<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மண்ணின் மைந்தன் vs அந்நியன்...


ரொம்ப லேட்தான்... இருந்தாலும் செக்கூலரிஸ்ட் ஆனப்புறம்தானே இதெல்லாம் தோனுது... இணையத்துல அந்நியன பத்தி அக்குவேற ஆணிவேறயா பிச்சி பெடலெடுத்தாங்களே... யாராவது கலைஞரின் 'மண்ணின் மைந்தன்' பத்தி எழுதுனாங்களா... அட அந்நியன நாங்க திட்டித்தானய்யா எழுதுனோம்னு சொன்னா கூட, அது ஏதோ ஒரு வகையில அந்நியனுக்கு விளம்பரம் இல்லையா...


அந்நியன் அளவுக்கு மண்ணின் மைந்தனுக்குக்கு ஏன் விமர்சனமோ விளம்பரமோ இல்லை... இதன் பிண்ணனியில் சுஜாதாவிற்கும் கலைஞருக்கும் இருக்கும் வர்க்க வேறுபாடு ஒரு காரணியா. img crtsy: behindwoods.com

பாகிள் வலைப்பதிவு மண்ணின் மைந்தன் படம் குறித்து எடுத்த புள்ளிவிபரத்தை பாருங்கள்

See it again and again 14.21%(13)
You can see it once 2.21%(02)
Keep off the theatre 78.42%(75)
No comments 3.16%(03)

கீப் ஆப்பு த தியேட்டர் என்பது சீழ்பிடித்த சமூகத்தின் நோய் பீடித்த மன விகாரத்தின் வெளிப்பாடில்லையா...


அந்நியன் ரிலீஸான 12 மணிநேரத்துக்குள் அந்நியன் பத்தி 67 பதிவுகள் வந்தன என்கிறது பாகிள் புள்ளிவிவரம்...ஆனால் மண்ணின் மைந்தன் வெளியான 12 மாதங்கள் கழித்தும் ஒரு பதிவு கூட வரவில்லையாம்... ஷங்கரை விட பல மடங்கு அதிகமான படங்களை இயக்கிய ராமநாராயணனுக்கு தமிழக இணைய மக்கள் செய்யும் கைம்மாறு இதுதானா...

புலியை பார்க்க வசதியில்லாத எவ்வளவு ஏழை தமிழர்களுக்கு தன் படங்களில் புலியை அறிமுகப்படுத்தி இருக்கிறார்... அறிமுகம் மட்டுமா, புலி, மாடு, குரங்கு, பாம்பு என்ற போன்ற ஜீவராசிகளெல்லாம் அறிவு இல்லாதவை என்றே காலம் காலமாக எல்லா தமிழர்களும் ஏமாற்றப்ப்ட்டு வந்தனர்... ஆனால் தம் கடும் முயற்சியால் பாம்பு டைப் அடிப்பது, குரங்கு போட்டோ எடுப்பது, யானை ரசத்துக்கு பதில் மூச்சாவை மாத்தி வைப்பது போன்ற நடவடிக்கைகளை படம் பிடித்து பலரின் நீண்ட நாள் மூட நம்பிக்கைகளை தகர்த்தெரிந்தார்... ஒரு குழுவாக ஏகப்பட்ட டாலர்களை கொட்டி ராப்பகலாக காட்டில் ஜல்லியடித்தாலும், ஆங்கில சேனல்களுக்கு சிங்கம் புலிகளின் அப்பா அம்மா விளையாட்டைத்தான் படம் பிடிக்க முடிகிறது... ஆனால் தனி ஒரு மனிதராக மெனக்கெட்டு நமது அண்ணன் ரா.நா அவர்கள் தந்த விஷயங்களுக்கு ஈடாகுமா அவர்கள் படம்... ஏழைகளின் டிஸ்கவரி சேனல் என்று ரா.நாவின் படைப்புக்களை குறிப்பிட்டால் கூட அது கம்மிதான் (ரா.நா வின் நாகலிங்கம் படத்திலிருந்துதான் முதல்வன் பட பாம்பு க்ராபிக்ஸ் செய்வதற்கான கற்பனை பிறந்தது என்பதை இப்போதாவது ஷங்கர் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும்)

