம் பொறுங்க!! :)
 



பாஸ்டன் பாலா, இளவஞ்சி : அருமையான க மெண்டஸ் .. வாழ்த்துக்கள்.. நீங்களும் டாப் 10 ஆரம்பிக்கலாம்.. தல க்கு போட்டியா!! நாராய .....
 



10, hero kudikkaradha paatha chinna pasanga kettu poiduvanga.
aana aabasa padam appadi alla. evvalavu vendumaanalum
paakalam.
 



1, Yedho jodhika dhayavila indha padam odiduchu. padam
enakkaga odinadha rasigargal kondattitu irukkaanga. adutha padathulayum
nalla kadhanayagi kedaikka arul purinnu vendi iruppar.
 



செம நக்கல் முகமூடி. சூப்பர்.

இளவஞ்சி 7 ம், 5 ம் கலாய்ச்சுட்டீங்க.
 



Dear Mugamoodi

Dinamalar has put in their first page a photo from the DMK conference stage. You are right, it is the photo of a 'Dhrishti Poosani' hung on the stage. So your suggestion was already heard and the so called pagutharivu kumbal already started putting dhristi poosanai and lemons on their conference stages. Dont worry. Pagutharivin parinama valarchi vaazhga.

Regaerds
Sa.Thirumalai
 



நன்றி திருமலை... இதெல்லாம் பெரியாரோட அசரீரி சொன்னதுன்னு திமுக தலைமை சொன்னாலும் சொல்லும்...

அந்த படம் கெடச்சா கொஞ்சம் அனுப்புங்களேன்...
 



வாணி,

சமூகத்துல நல்லவனா நடக்கணும்கறதுல மாற்று கருத்து இல்ல.. அத அரசியல்வாதிய கிண்டல் செய்யரத விட்டுட்டுத்தான் செய்யணும்னு ஏன் அந்நியன் சொல்றாரு?
 



சரி, உங்க கருத்து ??