<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

கை தொலைபேசியில் ICE (வர்யா ராய் அல்ல)


உங்கள் கைத்தொலைபேசியில் ICE (In Case of Emergency) என்ற பெயரில் உங்களுக்கு விபத்து ஏற்படின் தொடர்பு கொள்ள வேண்டியவரின் தொலைபேசி எண்ணை சேமியுங்கள்.

ஒரு ப்ரிட்டிஷ் பாராமெடிக் முன்மொழிந்த இந்த யோசனை ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் லண்டன் விபத்திற்கு பிறகுதான் மக்களால் பரவலாக முக்கியத்துவம் பெற்றது என்று USA Today
செய்தி சொல்கிறது.. லண்டனில் படுகாயமடைந்து சுயநினைவு இழந்த பலரிடம் கைத்தொலைபேசி இருந்தும் பாரமெடிக்குகளுக்கு யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை என்கிறது இன்னொரு செய்தி.

ICE <பெயர்> என்ற அளவில் ஒரு அட்ரஸ் புக் என்ட்ரி, அதில் நம்மை பற்றி நன்கு அறிந்த சொந்தத்தின் தொலைபேசி எண்...உதாரணம்

Name: ICE SIMRAN
Mobile: 1234567890...

இது இருந்தால் பாராமெடிக்கஸ்க்கு ஒரு அவசர உதவி தேவைப்படும் சம்பவத்தின் போது நோயாளியை பற்றி அறிந்தவரை தொடர்பு கொண்டு நோயாளியின் மருத்துவ சரித்திரம், அவருக்கு இருக்கும் ஒவ்வாமை குறித்து அறிய இயலும். இது மருத்துவ சிகிச்சைக்கு இன்றியமையாதது.

இம்முறை ப்ரிட்டனில் மட்டுமல்லாது அமெரிக்காவிலும் தற்பொழுது பிரபலமடைந்து வருகிறது. பாராமெடிக்ஸ் இம்முறையை செயல்படுத்த சொல்லி மக்களை கேட்டுக்கொள்கின்றனர்.

இந்த செய்தி பல ஊடகங்களிலும் செய்தி வந்தாலும்/வந்துகொண்டிருந்தாலும், இந்த செய்தியே ஒரு எரிதம் என்று ஒரு வலைப்பதிவு
எதிர்ப்பாட்டு பாடுகிறது. இம்முறையில் பரப்பப்படுவதாக சொல்லப்படும் செல்போன் வைரஸ் எல்லாம் நிரூபிக்கப்படாத நிலையில் எரிதமாக இருந்தால்தான் என்ன... நான் பேசிய பலருக்கும் பரவலாக இந்த முறை பற்றி தெரிந்திருக்கும் நிலையில் ICE என்று ஒரு என்ட்ரி இருப்பது நல்லது என்றே படுகிறது.

அ) இந்த பதிவில் போட கை தொலைபேசி படம் ஒன்று போட்லாம் என்று பாகிளில் தேடினால் ஒரு படமும் கிடைக்கவில்லை. சரி என்று கிடைத்த படத்தை போட்டிருக்கிறேன்.

ஆ) இப்பதிவின் மூலம் இருட்டில் இருந்த ஐஸ்வர்யா ராயை வெளிச்சம் போட்டு காட்டியாகிவிட்டது.. கனடாவில் ஜொள்ளர்கள் ஏமாறாமல் இருக்க ஏதோ நம்மாலான உதவி.. (தன்னை பற்றி எழுதியதற்கு நன்றி தெரிவித்து என் கையெழுத்திட்ட புகைப்படம் அனுப்ப கோரி ஐஸ்வர்யாவிடமிருந்த வந்த கடிதம் அடுத்த பதிவில்..)

இ) என் கை தொலைபேசியில் என்னை பற்றி நன்கு அறிந்த அஸினின் நம்பரை சேமித்துவிட்டேன்...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


கைக்கு அடக்கமானது இது!

கை தொலைபேசி!

;-)

அம்பிகா! அம்பிகா!!
 



என் படத்தை போட்டு விட்டு சிம்ரன் எண்ணை கைதொலைபேசியில் போட்ட முகமூடிக்க்கு கண்டனம்
 



-/ க்கும் இர***** க்கும் என்ன சம்பந்தம் ? யாருக்காச்சும் தெரியுமா ?
 



என்ன ஞானபீடம், அம்பிகா அம்பிகான்னு அப்பள கம்பெனி ரெப்பாயிட்டீங்களா..

என்னங்க ஐஸ்வர்யா.. நீங்கதான உங்க செல்பேசி எண்ணை யாருக்கும் கொடுக்க வேணாம்னு சொன்னீங்க

ஏனுங்க மதியிலி, போற இடமெல்லா இதே கேள்விய கேக்குறீங்களே.. இந்த கேள்விக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
 



சுஷ்மியைப் போடாமல் ஐஸ்வர்யா ராயை மட்டும் போட்ட உங்களை எங்க தலை வந்து கவனிப்பார்.
 



என்னதான் திரையுலகப் பிரபலமானவர்கள் அக்கா, தங்கையாக எல்லாம் இருந்தாலும் இவ்வளவு பந்தா ஆகாது. ;-)
 



//9812345678//
யெய்யா இந்த எண்ணை தொடர்பு கொண்டு ஐஸ்வர்யாவிடம் பேச வேண்டுமென்று கூறினால் செருப்படி கிடைக்கும் போலத் தெரிகின்றது, நான் சும்மா டயல் செய்து பார்த்தேன், ரிங் போகின்றது, உடனே நிறுத்திவிட்டேன் எனவே இது மாதிரியான வேலை செய்யும் எண்களை சும்மாவேனும் போடுவது பிரச்சினை ஆகலாம்.
 



