<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தினமலர் தினம் தரும் Junk மலர்


தினமலர் எரிதங்களை (ஜங்கி) உண்மை என்று நம்பி அதை வாசகர்களுக்கு வேறு உண்மை செய்தி போலவே சொல்கிறது... தினமலர் வலைத்தளத்தின் கடைசி செய்திகள் பகுதியில் கீழ்க்கண்ட இரண்டு செய்திகளை தினமும் பார்க்கலாம்.


செய்தி 1: மீனாட்சி அம்மன் கோயிலுக்காக இந்தியாவிலிருந்து ஓட்டுப் போடுவதற்கான டெலிபோன் எண்கள்

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஓட்டு போடும் விஷயம் ஏதோ ஒரு டெலிபோன் கம்பெனியின் குயுக்தி எண்ணமாக இருக்க வேண்டும். ஒரு நம்பகத்தன்மை இல்லாத இணணயதள முகவரி, அது தரும் ஒரு டெலிபோன் நம்பர், யார் வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் ஒட்டு போடும் வசதி.... ப்ராடு என்பட்தற்கு வேறு என்ன வேண்டும்... உலக மக்கள் ஓட்டின் படி உலக அதிசயம் தேர்ந்தெடுக்கப்படுகிறதென்றால் உலகின் ஜனத்தொகையில் 6ல் இரண்டு பங்கு கொண்டிருக்கும் சீனாவிலும் இந்தியாவிலும்தான் அனைத்து உலக அதிசயங்களும் இருக்கும்... தினமலர் இதற்காக செய்த வாசகர் வளைப்பு மிகவும் பெரிது.. மக்கள் கொஞ்ச நாள் சந்தோஷமாக இருந்தார்கள். ஆனால் கொஞ்ச நாள் கழித்து எல்லாம் அடங்கிவிட்டது. அந்த டுபாக்கூரை எல்லாரும் மறந்து விட்டார்கள். ஆனால் தினமலர் மட்டும் இன்னும் இதை ஒரு செய்தியாக போட்டு வருகிறது.

செய்தி 2: அமெரிக்காவில் தீபாவளி சிறப்பு தபால்தலை வெளியிட உங்கள் பங்கை ஆற்றுங்கள்... இந்தியாவின் மாபெரும் பண்டிகையான தீபாவளியை சித்தரித்து ஸ்டாம்ப் வெளியிட அமெரிக்க தபால் துறை ஆலோசித்து வருகிறது. இந்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு சமூகத்தினரும் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்கத் தபால் துறை ஸ்டாம்ப் வெளியிட வேண்டுமானால் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் வெப்சைட் மூலம் பரி ந்துரை செய்ய வேண்டும். இதுவரை ஏறத்தாழ 3 லட்சம் பேர் இதற்கு பரிந்துரை செய்துள்ளனர். இந்திய திருவிழாவின் பெருமை உலகம் முழுவதும் பரவச் செய்ய நீங்களும் இங்கு சென்று பரிந்துரைக்கலாம்.

இதில் "ஸ்டாம்ப் வெளியிட அமெரிக்க தபால் துறை ஆலோசித்து வருகிறது" என்பது அப்பட்டமான பொய்... தினமலர் குறிப்பிடும் சுட்டி செல்லும் இடம் petitiononline.com. இதில் பொழுது போகாத யார் வேண்டுமானாலும் ஒரு பெட்டிஷன் தயார் செய்யலாம்...
(அமெரிக்கா H1Bல் வேலை செய்பவரிடம் social security பிடித்தம் செய்யக்கூடாது , visitor visa விதிகளில் திருத்தங்கள் வேண்டும் போன்றவை இதற்கு முன் இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட மனுக்கள்..)

தினமலர் குறிப்பிடும் தீபாவளி ஸ்டாம்ப் மனுவை அமெரிக்க தபால்துறைக்கு ஒரு கோரிக்கையாக அமிதாப் ஷர்மா என்பவர் தயாரித்திருக்கிறார். இது போன்று நாளொரு வண்ணமாக வரும் ஜங்கிக்கள் பெரும்பாலோனாரை பொறுத்தவரை Inbox -> Trash... அமெரிக்க அரசாங்கமோ Direct to Trash... தினம் தோறும் நூற்றுக்கணக்கானோர் தயாரிக்கும் மனுக்கள் அமெரிக்க அரசின் பார்வைக்கு போகுமா... போனாலும் இது போன்றவற்றை அவர்கள் பாத்ரூம் டிஷ்யூ ஆக கூட உயயோகப்படுதுவார்களா என்பதெல்லாம் நமக்கு யோசனையின் அப்பாற்பட்டது... யோசிக்க வேண்டியது இந்த எரிதங்களை உண்மை என்று நம்பி தினமலர் ஏன் தினமும் தனது வாசகர்கள் காதில் பூ சுற்றுகிறது...

தினமலரை இந்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று நான் கூட ஒரு பெட்டிஷன் தயார் செய்யலாம் என்றிருக்கிறேன்..

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தினமலரை இந்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று நான் கூட ஒரு பெட்டிஷன் தயார் செய்யலாம் என்றிருக்கிறேன்..
over to mayavarathan
 



முகமூடிக்கு என்ன ஆனது? குழலி செய்ய வேண்டிய அரும்பணியை இவர் செய்துள்ளாரே.... போகட்டும்... அனானிமஸின் கருத்து கொஞ்சம் கூடுதல் என்றாலும், தவறான தகவல் தரும் காரணத்தால் நானும் அதை வழிமொழிகிறேன்.
 



