<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சிறுகதைப் போட்டி


விதிமுறைகள்

1. கதை 2000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்


2. கதை தமிழில் எழுதப்பட்டிருக்க வேண்டும். போட்டிக்கு அனுப்பப்படும் படைப்பு இதற்கு முன் எந்த வகையிலும் (வலைப்பதிவு உட்பட) பிரசுரிக்கப்பட்டிருக்கக்கூடாது. கதையின் காப்புரிமை எழுதிய ஆசிரியருக்கு சொந்தமானது

3. இயன்ற வரை ஆங்கில வார்த்தைகள் தவிர்த்தல் நலம்.. எனினும் கதை நடைக்கு பங்கம் வராமல் வழக்கில் உள்ள ஆங்கில வார்த்தைகள் (பஸ், காபி போன்றவை) உபயோகிக்கலாம்

4. கதையை தமது வலைப்பதிவில் பிரசுரித்து அது குறித்த இணைப்பு இந்த பதிவின் பின்னூட்டமாக
ஆகஸ்டு 21ம் தேதி நள்ளிரவு 12 மணி PDT க்குள் (இந்திய நேரம் ஆகஸ்டு 22 , 1230 hrs)அளிக்கப்பட வேண்டும்

5. கதை அமையும் பதிவின் தலைப்பு "சிறுகதை - கதை தலைப்பு" என்ற முறையில் இருக்க வேண்டும். உதாரணம், கதை தலைப்பு "அம்மா" எனில் பதிவின் தலைப்பு "சிறுகதை - அம்மா" என்று இருக்க வேண்டும்

6. இணைப்பு கொடுக்கும் அதே நேரத்தில் அதன் ஒரு நகலை பிரபலமான ஏதாவது ஒரு தமிழ் எழுத்துருவில் (யூனிகோடு எனில் மிகவும் நலம்) mugamoodi@hotmail.com எனும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இதன் பின்னர் கதையில் எந்த மாற்றமும் செய்யலாகாது.

பரிசு :: முகமூடி இலக்கிய விருது மற்றும் தாமிர பட்டயம்... சரி சரி அடிக்க வராதீங்க...


முதல் பரிசு :: US $75 gift card


இரண்டாவது பரிசு :: US $25 gift card, இருவருக்கு

********

பத்திரிக்கையாளர்/ எழுத்தாளர்/ இலக்கியவாதி திரு. மாலன் பரிசு பெறும் படைப்புகளை தெரிவு செய்து தர அன்புடன் இசைந்துள்ளார்.

********

இதுவரை வந்த கதைகளின் பட்டியல் :

01.
முத்துசாமி சாரில் இருந்து புதுக் கிராப்பு வரை

02.
கானல்நீர்

03.
என் பெயர் சித்ரா

04.
கல்லூரி மாமா

05.
நேர்மை எனப்படுவது யாதெனில்

06.
பனி விழும் மலர்வனம்...

07.
இடையை கையில் பிடித்து..

08.
ஒரே கேள்வி

09.
உணர்வுகள்

10.
என்ன செய்யப் போகிறாள்

11. குலதெய்வம்

12. தனக்கு வந்தால்தான்..

13. பணமிருந்தால் மார்க்கமுண்டா!

14.
பார்வைகள் பலவிதம

15.
முகமூடி

16.
விட்டு விடுதலையாகி

17.
முன்னர் செய்த வினை

18.
இரு சம்பவங்கள்

19.
நூர்பாய்

20.
சின்ன வட்டம்

21. அழுகுரல் கேட்கிறதா...

22.
யார் குற்றம்

23.
வேட்டையாடு! விளையாடு!!!

24.
மாயவரத்தான்

25.
யாதார்த்தம்

26.
இளமையில் கல்

27. ஒரு தலைவனின் உதயம்

28.
ஸ்வேதா!

29.
பரிணாம வளர்ச்சி ...!!?

30.
அப்பா?!

