<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

வலைப்பூவின் சக்தி - தாஜ் இந்தியருக்கே சொந்தம் என தீர்ப்பு


சென்ற நமது பதிவில் தாஜ்மஹாலுக்கு வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுவதை சுட்டிக்காட்டி சாட்டையடி கருத்து ஒன்று எழுதியதை நமது பதிவை தொடர்ந்து வாசித்து வரும் லட்சக்கணக்கான வாசக அன்பர்கள் மறந்திருக்க மாட்டார்கள்... அந்த செய்தியின் வெப்பம் ஷாஜஹானின் வாரிசுகளை அடைந்திருக்கக்கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..


அதன் தொடர்ச்சியாக மொகலாய பேரரசின் கடைசி மன்னர் பகதும்ர் ஷா ஜாபரின் வாரிசான மைசுதீன் துசி, இன்று கொடுத்த அறிக்கை யில் "தாஜ் மகால் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சொந்தம்" என்று கூறியுள்ளனர்.

நாளை மறுநாள் நமது வலைப்பூவில் வர இருக்கும் செய்தி ::

"தாஜ் மகால் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சொந்தம்" என்ற அறிவிப்புக்கு காரணமாக இருந்த நமது பதிவை பாராட்டி லட்சக்கணக்கான வாசகர்கள் கடிதத்திலும் ஆட்டோவிலும் மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசியிலும் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்..


எனினும் விரல் விட்டு எண்ணும் அளவு வாசகர்கள், உங்கள் பதிவால்தான் அப்படி ஒரு அறிக்கை வெளியானதென்பதற்கு என்ன ஆதாரம்... மொகலாய மன்னரின் வாரிசுகளுக்கு தமிழ் தெரியுமா என்றெல்லாம் கேட்டு "காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாக" நமது பதிவை சித்தரிக்க முயலுகிறார்கள்...

அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது:: ஒரு கருத்து சொன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்க வேண்டும் என்பதைத்தான்...

மேலும் நாம் சூடான ஒரு கருத்தை சொல்ல, அதற்கு மறுநாளே அவர்கள் பதிலுரைத்தால், நமது கருத்தின் பாதிப்புதான் அது என்று கருதுவதற்கு இடமிருப்பதாக கருட புராணம் விளக்கும் பத்திரிக்கை தர்மம் ('05 செயின், 03 பவ்யம், 12:07 கக்காகுக்கூகிக்கீ) சொல்கிறது

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


test to check header length
 



:-))))))))))))))))))))))))))
 



முகமூடியாரே,
கட்சியின் கணக்கு வழக்கு மற்றும் கொள்கை செயல்பாடுகள் குறித்து நான் எழுதிய தனி மடலுக்கு ஏன் பதிலேயில்லை ?

நம் கட்சி தொண்டர்கள் போராடி பெற்ற வெற்றி , உமக்கு
மட்டும் என்று சொந்தம் கொண்டாடுகிறீர்..
 



சும்மா பீலா வுடாதே வாத்யாரே.. உண்மையிலேயே அந்தக் கோரிக்கையை 1978-லிருந்து வலைப்பூக்களில் நான் தான் வைத்துக் கொண்டு வந்திருக்கிறேன் என்பது வலைப்பூ நல்லுலகிற்கு தெரியும். நான் ஆமெரிக்காவிற்கு போய் எனது உறவினர்களை சந்தித்த நேரமாகப் பார்த்து ஏதோ அந்தக் கோரிக்கையை நீங்கள் தான் வைத்தீர்கள் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லி திசை திருப்ப செய்யப் பார்த்தை நான் கண்டு கொண்டேன்.
 



உங்களுக்கு முன்பே நான் இதுபற்றி சிறையிலிருக்கும் சதாமைப்பார்த்து இப்படி ஒரு அறிக்கைவிட வைத்தால் புஷ்ஷிடம் தனியே பேசி அவரை விடுதலை செய்வதாகச் சொல்லி இருந்தேன். இதோ இப்போகூட புஷ்ஷைச் சந்திக்கத்தான் கிளம்பிக்கொண்டிருக்கிறேன்.
வேண்டுமானால் நம் சாமியிடம் இதைக் கேட்டு உறுதிசெய்து கொள்ளுங்கள்.[இந்த முறை நான் சாமியை overtake செய்ததில் அவர் கொஞ்சம் கோபமாக இருப்பதாகக் கேள்வி]
 



சரி, உங்க கருத்து ??