<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நாத்திகர் கருணாநிதி கட்டிய கோயில்


கடவுள் இல்லவே இல்லை
கடவுளை கற்பித்தவன் முட்டடாள்
கடவுளை பரப்புகிறவன் அயோக்கியன்

கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி - பெரியார் கடவுள் மறுப்பு

***

கருணாநிதி முதல்வராயிருந்த போது 23.04.1975ல் கோயிலுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அரசாங்கம் சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி தரப்படுகிறது. இறுதிக்கட்டத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் பரிந்துரையின் பேரில் மாநில அரசு மேலும் ஐந்து லட்சம் நிதி ஒதுக்குகிறது. 16.4.1993 அன்று கருணாநிதியின் பொற்கரங்களால் கோயில் திறந்து வைக்கப்படுகிறது.

ஒரு கையில் விளக்கு, இன்னொரு கையில் வீணை, மற்றொரு கையில் உத்திராட்ச மாலை, மற்றொரு கையில் பனையோலை என நான்கு கைகள் கொண்டு தாமரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் இக்கோயிலின் கடவுளை வடிவமைத்தவர்கள் பிரபல சிற்பிகள் கணேசன் மற்றும் கணபதி ஸ்தபதி ஆகியோர். இக்கோயில் காரைக்குடி பெரியார் சிலைக்கு அருகில் கம்பன் மணிமண்டப வளாகத்தில் அமைந்திருக்கிறது.

வழிபாட்டு முறைகள், கடவுளுக்கு உகந்த பொருட்கள், காணிக்கைகள், அபிஷேக பொருட்கள் போன்றவை குறித்த விபரங்கள் விளக்கமாகவே (பார்க்க : சென்னை ஆன்லைன் தமிழ்த்தாய் கோயில்) வரையறுக்கப்பட்டிருக்கின்றது... எந்த பெயரில் அழைத்தால் என்ன, கடவுள் கடவுள்தான்... இருந்தாலும் இக்கோயிலில் அமைந்த கடவுளின் பெயரை தெரிந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கு தகவலாக - தமிழ்த்தாய் கடவுள்.

***

நிதி வசூலிக்கும் உயரிய எண்ணம் கொண்டவர்கள் கண்ணகி (அ) கருணாநிதி ஆகியோருக்கு கோயில் கட்டும் விளக்கமான திட்டம், வரைபடம், வழிபாட்டு முறை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அறிவாலயத்தை அணுகவும். புரவலர் முதல்வராயிருந்தால் மக்கள் வரிப்பணம் பத்து லட்சமும், இல்லையெனில் பயணப்படியுடன் கட்சி நிதி 13 ரூபாய் 50 பைசாவும் கிடைக்கும்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


/ இக்கோயிலில் அமைந்த கடவுளின் பெயரை தெரிந்து கொள்ளும் ஆர்வலர்களுக்கு தகவலாக - தமிழ்த்தாய் கடவுள்.
//

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் அந்த கோவிலுக்கு சென்றுள்ளேன்.

இந்த கோவிலுக்கும் நாத்திகத்திற்கும் என்ன தொடர்பு அல்லது இதற்கும் கடவுள் நம்பிக்கை இல்லாததற்கும் என்ன தொடர்பு என்று எமக்குக் தெரியவில்லை, நீர் என்ன கூற வருகின்றீர் என்றும் எனக்கு புரியவில்லை.

தமிழ்தாயை கும்பிடுங்கள் உங்களுக்கு இது தருவார், அது தருவார் என்று கூறவில்லையே, இது ஒரு மணிமண்டபம் மாதிரியான விடயம், அவ்வளவே, கோவில் என்ற பெயர் ஆத்திகத்திற்கு மட்டும் சொந்தமா?

அய்யா முகமூடி நீங்கள் சொல்லவந்தது என்னவென்று எனக்கு சுத்தமாக புரியவில்லை.
 



//For the holy bath, oil, milk, curds, tender coconut water, fruit juices, aromatic water, ganga, mandhi kalayaneer and rose water are used.

To turn the Kalayaneer into Holy water, Thamizh Pasurangal should be chanted and flowers and leaves are then strewn.
//

நாசமா போச்சி இதெல்லாம் நான் அங்கே பார்த்ததில்லை, அட குறைந்த பட்சம் நான் போனபோது பார்த்ததில்லை.

விட்டா பெரியார் சிலைக்கும் சூடம் காட்டுவார்கள் போல...
 



குழலி, மதிமுக வலைத்தளம் "திராவிடக் கட்சிகள், தந்தைப் பெரியாரின் பகுத்தறிவு - நாத்திகவாதக் கொள்கைகளைப் பயிற்றுவிகவே செய்கின்றன. அவற்றிலிருந்து அவை ஒருபோதும் பின்வாங்கியதில்லை" என்று சொல்கிறது. என் அறிவுக்கு நான் நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு - எந்த ரூபத்திலும் - என்று நினைத்திருந்தேன். ஆனால் அது 'வேண்டியதை தரும் தெய்வங்களுக்கு' மட்டும்தான், மற்ற தெய்வங்களுக்கு அல்ல என்பதை உணர்ந்திருக்கவில்லை.
 



.
பதிவு, பரவாயில்லை ரகம்;

படிமம் வெளிப்படவில்லை!!!

 



ஒரு பின்னூட்டத்தில் காஞ்சி பிலிம்ஸ் சொன்னது

பகுத்தறிவு பாசயறையா? அப்படி என்றால் என்ன? கருணாநிதிக்கும் பகுத்தறிவுக்கும் சம்பந்தம் இருப்பதாக யார் சொன்னது? பெண்களின் கற்பை போற்றிய திருவள்ளுவரையே தாக்கிய பெரியார் எங்கே? பெண் அடிமைச் சின்னத்தின் முழு உருவமாகிய கண்ணகிக்கு சிலை வைத்து திருக்குறளில் உள்ள கற்பியலுக்கும் சேர்த்து குறளோவியம் படைத்து காசாக்கிய கருணாநிதி எங்கே. சந்தர்ப்ப வாத அரசியல் செய்து மதவாத பா.ஜா.காவுடன் கைகோர்த்த கருணாநிதியை இனி ஒரு முறை பகுத்தறிவாளர் என்று தயவு செய்து சொல்லாதீர்கள். பகுத்தறிவும் ஹிந்தி எதிர்ப்பும் தமிழ்நாட்டு முன்டங்களுக்கு மட்டுமெ சொல்லி, தனக்கும் தன் குடும்பத்துக்கும் அவைகளை விதிவிலக்காக்கியதை தமிழ்நாடு உணர்ந்து பல நாட்களாகிவிட்டது நன்பரே!
 



தில்லை நடராசனையும் சீரங்கப் பெருமானையும் பீரங்கி வைத்து தகர்க்வேண்டும், ஏரோட்டும் மக்களெல்லாம் ஏங்கித் தவிக்கையிலே தேரோட்ம் உணக்கத்தேவையா? திருவாரூர் தியாகராஜனே என கேட்டவர்
சொன்னதை இவர்கள் யார் கடைபிடித்தனர்
முதியவர் இளையவளை திருமணம் செய்யக்கூடாது என பகன்ற இவர் தலைவர் திருமணம் செய்து கொள்ளவில்லையா?
ஆயிரம் ஆடவரை தொட்டவள் தான் பதினியென பகன்ற கதை தான் இவர்களது.
சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
 



periyaare avar kudumpathinar kattiya kovilgalai oru pirayosanam illai endru therindhirundhum paramarithu vandhirukkiraar. idhuvum avare medai kootangalil sonnadhu.
 



சரி, உங்க கருத்து ??