<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

USA வலை பதிவாளர் டெலிகான் சந்திப்பு


நேற்று தமிழ் வலையுலகத்தில் முதல் முறையாக டெலிகான்ஃபரன்சிங் முறையில் வலைபதிவாளர் சந்திப்பு கலிபோர்னியாவுக்கும் சின்சின்னாடிக்கும் இடையில் நிகழ்ந்தது...


நேற்று ஒரு நண்பனிடம் தொலைபேசினேன்.. வழமையான விசாரணைகள், அவனது நயாகரா பயணத்திட்டம், வளர்ந்த ஒரு குக்கிராமமான சின்சினாட்டியில் இளைஞர்களுக்கு இருக்கும்/இல்லாத ப்ரச்னைகள் போன்ற சமூக அக்கறையுள்ள விஷயங்களை பேசிக்கொண்டிருக்கும்போது அவன் ஒரு வலைப்பதிவு ஆரம்பித்திருப்பதாக சொன்னான்...

login செய்யும் போது password கட்டத்தில் எந்த எழுத்தை அடித்தாலும் அது '*' என்றே தெரிவதால் அதை சரி செய்வதிலேயே நேரம் கழிகிறது, அதை நிவர்த்தி செய்ய என்ன செய்வது என்ற அவனின் சந்தேகத்தில் ஆரம்பித்து, தமிழில் கதைக்க தமிழ் தெரிந்திருக்க வேண்டும் என்ற எனது கூற்றை அலசியது வரை சுவாரசியமாக சென்ற எங்கள் உரையாடல் முடிந்தவுடந்தான் உணர்ந்தேன், சாதாரண விஷயமாக ஆரம்பித்த எங்கள் பேச்சு வலைப்பதிவாளர் சந்திப்பாக முடிந்திருப்பதை....

இன்னொரு முக்கிய விஷயமும் புலப்பட்டது... இதுவரை எத்தனையோ வலை பதிவாளர் சந்திப்பு நடந்திருந்தாலும், யாரும் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி இது போன்ற ஒரு சந்திப்பு நிகழ்த்தியதில்லை என்பதும், முதல் முறையாக தமிழ் வலையுலக வரலாற்றில் நடந்த டெலிகான் சந்திப்பை நான் நிகழ்த்தியிருக்கிறேன் என்பதும் உணர்ந்த போது டெலிபோனை கண்டுபிடித்த போது கிரஹாம்பெல் எப்படி உணர்ந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது...

இச்சந்திப்பில் என் வீட்டில் மிச்சம் மீதி இருந்த நொறுக்குத்தீனிகளும் அவன் வீட்டில் இருந்த குவார்ட்டர் + கோழி பிரியாணியும் சிற்றுண்டியாக உபயோகப்பட்டது. டெலி சந்திப்பில், நேரடி வலையர் சந்திப்பு போல் அல்லாமல் சுவையான உணவு கிடைக்கிறது என்பது இங்கு அவசியமில்லாத ஒரு செய்தி என்பதால் அதை சொல்வதை தவிர்க்கிறேன்...

இதன் அடுத்த கட்டமாக வலைப்பதிவு வைத்திருக்கும் என் நண்பனுடன் அடுத்த வாரம் webcam முறையில் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பு நிகழ்த்தலாம் என்று நினைக்கிறேன்.. அதில் அவன் weekendல் செய்யப்போகும் விஷயங்கள், அவன் செய்யும் டேடிங் ஏன் எப்போதுமே சொதப்புகிறது, அவன் இந்தியா பயணத்திட்டம் போவது போன்ற பயனுள்ள பல விஷயங்களை விவாதிக்கலாம் என்று உள்ளேன்...

முகமூடி இளைஞர்... வலையுலகத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் இவர் போன்றவர்கள்தான் எனக்கு நம்பிக்கையை தருகிறார்கள் என்று என் அபிமான எழுத்தாளர் சுஜாதா தனது கற்றதும் பெற்றதுமில் ஒரு வரி என்னை பற்றி எழுதினால் யாரும் பொறாமை+ ஆச்சரியப்படாதீர்கள்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நல்ல சந்திப்பு. தகவலுக்கு நன்றி. மென்மேலும் இதுமாதிரி சந்திப்புக்களைப்பற்றி சுடச்சுட நேரடி ரிப்போர்ட் கொடுக்கவேண்டும் என்று அகில உலக வலைப்பதிவர் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் ... போதும் நிறுத்திக்கறேன்.
 



//எத்தனையோ வலை பதிவாளர் சந்திப்பு நடந்திருந்தாலும், யாரும் தொழில்நுட்பம் உச்சத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், அறிவியல் முன்னேற்றத்தை பயன்படுத்தி இது போன்ற ஒரு சந்திப்பு நிகழ்த்தியதில்லை //

அதானே!
 



