<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

பெண்களின் வார்த்தைகள் புரியாதோ


சரி
::


ஒரு வாக்குவாதத்தை முடிக்க பெண்கள் உபயோகப்படுத்துவது... சரியான அர்த்தம்: "நான் நினைப்பது சரி, வாய மூடிகிட்டு எடத்த காலி பண்ணு..."

ஒன்னுமில்லை ::


இது ஒரு அறிகுறி. அதாவது புயலுக்கு முன் வரும் அமைதி என்பது அர்த்தம். ஒன்னுமில்லை என்றால் ஒன்றாவது இருக்கிறது என அர்த்தம். இதற்கு அப்புறம் ஆரம்பிக்கும் வாக்குவாதம் (கண்டிப்பாக ஆரம்பிக்கும்) பொதுவாக சரி என்பதாக முடியும்

5 நிமிஷம் ::


அவர்கள் அலங்காரம் செய்து கொண்டே இதை சொன்னால் இதன் அர்த்தம் அரை மணி நேரம். அவர்கள் வேலை எதுக்காவது கூப்பிடும் போது நீங்கள் சொன்னால் இதன் அர்த்தம் 4 நிமிஷம்

பெருமூச்சு ::


இது வார்த்தை அல்ல... அவர்களின் செயல். இதன் அர்த்தம் "நீ ஒரு முட்டாள். உங்கிட்ட பேசி உருப்படியா ஆகப்போறது ஒன்னுமில்லை.. என் நேரத்த வேஸ்ட் பண்ணாம எடத்த காலி பண்ணு"

பரவாயில்லை ::


பெண்கள் உயயோகிக்கும் வார்த்தைகளில் மிகவும் ஆபத்தான வார்த்தை. பரவாயில்லை என்பதன் உண்மையான அர்த்தம் "நீ பண்ணிய தப்புக்கு உனக்கு என்ன தண்டனைன்னு நான் இன்னும் யோசிக்கணும், அதுக்கு அவகாசம் வேணும்" இதனோடு பொதுவாக சரி மற்றும் புருவம் உயர்த்தல் கொசுறாக கிடைக்கும்

உங்க இஷ்டப்படி பண்ணுங்க ::


தொனி எப்படி இருந்தாலும் இதன் அர்த்தம், "பண்ணிடுவியா?" சில அப்பாவிகள் இதை அனுமதி என்று தப்பர்த்தம் பண்ணிக்கொள்வார்கள்... அவர்களுக்கு நம் செய்தி :: (பொழச்சி இருந்தா) ஆழ்ந்த அனுதாபங்கள்..

ஓஹோ ::


ஏதாவது வாக்கியம் ஆரம்பிப்பதன் முன் ஓஹோ என்று ஒரு பெண் சொல்லுவாரென்றால் நீங்கள் செய்ய வேண்டியது... ஓடுங்கள் நடக்க எல்லாம் அவகாசம் இல்லை... ஓடுங்கள்.. இதன் தொடர்ச்சியாக சில நிலையான பொருட்கள் பறக்கும் சாத்தியம் உள்ளது.

நன்றி ::


பெண் நன்றி என்று சொல்கிறார்... ஆச்சரியமோ, மயக்கமோ அடையாமல், மூச்சா போகாமல், பரவாயில்லை (ஆண்களின் பரவாயில்லைக்கு அர்த்தம் பரவாயில்லை மட்டுமே) என்று மட்டும் சொல்லவும்

ரொம்ப நன்றி ::


இதற்கும் சாதா நன்றிக்கும் வித்தியாசம் உள்ளது... இதை சொல்லும் போது தொனி வேறாக இருக்கும். இதை ஒரு பெண் உங்களிடம் சொன்னால் நீங்கள் அவரை மிகவும் காயப்படுத்தி இருக்கிறீர் என அர்த்தம். இதன் தொடர்ச்சியாக ஒரு பெருமூச்சு வேறு வரும். நீங்கள் இப்போது இடத்தை காலி பண்ணுவது உசிதம்

நன்றி: இணைய ஜங்கி.. மொழிபெயர்ப்பு: முகமூடி


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


(*|*)
 



சினேகிதி, கருத்து எதுவும் சொல்லாமல் உங்கள் போட்டோ மட்டும் -->> (*|*) <<-- போட்டுறிக்கிறீர்கள்... போட்டோவில் அழகாக இருக்கிறீர்கள்...

