<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

"பாடகர்" உன்னி - ஒரு சந்திப்பு


உள்ளடக்கம் ::


உன்னியின் குரல் மற்றும் தோற்றம்

உன்னியை புகழ்தல்
உன்னியுடன் ஒரு கலந்துரையாடல்
இன்ஷ்டந்த் பின்னூட்டங்கள்

குரல் மற்றும் தோற்றம் ::

இரு மாதங்களுக்கு முன்பு லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவினருடன் உன்னிகிருஷ்ணன் அவர்கள் லாஸ் ஏஞ்சலீஸ் வட்டாரம் வந்திருந்தார்கள். அப்பொழுது அவரின் பாடல்களையும் நேயர்களுடன் அவரது கலந்துரையாடலையும் கேட்கும் பாக்கியம் கிடைத்தது (தலைக்கு $25 வேட்டு என்பது வேறு விஷயம்) நான் அவர் பாடுவதை நேரில் கேட்பது இதுவே முதல் முறை.

அவருக்கு வயது கிட்டத்தட்ட 35க்கு மேல் இருக்கலாம். ஆனால் அவர் குரலில் இருந்த இனிமை, தளர்ச்சி இல்லாமை (மதுரை புலி டாக்டர் எஸ். மாரிமுத்து கிட்ட ஏதாவது லேகியம் வாங்கி சாப்பிருறாரா என்று யாரோ கமெண்ட் அடித்தார்கள்) அவர் மைக்கை பிடித்த ஸ்டைல் ஆகியவை என்னை ஆச்சரியப்படுத்தியது... ஏண்டா மைக் பிடிக்கிறதுல எல்லாம் ஸ்டைல் இருக்காடா என்று யாரும் கேட்க கூடாது. நான் ஒரு பட்டிக்காட்டான். இதுவரை மைக்கை பார்த்தது கூட இல்லை. அப்படியிருக்க வயர்லெஸ் மைக் எல்லாம் பாத்தா சொக்க மாட்டேனா...

புகழாரம் ::

உண்மையை சொல்லப்போனால் தமிழ் பாட்டை பருவாயில்லாமல் பாடிய பல பேரின் பாட்டை கேட்டிருந்தாலும் அதை உன்னியின் குரலில் கேட்டது எனக்கு புத்துணர்வை தந்தது என்றால் அது மிகையாகாது (ஏண்டா சொல்ல மாட்ட, வெளில கோக்குக்கு நான் இல்ல காசு கொடுத்தேன்றான் என் ஃப்ரண்டு)

தமிழ் பாடல்களை தமிழில் மிக அருமையாக எல்லாருக்கும் புரியும் படி பாடினார். கிட்டத்தட்ட 5 மணிநேரம் போனதே தெரியவில்லை. நடுவில் என் ஃப்ரண்டுங்க தண்ணியடிக்கணும், வண்டி ஓட்ட ஆள் வேணும்னு கூப்பிட்டாங்கன்னு அவங்கள தண்ணி கடைக்கு கூப்பிட்டு போய்ட்டு வந்தது, கார் பார்க்கிங் ஏரியாவுல தண்ணியடிச்ச அவங்களோட நின்னது, அவங்க தத்துவங்கள கேட்டதுன்னு ஒரு 2 மணிநேரம் காலியானது வேற விஷயம்

கலந்துரையாடல் ::

ஜீன்ஸ் படத்தின் பாடலான "ஹைர ஹைர ஹைரப்பா" பாடலை உன்னி வித்தியாசமாக செய்தார். அவர் ஹைர ஹைர என்றவுடன் ஆடியன்ஸ் ஹைரப்பா என்று சொல்ல வேண்டும். இது ரொம்ப நேரம் நடந்தது.. இதை ஒரு கட்டுரை ஆசிரியர் பாஷையில் சொல்வதானால் கலந்துரையாடல் என்று சொல்லலாம்.

வெளியே பக்கத்து காரில் தண்ணியடித்துக்கொண்டிருந்த சிலரிடம் தண்ணியடித்திருந்த என் நண்பன் ஒருவன் சென்று புலம் பெயர்ந்தவர்களை பற்றி கேட்டான். அவர் ஒரு சிகரெட் இனாம் வாங்கிக்கொண்டு, புல்ம் பெயர்ந்த தமிழர்களை ஆஹா ஒஹோவென புகழ்ந்தார். புலம் பெயர் தமிழர்கள்தான் உண்மையான தமிழர்கள் என்றும் தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களே இல்லை, அவர்கள் எல்லாம் தமிழ் என்று நம்பிக்கொண்டு இருப்பது உண்மையில் மலையாளம் என்றும் சொன்னார்.

