<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

நாய் அழகுதான் - கடிக்கும் வரை


சுதந்திரமாம் சுதந்திரம்
அண்டிப்பிழைக்கும் நமக்கெதற்கு

என் பிழைப்பே நாய்ப்பிழப்பு
சுயமென்ன வேண்டியிருக்கு

ஆயிரம் வருடம் அடிமை வாழ்வை
அனுபவித்து வாழ்ந்த என்னை
அவிழ்த்துவிட்டால் என்ன செய்ய

கோண வாலும்
கேன சிரிப்பும்
பொழைப்போட்ட போதுமெனக்கு

ஏற்றுக்கொண்டவனே எஜமான்
எஜமான் சொல்லே வேதம்

அடிபணிந்து காலம் ஓட்ட
போட்டதை தின்று பாதுகாக்க
எவனாயிருந்தால்தான் என்ன

நல்லவனா கெட்டவனா
நமக்கெதற்கு கவலை

எஜமானுக்கு முன் நடந்தால்
எலும்பு கிடைக்கும் ரவைக்கு

நியாயமா அநியாயமா
நமக்கெதற்கு சிந்தனை

தலைவனுக்கு எதிரியா
பாய்ந்து பிடுங்கு அ·தே மந்திரம்

img crtsy: dircon.co.ukமனித பாஷை புரியாதுதான்
எஜமானுக்கு வசவா வாழ்த்தா
நாய் நமக்கு அது எதற்கு
சிரிப்பில்லையா எதிராளி முகத்தில்
முதல் குரைப்பில் நன்றி காட்டு

தேவைப்படின் குரைத்து
அளவாக முறைத்து
அவ்வப்போது வாலாட்டி
அழகென்றே சொல்கிறது ஊர்

எனக்கும் வயதாகும்
என் குரைப்பும் மதிப்பிழக்கும்
குரல் நல்ல காவல் என்ற பார்வை
சகிக்க இயலா ஊளையென்றாகும்
அப்போது ஊரே என்மேல் கல்லெறியும்


இருந்தால் போல் இருந்து நேத்து பக்கத்து வீட்டு நாய்க்கு வெறி பிடித்து விட்டது... இவ்வளவு நாள் எப்போதாவது பொத்தாம் பொதுவாக குரைக்கும் நாய் இப்போது சம்பந்தமில்லாமல் எல்லாம் குரைக்க ஆரம்பித்து விட்டது. மூக்கு விடைக்க (பார்க்க படம்) நாக்கில வெறி நீர் ஒழுக ஊளையிடும் அதன் குரலை கேட்க பாவமாக இருக்கிறது. அதன் வாழ்க்கை முறை பற்றி சிந்தித்த போது விளைந்த வார்த்தைகள் மேலே... இதை கவிதை என்று எவரேனும் சொன்னால் :: அட எனக்கு கூட கவிதை வருகிறதே...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நாய் ஏன் குரைக்க வேண்டும், ஏதாவது எல்லை தகறாரோ?
 



/இதை கவிதை என்று எவரேனும் சொன்னால் :: அட எனக்கு கூட கவிதை வருகிறதே... /
தலைவா, நீங்க சும்மா கம்மாங்கரைக்கவிஞ்ஞரா? தோணிக்கரை கண்ட மூணு வயதிலேயே ஞானப்பாலுண்டு பாடின தேவாரக்கவியில்லையா? இது கவிதைதான். வேணுமுன்னா, உங்களுக்கு ஆட்சேபணை இல்லையின்னா நீங்க வாந்தியதேவரின்னா நான் ஆழ்வாக்கடியான்னு
ரசிகமன்றத்தலவரா நான் இருந்துடுறேன்.
 



ரோசா என்ன தகராறோ யாமறியோம்... அப்படியே கேக்கலாம்னா "இவன் தன்மையாத்தான் கேக்க வாரான்"னு நாய்க்கு தெரியுமோ??