அடிப்பொடி, ஷ¤ஷ்மிய பத்தி ஜொள்ளத்தான் உங்க தலைவர் இருக்காரே, அப்புறம் நான் வேற எதுக்கு..

க்ருபா // என்னதான் திரையுலகப் பிரபலமானவர்கள் அக்கா, தங்கையாக // யார பாத்து இப்படி சொல்லிட்டீங்க... தமிழல எனக்கு பிடிக்காத வார்த்தை ராக்கி.

குழலி.. மனசாட்சிய தொட்டு சொல்லுங்க, ஐஸ்வர்யா நம்பர்னு இல்லாம என் தலைவன் லூஸ்மோகன் நம்பர கொடுத்திருந்தா நீங்க சும்மா டயல் செய்து பாரப்பீங்களா... (என்னய்யா இது வம்பா போச்சி, இப்ப நம்பர மாத்திட்டேன். இதுவும் வேல செஞ்சிதுன்னா, என்னால ஒன்னியும் பண்ண முடியாது)
 



சுட்டிக்காட்டியதற்கு நன்றி குழலி..
 



யாருப்பா இந்த சின்னவனின் அடிப்பொடி..

தெய்வங்களே.. என்னை காப்பதுங்க...

ஆமா சுஷ் படம் எங்கயா ?
 



dear mugamoodi,

i have been reading your articles for quite some time. this and other articles like this are more positive and productive. i expect and encourage more such beneficial ideas from you and other bloggers.
 



Puthu Layout Nalla Irukku Anne

Ana Mugamoodikku pinnadi irukara colora mathunga..Fade ana mathiri irukku.
 



//ஏனுங்க மதியிலி, போற இடமெல்லா இதே கேள்விய கேக்குறீங்களே.. இந்த கேள்விக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?//

முகமூடி எப்போதும் அவசரபுத்திக்காரர் என்பதை நிரூபித்துக் கொண்டே இருப்பார் போல இருக்கு..
மேலே யாரோ ஒரு அனானி என்னவோ ஒரு கேள்வி கேட்கிறார். அதற்கு அனாவசியமா ஏன் என் பெயரை இழுக்கிறீர்கள்?
அந்த அனானி நான் இல்லை.. நான் அவனி(ளி)ல்லை.
உடல் நலம் குறைந்தவன் ஆரோக்கியம் என்று பெயர் வைத்துக் கொள்வதில்லையா?
அழகில்லாதவன் சுந்தரமாக இருப்பதில்லையா?
அதனால் என் பெயரைப் பார்த்து ஏமாந்து போகாதீர்கள்.. நீங்க எப்படி உங்களையே தல என்று அழைத்துக் கொள்கிறீர்களோ அதுபோல் எனது வலையுலகத் தலைவர்கள் இருவரது பெயர்களை ஒன்றிணைத்து எனக்கு நானே பெயர் சூட்டிக் கொண்டேன். ஒருக்காலும் அனானி பின்னூட்டமோ போலி பின்னூட்டமோ நான் இட மாட்டேன்.

தொழில் நுட்ப உதவி இல்லாமல் மொழிநடையை வைத்து சில பெயர்களுக்குப் பின்னால் உள்ள முகங்களை அறிய முயல்கிறேன். அதில் ஓரிரு கேள்விகள் உங்களை எரிச்சல்படுத்தியுள்ளன போலும்..
 



நன்றி அனானிமஸ். இப்பதிவில் ஐஸ்வர்யா, அசின் எல்லாம் போட்டதனால் முக்கியமான விஷயமான ICE மேட்டரை சரியாக சொல்லாமல் விட்டேனோ என்று ஒரு எண்ணத்தில் இருந்தேன்..

நன்றி ரமேஷ். நன்றாகவே கவனித்திருக்கிறீர்கள்.. இப்பொழுது மாற்றிவிட்டேன்..

மதியிலி, உங்க மனசில இருக்கறத எல்லாம் சொல்லியாச்சா.. ரொம்ப சந்தோஷம்.
 



இப்பதிவில் ஐஸ்வர்யா, அசின் எல்லாம் போட்டதனால் முக்கியமான விஷயமான ICE மேட்டரை சரியாக சொல்லாமல் விட்டேனோ என்று ஒரு எண்ணத்தில் இருந்தேன்..

அடடா. மன்னிக்கவும். பின்னூட்டத்தில் அதைப்பத்தி சொல்லவே இல்லைன்னு ஃபீலிங்கா, கோச்சுக்காத முகமூடி.

கிருபாவின் பதிவில் இந்த செய்தியைப் பார்த்து ஏற்கனவே என்னுடைய செல்லிடைப்பேசியில் பனிக்கட்டி போட்டுவெச்சுட்டேன் (ம்ம்ம்ம், 'சினேக'மானவங்க நம்பர் எல்லாம் ஒன்னும் இல்லை, வீட்டு நம்பர்தான் போட்டேன்).

ஆனால் உங்கள் பதிவில் சொல்லிய முறை மிக மிக நன்று. நல்ல mix.
 



அந்த அனானி பதிவுக்கு ஏன் மதியிலின்னு சொன்னீர்கள்..அதுக்கு பதில் சொல்லாம முகத்தை முகமூடிக்குள்ள இழுத்துக் கொள்கிறீர்களே ஏன்?
 



சரி, உங்க கருத்து ??