பின்பு என் நண்பன், நான் புலம் பெயர்ந்தவர்கள் என்று பொதுவாகத்தானே கேட்டேன், நீங்க ஏன் தமிழர்களை பத்தி சொல்றீங்க. நான் ஒரு புலம் பெயர்ந்த தெலுங்கன்னு சொன்னவுடன், அவர் புலம் பெயர் தெலுங்கந்தான் உண்மையான தமிழன், மத்தவனெல்லாம் கன்னடன்னு என்னமோ சொன்னார். அதுக்கு மேல நின்னா எனக்கே சரக்கடிச்ச எபக்டு வந்திடும் போல இருந்ததால நைசா அரங்கத்துக்குள்ள அப்பீட்டு ஆயிட்டேன்

கன்க்ளூசன் ::

35 வயசிலும் அழகாக இருப்பது, தமிழ் பாடல்களை தெளிவாக பாடுவது, உலக நாடுகளில் எங்கெல்லாம் தமிழன் வாழ்கிறானோ அங்கெல்லாம் தமிழ் பாடல்கள் பாடுவது, மத்த இடத்தில் ஹிந்தி பாடல்கள் பாடுவது என்று சுறுசுறுப்பாக இருக்கிறார் உன்னி. இனிய நைட் பொழுது சூப்பரா இருந்தது..

இன்ஷ்டந்த் பின்னூட்டங்கள ::

# உன்னி ட்ரூப்புக்கு காரோட்டியவருக்கு தமிழுணர்வு நன்றாக இருந்ததா... விழாவின் சாராம்சம் புரிந்து வண்டி ஓட்டினாரா.

# இப்படித்தான் பாருங்க போன வருசம் ஜார்ஜ் புஷ்ஷோட பேசிகிட்டு இருந்தப்போ, அடுத்த வருசமும் பேசணும்னு கேட்டுக்கிட்டாரு

# கானா பாடிய குயிலை கண்ட நெருப்புக்கோழி

# மதிப்பிற்குரிய ஆருயிர் அண்ணன், கலங்கரை விளக்கம், முத்தமிழ் நாடு பெற்றெடுத்த முத்து, வாழ்நாள் முழுதும் தூய தமிழிற்காக தன் இன்னுயிரை ஈயத் துடிக்கும் பைந்தமிழ் பகலவன் டாக்டர் உன்னியார் அவர்களை எல்லேக்கு வருக வருக என்று வரவேற்கிறோம்.- அ.இ.ஜெ.பூ. எல்லே கிளை

அறிவுப்பசி அண்ணாசாமி :: எதுக்கு இந்த பதிவின் தலைப்பு சந்திப்புன்னு இருக்கு... கூட்டத்தோட கூட்டமா கோவிந்தா போட்டத எல்லாம் சந்திப்புன்னு சொல்ல முடியுமா.. ஒருத்தர நேருக்கு நேர் சந்திச்சு பேசுனாதானே அத சந்திப்புன்னு தமிழ் கூறும் நல்லுலகம் நெனச்சிகிட்டு இருக்கு


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//கானா பாடிய குயிலை கண்ட
//நெருப்புக்கோழி

இதுக்கும் கோப்பிரைட் படி வழக்கு போடலாம் போல இருக்கே?

ஜெத்மலானி போன் நம்பர் என்னப்பா?

( ராம் ஜெத்மலானி, காம்னா ஜெத்மலானி இல்லை )
 



இந்த பதிவே முகமூடி கார்லெல்லாம் தண்ணிபோட மாட்டார்னு எல்லாருக்கும் புரிய வெக்கதான்னு கரெக்கடா கண்டுபுடிச்சிட்டேன். ஆமா நீங்க ஏன் தண்ணிபோடலை?
 



