<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சைக்கோ பற்றி பேசியது போதும்


ஆபாச பின்னூட்டங்கள் நிற்கும் நேரம் நெருங்கிவிட்டது... அதை பற்றி பார்க்கும் முன் ஒரு விஷயம்...


ஆபாச பின்னூட்டங்களை பற்றி நிறைய பேசியாகிவிட்டது... இதை பற்றிய விவாதங்கள் இன்னும் தொடருவது தமிழ் வலைப்பூ உலகிற்கு ஒரு பின்னடைவாகவே இருக்க முடியும்... இந்த விஷயத்தை பற்றி நிறைய பேசுவதால் ஒருவித சலிப்பு நிலையே வளரும். இந்த பின்னூட்டங்கள் தந்த அலுப்பினால் சிலர் சிலகாலம் ஓய்வெடுக்கவும் சென்று விட்டனர்...
குழுவாக சில விஷயங்களை பேசுபவர்கள், அசிங்க பின்னூட்டங்கள் வந்த போது ஏன் ஒன்று சேரவில்லை என்ற கேள்வி இப்போது கேட்கப்படுகிறது... ஒன்று சேர்ந்து என்ன செய்வது...

எனக்கும் அசிங்க பின்னூட்டங்கள் வரத்தான் செய்கின்றன... வைகோ பற்றிய (கவனிக்க: வைகோ பற்றிய..) பதிவில் ரஜினிகாந்த என்ற நாய் 37 முறை ஒன் பாத்ரூம் சென்றிருந்தது... சுவர் கண்ட இடம் சொர்க்கம் என்று இருப்பது நாயின் குணம்... அதற்காக அதே வேலையை நாமும் செய்ய முடியுமா...
எப்போது அசிங்க பின்னூட்டங்கள் வருகிறதோ, அப்போதெல்லாம் அதை அடையாளம் ஒன்றும் விடாமல் நான் அழித்து விடுகிறேன்... அந்த பின்னூட்டங்கள் கிஞ்சித்தும் எனக்கு பாதிப்பு ஏற்படுத்துவதில்லை... நாயின் மூச்சா அளவுதான் அதற்கு மதிப்பு... ஆனால் என் பதிவின் கதை வேறு... என் பதிவை என் நெருங்கிய வட்டாரம் யாரும் படிப்பதில்லை போல் தெரிகிறது (இவனெல்லாம் என்னத்த எழுதி கிழிச்சின்னு நினைக்கிறாங்களோ என்னவோ... மேதைகளை மதிக்காமல் என்னடா சமுதாயம் இது... சரி, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா... )

ஆனால் பெயரிலி, உஷா மற்றும் வேறு பல பதிவர்களுக்கு இம்மாதிரி பின்னூட்டங்கள் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்... ஒரு சிலரின் அடையாளம் ஒரு பெரிய வட்டாரத்தில் அறியப்படுகிறது... மேலும் சிலரின் சொந்தக்காரர்கள் அவர்களின் பதிவை படிக்கும் போது அவர்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்ற எண்ணமும் வருத்தம் தரும் விஷயம்... அப்பொழுதெல்லாம் அவர்கள் தனது பின்னூட்ட வசதியை தற்காலிகமாக செயலிழக்க வைக்கலாம்... பெயரிலி இப்போது தற்காப்பு அரண் சிறப்பாக அமைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன்...


இதில் பேசப்படும் இன்னொரு விஷயம் privacy statement பற்றியது... இதெல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து... என் பதிவில் stat counter இருக்கிறது... பெரும்பாலானவர்களின் பதிவில் இது இருக்கிறது... அதை ஆராய்ந்தால் ip address கிடைக்கும்... ஆனால் அதை பொதுவாக நான் ஆராய்வதில்லை... மேலும் google, yahoo ஆகிய சேவை அமைப்புகள் ip address சேமிக்கின்றன... மேலும் உங்கள் நண்பருக்கு நீங்கள் e-mail அனுப்பினால் கூட உங்கள் ip address அவரை சென்றடைகின்றது... ஆகவே அதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ள தேவையில்லை...


