<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://draft.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தங்கர் பச்சா அடிப்பொடிகளுக்கு ஒரு கேள்வி


ஒரு அலுவலகத்தில் கொள்கை பிடிப்போடு பணியே உயர்வென்று dedicated ஆக ஒருவர் வேலை செய்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அந்த அலுவலகத்தில் உங்கள் வீட்டு பெண்கள் வேலை செய்கிறார்கள்... அந்த workaholic மனிதருக்கு 5 மணிக்கு பஸ் பிடித்து அவசரமாக வீட்டுக்கு போகும் பெண்கள் எல்லாம் தொழில் பக்தி இல்லாமல் காசுக்காக மட்டும் வேலை செய்கிறார்கள் என்று தோன்றுகிறது... அவர் அலுவலக பெண்களை பார்த்து நீங்கள் எல்லாம் விபசாரிகள் என்று சொன்னால் அவர் சொல்வதும் நியாயம்தான் என்று உங்கள் வீட்டு பெண்களை சமாதானப்படுத்துவீர்களா?

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நல்ல சவுக்கு அடி.
 



Very good Question, mugamoodi !!!

ithu pOnRu uraikkira mAthiri kELungkaL !!!!!!!!!
 



Sariyaana kelvi.

Thangarukku vaay konjam athikamnaa, athaivida ingee sila perukku athikamaa irukke!
 



இது கேள்வி!!!
..aadhi
 



அட்ச்சான் பாரு மொகமூடி.. மொறயா கேட்டபா..
 



அனைவருக்கும் நன்றி..

சதயம் ::

ஜெர்மன் எம்பஸியில் பல வருடங்களுக்கு முன்பு திரைப்பட கல்லூரி மாணவர்களும், MOB வைஷ்ணவ் கல்லூரி மாணவிகளும் எடுத்த குறும்படங்களை வெளியிட்டு கலந்துரையாடினர். ஒரு நாள் தங்கரும் விமரிசகராக வந்திருந்தார். அவர் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவாகவும் MOB வைஷ்ணவ் மாணவிகளுக்கு எதிராகவும் செய்த காட்டமான விமரிசனம் முகம் சுளிக்க வைத்ததாக இருந்தது. படங்களை மட்டும் செய்ய வேண்டிய விமரிசனம் மாணவிகளின் உடை குறித்தும் தமிழ்நாட்டில் இருந்தும் அவர்கள் பின்பற்றும் கலாசாரத்தை பற்றியும் அவர் நாராசமாக செய்த விமரிசனத்துக்கு பொறுக்கிகள் சிலர் விசிலும் அடித்தனர். ஆக தங்கரின் மனவிகாரத்தின் வெளிப்பாடே இப்போதைய காமெண்ட்டும்.

கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு அளவு இருக்கிறது பாஸ்... தன் பாணியை பின்பற்றி படமெடுக்காத, தமிழ் கலாசாரத்தை பற்றி கவலைப்படாத சக இயக்குனர்களையும் நடிகர்களையும் இதற்கு முன் விமர்சனம் பண்ணியபோதெல்லாம் தங்கர் மீது இப்படிப்பட்ட பாய்ச்சல் இல்லை.. இந்த ஆளை இப்படித்தான் படமெடுக்க வேண்டும் என்று யாராவது சொன்னார்களா. இவர் மட்டும் மற்றவரின் படைப்பை பற்றி இலக்கணம் வகுக்க யார் சுதந்திரம் கொடுத்தது. தங்கருக்கு முன்பும் பின்பும் தமிழ் சினிமா இருக்கும். தங்கர் எடுத்த நாலு படம் இல்லையென்றால் தமிழகம் ஒன்றும் கடலில் மூழ்கிவிடாது.

ஒரு பெண்ணின் மீதான அதிக பட்ச வார்த்தை வன்முறை அவளின் கற்பு மீது களங்கம் சொல்லுவதுதான் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். அதுதான் இங்கும் நடந்தது. தகாத வார்த்தைகள் சொல்லிவிட்டு காலில் விழுந்தவுடன் எதுவும் நடக்காதது போல் இருக்க மனோரமா என்ன மகாத்மாவா.. நாவினாற் சுட்ட வடு, வடுதான். அங்கு இருந்த நடிகைகளுக்கு ஆத்திரம் இருக்கத்தான் செய்யும்...

எனக்கு ஆச்சரியம் சில வலைப்பதிவர்கள் மீதுதான். எவ்வளவு பிற்போக்குவாதிகள் என்பதை தங்கர் பேச்சை ஆதரித்ததன் மூலம் வெளிப்படுத்திக்கொண்டனர். 'ஸ்வீட் ஸ்டாலில் ஸ்வீட் விற்கின்றனராம்' சினிமா நடிகைகள் எல்லாம் சோரம் போனவர்கள் என்பது பிற்போக்குத்தனமான சீக்கு பிடித்த மனோபாவம். இவர்களில் எத்தனை பேர் வாய்ப்பு கிடைத்தால் தப்பு பண்ண மாட்டார்கள் என்பது ஒரு புறமிருக்க, அப்படியே தாம் யோக்கியனாக இருந்தாலும் கூட அடுத்தவரை குருட்டாம்போக்காக விமரிசனம் செய்வதற்கான தகுதியை அது தராது. இவர்களுக்கு என்ன உரிமை இருக்க முடியும். 'டிஸ்கஷனின்' போது இதான் நடக்கிறது என்பது 80களின் பிற்பகுதிகளில் உயர்நிலை பள்ளியில் மூளை வளர்ச்சி அடையாத மீசை முளைக்கும் பசங்கள் பேசக்கேட்ட வாதம். அதை இன்னமும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பது எனக்கு ஆச்சரியம்தான். கேமிரா முன் உடம்பை காண்பிப்பவர், குடும்ப நலத்துக்காக உடலை விற்பவரை விட கேவலமானவர் என்கிறார் ஒருவர். கேமிரா முன் உடம்பை காண்பிப்பவர் என்ன பொழுது போகாமலா காண்பிக்கிறார். மேலும் நடிகையை கேமிராவுக்கு உடம்பை காண்பிப்பவர் என்று ஒரு வாக்கியத்தில் அடைப்பதே ஆணாதிக்க மனோபாவம்தான்.

எல்லாரும் தங்கருக்கு வக்காலத்து வாங்குவது அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதற்காகவாம்... முதலில் தங்கர் மனிதராக இருக்கட்டும்.
 



கேணத்தனமாக எதற்கும் எதற்கும் உதாரணப்படுத்துவது என்று இல்லாமல் கேள்விகேட்க இதோ மற்றுமொரு பதிவு அல்லது ஆள் என்பதை முகமூடியும் இந்த பதிவும் நிரூபிக்கின்றது.

சம்பளத்தையும் வாங்கிக்கொண்டு தயாரிப்பாளர்களையும் இயக்குனர்களையும் இன்னல் படுத்தும் நடிகர்/நடிகைகள் அப்பாவிகளா?


// 'டிஸ்கஷனின்' போது இதான் நடக்கிறது என்பது 80களின் பிற்பகுதிகளில் உயர்நிலை பள்ளியில் மூளை வளர்ச்சி அடையாத மீசை முளைக்கும் பசங்கள் பேசக்கேட்ட வாதம். அதை இன்னமும் பிடித்து தொங்கிக்கொண்டிருக்கின்றனர் என்பது எனக்கு ஆச்சரியம்தான்.
//
"டிஸ்கஷன்" என்பது திரைப்படத்துறையில் அனைவருக்கும் தெரிந்த Open Secret மாதிரியான ஒரு கோட் வேர்ட்.

அது கதை டிஸ்கஷன் அல்ல, என் பதிவிலும் இத்தனை நேரடியாக கூறாமல் கூறியிருந்தேன், எல்லோருக்கும் புரிந்த அது முகமூடிக்கு மட்டும் புரியவில்லையா? அல்லது புரிந்தும் விமர்சிக்க வேண்டுமென்பதற்காக
வார்த்தைகளை பிடித்துக்கொண்டு தொங்குவதற்கும், வரிகளின் இடையில் படித்து விட்டு ஜல்லியடிக்கிறாரா?

எந்த இடத்தில் யாருக்காக இந்த டிஸ்கஷன் என்ற வரிகளை எழுதினேன் என்பதை எப்படி சுலபமாக திரிக்கப்பட்டுள்ளது என்பது மேலே பார்த்தால் தெரியும். இதை முகமூடி புரிந்து எழுதினாரா? அல்லது
 



முகமூடி,

நீங்கள் கேட்ட கேள்வி நியாயமே என்றாலும், அந்த பதிவில் முதலில் பின்னூட்டமிட்டவர் பயன்படுத்திய வார்த்தைகள் நியாயம் என்கிறீர்களா?
 



ஆமாம். தங்கருக்கு அடிப்பொடிகள் வேற இருக்காங்களா?

அது போகட்டும். இவர் ( தங்கர்) மட்டும் சினிமா எடுக்கரது பணம் பண்ணறதுக்கு இல்லையாமா? சமூகச் சேவையா? இலவசமா படம் காட்டறதுக்காவா?

என்னவோ போங்க. ஒண்ணும் சரியா இல்லே ஆமா.

எத்தாலே கெட்டேன்னா 'நோராலே' கெட்டேன்னு!

நோரு= வாய்( தெலுங்கு மொழி)
 



/*
பதிவில் முதலில் பின்னூட்டமிட்டவர் பயன்படுத்திய வார்த்தைகள் நியாயம் என்கிறீர்களா?
*/

read this
 



//ஆக தங்கரின் மனவிகாரத்தின் வெளிப்பாடே இப்போதைய காமெண்ட்டும்.//அப்படித்தான் உணர முடிகிறது.
குருவி குடைஞ்ச கொய்யாப்பழம் தமிழர்களுக்கு தங்கர் அளித்த கொடை!

"யாகாவாராயினும் நா காக்க" அப்படின்னு யாரோ ஹிந்தில சொல்லியிருக்காங்கங்கறதால தங்கர் கடைப்பிடிக்காம விட்டுட்டாரு போலிருக்கு..
 



குழலி யார் கேணத்தனமாக எழுதுகிறார்கள் என்பது படிப்பவரின் மனநிலையை பொருத்தது. சில நாட்களுக்கு முன்பு மற்றொரு பதிவில் - எது என்று ஞாபகம் இல்லை - நீங்கள் தயாரிப்பாளருக்கும் தங்கருக்கும் வக்காலத்து வாங்கிய போதே என் எண்ணத்தை சொன்னேன்...

தாணு-சிம்பு சமாசாரத்தை வைத்து தயாரிப்பாளரின் இன்சைடர் ஸ்டோரி முழுதும் தெரிந்த மாதிரி நீங்கள் பேசிய போது என்னால் சிரிக்கத்தான் முடிந்தது. அப்போதே நான் சொல்லியிருந்தேன், இறுமாப்போடு பேசும் தங்கர் குருவி கொடஞ்ச கொய்யாபழம் என்று சமரசத்துக்குட்பட்டவர்தானே என்று

நீங்கள் சொன்ன 'டிஸ்கஷன்' விஷயத்தை நான் புரியாமல் எழுதினேன் என்ற அளவில்தான் உங்கள் புரிதல் நிலை உள்ளதா? 80களின் பிற்பகுதிகளில் உயர்நிலை பள்ளியில் மூளை வளர்ச்சி அடையாத மீசை முளைக்கும் பசங்கள் பேசக்கேட்ட வாதம் என்று நான் குறிப்பிட்டது நீங்கள் "குறிப்பிடும்" அதே அர்த்தத்தைதான்
 



// அந்த பதிவில் முதலில் பின்னூட்டமிட்டவர் பயன்படுத்திய வார்த்தைகள் நியாயம் என்கிறீர்களா? //

இல்லை...

நீங்கள் அந்த பதிவு எழுதப்பட்ட விதம் நியாயமில்லை என்று நினைக்கிறீர்கள்தானே?
 



The point is that, whatever the thankars speech, this seems to be a humiliating apology in front of somany people and press. If it has really hurted, they should have solved this matter in closed doors.

Thankar has totally surrendered fearing of money loss. This can be compared to producer durais surrender to pmk leader.

Vijayakanth has told that if someone talks against nadigar sangam, they will goon strike. Not able to digest the comments put by others. There is no surprise if political parties attacked them(actors) for showing them bad in screen.
 



ஆமாங்க துளசி... தங்கர் ஒரு சிறந்த இயக்குனராம். அவர் சொல்றதுல நியாயம் இருக்குன்னு ஒரு 3 பேரு + ஒரு சிறு கூட்டம் இருக்கு

தெருத்தொண்டன்.. என்ன நீங்க இப்படி சொல்லிட்டீங்க.. அந்த தத்துவப்பாடல்லயும் ஒரு நியாயம் இருக்கும்னு எந்த அடிப்பொடியும் சொல்லலியா?
 



அனானி...

தங்கர் வெளிப்படையாக பேசியதால் வெளிப்படையாக மன்னிப்பும் கேட்க வேண்டிய சூழ்நிலை. காலில் விழுந்தது அவரின் தனிப்பட்ட எண்ணம். யாரும் கட்டாயப்படுத்தவில்லை. நீங்கள் சொன்ன காரணத்தாலோ மற்ற ஏதோ ஒரு காரணத்தாலோ தங்கர் மன்னிப்பு கேட்க ப்ரச்னை முடிந்தது.. ஆனால் இவரை மன்னிப்பு கேட்க சொன்ன மத்தவர்கள் யோக்கியமா என்ற சிலரின் கேள்விதான் ப்ரச்னையை வளர்க்கிறது.

விஜயகாந்த் சொன்ன மாதிரி சும்மாவெல்லாம் நடிகர்கள் ஸ்ட்ரைக் செய்தால் அதற்கு மரியாதையே இல்லாமல் போய்விடும். அதனால் சினிவுலகில் பாதிக்கப்படுபவர்கள்/குடும்பங்கள் (நிச்சயமாக பொதுமக்கள் அல்ல) நியாயமான கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அவருக்கிருக்கிறது
 



Talking about Thankar, NUNNALAM THAN VAAYAL KEDUM…
But, when thankar bows down to Manorama, Shes not even acknowledging that. This is not fair. I think, some of the artists had waited for this type of situtation.

(Just one incident-Manorama has completely forgot about her remarks about rajni,some 10 yrs back. At that time, she has met rajni Personally and rajni told that its common for cine artists to speak loose in public meetings. rajni manasu perisu, manasu pola vazhaki)
 



//நீங்கள் அந்த பதிவு எழுதப்பட்ட விதம் நியாயமில்லை என்று நினைக்கிறீர்கள்தானே?//

ஆம், ஸ்வீட் விற்பது உள்ளிட்ட சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடில்லை.
 



mugamoodi, thankar has apologised openly to press even before he comes to nadigar sangam. he was forced to come to nadigar sangam just to repair his name totally. this shows only the sadistic activity of actors/actresses towards thankar.

its defnly a humiliating apology. feeling sorry for thankar.

manippu ketukkruthu periya kunam yendral manippu kudukurthu aathai veda periya kunam. but this will not apply to manorama.
 



ஏன் முகமூடி விஜயகாந்த் புவனேஸ்வரிகூட என்ன சொல்லிச் சண்டை போட்டுக்கிட்டாராம்?
 



எங்கெங்கோ பட்ட காயங்களுக்கு வீட்டில் தவறு செய்யும் குழந்தையை அடிக்கும் ஈகோ மனப்பாண்மை தங்கரை அளவுக்கு மீறி தாக்குவதில் தெரிகின்றது. தயாரிப்பாளர் சங்கம் விஜயகாந்த்க்கு விதித்த 3 நாள் கெடுவிலிருந்து எத்தனையோ உள் விவகாரங்கள் இதனால் வெளிவராமல் அமிழ்ந்துவிடும்(ஆகா இன்னும் கொஞ்ச நேரத்தில் தங்கர் குழந்தையா என வரிகளுக்கிடையில் உள்ள சொற்களை எடுத்துக்கொண்டு சிலம்பமாட கிளம்பிவிடுவர் சிலர்)

தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனர்

//ஆனால் இவரை மன்னிப்பு கேட்க சொன்ன மத்தவர்கள் யோக்கியமா என்ற சிலரின் கேள்விதான் ப்ரச்னையை வளர்க்கிறது.
//
திடீர் ஞானம் போல இருக்கின்றதே!!! இதே அளவுகோல் முன்பெல்லாம் இல்லை போலவும், ஒரு வேளை இந்த பிரச்சினைக்கும் மட்டும் இந்த அளவுகோலோ, செலக்டீவ் அம்னீஷியா மாதிரி செலக்டிவ் அளவுகோல் போல...

//தாணு-சிம்பு சமாசாரத்தை வைத்து தயாரிப்பாளரின் இன்சைடர் ஸ்டோரி முழுதும் தெரிந்த மாதிரி நீங்கள் பேசிய போது என்னால் சிரிக்கத்தான் முடிந்தது.
//
அய்யா முகமூடி உங்களுக்கு முழு இன்சைடர் ஸ்டோரி தெரிந்தால் சொல்லுங்களேன் நானும் தெரிந்து கொண்டு பின்பு என்னை நினைத்து நானே சிரித்துக்கொள்கின்றேன்.
 



//// அந்த பதிவில் முதலில் பின்னூட்டமிட்டவர் பயன்படுத்திய வார்த்தைகள் நியாயம் என்கிறீர்களா? //

இல்லை...

நீங்கள் அந்த பதிவு எழுதப்பட்ட விதம் நியாயமில்லை என்று நினைக்கிறீர்கள்தானே?//

முகமுடி,

அதில் எதை நியாயமில்லை என்று நினைக்கிறீர்கள் என்று சொல்லமுடியுமா? சும்மா தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன். உதாரணமாய் பதிவு எழுதிய மற்றும் இது வரை மிக கேவலமாக பேசிய நாய்களின் தாயை விட, பாலியல் தொழிலாளர்கள் எந்த விதத்தில் கேவலமானவர்கள் என்பது என் கேள்வி. கவனிக்கவும் யாருடைய தாயையும் நான் கேவலமாய் சொல்லவில்லை. இவனுங்களின் ஆத்தாளைவிட மற்றவர்கள் எந்தவிதத்தில் கேவல்ம் என்றுதான் கேட்கிறேன். இதில் என்ன நியாயமின்மை உள்ளது என்று உங்கள் தர்க்க திறன் கொண்டு, நான் சொன்னதை புரிந்துகொண்டு விளக்க முடியுமா? நன்றி!
 



முகமூடி,
தங்கர் விஷயம் குறித்து எழுதப்பட்ட பதிவுகளில் உள்ள பெரும்பாலான கருத்துக்கள் நடிக/நடிகையர் மேலுள்ள
காழ்ப்புணர்ச்சியையும், அதிதீவிர வெறுப்பையும் உமிழ்வதாக அமைந்துள்ளது தான் எல்லாவற்றையும் விட கேனத்தனமா இருக்கிறது.

"இவர் ஏனய்யா இப்படிப் பேசினார்?" என்று கேள்வி எழுப்பினால், "அவர் மட்டும் ஒழுங்கா, என்ன ?" என்று விதண்டாவாதம் செய்பவரிடம் தர்க்கம் செய்வது வீண்வேலையே.

நடிக/நடிகையர் என்றாலேயே கீழ்த்தரமாக நினைப்பவரிடம், என்ன பேசியும், எதையும் புரிய வைப்பதும் கடினமே.
 



ஏனுங்க சும்மா ஆயிரக்கணக்கில சம்பளம் வாங்குறவங்க வேலை செய்யறதுக்கும் லட்சக்கணக்கில சம்பளம் வாங்குறவங்க வேலை செய்யறதுக்கும் வித்தியாசமில்லையா....

இதில நஷடம்னா ஐநூறு ஆயிரத்தோடு போயிரும் அதுல நஷ்டம்னா அப்புறம் முதல் போட்டவன் எழுந்திருக்கவே முடியாதே. இத்தனைக்கு தங்கரு போல கலைஞருங்க ஹீரோயினைப் பெரிதும் நம்புறவங்க... அழகி நந்திதாவும், தென்றல் உமாவும் படத்துக்கு பெரிய பலமுங்க. அப்படியிருக்க கோபத்துல பேசிட்டாரு. அதுக்குத்தான் மன்னிப்பும் கேட்டாரு அப்புறம் என் முன்னாடி கேட்கணும் அவங்க முன்னாடி கேட்கணும்னு சொன்னா என்னங்க...

செஞ்ச தப்புக்கு ஒரு தரம் தண்டனை கொடுத்துட்டா விட்ற வேண்டியதுதானே.
 



//இவர் ஏனய்யா இப்படிப் பேசினார்?" என்று கேள்வி எழுப்பினால், "அவர் மட்டும் ஒழுங்கா, என்ன ?"
//
அடடா பாலா உங்களுக்கும் செலக்டிவ் அளவுகோல் தானா? என்னமோ போங்க...
 



அட என்னப்பா இது, அவரு சொன்னாரு , அவுங்க எதிர்த்தாங்க.. அவரு மன்னிப்பு கேட்டாரு..
நாம ஏன் அதை பத்தி இத்தனை பதிவு போட்டு.. விடுங்கப்பா...

நம்ம வலைப்பூ பிரச்சனைல அந்த சினிமாகாரவங்க வந்து ஏதாச்சும் கருத்து சொல்றாங்களா??
இல்லையே.. அப்புறம் நாம் மட்டும் எதுக்கு அவங்க விஷயத்தை இந்த அளவுக்கு அலசனும்??
 