***

-/peyarili வாந்தியத்தேவனா, வந்தியத்தேவனா... பொடி வச்சி பேசறதுல கில்லாடியா இருக்கீங்களே...
 



/வாந்தியத்தேவனா, வந்தியத்தேவனா... பொடி வச்சி பேசறதுல கில்லாடியா இருக்கீங்களே.../
ஐய்யய்யோ! எல்லாம் பையனை ஒரு கையிலை வச்சுக்கொண்டு தட்டுறதிலே வரும் வினை நான் குற்றியலகரம் அடித்தால், குட்டி இன்னொரு அகரமும் சேர்த்து நெடுக்கிவிடுகிறது :-(
 



சம்மி பெயரிலி எழுத்துப்பிழையோட அடித்தாலும் பரவாயில்ல... குழந்தைய கையில வச்சிக்கொண்டே அடிக்கட்டும்... குழந்தை கீழ இறங்கினானென்றால், இவர் தாடி, சிப்பா, கண்ணாடி, சோல்னா பை சகிதமா வேற ஒரு அவதாரம் எடுப்பார்.... அப்புறம் ஒரு முறைக்கு 4 முறை படித்தால்தான் என்னை மாதிரி அறிவிலிக்கு என்ன சொல்ல வருகிறார் என்பதே புரிய வரும். (அந்த நடையும் நல்லாத்தான் இருக்கும், சமீபத்தில் எங்கேயும் காணோமே)

-/peyarili ப.வி.ஸ்ரீ தங்களை இரமணி என்று அழைக்கிறாரே... அவருக்கு தாங்கள் பெயரிலி என்பது தெரியாதா?
 



//குற்றியலகரம் அடித்தால், குட்டி இன்னொரு அகரமும் சேர்த்து நெடுக்கிவிடுகிறது//

குற்றிய -லிகரம் -லுகரம் இவற்றோட இப்பொ -லகரமும் சேந்துக்குச்சா? இந்த வேகத்துல தமிழ் வளர்ந்தா எங்கள மாதிரி தமிங்கிலர்கள் எப்பிடி ஈடு குடுப்பாங்களாம்?

நல்ல கவிதை முகமூடி :)
 



/-/peyarili ப.வி.ஸ்ரீ தங்களை இரமணி என்று அழைக்கிறாரே... அவருக்கு தாங்கள் பெயரிலி என்பது தெரியாதா?/
ராமசாமி என்றாலென்ன, நரசிம்மராமன் என்றாலென்ன, ரோஸு ரோஸுதான் கூஸு கூஸுதான். அழைச்சுக்கட்டும்
 



I can't read the writing, but I love the pictures!!
 



தலைவா, நீங்க சும்மா கம்மாங்கரைக்கவிஞ்ஞரா? தோணிக்கரை கண்ட மூணு வயதிலேயே ஞானப்பாலுண்டு பாடின தேவாரக்கவியில்லையா? இது கவிதைதான். வேணுமுன்னா, உங்களுக்கு ஆட்சேபணை இல்லையின்னா நீங்க வாந்தியதேவரின்னா நான் ஆழ்வாக்கடியான்னு
ரசிகமன்றத்தலவரா நான் இருந்துடுறேன்.

பாலறா வாயரா சொல்லவேயில்லையே
 



நன்றி vow புலவருக்கு சில சமயம் அடி சறுக்கும்தானே.

****

-/peyarili என்னமோ செய்தி கொடுக்கிறீர்கள் என்று புரிகிறது... என்ன என்றுதான் புரியவில்லை

****

samiyar நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்... ஒலிக்கும் பறை (சம்பந்தம் இல்லை என்று அவர் பதிவில் சொன்னாலும் கூட) நான் சமுதாயத்தை குறித்து எழுதியிருக்கிறேன் என்கிறார். பிறகு யாராவது ஒருவர் வந்து நான் ஏதாவது ஒரு அரசியல் கட்சி தலைவரை சொல்கிறேன் என்பார்... யார் யாருக்கு எப்படி எப்படி தோன்றுகிறதோ அவரவருக்கு அப்படி அப்படி அர்த்தம்...