உங்கள் PC hack செய்யப்படலாம் என்று நினைப்பீர்களேயானால் zone alarm போன்ற இலவச firewall சேவைகளை பயன்படுத்துங்கள்... மேலும் ad-aware முதலிய spam blocking tool, இலவசமாக கிடைக்கும் anti-virus tool ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.... முக்கியமாக உங்கள் இ-மெயிலுக்கு உங்கள் தனித்தகவல் (பாஸ்வேர்டு மற்றும் மற்ற தகவல்கள்) வேண்டி ஒரு செய்தி வந்தால் அதை நம்பாதீர்கள்... முக்கியமாக உங்களுக்கு தெரியாதவரிடமிருந்து மெயில் வந்தால், அதில் இணைப்பு இருந்தால் அதை திறக்காதீர்கள்...


இப்பொழுது ஆபாச பின்னூட்டங்கள் நிறுத்தம் பற்றி...

போன வாரம் googleல் வேலை செய்யும் ஒரு தமிழரின் தொடர்பு கிடைத்தது... இந்த ஆபாசங்களின் செயல்களை திரட்டி அளித்து என் அனுமானங்களையும் கொடுத்திருக்கிறேன். தமிழ்மண பயன்பாட்டினை மெச்சிய அவர், ஒரு சிலரால் பதிவுகளின் பயன்பாட்டில் நசிவு நிலை ஏற்பட்டதை கண்டு வருத்தமடைந்தார்... கண்டிப்பாக இதை ஆராய்வதாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செயலாற்றுவதாகவும் உறுதியளித்தார்... நாடு விட்டு நாடு மாறி பொறி அமைக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லையாதலால் குற்றப்புலனாய்வுக்கு புகார்கள் எடுத்துச்செல்லப்படும் என்றார். அவர்கள் செயலபட - அவர்களுக்கு இருக்கும் இதை விட முக்கியத்துவம் அதிகமான வேலைகள் அடிப்படையில்- சில காலம் பிடிக்கும் என்றார்.... ஆக free sites that offer proxy services போன்ற விஷயங்களை கொண்டு சிலர் மத்தாளம் கொட்டலாம், பறை ஒலிக்கலாம், முரசு கொட்டலாம்... ஆனால் என்னதான் hacking பற்றிய விஷய ஞானத்தை புத்தகங்களின் மூலம் அறிந்து கத்துகுட்டி வேலை காண்பித்தாலும் அரசாங்கத்தின் குற்றப்புலனாய்வு துறை கண்களில் மண்ணை தூவ முயன்ற ஜித்தர்களை அது பிடித்த கதையை படித்தால் தெரியும் இந்த ஆள்மாறாட்ட வேலைகள் எல்லாம் குழந்தைத்தனம் என்பது...
ஆபாசத்தார், ஜெயிலில் படிக்க hacking புத்தகங்களுக்கு அனுமதி இருக்கிறதா என்று சிறைத்துறையிடம் விசாரித்து தெரிந்து கொள்ளட்டும்...

நாம் அதுவரை ஆபாச பின்னூட்டங்களை அழிப்போம் அல்லது பின்னூட்டங்களை நிறுத்தி வைப்போம்... ஆனால் சைக்கோ(க்களு)க்கு கொடுக்கும் எந்த செய்தியுமே அதற்கு ஊக்கம்தான் என்பதால் இதுவே அதை பற்றி பேசும் கடைசி பதிவாக இருக்கட்டும்... அது குறித்து பேசுவதை அறவே தவிர்ப்போம்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


