<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சிறுகதைப் போட்டி நிறைவு


ஆகஸ்ட் 21 நள்ளிரவு வரை வந்த படைப்புக்களின் எண்ணிக்கை முப்பது. இரண்டு வாரங்கள் என்ற அவகாசத்துக்கு இது மகிழ்ச்சியை தரும் ஒரு எண்ணிக்கை. அதிலும் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புக்களை எழுதி அசத்திவிட்டார்கள்.

இதுவரை பின்னூட்டமாக வந்த இணைப்பில் குறிப்பிட்ட பதிவுக்கு சென்று கதைளை (மட்டும்) அதன் format கெடாமல் வேர்டு கோப்புகளாக மாற்றி, பின்பு அக்ரோபாட் உதவியுடன் அதை PDF கோப்பாக செய்து நடுவருக்கு அனுப்பிவிட்டேன். இதன் மூலம் அனைத்து கதைகளுக்கும் ஒரு சீரான தன்மை கிடைத்தது (படங்களுடன் இருந்த இரண்டு படைப்புகளும், படத்தோடே இருக்கும்)

இதோடு என் வேலை முடிந்தது. இனி நடுவர் பொறுப்பு. தனது கடினமான வேலைப்பளுவுக்கு இடையிலும் இந்த போட்டிக்காக நேரம் ஒதுக்கியமைக்கு திரு.மாலன் அவர்களுக்கு மிகவும் நன்றி.. நடுவர் தனது முடிவுகளைத் தெரிவிக்கும் போது ஒவ்வொரு கதையைப் பற்றிய அவரின் கருத்துக்களையும் அவை மேலும் மேம்பட சில யோசனைகளையும் தெரிவிப்பதாக சொல்லியிருக்கிறார். அவருக்கு நிறைய நேரம் பிடிக்கும் வேலை இது. அனுபவசாலியும் ஆசிரியருமான திரு.மாலனின் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்போட்டியின் முடிவுகள் மகாகவி பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11ம் நாள் அன்று
இங்கு பார்க்கலாம்..

அனைத்து கதைகளுக்குமான சுட்டியை
இங்கே பார்க்கலாம். உங்கள் யூகப்படி முதல் மூன்று இடங்களை பிடிக்கும் என்று நீங்கள் கருதும் கதைகளின் பெயர்களை தனி காகிதத்தில் எழுதி பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள், முடிவுகள் வெளியானதும் அலச சுவாரசியமாக இருக்கும்.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


// ஆகஸ்ட் 21 அல்லவா!!! //

காலப்பிரமாண குழப்பம் இதுதானோ.. நன்றி பொதிகை மைந்தன். திருத்திவிட்டேன்.
 



இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தல.,

- ப ம க தொண்டன் !
 



sep -11???

தல இதுல ஒரு வில்லங்கம் இருக்கே தெரியுமா??? 9/11
வீ எம்
 



Thanks Mugamoodi for announcing this competition, with a reasonable time limit, stimulating aspiring writers.

The best part is the judge giving comments and suggessions for enhancements for each story, which will be a boon for novices like me.

V M - kusumbu?

che.. bharathiyaar ninaivaik kuda hijack pannittaanggale!
 



வருகை தந்ததுக்கு நன்றி முகமூடியாரே,
கொழுவியெண்டா, எல்லாரோடயும் கொழுவிக்கொண்டு திரியிறது. கொழுவுறது எண்டா சண்டைபிடிச்சுக் கொண்டு திரியிறது. மற்றாக்களோட வம்புக்குப் போறது. இத 'ராத்திறது' எண்ட சொல்லாலையும் குறிக்கலாம்.

அதாவது மற்றாக்களை வம்புக்கு இழுப்பவன் அல்லது இழுப்பவள் கொழுவி என்ற பெயரால் அறியப்படுவான்/ள்.
 



ஒரு வாசல் மூடி...
மறுவாசல் வைப்பான்.... இறைவன்!

இது இனிதே முடிந்தது...!
இனி அடுத்து யாரோ... என்ன போட்டியோ!!

முருகா! முருகா!!
 



hi mugamUdi.

neengaLum , vengittuvum valaippathivugaLai oru arthamuLLa paathaiyil azhaiththuch chella adiyeduththu vaiththirukkiRIrgaL

vaazhthtukkaL.

I have published another story.. V.M uudaiya idaiyaip pidiththa style..

VM, bhanuvaasan, ponRoor kaRpanaigaL nijamaagave nanRaaga irukkiRathu.. ivargaL iruvarathunadaiyum kooda arumai..bhanuvaasanudaiya veeRu oru kathai 300 $ anuppuvaaree athu.. athaip padiththathum enkkuth thoonRiyathu ivar oru professional writer.

maRRavargaLukkum parattukkaL.. vazhththukkaL..

anbudan vichchu

neyvelivichu.blogspot.com
nURaavathu pathivai nookki
 



வீ.எம், எழுதும்போது எனக்கு தோன்றியது அது. ஒரு நாளை உலகம் முழுக்க எப்படி மார்கெட்டிங் செய்து விட்டது அமெரிக்கா...

நன்றி சுரேஷ், விஷி.. கதைகளுக்கு வரும் விமர்சனம் பயனுள்ளதாக இருக்கும்... நானும் நிறைய சிறுகதைகள் தேர்ந்த முறையில் எழுதப்பட்டதை படித்து மகிழ்ந்தேன்

விளக்கத்துக்கு நன்றி கொழுவி... இது தெரியாம நான் வேற "என்னவோ" நினைச்சுட்டேன். ஆனா உங்க கொழுவுதலுக்கு ஆரும் மருகுற மாதிரி தெரியலையே...

என்ன போட்டியா இருந்தா என்ன ஞானபீடம்.. எப்போதும் போல காற்று வீசும் நமக்கு.. கடிகாரம் ஓடும்...
 



Thanks a lot, VishyTheKing.

ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது.

:-)
 



சரி, உங்க கருத்து ??