குழலி,

நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். தங்கர் மன்னிப்பு கேட்டதை (கேட்க வைக்கப்பட்டதை) பல விஷயங்களின் பிண்ணனியில் உள்குத்து வெளிகுத்து என்ற ரீதியில் அலசலாம். ஆனால் அதற்கெல்லாம் அவசியமில்லை... இங்கு முக்கியம் அவரின் பிண்ணனி அல்ல, தங்கரின் இதற்கும், இதற்கு முந்தைய அனைத்துக்குமான ஆணாதிக்க அகங்கார அவதூறு பேச்சுக்கு அவரின் மன்னிப்பு ஒரு சிறிய விஷயம்தான். அதைவிட கேவலம் நடிகைகளை மட்டமான கண்ணோட்டத்தில் எழுதும் பலரின் எண்ண ஓட்டம்.

ரோசா,

எழுதியவருக்கு உரைக்க வேண்டும் என்ற அளவில் நீங்கள் எழுதிய அப்பட்டமான வார்த்தைகள் அப்படி ஒரு தோற்றத்தை முதல் பார்வையில் ஏற்படுத்தியிருந்தாலும், நீங்கள் கேட்டது நியாயமே. ஸ்வீட் ஸ்டால் வரிகள் நீக்கப்படாமல் உங்களின் பின்னூட்டம் மட்டும் நீக்கப்பட்டிருப்பது பதிவு எழுதியவரின் மனநிலையை மீண்டும் ஒரு முறை தெளிவாகவே காட்டுகிறது.
 



நிழல்மனிதன், நவ்யா நாயர் சீனில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. குஷ்பு இதில் ஜாக்பாட் அடித்தார் என்றா நினைக்கிறீர்கள். இது ஒரு வேதனையான விஷயம். இது மாதிரி ஒரு விஷயத்தில்தான் பிரபலம் அடைய வேண்டும் எனும் நிலையில் குஷ்பு இல்லை...

// செலக்டீவ் அம்னீஷியா மாதிரி செலக்டிவ் அளவுகோல் போல... // உங்களுக்கு மட்டும் வித்தியாசமாக புரியும் விஷய்த்தை எங்களுக்கு புரியும்படி சொல்ல கேட்கலாம், ஆனால் புதிதாக ஒன்றும் சொல்லப்படப்போவதில்லை...

// நடிக/நடிகையர் என்றாலேயே கீழ்த்தரமாக நினைப்பவரிடம், என்ன பேசியும், எதையும் புரிய வைப்பதும் கடினமே // இந்த எண்ணம்தான் எனக்கும். போன வாரம் இதை குறிப்பிட்டும் இருந்தேன்.

// அப்புறம் என் முன்னாடி கேட்கணும் அவங்க முன்னாடி கேட்கணும்னு சொன்னா என்னங்க... // எருதின் வலி காக்கைக்கு தெரியாது எனும் பழமொழி கேட்டிருக்கிறீர்களா.. நம்மால் இதை உணர முடியாது கணேஷ்.. பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும் அதன் அளவுகோல்.
 



1. படப்பிடிப்பிற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு படப்பிடிப்பை ஆரம்பிக்கும் போது நவ்யா நாயர் இல்லை
2.ஏன் என்று கேட்டபோது அவருடைய சிகை அலங்கார உதவியாளருக்கு ரூ.600 தராததால் வரவில்லையாம்
3.இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது (குறைந்தது 1 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படும் படப்பிடிப்பு ஒரு நாள் நிறுத்தப்பட்டால்)

இங்கே நவ்யாநாயர் எந்த வித முன்னறிவிப்புமின்றி படப்பிடிப்பிற்கு வராமல் புறக்கணிப்பு செய்துள்ளார், எந்த ஸ்ட்ரைக்கும் முறையான நோட்டிஸ் கொடுத்தே செய்யப்பட வேண்டும், நான் பாலிடெக்னிக்கில் படித்த போது நாங்கள் செய்த அத்தனை வகுப்பு புறக்கணிப்பும் டோக்கன் ஸ்ட்ரைக் தான், கோரிக்கைகள் எழுதி அதில் மாணவர்கள் கையெழுத்திட்டு அதை முதல்வரிடம் கொடுத்து பின் தான் வகுப்பு புறக்கணிப்பு நடைபெறும், ஆனால் இங்கே எந்த முன்னறிவிப்புமின்றி நவ்யாநாயர் படப்பிடிப்பிற்கு வராமல் புறக்கணித்துள்ளார்.

நவ்யாநாயரை என்னமோ ஓவர்டைம் வேலை செய்ய சொன்ன மாதிரியும் அதற்கு முடியாது என்று கூறியதால் தங்கர் திட்டியது மாதிரியுமான உருவகம் தரும் பதிவு எதற்கும் எதற்கும் உதாரணம் காட்டவேண்டுமென்றில்லாமல் எழுதப்பட்ட கேணத்தனமான பதிவு இது என்பது படிப்பவர்களுக்கு புரியும்.
////ஆனால் இவரை மன்னிப்பு கேட்க சொன்ன மத்தவர்கள் யோக்கியமா என்ற சிலரின் கேள்விதான் ப்ரச்னையை வளர்க்கிறது.
- முகமூடி
//
திடீர் ஞானம் போல இருக்கின்றதே!!! இதே அளவுகோல் முன்பெல்லாம் இல்லை போலவும், ஒரு வேளை இந்த பிரச்சினைக்கும் மட்டும் இந்த அளவுகோலோ, செலக்டீவ் அம்னீஷியா மாதிரி செலக்டிவ் அளவுகோல் போல...
- குழலி
//

//// செலக்டீவ் அம்னீஷியா மாதிரி செலக்டிவ் அளவுகோல் போல... // உங்களுக்கு மட்டும் வித்தியாசமாக புரியும் விஷய்த்தை எங்களுக்கு புரியும்படி சொல்ல கேட்கலாம், ஆனால் புதிதாக ஒன்றும் சொல்லப்படப்போவதில்லை...
//
முகமூடியும் பாலாவும் இந்த பிரச்சினையில் பயன்படுத்தும் அளவுகோல் இவர்கள் இதற்கு முன் அதுவும் முக்கியமாக பாமக பதிவுகளிலும் இவர்கள் இட்ட பின்னூட்டத்தில் கடைபிடிக்கப்படவில்லை அதைத்தான் கூறினேன்
 



"அரசியல்வாதிகள் எல்லாம் திருடர்கள்" என்று அரசியலுக்கு சம்பந்தம் இல்லாத சாமான்யன் சொன்னால் அரசியல் வாதிகள் யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை .அதே நேரம் அதே அரசியல் வாதிகளை நம்பி பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் ஒரு அடிபொடியோ அல்லது ஆதாயம் பெற்றுக்கொள்ளும் காண்ட்ராக்டரோ சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா?

எத்தனையோ திரைப்படங்களில் "அரசியல்வாதிகள் எல்லோரும் திருடர்கள்.அயோக்கியர்கள்" என்றெல்லாம் வீர வசனம் பேசுகிறார்கள் நடிகர்கள் .அதற்காக நல்லக்கண்ணு மாதிரி நல்ல மனிதர்கள் கொடிபிடிப்பதில்லை .இங்கு பிரச்சனையே வேறு .

"நடிகைகள் விபச்சாரிகள் " என்பது பரவலாக மக்கள் கொண்டுள்ள கருத்து தான் .அது தவறாகவும் இருக்கலாம் .ஆனால் அதே நடிகைகளை நம்பி பொழப்பு நடத்தும் தங்கர் சொன்னால் மன்னிப்பு கேட்பதுதான் நியாயம் .வாயை கொடுத்து விட்டார் .இனிமேல் மன்னிப்பு கேட்காமல் பொழப்பு ஓடாது என்பதால் மன்னிப்பும் கேட்டுவிட்டார் .பிரச்சனை அதோடு முடிந்தது .

தங்கர் சொன்னது தவறு தான் .அதற்காக அவர் மன்னிப்பு கேட்டது(வேறு வழியில்லை என்பதால் கேட்டதாக இருப்பினும்) வரவேற்கப்படவேண்டியது.இனிமேலாவது வாயை கட்டுப்படுத்திக்கொண்டு நல்ல திரைப்படங்கள் கொடுத்து சம்பாதிக்கும் நல்ல பெயரை குலைக்காமல் இருப்பாராக.

எதையுமே பொது இடத்தில் பேசினால் தான் பொறுப்பேற்கவேண்டியிருக்கிறது .விஜயகாந்த் ,வடிவேலு போன்றவர்கள் இந்த விஷயங்களில் எவ்வளவு யோக்கியர்கள் என்பது நாடறிந்த விஷயம் ..ஆனால் அதிகாரபூர்வமாக நல்ல பிள்ளைகளாக நடித்து நல்ல பெயர் வாங்கிவிடுவார்கள் .தங்கரும் அது போல இருந்தால் பிரச்சனை இல்லை .

இதை ஒரு சாக்காக வைத்து தங்கரின் திறமையை மறுப்போமேயானால் அது அபத்தம் .அழகி ,சொல்ல மறந்த கதை போன்றவை 'குருவி குடஞ்ச கொய்யா பழம்'-மையெல்லாம் தாண்டி தமிழில் வந்த உருப்படியான படங்களில் இடம் பெறுகின்றன .
 



அன்பு முகமூடி,
உங்களது நகைச்சுவை உணர்வை வைத்து உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு வளர்ச்சி இருக்கும் என்று நினைத்திருந்தேன்.

இந்த கேள்வியைப்படித்தபின் அந்த எண்ணமே இல்லாமல் போய்விட்டது.

எந்தக்குடும்பத்துப்பெண்கள் அவர்களது அலுவலகத்தில், தங்களது உடலைக்காட்டி, மார்பைக்காட்டி இடுப்பைக்காடி தொடையைக்காட்டி சம்பாதிக்கின்றனர்? என்னய்யா முட்டாள்தனமான கேள்வி இது?

உங்களது தாய், சகோதரி மற்றும் மனைவியாயிருந்தாலும் சரி, என் தாய், சகோதரி மற்றும் மனைவியாயிருந்தாலும் சரி, கடின உழைப்பாளிகள் இருக்குமிடத்தில் அரைகுறை ஆடையோடு உடலைக்காட்டி குலுக்கவேண்டியதைக்குலுக்கி சம்பாதிக்கும் நிலைக்கு வருவார்களாகின் அவர்களுக்கும் இப்பெயர்தான் ஏற்படும்.

உழைக்காமல் உண்பவர்கள் திருடர்கள் என்பதைப்போல உடலழகை மட்டும் காட்டி பணம் சம்பாதிப்பவர்களும் விபச்சாரிகள்தான்!

எம்.கே.குமார்.
 



// இங்கே நவ்யாநாயர் எந்த வித முன்னறிவிப்புமின்றி படப்பிடிப்பிற்கு வராமல் புறக்கணிப்பு செய்துள்ளார் //

குழலி, இதை நீங்கள் அதிக பட்சம் நக்கீரனில் படித்திருக்கலாம்.. ஆனால் என்னமோ அங்கே நேரில் இருந்த மாதிரி பேசுகிறீர்கள்... இருக்கட்டும்...

எம்.ஜி.ஆர் படப்பிடிப்பின் இறுதியில் முக்கியமான காட்சி ஒன்றை நடிக்காமல் நிறுத்தி, தனக்கு மட்டும் என்று இல்லாமல் அந்த திரைப்படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் பணத்தை பட்டுவாடா செய்த பின்பே இறுதிக்காட்சியை நடித்துக்கொடுப்பார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது உண்மையா பொய்யா தெரியாது... ஆனால் காலம் காலமாக படம் முடிந்துவிட்டால் பாக்கிப்பணம் கோவிந்தா என்பதை நானும் நக்கீரன் உள்ளிட்ட பல வார இதழ்களில் படித்திருக்கிறேன்..

இங்கே விஷயம் அது அல்ல...தங்கரின் வார்த்தை பிரயோகம் தவறு என்பதும், அது கண்டிக்கப்படக்கூடியது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டியது அவசியமான ஒன்று என்பதும் மட்டும்தான்.... மற்ற காரணங்களாக நீங்கள் அலசுவது என்னளவில் தேவையில்லாத விஷயம்... அதை வெறும் சப்பைகட்டு என்ற அளவிலேதான் நான் பார்ப்பேன்.

இதை பாமகவுடன் முடிச்சு போட முயற்சி செய்யாதீர்கள். இந்த விவகாரத்தை பாமக விமர்சனத்தோடு முடிச்சு போடுவது சற்றும் சம்பந்தமில்லாதது. அதை பற்றிய விளக்கத்தை அளிக்கக்கூட நான் விரும்பவில்லை. புரிபவர்களுக்கு புரியட்டும்.
 



ஜோ,

பெயரிலி பதிவில் பின்னூட்டமாக தந்ததையே சிறு திருத்த்தத்தோடு இங்கு தருகிறேன்...

---

தங்கர்பச்சானின் நடிகைகள் குறித்த கருத்துவெளிப்பாடு எதுவிதமான விட்டுக்கொடுப்புகளுமின்றி வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது என்பதை தவிர இவ்விஷயத்தை பற்றி யோசிக்க ஒன்றுமில்லை என்பதே எனது கருத்தும். ஆனால் கண்டிப்பதை விட இதன் பிண்ணனி அரசியலையும் நடிகைகளின் கற்பு குறித்த எள்ளலையும் வெளிப்படுத்தும் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு கேள்வியை மட்டுமே எனது பதிவில் கேட்டிருந்தேன்.

கற்பகவினாயகத்தின் மட நம்பிக்கைகள் பற்றியோ, பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் விஷயத்தில் 'உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பதால் அவரின் கௌரவம் கருதி' அவகாசம் கொடுத்த அநீதி பரிபாலனத்தை பற்றியோ அல்லது சங்கராச்சாரியாரின் பிற்போக்குதனத்தை பற்றியோ குரல் கொடுத்த திரைப்படம் சாராதவர் மட்டும்தான் இவ்விஷயத்துக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்றில்லை.. அவர்களுக்கு நேரமில்லாமல் இருந்திருக்கலாம்.. அல்லது அவர்களது நோக்கத்தில் இருக்கும் உள்குத்து அரசியலை யாராவது ஆராயலாம்.

----

தங்கரின் திறமையை யாரும் கேள்வி கேட்கவில்லை. அது தரும் இறுமாப்பை மட்டுமே
 



அன்பு குமார்,

எனது நகைச்சுவை உணர்வை குறித்தும் எனது மூளை வளர்ச்சி குறித்ததுமான உங்கள் புரிதலுக்கு நன்றி...

முன்பே பூடகமாக தெரிவித்திருந்தாலும் "உடலழகை மட்டும் காட்டி பணம் சம்பாதிப்பவர்களும் விபச்சாரிகள்தான்" என்று வெளிப்படையாக உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.. இந்த கருத்து தவறென்று நீங்கள் இன்னமும் உணராமல் இருக்கிறீர்கள் என்பது எனக்கு ஆச்சரியமேற்படுத்தவில்லை மற்றும் உங்கள் கருத்து சுதந்திரத்தில் தலையிடவும் நான் விரும்பவில்லை.
 



முகமூடியின் இந்த பதிவில் எழுதப்பட்டுள்ள உதாரணமும் தங்கர் பிரச்சினையும் எந்த அளவிற்கு வேறுபட்டது எதற்கு எதை உதாரணம் காட்ட வேண்டுமென்று தொடர்பே இல்லாமல் இந்த பதிவின் உதாரணம் உள்ளது என்பதை சுட்டி காட்டியதே என் பின்னூட்டம்.

//ஆனால் இவரை மன்னிப்பு கேட்க சொன்ன மத்தவர்கள் யோக்கியமா என்ற சிலரின் கேள்விதான் ப்ரச்னையை வளர்க்கிறது.
//
//இதை பாமகவுடன் முடிச்சு போட முயற்சி செய்யாதீர்கள். இந்த விவகாரத்தை பாமக விமர்சனத்தோடு முடிச்சு போடுவது சற்றும் சம்பந்தமில்லாதது. அதை பற்றிய விளக்கத்தை அளிக்கக்கூட நான் விரும்பவில்லை. புரிபவர்களுக்கு புரியட்டும்.
//
என்ற அந்த வரிகள் தான் உங்களின் முந்தைய நிலைகளையும் தற்போது தங்கர் விடயத்தில் நீங்கள் எடுத்துள்ள நிலையையும் கேள்விகேட்க வைத்தது, நீங்கள் விளக்கம் அளிப்பதும் அளிக்காததும் உங்கள் விருப்பம், ஆனால் உங்கள் செலக்டிவ் அளவுகோல் தெளிவாக புரிகின்றது.


//// இங்கே நவ்யாநாயர் எந்த வித முன்னறிவிப்புமின்றி படப்பிடிப்பிற்கு வராமல் புறக்கணிப்பு செய்துள்ளார் //

குழலி, இதை நீங்கள் அதிக பட்சம் நக்கீரனில் படித்திருக்கலாம்.. ஆனால் என்னமோ அங்கே நேரில் இருந்த மாதிரி பேசுகிறீர்கள்... இருக்கட்டும்...
//
முகமூடி உங்களுக்கு வேறு ஏதாவது சோர்ஸ் மூலம் தெரிந்தாலும் சொல்லுங்களேன் நக்கீரன் மட்டுமே படிக்கும் மூளை வளர்ச்சியில்லாத நானும் தெரிந்து கொள்கின்றேன்.
 



எம்.கே.குமார் அவர்களுக்கு,

தமிழ், தமிழார்வம், தமிழ்மணம், வள்ளுவர் எல்லாரையும் துணைக்கழைத்து உளறினாலும் அது உளறல்தான் என்பதை உணர்வீர்களா .... உணர்ச்சி வசப்படாமல் யோசியுங்கள்...

------

எல்லா பணத்தையும் இழந்து அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் நின்ற போது பணம் இருந்த காலத்தில் கூடவே இருந்த கூட்டமில்லை, தனியாக நின்றார் கூட இருந்தது பதின்ம வயதிலிருந்த சாந்தியும், குஞ்சும் குளுவானுமாக இருந்த சாந்தியின் தங்கையும் தம்பியும் தான்.

வறுமை கோர தாண்டவமாடியது, அலுவலக வேலைக்குப் போகுமளவிற்கு படிப்புமில்லை, தந்தையால் சம்பாதிக்கும் நிலையுமில்லை, நடிப்புலகிற்கு வந்தார் சாந்தி, தங்க தாம்பாளத்தில் வரவேற்க யாரும் அங்கே தயாராக இல்லை, கிடைத்ததெல்லாம் கவர்ச்சி நடனங்கள் தான், அன்று ஆட ஆரம்பித்தார், தன் தம்பி தங்கைகளுக்கு நல்ல வாழ்வு கிடைக்கும் வரை அவர்களுக்கு இறக்கை முளைக்கும் வரை ஆடினார், குலுக்கு நடிகை,தேள்கடி நடிகை என்று சமூகத்திலுருந்து பத்திரிக்கை வரை கடித்த கடிகள் அத்தனையும் தாங்கிக்கொண்டு ஆடினார்.

ஒரு சமயம் அவர் படப்பிடிப்பிற்கு சென்ற போது வர தாமதமானதால் சாந்தியின் தந்தை படப்பிடிப்பு தளத்திற்கு தொடர்பு கொண்டு சாந்தி ஏன் இன்னும் வரவில்லை (இப்போது உள்ளது போன்று கைத்தொலைபேசி அப்போது இல்லை) என கேட்டபோது சரியான பதிலில்லை, தொடர்ந்து இரண்டு மூன்று முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது கிடைத்த பதில் 'பயப்படுற நீயெல்லாம் எதுக்கு பொண்ணை நடிக்க அனுப்புற' என்ற ஏச்சு தான் விழுந்ததாம், அழுது கொண்டே தொலைபேசியை வைத்துவிட்டாராம், தன் கையாலாகத தனத்தை எண்ணிய அந்த தந்தை அன்று தூங்கியிருப்பார் என நினைக்கின்றீர்?

தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி எண்ணாமல், ஒரு தாயைப்போல தன் தங்கையையும் தம்பியையும் வளர்த்த சாந்தி, என்று அவரின் சகோதரிக்கு நல்ல வாழ்க்கை அமைந்ததோ, என்று அவரின் தம்பி சொந்த காலில் நிற்கும் நிலைவந்ததோ அன்றே நிறுத்தினார் ஆடியதை. இது மாதிரியான கவர்ச்சி நடிகைகள் என்றும் குலுக்கு நடிகைகள் என்றும் நம்மாலும் சமூகத்தாலும் பத்திரிக்கையாலும் விளிக்கப்படும் ஒவ்வொரு நடிகயின் பின்னாலும் ஒரு கையாலாகத தந்தையோ, ஏமாற்றிய காதலனோ, கணவனோ இருந்திருப்பார்கள் அல்லது சகோதர சகோதரிகளை காப்பாற்ற வேண்டிய சூழ்நிலையிலிருப்பார்கள்.