/ஆனால் பெயரிலி, உஷா மற்றும் வேறு பல பதிவர்களுக்கு இம்மாதிரி பின்னூட்டங்கள் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம்... ஒரு சிலரின் அடையாளம் ஒரு பெரிய வட்டாரத்தில் அறியப்படுகிறது... மேலும் சிலரின் சொந்தக்காரர்கள் அவர்களின் பதிவை படிக்கும் போது அவர்களுக்கு மனவருத்தம் ஏற்படும் என்ற எண்ணமும் வருத்தம் தரும் விஷயம்... அப்பொழுதெல்லாம் அவர்கள் தனது பின்னூட்ட வசதியை தற்காலிகமாக செயலிழக்க வைக்கலாம்.../
அப்டீங்கிறீங்க ;-)
 



முன்னூட்டிய பின்னூட்டத்திலே நான் விட்ட நகைச்சு வையை எடுத்துவிட்டுப் பார்த்தால், எருமையின் முதுகிலே மழை கொட்டுகிறாயா கொட்டிவிட்டுப்போனால் போகட்டுமென்பதே என் அபிப்பிராயம். எல். எல். தாஸுடன் எனக்கு ஒப்புக்கொள்ளுமளவுக்கு விடயங்கள் பல இல்லை; டோண்டு ஐயாவுடனும் குறைவே. முகமூடிச்சுதந்திரம் தேவை என நின்று சொல்லும் அதே நேரத்திலே, இப்படியாக தாஸ், டோண்டு அவர்களின் பெயர்களிலே, அவர்கள்தான் என்ற விதத்திலே மற்றவர்களுக்குத் தோன்றவேண்டுமென்று திட்டமிட்டுப் பொய்யூட்டமிடுவது ("கெட்டவிதமாகப் பேசாமல், நல்ல முறையிலே ஒரு முகமூடி பேசுவார் என்றாலுங்கூட" பிழையானதே.

அதே நேரத்திலே, இதற்காகத் தொடர்ந்து கத்திக்கொண்டிருப்பதும் கத்தி கொண்டிருப்பதும் உண்மையிலே பெயர்கொண்டவர்களுக்குத்தான் சேதமானது.

புளொக்கரிலே, இப்போது, பதிவு நிர்வாகியே சுவடு தெரியாமல் அழிக்கும் உரிமை வந்திருப்பதாகத் தெரிவது, இப்படியான ஆள்மாறாட்டிகளுக்குச் சோர்வினைத் தரக்கூடும். (நாள் முழுக்கச் செய்யும் உழைப்பு வீணாகின்றதே!)
ஆனால், இது புளொக்கரிலே பதிகின்றவர் தன் கருத்துகளுக்கு மாற்றுக்கருத்துச் சொல்லினால், அதை அப்படியே சொல்லியிருக்கக்கூடுமென்ற தடயத்தினைக்கூட அழித்துவிடக்கூடிய ஒரு சர்வாதிகாரத்தினைப் பதிவு நிர்வாகிக்குக் கொடுக்கின்றது.

இப்படியாகத் தன் கருத்து அழிக்கப்பட்டுவிடுமென்று கருதுகின்றவர், டோண்டு ஐயா செய்வதுபோல தனது பதிவிலும் அதே பின்னூட்டக் கருத்தினைப் போட்டுவிடுவது நல்லது. (அவர் பின்னால், தன் பதிவிலே தன்னிஷ்டப்படி மாற்றிவிடுவார் என்று பயப்படும் முன்னவர், அடுத்தமுறை அழிக்க அஞ்சுவார்). மனிதன் போன்ற "மகளிர் மாத்திரம்" வசனநடைகைவந்த வல்லாளர்களுக்குத்தான் திருடனுக்குத் தேள்கொட்டிய நிலை. தன் பதிவிலும் இடமுடியாது. பின்னூட்டம் இட்ட இடத்திலே அழித்தாலும், ஏதும் செய்யமுடியாது. இரட்டை வேலைதான் ஆனால், இது பயனானது.
 