//மீண்டும் வலைப்பதிய வந்தமைக்கு வாழ்த்துக்கள்// பாண்டி, ஆக முடிவே பண்ணிட்டீங்க... இருந்தாலும் லட்சோப லட்சம் ரசிகர்கள் தனிமடலில் ரெக்குஸ்ட் பண்ணியதால் வந்தேன்...

// காடுன ஆலும் வாடுன பாயும் சும்மா இருக்காது // இத "மாதிரி" ஒரு விசயத்த ஆரு சொல்லியிருப்பாங்கன்னு நல்லாவே தெரியும் எனக்கு
 



ரொம்பப் புரிந்துணர்வு உங்களுக்கு
 



எல்லாம் ஒரு பாதுகாப்புக்குதாங்க சந்திரவதனா...
 



* சூப்பர் தல சூப்பர்..
* எப்படிய்யா உனக்கு இப்படியெல்லாம் தோணுது..
* சொம்மா பூந்து கலாச்சிட்ட நைனா..
* cool man..
* wow really superb...
* பிச்சிப்பூட்டப்பு..
* அண்ணாச்சி, பதிவுன்னா அது இதூல்லா...
* உங்களின் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.
* இப்பதிவை படித்தவுடன் எனக்கும் இதேதான் தோன்றியது...
* இதுபோன்ற பதிவுகள் வலைப்பதிவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்கிறது, பாராட்டுக்கள்
* இவ்வளவு நேரம் இதுக்கு செலவழிக்கணுமா.

புதுசா ஸ்டார் சிஸ்டம் வேற

***** (5 ஸ்டார்)
 



முகமூடி உங்க வீட்டுக்கார அம்மா றொம்ப கொடுத்துவைச்சவாங்க தான். பின்ன இப்படி குறிப்பறிஞ்சு நடக்கிறீங்க. குடும்பம் குதூகலமாய் தான் இருக்கும். இதெல்லாம் பட்டுத்தெளிஞ்ச அனுபவங்கள் தானே?

:))
 



jsri // ரொம்ப நன்றி // இந்த வார்த்தைய முதன் முதலா நீங்க சொல்லி கேக்கறதா உங்க வீட்டுல இருந்து ஒருத்தர் எனக்கு மெயில் அனுப்பி இருக்கார்...

அல்வா... 5 ஸ்டார்ஸ் சரி... மொத்தம் எத்தனை ஸ்டார்ஸ்... 5/5 ஒர் 5/??

கயல்விழி // இதெல்லாம் பட்டுத்தெளிஞ்ச அனுபவங்கள் தானே // ஹிஹி...
 



அவதாரம் யாரோ 'ஓஹோ'ன்னு சொன்னவுடன் நேரா இங்க வந்தீங்க போலிருக்கு.... டேக் இட் ஈஸி... எல்லாம் சரியா போயிடும்..
 



mugamoodi (*|*) ippdi pota neenga athukum oru artham solluvinga endu parthan....

mugamoodiku purinthunarva?? :) ithu avaru yaru anupina fwd mail thamil ila unga ellarukum thanthirukaru...sariya mugamoodi?
 



சினேகிதி... அப்பாடா... ஜங்கியின் மொழிபெயர்ப்புதான்... முதலில் என் பதிவின் டிஸ்க்ளெய்மராகவும் "நன்றி: இணைய அனுபவசாலிகள்" என்று எழுதியிருந்தேன் (முதல் பின்னூட்டம் இட்ட நீங்கள் பார்த்திருக்கலாம்) அப்புறம் ஒரு எதிர்பார்ப்புக்காக (pointing out) அதை எடுத்திருந்தேன்... இது வரைக்கும் ஒன்றையும் காணோம்...

// (*|*) ippdi pota neenga athukum oru artham solluvinga endu parthan.... // அதை பற்றி நான் கருத்து சொன்னால் காப்பிரைட் ஆக்ட் படி குற்றம் ஆகாதா (கறுப்பியுடைது என்று நினைத்திருந்தேன்.. அப்புறம் ஒரு பதிவில் அது கறூப்பியுடையது இல்லை என்று யாரோ சொன்னார்கள்)
 



முகமூடி,

இந்த பதிவை மிஸ் பண்ணிட்டேன் போல இருக்கு, நல்ல நகைச்சுவையான பதிவு !

Good translation too !!!

எ.அ.பாலா
 



சரி, உங்க கருத்து ??