<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அரசியல் அறிக்கையும் ஆத்தா கெழவியும்


மதிமுகவில் இருக்கும் ஒன்றிரண்டு குறுந்தலைவர்-cum-தொண்டர்களில் எல்.கணேசன் ஒருவர் ( இந்த பதிவில் எல்ஜி என்றிருந்தால் அது நம் அண்ணன் எல். கணேசன்... கூட்டு பெருங்காயம் அல்ல என்று தெளிக)

ஒரு சில வீடுகள்ல பாத்தீங்கன்னா, வயசான பெரியவங்க அப்பப்போ சில கருத்து சொல்லுவாங்க. அத அந்த வீட்டுல யாரும் காது கொடுத்து கேட்க மாட்டாங்க. அதுக்காக அவங்க கருத்த சொல்றதயும் நிறுத்த மாட்டாங்க. உத்து கவனிச்சா அவங்க சொல்றதுல பல விஷயம் பயனுள்ளதா இருக்கும்... (இந்த பதிவில் கெழவி என்று இருந்தால் அது வீட்டு பெரியவரை, மருத பாஷையில மரியாதையாக அழைக்கிறோம் என்று தெளிக)

நம்ம அண்ணன் எல்ஜி அப்பப்போ விடற சில அறிக்கை பத்தி யாரும் கண்டுக்கறதில்லை. இன்னிக்கி பொழுது போகாததால எல்ஜி அறிக்கை பத்தி யோசிச்சே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கோம்...

"ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் எந்த ப்ரச்னையும் இல்லை"

வீட்டுக்கு யாராவது வந்தால் அவங்களாண்ட போயி "ஏம்பா நீ சொல்றத பாத்தா பெரியவனுக்கு அவன் பொண்டாட்டி கூட ஏதோ ப்ரச்னைங்கிர மாதிரியில்ல இருக்கு, அதெல்லாம் ஒன்னியும் இல்ல... ரெண்டு பேரும் சந்தோசமாத்தான் இருக்காங்க" ன்னு கெழவி சொல்லும். நாம எதுவும் கேக்கவேயில்லியே, எதுக்கு எலி அம்மணமா ஓடுதுன்னு நெனப்பான் வந்த விருந்தாளி..

"கூட்டணியில் விரிசல் என்று வெளியாகும் தகவல்கள் அனைத்துமே பொய்யானவை. கூட்டணியில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மதிமுக தொடர்ந்து நீடிக்கும்"

இதான் ப்ரச்னை. கெழவி ஒரு விசயத்த ஒரே விசயமா சொல்லாது. அதுக்கு அப்படியே ஒரு இன்னொரு விசயத்த ஒரு 'க்'ன்னா போட்டு முடிச்சாத்தான் நிம்மதி. கேக்குறவன் நினைப்பான், அதான் ஒரு ப்ரச்னையும் இல்லையில்ல.. அப்புறம் எதுக்கு யார் இருந்தாலும், இல்லையின்னாலும்னு, சந்துல ஒரு பொடிய வச்சி பேசுது கெழவின்னு...

"திமுகவுடன் இணைந்து தான் சட்டசபைத் தேர்தலை சந்திப்போம்"

"ஆயிரம்தான் சொல்லு, இந்த ஒண்டு குடிசதாம்பா நமக்கு சொர்க்கம்... சின்ன பேரன் பட்டணத்துல மச்சு வீட்டுல மொசேக் போட்ட வூட்டுலதான் இருக்கானாம்... கொழாய தெறந்தா தண்ணி வருதாம், வெக்க தெரியாம இருக்க ஏசி எல்லாம் போட்றுக்கானாம்.... என்னய வா கெழவின்னு முன்னூறு தடவ கூப்பிட்டான்... ஆனாலும் இந்த கட்டைக்கி அதெல்லாம் சரி வருமா சொல்லு... மண் தரைதான், மழ பேஞ்சா கூர ஒழுவுதுதான், சாயங்காலமானா கொசுக்கடி... இருந்தாலும் இந்த வூட்ட உட்டு போனா நல்ல படி தூக்கம் வருதா சொல்லு" அப்படீன்னு பிலாக்காணம் படிக்கும் கெழவி... உண்மை என்னன்னா, பேரன் கூப்பிட்டுருக்கவே மாட்டான். வேற போக்கிடம் இல்லாத ஒரு ஏக்கத்துல அப்படி சொல்லி மனச தேத்திக்கும் கெழவி.

