<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பாராளுமன்றம் என் தாத்தாவுக்கு சொந்தம்


நம்ம ஷாஜகான் கட்டின தாஜ்மகால் சன்னி வக்பு வாரியத்துக்கு சொந்தமாம்... இன்னிக்கி அறிவிப்பு வுட்டுட்டாங்க... தமாசு இல்லப்பு... வக்பு வாரிய தலைவர் ஹபீப் உஸ்மான் மெனக்கட்டு மும்பை, கொல்கத்தா எல்லாம் போயி தகவல திரட்டி இத சொல்லியிருக்காரு... ஷாஜகானுக்கும் வக்பு வாரியத்தும் என்னா உறவுன்னு பின்னாடி சொல்லுவாரு போல...


இத படிச்சங்காட்டி ரொம்ப நாளா எங்கையில் உறுத்திகிட்டே இருக்கற முக்கிய ஆதாரத்த வெளியிடறதா முடிவு செஞ்சிட்ம்பா நானு... அதாவது எங்க தாத்தா இல்ல, அவரு ரொம்ப நாளக்கி முந்தி தில்லில (அப்போ டில்லின்னு சொல்லுவாங்களாம்) பாய் வியாபாரம் செஞ்சி கஷ்டப்பட்டு காசு சேத்து ஒரு குடிச கட்னாராம்... அந்த இடம் அப்ப வெறும் காடு போல.

பின்னாடி ஒரு நாளு பேக்கர்ங்கவரு வந்து, "நீங்க இருக்கற காட்டுல பெரிசா கட்டடம் ஒன்னு கட்டடலாம்னு இருக்கேன்... பில்டிங் கட்டமா இருந்தாலும் ஒரு ஓரமா இருங்கன்னு சொல்லிடுவேன், ஆனா நான் வட்டமா கட்டப்போறேன்.. அதனால எனக்கு உங்க குடிசய குடுத்திடுங்க" ன்னு கேட்டாராம்... அதுக்கு எங்க தாத்தா, உயிரயே குழச்சி கட்டியிருக்கேன்யா அத எப்படிய்யா விப்பேன்னு சொல்ல அவரும் சரின்னு போயிட்டாராம்... தாத்தாவுக்கு வயசானப்புறம் சவுத்ல என்னமோ செயின்டு சார்ஜு கோட்டைன்னு இருக்காமே, அங்க ஜாகைய மாத்திக்கிட்டு வந்திட்டாரு... அப்பால நல்ல வெலக்கி வித்துக்கலாம்னு நெனச்சிருப்பாரு போல, குடிச பட்டாவ பத்தி எங்களான்ட ஒன்னியுமே சொல்லல...

ஒரு நா நாங்க பொங்கலுக்கு வெள்ள அடிக்கலாம்னு பழச கிளருறப்பத்தான் குடிச பத்திரம் கண்ணுல சிக்கிச்சி... அடிரா ஜாக்பாட்டுன்னு நாங்களும் ஆசயா டில்லிக்கி போனா, அங்க எங்க குடிசய காணம்... பாராளுமன்றம்னு ஒரு கட்டிடம்தான் இருக்குது... நாங்களும் என்னான்னமோ சொல்லிப்பாத்தோம், துப்பாக்கி வச்ச காவக்காரங்க எங்கள உள்ளயே உடல... சரி பெரிய எடத்து பொல்லாப்பு எதுக்குன்னு எதுவும் பேசாம வந்திட்டோம்...

அப்புறம் வெவரம் தெரிஞ்ச பெரிய மனுசங்க சிலரு சொன்னாங்க :: அத்துவானி, உமாபாரதின்னு ரெண்டு கில்லாடிங்க இருக்காங்க, இது மாதிரி விசயத்துக்கெல்லாம் அவங்கள பாருன்னு... நம்ம நேரம் அப்பத்தான் ரெண்டு பேரும் இது மாதிரி ஒரு ஆக்கிரமிப்பு விசயத்த ஹேண்டில் பண்ணியிருப்பாங்க போல... நெம்ப கஷ்டப்பட்டும் ரெண்டு பேரயுமே பாக்க முடியல...


இப்ப வக்பு தாஜுமஹால உரிமை கொண்டாடுறத பாக்க சொல்ல, எனக்கும் ஆச ஆசயா வருது... யாராவது பெரிய மனுசருங்க சொல்லுங்கய்யா... வெறும் தகவலுக்கே உரிமை கொண்டாடுறாங்களே, நாங்க பட்டாவோட போராடுறோமே... அட பாராளுமன்றம் கூட வேணாம், அட்லீஸ்ட் எங்க தாத்தா பேர்ல இருக்கற பட்டா நிலத்தயாவது எங்களுக்கே திருப்பி தருவாங்களா...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


:-))))))
 



அன்புத் தோழரே,

உங்கள் பிரச்சினையை எங்கள் ப ம க தலைவர் பெரிய மற்றும் சின்ன முகமூடியிடம் கூறினால், உடனே ஆவன செய்வார்கள் - நாடெங்கும் போராட்டம், கதவடைப்பு, சாலை மறியல் ஆகியவற்றை செய்வதோடு, பாராளுமன்றத்தை கைப்பற்ற உடல்சேவகர்களையும் ஏற்பாடு செய்து தருவார்கள்.


அவர்கள் சொன்னதையும் செய்வார்கள், சொல்லாததையும் செய்வார்கள்.