பரிசுக்கு இல்லாமல், பார்வைக்கு மட்டும்

**.
மெட்டி ஒலி காற்றோடு...

**. எது முகமூடி

**.
சபலம்

**.
தப்புக் கணக்கு

********

வெங்கிட்டுவின்
கவிதைப் போட்டி கண்டு நான் அடைந்த உற்சாகமே இந்த சிறுகதைப் போட்டி... அவருக்கு நன்றி. அவரது நம்பிக்கை கவிதைப்போட்டியில் வென்ற சுரேஷ் , ராஜ்குமார் , கப்ஸ் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


என் இரண்டு சிறுகதைகள் இந்த போட்டிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

சுட்டி கீழே

மனைவியின் காதலன்

நெடுஞ்சாலையில் ஒரு நாய்க்குட்டி


இது வரை நான் மட்டுமே அனுப்பியதாலும் இனி யாரும் அனுப்பமாட்டார்கள் என்பதாலும் முதல் மற்றும் இரண்டாம் பரிசை உடனடியாக எனக்கு அனுப்பிவைக்குமாறு வேண்டுகின்றேன்.

நன்றி
 



ungal muyarchi vetri pera vaazhthukkal
 



http://www.blogger.com/comment.g?blogID=12213354&postID=112339535038403143

என் முதல் சிறுகதையை இந்தப் போட்டிக்கு அர்ப்பணிக்கிறேன்.

அண்ணன் முகமூடி தனது திருவாயால் "இலக்கிய அணித் தலைவர்" என ஏற்கனவே பட்டம் சூட்டிவிட்டமையால், இது பரிசு பெறுவது திண்ணம்!

அவரது மற்ற விதிமுறைகளும் கடைபிடிக்கப் பட்டுள்ளன.

ஆங்கிலக் கலப்பு கிடையாது, வேறெந்தப் பத்திரிக்கையிலும் வெளிவரவில்லை (வெளியிடும் படியாகவும் இல்லை என்பது வேறு விஷயம்), 2000 வார்த்தைகளுக்கும் மிகவில்லை.
 



குழலி... உங்கள் படைப்பு ஏற்கனவே பிரசுரிக்கப்பட்டிருக்கிறது (உங்கள் வலைப்பதிவிலேயே)... இப்போட்டிக்கான படைப்பு புதியதாக படைக்கப்பட வேண்டும் (இத்தகவல் #2ல் சொன்னதாக நினைத்தேன். ஆனால் சரிவர சொல்லவில்லை போல.. இப்போது மாற்றி விட்டேன்) ஆக களத்தில் இறங்குங்கள்...

நீங்க சொன்ன மாதிரி இது வரைக்கும் ஒரு படைப்பையுமே காணோமே.. எல்லாம் என்ன பண்றாங்க...
 



நன்றி கப்ஸ்..

சுரேஷ். உங்கள் படைப்பு பிரமாதம்.. ஆனால் இதற்கு கிடைக்கும் சன்மானம் கட்சி வளர்ச்சி நிதிக்குத்தான் நீங்கள் தருவீர்கள் என்பதால் ஏற்கனவே நான் அதை வளர்ச்சி நிதிக்கு அனுப்பி விட்டேன்
 



ம்ஹூம்.. என்னைக் கணக்கு கேட்கும் நிலைக்குத் தள்ளாமல் ஓய மாட்டீங்க போல!
 



Good job Mugamoodi
U need to wait to get Sirugathai entries from people. Then it will be gr8 If you can announce what are the judging procedures, when will be result announced etc..etc in future updates!
I am sure people will participate with enthusiasm.

Regs,Arun
 



சுரேஷ்... ராஜினாமா கடிதம் ஞாபகம் இருக்குல்ல...

அருண்.. உங்கள் கருத்தும் சரியே.. இப்பொழுது பதிவை திருத்தியிருக்கிறேன். முடிவு தேதி தாண்டியதும் என் கருத்துக்களை வெளியிடலாம் என்று. சிறுகதைக்கு கற்பனை குதிரை நன்கு ஓட வேண்டும் என்பதாலேயே இரு வார காலம்.
 



when will you announce the results?
 