இரவு நேரங்களில் உறங்காவிழியாய்...
பின்னூட்டத்திலேயே கருத்துப் பரிமாற்றங்களையும் விவாதங்களையும் நடாத்திக்கொண்டு,
டெலிபதி மூலமே உரையாடுபவர்களின் செய்கைகளுக்கு என்ன பேர் வைப்பதாம்?!?!?!?!
 



நன்றி ரமணி... அட நீங்களும் முன்னேற்றக்கழகத்துல உறுப்பினரா... பமக பற்றி தெரியுமா உங்களுக்கு..

வாங்க ராம்கி.. சுட சுட ஒரு பதிவு கொடுங்க..

நன்றி ஞானபீடம்.. விரைவில் எதிர்பாருங்கள் வலைப்பதிவாளர் டெலி(பதி) சந்திப்பு
 



.
.
டெலி(பதி) சந்திப்பு பற்றி பதிய 'Smaal Guy' முந்திக்கொள்வார் என்றே எண்ணுகிறேன்!

;-)
 



//login செய்யும் போது password கட்டத்தில் எந்த எழுத்தை அடித்தாலும் அது '*' என்றே தெரிவதால் அதை சரி செய்வதிலேயே நேரம் கழிகிறது,//

எப்படி சரி செய்தார் என்றும் எழுதுங்களேன் :-))
 



//டெலி(பதி) சந்திப்பு பற்றி பதிய 'Smaal Guy' முந்திக்கொள்வார் என்றே எண்ணுகிறேன்!
//

:))
 



போன ஞாயிறு அன்றே மதியம் சுமார் 12:45 - 1:30 வரை மிக பிரபலமான ஒரு வலை பதிவருடன் எனது சந்திப்பு செல்போன் மூலம் நடந்தேறியதை தமிழ் கூறும் நல்லுகம் அறியும். இது தெரியாமல் புதிதாய் நேற்றுதான் டெலிகான் நடந்தது போல் நண்பர் முகமூடி காட்டிக்கொள்வது வியப்பையே தருகிறது.
 



"அவன் வீட்டில் இருந்த குவார்ட்டர் +..........."

- ஆக அங்கும் நம்ம டாஸ்மாக் மாதிரி குவார்ட்டர் மட்டும்தான் கிடைக்குமோ?
 



ஞானபீடம்.... 'smaal guy' என்று பழித்து கூறுவானேன்... இந்த உலகில் சிறியோர் என்று யாருமில்லை என்று தத்துவவியாதியான தங்களுக்கு தெரியாதா ??

அய்யோ லதா... அந்த சீக்ரெட்ட சொல்லக்கூடாதுன்னு பில் கேட்ஸ் போன தபா எங்க வீட்டு பக்கம் தம் அடிக்க வந்தப்போ வேண்டி கேட்டுகிட்டாரு

ஜிகிடி என்னய்யா "புத்தம் புதிய" தத்துவமெல்லாம் உதுர்க்குறீரு... இங்க இப்போ எதுக்கு அது

Mr. Bigguy... இந்த பதிவு போன திங்களன்றே எழுதப்பட்டது என்றும் என் செக்ரட்டரிக்கு நேரமில்லாததால் வலையேற்றப்படாமல் தள்ளிப்போடப்பட்டது என்பதையும் அகில உலக வலைப்பதிவாளர் அறிந்தே உள்ளனர்...

தருமி... இங்க எல்லாம் ·புல்தான் (பார் நடப்பு தனி)... ஆனா என்னதான் சொல்லுங்க குவார்ட்டர்னு சொல்றப்போ வர கிக்கு ·புல்ல வர மாட்டேங்குது
 



வீடியோ கன்பரன்ஸில் அங்குள்ள குவார்ட்டரை இவர் சாப்பிடமுடியும், இங்குள்ள சிக்கனை அவர் தொட்டுக்க முடியும்னு சொல்றாங்களே..இதைக் கண்டு பிடிக்கும்போது அந்த ஆளு ஆர்கிமிடீஸ் மாதிரி ஓடியிருக்க மாட்டாரு!
அங்கே சாப்பிட்டா இங்கே கிக் ஏறுமா அண்ணாத்தே..நீரும் நெருப்பும் எம்ஜியாரு மாதிரி உண்டா?
 



அட, சின்சினாட்டி நமக்குப் பக்கந்தாங்க. சொல்லுங்க, கடவுச்சொல் ** எப்படி சரி செய்தார்னு நேரிலேயே போய்க் கேட்டுக்கறேன் :-)
 



அதானே, அவுங்கவுங்க வூட்டுலே இருந்ததைக் காலிசெஞ்சுட்டு அடுத்தவங்களுக்கு 'கிக்' ஏத்தீட்டீராக்கும்:-)

பொறுங்க இனிமே எல்லாமே வீடியோகான் தான்!
 



இதற்கும் "எதற்கும்" சம்பந்தம் இல்லை எனச் சொன்னால் குறைந்தா போய்விடுவீர்கள்?

கொஞ்ச நாள் அவுட்-ஓஃப் டச்! அதனாலதான் கேக்குறேன்.
 



சரி, உங்க கருத்து ??