<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttp://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d3361231228256067100', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சென்று வருகிறேன்... நன்றி


கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட பல நிகழ்வுகளின் பின்னணியில் மிகுந்த மனவேதனையுடன் இந்த முடிவை எடுக்கிறேன்... ஒரு குடும்பம் போல் பழகிய என்னை, உங்களில் ஒருவனாக கருதிய உங்கள் எல்லாரையும் பிரிவது மிகுந்த வலியை தருகிறது, என்றாலும் என்ன செய்வது... எனக்கு ப்ரமோஷனோடு ட்ரான்ஸ்பர் கிடைக்கிறதே... ஆகவே நண்பர்களே சென்று வருகிறேன்... நன்றி.


இது எங்கள் மேலதிகாரி மாற்றலாகி செல்லும்போது அனுப்பிய மெயிலின் தமிழாக்கம்.

முக்கிய கவனத்திற்கு :: பின்னூட்டப்பெட்டி திறந்துதான் இருக்கிறது... பழக்க தோஷத்துல நீங்க பாட்டுக்கு தனி மடல்ல சோகத்த புழிஞ்சிடாதீங்க... நான் ஆடிக்கு ஒரு தபா அமாவாசைக்கு ஒரு தபாத்தான் தனி மடல பாக்குறது வயக்கம்...


அடச்சே பின்னூட்டத்துக்கு எங்க போவேங்கற டைப்பா நீங்க... ஒன்னியும் கஷ்டப்பட வேண்டாம்... இன்ஸ்டந்த் காபி பேஷ்ட் (ரெடிமேட் பின்னூட்டங்கள்) தயாராகவே உள்ளன...

உங்களின் முடிவு புரிகிறது. முடியுமானால் வேறு எங்கேனும் எழுதினால் தெரியப்படுத்துங்கள்.... அந்த பக்கமே வாராமல் எஸ்கேப் ஆயிப்போம்

போறதுன்னு முடிவாயிடுச்சி... உங்கட படம் ஒண்டை புளொக்கில ஏத்தீட்டுப் போனீங்கன்னா புள்ளங்க பூச்சாண்டி எப்படிம்மா இருப்பாங்கன்னு கேட்டா காமிக்க வசதியா இருக்கும்

ஆரக் கேட்டு நைனா கடைய இஸ்து மூட்றன்னு சொல்ற நீ? இதுக்கு பூட்டு இருக்கா முதல்ல...

பயம் போகலியா, இந்தாங்க ஒரு அருமருந்து :: jack daniels (அ) old monk

நீங்கள் எழுதாமற் போவது (இங்கே வார்த்தை வரவில்லை)... அதற்காக உங்களுக்கு என் நன்றிகள்

எங்கிருந்தாலும் வாழ்க (வெள்ளை சிப்பா, நாலு நாள் தாடி எல்லாம் வைத்து கோப்பையுடன் பாட்டாக படிக்கவும்)

நிலவுக்கு அஞ்சிப் பரதேசியாய் ஆவதும் எலியைக் கொல்லக் பேகான் ஸ்ப்ரே அடிப்பதும் (அதுக்கு வேற மருந்து இருக்கு) சரியா

நானும் உங்களை போன்றே முடிவெடுத்துள்ளேன்.. அதாவது திரும்பி வருவதற்கு

என் வலைப்பதிவுக்கு வந்து போகும் ஒரே ஒருத்தர் நீங்க மட்டும்தான்.. இப்ப நீங்களும் போனா நான் எதுக்கு வலப்பூ எழுதறதாம்.. அதனால நானும் டாட்டா

வழக்கம்போல, "போய் வருக". ;-) எல்லாம் நன்மைக்கே! , எங்களுக்கு

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள். இப்பத்தான் நாங்க ஹாப்பியா இருக்கோம்

உங்களுடைய ஐந்து ரூபாய் இஷ்டாம்பு ஒட்டிய சுயவிலாசமிட்ட மின்னஞ்சலை எனக்கு கட்டாயம் அனுப்பி வைக்கவும், ப்ளீஷ்

நீங்களூமா ? எனக்கென்னவோ கானாப்பாடல்கள்தான் நினைவுக்கு வருகின்றன... ஆல அஞ்சல பஜாரு நிஜாரு கனியப்பன் முனியப்பன்...

சும்மா தமாசுக்கு... யாரையும் தனிப்பட கிண்டல் செய்வது நோக்கம் இல்லை... யாராவது ஆட்சேபித்தால் குறிப்பிட்ட பகுதியை வாபஸ் வாங்கிக்கொள்கிறேன். (அட, இது இந்த பதிவுக்கு நான் மனப்பூர்வமாக தர்ற டிஸ்க்ளெய்மர்ப்பா...)

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நான் ப ம க வின் ஒரே தலைவராகி விடலாம் என்று ஆவலுடன் திறந்தால்..

சரி - நிஜமாகவே இந்த முடிவை எப்பொழுது எடுக்கப் போகிறீர்கள்?

