<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

எனது 'கேள்விகள்' பதிவு


பொதுவாக புத்தகம் விற்றால் 'விலை : ரூ. 80' என்று இருக்கும்... அது ஏன் கி.வீரமணி எழுதிய 'வாழ்வியல் சிந்தனைகள்' புத்தகத்துக்கு மட்டும் 'நன்கொடை ரு.80' அப்படீன்னு சொல்றாங்க? நன்கொடை என்றால் விரும்பி கொடுப்பதுதானே? இல்லை 'தலைவர் பிறந்த நாள், 2000 ரூ நன்கொடை எழுதுங்கண்ணா' ன்னு சைக்கிள் செயின் சகிதம் கேப்பாங்களே, அந்த மாதிரி நன்கொடையா? எனக்கு நன்கொடை கொடுக்க விருப்பமில்லை, ஆனால் புத்தகம் வேணுமுன்னா, என்ன செய்யனும்? இந்த புத்தகத்தை எழுதியதற்காக ஆசிரியர் வீரமணிக்கு 'அமவுண்டு' எதுவும் உண்டா? எல்லாமே அவரு சொத்துதுதான், இருந்தாலும் அஃபிஷியலா...

பொதுவாக போட்டிகளில் ஆறுதல் பரிசு என்று ஒன்று தருகிறார்கள்... இதனால் அந்த பரிசை வாங்குபவர்கள் "நல்ல வேளை, முதல் பரிசு கிடைக்கவில்லை" என்று உண்மையிலேயே ஆறுதல் அடைகிறார்களா? இந்த பரிசை கண்டுபிடித்தவர் யார்? காரணம் என்ன? வந்த படைப்புகளில் சிறந்ததாக தீர்மானிக்கப்படும் படைப்புகளை வரிசைப்படுத்தி பரிசு வழங்கலாம் என்றால் முதல்,இரண்டாம், மூன்றாம், நான்காம் என்று அறிவிக்கலாமே.. எதற்கு ஆறுதலாக பரிசு தரவேண்டும்?

பேய் ரீலி என்பவரின்
பதிவிலே தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன... ஆனால் அர்த்தம் புரிவதில்லை. யாருக்க்கும் புரியவில்லையா, அல்லது நமக்கு மட்டும்தான் புரியவில்லையா என்று பார்த்தால் அப்பதிவுக்கு 10 பேர் பின்னூட்டம் எழுதியிருக்கிறார்கள் (அப்பின்னூட்டங்களும் புரியவில்லை)... ஆக தவறு எனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் மேல்தான். அவர் மீது விசாரணை கமிஷன் வைக்கலாம் என்றால் அவர் தற்போது உயிருடன் இல்லை. எனவே இது போன்ற பதிவுகளுக்கு அகர முதலி கிடைக்குமா?

புண்ணாக்கு தவிடு போன்றவை மிகுந்த சுவையாக இருப்பதாக சிலர் சொல்கிறார்கள்... நிறைய பேர் ப்ரேக்பாஸ்டுக்கு
புண்ணாக்கு, ஸ்நாக்ஸுக்கு தவிடு என்ற ரேஞ்சில் சாப்பிடுவதாக வழிமொழிகிறார்கள்... இவர்கள் இந்த ரேஞ்சில் இந்த சரக்கையெல்லாம் காலி பண்ணினால் மாடுகள் என்ன சாப்பிடுகின்றன? பீஹாரில் கால்நடைகள் பட்டினியில் இறந்ததற்கும், அங்கு நடந்த கால்நடை தீவன ஊழலுக்கும் பீஹார் மக்கள் புண்ணாக்கு சுவை அறிந்ததுதான் காரணமா? ஏன் யாரும் வைக்கோல் சுவை பற்றி எழுதுவதில்லை? அப்போ "அவன பாரு எப்படி மாடு மாதிரி இருக்கான்" என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிட்டதால் இனி இந்த வாக்கியம் வழக்கழிந்துவிடுமா?

சந்திரமுகி, அந்நியன்,
மங்கல் பாண்டே, திருவாசகம் என்று, எழுதினால் வரிசையாக எல்லாரும் வூடு கட்டி ஒரே விசயத்தை பற்றியே எழுதுகிறார்களே... இவர்கள் எல்லாம் ஏன் மற்ற படங்களை பற்றியோ இசையை பற்றியோ எழுதுவதில்லை? இவர்கள் குறிப்பாக ஒரு சில படைப்புக்களை பற்றி எழுத, எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள்?

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


"அது ஏன் கி.வீரமணி எழுதிய 'வாழ்வியல் சிந்தனைகள்' புத்தகத்துக்கு மட்டும் 'நன்கொடை ரு.80' அப்படீன்னு சொல்றாங்க ?நன்கொடை என்றால் விரும்பி கொடுப்பதுதானே ? இல்லை 'தலைவர் பிறந்த நாள், 2000 ரூ நன்கொடை எழுதுங்கண்ணா' ன்னு சைக்கிள் செயின் சகிதம் கேப்பாங்களே"
அதானே.