நடிகைகள் மட்டுமல்ல, எத்தனையோ பெண்கள் அலுவலகங்களிலும், கூலித் தொழிலாளியாகவும், கடைகளிலும் வேலைசெய்து கொண்டு தன் சொந்த வாழ்க்கையை எண்ணாமல் தன் தங்கை,தம்பிகளின் வாழ்க்கைக்காக பாடுபட்டுக் கொண்டுள்ளனர், இந்த மாதிரி உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை இதே நிலையில் இருக்கும் ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகம் என்று எனக்கு தோன்றுகின்றது.

-------

மேலே கண்டது நீங்கள் நன்றி சொன்ன, இன்று தங்கர் சொன்ன உண்மையை ஆராயும் திரு. குழலி அவர்கள் டிஸ்கோ சாந்தி என்ற அக்காளுக்காக வடித்த உப்புக்கரிக்காத கண்ணீரின் ஒரு பகுதி... உங்கள் இலக்கணப்படி இவர் 'குடும்ப பெண்ணாக' இருக்க தகுதியற்றவர்... நீங்கள் குடும்ப பெண் பட்டம் தரவேண்டுமெனில் இவர் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் நடிகைகள் உடலை காட்டி சம்பாரிக்கிறார்கள் என்று ஒரு வாக்கியத்தில் முடித்துக்கொண்டீர்கள். அவர்களுக்கு இருக்கும் நடிப்புத்திறமை எல்லாம் தேவையே இல்லாத விஷயம். அப்படியே மாடலிங்கில் இருப்பவருக்கும் இது பொருந்துமா என சொல்லிவிடுங்கள்... அப்புறம் வீட்டு பெண்கள் பார்க்கும் படத்தில் உடலை காட்டி நடிக்கும் நடிகர்களுக்கு என்ன பெயர் என்பதையும் சொல்லிவிடுங்கள்... அப்படியே முக்கால் ட்ரவுசரும், பூப்போட்ட சட்டையும் போட்டு போஸ் கொடுக்கும் உங்களுக்கும் என்ன பெயர் என்று சொல்லிவிடுங்கள்... ஏன் கேட்கிறேன் என்றால், எனக்கு தெரிந்து கிராமத்தில் இருக்கும் 85 வயது தாண்டிய பாட்டி ஒருவர் படுக்கை அறையை விட்டு நைட்டியுடன் பெண்கள் வெளியே வந்தாலே, 'என்ன குடும்ப பொண்ணு மாதிரியா உடை உடுத்துற" என்று கேட்பார். உங்களை மாதிரி உடை உடுத்திய ஒருவரை அவர் ஒரு முறை "படிச்சவன் மாதிரியா டீசண்டா இருக்க... காட்டுப்பய மாதிரியில்ல இருக்க" என்றார்... உங்களை ஒருமையில் விளிக்கவில்லை, அவர் பேச நான் கேட்டிருக்கிறேன்.

உங்களுக்கெல்லாம் பாலியல் தொழிலாளிகலும், நடிகைகளும், பிச்சைக்காரர்களும், அரவாணிகளும் மனசு என்ற ஒன்றே இல்லாத, இளக்காரமான, சமூகத்தில் ஒரு தேவையில்லாத ஜந்துக்கள்.

நடிகைகள், பாலியல் தொழிலாளிகள் இருவரை பற்றியுமே உங்களுக்கு "தெரிந்த" சரக்கை வைத்து, பொத்தாம்பொதுவாக இழிவுபடுத்தும் வார்த்தைகளை வெளிப்படுத்தும் உங்களிடம் ரோசாவசந்த் "நீங்கள் குறிப்பிடும் நடிகைகள், மற்றும் பாலியல் தொழிலாளிகளை விட உங்கள் வீட்டு பெண்கள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்" என்று கேட்டிருந்தார் அதற்கு பதில் சொல்லவில்லையே நீங்கள்... போர்த்திக்கொண்டு ஆபிஸ் செல்பவர்கள் உயர்ந்தவர்கள்தான் என்பது உங்கள் பதில் என்றால் அது சரியான பதிலாகாது... மீண்டும் சொல்கிறேன், எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் என்பதற்கான உங்கள் பதிலை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சொல்லலாம்.

"அவளா சாகல்ல. எல்லாருமா சேர்ந்து கொன்னுட்டோம் என்ற வரிகள் நடிகைகளின் வாழ்க்கையை விளக்கும் சுருக்கமான வரிகள்" என்பது சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் பதிவில் குறிப்பிடப்பட்ட வாக்கியம்... 10 ரூபாய் கொடுத்துவிட்டு நடிகையை தனது மன விகாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டு, அவளை விபச்சாரி என்றும் சொல்லும் கூட்டத்திற்கு கொல்லும் உரிமையும் வேண்டும் எனக்கேட்பது அதிகபட்ச ஆசைதான்.

"இயற்கையே நல்ல மனத்தை இவருக்குக் கொடு" என்று வேண்டலாம்... "அதெல்லாம் நம்மால ஆகாதப்பா, ஆள விடு" என்கிறார் அவர்.
 



//இன்று தங்கர் சொன்ன உண்மையை ஆராயும் திரு. குழலி அவர்கள் டிஸ்கோ சாந்தி என்ற அக்காளுக்காக வடித்த உப்புக்கரிக்காத கண்ணீரின் ஒரு பகுதி//

இங்கே முகமூடி விஷமத்தனமாக எனது பதிவுகளை திரிக்கும் வேலையை செய்வதை மிக்கடுமையாக எதிர்க்கின்றேன்,

தங்கர் பச்சான் பிரச்சினையில் தங்கர் பச்சான் பயன்படுத்திய வார்த்தைகள் மிக்ககடுமையானது, அது கண்டிக்கப்படவேண்டியது என என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் மிகத்தெளிவாக கூறியுள்ளேன்(இதை இனி ஒவ்வொரு பின்னூட்டத்திலயும் பதிவுலயும் footer ஆக போட வேண்டும் போல உள்ளது)

இதையும் மீறி முகமூடியும் இன்னும் சிலரும் என் பதிவுகளை திரிப்பது எந்த விதத்தில் நேர்மை என்று புரியவில்லை

ஒரு வேளை அவர்களின் செலக்டிவ் அளவுகோல் நேர்மையை வெளிப்படுத்தியதால் வந்த ஆத்திரமோ என்று நினைக்கின்றேன்,

எந்த ஒரு பதிவிலும் பின்னூட்டத்திலும் நடிகைகளின் சொந்த வாழ்க்கையை அவதூறாக நான் விமர்சிக்கவில்லை என்பதையும் இங்கே எடுத்து காட்ட விரும்புகின்றேன்(இதையும் footer ஆக போட வேண்டும் போல).

எனவே முகமூடி அவர்களே என் பதிவுகளையும் பின்னூட்டத்தையும் திரிப்பதைவிட வேறு ஏதேனும் நேர்மையான முறையில் என் கருத்துகளை எதிர்த்து பேசுங்கள் முடிந்தால்.
 



உடனே டிஸ்கஷன் விடயத்தை இழுப்பார்கள் பதிவை படித்து அதில் டிஸ்கஷன் பற்றி என்ன சொல்லியுள்ளேன் என நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்
 



// விஷமத்தனமாக எனது பதிவுகளை திரிக்கும் வேலையை செய்வதை மிக்கடுமையாக எதிர்க்கின்றேன் //

குழலி உங்கள் பதிவில் -- தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம் -- என்று நீங்கள் மேம்பட்ட முறையில் எழுதியிருந்ததை பார்த்ததும் டிஸ்கோ சாந்தி பணத்துக்காக மட்டும் நடிக்க வந்து பல கேவலங்களை சந்தித்தார் என்று நீங்கள் அவர் மேல் பரிதாபப்பட்டதாக தவறாக எண்ணி உப்புக்கரிக்காத கண்ணீர் என்று எழுதிவிட்டேன்..

அப்புறம் தங்கர் சொன்ன கருத்தில் உள்ள உண்மையையும் நாம் ஆராய வேண்டும் என்று நீங்கள் வலியுறுத்தி சொல்லியதை (பதிவில் மட்டும் அல்ல, பின்னூட்டத்திலும்) அதுவும் தங்கர் நடிகையை பற்றி பேசிய போது - அது தயாரிப்பாளருக்கு நடிகர் தரும் குடைச்சலை பறறிய உங்கள் எண்ணம் மட்டும்தான் என்று செலக்டிவாக நினைக்காமல் தவறாக எழுதிவிட்டேன்...
 



Kuzhali

//தங்கர் பச்சான் பிரச்சினையில் தங்கர் பச்சான் பயன்படுத்திய வார்த்தைகள் மிக்ககடுமையானது, அது கண்டிக்கப்படவேண்டியது என என் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் மிகத்தெளிவாக கூறியுள்ளேன்(இதை இனி ஒவ்வொரு பின்னூட்டத்திலயும் பதிவுலயும் footer ஆக போட வேண்டும் போல உள்ளது)//

Enge unga pathivula appaddi solli irukeengannu therinjukalama?????

//தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம்//
Oru velai ithai naan thappa purinchukitena

//தொடர்ந்து முகமூடியும் மற்ற சிலரும் விஷமத்தனமாக எனது பதிவுகளை திரிக்கும் வேலையை செய்வதை மிக்கடுமையாக எதிர்க்கின்றேன்,//

Enakennamo neenga than pazhasa manasula vachukuttu Mugamoodiya opposse panreengannu thonuthu

- Subbu
 



மீண்டும் வரிகளுக்கு இடையிலும் வார்த்தைகளையும் பிடித்துக்கொண்டு தொங்கும் வேலை நடைபெறுகின்றது.

பணத்திற்காகத் தான் எல்லோரும் வேலை செய்கின்றனர், உங்களின் கூற்று படி பார்த்தால் பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் work ethics தேவையில்லை என்பது போல உள்ளது.

முடிவெடுத்து திரிக்க நினைத்துவிட்டால் எதையும் திரிக்க முடியும், குறைந்த பட்ச நேர்மையை கூட எதிர்பார்க்க முடியாது என்பது இங்கே நிரூபனமாகின்றது.

முகமூடி சில நாட்களுக்கு முன் இதே தங்கர் விடயத்தில் மோதிக்கொண்டோமே அப்போது நான் இட்ட பின்னூட்டங்களை படித்து நீங்கள் கூட மறுமொழியிட்டீர்.

எதை சொன்னாலும் திரிக்கப்படும் நிலை இங்கே

அவ்வளவே சொல்லமுடியும்.

நன்றி
 



//Enakennamo neenga than pazhasa manasula vachukuttu Mugamoodiya opposse panreengannu thonuthu
//
பழசை மனதில் வைத்துக்கொண்டு என்று எதை கூறுகின்றீர், பழசை மனதில் வைத்துக்கொண்டு செய்யும் அளவிற்கு அவரால் நான் காயப்படவில்லை, ஆனால் முன்பு அவர் எடுத்திருந்த நிலைக்கும் இதில் அவர் எடுத்திருக்கும் நிலைக்கும் உள்ள மாற்றத்தை தான் சுட்டிக்காட்டினேனே தவிர மனதில் வைத்துக்கொண்டு எதிர்க்கும் அளவிற்கு எனக்கும் அவருக்கும் ஒன்றும் பங்காளித் தகராறு ஏதுமில்லை
 



எம்.கே.குமார் அவர்களே..

>>எந்தக்குடும்பத்துப்பெண்கள் அவர்களது அலுவலகத்தில், தங்களது உடலைக்காட்டி, மார்பைக்காட்டி இடுப்பைக்காடி தொடையைக்காட்டி சம்பாதிக்கின்றனர்? என்னய்யா முட்டாள்தனமான கேள்வி இது?


எந்த அலுவலக பயனாளர்கள் (END USERS/CUSTOMERS) உடலகை எதிர்பார்த்து அந்த அலுவலகத்திற்கு வேலை அளிப்பார்கள்..

இது எப்படி இருக்குனா.. விபச்சாரிங்களை.. கல்லால் அடித்துக் கொல்லனும்னு, நேத்து இரவு அவளிடம் சென்றவன் முதல் குரல் விடுத்தானாம்..


விபச்சாரிகள் குற்றம் செய்தவர்களேன்றாள், அதின் மூலம் பயன் பெற்றவரி, குற்றம் செய்ய தூண்டியவர்.. இவர்கள் உத்தமர்களா ? ஆணாதிக்க வெளிப்பாடே இது..

இப்போது சொல்லுங்கள், முட்டாள்தனமான சிந்தனை முகமூடியுடையதா. ..இல்லை... உங்களுடையதா ?

(அதற்காக, ப.ம.க. தலைவருடன் நான் முழுமையாக ஒத்துபோகின்றேன் என்றோ, எதிர்க்கிறேன் என்றோ அர்த்தம் இல்லை, அது அவரின் சொந்தக்கருத்து, கட்சியின் கருத்தாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை.. ;-)
 



குழலியுடைய பதிவில் பழைய பதிவுகளை எப்படிப் படிப்பது? ஜெயகாந்தன் சொன்ன தன்னையே நக்கிக் கொள்கிற நாய் என்ற உவமை பற்றி குழலி ஏதோ எழுதியிருந்ததாக ஞாபகம். (என் நினைவில் தவறிருக்கலாம்.) அதனால் அவருடைய தங்கர் பச்சான் பற்றிய பதிவைப் படித்தவுடன், அவர் எழுதிய ஜெயகாந்தன் பற்றிய பதிவையும் படிக்க வேண்டும் என்று தோன்றியது. பதிவாக எழுதவில்லை என்றால் கமெண்ட்டாகவாவது ஜெயகாந்தனைப் பற்றி எங்கேயோ குழலி எழுதினார் என்று ஞாபகம். அதனால், யாரும் அப்போது குழலி என்ன எழுதினார் என்று எடுத்துத் தந்து உதவினால் நன்றியுடையவனாக இருப்பேன். செலக்டிவ் அம்னீஷியா என்று யாரும் என்னைத் திட்டிவிடக் கூடாது பாருங்க. அதுதான், திருப்பி முன்னாடி என்ன எழுதினார் என்பதையும் ஒருமுறை மீண்டும் படித்துவிட ஆசைப்படுகிறேன். குழலி நினைவிலிருந்துதான் எழுதுகிறேன், எனவே தவறிருக்க வாய்ப்புண்டு. நீங்கள் அப்போது ஒன்றும் எழுதவில்லை என்றால் அதையாவது தெளிவுபடுத்துமாறு வேண்டுகிறேன். நன்றி.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



குழலி,

//முகமூடியும் பாலாவும் இந்த பிரச்சினையில் பயன்படுத்தும் அளவுகோல் இவர்கள் இதற்கு முன் அதுவும் முக்கியமாக பாமக பதிவுகளிலும் இவர்கள் இட்ட பின்னூட்டத்தில் கடைபிடிக்கப்படவில்லை அதைத்தான் கூறினேன்
//
முதலில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடாதீர்கள். உங்கள் பா.ம.க / ராமதாஸ் குறித்த அலசல் பதிவுகளில் நான் பின்னூட்டம் எதுவும் இட்டதில்லை.

உங்களது (தமிழ் மொழி பற்றிய த.பா.இ செயல்பாடுகள் குறித்த) பதிவுகளில் (எவை என்று ஞாபகம் இல்லை) சில கருத்துக்களை கூறியுள்ளேன். முக்கியமாக,

"தன்னால் பின்பற்றமுடியாத ஒன்றை ஒருவர் மற்றவர் மேல் திணிக்க முற்பட்டால், அது கேலிக்கூத்தாகி விடுவதோடு மட்டுமல்லாமல், எதிர்வினையை ஏற்படுத்துவதால், நட்டத்திலும், தோல்வியிலும் முடியும். நல்லதை யார் கூறினாலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வாதத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். நடைமுறைக்கு ஒவ்வாது. சொல்பவரின் தகுதியை வைத்து தான், அவர் சொல்வது ஏற்றுக் கொள்ளப்படும் / படாது. இதில் தனிமனித வெறுப்பு என்று ஒன்றுமில்லை."

என்றும் கூறியிருக்கிறேன். பிறிதொரு சமயத்தில் இப்பிரச்சினை பற்றி என் நிலைப்பாட்டையும் ஜோவுடன் ஆன ஒரு விவாதத்தில் விளக்கியிருக்கிறேன்.

//"இவர் ஏனய்யா இப்படிப் பேசினார்?" என்று கேள்வி எழுப்பினால், "அவர் மட்டும் ஒழுங்கா, என்ன ?"//
என்ற தொனியில் நான் ஏதாவது கூறியிருந்தால், நீங்கள் என்னை "செலக்டிவ் அளவுகோல்" கொண்டு நன்றாக அளக்கலாம், அதே அளவு 'கோலால்' சவட்டியும் களையலாம் !!!

நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

பி.கு: குழலியின் டிஸ்கோ சாந்தி குறித்த உணர்வுபூர்வமான பதிவை அறியத் தந்தமைக்கு முகமூடிக்கு நன்றிகள்.
 



This comment has been removed by a blog administrator.
 



This comment has been removed by a blog administrator.
 



எம்.கே. குமார் எழுதியது சரியில்லை. அவர் அப்படி எழுதியதைக் கண்டிப்பதற்காக ரோசா வசந்த் அசிங்கமாக எழுதியதும் சரியில்லை. இந்த இரண்டு தரப்புக்குமிடையில் சிக்கிக் கொண்டு பெண்களே அவமானப்படுத்தப்படுகிறார்கள்.

இப்படி மொட்டையாக சொல்லும்போதும், இவர் சொன்னதில் என்ன தப்பு அவர் சொன்னதில் என்ன தப்பு என்ற எதிர்வினை தோன்றும். அதனால் விளக்குவது கடமையாகிவிடுகிறது.

எம்.கே.குமார் நடிகைகளை "ஸ்வீட் ஸ்டாலில் ஸ்வீட் விற்பவர்கள்" என்று எழுதுகிறார். பின்னால் எழுத வரும்போது ஸ்வீட் என்பது உடலாகவும் ஸ்வீட் விற்பது விபச்சாரமாகவும் இவரது வார்த்தைகளிலேயே பொருள் கொண்டு விடுகிறது. இது மிகவும் மோசமான புரம் பேசும் லும்பன் மனப்பான்மையின் விளைவு என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை.

விபச்சாரம் என்பது ஒரு சமூக நிகழ்வு என்ற புரிதலும், பதின்ம பிராயத்தில் பல்வேறு கற்பனைகளால் இது போன்ற விஷயங்களில் அறிந்தோ அறியாமலோ சிக்குண்ட மனிதர்கள் வளரும்போது தன்னை திரும்பிப்பார்த்து அவல நிலைப்படும் மனநிலையின் புரிதலோ இல்லாத ஒரு விடலைப்பார்வை. ஒரு சிலர் தங்கள் விடலைப் பருவத்தில் பேசியவற்றை பற்றி பின்னால் மனம் வருந்துகிறார்கள். ஒரு சிலருக்கு வயதானபின்னரும் விடலைப்பருவம் போவதில்லை.

இதை எதிர்த்து எழுத வரும் ரோஸா வஸந்த், உன் அம்மாவும் உன் அப்பனிடம் ஸ்வீட் விற்றவள்தானே என்று எழுதுகிறார். இந்த இடத்தில் ஒரு பெண்ணும் ஒரு ஆணும் திருமண பந்தத்தில் இணைந்து ஒருவருக்கொருவர் என்று இணைந்து வாழும் ஒரு வாழ்க்கை கொச்சைப் படுத்தப்படுகிறது. எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இன்னாடே என்று பாரதி தன் தந்தை தாயின் காதலை பாடுகின்றான். அது ஒரு பெரியார் தாசரின் வாயிலிருந்து அதன் லீஸ்ட் காமன் டினாமினேஷனில் மிருகத்தனமாக வெளிப்படுகிறது.

இவை இரண்டுமே திராவிட இயக்கங்களில் மிஸோஜினிஸ்ட் பார்வையின் விபரீதங்களே. திரைப்படத்தில் வசந்தசேனையை இருவாக்கும் திராவிட இயக்கத்தின் மறுபக்கமே, பெரியாரின் வாயிலிருந்து திருமணம், காதல் போன்றவற்றை லீஸ்ட் காமன் டினாமினேஷனில் பார்த்து லும்பனைஸ்டு தத்துவங்களாகவும், விடலைத்தனமான கொச்சைகளாகவும் வெளிப்பட்டன.

பெண்ணை போற்றுவதும் அவளுக்கு விலங்கே என்று பேசிய ஒரு இயக்கத்தின் விளைவுகள், பெண்ணை தன் தெருப்பொறுக்கி சண்டைக்கு நடுவே வைத்து அவமரியாதை செய்கிறது.

பெண் என்று சுஜாதா ஒரு கதை எழுதினார். அது பெண்ணை தூக்கி வைக்கவும் இல்லை. தூக்கி போடவும் இல்லை. அது போன்ற ஒரு கதை திராவிட இயக்கத்தினர் எவராலும் எழுதப்படவில்லை என்பது ஆச்சரியமான விஷயம் அல்ல என்பதற்கு நிரூபணம் இந்த சண்டை.
 



Mugamoodi

can you pl delete the first two comments that were repeated and just keep the third one that is complete. Sorry for the confusions.

