<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

திகம்பர சாமியார்- நாட்டை ஏன் நேசிக்க வேண்டும்


"நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்" என்ற ஒரு கேள்வி ஒரு ராணுவ வீரரை திகம்பர சாமியாராக மாற்றியது என்றால் நம்ப முடிகிறதா... நமது 'தினமூடி' நிருபர் மிகவும் கஷ்டப்பட்டு காடு மலைகள் எல்லாம் திரிந்து ஸ்ரீலஸ்ரீ. திகம்பர சாமிகள் அவர்களை பேட்டி கண்டார்... அந்த எக்ஸ்க்ளூஸிவ் பேட்டி இங்கே...

நிருபர் :: சாமி... நீங்க திகம்பர சாமியான கதைய எங்க வாசகர்களுக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா...

தி.சாமி :: அது ஒரு பெரிய கதைப்பா

நிருபர் :: சுருக்கமா சொல்லுங்க சாமி. உங்களுக்கு நாலு பக்கம்தான் அலாட்டட்

தி.சாமி :: சரிப்பா... அதாவது நான் ராணுவத்துல இருந்தேன் அப்போ.. பாகிஸ்தான் எல்லையில போஸ்டிங்... ஒரு நாள் ஜார்ஜ் மோன்பியாட்னு ஒரு அறிஞர் " நான் ஏன் என் நாட்டை நேசிக்க வேண்டும்? " அப்படீன்னு ஒரு அருமையான கேள்விய
கேட்டுட்டாரு ன்னு ஊரே பரபரன்னு ஆயிடுச்சி.. என் ஞானக்கண்ண திறந்த கேள்வி அது... அப்பத்தான் இந்திய-பாகிஸ்தான் சண்டை வந்திச்சி...


முதல்ல பஞ்சாபி ரெஜிமெண்ட்தான் போறதா இருந்திச்சி.... ஆனா பஞ்சாபி கேப்டன் முடியாதுன்னு சொல்லிட்டாரு.. பாகிஸ்தான்ல இருக்கிற பாதி பேரு இங்க இருந்து போனவங்க.. அதுவுமில்லாம லாகூர்ல முக்காவாசி பேரு பஞ்சாபியும் சிந்தியும் பேசற நம்ம சகோதரர்கள்... பாகிஸ்தானுக்கும் நமக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கு.அதனால நாங்க சண்டைக்கு போக மாட்டோம்னு சொல்லிட்டாங்க..

அப்புறம் எங்க ரெஜிமெண்ட்ட போக சொல்லி உத்தரவாச்சி... நான் "நாட்ட ஏன்" யோசனையில இருந்தே இன்னும் மீளல... எனக்கு இந்தியாவ புடிக்கும், பாகிஸ்தானும் புடிக்கும்... தனிப்பட்ட முறையில பாகிஸ்தான்காரன் கூட எனக்கு ஒரு விரோதமும் இல்ல... சம்பாரிக்க வக்கில்லாமத்தான் இந்த பொழப்ப செய்றோம்னும் சொல்ல முடியாது... ஊர்ல அய்யன் தோட்டத்துல மாடு மேக்கிறவன் கூட என்ன விட அதிகமா சம்பாரிக்கிறான்... அப்ப இந்த பொழப்புக்கு நாட்ட நேசிக்கிறதுதானே காரணம், அது இப்படி மனுசன கொல்ற அளவுக்கு ஆகிடுச்சேன்னு தோணிச்சி. போக முடியாதுன்னு சொல்லிட்டேன்...

மேலதிகாரி கூப்பிட்டு என்னத்தான் நினைச்சிகிட்டு இருக்கேன்னாரு. பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேசம் கூட எல்லாம் சண்டைக்கு போக முடியாது... சிலி, பெரு, சோமாலியா இந்த மாதிரி நாடுன்னா சொல்லுங்கன்னேன். அந்த மாதிரி சூழ்நிலை வந்தா சொல்லி அனுப்பறோம்னு பொட்டிய கட்டி வூட்டுக்கு அனுப்பிட்டாங்க...