// when will you announce the results? //

அனானி... முடிவுகள் கண்டிப்பாக ஒரு நியாயமான காலத்திற்குள் அறிவிக்கப்படும்... இது பற்றிய விபரம் முடிவு தேதிக்கு அப்புறம் பாருங்கள்
 



சிறுகதைப் போட்டிக்கு எனது பங்களிப்பு.
முத்துசாமி சாரில் இருந்து புதுக் கிராப்பு வரை

நன்றி,
சுதர்சன்.கோபால்
 



mugamoodi thalaiva
unga #2 rule sariya illaye..
naangal ezhuthiya kadhaiya engal blog potiruppom..adhai anupa thadai irukka koodadhu...!

veroruvar blog la ezhuthina kadhaya thaan naanga eduthu anuppa koodadhu...

Thalai Ruuuuleeesss a maathu
(konjam naalaikku thamizh la ezhumudiyaadhupaa..enna panradhu... aana kalandhukkanum..naan erkanave ezhudina kadhai anupalamnu paarthen)
V M
 



http://ramyanags.blogspot.com/2005/08/blog-post_08.html

என்னால் இரண்டு வாரத்துலேல்லாம் சிறுகதை எழுத முடியாது. இரண்டு மாசமாவது வேணும். அதான் சும்மா ஒரு ஆறுதலுக்கு முன்னாடியே பிரசுரமான, எனக்கு பிடிச்ச ஒரு கதையை போட்டுட்டேன்.

'சபாஷ், சரியான போட்டி' ன்னு சொல்லும்படியா போட்டி தொடங்கிடுச்சு. உண்மையிலேயே பரிசு கொடுப்பீங்க தானே முகமூடி??
:-) நீங்க கொஞ்சம் 'லொள்ளு' பார்ட்டி ஆச்சே அதான் கேட்டேன்!
 



//நீங்க கொஞ்சம் 'லொள்ளு' பார்ட்டி ஆச்சே அதான் கேட்டேன்!
//
ரம்யா அக்கா, நானும் நக்கலாகத் தான் என் இரு சிறுகதைகளை சமர்ப்பித்தேன், இந்த முகமூடி லொள்ளு பிடித்த ஆளாச்சே என்று ஆனால் போட்டி உண்மையிலேயே போகும் போல இருக்கு, முகமூடி வசமா மாட்டிக்கிட்ட, புலி வருது புலி வருது என்று சொன்னது கடைசியில் புலி வந்துவிட்டதுங்கோ, நானும் ஒரு கதை எழுதி கொண்டிருக்கின்றேன், நாளை போட்டுவிடுகின்றேன்.

நன்றி
 



சுதர்சன்... முதல் கதை உங்களதுதான்... பரிசு பெற வாழ்த்துக்கள்.

வீ.எம்... தொண்டருங்க சொல்றப்பெல்லாம் ரூல்ஸ் மாத்த நாம என்னா கம்யூனிஸ்டு கட்சியா நடத்தறோம்... நம்மது ப.ம.க.ப்பா தலைவர் ரூல்ஸ் போட்டா போட்டதுதான்... (தமிழ்ல எழுத அப்படி என்னப்பா ப்ரச்னை... கலப்பை கெடக்கலையா)

என்னங்க ரம்யா... சிறுகதைப் போட்டியில பரிசு எல்லாம் வாங்கின நீங்களே இப்படி சொல்லலாமா... கற்பனை குதிரைய தட்டி விடுங்க...

// உண்மையிலேயே பரிசு கொடுப்பீங்க தானே // என் அன்பை விட உலகில் உயர்ந்த பரிசும் உண்டோ... ஹிஹி...