Thanks
Just a reader
 



// can you pl delete the first two comments that were repeated and just keep the third one that is complete // Done

உங்கள் கருத்தும் அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
 



PKS ஜெயகாந்தன் பற்றி நான் எழுதிய பதிவு வர்ணபேதமும் வாழ்க்கை சுவாரசியமும்

ஜெயகாந்தனின் பேச்சின் ஒலிப்பதிவை நீங்கள் உங்கள் பதிவில் போட்டிருந்தப்போது ஜெயகாந்தனின் பேச்சு ஒரு ஜல்லியடிப்பு என்று பின்னூட்டியிருந்தேன்.

மேலும் காஞ்சிபிலிம்ஸ் ஒரு பதிவு போட்டிருந்தபோது நான் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாயாகவே இருந்து விட்டு போகின்றேன், இனி ஜெயகாந்தன் புத்தகங்கள் படிக்கப்போவதில்லை என்ற போது காஞ்சிபிலிம்ஸ் இனிதான் நீங்கள் முக்கியமாக படிக்கவேண்டும் எப்படியெல்லாம் அவர் சாதீயத்தை(நினைவிலிருந்து எழுதுகின்றேன் தவறாகவும் இருக்கலாம்) எழுத்திலும் பேச்சிலும் தூக்கிப்பிடிக்கின்றார் என தெரிந்துகொள்ள படிக்கவேண்டுமென்றார், இது தான் நான் ஜெயகாந்தன் பற்றி எழுதியது பின்னூட்டியது என நினைக்கின்றேன், வேறு ஏதேனும் இருந்து நினைவுக்கு வந்தால் தெரிவிக்கின்றேன் அல்லது உங்களுக்கு தெரிந்தாலும் சொல்லுங்கள்.
அவர் நாய் என்று சொன்னாலும் சிங்கமென்று சொன்னாலும் அதன் பின்னுள்ள கருத்தையும் சேர்த்தே தான் நான் எதிர்க்கின்றேன்,

இங்கேயும் நான் சொல்வது அதேதான் தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியது தவறு, ஆனால் அதற்காக நடிகர்/நடிகைகளின் அட்டகாசங்கள் பற்றி அவர் பேசியதில் தவறில்லை என்று சொல்ல நான் தயாராக இல்லை.

எதற்கோ காத்திருக்கின்றீர் போல :-))

அன்பு பாலா,
// சொல்பவரின் தகுதியை வைத்து தான், அவர் சொல்வது ஏற்றுக் கொள்ளப்படும் / படாது. இதில் தனிமனித வெறுப்பு என்று ஒன்றுமில்லை."
-- தமிழ்பாதுகாப்பு இயக்கம் பற்றிய பாலாவின் பின்னூட்டம்
//

////"இவர் ஏனய்யா இப்படிப் பேசினார்?" என்று கேள்வி எழுப்பினால், "அவர் மட்டும் ஒழுங்கா, என்ன ?"//
என்ற தொனியில் நான் ஏதாவது கூறியிருந்தால்
-பாலா//

கீழேயுள்ள பின்னூட்டம் நீங்கள் இதே பதிவில் முன்பு இட்டது
//"இவர் ஏனய்யா இப்படிப் பேசினார்?" என்று கேள்வி எழுப்பினால், "அவர் மட்டும் ஒழுங்கா, என்ன ?" என்று விதண்டாவாதம் செய்பவரிடம் தர்க்கம் செய்வது வீண்வேலையே.
//
இதன் பொருள் என்ன? இப்பொழுது புரிகின்றதா ஏன் செலக்டிவ் அளவுகோல் என்று கூறினேன் என்று.

பாமக பதிவில் என்று உங்களையும் சேர்த்து கூறிவிட்டேன், நீங்கள் அதில் இல்லை , தவறுக்கு மன்னிக்கவும்.

பாலா எந்த பின்னூட்டம் நீங்கள் கூறியதை பலவீனப்படுத்தும் என்றாலும் அந்த பின்னூட்டத்தை நீங்கள் எடுத்து போட்டீர்களே உங்கள் நேர்மை பாராட்டப்பட வேண்டியது

நன்றி
 



வாங்க டோண்டு அய்யா வாங்க, என்னடா பிரச்சினை ஆரம்பித்து இத்தனை நாட்களாயிற்று இவரின் பின்னூட்டத்தை காணவில்லையே அதுவும் பிரச்சினையில் நான் வேறு இரண்டு பதிவு போட்டிருக்கேனே என்று நினைத்தேன் வந்துவிட்டீர்கள்

//தங்கர் கடுமையான வார்த்தையைப் பேச, அதைப் பிடித்துக் கொண்டு பலர் தொங்குகிறார்களாம். ஆகவே அவர் கூறிய உண்மை மறைக்கப்பட்டதாம். இவர்கள் இவ்வாறு வருத்தப்படுகிறார்கள். //
மேலே சொன்னதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்று உங்கள் மனசாட்சியிடம் கேட்டு பாருங்கள் புரியும்.

//இவர்கள் எல்லோருமே தங்கள் ஆணாதிக்க மனப்பான்மையை இம்முறையில் காட்டிக் கொண்டார்கள்.//

வாங்கய்யா டோண்டு அய்யா இதில் என்னையும் சேர்த்துதான் கூறினீர்களா? நீங்கள் அளித்த இந்த பட்டமளிப்பில் நான் உண்டா, இல்லையா?

நீங்கள் இவர்கள் அனைவருமே என்று கூறியுள்ளீர் இருந்தாலும் ஒரு முறை உங்களிடமே கேட்டுவிட்டு அதன் பிறகு இதற்கு பதில் எழுதுகிறேனே
 



This comment has been removed by a blog administrator.
 



//ஆனால் அதற்காக நடிகர்/நடிகைகளின் அட்டகாசங்கள் பற்றி அவர் பேசியதில் தவறில்லை என்று சொல்ல நான் தயாராக இல்லை.//
'தவறில்லை' என்பது 'தவறு' என்பதற்கு பதிலாக தவறுதலாக தட்டச்சு செய்யப்பட்டதோ?
 



"வாங்க டோண்டு அய்யா வாங்க, என்னடா பிரச்சினை ஆரம்பித்து இத்தனை நாட்களாயிற்று இவரின் பின்னூட்டத்தை காணவில்லையே அதுவும் பிரச்சினையில் நான் வேறு இரண்டு பதிவு போட்டிருக்கேனே என்று நினைத்தேன் வந்துவிட்டீர்கள்"

எல்லோருடையப் பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்து எழுதியது என்னுடையப் பின்னூட்டம். ஆகவே நேரம் ஆகி விட்டது.

"//இவர்கள் எல்லோருமே தங்கள் ஆணாதிக்க மனப்பான்மையை இம்முறையில் காட்டிக் கொண்டார்கள்.//

வாங்கய்யா டோண்டு அய்யா இதில் என்னையும் சேர்த்துதான் கூறினீர்களா? நீங்கள் அளித்த இந்த பட்டமளிப்பில் நான் உண்டா, இல்லையா?"

நீங்களும் அதில் உண்டு. அப்படி நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டுக் கொள்ளலாமே?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



Some of the magazines publish stories & gossips much worse than what Thankar said. Just for an sample - refer the latest Nakkerans cover story. What did the Actors union did about that?.

They were jumping on Thankar because he was from the same field.

So as long as you are not in the movie industry you can talk any nonsense about the artists.
 



//நீங்களும் அதில் உண்டு. அப்படி நீங்கள் இருக்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டுக் கொள்ளலாமே?//

நான் என் மனசாட்சியிடம் கேட்டுபார்த்தேன் அது இல்லை என்று சொல்கின்றது, ஆணாதிக்க மனப்பாண்மையோடு எழுதினேன் என்று (என் பழவிலிருந்து வேண்டுமானாலும் காட்டுங்கள்) நிரூபித்தால் என் வலைப்பதிவில் தனியாக ஒரு பதிவு போட்டு வருத்தம் தெரிவிக்கின்றேன், அப்படி முடியாவிட்டால் அய்யா டோண்டு அவர்கள் என் மீது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துகின்றேன் என அவதூறு பரப்பியதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

டோண்டு அய்யா நான் உங்களைவிட வயதில் வயசில்,படிப்பில் அனுபவத்தில் மிக குறைந்தவன், எனவே என்னை குறி வைப்பதைவிட உங்கள் தகுதிக்கு இணையான ஆட்களை குறி வைங்கள், அதுதான் உங்கள் தகுதிக்கு பொறுத்தமாக இருக்கும்

நன்றி
 



////ஆனால் அதற்காக நடிகர்/நடிகைகளின் அட்டகாசங்கள் பற்றி அவர் பேசியதில் தவறில்லை என்று சொல்ல நான் தயாராக இல்லை.//
'தவறில்லை' என்பது 'தவறு' என்பதற்கு பதிலாக தவறுதலாக தட்டச்சு செய்யப்பட்டதோ?
//

ஆமாம் ஜோ தட்டச்சுப்பிழை.

நன்றி
 



"என்ன செய்வது, அன்புமணியின் குழந்தைகள் தமிழே படிக்கவில்லை என்று மட்டையடித்தவர் நீங்கள், பின் ஆதாரங்களோடு இல்லை என்று நிரூபித்து வருத்தம் தெரிவிக்க சொன்னபோது நான் அதை நம்பவேயில்லை என்று கூறி இந்த விடயத்தில் உங்கள் நேர்மையை ஏற்கனவே ஒரு முறை நிரூபித்தவர் தானே நீங்கள், உங்களால் அப்படித்தான் நினைக்கத் தோன்றும்."

தமிழ்குடிதாங்கி மற்றவருக்கு வலுவுறுத்தியது தமிழ்வழிக் கல்வியே. வெறுமனே தமிழை ஒரு பாடமாகப் படிப்பதல்ல. மேலும் சம்பந்தப்பட்டக் குழந்தைகள் தமிழ்நாட்டில் இருந்த வரைக்கும் கூடத் தமிழ்வழிக் கல்வி படித்த்தாகத் தெரியவில்லை. அதை பற்றிக் கேட்டதற்கு துக்ளக்கையும், தின மலரையும் அந்துமணியையும் கேட்டுக் கொள்ளச் சொன்னீர்கள்.

இப்போதும் கூறுவேன், குழந்தைகள் இப்போது தமிழ்ப்பாடம் படிப்பதாகக் கூறுவது ஒரு டேமேஜ் லிமிடிங்க் முயற்சிதான் என்று.

தமிழ்நாட்டில் இருந்திருந்தால் அன்புமணி தன் குழந்தைகளைத் தமிழ் கல்விமுறையிலேயே படிக்க வைத்திருப்பீர்கள் என்று வேறு ஒரு ஜல்லியடித்தீர்கள். ஐயா, அவரே ஆங்கிலப் பள்ளியில்தான் படித்தார் என்பதற்கு சரியானப் பதில் இல்லை. தில்லி தமிழ் கல்விக் கழகத்தில் தன் குழந்தைகளை அன்புமணி படிக்க வைக்காமல் போனதற்கு மேட்டுக்குடி மனப்பான்மை என்று கூறியதற்கும் சரியான பதில் இல்லை. உங்களிடம் அப்பள்ளிகளில் தரம் இல்லை என்று கூறிய நண்பர் இதையே அதற்கு முக்கியக் காரணமாக வைத்திருப்பார் என்று கூறியதற்கும் உங்களிடம் பதில் இல்லை. என்ன செய்யச் சொல்கிறீர்கள் என்னை?

"இனி இங்கே படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள் நான் ஆணாதிக்கத்தோடு எழுதினேனா இல்லையா என்று."

மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுதியதைத்தான் பார்த்திர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



//மற்றவர்கள் உங்களைப் பற்றி எழுதியதைத்தான் பார்த்திர்களே.//

நன்றாக பார்த்தேன் யாருமே நான் ஆணாதிக்க சிந்தனையோடு எழுதியதாக சொல்லவில்லை உங்களைத்தவிர. (உங்களுக்கு அப்படி எழுதுவதற்கு பல உள்நோக்கங்கள் இருக்கலாம்)

டிஸ்கஷன் பற்றி எழுதியதை தவறாக அர்த்தம் செய்து கொண்டவர்களும் நான் அதற்கு மறுப்பு தெரிவித்து எழுதியபின் எதிர்ப்பெதுவும் தெரிவிக்கவில்லை.

தெக்கத்திடெர்மினேட்டர் லிங்கம் பதிவில் சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிட்டீர், இது மாதிரி பல உங்கள் உள் நோக்கங்களுக்கு பல உதாரணங்கள் தரமுடியும், எனவே டோண்டு அய்யா இப்போதும் சொல்கின்றேன் நான் சின்னபையன் என்னை குறி வைக்காதீர்கள் உங்கள் தகுதிக்கு நான் சரியான இலக்கு அல்ல
 



குழலி தான் ஏதோ தங்கர் சொன்னதை கண்டித்தது போல் ஆடும் நாடகத்தை போன்ற ஒரு புளுகு இருக்க முடியாது. சும்மா வெற்று வார்த்தையாய் 'தப்பு' என்று ஒப்புக்கு சொன்னவர், எம்.கே.குமாரின் பதிவில் அத்தனை முறை அத்தனை அற்பபுழுக்கள் மீண்டும் மீண்டும் சொன்னபோது எங்காவது கண்டித்தாரா? ஏன் அவருடய பதிவிலேயே எழுதியதை கண்டித்தாரா?

கவனிக்கவும், நான் தங்கரை பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. நான் எதிர்ப்பது இவரகளின் வார்த்தை பிரயோகங்களைத்தான். தன் பதிவில் 'கெட்ட வார்த்தை எழுதினால் திருப்பி தாக்குவேன்' என்று எச்சரிக்கை விட்டவர் அதை எனக்கு மட்டும்தானே பொருத்தினாரே தவிர, எங்காவது அவர் பதிவிலேயே நடிகைகளை பற்றி கேவலமாக வந்த பின்னூட்டம் பற்றி பேசியுள்ளாரா? அதற்கு ஏதாவது முனகலாவது வெளிப்பட்டதா? இப்போது பலர் சுட்டியவுடன் நடிக்கிறார்.

இப்போது பாருங்கள் என்னுடய இந்த பின்னூட்டத்திற்கு அவர் எழுதப்போகும் சப்பைகட்டை. அது சரி, சோறு தின்றால் அல்லவா...
 



//அது சரி, சோறு தின்றால் அல்லவா...//
இதெல்லாம் ரொம்ப ஓவர்.

டோண்டு ஐயா! இப்போ உங்களுக்கு மகிழ்ச்சி தானா?
 



"தெக்கத்திடெர்மினேட்டர் லிங்கம் பதிவில் சம்மந்தமில்லாமல் பின்னூட்டமிட்டீர்"

சம்பந்தமில்லாமல் ஏதும் பின்னூட்டமிடவில்லை. எனக்கு முன்னால் வந்தப் பின்னூட்டத்தின் எதிர்வினை அது. மேலும் அப்பதிவில் இளைஞர்களை வன்முறைக்குத் திருப்புவதைக் கண்டித்தீர்கள். அதற்குக் கூடுதல் உதாரணமாக மரம் வெட்டியவர்களையும் சேர்த்துக் கூறினேன், படச்சுருளை திருடுவது, திருட்டு வி.சி.டி. போடவைப்பேன் என பயமுறுத்துவது போன்றவையைக் கூட வன்முறையைத் தூண்டுவதற்கு உதாரணமாகக் கூறினேன்.

நீங்கள் மட்டும் என்னவாம், இப்பதிவில் சம்பந்தமில்லாது அன்புமணி விஷயத்தை இழுத்தீர்கள். அதற்கு பதில் கூறியதும் சௌகரியமாகத் தெக்குத் டெர்மினேட்டருக்கு ஓடுகிறீர்கள்.

"நான் சின்னபையன் என்னை குறி வைக்காதீர்கள் உங்கள் தகுதிக்கு நான் சரியான இலக்கு அல்ல"
உங்களை நான் குறிவைக்கவில்லை. உங்கள் கருத்துகளுக்கு என்னிடம் பதில் இருந்தால் அதைக் கூறுவதே நான் செய்வது. யாரையும் நான் குறிவைப்பதில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பின்குறிப்பு:
//அது சரி, சோறு தின்றால் அல்லவா...//
இதெல்லாம் ரொம்ப ஓவர்.
"டோண்டு ஐயா! இப்போ உங்களுக்கு மகிழ்ச்சி தானா?"
என்னை எதற்கு இதில் இழுக்கிறீர்கள்?
 



ஜோ நான் சொன்ன கருத்தை மறுத்துவிட்டு, ஓவரா கம்மியா என்று சொல்ல முயற்சி செய்யுங்கள். விரலை பற்றி பேசலாம், அதற்கு முன்னால் சுட்டியதை கொஞ்சமாவது கணக்கில் எடுத்துவிட்டு!
 



//பாலா எந்த பின்னூட்டம் நீங்கள் கூறியதை பலவீனப்படுத்தும் என்றாலும் அந்த பின்னூட்டத்தை நீங்கள் எடுத்து போட்டீர்களே உங்கள் நேர்மை பாராட்டப்பட வேண்டியது
//
ஐயோ, குழலி ஐயா, உங்களிடம் பேசி ஜெயிப்பது என்பது ஆகாத காரியம் போல !!! இந்த விடயத்தில் தங்கர் ஒரு சாராரை தரமற்ற முறையில் விமர்சித்திருப்பது தான் பிரச்சினையே. அவருக்கு ஆதரவாக, "நடிக/நடிகையர் எல்லாம் இப்படி, அப்படி" என்று கூறுவது தேவையா என்பது என் கருத்து.

நடிக / நடிகையர் (டாக்டர் ஐயா போல) ஏதாவது பிரச்சினையில் பொருத்தமற்ற வகையில் கருத்துக்களை முன் வைத்தால் / பொது அறிவுரை வழங்க முற்பட்டால், சொல்பவரின் தகுதியை வைத்து அவற்றையும் நிச்சயம் விமர்சிப்பேன். சொல்பவரின் தகுதி வைத்து தான் அவர் சொல்வது மதித்து ஏற்றுக் கொள்ளப்படும் என்று நான் நினைப்பதற்கும், தங்கர் நடிகைகளை அவதூறாகப் பேசி, மன்னிப்பு கேட்டதற்கும், என்னங்க சம்மந்தம் ??? போட்டுக் குழப்பறீங்களே, சாமி ?????

//பாமக பதிவில் என்று உங்களையும் சேர்த்து கூறிவிட்டேன், நீங்கள் அதில் இல்லை , தவறுக்கு மன்னிக்கவும்.
//
நன்றி !!!!

ஏனுங்க முகமூடி, குழலியின் தர்க்க விளக்கம் உங்களுக்கு புரியுதா ? புரிஞ்சுக்க, கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்களேன், ப்ளீஸ்.. :-)
--- எ.அ.பாலா
 



ரோசா வசந்த் அவர்களே!
பாலியல் தொழிலாளர்கள் பற்றிய உங்கள் கருத்து என்னுடையதும் கூட..ஆனால் வார்த்தை பிரயோகங்களைப்பற்றி பேசும் தாங்களே அதை கடைபிடிக்க மறுக்கிறீர்களே?

//விரலை பற்றி பேசலாம், அதற்கு முன்னால் சுட்டியதை கொஞ்சமாவது கணக்கில் எடுத்துவிட்டு! //
இதைத்தானே குழலியும் சொல்லுகிறார் .'விபச்சாரிகள்' என்ற ஒரே வார்த்தைக்காக ஒட்டு மொத்தமாக தங்கரைக்கண்டிக்கும் நாம் அனைவரும் ,அவர் சொல்ல வந்த பிறவற்றின் உட்கருத்தை கொஞ்சமாவது கணக்கில் எடுக்க வேண்டும் தானே? அதைத்தானே குழலியும் சொல்கிறார் .

இன்றைய ஆனந்த விகடனில் திருமாவளவன் இது குறித்து அளித்திருக்கும் பேட்டியிலும் இதைத்தான் குறிப்பிட்டுள்ளார்.
 



ஜோ,

இன்னும் சுட்டியதை பற்றி நீங்கள் பேசவில்லை. வேறு எதையோ பேசுகிறீர்கள். நான் குழலி தங்கர் பச்சானை பற்றி எழுதியது குறித்து எதுவுமே, (முன்பும் இப்போதும்) சொல்லவில்லை. ஆனால் அவர் அந்த வார்த்தையை கண்டித்தார் என்பது நாடகம் மட்டுமே. ஒப்புக்காக வெளிபூச்சுக்காக செய்வது. ஏனேனில் அதை சொன்ன குமாரை ஆதரிக்கிறார். தன் பதிவில் வசை வார்த்தைகளை எழுதிய எவனையும் கண்டிக்கவில்லை. அதைத்தான் நான் சொல்கிறேன். நீங்கள் வேறு விஷயம் குறித்து பேசுகிறீர்கள்.

நான் 'சோறு' உவமையை ஏற்கனவே பயன்படுத்தியுள்ளேன். என்னை பற்றி என் பிறப்பை, மனைவியை பற்றி பின்னூட்டங்கள் வந்துள்ளது. அந்த குமாரே பதிலுக்கு என்னை பற்றி அப்படி எழுதியுள்ளார். (நான் யாரையும் அப்படி பேசவில்லை). அதற்கு பின் குமாருக்கு இவர் எழுதிய ஆறுதல் மொழியை படியுங்கள். இவர் எங்காவது நடிகைகளை கேவலமாய் பேசிய குமாரை ஒரு வார்த்தையாலாவது ஒப்புக்காவது கண்டித்தாரா? அதற்கு பிறகு தான் ஏதோ கண்டித்ததாக நாடகமாடுவது அசிங்கம் இல்லையா?