ஆவலுடன்,
 //பிண்ணனியில்//

போவதுதான் போறீங்கள். நன்றாக எழுதி வைத்து விட்டுப் போங்கள். அது பிண்ணனி இல்லை. பின்னணி.
 இப்பல்லாம் அங்கங்கா சிரிக்க வைக்கிறீங்கப்பா....
thank you thank you thank you....
 சுரேஷ்... நோக்கத்துல கண்ணா இருந்தாலும் கட்சி மாறாம இருக்கீங்களே... நீங்கதான் எப்போதுமே நம்ம கட்சியின் நம்பிக்கைக்குறிய நெ.2 (என் மனதில் இடம் இருக்கு, ஆனா கட்சியில இல்லைன்னு அர்த்தம்)
 * சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.
 // போவதுதான் போறீங்கள் // பதிவ படிச்சிட்டுதான் பின்னூட்டம் போட்டீங்களா ;-))

// பிண்ணனி இல்லை. பின்னணி // என்னமோ ஒதக்கிதேன்னு பாத்தேன்... பல காம்பிநேஷன்ல ஒர்க் அவுட் பண்ணி பாத்தேன்.. இப்பத்தான் பிரியுது... நன்றி கருப்பு (ஒரு நிமிசம் கறுப்பின்னே நெனச்சிட்டேன்... ஆமா நீங்க ஏன் கறுப்புன்னு எளுதாம கருப்புன்னு எளுதறீங்க... )
 //thank you thank you thank you.... // திரும்பின பக்கமெல்லாம் சந்திரமுகி 100வது நாள் போஸ்டர பாத்தப்பவே நினைச்சேன்... ரஜினி எபக்ட்ல யாராவது பேசுவாங்கன்னு...
 அல்வா... இன்ஸ்டந்த் காபி போண்டா ஸாரி பேஷ்ட் இங்கயே இருக்க பழைய பதிவுல இருந்து காபி பண்ணுவானேன்...
 //அல்வா... இன்ஸ்டந்த் காபி போண்டா ஸாரி பேஷ்ட் இங்கயே இருக்க பழைய பதிவுல இருந்து காபி பண்ணுவானேன்... //

ஓ அப்படியா முகமூடி.

--------------
இன்ஸ்டந்த் காபி பேஷ்ட் :

உங்களின் முடிவு புரிகிறது. முடியுமானால் வேறு எங்கேனும் எழுதினால் தெரியப்படுத்துங்கள்.... அந்த பக்கமே வாராமல் எஸ்கேப் ஆயிப்போம்.

போறதுன்னு முடிவாயிடுச்சி... உங்கட படம் ஒண்டை புளொக்கில ஏத்தீட்டுப் போனீங்கன்னா புள்ளங்க பூச்சாண்டி எப்படிம்மா இருப்பாங்கன்னு கேட்டா காமிக்க வசதியா இருக்கும்..

ஆரக் கேட்டு நைனா கடைய இஸ்து மூட்றன்னு சொல்ற நீ? இதுக்கு பூட்டு இருக்கா முதல்ல...

பயம் போகலியா, இந்தாங்க ஒரு அருமருந்து :: jack daniels (அ) old monk

நீங்கள் எழுதாமற் போவது (இங்கே வார்த்தை வரவில்லை)... அதற்காக உங்களுக்கு என் நன்றிகள்

எங்கிருந்தாலும் வாழ்க (வெள்ளை சிப்பா, நாலு நாள் தாடி எல்லாம் வைத்து கோப்பையுடன் பாட்டாக படிக்கவும்)

நிலவுக்கு அஞ்சிப் பரதேசியாய் ஆவதும் எலியைக் கொல்லக் பேகான் ஸ்ப்ரே அடிப்பதும் (அதுக்கு வேற மருந்து இருக்கு) சரியா

நானும் உங்களை போன்றே முடிவெடுத்துள்ளேன்.. அதாவது திரும்பி வருவதற்கு

என் வலைப்பதிவுக்கு வந்து போகும் ஒரே ஒருத்தர் நீங்க மட்டும்தான்.. இப்ப நீங்களும் போனா நான் எதுக்கு வலப்பூ எழுதறதாம்.. அதனால நானும் டாட்டா

வழக்கம்போல, "போய் வருக". ;-)

எல்லாம் நன்மைக்கே! , எங்களுக்கு

நல்ல முயற்சி. இப்பத்தான் நாங்க ஹாப்பியா இருக்கோம். வாழ்த்துக்கள்

உங்களுடைய ஐந்து ரூபாய் இஷ்டாம்பு ஒட்டிய சுயவிலாசமிட்ட மின்னஞ்சலை எனக்கு கட்டாயம் அனுப்பி வைக்கவும், ப்ளீஷ்

நீங்களூமா ? எனக்கென்னவோ கானாப்பாடல்கள்தான் நினைவுக்கு வருகின்றன... ஆல அஞ்சல பஜாரு நிஜாரு கனியப்பன் முனியப்பன்...

--------------------------
 :))
 என்ன அருண் சிரிக்கிற ஸ்மைலி போட்டுருக்கீங்க.... என்ன மாதிரி தலைப்பு... அதுக்கு அழுவுற மாதிரியில்ல பொதுவா (சிரிக்க நினைத்தாலும்) போடுவாங்க...
 :((
 //சென்று வருகிறேன்... நன்றி.//

இதுவரை பதிந்தவைகளில் சிறந்த பதிவு ;)
 ஆனந்த் என்ன அழுகை இது... (அபூர்வ சகோ ஜனக பாணில) நோ சில்லி பீலிங்க்ஸ்ஸ்ஸ்
 பாண்டி (நீங்க என்ன சொல்ல வறீங்கன்னு புரிந்தாலும், புரியாத மாதிரி) தங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி..
 ஹி..ஹி..
 சரி, உங்க கருத்து ??கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ::

Create a Link