<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மங்கல் பாண்டே


கோவணம் கட்டாத ஊர்ல கோவணம் கட்னவன் பைத்தியம்னு சொல்வாங்க... எல்லாரும் இப்போ மங்கல் பாண்டே பத்தி எழுதும் போது நாம மட்டும் எழுதாம இருந்தா நல்லாவா இருக்கும் சொல்லுங்க, அதனால நாமளும் எழுதலாம்னு பாத்தா நான் இன்னும் அந்த படத்த பாக்கல...

ஆமா, தமிழ் பத்திரிக்கைல எல்லாம் படத்த பாத்துட்டா எழுதறாங்க, ஒரு குத்து மதிப்பா எழுதலாம்னா, இது இந்தி படம்... ஃபார்முலா எல்லாம் ஒன்னுதான்னாலும், கொஞ்சம் கம்மி ஜாஸ்தியா எழுதனுமே...

அதுவும் இது சரித்திரப்படம் வேற... நான் பாட்டுக்கு மொழியினால சரித்திரத்த தப்பா புரிஞ்சிக்க கூடாது பாருங்க. இப்படித்தான் ஒருதபா, சின்ன வயசுல வீரபாண்டிய கட்டபொம்மன் படத்த பாத்துட்டு, கட்டபொம்மன தூக்குல போட்டதும், "போப்பா, பேசாம ரஜினி அங்கிள கட்டபொம்மனா போட்றுக்கலாம்ல, வெள்ளகாரன எல்லாம் அடிச்சி போட்டுட்டு தப்பிச்சி வந்திருப்பாரு"ன்னு சொன்னதும் பொளேர்னு முதுகுல ஏன் ஒரு மொத்து உழுந்துதுன்னு இன்னி வரைக்கும் தெரியாது...

ஆக நல்ல ஒரு மொழி பெயர்ப்பாளரோட போயி இந்த படத்த பாத்துட்டு விமர்சனம் எழுதணும்னு "கயாமதி ஜாறன்" கிட்ட எழுதி கேட்ருக்கேன். அவரும், "தாத்தா அடுத்த வாரம் ப்ராத்மிக் பரிச்சை எழுத போறார் முகமூடி, அது முடிஞ்சவுடன் வொக்காபுலரி இம்ப்ரூவ்மெண்ட்காக தாத்தாவும் படத்துக்கு வரேன்னு சொல்லியிருக்கார். எப்படியும் மொழிபெயர்க்க வேண்டியிருக்கும்... அப்ப ஒன்னா பாத்துக்கலாம்"னு சொல்லியிருக்கார். பாத்தவுடன் கண்டிப்பா விமர்சனம் எழுதறேன்.

அறிவுப்பசி அண்ணாசாமி : இந்த வலைப்பதிவருங்க எந்த அடிப்படையில சில படங்களுக்கு
மட்டும் விமர்சனம் எழுதறாங்கன்னு புரிஞ்சிக்கவே முடியலியேப்பா...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


ஐயோ, இது விமர்சனம் இல்லீங்க, விமர்சனக் குறுங்கதைனு (அது என்னன்னு கேட்காதீங்க) வேணாம் சொல்லலாம் ;-)

-Vinodh
http://visai.blogspot.com
 



வெள்ளகாரன எல்லாம் அடிச்சி போட்டுட்டு தப்பிச்சி வந்திருப்பாரு"ன்னு சொன்னதும் பொளேர்னு முதுகுல ஏன் ஒரு மொத்து உழுந்துதுன்னு இன்னி வரைக்கும் தெரியாது...
//சத்தியமா நான் அடிக்கலை
 



அறிவுப்பசி அண்ணாசாமி,

Suresh mattumthaan vithivilakkillama ella pataththukkum vimarsanam ezuthara oree aalu.
 



"போப்பா, பேசாம ரஜினி அங்கிள கட்டபொம்மனா போட்றுக்கலாம்ல, வெள்ளகாரன எல்லாம் அடிச்சி போட்டுட்டு தப்பிச்சி வந்திருப்பாரு//

முகமூடி போட்டுக்கிட்டா என்னவேணா டூப் விட்றதா..? அதெல்லாம் ரஜினி இல்ல; அந்தக் காலத்துல, வாத்தியாரைப் போட்ருந்தா 'பரத்தியிருப்பார்'னு வாத்தியார் படை சொல்லும். அது மட்டுமா? வியட்நாம்வீடு பாத்துட்டு நாங்கல்லாம் சோகமா வரும்போது ஒரு குரல்..'எல்லாம் நல்லாதான் இருந்திச்சு; ஆனா ஒரு சண்டைகூட இல்லியே' !
 



வினோத் நீங்க விமர்சனமே எழுதுங்க.. அதுல என்ன. நான் ஊரோட ஒத்து போகணுமுன்னு பத்வு போட்டேன்

தெரியும் ராமதாஸு, ஒரு வேளை கமல்னு சொல்லியிருந்தா நீங்க அடிச்சிருப்பீங்களோ ;-)

சுரேஷு, நம்ம கட்சி உங்கள அப்படி வளத்திருக்கு. நடுநிலைமைன்னா அது பமகதான்

தருமி, நாங்கள்லாம் கட்டபொம்முவ ரெண்டாவது ரன்னுல இல்ல பாத்தோம். எம்சிஆர் பேர சொல்லியிருந்தா, என்னொட வயசு ஒரு ப்ரச்னை ஆகியிருக்கும்.. நானெல்லாம் மீனாவையே ஆண்ட்டின்னு சொல்லி வளந்த பய ;-))
 



//நானெல்லாம் மீனாவையே ஆண்ட்டின்னு

இது கொஞ்சம் ஓவருங்கோ ...
 



த்ரிஷா எனக்கு பேத்தியா. கெட்டுது போங்க கத... திரிஷாவோட பேத்தி "முகமூடி அங்கிள் நான் இங்க இருக்கேன்"னு பாட்டு படிக்க சொல்லோ நான் இளமை ஹீரோவா இருப்பேன் (அப்புறம் த்ரிஷா பேத்தி எனக்கு பாட்டி ரோல்ல நடிப்பாங்கோ)
 



சரி, உங்க கருத்து ??