<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஆளில்லாத ஊரின் ராஜா


அந்த இயக்கத்திலிருந்து போராடினேன்
img crtsy=faculty.smu.eduதுரோகி என்றார்கள்
இந்த இயக்கத்திலிருந்து போராடினேன்
தீவிரவாதி என்றார்கள்
பெரிய இயக்கத்தில் சேர்ந்த பின்பே
போராளி என்றார்கள்

கொள்கைக்கு மாற்றானால்
அரசாங்கம் மட்டுமல்ல
அடுத்த இயக்கமும்தான் எதிரிதான்

அடுத்த இயக்க தலைவன் அழிய
உயயோகப்படாத உயிர் எதற்கு,
உரிமை கேட்டு போராடியவன்
சுவரில் மட்டும் தியாகியானேன்

img crtsy=www.childrenofthemanhattanproject.orgபலியை பார்த்தால் முடியுமா
போரல்லவா முக்கியம்
களத்தில் பாதி
பெயர்வதில் மீதி என்று
காலியானது ஊர்

ஒரு நாள் உரிமையும் கிடைத்தது
முடி சூடியபின் ராஜா கேட்டார்
மாதம் மும்மாரி பொழிகிறதா மந்திரி
மழையில் ஒன்றும் குறைவில்லை ராஜா
அறுவடை செய்யத்தான் ஆளில்லை

© முகமூடி

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


சம்பந்தமில்லாத செய்தி :: 1995ல் JKLFன் யாசின் மாலிக் தான் ஆயுத போராட்டத்தை கைவிடுவதாக சொன்னதும், அதை ஏற்காத அமானுல்லாகான் தலைமையில் ஒரு தனி பிரிவு உருவாக, அன்று இரண்டாக உடைந்த JKLF 10 வருடங்கள் கழித்து போன மாதம் மீண்டும் இணைந்தது. இடைப்பட்ட காலத்தில் தன் இயக்கம் சார்ந்த நம்பிக்கைக்காக போராடி உயிர் நீத்தவர் பற்றி தகவல் இல்லை.
 



துரோகி தமிழர்கள் கொல்லப்பட வேண்டும் என்று எழுதினால், நீ தமிழன்.
தமிழர்கள் அநியாயமாய் இறக்கக்கூடாது என்று எழுதினால் நீ தமிழ் துரோகி.

புலிகள் செய்யும் கொலைகளை ஆதரித்து எழுதினால் நீ தமிழ் வளர்ப்பவன்
புலிகள் செய்யும் கொலைகளை எதிர்த்து எழுதினால் நீ தமிழ் துரோகி

புலிகள் என்ன தவறுகள் செய்தாலும் கண் சிமிட்டாமல் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தால் நீ மனிதன், தலித்துகளுக்காக போராடுபவன், தமிழுக்காக குரல் கொடுப்பவன், முட்டி மடக்கி உன் பின்னே ஆயிரம்!
இந்தியர் என்ன நல்லது செய்தாலும் கண் சிமிட்டி நீ இந்தியர் செய்த தவறுகளை பட்டியலிடவில்லை என்றால் தேச வெறியன்.
 



ஒரு குறிப்பு :: இந்த பதிவை எழுதும் போது நான் புலிகளை (மட்டும்) நினைத்து எழுதவில்லை.. ஆகவே இதை எந்த ஒரு தனிப்ப்பட்ட இயக்கத்தோடும் சம்பந்தப்படுத்தி பார்க்க வேண்டாம் என்று கோருகிறேன்.
 



முகமுடி இது உங்களுடைய ஆக்கமா? நன்றாக உள்ளது
 



மாறுதல் விதி ஒன்றன்றி உலகில் மாறாதது எதுவும் இல்லை.
 



ஆமாம் கங்கா... காப்பிரைட் போட்டுவிட்டேன்..

நன்றி மதியிலி & அவதாரம்
 



சரி, உங்க கருத்து ??