<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ஆணும் Old Navy சட்டையும் !!


விளம்பரங்களில் ஆண்கள் எப்படியெல்லாம் கேவலமாகவும் சிக்கனமாகவும் (?!) உபயோகிக்கப் (#$%) படுகிறார்கள் என்பதை பற்றி ஏற்கனவே நான் எழுதியதை தேடி பார்த்தேன், கிடைக்கவில்லை.... எழுதியிருந்தாத்தானே கிடைக்கும்... எங்க வீட்டில் மூன் தொலைக்காட்சி இல்லாததால் (அது வேற எதுக்கு தண்ட செலவு - நடுராத்திரி தாத்தா ஊளையிடுறத கேட்டா பக்கத்து வீட்ல போலீஸ கூப்பிட்டுடுவாங்க) ஓசியில ஒடுன ஏதோ ஒரு தொலைக்காட்சி சேனல பாத்துகிட்டு இருந்தேன்... அப்ப ஒரு விளம்பரம் என்ன மயிர் கூச்செரிய வச்சிட்டுது...

ஒல்ட் நேவி காரங்க ஒரு தீவுல போய் கூட்டமா பாட்டு பாடறாங்க... அந்த பாட்டுல ஒல்ட் நேவி சட்டைங்கள போட்டா எப்படி சுகமா இருக்குங்கறதும் அதுக்கு இப்ப நிறைய தள்ளுபடி கொடுக்கறத பத்தியும் சொல்றாங்க... விளம்பரத்துல வர பொம்பளங்க, குழந்தைங்க, ஒரு குறிப்பிட்ட நிறத்து ஆம்பளங்க எல்லாம் சட்டை போட்றுக்காங்க... ஒரே ஒரு ஆம்பள மட்டும் சட்டை போடல. அவரு வேற கலரு...

இத வெறும் பாட்டுன்னு ஒதுக்க முடியாது.... எனக்கு கோவம் வர காரணம் இருக்கு. எதுக்குன்னு சொல்றேன்:

சட்டை போடாத ஆளும் எல்லாரோடயும் சேர்ந்து பாடறாரு... சட்டையே போடாம சுகமா இருக்குன்னு பொய் சொல்ல வச்சிருக்காங்க அவர..... ஆம்பளங்கன்னா பொய் சொல்வாங்கன்னு ஒரு மாய தோற்றத்த உருவாக்க பாத்திருக்காங்க

சட்டை போடாத ஆம்பள மட்டும் மத்தவங்கள விட வேற நிறம்... இந்த குறிப்பிட்ட நிறமுள்ள ஆம்பிளங்க சட்டை வாங்க வக்கில்லேன்னு சொல்லாம சொல்றாங்களா... இது ரேசியல் டிஸ்க்ரிமினேஷன்.

இந்த விளம்பரத்த பார்க்கும் பெண்பிள்ளைகள் மனசு கெட்டு போகும் வாய்ப்பு இல்லையா... தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு தணிக்கை கிடையாதா.... தெரியாத்தனமா பெண்ணுரிமை அமைப்புகள் ஆம்பளங்கள மட்டும் எப்படி இப்படி அனுமதிக்கலாம்னு போராட ஆரம்பிச்சா நாட்டுக்கு நல்லதா?

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் சட்டை போட்றுக்கேன்... என்னை, அந்த கலர் சட்டை போடு, இந்த கலர் சட்டை போடுன்னு எங்க சீனியருங்க கிண்டல் பண்ணும்போது எனக்கு கோவமா வரும்... நான் பொதுவா சட்டை திருடுற கடை சொந்தக்காரன யாரும் கேக்கறது இல்லை.... எனக்கு அப்புறமா மார்கெட்டுக்கு போன ஒ ஸாரி கல்லூரியில சேந்த என் அண்ணனும் (ஆமா பத்தாங்கிளாஸ்ல 4 வருசம் கோட்டு) சட்டை போட்டுத்தான் போனான். அதுக்கப்புறம் எல்லாரும் சட்டை போட்டுத்தான் போறாங்க...


இப்ப விளம்பரத்த பாத்து மாடு மேய்க்கிற பசங்க சட்டை போடுறதில்லையின்னு கேள்வி படுறேன். என்னமோ போங்க இந்த ஆம்பளங்க மேலயும் தப்பு இருக்கு... எங்களுக்கு மேல் சட்டை இருந்தாத்தான் நடிப்போம்னு சொல்லக்கூட முதுகெலும்பு இல்லாம இருக்கானுங்களே... அட சட்டை வேணாம் ஒரு கச்சையாவது கொடுங்கன்னு பிச்சை எடுக்க கூடாது??

சூட் விளம்பரத்துல வர ஆம்பளங்க பரவாயில்லை, சட்டை போட்டு வரானுங்க... ஒரு சூட் விளம்பரத்துல சட்டை போடாம ஒருத்தன் வந்தப்போ எனக்கு சிரிக்கிறதா அழறதான்னு தெரியாததால தண்ணிய அடிச்சிட்டு... ச்செ.. குடிச்சிட்டு (மினரல் வாட்டர்) தூங்கி போய்ட்டேன்...


டிஸ்க்ளெய்மர்: பெண்ணும் Khaithan மின் விசிறியும் பதிவுக்கும் இந்த பதிவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


//நான் கல்லூரி படிக்கும் காலத்தில் சட்டை போட்றுக்கேன்... //

அப்படீன்னா இப்ப 'சட்டை' இல்லையா ? இல்லை 'சட்டை செய்யரது' இல்லையா?
 



இப்பல்லாம் பெரும்பாலும் தேயிலை சட்டைதானுக்கா... (ஜிகேமணி, tshirtக்கு தமிழ்ல இன்னாபா?)
 



romba sindhikkireengappa...
 



Thankx for ur comment on my blog.
 



நன்றி விஜய்... உங்களின் எந்த பதிவுக்கு கொடுத்த கருத்தை பற்றி சொல்கிறீர்கள்... (முதல்ல இத ட்ராக் பண்ண ஒரு ஏற்பாடு பண்ணனும்பா)
 



ITHELLAM PATRI ROMBA SATTAI PANNAATHEENGA. ENTHA PATHIVAA KINDAL ADICHIRUKEENGANNU THERIYALAA AANA NALLA IRUKKU.

S.THIRUMALAI
 



நன்றி திருமலை... எந்த பதிவையும் கிண்டல் அடிக்கல ஆனா வேறு ஒரு பதிவுக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் இல்லைன்னு டிஸ்க்ளெய்மர் விட்டுறுக்கேனே
 



சரி, உங்க கருத்து ??