மற்றவர்களுக்காவது தங்கள் நிலையை வெளிப்படையாய் சொல்லும் தைரியம் உண்டு. இவர் அது கூட இல்லாத போலி. அதனாலேயே' சோறு' திங்கிறாரா என்று சந்தேகம்.
 



இன்னும் சொல்லப்போனால் தங்கர் 'திரையுலகின் ரோசாவசந்த்' என்று வைத்துக்கொள்ளலாம் .கோபத்தை பொது இடத்தில் மறைக்கத்தெரியாத மனிதர் .வீட்டுக்குள்ளே எல்லோரும் சகஜமாக பேசுவதை ,வெளியே மேடையில் பேசி மாட்டிக்கொண்டார் .ஆனால் நிர்ப்பந்தம் காரணமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார் .

ரோசாவசந்த் அவர்களே! நீங்கள் எத்தனையோ முறை அருமையான கருத்துக்களையெல்லாம் கூறும் போது ஒரு சமூகம் மீதுள்ள கோபத்தால் சில கடுமையான வார்த்தைகளை உபயோகித்த போது ,எத்தனை பேர் நீங்கள் சொல்ல வந்ததை மறந்து விட்டு ,அந்த ஒரு சில வார்த்தைகளை பிடித்து தொங்கவில்லயா? அதை சரி என்கிறீர்களா?
 



குமாரின் வார்த்தை பிரயோகம் தவறு தான் ..ஆனால் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி நல்ல வார்த்தைகளில் சொல்லியிருந்தால் அவரும் உணர்ந்திருப்பாரே ? இப்போது என்ன ஆனது?

குழலி குமாரின் அந்த வார்த்தை பிரயோகத்தை (உங்களைக் கண்டித்தது போல) கண்டிக்கவில்லையெனில் அது தவறு தான்.
 



குழலி,
இரண்டு கருத்துக்கள், உங்களுக்காக !!!

1." "பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம்" என்று தங்கர் கூறியிருந்தாலும், நீங்கள்
சொன்னாலும், அந்த நிலையிலும் "விபசாரிகள்" என்ற வார்த்தைப் பிரயோகம் கண்டனத்துக்கு உரியதே. இது நடிகைகள் மற்றும் விபசாரிகள் ஆகிய இரு சாராரையும் நோக்கி (கோணல் பார்வையோடு) வீசப்படும் அவதூறு தான்.

2. //தங்கர்பச்சான் வெளிப்படுத்திய வார்த்தைகளை எதிர்த்தாலும் அதன்பின்னால் நடிகர்/நடிகைகளின் அட்டாகசத்தை எதிர்த்து தங்கர் கூறியதை ஆதரித்தால் இப்படித்தான் ஆணாதிக்க பட்டம் சூட்டுவீர்கள்
//
இரண்டையும் சம்மந்தப்படுத்தும் விதத்தில் பேசி, ஒரு மாதிரி குழப்பியதால், இந்த நிலை ஏற்படுவதற்கு நீங்களே காரணமாக இருந்து விட்டீர்கள். உங்கள் ஸ்டைலில் (நடிக/நடிகையர் செய்யும் அட்டகாசங்கள் குறித்து!) ஒரு தனிப்பதிவு போட்டிருக்கலாமே, ஐயா ????

---எ.அ.பாலா
 



ஜோ,

என்னை பற்றிய கருத்துக்களுக்கு நன்றி. நான் என்னை பற்றி பிறர் வைத்திருக்கும் கருத்துக்கள் குறித்து விவாதிப்பது இல்லை.

ஆனால்..

//குமாரின் வார்த்தை பிரயோகம் தவறு தான் ..ஆனால் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்தி நல்ல வார்த்தைகளில் சொல்லியிருந்தால் அவரும் உணர்ந்திருப்பாரே ? இப்போது என்ன ஆனது?//

நீங்கள் நினைப்பது போல் நான் நினைக்கவில்லை. சாந்தமாய் சொல்லியிருந்தால் இன்னும் எகிறியிருப்பார், வீம்பாய் சொன்னதையே மீண்டும் சொல்வார், என்றுதான் நினைக்கிறேன். இப்போது நடந்ததற்கு, பின்னர் ஒரு விளைவு இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது என் இத்தனை ஆண்டுகால அனுபவத்தில் வந்த கருத்து. ஆனால் இடையில் எனக்கு பல வசவுகள் வரும். என்னை பற்றி மோசமாக பேசப்படும். அது குறித்து என்றும் கவலைப்பட்டது கிடையாது.

மீதி கருத்துக்கள் என் பதிவில் வரும். வேறு எதுவும் இப்போதைக்கு பேசுவதாய் இல்லை. நன்றி.
 



ரோசாவசந்த்,
பதிலுக்கு நன்றி!
//மீதி கருத்துக்கள் என் பதிவில் வரும்.//
ஆவலுடன் காத்திருக்கிறேன்
 



//குழலி தான் ஏதோ தங்கர் சொன்னதை கண்டித்தது போல் ஆடும் நாடகத்தை போன்ற ஒரு புளுகு இருக்க முடியாது. சும்மா வெற்று வார்த்தையாய் 'தப்பு' என்று ஒப்புக்கு சொன்னவர்//

http://yaalisai.blogspot.com/2005/08/blog-post_20.html

என்ற பதிவில் ஆகஸ்ட் 20 ம் தேதி நான் இட்ட பின்னூட்டங்கள்

தங்கர் பச்சான் பல சமயம் உண்மையை பேசினாலும் சில சமயம் தேவையின்றி நாவடக்கமில்லாமல் பேசிவிடுகின்றார். அதனால் அவர் சொல்லும் கருத்தில் உள்ள உண்மை அடிபட்டுவிடுகின்றது.

//"காசுக்காக எப்படி வேண்டுமானாலும் நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகள்"//
இதெல்லாம் கொஞ்சம் அதிகமோ அதிகம், கொஞ்சம் கூட இறக்கமேயின்றி பணத்திற்காக தயாரிப்பாளர்களின் கழுத்தை இறுக்கி மாத்திரை திங்கவும் தூக்கு மாட்டிக்கொள்ளவும் காரணமாக இருக்கும் நடிகர் நடிகைகளை இந்த மாதிரி வார்த்தையால் சாடும்போது இந்த வார்த்தையை பிடித்து தொங்கிக்கொண்டு அவர்களுடைய தவறுகள் மறைந்து நடிகர்/நடிகைகள் புனிதர் பட்டம் பெற்றுவிடுவர், தங்கர்பச்சானுக்கு கொஞ்சம் நாவடக்கம் தேவைதான்

//"குருவி கடிச்ச கொய்யாப்பழம்" //

அது சரி இதுவும் சமரசத்திற்காக எடுக்கப்பட்டது தானே, முகமூடியாரே நேரில் பார்க்கும்போது படத்தில் காண்பித்ததெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் தானுங்கோ

முகமூடியாரே நான் மட்டும் என்ன தங்கர் பேசியது நியாயம் என்றா கூறினேன், என் பின்னூட்டங்களை பாருங்கள்.

////"குருவி கடிச்ச கொய்யாப்பழம்" //
அது சரி இதுவும் சமரசத்திற்காக எடுக்கப்பட்டது தானே//

நான் மட்டுமென்ன தங்கர் குருவி கடிச்ச கொய்யாபழம் கலைக்காக எடுத்ததென்றா கூறினேன், அதுவும் வியாபாரத்திற்காக எடுத்தது என்று தானே கூறினேன்.

தங்கர் அளவுக்கதிகமாக பேசுகின்றார் என்றுதான் நானும் கூறுகின்றேன், அதற்காக தங்கர் சொல்வதில் கொஞ்சம் கூட நியாயமில்லை என்று ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை.
சில நாட்களுக்குமுன் ஏற்பட்ட தானு, சிம்பு பணப்பிரச்சினை கேள்விப்பட்டீர்களா?

மாதவன் டப்பிங் பேச வராமல் இழுத்தடித்ததை படித்தீர்களா?

தயாரிப்பாளர்களும் நியாயவான்கள் சத்தியசீலர்கள் என்று கூறவில்லை, அதே சமயம் பழச்சாறு வரவில்லையென்றும், கேரவன் வேன் வரவில்லையென்றும் எத்தனை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நடிகர்/நடிகைகள் எல்லாம் படத்தின் தொடக்கத்தில் இந்த வித்தையை காண்பிக்க மாட்டார்கள், படம் முடிவடையும் போது தான் காண்பிப்பார்கள்.

//இப்போ உங்க கம்பெனியில் நீங்க தவிர்க்க முடியாத ஆளாயிட்டீங்க, அப்போ நீங்க கேக்குற சம்பளம் தருவாங்கன்னா - அதை விட ஜாஸ்தியா மத்த கம்பெனில தர தயாரா இருக்காங்கன்னா - நீங்க வேணாங்க எனக்கு கிடைப்பதே போதும்னு சொல்வீங்களா... ஆமான்னு சொன்னாலும் சொல்வீங்க.. //
வேலை செய்யும் போதும் ஒரு ethics இருக்கின்றது... இது மட்டுமே தற்போதைக்கு சொல்ல ஆசைப்படுகின்றேன், வேறெதுவும் பொதுவில் சொல்ல விருப்பமில்லை.

தங்கர் எடுத்ததே மூன்று படம் தான், அழகி, சோல்லமறந்த கதை, தென்றல் இதில் எது குப்பை?? அது சரி குப்பையின் அளவுகோல் பார்வைக்கு பார்வை மாறுபடத்தானே செய்யும். சரி விடுங்க உடனே தங்கர் ஆதரவாளர்னு ஒரு முத்திரை விழுந்து விடப்போகுது. ஆகவே பொது மக்களே, அன்பர்களே, நண்பர்களே வலைப்பதிவர்களே, வலைப்பதிவை வாசிப்பவர்களே என்னுடைய கருத்து என்னவென்றால் தங்கர்பச்சான் பேசியது அளவுக்கதிகமானது என்றாலும் அதில் உண்மையில்லாமல் இல்லை, இவர் பேசிய பேச்சுகளுக்காகவே இதுவரை எடுக்கப்பட்ட இவரது படத்தை குப்பை என்று ஒதுக்க எனக்கு மனம் வரவில்லை. நான் தங்கர்பச்சான் ஆதரவாளன் இல்லை.

http://egalaivan.blogspot.com/2005/08/blog-post_27.html

என்ற பதிவில் ஆகஸ்ட் 27ம் தேதியிட்ட பின்னூட்டம்

// தங்களுடைய சுயலாபத்துக்காகவா? தஞ்சாவூர் விவசாயி எலிக்கறி தின்னானே, அவங்களுக்கு நல்லது பண்ணனும்னு மத்திய அமைச்சரவையில் வேளாண்மைத்துறையை யாராவது கேட்டாங்களா? அல்லது காவிரிப் பிரச்சினையை தீர்க்கனும், ஜனங்க குடிநீர் பிரச்சினையை தீர்க்கனும்னு நீர்வளத்துறையைக் கேட்டாங்களா? எல்லாம் சுய லாபத்துக்காக வருமானம் வரும் துறைகளைக் கேட்டு வாங்கினாங்க
//
இப்படி கூறிய இதே விஜயகாந்த் தான் பின் அவர்களிடமே தன் மண்டபம் இடிபடாமல் காப்பாற்ற போய் நின்றார்.
இதைப்பற்றிய ஒரு பதிவு இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்

படம் காட்டிக்கொண்டிருக்கும் விஜயகாந்த் தற்போதுள்ள அரசியல்வாதிகளிடமிருந்து எந்த இடத்திலும் மாறுபடவில்லை, விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?

தங்கர்பச்சான் அதிகம் பேசுகின்றார் என்பது கண்டிக்க வேண்டிய உண்மை, அதே சமயம் அவர் பேசுவதில் உள்ள உண்மையையும் நாம் உணரவேண்டும்

----------------------------------------------------------

இவையனைத்தும் நீங்கள் தங்கரை தாக்குவதற்கு முன்பே நான் எழுதிய பின்னூட்டங்கள்

என்பதிவிலும் பின்னூட்டங்களிலும் தங்கர் கடுமையான வார்த்தைகளில் பேசியுள்ளார், தங்கருக்கு வாய்கொழுப்பு அதிகம் என்று கூறியுள்ளேன், இதெல்லாம் தங்கர் பேசிய வார்த்தைகளை ஆதரித்தால் வந்திருக்கும் என நினைக்கின்றீரா?

என்னதான் ஆனாலும் என்னால் சிலர் மாதிரி (ஆ)பாசமாகவெல்லாம் கண்டிக்க முடியாது.

//ஆனால் அவர் அந்த வார்த்தையை கண்டித்தார் என்பது நாடகம் மட்டுமே. ஒப்புக்காக வெளிபூச்சுக்காக செய்வது. ஏனேனில் அதை சொன்ன குமாரை ஆதரிக்கிறார்//

அடுத்ததாக குமாரின் பதிவில் ஆதரித்தும் எதிர்த்தும் எந்த கருத்தையும் சொல்லவில்லை, ரோசாவசந்தின் பின்னூட்டத்தால் காயமடைந்த குமாருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன், மற்றவர்கள் மீது குற்றம் சாட்டும்முன் ஒரு முறை நிதானமாக படித்து பார்த்துவிட்டு சொல்லலாம்.

//மற்றவர்களுக்காவது தங்கள் நிலையை வெளிப்படையாய் சொல்லும் தைரியம் உண்டு. இவர் அது கூட இல்லாத போலி. //

போலியா இல்லையா என்பது எல்லோருக்கும் நன்றாகவேத் தெரியும், தைரியம் பற்றி என்னிடம்(?!) சொல்வது அதுவும் எந்த மட்டையடிக்கும் பயப்படாமல் மருத்துவர் இராமதாசுவில் ஆரம்பித்து இதோ தங்கர் வரை வந்துள்ளேன்,

//அதனாலேயே' சோறு' திங்கிறாரா என்று சந்தேகம்.//

ஏற்கனவே தங்கரை ஒரு கருத்திற்காக ஆதரித்ததாலேயே நாய் பட்டம் கொடுத்துவிட்டீர், பின் உங்களுக்கு நான் சோறு தின்கிறேனா என்பதில் சந்தேகம் வந்ததில் எனக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை.

அன்பு பாலா,
// சொல்பவரின் தகுதியை வைத்து தான், அவர் சொல்வது ஏற்றுக் கொள்ளப்படும் / படாது. இதில் தனிமனித வெறுப்பு என்று ஒன்றுமில்லை."
-- தமிழ்பாதுகாப்பு இயக்கம் பற்றிய பாலாவின் பின்னூட்டம்
//

////"இவர் ஏனய்யா இப்படிப் பேசினார்?" என்று கேள்வி எழுப்பினால், "அவர் மட்டும் ஒழுங்கா, என்ன ?"//
என்ற தொனியில் நான் ஏதாவது கூறியிருந்தால்
-பாலா//

கீழேயுள்ள பின்னூட்டம் நீங்கள் இதே பதிவில் முன்பு இட்டது
//"இவர் ஏனய்யா இப்படிப் பேசினார்?" என்று கேள்வி எழுப்பினால், "அவர் மட்டும் ஒழுங்கா, என்ன ?" என்று விதண்டாவாதம் செய்பவரிடம் தர்க்கம் செய்வது வீண்வேலையே.
//

மேலேயுள்ளா மூன்று பின்னூட்டங்களில் நீங்கள் எடுத்த இரட்டை அளவுகோல் புரியும் என நினைக்கின்றேன், இதற்கு மேலும் என்னால் விளக்குவது இயலாத காரியம்

டோண்டுவைப்பற்றி பேசத்தேவையில்லைதான், எல்லாம் தெரிந்தது தான் இருந்தாலும் அவர் பதிவிற்கு சம்மந்தமில்லாமல்(என்னார் பதிவு உட்பட) எழுதும் பின்னூட்டங்களிலும் விவாதமில்லா இடத்திலும் தேவையேயில்லாமல் பாமகவையும் இராமதாசுவையும் அன்புமணியையும் இழுப்பதிலேயே அவரின் காழ்ப்புணர்ச்சி புரிகின்றது, மீண்டும் அதெல்லாம் இல்லை கருத்துக்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றேன் என சப்பை கட்டுவார் என்பதும் புரிகின்றது.

//ஜோ நான் சொன்ன கருத்தை மறுத்துவிட்டு, ஓவரா கம்மியா என்று சொல்ல முயற்சி செய்யுங்கள். விரலை பற்றி பேசலாம், அதற்கு முன்னால் சுட்டியதை கொஞ்சமாவது கணக்கில் எடுத்துவிட்டு!//

ரோசாவசந்திற்கு இப்போது இந்த விடயத்தில் எழுந்த ஆதங்கம் தான் தங்கர் விடயத்தில் எனக்கு தொடக்கத்திலேயே எழுந்தது, சுட்டி காட்டியதற்கு நன்றி ஜோ

ஏற்கனவே ஒருவரை விவாதத்திலிருந்து வில(க்)கிவிட்டார், இது ஒரு முடிவில்லா விவாதம் என தெரிகின்றது, இருந்தாலும் சந்திக்க தயாராகவே உள்ளேன்.

ரோசா ஒரு முறை காஞ்சிபிலிம்ஸ் பதிவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு அந்த படம் காஞ்சிபிலிம்ஸ் னால் வரையப்பட்டதல்ல என்றவுடன் வருத்தம் தெரிவித்தார், அந்த நேர்மை நான் தங்கர் பேசியதை கண்டிக்கவேயில்லை என ரோசா பேசியதற்கு சில நாட்களுக்கு முன்பே நான் பின்னூட்டங்களில் கண்டித்திருப்பதை ஆதாரத்துடன் இங்கே எடுத்துவைத்துள்ளேன், இங்கேயும் அதை எதிர்பார்க்கலாமா? எனக்கு தேவையில்லைதான் இருந்தாலும்
 



//ஜோ,

என்னை பற்றிய கருத்துக்களுக்கு நன்றி. நான் என்னை பற்றி பிறர் வைத்திருக்கும் கருத்துக்கள் குறித்து விவாதிப்பது இல்லை.

ஆனால்..//

ரோசா, தங்கரும் இப்படியே அவர் அளவுல நெனச்சிகிட்டு சும்மா இருந்திருக்கலாம் இல்லையா?
என்ன பண்றது? உங்கள மாதிரி வலைப்பதிவு மட்டும் வச்சிகிட்டு வண்டியோட்டாம கோடிக்கணக்குல பணம் போட்டுப் படமெடுக்கிறாரே.

மன்னிப்பு கேட்கவேண்டிய கட்டாயம்!!.

உங்களுடைய பதிவுகளை சில காலமாக படித்து வருகிறேன்.
உங்களுக்கு சமூகத்தின் மீதோ, சில தளங்களில் உள்ள மக்களின் மீது தீராத கோபம் உள்ளதாக புரிந்து கொள்கிறேன்.

அதற்காக சகட்டுமேனிக்கு விளாசுவதால், உங்களுடைய கருத்துகளை அனைவரும் காலப்போக்கில் புறக்கணிக்க வாய்ப்பளிக்கிறீர்கள்.

முகமூடி, ரோசாவின் கடுமையான வார்த்தை பிரயோகங்களை ஆதரிக்கிறீர்களா?

அப்புறம், வலைப்பதிவு என்பது தனிப்பட்ட டைரி போல ஆரம்பித்தது.
இப்போ தமிழ் கூறும் நல்லுலகில், தமிழ்மணத்தினால் (அது நல்ல நோக்கங்களுக்காக வலைப்பதிவுகளை ஒருங்கிணைக்கிறது) அது ஏதோ பத்திரிகை நடத்துவது போலாகிவிட்டது.

"பத்திரிகைனா விளம்பரம் வேணும், சர்க்குலேஷன் கூடணும். இதுக்கு சர்ச்சைகளை பேசணும், எதுவும் இல்லைணா நாமே உருவாக்கணும்."

நடக்கட்டும் இந்த நாடகங்கள்.
இத்தனயும் படிச்சிட்டு காலை ரெண்டு மணிக்கு கருத்து சொல்றேனே, என்னையே நான் ஜோட்டால அடிச்சிக்கணும்.

My 5 cents on this 'drama':

1. தங்கருக்கு வாய்கொழுப்பு ஜாஸ்த்திதான்.
2. தங்கர் கூறியது தப்பு.
3. அவரை மன்னிப்பு கேட்க வைத்தது சரிதான்.
4. அந்த 'மன்னிப்பு கேட்கும் படலத்தில்' நிகழ்ந்த அரசியல் தட்டிக்கேட்கப்படவேண்டியதே.
5. சம்பந்தப்பட்ட பத்திரிகை, அப்பேட்டியோட ஒலிப்பதிவை வெளியிடுமா?
 



//ஏற்கனவே தங்கரை ஒரு கருத்திற்காக ஆதரித்ததாலேயே நாய் பட்டம் கொடுத்துவிட்டீர்//

குழலி, அப்படி நான் எதுவும் சொல்லவில்லையே! நான் எழுதியதை கொஞ்சம் மேற்கோள் காட்டி நிருபிக்க முடியுமா?
 