// நீங்க கொஞ்சம் 'லொள்ளு' பார்ட்டி ஆச்சே அதான் கேட்டேன் // நல்ல பேரு வாங்கி வச்சிருக்கேடா முகமூடி

// நானும் நக்கலாகத் தான் என் இரு சிறுகதைகளை சமர்ப்பித்தேன் // ஒரு மனுசன் ஒரு நாள், ஒரே ஒரு நாள் திருந்தி வாழ நினைச்சா விட மாட்டீங்களே... தூங்கிகிட்டு இருக்கிற சிங்கத்த தட்டி எழுப்பி விட்றாதீங்க (வேற எடத்துல போயி தூங்கணும்னா சோம்பேறிதனமா இருக்குப்பா...) வாங்க குழலி, பட்டைய கெளப்புங்க..
 



முகமூடி அவர்களே, நீங்கள் கூறியுள்ளது ஒரே குழப்பமாக இருக்கிறது. வலைப்பதிவில் வெளியிடப்பட்டிருக்கக் கூடாது என்று 2-ஆம் வரியில் சொல்லிவிட்டு, பின்னர் வலைப்பதிவின் URL கேட்டு உள்ளீர்கள்.
தயவு செய்து தெளிவு படுத்தவும்.

-Vinodh
http://visai.blogspot.com
 



வினோத்... இதற்கு முன் உங்கள் படைப்பு வெளிவந்திருக்கக்கூடாது... சிலர் இதற்கு முன் கதைகள் எழுதி தங்கள் வலைப்பதிவில் வெளியிட்டிருக்கலாம், அப்படைப்புகள் அல்லாமல் இப்போட்டிக்காக கதைகள் புதியதாக படைக்கப்பட வேண்டும்... புதிய படைப்புகளை "இப்பொழுது" தங்கள் வலைப்பதிவில் வெளியிட்டு அதன் இணைப்பை கொடுக்க வேண்டும்...
 



Can We submit more than one story?
 



Can We submit more than one story?

Yes... but 999 is the limit ;-)
 



Oh ..Ohh...I thought of submitting 1000 ..hee..hee :)
 



// I thought of submitting 1000 //

If you're talking about the # of words, then you can go upto 2000

;-))
 



என்னமோ முகமூடிக்கு இலக்கிய ஆர்வம்பிச்சிக்கிச்சி. நாரதர் கலகம் நண்மைல முடியும்னு, நீ கஸ்மாலம், நீ --தாங்கி ன்னு ஜல்லியடிக்கற கலேபரத்த திசை திருப்பி நல்லதா ஒரு நாலு கத வந்தா சரி.

மக்கள் நம்ம கதய படிச்சுட்டு ஓட்டயும் போடுங்க.
கானல்நீர்
 



// நீ கஸ்மாலம், நீ --தாங்கி ன்னு ஜல்லியடிக்கற கலேபரத்த திசை திருப்பி நல்லதா ஒரு நாலு கத வந்தா சரி //

;-))
 



முகமூடி அவர்களே,
இதோ போட்டிக்காக என் சிறுகதை - http://throughmylookingglasses.blogspot.com/2005/08/blog-post.html
-சஞ்ஜீத்
 



நன்றி சுரேஷ் , சஞ்ஜீத்... உங்கள் படைப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்
 



நான் எழுதிய சிறுகதை இங்கே, ஆகவே குழலியின் சிறுகதை இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்படுவிட்டதால் இனி உங்கள் ஆத்ம திருப்திக்காக மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ளலாம், இது வரை கலந்து கொண்டவர்களுக்கு முகமூடியின் மனதில் மட்டுமே இடம் உண்டு, பரிசில் அல்ல, இது வரை நான் 3 சிறுகதை கொடுத்துள்ளேன், அதனால் முதல் மற்றும் இரண்டு இரண்டாம் பரிசுகள் எனக்கே சொந்தம், இதை மீறி வேறு யாருக்கேனும் கொடுக்க நேர்ந்தால் உங்கள் கட்சி உடைய நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இதோ இந்த நூற்றாண்டின் சிறந்த சிறுகதைக்கான சுட்டி

http://kuzhali.blogspot.com/2005/08/blog-post_12.html
 



குழலியோட சிறுகதை[!]ய படிச்சேன்;

இதப்போயி ஒரு சிறுகதை-ன்னு போட்டிக்கி அனுப்பியிருக்காரே...

