<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நாய், சிறுத்தை மற்றும் குரங்கு


எஜமானருக்கு ஒத்தாசயா எப்பவும் கூடவே போகும் வேட்டை நாய் ஒன்னு ஒருநா காட்டுக்குள்ள தடம் மாறி போயிடுச்சி... img crtsy:originalbirdart.comதிருப்பியும் வழி கண்டுபிடிக்க அலையிரப்போ சிறுத்தை ஒன்னு தன்னை நெருங்கறத கண்டுச்சி. சிறுத்த கிட்ட மாட்னா காலின்னு நாய்க்கு தெரியாதா என்ன... தப்பிக்கறதுக்கு இப்ப என்னடா பண்ணலாம்னு யோசிச்ச நாய், பக்கத்துல கொஞ்சம் எலும்புத்துண்டுங்க கெடக்கறத பாத்திச்சி... உடனே சிறுத்தைக்கு தன் பின்புறத்தை காட்டி உக்காந்து எலும்பை கடிக்க ஆரம்பிச்சிது... சிறுத்தை நெருங்கவும், 'ங்கொக்கமக்கா... சிறுத்த கறி ருசியாத்தான் இருக்கு, இன்னிக்கி இன்னொரு சிறுத்த கெடச்சா கூட நல்லாத்தான் இருக்கும்' ன்னுச்சி... இத கேட்டவுடனே 'அடடா ஆழம் தெரியாம கால வுட இருந்தேனே... நல்ல வேளையா நூலிழையில தப்பிச்சோம்டா சாமி, மாட்டியிருந்தா என்னா ஆகியிருக்கும்'னு நினைச்சி சிறுத்தை நைசா சைடுல ஒதுங்கிகிச்சி......

இந்த கூத்தயெல்லாம் மரத்துல உக்காந்து குரங்கு ஒன்னு கவனிச்சிகிட்டே இருந்திச்சி...
img crtsy:gakusyu.shizuoka-c.ed.jpகுரங்கு பயங்கர சாணக்கியம்.. இந்த நாய மாட்டிவுட்டுட்டு சிறுத்தகிட்ட நல்ல பேர் வாங்குனா, அடுத்த தடவ சிறுத்தகிட்ட எதுனா காரியம் சாதிச்சிக்கலாம்னு ரோசனை பண்ணிச்சி... உடனே அது சிறுத்தய பாக்க ஓடிச்சி... குரங்கு சும்மாகாச்சிக்கும் அம்மணமா ஓடாதேன்னு நாய்க்கு தோனிச்சி...

குரங்கு சீக்கிரமே சிறுத்தய வளச்சிடுச்சி... மேட்டர சொல்லி தனக்கு ஆதாயமா ஒரு ஒப்பந்தம் போட்டுகிச்சி... சும்மாவே சீறுற சிறுத்தைக்கா, ஒரு நாய் நம்மள ஏமாத்திபுடுச்சே செம கோவம்... 'குரங்கு வா ஏறு எம்முதுகுல, அந்த நாய உண்டு இல்லையின்னு ஆக்கிபுடுறேன்'னு சொல்லி ரெண்டு பேரும் கெளம்பினாங்க...

img crtsy:pbskids.orgகுரங்கும் சிறுத்தையும் கூட்டணி போட்டு வர்றத நாய் பாத்துச்சி... இதுங்க ரெண்டும் சேந்து வேற வருதுங்களே, இப்ப நமக்கு ஆப்பாச்சே, எப்படி தப்பிக்கலாம்னு சட்னு ஒரு யோசனை பண்ணிச்சி... உடனே பழைய மாதிரியே அதுங்களுக்கு எதிர்ப்பக்கமா உக்காந்துகிட்டு "எங்க அந்த அறிவு கெட்ட குரங்கு... ஒரு சிறுத்தைய புடிச்சிகிட்டு வர்றதுக்கு இவ்ளோ நேரமா" ன்னு சவுண்ட் விட்டுச்சி...

பின்குறிப்பு :: சமயோசிதம் வேணும்கறதுக்காக இந்த கதய சொன்ன பாட்டி, அப்புறம் குரங்கு கதி என்னாச்சி... சிறுத்தை, நாயெல்லாம் என்னாச்சி... எதுவும் சொல்லல... நானும் கேட்டுக்கல... முக்கியமா நான் சொல்ல விரும்புறது என்னன்னா, இந்த கதையில வர்ற சிறுத்தை, நாய், குரங்கு எல்லாம் நாம மிருகம்னு சொல்வோமில்ல, அந்த விலங்குகள்... இந்த கதை முழுக்க முழுக்க கற்பனைதான்... உயிரோடவோ அல்லது வேற மாதிரியாவோ இருக்கற சிறுத்தை, நாய், குரங்கு எதையாவது குறிப்பால உணர்த்துனா, அது தற்செயலானது, அதுக்கு நான் எந்த வித்ததிலயும் பொறுப்பில்ல...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


ப.ம.க தலைவரே
கலக்கல்..