எங்க கிராமத்துக்கு வந்தப்புறம் நீங்க ஏன் என் நாட்டை நேசிக்கணும்னு ஊர் மக்கள எல்லாம் சிந்திக்க வச்சேன்... உடனே நம்ம சினிமா ஷ்டாருங்க அர்ஜுனும் விஜயகாந்தும் என்ன ஆளனுப்பி கூப்பிட்டாங்க... "தம்பி, உன்னால எங்க படத்த பாக்க யாரும் வர மாட்டேங்குறாங்க... எல்லாரும் நாம ஏன் நாட்ட நேசிக்கணும்னு நினைச்சா, நாங்க இந்த வயசுக்கு மேல தீவிரவாதிங்க இல்லாத கதைக்கு எங்கப்பா போவோம். அதனால இனி கொஞ்சம் மாத்தி சிந்தி" ன்னாங்க...

நான் உடனே, இப்ப என் கேள்வியே வேற... "நான் ஏன் மனுச மக்கள நேசிக்கணும்"னு என்ன நானே கேட்டுகிட்டு இருக்கேன்னேன். அதுக்கு அவங்க, தமிழ்நாட்டுல மகான் ஒருத்தரு இருக்காரு... எல்லாம் துறந்தவரு... உன் நல்ல நேரம் நம்ம த/நா மகான் இன்னொரு பெரிய மகான பாக்குறதுக்காக இமயமலைக்கு கெளம்பிகிட்டு இருக்காரு... அவரு கூட போறதுக்கு ஒரு போட்டோகிராபரு வேணுமாம்.. அந்த கெட்டப்புல நீயும் ஜாயின்ட் அடிச்சிக்கன்னு சொல்லி காவி வேட்டி, ஹவாய் செருப்பு எல்லாம் கொடுத்து கெளப்பி விட்டாங்க...

நானும் அவரு கூடவே போனேன். இமயமலை அடிவாரத்துல போட்டோ செஷனுக்காக த/நா மகான் ஒரு கூடாரம் போட்டாரு.. 4 நாள் ஆச்சி, போட்டோக்கு லைட்டிங் சரியா இல்லன்னு அங்கியே இருக்காங்க... இது நமக்கு சரிப்பட்டு வராதுன்னு நான் நைசா எஸ்கேப் ஆகி பக்கத்துல இருந்த குகைக்குள்ள போனேன்... உள்ள ஒருத்தர் கல்லோட கல்லா இருந்தாரு...

அவரு பேரு காகா சாமியாராம். என் கண்ண பாத்தாரு பாருங்க ஒரு பார்வை... அந்த இருட்டுலயும் சிலித்து நடுங்கிடுச்சி... அத பாத்துட்டு காகா சொன்னாரு, நீ நடுங்குறதுக்கு குளிர்தான் காரணம் , அடுத்த வாட்டி வரும்போது ஜாக்கெட் போட்டுகிட்டு வான்னு.. அவரோட அன்ப பாத்து புல்லரிச்சி அவரோட சிஷ்யனா சேந்துக்கணும்னு ஆசப்பட்டேன்... காகாவும் ஒத்துக்கிட்டாரு... ஆனா ஒரு கண்டிசன் போட்டாரு... அதாவது, அவருக்கு 13543 வயசாகுதாம்... எந்த தாசில்தார் ஆபிஸ்லயும் அவருக்கு பர்த் சர்டிபிகேட் கெடக்க மாட்டேங்குதாம். அத வாங்கி கொடுத்தா அவருக்கு சிஷயனா ஆகலாம்னாரு... திரும்பி நடக்கிற வழியில "நான் ஏன் என் உடைகள நேசிக்கணும்"னு எனக்கு ஒரு கேள்வி வந்திச்சி... உடனே திகம்பர சாமியாகி இங்கயே செட்டில் ஆகிட்டேன்...

நிருபர் :: முதன் முதல்ல திகம்பரமா ஆகறப்போ உங்க மனநிலை எப்படி இருந்திச்சி சாமி...

தி.சாமி :: ஏண்டா... இதுக்கு முந்தி நீ சினிமா ரிபோர்ட்டரா இருந்தியா...

நிருபர் :: (ஆச்சரியமாக) எப்படி சாமி கரெக்டா கண்டுபிடிச்சீங்க... ஞான திருஷ்டியா...