அப்படீங்கறேன்.... அதுசரி... எனக்கு ஒரு உண்ம தெரிஞ்சாகோணும்.... அதுவும் எனக்கு இன்னிக்கே தெரிஞ்சாகோணும்... மாசக்கா ஆரு??
 



எந்த மாசுங்கிறேள்?
அன்னயன் மாசு நானு; அந்நியன் மாசு விக்ரமு; அன்னியோனிய மாசுவும் அனோனிமாசும் யாரோ அவர் யாரோ?
 



உங்கள் முந்தைய பின்னூட்டத்தை நீங்கள் இடும் முன்னே எனது போன பின்னூட்டம்....

நீங்க பின்னூட்டத்த எல்லாம் தனி பதிவா போடுற சிந்தனை என்னவோ சரிதான்... ஆனா // இப்படியாகத் தன் கருத்து அழிக்கப்பட்டுவிடுமென்று கருதுகின்றவர் // இப்படி சொல்லிப்போட்டு செஞ்சா, நான் என்னமோ உங்க பின்னூட்டத்த அழிக்க நினைக்கறதால்லே இந்த சமுதாயம் நினைக்கும் :-)

இப்போது ப்ரச்னை என்னவென்றால், பின்னூட்டம் இடுபவர் பின்னர் வந்து தன் கருத்தை - தடயமே இல்லாமல் - அழிக்கிறார் என்று கொள்வோம்... அதற்கு என்ன செய்வது... மற்றவர் கருத்தையுமா தம் பதிவில் போட முடியும்...(தடயமே இல்லாமல் எப்படி அழிக்க இயலுமென்பதை பற்றி இனிதான் ஆராய வேண்டும்)

ஆனால் முன்னர் வந்த பின்னூட்டத்துக்கு பதிலளிக்கும்போது அந்த பின்னூட்டத்தை அப்படியே மறுபதிப்பு செய்தால் - நீளம் கூடும் என்றாலும் - அது பயனளிக்கும்
 



ஓய்வில் இருக்கும் தாஸ¤, அல்வாசிட்டி, குழலி ஆகியோர் ஓய்வெடுத்தது போதும் களப்பணிக்கு வாருங்கள் என்று அன்பாக அழைக்கப்படுகிறார்கள்
 



/இப்போது ப்ரச்னை என்னவென்றால், பின்னூட்டம் இடுபவர் பின்னர் வந்து தன் கருத்தை - தடயமே இல்லாமல் - அழிக்கிறார் என்று கொள்வோம்... அதற்கு என்ன செய்வது... மற்றவர் கருத்தையுமா தம் பதிவில் போட முடியும்...(தடயமே இல்லாமல் எப்படி அழிக்க இயலுமென்பதை பற்றி இனிதான் ஆராய வேண்டும்) /

அப்படியாக அழித்தால், இன்னமும்
XXXXX said...
This post has been removed by the author.
இப்படியாகத்தான் தெரிகிறது.
 



// XXXXX said...
This post has been removed by the author. //

அதையேத்தான் << WARNING: It seems blogger can be hacked : gajendra >> என்ற கருத்துக்கு மன்றத்தில் பதிலுறைக்கும்போது நானும் குறிப்பிட்டு இருந்தேன் பெயரிலி... ராமச்சந்திரன் உஷா அழித்திருக்கக்கூடும் என்பதுதான் என்னுடைய கருத்து... ஆகவே தடயம் இல்லாமல் அழிக்க இயலுமா என்பதை பற்றி தற்போதைக்கு கவலைப்பட வேண்டியதில்லை.... (உஷா இல்லை என்று சொன்னால்தவிர)
 



இன்று ஒரு முக்கிய அதிகாரிகள் கூட்டதில் இது பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.ஒரு 13 வயது சிறுவன் யாஉடைய தூண்டுதலிலோ இது போல தொடர்ச்சியாக செய்து, பிடிபட்டு 30 வருட மத்திய சிறை தண்டனை பெற்ரிருக்கிறான். அவனுடைய பெற்றோர்கள் அதை குறைக்கவும் அந்த தவறால் இன்னொருவருக்கு வந்த மன வேதனைக்கு ஈடாக பணமும்தர பேரம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வழக்கு முற்ரும் முடிந்தபின் இது குறித்து எழுதுகிறேன்.
 