****

Thanks Erin Just wondering what keyword might've got you here...

****

ஈழநாதன் நீங்கள் சொல்வது (கேட்பது) எனக்கு புரியவில்லை... வருகைக்கு நன்றி
 



நண்பரே,

இது நல்ல கவிதை

அன்புடன்

ராஜ்குமார்
 



படம் சூப்பர் , அதைவிட எளிய நடையில் எழுதப்பட்டுள்ள உங்கள் கவிதை டபுள் சூப்பர் !!
வாழ்த்துக்கள்
வீ எம்
 



அடிக்கடி பார்ப்பதில்லைதான் வரதன்... இப்போது பார்த்தேன். நீங்கள் குறிப்பாக ஏதேனும் ஒரு மெயிலை குறிப்பிட விரும்புகிறீர்களா? எனில் எனக்கு மினனஞ்சல் செய்யவும். நன்றி
 



மனுசரைப் பேசுறதெண்டா நேரடியாப் பேசுறதுதானே அதை விட்டிட்டு ஏன் நன்றியுள்ள நாயை எதுக்கு வம்புக்கு இழுக்கிறீங்கள்.
 



வாங்க ராஜ்குமார் & வீ.எம் கவிதைன்னு சொன்னதுக்கு நன்றி... நல்லாருக்குன்னு வேற சொன்னதுக்கு டபுள் நன்றி !!

****

மனுசரை எல்லாம் பேசவில்லை கறுப்பி நான் முன்னமே சொன்னபடி ஒரே விசயம் சாமியாருக்கும், ஒலிக்கும் பறைக்கும் வேறு வேறு அர்த்தத்தில் தோன்றுகிறது. இன்னமும் ஒருவர் வரவில்லை, வந்தால் ஒரு தலைவரை கல்லால் அடிக்கும் முயற்சி இது என்பார். அவரவர் கருத்து அவரவருக்கு. நான் என்ன செய்ய இயலும்.
 



முகமூடி,
மிக அருமையான கவிதை. எனக்கு என்னென்னவோ பொருத்தங்கள் தோன்றுகின்றன.
 



கவிதை எதற்காக என்று புரியவில்லை ... ... .. இதில் ஏதாவது சாதீய தாக்குதல் இருந்தால் அதனை நான் கண்டிக்கிறேன் ..
 



வந்தியத்தேவரும் நானும் என்ற பெயரில் பதிவாக வந்தது, இங்கு பின்னூட்டமாக...

என்னை வந்தியத்தேவரே என்று பெயரிலி அழைத்த பொழுது எனக்கு ஒன்றும் விளங்கவில்லை... என் போன பதிவில் தேவரே என்று அழைத்ததன் தொடர்ச்சி என்பதாகத்தான் அதை நினைத்தேன்... பிராமணர் என்று முத்திரை போல் - தனது நையாண்டி நடைக்காக பெயர் பெற்ற பெயரிலி - தேவர் என்று என்னை அழைக்கிறார் என்று நினைத்தேன்... கதிர்காமர் சொன்னது போல பெயரிலி குறைந்தது 3 அர்த்தங்களல்லாது பேசமாட்டார் என்பதன் பொருளை நான் விளங்கியிருக்கவில்லை... பின்பு இன்னொருவர் பதிவில் நான் வந்தியத்தேவர் என்பதாக உணர்ந்ததால் தான் வருந்துவதாக பதிவாளர் சொல்லவும் அங்கே தட்டியது பொறி...

என் உலகம் மிகவும் சிறியது... தாமதமாக இப்பொழுதுதான் வந்தியத்தேவர் என்பவர் ஏற்கனவே இரு பதிவுகள் கொண்டிருப்பதையும் அதில் ஒரு பதிவு முழுதும் நல்ல கவிதைகள் இருப்பதையும் கண்டேன்...