வாழ்க ப ம க
வெல்க அதன் புகழ்

இவண்
மூத்த இணை துணை பொதுச் செயலாளர் - ப ம க

(தலைவர் மேல பாரத்தை போட்டாச்சு - அப்புறம் பிரச்சினை வெடிச்ச நாம தலைவர் ஆகிவிடலாம்)
 



// ப ம க தலைவர் பெரிய மற்றும் சின்ன முகமூடியிடம் கூறினால், உடனே ஆவன செய்வார்கள் // செய்வார்கள், ஆனால் பட்டா அவர்கள் கைக்கு மாறிவிடும்...

// தலைவர் மேல பாரத்தை போட்டாச்சு // அடுத்த செயற்குழுவுல தெரியும் இதோட எபக்டு
 



This comment has been removed by a blog administrator.
 



அத்வானிக்கே இப்ப அஷ்டமத்தில (அப்டீன்னா என்னங்க?) சனி; அவரை விட்டுடுங்க. அந்த அம்மா (அம்மாக்களே அப்படித்தான்) எப்போ என்ன செய்யுமோ, தெரியாது.

நாஞ்சொல்றதக் கேளுங்க. பேசாம நம்ம வக்பு வாரிய தலைவர் ஹபீப் உஸ்மானையே கேளுங்க; அவருதான் இந்த மாதிரி விஷயத்தில் நீக்கு போக்கு தெரிஞ்சவரு; ரொம்ப கில்லாடின்னு வச்சுக்கங்களேன்.
 



அதெல்லாம் கிடக்கட்டும்., எங்க தாத்தா வச்சுருந்த ஜார்ஜ் கோட்டைய ஆக்கிரமிச்சது உங்க தாத்தாதானா?., பரம்பரை பரம்பரையாத் தேடிகிட்டு இருக்கோமே நாங்க?!
 



அது சரி !
செங்கோட்டைனு ஒன்னு இருக்குதாமே .. அந்த பட்டா உங்க சின்ன தாத்தா மர பீரோல இருக்கா பாருங்க ..
அப்புறம் பாராளுமன்றம் ல இடம் தரலனா கூட பரவால, தாத்தாக்கு ஒரு சிலையாவது வைக்க சொல்லுங்க..
வீ எம்
 



தருமி :: // பேசாம நம்ம வக்பு வாரிய தலைவர் ஹபீப் உஸ்மானையே கேளுங்க // சும்மா கெடந்த சங்க ஊதி கெடுத்தானாம் மாதிரி நாம பாட்டுக்கு அவர கேக்க போயி, அத விசாரிக்க அவரு சென்னைக்கு வந்து... அப்புறம் அவரு பாட்டுக்கு மெரீனா வக்பு வாரியத்துக்கு சொந்தம்னு சொல்லிட்டா...
 



// எங்க தாத்தா வச்சுருந்த ஜார்ஜ் கோட்டைய ஆக்கிரமிச்சது உங்க தாத்தாதானா?., // இத கேக்கறதுக்கு முன்னாடி எங்ககிட்ட லீஸ¤க்கு எடுத்த விவேகானந்தர் பாறைய எங்களுக்கு திருப்பி கொடுங்க apdipodu
 



// தாத்தாக்கு ஒரு சிலையாவது வைக்க சொல்லுங்க.. // சிலை வைக்க கேட்டா தாத்தாவுக்கு கேக்கற அளவு நான் என்ன தியாகியா, இல்ல எங்க தாத்தாதான் எனக்கு எதுனா மந்திரி பதவி வாங்கி கொடுத்தாரா... எனக்குல்ல சிலை கேப்பேன் நான்...
 



// அந்தகாலத்துல எங்க வீட்டுக்கு முன்னாடி சாக்கடை ஓடிச்சாம் // அப்படியா... எங்க வீட்ட சுத்தி ஆறு மாதிரி என்னமோ ஓடுமாம்... அதுல முதலைங்கள்லாம் இருக்குமாம்... அதுக்கு பேரு கூட அகழியோ என்னமோ சொல்வாங்க எங்க வீட்டு காவல் வீரர்கள்...
 




பாராளுமன்றம் முகமூடியின் தாத்தாவுக்கு சொந்தம்

அந்த தாத்தாவோ...

ஜார்ஜ் புஷ்-ஷின் பாட்டிக்குச் சொந்தம்!

என்பதை மறக்க வேண்டாம்! ;-)



- ஞானபீடம்
 



Really SUPER :))))))))))
 



சரி...சரி... பொழுது விடிஞ்சிடிச்சி.. எல்லாரும் கனவு காணுறதை விட்டுட்டு கிளம்பி வாங்க.. இந்தியா எங்க தாத்தாவுக்கு சொந்தம்... அதை போராடி மீட்கணும்.
 



ஞானபீடம்... அடன்னு சொல்ற அளவு எதுகை மோனையா பேசுவீருன்னு பாத்தா அடடேன்னு சொல்ற மாதிரி எழுதிட்டீரே... இன்னா புதுக்கவித முயற்சியா... அப்புறம் விளம்பரம் வேற காணோம்.. சரி சிங்கத்தோட குகைக்குள்ளயே போயி அத சந்திக்கிறதுன்னா சும்மாவா..
 



நன்றி பாலா... அப்புறம் மாயவரத்தான் எல்லாரையும் எழுப்பி விட்டுட்டு அவர் பகல் கனவு காண்றார் பாருங்க...
 



போராடி மீட்கணும்னு சொன்னதை பகல் கனவுன்னு சொல்றீங்க முகமூடி... அதுவும் சரி தான். ஜுஜுபி பிரச்னைக்கே (அட.. இது பெயரிலி பதிவிலே நடைபெறும் ஜுஜுபி பிரச்னை இல்லை!) மறந்து போய்க்கூட மூச்சை விடாத நம்ம மக்கள் இதுக்கு எங்கயிருந்து போராடப்போறாங்க?!
 



சரி, உங்க கருத்து ??