கார்ல தண்ணி எல்லாம்
போட்டா, எல்லே போலிஸ் போட்டு தாக்கிடுவாங்களே அதுக்கு தான்
 



//கூட்டத்தோட கூட்டமா கோவிந்தா போட்டத எல்லாம் சந்திப்புன்னு சொல்ல முடியுமா.. ஒருத்தர நேருக்கு நேர் சந்திச்சு பேசுனாதானே அத சந்திப்புன்னு தமிழ் கூறும் நல்லுலகம் நெனச்சிகிட்டு இருக்கு//

naanum idhaiyee ninaiththeen ..ninaithathu ingkaLLa ..
 



// எதுக்கு இந்த பதிவின் தலைப்பு சந்திப்புன்னு இருக்கு... கூட்டத்தோட கூட்டமா கோவிந்தா போட்டத எல்லாம் சந்திப்புன்னு சொல்ல முடியுமா.. ஒருத்தர நேருக்கு நேர் சந்திச்சு பேசுனாதானே அத சந்திப்புன்னு தமிழ் கூறும் நல்லுலகம் நெனச்சிகிட்டு இருக்கு //


இது கேள்வி http://manikoondu.blogspot.com/2005/08/blog-post.html பார்த்து கேட்ட கேள்வி மாதிரியில்ல இருக்கு
 



// புலம் பெயர் தமிழர்கள்தான் உண்மையான தமிழர்கள் என்றும் தமிழ்நாட்டு தமிழர்கள் தமிழர்களே இல்லை, அவர்கள் எல்லாம் தமிழ் என்று நம்பிக்கொண்டு இருப்பது உண்மையில் மலையாளம் என்றும் சொன்னார். //

// அவர் புலம் பெயர் தெலுங்கந்தான் உண்மையான தமிழன், மத்தவனெல்லாம் கன்னடன்னு என்னமோ சொன்னார். //

;-))
 



ஆஹா கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா... யப்பா காக்கா உக்கார பனம்பழம் விழுந்த கதையா, நான் ரொம்ப நாளா எழுதணும்னு நினைச்சது தள்ளி போடப்பட்டு இன்னிக்கிதான் எழுத முடிஞ்சது... அதுல கலகமா.. என்னமோ போங்க...
 



செக்கூலரிஸ்ட் முகமூடி Vaazka.
Poothu mangkanna!!!
 



முக்கியமான மேட்டர விட்டுட்டீங்களே. முக்கியமா 'பாடறதுக்கு' முன்னாடி ஒரு மூணு மணி நேரம் என்னோட தனியா பேசுற பாக்கியம் உன்னிக்கு கெடச்சது. நீங்க ஏன் தமிழ் பாட்டு அதிகமா பாடலைன்னு நான் கேட்டேன். தமிழ் பாட்டிலே அவ்வளவா துட்டு தேராது அப்படீன்னு என்கிட்ட சொன்னாரு. அடச்சே, அவரோட இன்னொரு முகத்தை அப்போதான் பார்த்தேன். தமிழ் தமிழ்ன்னு பேசி தமிழுக்காகவே உழைக்கிறதா வெளி வேஷம் கட்டினது நெனச்சு வருத்தப்பட்டேன்.
 



அனானி, உண்மைய உரக்க சொன்னதுக்கு நன்றி ;-) {ஆனாலும் வேற பதிவுல போட வேண்டியத இங்க போட்டீங்களோன்னு ஒரு சந்தேகம்}

க்ளாக் டவர், விட்டுப்போச்சி ;-) { அது என்ன "மனசுல" புகுந்து பாத்த மாதிரி இப்படி போட்டு தாக்கறீங்க...}
 



"என் ஃப்ரண்டுங்க தண்ணியடிக்கணும், வண்டி ஓட்ட ஆள் வேணும்னு கூப்பிட்டாங்கன்னு"

இப்படி நீங்க எழுதுவீங்க; நாங்க நம்பணும்; இல்ல?

நடத்துங்க..நடத்துங்க..
 



தருமி... பேருக்கு ஏத்தாப்புல இல்லாம, நக்கீரரா மாற முயற்சி பண்ணீங்க, அப்புறம் நெற்றிக்கண்ண தொறந்திடுவேன் ஆமா...
 



இந்த கலந்துரையாடலில் நானும் பங்குபெற்று, உன்னியை பற்றி மேலும் தெரிந்து கொண்டேன்.
( $25 வீணாகவே இல்லை ! )
 



சரி, உங்க கருத்து ??