தோன்றுவதை கிறுக்கும், நேற்றுதான் முதல் கவிதை - அது கவிதையா என்பதே சந்தேகம் - எழுதிய என்னை பொருள் செறிந்த கவிதைகளும் படைப்புகள் படைத்தவருமான உண்மையான வந்தியத்தேவரோடு அடையாளப்படுத்த முயற்சிக்கும்போது என் சுயத்தை அழிக்கும் முயற்சி மட்டுமல்ல அது, அவரையும் கேவலப்படுத்தும் முயற்சி என்பதாக்வே அது பார்க்கப்படும்...

தமிழ வலைப்பதிவாளர் பலருடன், முகம் தெரியாவிட்டாலும் உணர்வால் பிணைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன்... இவர்களையெல்லாம் சந்தித்து உரையாடினால் நன்றாக இருக்கும் என்று நான் நினைப்பவர்களில் பெயரிலி முக்கியமானவர். அவர் யூகத்தை வெளிப்படுத்தினாரேயன்றி, உள்ளர்த்தம் கொண்டிருக்க மாட்டார் என்பதே என் நம்பிக்கை... ஆகவே உலகுக்கு ஒரு அறிவிப்பு :: நான் வந்தியத்தேவன் அல்ல

உங்கள் குரல் :

@ June 30, 2005 8:00 PM க்கு நம்ம -/பெயரிலி. சொல்றது என்னன்னா:
போச்சுட்டா!
"தப்புத்தாளங்கள் வழி தவறிய பாவங்கள்.
இவன் இப்படி வாழ்வதென பிறர் எழுதிய வேதங்கள்"

இதை உங்களுக்குச் சொல்லத்தானா தனி மின்னஞ்சலெல்லாம் கேட்கிறார்கள்? ;-)

@ June 30, 2005 11:51 PM க்கு நம்ம mugamoodi சொல்றது என்னன்னா:
-/பெயரிலி இப்பத்தான் பார்த்தேன்... குசும்பனுக்கும் பட்டம் கொடுத்திட்டீர்கள் போல... தேவர் மேல் அப்படி என்ன பாசமோ...

சைடு கிக் :: நீங்களும் குசும்பனும் என்ன பாஷை பேசுகிறீர்கள். சாமான்யன் என் போல் ஆட்களுக்கு அந்த பாஷை புரிய என்ன படிக்க/குடிக்க வேண்டும்...
 



முத்து & தாஸ¤ தாஸ¤க்கு ஒன்றும் புரியவில்லை, முத்துவுக்கோ என்னன்னவோ புரிகிறது.... இது எண்ணச் சமநிலை அநீதியல்லவா... இதை கண்டு நெஞ்சு பொறுக்குதில்லையே... நீங்கள் இருவரும் கலந்துரையாட வேண்டியது இக்காலகட்டத்தில் அவசியமாகிறது...
 



//இன்னமும் ஒருவர் வரவில்லை, வந்தால் ஒரு தலைவரை கல்லால் அடிக்கும் முயற்சி இது என்பார்.//

யாரைக்கூறுகின்றீர்? தற்போது பல பதிவுகளில் மவுனவிரதமிருக்கின்றேன், அதில் ஒன்று உங்கள் பதிவு
 



// யாரைக்கூறுகின்றீர்? // கண்டிப்பாக உங்களை சொல்லவில்லை என்றால் நம்புவீர்களா குழலி...
 