குழலி, பொதுவா ரொம்ப நல்லா (பிரேமானந்தா கதை! போல)எழுதுறவராச்சே, இதப்போயி ஒரு கதை, அப்டீன்னு போட்டிக்கு அனுப்பிருக்காரே, அப்டீன்னு யோசண பண்ணப்போ, டக்குன்னு உதிச்சான் சந்திரன்!

அந்தக் கதையிலயே க்ளூ இருக்கு!!

எனக்குப் புரிஞ்சிபோச்சு, "கோயிஞ்சாமி நெ.1" யாருன்னு! ;-)

நாராயண... நாராயண... நாராயண
 



//இதப்போயி ஒரு சிறுகதை-ன்னு போட்டிக்கி அனுப்பியிருக்காரே... //
அதானே இதெல்லாம் ஞானபீட விருது வாங்க போக வேண்டிய கதையாச்சே, முகமூடி தாமிர பட்டய விருதுக்கு வந்திருக்கேனு உணர்ச்சி வசப்படாதிங்க....

//குழலி, பொதுவா ரொம்ப நல்லா (பிரேமானந்தா கதை! போல)எழுதுறவராச்சே//
சூப்பர் தல சூப்பர் அப்படினு உங்க 4 பதிவுக்கு பின்னூட்டம் கொடுத்துடுறேன்.
 



//ஞானபீடம், ...சிறுகதை இல்லாட்டியும் ஒரு குறுகதை எழுதி அனுப்பலாமே...// - முகமூடி


இங்கே காண்க => பனி விழும் மலர்வனம்...


ஞானபீடம்.
 



முகமூடி,
போட்டிக்கான எனது கதை...இதோ நேர்மை எனப்படுவது யாதெனில்…

- அருண் வைத்யநாதன்
 



இப்போட்டி உண்மையான போட்டியா அல்லது தமாஷா எனும் பொருள் தொனிக்கும் வகையில் சிலர் கேட்டிருந்தனர்... அதற்கு காரணம் என்று சில குறிப்புகளையும் கொடுத்திருந்தனர்.

இப்போட்டி மிகவும் சீரியஸ்... நடுவருக்கு நேரம் கேட்டு எழுதிக்கொண்டிருக்கிறேன். இது நேர்மையாக நடக்கும், எந்த சந்தேகமும் வேண்டாம்.

பதிவின் நோக்கம் மாறா வண்ணம், நான் எழுதிய 2 பின்னூட்டங்களும் அனானி ஒருவர் எழுதிய பின்னூட்டமும் அழிக்கப்படுகிறது. அனானி தப்பாக எடுத்துக்கொள்ளமாட்டார் என்று நினைக்கிறேன்.

மேலும் நிறைய படைப்புக்களை எதிர்பார்க்கிறேன். நீங்களும் உங்கள் பதிவுகளில் இப்போட்டி குறித்து விளம்பரம் செய்தால் மிகவும் மகிழ்வேன்.
 



முகமூடிக்கு ஆனாலும் குசும்பு சாஸ்தி.
மேல அப்டியே ஃபீலிங்கா எலுதினாரா

அப்பாலீக்கா தருமி

//உண்மையிலேயே கலைத்தாய்க்கு சேவை செய்கிறான் ஒருவன்.... இங்கே
அவனை பாராட்டி நாலு வார்த்தை சொல்ல வேண்டாம்.. குறைந்த பட்சம் ஒரு பணமுடிப்பாவது தரலாமே..//

மேன்னு ஒரு போடு. அதான பாத்தேன், எங்கிட்டுருந்துரா $லர இவரு குடுப்பாருன்னு. இருந்தாலும் தருமிட்ட வாங்கின பணமுடிப்புலேந்து கொஞ்சூண்டு குடுத்துருவாரு அதுனால எல்லாரும் கத அனுப்புங்கோ!!.
 



http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post.html
 



முகமூடி இதோ
சரியா
http://madhumithaa.blogspot.com/
 



நன்றீ வீ.எம் & மதுமிதா... இருவரின் படைப்புக்களும் சேர்த்துவிட்டேன்.
 