ரா.நா வுக்கு நன்றி சொல்லி டிஸ்கவரி/அனிமல் ப்ளானட் சேனல்களின் தலைவர்கள் எழுதிய கடிதங்கள் எல்லாம் நடுநிலை நாளிதழ்கள் என்று விளம்பரப்படுத்திக்கொள்ளும் இந்த பத்திரிக்கைகள் வெளியிட வில்லை... ஆனால் ஷங்கர் தன் வீட்டு மேஜை நாற்காலி ஆடாமல் இருக்க வைக்கும் கிழிந்த பேப்பரை கூட இந்த மேட்டுக்குடி பத்திரிக்கைகள் படம் பிடித்து வெளியிடுகின்றன... அதுவும் இலவச இணைப்பாக...

சரி நாமாவது இந்த நற்பணியை செய்வோம் என்றுதான் இந்த பதிவு... இதன் மூலமாக குறைந்த செலவில் நிறைந்த பயனாக மண்ணின் மைந்தன் எவ்வளவு சிறந்த கருத்துக்களை சொல்கிறது /கோவணத்துக்கு வழியில்லலத தமிழகத்தில் அநியாய செலவு செய்து எடுத்த அந்நியன் எவ்வளவு அபத்த கருத்துக்களை சொல்கிறது என்ற முக்கிய விஷயத்தை மூளை மழுங்கிய தமிழினத் தமிழனுக்கு மட்டுமின்றி தெலுங்கின/கன்னடின தமிழனுக்கும் சொல்லுவது என் குறிக்கோள்

இப்போது ப்ரச்னை என்னவென்றால், நான் இந்த இரு படங்களையுமே இதுவரை பார்க்கவில்லை... எனவே பார்த்தவர்கள் யாராவது இதை பற்றி தயவு செய்து எழுதுங்கள்...
இருபதாம் நூற்றாண்டு தமிழர்கள் நன்றி கெட்டவர்கள் என்ற அவப்பெயரில் வரலாற்றில் நாம் அறியப்படவேண்டாம்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


என்னமோ உள்குத்து இருக்கு என்று புரிகின்றது ஆனால் என்ன என்று தான் புரியவில்லை, என்ன என்று புரிந்தால் பிறகு சண்டைக்கு வருகின்றேன்.
 



ஒரு உள்குத்தும் இல்லீங்க குழலி.. (அப்படி எதாவதுன்னா, லிங்க் இருக்கும்) நியாயமான எனது சந்தேகம்தான்... எதுக்காக அந்நியனுக்கு மட்டும் வரிஞ்சி கட்டி எல்லாரும் விமர்சனம் எழுதணும்... அது மட்டும்தான் தமிழ்ப்படமா..
 



'கண்ணம்மா' படம் மட்டும் என்ன பாவம் செய்ததாம்?!அநியாயம்..ஒரு கண்ணிலே வெண்ணை.. மற்றொரு கண்ணிலே சுண்ணாம்பா?!
 



கவலைப்படாதீர்கள் தோழர்களே..

விரைவில் எதிர்பாருங்கள்..

செல்லக்கிளி - the preview
 



நான் ம.மை.பாத்தேந்தான். ஆனா கதை(!) மறந்து போச்சு.

இதுக்குக் கருடபுராணத்துலே எதாவது தண்டனை இருக்கா?
 



முகமூடி அவர்களே, உங்கள் ஓர வஞ்சனை நன்றாக புரிகிறது. ராமநாராயணின் வரலாற்று புகழ் பெற்ற படத்தில் கர்ப்பமாக இருக்கும் கதாநாயகிக்கு பாம்பு மாங்காய் பறித்து தருவது, பூ வைத்துவிடுவது, தாலாட்டி தூங்க வைப்பது போன்ற முக்கிய காட்சியை சொல்லாமல் விட்டுவிட்டீர்களே? மயிரிழையில் அந்தப் பாம்பு ஆஸ்கர் விருதை தவற விட்டுவிட்டது!!
 



மாயவரத்தான், முதல்ல கண்ணம்மா படம்னுதான் இந்த பதிவ எழுதினே.. அப்புறம் விவரம் சரிபார்க்கலாம்னு போனா கண்ணம்மா படத்துக்கு அண்ணன் ரா.நா. இயக்குனர் இல்லைன்னு சொல்லிட்டாங்க.. அதனால என்னன்னு replace கண்ணம்மா by மண்ணின் மைந்தன்.. என்ன பொருத்தமா இருக்குதானே...