"சபலத்திற்கு மயங்கும் புத்தி உடையவர்கள் யாரும் திமுக கூட்டணியில் இல்லை"

கெழவி, "வயசானாலே இப்படித்தான் மறதி அதிகமா போகும்"னு அப்பப்போ சொல்லிக்கும்... ஆனாலும் சும்மா இருக்காது. பேரன் மறுநா கோழி கூவ மொத பஸ்ஸ புடிச்சி ஊருக்கு போறேன்னு சொல்லியிருப்பான். அது பாட்டி மனசிலயே தங்கிரும்... அப்பால யாராவது வந்து பேரன் எங்கன்னு கேட்டா "அவன் இல்லையே, அப்பவே போயிட்டானே'ன்னு சொல்லும்... ஆனா பேரன் உள் ரூமில மாங்கா சாப்பிட்டு தூங்கிகிட்டு இருப்பான்.

"மத்திய அமைச்சரவையில் மதிமுக சேருவது குறித்து வைகோ தான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அமைச்சரவையில் சேருவதில்லை என்பதை கொள்கை முடிவாக வைத்துள்ளோம். எனவே அதை மாற்ற வேண்டுமானால் பொதுச் செயலாளரான வைகோ தான் தீர்மானிக்க வேண்டும் என்றார் எல்.கணேசன்"

பங்காளி குடும்பத்துல கை நனைக்கிறதில்லையின்னு மவனுக்கு ஒரு வைராக்கியமப்பா... மருமவ போய் ஒரு எட்டு பாத்துட்டு வரணும்னு அப்பப்போ மூக்க சிந்துவா... ஆனா மவன் செத்தாலும் வைராக்கியத்த மாத்த மாட்டேன்னு சொல்லிபுட்டான்... என்ன ஒன்னு பங்காளி கெடா விருந்து கொடுத்தாருன்னா கை நனையாம சாப்பிடுறத பத்தி யோசிப்பானா இருக்கும்.. ஆனா அத வீட்டுல உள்ள பொம்பளயாளுங்க சொன்னா கொலதான் விழும். அவன் சொல்றப்போ சந்தோசமா தூக்கு சட்டிய தூக்கிகிட்டு ஒரு எட்டு போயிட்டு வருங்க... எப்ப அந்த எல்லச்சாமி கண்ண தொறப்பானோ தெரியல..

பாருங்க அண்ணன் எல்ஜி அறிக்கைய பத்தி ஆராய்ச்சி பண்ணலாம்னு வந்து பெரிசு கதைய பேசிக்கிட்டு கெடக்கோம்... சரி விடுங்க.. இன்னொரு சமயத்துல அண்ணன பத்தி பேசிக்கலாம் தப்பில்ல...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


good humour!
 



//வேற போக்கிடம் இல்லாத ஒரு ஏக்கத்துல அப்படி சொல்லி மனச தேத்திக்கும் கெழவி//
அப்படிப் போடுங்க அரிவாளை...
 



எங்க ஊர் பாராளுமன்ற தஞ்சாவுர்காரவுக அவுகள பத்தி சரியா புட்டு புட்டு வச்சுபுட்டீக.
நன்றி
என்னார்
 



vazha vazhaa! thozha thozaa!
 



ஐயோ பாவம் முகமூடி.. எல் ஜி அறிக்கையையெல்லாம் படிக்கிற அளவுக்கு முத்திப்போயிருச்சு போலிருக்கு ..;)..

இதை படிச்சு சிரிப்பை அடக்கமுடியலை ..
 



;-)
 



நன்றி பத்ரி , சுதர்சன்

என்னார் அண்ணன் தஞ்சைகாரரா... அதான் வெத்தலை செல்லத்தோட அலையிறாரா (அது இவர்தானே)

மணிகண்டன், நீங்க எல்ஜி அறிக்கைய சொல்றீங்களா, இந்த பதிவ சொல்றீங்களா ;-)

என்ன பண்றது தாஸ¤... ஒரு 4 பேராவது படிக்கலையின்னா பாவம் அவர் வருத்தப்பட மாட்டாரா... (அவ்ளோ போர் அடிக்கிதுப்பா)
 



சைக்கிள் கேப்புல மிஸ் பண்ணிட்டேன்... வாங்கோ பெயரிலி.. அடுத்த தடவ இந்த ஸ்மைலியில ஒரு )ஆவது சேத்து போட படாதா?
 



சூப்பர் பதிவு.. சட்டயர் நல்லா இருக்கற ஒரு பதிவு இங்க் இருக்கு..இன்னொண்ணு எங்கே?
 



சரி, உங்க கருத்து ??