முகமூடி,
எனது இரண்டாவது கதை போட்டிக்காக.
உணர்வுகள்

- அன்புடன், அருண் வைத்யநாதன்
 



This comment has been removed by a blog administrator.
 



This comment has been removed by a blog administrator.
 



ஆகஸ்டு நள்ளிரவு 12 மணின்னா எங்க ஊரு டைம்-ஆ, உங்க ஊரு டைம்-ஆ?
 



அன்புள்ள அலெக்ஸாண்டர் டூமாஸ் ஹீரோ அவர்களே,

இதோ போட்டிக்கான எனது சிறுகதை.

http://ssankar.blogspot.com/2005/08/blog-post_15.html

நன்றி

அன்புடன்...ச.சங்கர்
 



நன்றி அந்நிய இயக்குனரே

கதைய இப்பிடி வெடுக்குன்னு தொடர்கதை பாணியில முடிச்சா எப்பிடி... சிறுகதையின்னா ஒரு முடிவு வேணாமா?
 



யாரடி நீ மோஹினீ - உத்தம புத்திரரே,

எழுதுன கதைல மாற்றம் செய்யலாமா ? ரூல் புக் என்ன சொல்லுது ?

அன்புடன்...ச.சங்கர்
 



ரூல் புக் கூடாதுன்னுதுதான் சொல்லுது... இருந்தாலும் நீங்க உங்க முடிவ தனியா கதைக்கு அப்புறம் சேர்த்துடுங்க (ஒரு டிஸ்க்ளெய்மர் மாதிரி)... அப்புறம் நடுவர் முடிவை பொறுத்தது...
 



இத ஒத்துக்க முடியாது. ரூல்ஸ்னா ரூல்ஸ்தான்
 



இந்தப் பட்டிக்காட்டுப் பொம்பள கதையையும் போட்டில சேத்துக்க ராசா: குலதெய்வம்
 



முகமூடி,
போட்டிக்கான எனது கதை...இதோ

தனக்கு வந்தால்தான்..
http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_15.html

அன்புடன் விச்சு
 



நன்றி நிலா & விஷி... உங்கள் படைப்புகள் சேர்க்கப்பட்டுவிட்டன.
 



போட்டிக்கு என் படைப்பு :

http://banuvasan.blogspot.com/2005/08/blog-post.html
 



முகமூடி,
போட்டிக்கான எனது இரண்டாவது கதை...இதோ

பார்வைகள் பலவிதம்
http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_16.html

அன்புடன் விச்சு
 



இந்த கதையை உங்களுக்கு emailil அனுப்ப வேண்டும் என்பது ஒரு கட்டாயமா?

அன்புடன் விச்சு

எல்லார் பதிவிலும் வந்து கருத்துச்சொல்லும் முகமூடி என்பதிவில் கருத்து சொல்லததேனொ..
 



நன்றி பானுவாசன் & விஷி. உங்கள் கதை போட்டியில் சேர்க்கப்பட்டுவிட்டது.

விஷி, நீங்கள் மின்னஞ்சல் செய்ய வேண்டியது விதி (அதாவது ரூல்னு சொன்னேங்க).. அதற்கப்புறம் கதையில் மாற்றம் செய்யப்படக்கூடாது
 



http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html
 



வீ.எம். உங்க கதை சேத்தாச்சிங்கோ...
 



முகமூடி,

தலைவரே சீரியஸாக போட்டி அறிவித்தபின், தொண்டர்கள் தமாஷாக எழுதலாமா?