//நான் கூட ஒரு பெட்டிஷன் தயார் செய்யலாம் என்றிருக்கிறேன்..
//
முகமூடி தலைவா
எதுக்கும் ஒரு வோட்டிங் சிஸ்டம் வெச்சி நம்ம வலைப்பூ நன்பர்கள் கருத்தையும் கேட்டுக்குங்கோ..
குறிப்பா குயிலி , மாயமானவர்.. இவங்களை கலந்தாசிக்கவும்!

வீ எம்
 



செக்கூலரிஸ்ட் முகமூடி வாழ்க.
 



அடேங்கப்பா... போற போக்கை பார்த்தா என்னை என்னவோ தினமலரோட வலையுலக கொ.ப.செ.வா நியமிச்சுடுவீங்க போலருக்கே?!
 



//அடேங்கப்பா... போற போக்கை பார்த்தா என்னை என்னவோ தினமலரோட வலையுலக கொ.ப.செ.வா நியமிச்சுடுவீங்க போலருக்கே?!//

அப்போ இவ்ளோ நாளா நீங்க அந்த போஸ்ட்ல இல்லையா ;-)?

சும்மா தமாஸு, டென்சன் ஆகிடாதிங்க.
 



ஐ.நா மன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்க ஓட்டு போடுங்கள் என்று ஒரு சரடை சந்திரவதனா அவர்களின் வலைப்பதிவில் பார்த்தேன் :) என்னத்த சொல்ல ?
 



Petition pottuttu vanthu ithai solli irukkalaam. Neram iruntha muthalla naan itha seyren. Appuram enga ooru ariya naathar koyila ulaga athisayama aakkirathukkum muyarchi edukkanum, vottu poduvingala mugamoodi?
 



கேக்குறவன் கேனையனா இருந்தா கேப்பையில நெய்யி வடியுதும்பாங்களாம்! அந்த மாதிரி கதையா இருக்கு இது.

உலக அதிசய டுப்பாக்கூரை ரொம்பவும் அலசி ஆராய்ந்து அப்போதே எங்கள் மன்றத்தில் அம்பலப் படுத்தியவன் நான்!

தினமலர் ஏன் இப்படி நடக்கிறது என்பதுதான் தெரியவில்லை!
 



If this has been done by an individual it can be accpeted (owing to his principles) or debated..

But a newspaper boasting as largest Tamil Daily, doing such kind of things again and again is Stupid and Idiotic.
 



பினாத்தல்கள் சுரேஷ்இங்கே தன் வீட்டை அதிசயமாக்குங்கள் என்கிறார்.
 



தினமலர், தினகரன், தினபூமி.. இப்படி.. தினமும் ... மக்கள் காலைல எழுந்த உடன், ஒரு வெட்டி வேலை.. மற்றும்... வெட்டி செலவு பண்ணிக்கிட்டு இருக்காங்க.. எப்பதான் திருந்த போறாங்களோ.... இதுக்கு.. இந்த தினமலர் பத்திரிக்கைகு ஒரு இமேஜ் வேற..

தினமணி மட்டும் தான் ஒரளவுக்கு பரவாயில்லைனு நினைக்குறேன்... சரியா ???


தலை.. நீங்க.. பெட்டிஷனைப்போடுங்க.. சும்மா.. குத்துனா.. குத்து.. கும்மாங்குத்து குத்தீருவோம்... ;-) உங்களையில்ல.. வோட்டை...
 



வந்தவங்க அல்லாருக்கும் நன்றி... அப்ப நீங்க சொல்றத எல்லாம் பாத்தா ஒரு பெட்டிஷன் தயார் பண்ணிடலாம்கறீங்க...
 



என்ன முகமூடியாரே தினமலரின் எரிதங்களையும், 102 தடவை படம் பார்த்த ரஜினி ரசிகரையும் குட்டுவதை பார்த்தால் பின்னால் யாரையோ பலமாக குட்டப்போகின்றீர் போலிருக்கே... ம் ... நடத்துங்க ராசா
 



கொடுமை,கொடுமைன்னு கோயிலுக்குப் போனா அங்கே ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடுச்சாம்...

http://www.thisaigal.com/aug05/announi.html
 



if you are talking about the appointment of maalan as senate
member i agree with you.
 



மாலனை வாழ்த்துவோம் மனமிருந்தால்

http://kuzhali.blogspot.com/2005/08/blog-post.html
 



//if you are talking about the appointment of maalan as senate
member i agree with you.//

No.I meant this.
அமெரிக்காவில் தீபாவளி ஸ்டாம்ப்
ஐந்து லட்சம் பேர் பரிந்துரை தேவை
http://www.thisaigal.com/aug05/announi.html
 



நன்றி சுதர்சன்.. திசைகள் ஆசிரியருக்கு இவ்விஷயத்தை மின்னஞ்சலில் தெரியப்படுத்தி இருக்கிறேன்...

குழலி, மாலனுக்கு என்னுடைய வாழ்த்து தங்கள் பதிவில்...
 



தற்போதைய நிலவரம் ..

242582 Total Signatures


ம்ம்ம்ம்..........
 



242582 Total Signatures = தினமலர் பார்வையில் ஏறத்தாழ 3 லட்சம் பேர்
 



Thirunthatha jenmangal irrunthanna labam :-)
 



// Thirunthatha jenmangal irrunthanna labam //

அனானி.. நீங்க ஆர சொல்றீங்கோ... பத்திரிக்கையயா, வாசகர்களையா...
 



சரி, உங்க கருத்து ??