முகமூடி,
//எல்லாரும் தங்கருக்கு வக்காலத்து வாங்குவது அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதற்காகவாம்... முதலில் தங்கர் மனிதராக இருக்கட்டும்.//
நான் வக்காலத்து வாங்குகிற அணியில் இல்லையெனினும்...

நீங்கள் மாமனிதர்களாக நினைக்கும் சிலர் எடுக்கும் படங்களை விட தங்கர் என்கிற குரங்கு எடுக்கிற படம் உருப்படியா இருந்தா என்ன பண்ணுறது ? என்னைப் பொறுத்தவரைக்கும் குரங்கு எடுத்த படத்தை தான் பார்ப்பேன். படத்தோட இயக்குனர் புனிதரா இருந்தா என்ன ,மிருகமா இருந்தா என்ன ..படம் நல்லாயிருக்கிறதா என்பது தான் நுகர்வோனின் கவலை. அவர் தனிப்பட்ட வாழ்வில் யோக்கியனா இல்லையா என்பது எனக்கு தேவையில்லாத விஷயம் ..ஒரு வேளை தங்கர் அடுத்த போப் பதவிக்கு போட்டியிட்டா அவரோட தனிப்பட்ட யோக்கியதைய பத்தி விவாதிக்கலாம்.
 



////ஏற்கனவே தங்கரை ஒரு கருத்திற்காக ஆதரித்ததாலேயே நாய் பட்டம் கொடுத்துவிட்டீர்//

குழலி, அப்படி நான் எதுவும் சொல்லவில்லையே! நான் எழுதியதை கொஞ்சம் மேற்கோள் காட்டி நிருபிக்க முடியுமா?
//
நீங்கள் நேற்று அல்லது இன்று ஒரு பின்னூட்டத்தில் தங்கரை ஆதரிக்கும் நாய் என்ற கருத்தில் பின்னூட்டம் கொடுத்தீர் (என்னை பெயர் குறிப்பிட்டு சொல்லவில்லையென்றாலும்) அதனால் தான் குறிப்பிட்டேன் இந்த பின்னூட்டங்களை தேடி கண்டுபிடிப்பது சற்று கடினம் தான் இருந்தாலும் தேடித்தருகின்றேன்.

நன்றி
 



//நீங்கள் நேற்று அல்லது இன்று ஒரு பின்னூட்டத்தில் தங்கரை ஆதரிக்கும் நாய் என்ற கருத்தில் பின்னூட்டம் கொடுத்தீர் //

இல்லை, 'நடிகைகளை விபச்சாரிகள்' என்று சொன்ன நாய்கள்' என்றுதான் சொல்லியிருக்கிறேன். நீங்கள் அப்படி சொல்லாத போது உங்களை குறிக்க வாய்பில்லை. முடிந்தால் மேற்கோள் காட்டுங்கள். அல்லது சொன்னதை திரும்ப பெறுங்கள். (சும்மா வேண்டுகோள், திரும்ப பெறாவிட்டால் அதனால் பிரச்சனையில்லை. இத்தனை பேர் திட்டியிருக்கிறான்கள். ஆபாசமாய் பேசியதாக உளருகிறார்கள். நீங்கள் கூட குமாருக்கு ஆறுதல் சொல்லும்போது திரித்திருக்கிறீர்கள், என்ன எல்லாரிடமும் விளக்கமா கேட்டுகொண்டிருக்கிறேன்?)
 



//ரோசா ஒரு முறை காஞ்சிபிலிம்ஸ் பதிவில் உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டு அந்த படம் காஞ்சிபிலிம்ஸ் னால் வரையப்பட்டதல்ல என்றவுடன் வருத்தம் தெரிவித்தார், அந்த நேர்மை நான் தங்கர் பேசியதை கண்டிக்கவேயில்லை என ரோசா பேசியதற்கு சில நாட்களுக்கு முன்பே நான் பின்னூட்டங்களில் கண்டித்திருப்பதை ஆதாரத்துடன் இங்கே எடுத்துவைத்துள்ளேன், இங்கேயும் அதை எதிர்பார்க்கலாமா?//


நீங்கள் சொல்வது முழு உண்மையல்ல. காஞ்சி 'தான் வரையவில்லை' என்று சொன்ன உடனே நான் அவசரமாய் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அதற்கு பிறகு மெய்யப்பனும் மற்றவர்களும் அது காஞ்சி ஃபிலிம்ஸாலேயே manipulate செய்யப்பட்டிருப்பதையும், அது அவரால்தான் வரையப்பட்டுப்பதாகவே கொள்ள வேண்டும் என்றுயம் ஆதாரத்துடன் சுட்டி காட்டினர். அது என் பதிவில் உள்ளது. நான் அதற்காக மன்னிப்பை வாபஸ் வாங்கி காஞ்சியை திரும்பவும் திட்டவில்லை. ஆனால் காஞ்சி ஃப்லிம்ஸ் மீண்டும் வந்து தன் விளக்கத்தை தரவும் இல்லை. தான் சொன்ன பொய்க்கு மன்னிப்பு கேட்கவும் இல்லை. அவருடய நேர்மை அந்த வகைப்பட்டது.


அடுத்து உங்கள் விஷயத்தில் என் கருத்து அப்படியே உள்ளது. என்னால் குமார் புண்பட்டால் அதனால் என்ன வந்தது? அவர் எழுதிய மோசமான பதிவை நீங்கள் கண்டிக்கவில்லை. மாறாக ஆதரவாக குரல் கொடுத்தீர்கள்.

இப்போதும் கேட்கிறேன், குமார் அல்லது (நான் உடபட) யாருடய அம்மாவாக இருந்தாலும், அவர்கள் எந்த வகையில் பாலியல் தொழிலாளர்களை விட புனிதமானவர்கள் என்று விளக்க முடியுமா? அதை விளக்காமல் தொடர்ந்து நான் ஆபாசமாய் பேசியதாக உளருவது போல் ஆபாசம் வேறு உண்டா? நீங்கள்தான் என்னை நாய் என்று குறிப்பிட்டு எச்சரிக்கை விடுத்தீர்கள். மாறாக உங்கள் பதிவில் உண்மையிலேயே ஆபாசமாய் நடிகைகளை பற்றி எழுதிய எவனையும் நீங்கள் கண்டிக்கவில்லை, எச்சரிக்கை செய்யவும் இல்லை. அதைத்தான் நான் சுட்டி காட்டினேன். உங்கள் பதில் வெறும் சால்ஜாப்பாகத்தான் எனக்கு தெரிகிறது. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.அதை முன்வைத்தே (இதற்கு முன்பே உன்மையான வசைகள் வந்து விழுந்த என்னை திட்டிவிட்டு, என் கண்டனத்தால் 'காயப்பட்ட' குமாருக்கு ஆறுதல் சொன்ன போது ஏற்பட்ட அதே சந்தேகத்தைத்தான்) 'சோறு தின்கிறீர்களா' என்று சந்தேகித்தேன். உறுதியாயிற்று.
 



//அடுத்து உங்கள் விஷயத்தில் என் கருத்து அப்படியே உள்ளது//
மன்னிக்கவும் என் விடயத்தில் உங்கள் கருத்து மாறினால் நன்று அதே சமயத்தில் மாற வேண்டுமென்ற கட்டாய நிலைப்பாடு எனக்கில்லை, என் மீது தங்கரை கண்டிக்கவேயில்லை என்றும் இப்போது நாடகம் ஆடுகின்றேன் என்றும் நீங்கள் வைத்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று நிரூபிக்கத்தான் எழுதினேன்.

//இப்போதும் கேட்கிறேன், குமார் அல்லது (நான் உடபட) யாருடய அம்மாவாக இருந்தாலும், அவர்கள் எந்த வகையில் பாலியல் தொழிலாளர்களை விட புனிதமானவர்கள் என்று விளக்க முடியுமா? //
எந்த இடத்திலாவது நான் இது பற்றி ஆதரித்தோ எதிர்த்தோ கருத்து சொல்லியிருக்கின்றேனா என்று சற்று எண்ணிப் பார்த்துவிட்டு பேசவும்

//அதை விளக்காமல் தொடர்ந்து நான் ஆபாசமாய் பேசியதாக உளருவது போல் ஆபாசம் வேறு உண்டா?//
நீங்கள் உங்கள் கருத்தை வெளிப்படுத்திய விதம் ஆபாசம் என்பதில் இப்போதும் எனக்கு மாற்று கருத்து இல்லை.

//மாறாக உங்கள் பதிவில் உண்மையிலேயே ஆபாசமாய் நடிகைகளை பற்றி எழுதிய எவனையும் நீங்கள் கண்டிக்கவில்லை, எச்சரிக்கை செய்யவும் இல்லை//
ஏற்கனவே நடிகைகளைப்பற்றிய என் நிலையை உணர்த்திவிட்டேன், அவர்களைப்பற்றி தவறாகவோ கேவலமாகவோ நினைக்கவில்லை என்று, பிறகு ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் சென்று எதிர்ப்பு தெரிவிப்பது நேரம் கிடைத்தால் செய்யமுடியும் ஆனால் அதற்கு முன் எனக்கு வரிசையாக வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்துக்கொண்டுள்ளேன்.

// உங்கள் பதில் வெறும் சால்ஜாப்பாகத்தான் எனக்கு தெரிகிறது. இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்//

இதே மாதிரியான பதிலைத்தான் நானும் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.

ரோசா நீங்கள் வைத்த பல குற்றச்சாட்டுகளுக்கு அதிலும் முக்கியமாக தங்கரை கண்டிக்கவேயில்லை என்ற குற்றச்சாட்டிற்கான பதில்களை சொல்லி உண்மையை வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இனிமேலும் இதையே மீண்டும் மீண்டும் பேசுவது ஈகோவை திருப்தி படுத்திக்கொள்ள மட்டுமே இருக்கும். உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென்று இருக்காது.

காஞ்சிபிலிம்ஸ் விடயத்தில் தவறான புரிதலுக்கு (அந்த பதிவில் இருக்கும் விடயங்களை அப்படியே பார்த்தால் நான் புரிந்து கொண்டதில் தவறில்லை) மன்னிக்கவும்.

//'சோறு தின்கிறீர்களா' என்று சந்தேகித்தேன். உறுதியாயிற்று.
//
அதில் எனக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.
 



//ரோசா நீங்கள் வைத்த பல குற்றச்சாட்டுகளுக்கு அதிலும் முக்கியமாக தங்கரை கண்டிக்கவேயில்லை என்ற குற்றச்சாட்டிற்கான பதில்களை சொல்லி உண்மையை வெட்ட வெளிச்சமாகிவிட்டது.//

நான் தங்கரை ஒப்புக்காக கண்டித்தார் என்று சொல்லத்தான் செய்திருக்கிறேன்.

"இவர் எங்காவது நடிகைகளை கேவலமாய் பேசிய குமாரை ஒரு வார்த்தையாலாவது ஒப்புக்காவது கண்டித்தாரா? ...

...சும்மா வெற்று வார்த்தையாய் 'தப்பு' என்று ஒப்புக்கு சொன்னவர், எம்.கே.குமாரின் பதிவில் அத்தனை முறை அத்தனை அற்பபுழுக்கள் மீண்டும் மீண்டும் சொன்னபோது எங்காவது கண்டித்தாரா? ஏன் அவருடய பதிவிலேயே எழுதியதை கண்டித்தாரா? ....

..இவர் எங்காவது நடிகைகளை கேவலமாய் பேசிய குமாரை ஒரு வார்த்தையாலாவது ஒப்புக்காவது கண்டித்தாரா? ..

...தன் பதிவில் 'கெட்ட வார்த்தை எழுதினால் திருப்பி தாக்குவேன்' என்று எச்சரிக்கை விட்டவர் அதை எனக்கு மட்டும்தானே பொருத்தினாரே தவிர, எங்காவது அவர் பதிவிலேயே நடிகைகளை பற்றி கேவலமாக வந்த பின்னூட்டம் பற்றி பேசியுள்ளாரா? அதற்கு ஏதாவது முனகலாவது வெளிப்பட்டதா? ...

...என்னை பற்றி என் பிறப்பை, மனைவியை பற்றி பின்னூட்டங்கள் வந்துள்ளது. அந்த குமாரே பதிலுக்கு என்னை பற்றி அப்படி எழுதியுள்ளார். (நான் யாரையும் அப்படி பேசவில்லை). அதற்கு பின் குமாருக்கு இவர் எழுதிய ஆறுதல் மொழியை படியுங்கள்...."

இவைதான் நான் சொன்னது. இதில் எதையும் பொய் என நிருபிக்கப் படவில்லை. வந்த பதில் அத்தனையும் சால்ஜாப்புதான். இத்துடன் விடைபெறுகிறேன்.
 



//நான் தங்கரை ஒப்புக்காக கண்டித்தார் என்று சொல்லத்தான் செய்திருக்கிறேன்.
//
இந்த பிரச்சினைகள் ஆரம்பிக்கும் முன்பே ஆகஸ்ட் 20ம் தேதியிலேயே கண்டித்திருக்கின்றேன், நீங்கள் என்னமோ இப்போது தான் கண்டிப்பதாக நாடகம் ஆடுவது போல கூறினீர், அதே சமயம் என்னால் பொது இடத்தில் கண்ணியக்குறைவாக கண்டிக்க முடியாது என கூறிவிட்டேன், அதையே மீண்டும் பிடித்து தொங்கிக்கொண்டிருந்தால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது.

//அதற்கு பின் குமாருக்கு இவர் எழுதிய ஆறுதல் மொழியை படியுங்கள்...."
//

//எது வேண்டுமானாலும் உளறலாம் அதையும் காட்டமாக உளறுவது தான் தன் பாணி என்று ஏதோ உருவகப்படுத்திக்கொண்டு எதையும் எதையும் உதாரணப்படுத்த வேண்டுமென்று கொஞ்சம் கூட இல்லாமல் கண்ட மேனிக்கு பேசும் அன்பர்களின் பேச்சுக்கெல்லாம் செவிசாய்க்க ஆரம்பித்தால் நீங்கள் தான் புண்படுவீர்கள் குமார்.
//
இது தான் நான் குமாருக்கு இட்ட ஆறுதல் மொழி இதில் என்ன தவறு கண்டீர்??

//பின்னூட்டம் பற்றி பேசியுள்ளாரா? அதற்கு ஏதாவது முனகலாவது வெளிப்பட்டதா? ...
//
முந்தைய பின்னூட்டத்திலேயே சொல்லிவிட்டேன், அது உங்களுக்கு சப்பைகட்டாக தெரிந்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது

//வந்த பதில் அத்தனையும் சால்ஜாப்புதான்.//
இதைத்தவிர உங்களிடமி வேறு என்ன வரும் என நான் எதிர்பார்க்கமுடியும்.

// இத்துடன் விடைபெறுகிறேன்.//
நீங்கள் இப்படி சொல்லியும் நான் பதில் மொழி எழுதுவது தவறுதான், ஆனால் நீங்கள் கூறியதில் எனக்கு மறுப்பு இருக்கும் சமயத்தில் இது எனக்கு தேவைப்படுகின்றது.

வேறொரு இடத்திலாவது நல்ல சூழ்நிலையில் சந்திப்போம்.
 



அன்புள்ள குழலி,

உங்கள் மறுமொழிக்கும் சுட்டிக்கும் நன்றி. படித்துப் பார்க்கிறேன். உங்களை மடக்குவதற்கோ கேள்வி கேட்பதற்கோ நீங்கள் சொல்வதுபோல காத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை எனக்கு. ஏனென்றால், யாரையும் காக்க வைக்காமல், ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் ஏதாவது "திருவாசகம்" எழுதிக் கொண்டுதானே இருக்கிறீர்கள். :-) ஆனாலும், அவை உங்கள் கருத்தென்று போய் விடுகிறேன். மேலும், Rhetoric-களை விவாதம் என்று எடுத்துக் கொண்டு பதில் சொல்வது அலுப்படிக்கிறது. அவ்வளவுதான். இதைப் படித்துவிட்டுக் கூட உங்களிடம் வாதம் செய்கிற உத்தேசம் இல்லை. என் அறிதலுக்காகவும், என் புரிதலை மேம்படுத்திக் கொள்வதற்காகவும் கேட்டது இது. மற்றபடிக்கு, இன்னும் வளர்ந்து பா.ம.க.வில் பெரிய பதவிகள் அடைகிற "தகுதி" உங்களுக்கு இருக்கிறது. தங்கரும்கூட அடுத்த படத்திற்கு ஏதேனும் கேரக்டர் ரோல் செய்ய உங்களை அணுகலாம். [பார்த்தீங்களா, எப்படி ஜோசியம் சொல்றேன் என்று :-) ] அதற்கு என் வாழ்த்துகள்.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



அடேங்கப்பா அப்படி போய்ட்டு வரதுக்குள்ளா இத்தனை நீஈஈஈஈள பின்னூட்டங்கள்.
ஏம்பா எல்லாம் சொந்த நேரத்துல தான் போடறீங்களா?
 



ஏற்கெனவே ஒருமுறை FEFSI விவகாரம் பெரிதாகத் தலையெடுத்தபோது - பாரதிராஜா அடிப்பொடிகள் - FEFSI பக்கம் பேசியதற்காகவே கமல்ஹாசனை ஆபாசமாகத் திட்டினார்கள்; அவரை அவமானப் படுத்துகிற விதத்தில் பல காரியங்களைச் செய்தார்கள்.

பாலகுமாரன் - ஏதோ ஒரு பேட்டியில், உதவி இயக்குனர்களைப் பற்றி சற்று அதிகப்படியான விமர்சனம் செய்ததற்கு - சேரன் தலைமையில் பாலகுமாரன் வீட்டுல்லு ஊர்வலமாகப் போய் கலாட்டா செய்தார்கள்.

ஆனால், ஒவ்வொரு முறையும் "அரசியல் ரீதியாக" "பலம் வாய்ந்த" குழுவினர் - தங்கள் "புஜபல பராக்கிரமத்த்தை" - அம்மாதிரியான பலமற்ற - அல்லது வலுக் குறைந்தவர்களின் மீது பாய்ச்சுகிறார்கள் - என்பது வெளிப்படை.

தமிழ்நாட்டிலேயே இருந்து கொண்டு - தமிழைச் சூத்திர மொழி - என்று சொன்னவனை மன்னிப்புக் கேட்கச் சொல்லி - இங்கே தங்கருக்கு எதிராக முழங்குகிறவர்கள் அனைவரும் பேசவா செய்தார்கள்?!!

அல்லது தமிழில் எழுதி "ஞானபீடம்" பரிசு பெற்ற 'கஞ்சா' எழுத்தாளர்கள் - தமிழைப் போற்றுவது நாய் தன்னைத்தானே நக்கிக் கொள்வது போல - என்று சொன்னதற்காக - தமிழகத்தில் எங்காவது "பந்த்" நடத்தப்பட்டதா?

தங்கரின் மீது வேறு எது எதற்கோ கோபம் கொண்டிருந்தவர்கள் - ஒன்று கூடிப் பாய்வது, இந்தப் பிரச்சனையை ethical-தொடர்பான பொருளாகக் கருதுவதால் அல்ல; பல்வேறு 'உள்குத்து' காரணங்களை மனதில் கொண்டுதான்.

"வேலைக்குப் போகிற பெண் எல்லாருமே நடத்தை கெட்டவர்கள்" - என்று அருளுரை வழங்கிக் கொண்டிருந்தவன் மீது போய்ப் பாயவேண்டியதை - தங்கர் ஒரு குறிப்பிட்ட context-ல் சொன்ன ஒரு தவிர்க்கப்படவேண்டிய வாரத்தையை வைத்துக் கொண்டு ஆளாளுக்குப் பாய்வது வெட்கங்கெட்டவர்கள் செய்கிற காரியம்.

1980-களின் இறுதியில், கவிஞர் வைரமுத்து, குமுததத்தில் எழுதிய - ஒரு கவிதையில் - நடிகைகளின் அவலமான வாழ்க்கை குறித்து விசனப்படுகிற விதமாக, எழுதியிருந்தார்.

அதிலே, நடிகைகளை தன் "உடலையே" கரைத்துக் கொண்டு வெளிச்சம் தரும் மெழுகுவர்த்திகள் என்பது போல எழுதியிருந்ததாக நினைவு.

உடனே, கங்கை அமரன் தூண்டுதலின் பேரில் வைரமுத்துவின் மீது சுகாசினி, சிறீப்பிரியா போன்றவர்கள் பாயந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கலைஞர் ஒரு அதட்டல் போட்டதும் எல்லா குதியாட்டமும் அடங்கிவிட்டது.

(இத்தனைக்கும், வைரமுத்து - நடிகைகளின் வாழ்க்கை அவலம் குறித்த கரிசனத்தில்தான் அக்கவிதையை எழுதினார்)

ஏன் கலைஞருக்கு அஞ்சாமல் நடிகைகள் மேலும் குதிக்கவில்லை?

அரசியல் பலம் ( சரியாகப் )
பயன்படுத்தப்பட்டதனால் - அன்றைக்கு வைரமுத்துவுக்கு தர்மசங்கடம் தவிர்க்கப்பட்டது.

தங்கருக்கு அந்த பலம் இல்லை. ஆகவே இது போன்ற "Holier-than-thou" ஜென்மங்களிடம் அவர் மாட்டிக் கொண்டுவிட்டார்.