எனவே, போட்டிக்கு என்
படைப்பு.


சேர்த்துக் கொள்ளுங்கள்.
 



முகமூடி அவர்களே,
இதோ போட்டிக்காக என் சிறுகதை (konjam சுட்டது)"எது முகமூடி"

http://neyvelivichu.blogspot.com/2005/08/blog-post_17.html

இது வி எம் எழுதிய "முகமூடி" http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_16.html சிறுகதையின் தழுவல்.. (தழுவலா.. பாதி கதையெ சுட்டது தான்னு சொல்றது கேட்குது..) சாதி ஜெயிப்பதும் பெண்கள் தோற்பதும் ரியலிசம் ஆனாலும் எனக்கு ஏற்பில்லை.. அதனால் மாற்றி விட்டேன்.. இதற்கு பரிசு உண்டானால் வி எம்க்கு கொடுங்கள்.

அன்புடன் விச்சு
 



Thankyou for announcing this.!
I am writing now...I'll post it by the deadline.!

Wow - Malan - !!
 



விஷி... நான் ஏற்கனவே உங்க கதைய படிச்சிட்டேன்... "சுட்ட சிறுகதைப் போட்டி" வரும்போது உங்க கதைக்குத்தான் முதல் பரிசு ;-)

வாங்க வெங்கட்... நல்ல ஒரு விஷயத்த ஆரம்பிச்சி வச்சீங்க.
 



சுரேஷ்... உங்க கதை சேத்தாச்சி... என் விமர்சனத்த இப்ப சொல்லக்கூடாது.. வாழ்த்துக்கள்
 



அன்புள்ள முகமூடி,

இன்னொரு சிறுகதை - சின்ன வட்டம். http://neyvelivichu.blogspot.com/2005/08/93.html

உங்கள் போட்டி என் கதை எழுதும் திறனை வளர்த்திருக்கிறது.. வெங்கிட்டு கவிதையை வளர்த்தது போல.

இதற்கு முன் எழுதிய எது முகமூடி கதையிலும் என் கற்பனை இருக்கிறதென்பதை மறுக்க முடியாது.. வேண்டுமென்றால் முன் பாகத்தையும் என் வரிகளில் மாற்றித்தருகிறேன்.. வி எம் சொல்ல வந்ததும் நான் சொல்ல வந்ததும் வெவ்வேறு கருத்துகள் தானெ.. என்ன சொல்ரீங்க?

நன்றி

அன்புடன் விச்சு
 



அன்புள்ள முகமூடி,

இன்னொரு சிறுகதை - தப்புக் கணக்கு
http://neyvelivichu.blogspot.com/2005/08/94.html

அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி
 



This comment has been removed by a blog administrator.
 



வாழ்த்துக்கள் என்னமோ போங்க & விச்சு... உங்க கதை போட்டியில் சேர்க்கப்பட்டது

விச்சு, ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல, நடத்துங்க ;-))

மதுமிதா உங்கள் படைப்புகள் நேற்றே சேர்க்கப்பட்டுவிட்டது... வாழ்த்துக்கள்
 



நன்றி முகமூடி

அன்புடன்
மதுமிதா
 



அன்புள்ள முகமூடி,

இன்னும் ஒரு கதை.. கண்ணுபோடதீங்கைய்யா.. எதோ மனசுல தோணுது எழுதறேன்.. உங்கள் போட்டி ஒரு தூண்டுதல்.. தூண்டியதற்கு நன்றி

யார் குற்றம் http://neyvelivichu.blogspot.com/2005/08/95.html

அன்புடன் விச்சு

neyvelivichu.blogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி
 



அன்புள்ள முகமூடி,

இன்னும் ஒரு கதை.. கண்ணுபோடதீங்கைய்யா.. எதோ மனசுல தோணுது எழுதறேன்.. உங்கள் போட்டி ஒரு தூண்டுதல்.. தூண்டியதற்கு நன்றி


யார் குற்றம்

அன்புடன் விச்சு

neyvelivichu.blogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி
 



This comment has been removed by a blog administrator.
 