இப்போ என்ன சொல்ல வறீங்க? நாயெல்லாம் பேசிப்பேசியே ஊர ஏமாத்தித் திரியுது.. சிறுத்தை மாதிரி வலியான.. இல்ல வலிமையான மிருகமெல்லாம் குரங்கு பேச்ச கேட்டு முட்டாளாதுன்னா?

முகமூடிய இன்னும் கெட்டியா முகத்திலேயே பிடிச்சுகிட்டே கொஞ்சநாளைக்கு வெளியபோறது நல்லது.. ;-)

மாயவரத்தார் பதிவில அவரோட ரசிகர் மன்றத்தில ஒருவனா ஆதங்கத்தோட கேட்டேன். அதுக்கு போய் ப.ம.க கசந்துடுச்சான்னு கேட்டு என் காதுல.. கண்ணுல ஈயத்த காச்சி ஊத்திப்புட்டீங்களே.. இது நியாயமா? நான் உண்மையான தொண்டன்னு நிருபிக்க என்ன செய்யணும்?சொல்லுங்க. எத்தன பேர வேணா தீக்குளுப்பாட்டறேன்.
 



ஓ...
சமயோசிதமா செயல்பட்டாக்க,
எந்த நாய் வேணும்னாலும்
சிறுத்தய ஏமாத்தலாம் - அப்டீங்கறீங்க !

well said !!

ஞானபீடம். {<<= Please DO NOT click this hyperlink! }
 



நாய்,குரங்கு, சிறுத்தையெல்லாம் பாத்துகிட்டு இருந்துச்சு வேலியில போற ஓணான் ஒண்ணு., பாவம் நாய், குரங்கு, சிறுத்தையோட ஒரு பார்வையவாது அதால தாங்க முடியுமா?., ஆனா அது எம்பி, எம்பி குதிச்சு எதுக்குண்ணு தெரியாமயே கத்திட்டு இருந்திச்சு., குதிச்சதுல சேறு பட்டு அதோட முகம் மறைச்சு இருக்குங்கிற தெகிரியம் அதுக்கு.

பின்குறிப்பு :: சமயோசிதம் வேணும்கறதுக்காக இதச் சொல்லாம விட்ட பாட்டி அப்புறம் அந்த ஓணான் கத என்னாச்சின்னும் சொல்லல. ஓணாங்கூட வேலில போற வேளையத்த ஓணாந்தானாம் அது வேற எதையாவது குறிப்பால உணர்த்துனா, அது தற்செயலானது, அதுக்கு நான் எந்த வித்ததிலயும் பொறுப்பில்ல... சரியா அண்ணாச்சி?
 



ராமநாதன் & ஞானபீடம் :: உங்களோட கருத்துக்கள பாக்கும்போது இக்கதையை பல விதங்களில் அணுகலாம் போலிருக்கிறதே... ஆனால் இதில் சொன்ன கதை பாட்டி காலத்து கதை. அதில் நான் என் சொந்த கற்பனையை கலக்க முடியுமா சொல்லுங்கள்... அதனால்தான் கதையை மட்டும் இங்கே குறிப்பிட்டேன்... உங்கள் மேலான கருத்துக்களுக்கு நன்றி...

சமீப காலமாக எந்த மிருகத்தை பற்றி குறிப்பிட்டாலும் (முன்னாடி எல்லாம் நாய், பச்சோந்தி அளவுல இருந்தது) அதை அரசியல் தலைவர்களோடு சம்பந்தப்படுத்தியே சிலர் சிண்டு முடிவதால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பின் குறிப்பு போட்டேன்... அப்படியும் யாரும் பின்குறிப்பை படிக்கவில்லை போலிருக்கிறது, அடுத்த அத்தியாயம் ஆரம்பித்துவிட்டது... நம்ம முகராசி (?!) அப்படி...

முகமூடி {the Hyperlink you should CLICK! }
 



கதை, படங்களோடு படிக்க அருமையாக இருக்குது.

இதே கதையை நான் கொஞ்ச நாள் முன்பு சிறுவர் பூங்காவில் சொல்லியிருந்தேன்.
 



சரி, உங்க கருத்து ??