அவ்ளோதாம்பா மேட்டரு! ;)
 



//யாரையும் காக்க வைக்காமல், ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் ஏதாவது "திருவாசகம்" எழுதிக் கொண்டுதானே இருக்கிறீர்கள். :-)
//
என்ன செய்வது ஊடக வன்முறையும் மீறி சில உண்மை பக்கங்களும், சிலரின் அழுக்குகளும் சில ஆன்மீகவாதிகளின் வேடம் கலைக்கப்படும் போதும், சில பெரிய மனிதர்களின் ஆதிக்க சாதி வெறியை வெளிப்படுத்தும் போதும், சில முகமூடிகளின் அபத்தத்தை கண்டிக்கும் போதும் அப்படி திருவாசகமாகத் தான் தெரியும்.

//Rhetoric-களை விவாதம் என்று எடுத்துக் கொண்டு பதில் சொல்வது அலுப்படிக்கிறது//

எனக்கும் தான்.

//இதைப் படித்துவிட்டுக் கூட உங்களிடம் வாதம் செய்கிற உத்தேசம் இல்லை//
என்னிடத்தில் தவறிருந்தால் நேர்மையாக உணர்த்தப்படும் பட்சத்தில் என் கருத்தை மாற்றிக்கொள்ள எப்போதும் தயாராக உள்ளேன்.

//தங்கரும்கூட அடுத்த படத்திற்கு ஏதேனும் கேரக்டர் ரோல் செய்ய உங்களை அணுகலாம்.
//
என்ன கேரக்டர் ரோலா, நான் கதாநாயகன் பாத்திரம் அல்லவா எதிர்பார்க்கின்றேன்.

//மற்றபடிக்கு, இன்னும் வளர்ந்து பா.ம.க.வில் பெரிய பதவிகள் அடைகிற "தகுதி" உங்களுக்கு இருக்கிறது.//
நன்றி தகுதி உள்ளது என்று விளம்பியதற்கு

// [பார்த்தீங்களா, எப்படி ஜோசியம் சொல்றேன் என்று :-) ] அதற்கு என் வாழ்த்துகள்.
//
உங்களுக்கும் பீடத்தின் அருளும்,விருதும் கிடைக்க வாழ்த்துக்கள் :-)

நன்றி
 



// உங்களுக்கும் பீடத்தின் அருளும்,விருதும் கிடைக்க வாழ்த்துக்கள் :-) //

ஹாஹாஹா! அப்படிப் போடுங்க அருவாளை!

ஆனா பிகேஎஸ்-க்கு விருது கிடைக்கணும்னா வாழை இலை விரிக்கத் தெரிந்திருக்கணுமே!

"ஓடும் உலகத்த உக்காந்து" பாத்துக்கிட்டு இருந்தா எங்கிட்டு கூடி 'வாழை இலை மகத்துவம்' கத்துக்கிடறது??!!! ;))
 



நியோ,

உங்களின் "ஆளுமை"யையும் மன ஆரோக்கியத்தையும் சொல்கிற இந்தக் கமெண்ட்டுக்கு நன்றி. பிற பெயர்களில் ஒளிந்து கொண்டு "மோசமாக" எழுதுபவர்களையெல்லாம் (கவனிக்கவும், மோசமாக என்ற வார்த்தையை), தாங்கள் எழுதுவது குறித்த குற்றவுணர்வே அவ்வாறு மறைந்திருந்து எழுதத் தூண்டுகிறது என்று நான் அறிவேன். இதற்குமேல் உங்களுக்குப் பதில் சொல்லி என் நேரத்தை வீணடிக்கப் போவதில்லை. தந்தை பெயரறியாத தனயர்கள்தான் இப்படி அடுத்தவரைப் பற்றி மோசமாக எழுத மட்டுமே அவதாரம் எடுப்பவர்கள் அல்லது ஆண்மையின் எந்த வீரியமும் இல்லாதவர்கள். சொல்லப் போனால், இன்னொரு பெயரில் வந்து அனாமதேயமாக எழுதுபவர்களை எல்லாம் பொருட்படுத்தி பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்று நீங்களேயும் எழுதக்கூடும். உங்களைப் போன்ற வீணர்களிடம் நேரம் வீணடிக்க விரும்பவில்லை. நியோ, நீங்கள் தொடர்ந்து உளற என் வாழ்த்துகள்.

பீடம் என்று குழலி சொன்னதும் துள்ளிக் குதிக்காதீர்கள். அவர் மேல்மருவத்தூர் ஆதிசக்தி பீடத்தைச் சொல்லியிருக்கிறார். :-) அவருக்குத் தெரிந்த, அவர் புகழக்கூடிய ஒரே பீடம் அதுதான். குழலி கவலைப்படாதீர்கள். எனக்கு உங்களைக் கிண்டல் செய்கிற உரிமை இருப்பதுபோலவே, உங்களுக்கும் என்னைக் கிண்டல் செய்கிற உரிமை இருக்கிறது. அதனால் செய்யுங்கள். ஆனால், உண்மை கிண்டல்களை எல்லாம் தாண்டியது.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



//குழலி கவலைப்படாதீர்கள். எனக்கு உங்களைக் கிண்டல் செய்கிற உரிமை இருப்பதுபோலவே, உங்களுக்கும் என்னைக் கிண்டல் செய்கிற உரிமை இருக்கிறது.//
உங்களின் புரிதலுக்கு நன்றி பி.கே.எஸ்.

//ஆனால், உண்மை கிண்டல்களை எல்லாம் தாண்டியது.//
உண்மை தான், எல்லோருக்கும் பொருந்தும் உண்மையும் கூட.

ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டதற்கு நன்றி

நேரம், சூழல் அமைந்தால் சந்திப்போம்.

நன்றி
 



நியோ,

என்னைப் பற்றிய உங்களின் கமெண்ட்டுகளும் பார்வையும் வக்கிரமானவை. அதைச் சொந்த பெயரில் சொல்கிற தைரியம் உங்களுக்கு இல்லை. என் கருத்துகளுடன் ஒத்துப் போகாத எல்லாரும் செய்கிற சாணியடித்தலை நீங்களும் செய்திருக்கிறீர்கள். ஆனால், ஒளிந்து கொண்டு. அதனால் வந்த எரிச்சலில் நானும் உங்கள் பாஷையில் உங்களிடம் பேசிவிட்டேன். நான் எடுத்தவுடனேயே உங்களைத் திட்டவில்லை. நீங்கள் என்னைப் பற்றி எழுதிய வக்கிரபுத்தியுள்ள பார்வைக்கு அதே பாணியில் விடையுறுத்தேன். இப்படி ஒளிந்து கொண்டு வாய்ப்பு கிடைத்தவுடன் தனிப்பட்ட வெறுப்பிலும் வக்கிரத்திலும் சாணியடிக்கிற நீங்கள் அந்த வசைக்கு முற்றிலும் பொருத்தமானவராக இருக்கக் கூடும்.

மேலும், தேவையான இடத்தில் தேவையான வசையைப் பயன்படுத்துவது தமிழ் இலக்கியத்திலும் உள்ளது. காளமேகத்தின் "போட்டாளே உனையொருத்தி வேலையற்றுப் போய்" பாடலில் இருந்து, அவ்வையின் எட்டேகால் லட்சணமே என்ற பாடல் என்று பல பாடல்களை அதற்கு உதாரணமாகச் சொல்ல முடியும். கார்ல் மார்க்ஸ் தன் கருத்துகளுடன் ஒத்துவராதவர்களைப் பற்றி எழுதிய polemics-உம் வசைகளும் மிகவும் பிரசித்தி பெற்றவை. பெரியாரும் இதில் குறைந்தவர் இல்லை, "விளக்கெண்ணெய் முதலியார்" என்று திரு.வி.க.வை ஜாதியை வைத்துத் திட்டியவர். முதலியார்களைப் பற்றி ஒரு பழமொழியும் அதை விளக்குகிற கதையும் உண்டு. முதலியார் ஜம்பம் விளக்கெண்ணெய்க்குக் கேடு என்று. அதைத்தான் இங்கே பெரியார் சொல்கிறார். திட்டும்போது நான் கடுமை காட்டுவதுண்டு. ஆனாலும், கண்ணியம் தவறியதில்லை. நேருக்கு நேராகப் பேசுவோர் வசைகள் அப்படிப்பட்டவை. கடுமையாக இருக்கும். ஆனால் அவற்றில் கவித்துவம் இருக்கலாம், அதிகபட்ச வக்கிரம் இருக்காது. கார்ல் மார்க்ஸை விட்டுவிடுவோம். அவர் பிறப்பைக் குறித்தெல்லாம் திட்டியிருக்கிறார். அவரும் மனிதர்தானே. அவையெல்லாவற்றையும் மீறி கார்ல் மார்க்ஸை இன்று தூக்கி நிறுத்துவது அவர் தத்துவத்துக்கும் சொல்லுக்கும் இருந்த வலிமை. மேலும், அவர் குறையுள்ள நல்ல தத்துவவாதிகளைத் தாக்கியதில்லை. ஹெகலா ஹெகலைவிட மோசமானவர்களா என்று வந்தால் - ஹெகலைப் பற்றி எவ்வளவு விமர்சனங்கள் இருந்தபோதும் - ஹெகல் பக்கமே நிற்பார் அவர். அப்படி அவர் தாக்குதலிலும் நேர்மை உண்டு.

இந்த வரலாற்றுப் பின்னணியில் ஒரு தத்துவ ஆழமும் இல்லாமல், அடுத்தவரைப் பற்றி மோசமாகப் பேசவே வேறு பெயரில் ஒளிந்து வரும் உங்களைப் பற்றி நான் எழுதிய கமெண்ட்டை என்னால் நியாயப்படுத்த முடியும். ஆனாலும், நண்பர் பாஸ்டன் பாலாஜி அவருடைய 360 பதிவில் எழுதியிருந்த இந்த வாசகம் எனக்கு மிகவும் பிடித்தது. "He who fights monsters should see to it that he does not become a monster in the process. - Friederich Nietzsche". அந்த வகையில் உங்களைப் போன்றவர்களின் அல்ப புத்தியை வெளிச்சம்போட்டுக் காட்டுவதற்குக் கூட உங்களின் பாஷையை நான் பேசக் கூடாது. எனவே, "தந்தை பெயர் அறியாத தனயர்" என்ற என் சொற் பிரயோகத்துக்கு என்னை மன்னிக்கவும். அதற்காக வருந்துகிறேன். இந்த சொற்பிரயோகத்துக்கு நீங்கள் தகுதியானவராக இருந்தாலும் அதை என் வாயால் சொல்ல நான் விரும்பவில்லை. அதனாலேயே இந்த மன்னிப்பு.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



அடேங்கப்பா!!

'ஹெகல்','மார்க்ஸ்','நீட்சே' என்று சகட்டுமேனிக்கு - பெயர்களை எடுத்து 'வுட்டு'(ஜெயமோகன் சகவாசம்?!) உணர்ச்சி வசப்பட்டு, எத்தனை ஒரு 'ரெளத்திர' ஆட்டம்?!!! ;-))

நான் உண்மையில் - உங்களுக்கு 'விருது' கிடைக்கும் அளவிற்கு நடந்து கொள்ளும் -'உலக அறிவு' இருக்காது போலும் - என்று உங்களுக்கு ஆதரவாக அல்லவா பேசினேன்?!

இப்போது உங்களுக்கும் 'அந்த' அறிவும், தகுதியும் - உள்ளது என்று ஒப்புக் கொள்கிறேன்! ;)

அதெல்லாம் கிடக்கட்டும்.

முதலில் ஒரு விளக்கம்.

நீங்கள் நான் 'யார்' என்று நினத்து இத்தனை 'வசைமாரி' பெய்தீர்களோ அவர் அல்லன்.

உண்மையில் நீங்கள் யாரை னினைத்து இப்படிப் 'பூசல்' செய்கிறீர்களோ - அந்த நண்பரிடம் என் வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். என் பொருட்டு - அவர் மனம் வருந்துவானேன்? (அது யாராக இருந்தாலும்!)

நான் இந்த வலைப்பதிவு உலகிற்கு புதியவன் அல்லேன். ஆனால், வெறும் வாசிப்பாளனாகவே இருந்திருக்கிறேன்.

இந்த இடத்தில் பின்னூட்டம் இட்டதற்குக் காரணம் - பெரிய பெரிய 'சிந்தனையாளர்'களுக்கு மட்டும்தான் - 'பேச்சுரிமை' உண்டு என்பது போலவும் - மற்றவர்கள் வாயைத் திறந்தால் 'சிரச்சேதம் செய்' என்றும் கூச்சலிடுகிற - சில குள்ள நரிகளை அடையாளம் காட்ட விரும்பித்தான் ( குழலிக்கு நன்றி! )

இப்போது நம்முடைய மாபெரும் 'இணைய வஸ்தாது எழுத்தாளர்' தன் 'திருவாய்' மலர்ந்து இங்கே அருளியிருப்பதை எல்லோரும் படிக்கட்டும்!

'தமிழைச் சூத்திர மொழி' என்பானையும் - அவன் பின்புறத்தைத் தாங்கிப் பிடிக்கிற Dope சிந்தனையாள எழுத்து 'மெர்சனரி'களையும், அவனுடைய சீட கோடிகளையும் - இன்னும் ஒருகோடி முறை முகத்திரை கிழித்து - உலகிற்கு அடையாளம் காட்டிக் கொண்டே இருப்போம்.

இவரை ஒரு வார்த்தைப் பரிகாசம் செய்ததற்கு எத்தனை கோபம் வருகிறது? அதுவும் இணையத்தில்?

இவருடைய 'குடிகார' குருநாதரை யார் provoke செய்ததனால் அவர் வெகுண்டெழுந்து 'தமிழின் பெருமை பாடுவதென்பது - நாய் தன்னைத்தானே நக்கிக் கொள்வது போல' என்று சமஸ்கிருத ஓநாய்களுக்கு நடுவிலே ஊளையிட்டாராம்??

இவர்களெல்லாம் - மார்க்ஸ், லெனின் , ஹெகல், என்று பாட்டு வேறு பாடுகிறார்கள்..

தன் தாய்மொழியை ஏசுபவனை பொறுத்தும் சகித்தும் வாழ்பவனுக்குத்தான் 'தந்தை பெயர் தெரியாத் தனயன்' பட்டம் பொருந்தும்!

அப்படியானால் , 'அந்த' மாதிரியான கூட்டம் யார், அதற்கு ஒத்து ஊதுபவர் யார் என்பது - தமிழ் கூறு நல்லுலகிற்குத் தெரிந்துதான் இருக்கிறது.

இவருடைய 'பண்பாட்டு-நாகரீக' முகத்திரை கிழிந்து தொங்கிட அடியேன் ஒரு காரணம் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே! ;)

பி.கு:

எனக்கு என் தந்தை யாரென்பது தெரியும்.

உங்கள் தந்தை யாரென்பதும் தெரியும்! சொன்னால் உங்கட்கு அதிர்ச்சியாயிருக்கக் கூடுமென்பதால் சொல்லாமல் விடுகிறேன்!!

மன்னியுங்கள்! ;)
 




குழலி சொன்ன உள்குத்து இதாம்பா!!!!

தயாரிப்பாளர் சங்கம் - விஜயகாந்த் மோதல் விவகாரம்?!


ஒவ்வொரு கால கட்டத்திலும் தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஹீரோக்களும் ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பை சம்பாதித்திருப்பார்கள்.

ஆனால் அவையெல்லாம் அதிகாரப்பூர்வமாக வெளியே தெரியாத ஆஃப் தி ரெக்கார்ட் எதிர்ப்புகளாகத்தானிருக்கும்.

ஆனால்... அதிகாரப்பூர்வமாக சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ளேயே கடுமையாக எதிர்ப்பைச் சந்தித்தவர் ரஜினிகாந்த்.

உழைப்பாளி பட ரிலீஸ் சமயம்... சூப்பர் ஸ்டார் என சொல்லப்படுகிற ரஜினிக்கே தடை விதித்தார் சென்னை செங்கை காஞ்சி மாவட்ட விநியோகஸ்தர் சங்க அப்போதைய தலைவர் சிந்தாமணி முருகேசன்!

அது கூட உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது. தடைபோட்ட சங்கத்தின் மீரான் சாஹிப் தெரு அலுவலகத்திற்கே நேரில் வந்து பிரச்சனையை சுமூகமாக முடித்தார் ரஜினி.

ஆனால்... மூன்று நாள் கெடு கொடுக்கிறோம். மன்னிப்புக் கேள் எனவும், நம்பிக்கைத் துரோகி எனவும் காட்டமான கண்டனத்திற்கும் எதிர்ப்புக்கும் ஆளாகியிருக்கிற ஒரே ஹீரோ.. விஜயகாந்த்தான்.

விஜயகாந்தை கண்டித்திருப்பது.. யாரோ.. எவரோ அல்ல. தமிழ் சினிமா உலகின் மிகப்பெரிய அமைப்பான தயாரிப்பாளர் சங்கம்தான்!

இந்த மோதலுக்கு காரணம்... ஈகோதான்.

இதை நடிகர் சங்கத்திற்கும் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையேயான பிரச்சினை என விஜயகாந்த் திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்.

ஆனால்... இது தயாரிப்பாளர் சங்கத்திற்கும், விஜயகாந்திற்கும் இடையோன பிரச்சினை என தெள்ளத்தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது தயாரிப்பாளர் சங்கம்.

என்ன பிரச்சினை? எதனால் பிரச்சினை?

இந்தக் கேள்விகளுக்கு கொஞ்சம் பின்னோக்கிப் போய் அங்கிருந்து இந்த செய்திக் கட்டுரையை ஆரம்பிப்பதுதான் மிகச்சரியாக இருக்கும்.

கஜேந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த கொண்டிருந்த சமயம்.. பாட்டாளிமக்கள் கட்சி தலைவர் ராமதாஸையும், அவரின் மகன் அன்புமணியையும் அரசியல் ரீதியாக கள்ளக்குறிச்சி ரசிகர் கூட்ட மேடையில் விமர்சனம் செய்தார் விஜயகாந்த்.

இதனால் கடுப்பான பா.ம.க. விஜயகாந்திற்கு எதிராக பிரச்சினை; போராட்டங்களைப் பண்ணியது. அதோடு கஜேந்திரா பட வெளியீட்டை தடுப்போம் எனச் சொல்லிவிட்டது. தடுத்தா தடுத்துக்கோ... என விஜயகாந்த் சொல்லிவிட்டார்.

ஆனால், பல கோடி போட்டு படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி.ஏ. துரை பதறிப்போனார். என் படம் ரிலீஸ் வரை பொறுமையாக இருங்க என விஜயகாந்திடம் கேட்டுக் கொண்டார்.

ஆனால் மசியாத விஜயகாந்த் மேலும் மேலும் பிரச்சினையை பேசிப்பேசி உண்டாக்கினார்.

திமுக உள்ளிட்ட பிற கட்சிகளும் இந்த விஷயத்தில் விஜயகாந்த்தை விமர்சிக்க... நிலைமை விபரீதமானதைத் தொடர்ந்து பாமக தலைவர் ராமதாஸை போய் பார்த்துப் பேசினார் வி.ஏ. துரை!

கஜேந்திரா பட ரிலீசுக்கு எந்தப் பிரச்சினையும் பண்ண மாட்டோம் என ராமதாஸ் உறுதி அளித்தார்.

நான் கேட்ட வரத்தைத் தந்த ராமதாஸ் என் கடவுள் என அறிக்கை விட்டார் துரை.

இது விஜயகாந்த்தை டென்ஷன் பண்ணியது.

சினிமா பட வெளியீட்டு பிரச்சினையை அரசியல்வாதியிடம் கொண்டுபோன துரை மீது நடவடிக்கை எடுங்கள் என தயாரிப்பாளர் சங்கத்திற்கு நெருக்கடி கொடுத்தார் விஜயகாந்த்.

ஆனால்... பணம் போட்டவனுக்குத் தானே வலி தெரியும். படத்தை ரிலிஸ் பண்றதுக்கு துரை எடுத்த முயற்சிக்காக துரையை நாம் தண்டிக்கக்கூடாது என பெரும்பாலான தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, துரை மீது நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.

அதிலிருந்தே தயாரிப்பாளர் சங்கத்தின் மீது ஆத்திரப்படத் தொடங்கினார்.

தனஷ், கோபிகா, அபிதா, சிம்பு என பல நட்சத்திரங்களுக்கும் அவர்களை வைத்து தயாரித்தவர்களுக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் நட்சத்திரங்களை கடுமையாக கண்டித்தது தயாரிப்பாளர் சங்கம்.

இதையெல்லாம் நடிகர்களிடம் பேசி தயாரிப்பாளர் சங்கத்திற்கு எதிராக உசுப்பிவிட்டுக் கொண்டிந்தார் விஜயகாந்த்.

இந்நிலையில் காஜாமொகைதீன் தற்கொலை முயற்சி மேற்கொண்டபோது பேரரசு பிரச்சினையால் விஜயகாந்த்தும் ஒரு காரணம் என தெரிந்து விஜயகாந்த்தை செயற்குழு கூட்டத்தில் கடுமையாக விமர்சனம் செய்தார்கள்.

பிரச்சினைகளுக்கெல்லாம் பிரச்சனையாக அமைந்தது மாதவன் விவகாரம்.