போட்டிக்கு என்னுடைய சிறுகதை இங்கே:
வேட்டையாடு! விளையாடு!!!

-Vinodh
http://visai.blogspot.com
 



http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_18.html
 



mugamoodi
idhu en kadhai en 4


http://arataiarangam.blogspot.com/2005/08/blog-post_19.html
 



mugamUdi,

ithu enga rendupeerudaiya kathi..

naan vichchu.. appuram vi.em.

kathai ingee
சபலம்

அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி
 



அன்புள்ள முகமூடி,

இன்னொரு சிறுகதை -

இளமையில் கல்

மத்த பதிவெல்லாம் போடறீங்க.. இந்த பதிவை மட்டும் update பண்ண மாட்டேங்கறீங்களே..நியாயமா?


அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி
 



அன்புள்ள முகமூடி,

இன்னொரு சிறுகதை -

ஒரு தலைவனின் உதயம்

and i think this is the last story for this contest.

அன்புடன் விச்சு
neyvelivichu.blogspot.com
வெற்றிகரமான நூறாவது பதிவை நோக்கி
 



ஷண்முகி உங்களின் அழுகுரல் கேட்கிறதா சேர்க்கப்பட்டது.

விஷி.. இதை அப்டேட் செய்யாததற்கு காரணம் இதில் இருக்கும் வேலைதான். கதைகள் பற்றிய குறிப்பு பின்னூட்டமாக வந்ததும், கதைளை word கோப்புகளாக மாற்றி, பின்பு அக்ரோபாட் உதவியுடன் அதை PDF கோப்பாக செய்து அதை நடுவருக்கு அனுப்புவேன். அதற்கு சற்று நேரம் பிடிக்கும். நேற்றும் இன்றும் கொஞ்சம் மற்ற வேலை ஜாஸ்தி அதான்.. ஒரு புதிய பதிவு போடுவதற்கு ரொம்ப கொஞ்ச நேரம்தான் ஆகும் எனக்கு ;-))

வினோத், விஷி, வீ.எம் உங்கள் கதைகள் இன்றிரவு சேர்த்துவிடுகிறேன்... (மேற்கண்ட வேலைகள் இன்றிரவு செய்ய வேண்டும் என்பதுதான் 23 நம்பர் சிகப்பு நிறத்தில் இருப்பது குறிக்கிறது) விஷி நீங்க எழுதற வேகத்தை பாத்தா உங்களுக்கு மட்டுமே ஒரு தனி போட்டி வைக்கணும் போலருக்கே ;-))

அப்புறம் யார் கதையாவது விட்டுப்போயிருக்கிறதா என்பதை தயவு செய்து தெரியப்படுத்தவும்.
 



இது என் கதை: மீகாரம்

நன்றி :-)
 



போட்டிக்கான் என் இரண்டாவது கதை :

http://banuvasan.blogspot.com/2005/08/blog-post_21.html
 



Hi Mugamoodi,

I am Padmapriya. My blogspot is http://priyaraghu.blogspot.com. I am sending my new shortstory named " PariNaama vaLarchchi..!!?" to participate in your shortstory competition. I am placing the link for that short story here
http://priyaraghu.blogspot.com/2005/08/blog-post.html.

As explained in the terms of the competition, I will send a unicode copy of my story to your email address .

Thank you - M. Padmapriya
 



பாஸ்டன், கதை ஒரே பதிவுக்குள்ள இருக்கணும்னு சொல்லாம விட்டது என் தப்புதான்.. அதுக்காக இப்படியா...

பரிசு கிடைக்க வாழ்த்துக்கள் பானுவாசன் & சிறகுகள் பத்மா.. உங்கள் படைப்பு சேர்க்கப்பட்டது
 



சரி, உங்க கருத்து ??