தி.சாமி :: மண்ணாங்கட்டி... அவனுங்கதானடா நடிகை கிட்ட போயி "முதன் முதல்ல கேமரா முன்னாடி நின்னப்ப எப்படி ஃபீல் பண்ணீங்க"ன்னு கேனத்தனமா கேப்பாங்க... காலம் காலமா இதையே கேக்கிறீங்களே, அவ என்ன நினைச்சா இப்ப நாட்டுக்கு என்னடா.. அதுவுமில்லாம நடிகைங்க ஃபீலிங்க எல்லாம் கேட்டு ஃபீலாவுற நெலமக்கி ஆகிட்டீங்களேடா... எக்கேடோ கெட்டு போங்க, வாட் நெக்ஸ்ட்..

நிருபர் :: கடைசியா ஒரு கேள்வி சாமி... உங்க எதிர்கால ப்ளான் என்ன...

தி.சாமி :: "நான் ஏன் என்னையே நேசிக்கணும்"னு எனக்கு தோனறுதுக்கு முந்தி அந்த ஆண்டவன் என்ன கூப்பிட்டுக்கணும்... அதான் என் ப்ளான். இப்ப எடத்த காலி பண்ணு...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


மீண்டு வந்ததுக்கு நன்றி !
 



கட்டாய சுன்னத் தொந்தரவெல்லாம் இல்லாம திகம்பர சாமியார்கள் இந்தியாவில் அலைய வேண்டுமென்றாலோ, இணைய வசதி, எலக்டிரிசிடி, ரோடு, பஸ், கார், காருக்கு பெட்ரோல் நிம்மதியா போட்டுட்டு, கோணல் பக்கங்களை பல்லை நோண்டிக்கிட்டே விமர்சனம் பண்ணிக்கிட்டு, பீரில் தயிர்வடையை தோய்த்து தோய்த்து தின்ன வேண்டுமென்றாலோ, இந்த நாட்டு மக்கள் மீது அன்பு கொண்ட சிலர் எல்லைக்காவலில் நின்றுதானே ஆகவேண்டும் சாமி?

ஆனா ஒன்னு, இப்படி ஏன் நாட்டை நேசிக்கணும், நாட்டு மக்களை நேசிக்கணுங்கறவங்க இப்படியே போய் ஏன் தன்னைத்தானே நேசிக்கணும்னு கேட்டுக்கிட்டு, நாக்க புடுங்கிகிட்டு செத்தா நாட்டில கொஞ்சம் லொல்லு கொறையும்...

- பிளாகர் வைத்துக்கொள்ள நேரமில்லாத (பல்லைக்குத்திகொண்டே பீர் தயிர்வடை ஆராச்சி செய்ய நேரமில்) அனானி
 



// மீண்டு வந்ததுக்கு நன்றி ! // நன்றி ஆனந்த்... மீண்டும் செல்லும் எண்ணமும் (தற்காலிகமாக) இல்லை ;-))
 



>>> அப்புறம் எங்க ரெஜிமெண்ட்ட போக சொல்லி உத்தரவாச்சி... நான் "நாட்ட ஏன்" யோசனையில இருந்தே இன்னும் மீளல... எனக்கு இந்தியாவ புடிக்கும், பாகிஸ்தானும் புடிக்கும்... தனிப்பட்ட முறையில பாகிஸ்தான்காரன் கூட எனக்கு ஒரு விரோதமும் இல்ல...

>>> என் ஞானக்கண்ண திறந்த கேள்வி அது... அப்பத்தான் இந்திய-பாகிஸ்தான் சண்டை வந்திச்சி...

அப்பறம் ஏஞ்சாமி ரெண்டு நாட்டுக்கும் சண்ட வந்தது?
ஓஹோ கிறுக்கு பயலுக மட்டுந்தே இப்படி நெனைக்கிறாங்களோ என்னவோ?
 



திருத்தப்பட்டது....

அப்பறம் ஏஞ்சாமி ரெண்டு நாட்டுக்கும் சண்ட வந்தது?, ஓஹோ நம்ம கிறுக்கு பயலுக மட்டுந்தே இப்படி நெனைக்கிறாங்களோ என்னவோ?
 



அனானி... இப்ப விளக்கம் கொடுக்கறது டூ லேட்னு நினைக்கிறேன்... சீக்கிரம் பாக்காதது தப்புதான் தப்புதான் தப்புதான் :-))
 



சரி, உங்க கருத்து ??