சுரேஷ், விரைவில் எதற்கு... இப்பவே எழுதலாமே... படம் வெளிவரவேண்டும் என்றெல்லாம் அவசியமா என்ன... நம்மால் யூகிக்க முடியாதா

துளசியக்கா.. இந்த பதிவ எழுதறப்போ உங்கள நினைச்சு பயந்துகிட்டேதான் எழுதினேன்... நீங்க படம் பாத்திருப்பீங்கன்னு தெரியும், ஆனா விமர்சனம் எழுதியிருப்பீங்களான்னு ஒரு சந்தேகம் இருந்தது... நல்ல வேளை... நீங்களாவது செல்லக்கிளிக்கு ஒரு விமர்சனப்பதிவு போடுங்கோ..

ரம்யா.. அடடா.. நீங்க சொல்ற முக்கிய படத்த பார்க்கும் வாய்ப்பில்லாத அபாக்கியசாலியா இருந்திருக்கேனே.. உலகத்துல எந்த மூலைலயாவது இந்த படம் பார்க்க கிடைக்குமா.. அட இயக்குனராவது ஒரு காப்பி வைச்சிருக்கணுமே...
 



/கோவணத்துக்கு வழியில்லலத தமிழகத்தில் அநியாய செலவு செய்து எடுத்த அந்நியன் எவ்வளவு அபத்த கருத்துக்களை சொல்கிறது/

vaasthavam thanya!!!
 



05 Aug 2005 --எதிர்பாருங்கள்..

செல்லக்கிளி - the preview

No more waiting! it has all you expected and more!!
 



சுரேஷ் செல்லக்கிளி படத்துக்கு எழுதிய ப்ரிவ்யூவுக்கு ஒரு ப்ரிவ்யூ ::

எங்க இலக்கிய அணித்தலைவர் சுரேசு கலக்குறாரேப்பா.... போட்டு தாக்கிட்டீங்க... அதுலயும் அந்த பஸ் உரையாடல்..

ஒரு விசயம்... நீங்க சொல்ற மாதிரி நம்ம கதாநாயகியும் கதாநாயகனும் வசனம் பேசிட்டாதான் படம் ஓடிடுமே... ஆனா இப்ப திமுக தொண்டர்கள் இல்ல எங்க நம்ம தலையில டிக்கெட்ட கட்டிடுவாங்களோன்னு ஓடறாங்க... என்னா காரணம்னு நான் ஒரு ப்ரிவ்யூ கொடுக்கணுமா ::

அவள்:: அன்பே... ஆருயிரே... அடுக்களையில் வசதியாய் இருக்கும் என்று ஒரு அடுப்பு கேட்கவில்லை... ஒய்யாரக்கொண்டையில் அழகுபார்க்க அடுக்கு மல்லி கேட்கவில்லை... அணிந்து கொள்ள அவசியமான ஒரு அட்டிகைதானே கேட்கிறேன்...

அவன் :: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு என்றே நம் அய்யன் சொன்னதை நீயும் மறந்தாயோ...

அவள் :: ஊண் மறப்பேன் உயிர் துறப்பேன் என்றாயே என் அன்பே... உண்ணவும் சிறிது சுண்டல் தருவாயோ

அவன் :: தேனும் திணைமாவும் போல் சுவையாய் இருக்கிறது உன் பேச்சென்பாயே.. இப்போது பேசுகிறேன் கேள் கண்ணே..

அவள் :: ஆக வழக்கம் போலவே ஒரு காசு பெறாது என்பதனை நாசூக்காக சொல்கிறாய்... அப்படித்தானே...

அவன் :: என்னையே நான் உனக்கு கொடுத்த பின் வேறெதுவும் தரவில்லை என்ற எண்ணம் வருவதே தீது...

 



This comment has been removed by a blog administrator.
 



enga irundhu dhan ungalukku ippadiyellam padhivu podanumnu thonudho... asathunga pa ma ka thalaivarey..

thamizhilum, neelamagavum ezhudha mudiyaadha suuzhal.... mannikkavum
 



சரி, உங்க கருத்து ??