ஒரு பேட்டியில் பிரியசகி பட பிரச்சினையில் மாதவன் தனக்கு பிரச்சினை பண்ணியதாக உயிரை வாங்கும் ஹீரோ... கந்து வட்டிக்காரர்களை விட மோசமானவர்கள் ஹீரோக்கள் என தேனப்பன் பேட்டி கொடுத்திருந்தார்.

இதில் கடுப்பான மாதவன்... தயாரிப்பாளர்கள் நேர்மையில்லாதவர்கள் என சூடான பேட்டி கொடுத்திருந்தார்.

இது தயாரிப்பாளர்கள் பலரையும் உஷ்ண மூட்டினாலும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் மனம் புழுங்கிப் போனார்கள். ஆனால் தயாரிப்பாளர் சங்க பொதுச் செயலாளர் ஏ.எல். அழகப்பன் எமோஷனலாகிவிட்டார். விஜயகாந்த் மீதிருந்த கோபம்தான் காரணம்.

மாதவன் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இனி மாதவன் படங்களுக்கு ஒத்துழைக்க மாட்டோம். மாதவனை இனிமேல் யாரும் புக் பண்ணக் கூடாது என அறிவித்தார்.

ஆடிப்போனார் மாதவன்.

நடிகர் சங்கத்தலைவர் விஜயகாந்த் என்ற முறையில் அவரிடம் ஆலோசனை கேட்டார் மாதவன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு பதிலடி கொடுக்க காத்திருந்த விஜயகாந்த்தோ... மாதவன் விஷயத்தை கையிலெடுத்துக் கொண்டார்.

தயாரிப்பாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி அதை நடிகர் சங்கத்தில் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டார். மாதவனும் தலைவர் உத்தரவுப்படி லெட்டர் எழுதிக் கொடுத்தார். ஆனால் அந்த லெட்டரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொடுக்காமல் வைத்துக் கொண்டார்.

விஷயம் விபரீதமானது.

மரியாதையாக வந்து மன்னிப்பு கேள். இல்லையென்றால், அதற்கான பலனை அனுபவிக்கணும் என மாதவனுக்கு தயாரிப்பாளர் சங்கம் எச்சரிக்கை விட...

இதென்னடா வம்பா போச்சு என மிரண்ட மாதவன்.. விஜயகாந்த்திடம் தான் கொடுத்திருந்த கடிதத்தின் நகலோடு தயாரிப்பாளர் சங்கத்தில் ஆஜராகி மன்னிப்புக் கேட்டார்.

இந்த கடிதத்தை மறைத்ததால் விஜயகாந்த் மீது தயாரிப்பாளர் சங்கம் உஷ்ணமானது.

இந்த உண்மை தெரிந்ததோடு ஒரு நடிகரை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு வரவழைத்து மன்னிப்புக் கேட்டது விஜயகாந்த்திற்கு ஈகோ பிரச்சினையானது.

உடனே நடிகர் சங்கம் சார்பில் ஒரு கடிதம் எழுதினார் விஜயகாந்த்.

சம்பள பாக்கி வைத்திருக்கிற தயாரிப்பாளர்கள் சங்க பதவியில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பதவியிலிருந்து காலி செய்யுங்கள் என காட்டமான கடிதம் ஒன்றை தயாரிப்பாளர் சங்கத்திற்கு அனுப்பினார் விஜயகாந்த்.

எங்க சங்க நிர்வாகிகள் விஷயத்தில் நடிகர் சங்க தலைவர் விஜயகாந்த் எப்படி தலையிடலாம் என கொக்கரித்த தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் அழகப்பனும், முரளியும் மூன்று நாட்களுக்குள் விஜயகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என அறிக்கை விட்டனர்.

அரசியல் கட்சி துவக்க இருக்கும் நேரத்தில் தடைக்கு மூன்று நாள் கெடு கொடுத்த தயாரிப்பாளர் சங்கத்தால் தனது இமேஜ் பாதிக்கப்படுவதாக கொதித்துப் போனார் விஜயகாந்த்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு போனை போட்டு கெட்ட வார்த்தைகளால் திட்டினார் விஜயகாந்த்.

இந்நிலையில் தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி.யின் மகன் கங்காதரன் மரணம் ஏற்பட... மூன்று நாள் அதில் கழிந்தது.

அடுத்த சில நாட்களில்... சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பட விஷயத்தில் தங்கர்பச்சானுக்கும் நாயகி நவ்யா நாயருக்கும் பிரச்சினை. அதோடு பச்சானுக்கும் பெப்சி தொழிலாளிக்கும் பிரச்சினை.

விழா ஒன்றில் எல்லோரையும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கியதோடு நடிகைகளை விபசாரிகள் போல என பேட்டியும் கொடுத்துவிட்டார்.

இதை கையிலெடுத்தார் விஜயகாந்த்.

தயாரிப்பாளர்களை பழி வாங்க வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் ஆக முதன் முதலில் இறங்கிய தங்கர்பச்சானை மன்னிப்பு கேட்க வைக்க ஸ்டிரைக் நாடகமாடினார்.

தங்கரை மன்னிப்பு கேட்க வைக்கிறோம் என்று சொல்லி உத்தரவாதம் தந்த தயாரிப்பாளர் சங்கத்தை நம்ப வைத்து கழுத்தறுக்கும் விதமாக ஸ்டிரைக் அறிவித்தார்.

ஒரு வழியாக ஸ்டிரைக் அறிவித்து தங்கர் மன்னிப்பு கேட்டு ஸ்டிரைக் நாடகம் முடிந்தாலும் கூட...இனிமேல் எங்களை யார் திட்டினாலும் ஸ்டிரைக் தான் என அறிவித்தார் விஜயகாந்த்.

இதனால் மௌனமாக இருந்த தயாரிப்பாளர் சங்க தலைவர் ஜி. தியாகராஜன் கொதித்தெழுந்தார்.

ஸ்டிரைக் அறிவிப்பால் நாங்கள் வேதனைப்பட்டு தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்க வைக்க நீண்ட முயற்சி எடுத்தோம். ஆனால் நீங்கள் ஒப்புக் கொண்ட படி ஸ்டிரைக் வாபஸை அறிவிக்காமல் இழுத்தடித்தது மிகப்பெரிய துரோகம்.

இனிமேல் யார் நடிகர் நடிகையரைப் பற்றி பேசினாலும் வேலை நிறுத்தம்தான் என்று அறிவித்திருக்கிறீர்கள். ஸ்டிரைக்கே நடத்தக் கூடாது என திரையுலக அமைப்புகள் ஒன்று கூடி முடிவெடுத்திருப்பதை மறந்து விட்டீர்களா? என விஜயகாந்தை நம்பிக்கைத் துரோகி என முத்திரைக் குத்தி அறிக்கை விட்டார் தியாகராஜன்.

இந்த நம்பிக்கைத் துரோகி முத்திரையில் அப்செட்டில் இருக்கிறார் விஜயகாந்த்.

சாதாரண விஷயங்களுக்கே தொழில் முடக்கம் செய்ய நினைக்கிற விஜயகாந்த் அரசியல் கட்சி ஆரம்பித்து என்னென்ன பண்ணுவாரோ?
 



நியோ

"இன்னும் ஒருகோடி முறை முகத்திரை கிழித்து உலகுக்கு மற்றவர்களை அடையாளம் காட்டப் போகிற" நீங்கள் முகத்திரையுடன் அலைகிறீர்கள் என்று நினைக்கும்போது சிரிப்பாகவும் பாவமாகவும் இருக்கிறது. Good Joke.

உங்கள் கருத்துகளுக்கு வரிக்கு வரி பதில் எழுதினாலும் உங்களுக்குப் புரியப் போவதில்லை அல்லது அதனால் ஒரு பயனும் இல்லை. அதனால், என்றைக்கு நீங்கள் யாரென்று சொல்லிவிட்டுப் பின் என்னைத் திட்டுகிறீர்களோ, அன்றைக்கு உங்களைப் பொருட்படுத்துகிறேன். அதுவரை உளறிக் கொண்டிருங்கள்.

- பி.கே. சிவகுமார்
 



தயாரிப்பாளர் தங்கர் பச்சான் அவர்களுக்கு,

வணக்கங்க..

உங்களை எப்படி விளிக்கறதுன்னு எனக்கு ஒரே குழப்பம்ங்க. ஒளி ஓவியர்னா, இயக்குனர்னா, நடிகர்னா எப்படி விளிக்கணும்னு ரொம்ப யோசிச்சேன்ங்க. அப்புறம்தான் போனவாரம் முழுக்க சினிமா உலகத்தையே ஒரு கலக்கு கலக்கினீங்களே..அதுக்கு நீங்க தயாரிப்பாளர் ஆனதுதானே காரணம்னு புரிஞ்சு அப்படியே உங்களை இந்தக் கடிதத்துல விளிச்சு இருக்கேன். தப்புங்களா?

எனக்கு ஆரம்பத்துல உங்களை ரொம்பப் புடிச்சிருந்ததுங்க. வணிக மயமான சினிமா உலகத்துல நீங்க ரொம்பத் தமிழ் உணர்வோட இருந்தீங்க. சினிமாங்கற சூதாட்டத்துல நாம தாய்மொழியைப் பறிகொடுத்துடக் கூடாதேங்கற உங்களோட ஆதங்கம் சரின்னுதான் நான் நினைச்சேன்ங்க.

ஆனா நாம நினைக்கறதைச் சொல்றதுக்கு ஒரு வழிமுறை இருக்குது இல்லீங்களா? நீங்க பட்னு போட்டு உடைச்சுடறீங்க. அதுபோக நீங்க மட்டும்தான் புதிய மாற்றங்களுக்காக முயற்சி செய்யற மாதிரியும் உங்க சக படைப்பாளிகளும் முன்னோடிகளும் ஏற்கனவே இருக்கற சினிமா நீரோட்டத்துல கரைஞ்சு போனவங்க மாதிரியும் அடிக்கடி பேசறீங்க. சரி விடுங்க..அது உங்க சுதந்திரம்.. ஆனா உங்க சுதந்திரம் மத்தவங்களோட மூக்கு நுனி வரைக்கும்தான் இல்லீங்களா?

அதுதான் இப்போ பிரச்னை ஆயிடுச்சு.. ஒரு நடிகனும் நடிக்க வரமாட்டேங்கறான், அதனால நானே நடிக்கணும்னு முடிவு பண்ணினேன்னு சொல்லி நடிகர்கள் மேல கல்லெறிஞ்சிருக்கீங்க. ஒரு 'தலை சீவி விடற பொம்பளை' 600 ரூபாய்க்காக படப்பிடிப்பையே நிறுத்தறான்னு சினிமாவுல வேலை பார்க்கற தொழிலாளர்களைப் புழு மாதிரி துச்சமா மிதிச்சிருக்கீங்க.. பணத்துக்காக மட்டுமே நடிக்கற நடிகை விபச்சாரின்னு பெரிய அணுகுண்டையே எடுத்து நடிகைகள் மேல வீசியிருக்கீங்க..

இந்த மூணு விஷயமும் என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினன்னு சொல்றதில எந்தவிதமான மிகையும் இல்லீங்க. ஒருவேளை இப்படி எல்லாம் நீங்க பேசாம பத்திரிகையில தப்பா புரிஞ்சுக்கிட்டு போட்டிருப்பாங்களோன்னு உங்க விழாவுக்கு வந்த நண்பர்கிட்டேயும் உங்க பேட்டியை வெளியிட்ட பத்திரிகை தொடர்பானவங்க கிட்டேயும் விசாரிச்சேன்ங்க. நீங்க பேசினது எல்லாத்துக்குமே டேப் ஆதாரம் இருக்குதாம்..அப்புறம்தான் சரி, நம்ம ஆளு உணர்ச்சி வசப்பட்டு தப்புத் தப்பா பேசிட்டாருன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்ங்க..

ஒரு படத்துல நடிக்கறதும் நடிக்காததும் ஒரு நடிகனோட விருப்பம். அவங்க உழைப்புக்கேத்த கூலியாக அவங்க கேட்கறதை நீங்க கொடுத்தீங்கன்னா அவங்க நடிக்க சம்மதிச்சு உங்க கூட ஒப்பந்தம் போட்டுக்கப் போறாங்க.. சம்பளம், கதை ஒத்துவரலைன்னா என்னை விட்டுடுங்கன்னு சொல்லி விலகியிருப்பாங்க.. அவங்க சில பேரு நடிக்க சம்மதிக்காத படத்துல நீங்க நடிக்கறதும் நடிக்காததும் உங்க விருப்பம். அதுக்காக நாம நடிகர் மேல ஏன் சேறை வாரி வீசணும்?

உங்களுக்கு பல நடிகர்கள் மேல விமர்சனம் இருக்கலாம். உங்க மனக்குறைகள் நியாயமாகக் கூட இருக்கலாம். நீங்க விமர்சனம் பண்ற நடிகர்களோட – நடிகைகளோட எண்ணிக்கை அதிக பட்சம் போனா இருபது இருக்குமா? ஆனா தயாரிப்பாளர் கையில இருக்கற பணம் ஒரு திரைப்படமா உருமாறி வர்றதுக்கு எத்தனை நடிகர்கள், நடிகைகள், தொழிலாளர்கள் தேவைப்படுது. யாரோ சிலரை மனசுல வைச்சுக்கிட்டு நீங்க போற வர்ற ஆளுங்களை எல்லாம் போட்டுத் தாக்கறது சரிதானுங்களா? அதனால, நடிகர்கள் நடிக்க வரமாட்டேங்கறாங்கன்னு பொதுமைப்படுத்திப் பேசறது என்ன நியாயம்னு எனக்குப் புரியலீங்க.

நீங்க வாழற இந்த சமூகத்துல மத்தவங்களும் வாழறதுக்கு இடம் கொடுக்கணும் இல்லீங்களா? இந்த சமூகத்துல தனிமனித வழிபாடு உச்சத்துல இருக்கு..சினிமாவுல மட்டும் இல்லீங்க, எல்லாத் துறைகள்லயும் இருக்கு. சினிமாவுல அதிகமா இருக்கா அரசியல்ல அதிகமா இருக்கான்னு பட்டிமன்றம் வைக்கலாம். ஆனா நீங்க நடிகர்களைப் பத்தி மட்டுமே தான் "வாய்ஸ்" குடுக்கறீங்க. "கூலி நான் கொடுக்கறேன், இவன் வேலைக்கு வரமாட்டேன்ங்கறானே " ங்கற உங்க மனப்பான்மைக்கு என்ன பேருங்கறதை நல்லா யோசிச்சுப் பாருங்க..

அடுத்தது ‘தலை சீவி விடுற பொம்பளை’ விவகாரம். நீங்க பேசியிருக்கற வார்த்தைகள், தொனி இதெல்லாம் விவகாரமானதுதாங்க..எத்தனையோ தயாரிப்பாளர்கள் சினிமாத் தொழில்ல வேலை செய்யற தொழிலாளர்களுக்கு அவங்க செய்த வேலைக்கு கூலி கொடுக்காம இழுத்தடிக்கறாங்க அல்லது ஏமாத்தியிருக்காங்க.. இதையெல்லாம் பார்த்துத்தானே அவங்க ஓர் அமைப்பாகத் திரண்டாங்க. சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கு சம்பள பாக்கின்னா படப்பிடிப்பை மட்டும் இல்ல படம் வெளியிடறதையே நிறுத்தற அளவு பலம் பெற்றாங்க..

ஒடுக்கப்பட்டவங்களுக்கு ஆதரவா குரல் கொடுக்கற நீங்க இந்தத் தொழிலாளர்களுக்கும் ஆதரவாத்தானே குரல் கொடுக்கணும்? ஏன் எதிர்நிலையில் இருந்து பேசறீங்கன்னு புரியலீங்க..உங்களுக்குத் தலை சீவி விடற பொம்பளை கேவலமாகத் தெரியலாம்.. 600 ரூபாய் பிச்சைக் காசாகத் தெரியலாம்..ஆனா அவங்களுக்கு இதை வைச்சுத்தானேங்க வாழ்க்கை? உங்களை மாதிரி தயாரிப்பாளர்கள் கொடுக்கற சம்பளத்தை வைச்சுத்தானேங்க அவங்க வீட்டுல அடுப்பெரியணும்? தமிழர் நலன் பத்திப் பேசற நீங்க மனிதாபிமானம் இல்லாம பேசலாமான்னு எனக்குள்ள கேட்டுக் கேட்டு மாய்ஞ்சு போயிட்டேன்ங்க..

அப்புறம் நீங்க ஒரு பத்திரிகைக்காக கொடுத்த பேட்டியில் காசுக்காக மட்டும் நடிக்கற நடிகைகள் விபச்சாரிகள்னு சொன்னீங்களாம். கூலி இல்லாம நடிகைகள் கலைச் சேவை பண்ணணும்ங்கறீங்களா? எத்தனையோ விஷயம் பேசற உங்களுக்கு “விபச்சாரம்”ங்கற வார்த்தையைப் பயன்படுத்தறதுல எந்தக் கூச்சமும் இல்லையா? ராஜராஜ சோழன் காலத்துலேர்ந்து இன்னிக்கு வரைக்கும் நீங்க சொல்ற ‘விபச்சாரிகள்’ ஒரு சமூகத்துல இருந்து வர்றதுக்கு அந்தப் பெண்கள்தான் காரணமா? யாருடைய எந்தப் பசியைப் போக்கறதுக்கு அவங்க இந்தப் பாடு படறாங்கன்னு யோசிக்க மாட்டீங்களா?

மத்தவங்க இந்த மாதிரி சிக்கல்ல மாட்டிக்கிட்டா பரவாயில்லைங்க.. உங்களை மாதிரி சமூக மாற்றம் பத்திப் பேசறவங்களோட “டங்” ஸ்லிப் ஆயிடுச்சுன்னா எப்படா சிக்குவாருன்னு காத்திட்டு இருக்கறவங்க எல்லாரும் சேர்ந்து ஒரு பிடி பிடிச்சுடுவாங்க. அதோட மட்டும் இல்லீங்க உங்களுக்குப் பின்னால இந்த மாதிரி குரல் கொடுக்க வர்றவங்களையும் இது பாதிக்கும்.

எப்படியோ ஒரு தவறுக்கு மன்னிப்பு கேட்கறதே பெரிய விஷயம்தான். நீங்க கேட்டிருக்கீங்க. அதுவும் யார் முன்னால? தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை மன்னிப்புன்னு ரமணா படத்துல டயலாக் பேசுன கேப்டன் முன்னால மன்னிப்பு கேட்டிருக்கீங்க. இதன் மூலமா சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள பிரச்னை தீர்ந்து போகலாம். ஆனா உங்க கிட்ட இருக்கற பார்வை மாறணும்ங்கறது நான் இது தொடர்பா பேசிப் பார்த்த பலரோட கருத்துங்க..

இதைப் பத்தி நான் எங்க பக்கத்து வீட்டுப் படிச்ச தம்பி கிட்ட கேட்டுப் பார்த்தேன். “தமிழ் அரசியலை மன்னர்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா அல்லது மக்களோட கோணத்துலேர்ந்து உள்வாங்கறாங்களா என்பதைப் பொறுத்தே அவர்களது வார்த்தைகளும் பேச்சும் இருக்கும். அதுவும் உணர்ச்சி வசப்பட்ட நிலைல ஒருத்தர் வாயில் இருந்து என்ன வருதோ அதுதான் அவர் மனசுல இருக்கற கருத்து.. மத்ததெல்லாம் வேஷம்..இதுல ‘குருவி குடைஞ்ச கொய்யாப்பழம்’ யாருக்கு சேவை செய்யுதுன்னு தனி விளக்கம் வேற குடுக்கணுமா”ன்னு கேட்டுச்சு..எனக்கு ஒண்ணுமே புரியலீங்க..உங்களுக்கு ஏதாவது புரியுதுங்களா?

அக்கறையுடன்,
தெருத்தொண்டன்.
 



Century !!!!

thala.. itha konjam paarunga..

http://www.dinamalar.com/2005sep06/imp40.asp
 



தமிழ் வலைப்பூக்களையும் தமிழ் வலைப்பதியும் நெஞ்சங்களையும் முறையே சிதறடித்து, புண்படவைத்துக்கொண்டிருக்கும் NRIகளுக்கு நன்றி. அங்கே இருந்துதான் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்த பங்கையும் அளிக்க முடியவில்லை, இங்கே வந்துமா? விட்டுவிடுங்கள் சார், தமிழ் பிழைத்துப்போகட்டும், தமிழ் வளர்ச்சி காப்பாற்றப்படட்டும்.
 



101 கருத்துக்களை தாண்டி வெற்றிகரமாக!!
 



தங்கர் சொன்னது சரியா தப்பா என்பது வேறு விஷயம்......ஆனால் அந்த பிரச்சினைkku.... tamil nattirku mudalvaragavum indiavirku pm vagaum varum asail irukkum iru talaivarkalum (vijayakanth/sarath) strike seithal entha pirachanikum thirvu kanduvidalam endru mudiveduthathu apthamana oru vidayama.. illaya.. sindhiungal Makkale.(anyone pls translate my comments in tamil)
Mathi
Singapore
 



குஷ்பு பத்தினிக்கு கோயில் கட்டுவோம் ???
குஷ்பு பத்தினிக்கு கோயில் கட்டுவோம் ? தங்கரடிப்பொடியாழ்வார்கள்
 



சரி, உங்க கருத்து ??