"பொதுவாக போட்டிகளில் ஆறுதல் பரிசு என்று ஒன்று தருகிறார்கள்... இதனால் அந்த பரிசை வாங்குபவர்கள் "நல்ல வேளை, முதல் பரிசு கிடைக்கவில்லை" என்று உண்மையிலேயே ஆறுதல் அடைகிறார்களா?"
அதாவது முதல் மூன்று பரிசுகள்தான் சாதாரணமாக அறிவிப்பார்கள். சற்றே குறைந்த மார்கினில் பரிசு கிடைக்காமல் கோட்டை விட்டவர்களுக்காக ஆறுதல் பரிசு.

"பேய் ரீலி என்பவரின் பதிவிலே தமிழ் எழுத்துக்கள் காணப்படுகின்றன... ஆனால் அர்த்தம் புரிவதில்லை."
எனக்கும் புரியவில்லை.

"பீஹாரில் கால்நடைகள் பட்டினியில் இறந்ததற்கும், அங்கு நடந்த கால்நடை தீவன ஊழலுக்கும் பீஹார் மக்கள் புண்ணாக்கு சுவை அறிந்ததுதான் காரணமா?"
முக்கியமாக லாலு அவர்கள் அச்சுவையை அறிந்ததுதான் காரணம்.

"இவர்கள் குறிப்பாக ஒரு சில படைப்புக்களை பற்றி எழுத, எந்த அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள்?"
இதற்குப் பெயர் ஆட்டுமந்தை மனப்பான்மை.

இப்போது முகமூடிக்கு ஒரு கேள்வி. நீங்கள் ஏன் கேள்விக்குறிக்கு முன்னால் இடம் விடுகிறீர்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



இப்போ ஒரு புஸ்தகம் வங்கினா அத படிச்சுப்புட்டு செலவழிச்சது தண்டமா இல்லையான்னு முடிவு பண்ணுவோம். வாசல்ல மாரியம்மனுக்கு மஞ்சத்தண்ணின்னு வந்தாங்கன்னா அங்க இரண்டு ரூபா தண்டம். இத ரெண்டயும் ரூட் போட்டு பாத்தீன்னா, முன்னாடியே தண்டம்னு தெரிஞ்சேதான் ரூ 2 கொடுத்த அத மாதிரிதான் நன்கொடைன்னு போட்டா தெரிஞ்சே தண்டமா ஒரு புஸ்தகத்த வாங்குங்கன்னு அர்த்தம்.

அடுத்த போட்டிலயும் கலந்துக்கோ ராஜான்னு தட்டி கொடுக்கறதுக்குதான் அறுதல் பரிசு. Just to encourage the spirit of paricipation.

பேய படிக்கனுன்னா encodingக யூனிகோடுக்கு மாத்து. வேற வேல இருந்தா பாருன்னு சொல்லாம சொல்ராரோ?

மத்தது என்னத்த சொல்ல..
 



ஆஹா...

கேள்விகள் அருமை!
 



Feb 20, 2004:Decoding Peyarili

புண்ணாக்கு breakfast சாப்பிட்டால் முகமூடி போடவேண்டிய அவசியமில்லை :P
 



பரி... பெயரிலியின் வார்த்தைகள் (ஒன்றிரண்டை தவிர மற்றது) எப்பவுமே எனக்கு புரிகிறது... ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியவில்லை என்பதே - அதாவது எனக்கு புரிவதுதான் அவர் சொல்ல வந்ததா என்பதே இங்கு ப்ரச்னை...

பெயரிலியை 75% புரியும் நீங்கள் சொல்வதை பார்ப்போம்...

// புண்ணாக்கு breakfast சாப்பிட்டால் முகமூடி போடவேண்டிய அவசியமில்லை // என்கிறீர்கள்... அதாவது,

1. அடே புண்ணாக்கு, நீ breakfast சாப்பிட்டால் முகமூடி போடவேண்டிய அவசியமில்லை

2. புண்ணாக்கு என்பதை breakfastஆக சாப்பிட்டால் முகமூடி போட வேண்டிய அவசியமில்லை

3. புண்ணாக்கு breakfast சாப்பிட்டால் (புண்ணாக்கு என்பது உயிரற்ற ஜடம், அது எப்படி சாப்பிட முடியும்) முகமூடி போட வேண்டிய அவசியம் இல்லை...

இதில் நீங்க என்ன சொல்ல வறீங்க என்பதுதான் புரியவில்லை என்கிறேன்... பெயரிலியை 75% புரியும் உங்க எழுத்தே 3 அர்த்தங்கள் கொண்டிருந்தால், அவரின் எழுத்தில் எத்தனை அர்த்தம் இருக்கும்...
 



சும்மா கிடந்த புண்ணாக்குப் படற பாட்டப் பாருங்களேன் :-)
 



வாங்க செல்வராஜ், இதற்கு முன்னாலும் புண்ணாக்கு மகாத்மியம் பற்றி ஒரு பதிவு வந்திருந்தது... அதையும் சேர்க்கலாம் என்றால் தேட இயலவில்லை.. (நானும் சின்ன வயதில் புண்ணாக்கு சாப்பிட்டவன் என்பதை ரகசியமாக வைத்துக்கொள்வது இங்கு அவசியம்)
 



Great readiing
 



சரி, உங்க கருத்து ??