This comment has been removed by a blog administrator.
 



நீங்கள் என்ன கதைக்கிறீர்கள் என்பது புரியவில்லை. ஆனால் தள நிர்வாகியால் தடயமேயில்லாமல் ஒரு பின்னூட்டத்தை அழிக்க முடியும்.
எப்படி என்று தெரிந்து கொள்ள விரும்பினால் சொல்லுங்கள். (பலருக்குத் தெரியாதவிடத்து இதை வெளியிட விரும்பவில்லை. மின்னஞ்சல் அனுப்பினால் சொல்லித் தரலாம்) இப்படித்தான் ரோசவசந்தின் பதிவில் எப்படி மற்றவரின் பெயரில் பின்னூட்டமிடுவது என்று சொல்லப்போய் ரெண்டு பேரிடம் வாங்கிக் கட்டிக்கொண்டேன்.
 



வசந்தன்... தள நிர்வாகியால் தடயமேயில்லாமல் ஒரு பின்னூட்டத்தை அழிக்க முடியும் என்பது எல்லாரும் அறிந்ததே... ஆனால் பின்னூட்டம் இடுபவரால் தடயமே இல்லாமல் அழிக்க இயலாது என்பதே நான் இதுவரை கொண்டிருந்த கருத்து... உதாரணம் உங்களுக்கு முந்தைய பின்னூட்டம்.. யாரோ பின்னூட்டம் இட்டு பின்பு அழித்திருக்கிறார்கள்... ஆனால் Comment Deleted ; This post has been removed by the author. என்று தெரிகிறது பாருங்கள்...

இப்பொழுது ராமச்சந்திரன் உஷா பதிவை பார்த்த பிறகு பின்னூட்டம் இடுபவரே தடயம் இல்லாமல் அழிக்க இயலும் போல்தான் உள்ளது... நீங்களும் இதைத்தான் முடியும் என்று சொல்கிறீர்கள் என்றால் எனக்கு தனி அஞ்சலில் சொல்ல இயலுமா?
 



This comment has been removed by a blog administrator.
 



முகமூடி இப்போதுதான் ஒரு பின்னூட்டம் போட்டு அழித்தேன்.அது பின்னூட்டப் பக்கத்தில் தெரியவில்லை.ஆனால் முகப்பில் ஈழநாதன் என்ற பெயரின் கீழ் பின்னூட்டம் அழிக்கப்பட்டிருக்கின்றது என்று காட்டுகின்றது.ஆனால் உஷாவின் பதிவில் அப்படி எதுவுமே இல்லை என்னமோ மர்மம் இருப்பதாகத் தெரிகிறது
 



இல்லை அடுத்த பின்னூட்டம் வந்ததும் முகப்பிலிருந்த எனது பெயரும் பின்னூட்டம் அழிக்கப்பட்டதற்கான தடயமும் இல்லாமற் போய்விட்டன.ஆகவே இது பெரிய தாதா வேலையெல்லாம் இல்லை.

இதை தடுக்க பதிவின் Setting பகுதியில் Comments என்ற தலைப்பில் மின்ஞ்சல் என்னுமிடத்தில் ஏதாவது gmail or yahoo மின்ஞ்சலைக் கொடுத்து வையுங்கள்.உரியவர் அழித்தாலும் மின்னஞ்சலில் சேமிக்கப்படும்
 



நன்றி ஈழநாதன் & மதி உங்கள் சோதனைகளுக்கு... என் கமெண்ட்ஸ் பகுதியில் ஏற்கனவே மெயில் ஐ.டி உண்டு
 



சரி, உங்க கருத்து ??