மூக்கு சுந்தருக்கு :: மணிக்கூண்டின் பதிவில் அவருக்கான என்னுடைய கேள்விகளை தெளிவாக அவரிடம் கேட்டிருந்தேன்... நீங்கள் வந்து "மற்றவருக்கு செய்தி செய்தி மட்டுமே" என்று அதிகாரம் செய்த போது இவர் யார் பக்கத்து வீட்டுக்கு காவல் என்ற கேள்வி வரத்தான் செய்யும்... மற்றவருக்கு என்றால் என்ன, குழு சேர்க்கிறீர்களா... யார் யார் எல்லாம் மற்றவர்கள். நீங்கள் யார்... உங்களுக்கு என்ன உரிமை கேள்வி கேட்பவருக்கு வக்காலத்து வாங்க என்ற கேள்வியெல்லாம் எழுவது இயல்பு... அதை கேட்ட பாலாவுக்கு பதிலளிக்கும் போது "இதற்கு முந்தைய பதிவின் பின்ன்னூட்டத்தில் முதலில் ஆட்சேபம் எழுப்பியவன்" என்று சப்பைகட்டு கட்டினீர்கள்... முந்தைய பதிவில் ராம்கிக்கு ஆட்சேபணை எழுப்பியதை விட டோண்டுவை வசை பாடுவதே உங்கள் நோக்கமாக தோன்றியது... (அதில் உங்களின் அடுத்த பின்னூட்டமும் அதற்கு சாட்சி...)

அப்படியே இருந்தாலும் ஆட்சேபணை எழுப்புவது எனபது "மற்றவ்ருக்கு செய்தி" எனும் சொல்லுமளவு ஒரு தகுதியை தராது... எல்லா பதிவிலும் போய் நான் ஆட்சேபனை எழுப்பினால் எழுதியவனுக்கு என்ன மதிப்பு.. அப்புறம் பத்வருக்கு 'அட்மினிஸ்ட்ரேட்டர்' என்ற அந்தஸ்து எதற்கு... அதைத்தான் தெளிவாக நிதானமாக உங்களுக்கு கேள்வியாக கேட்டேன்.. அதுவும் கூட கண்களை மூடிக்கொண்டு, என் கருத்துக்களைஅநியாயம் என்று நீர் முதலில் சொன்ன பிறகே... இல்லையெனில் உமக்கும் எனக்கும் அங்கே விவாதமே கிடையாது... நான் என்னவோ உம்முடைய பதிலை படிக்காமல் கேட்ட மாதிரி ஆத்திர/அவசரமாக நீர் அதே பதிலை மீண்டும் பதிவு செய்துவிட்டு என்னை தனிப்பட்ட முறையில் ஆத்திர/அவசரக்காரன் என விளித்தீர்... உமது பொறுமை தீருவதாகவும் அறிவித்தீர்... அப்போதே புரிந்து விட்டது உமது நிலைப்பாடு... உம்மிடம் கருத்தாட அதற்கு மேலும் எனக்கு தோன்றவில்லை.. இதுவரை நடந்ததை கண்டால் நான் பொறுமையாகத்தான் வாதாடியிருக்கிறேன் என்பது அனைவருக்குமே விளங்கும்.... (உண்மை உண்மை, பல இடங்களில் பல பதிவுகளில் நடக்கின்றது.... இது ஒரு தந்திர உபாயமாகவே இருக்கின்றது - என்றார் குழலி வேறு என்ன நடக்கிறது என்று புரியாமல்... ஆனால் அவர் பொதுவாகவே அபிப்ராயப்பட்டிருக்கிறார் என்று நம்புகிறேன்)

உமக்கு வீண் சண்டையில் விருப்பம் அதிகம் என்பதை உமது கரப்பான் பூச்சி கவிதையில் கண்டேன்... நானாக முதலில் எதுவும் அர்த்தப்படுத்திக்கொள்ளவில்லை. கவிதையில் பூடகமாக இருந்த விஷயம், உமது பின்னூட்டத்தில் உம்மால் நேரடியாகவே என் பெயர் குறிப்பிட்டு தெளிவாக்கப்படும் வரை... கரப்பு கவிதையில் எவ்வளவு கீழ்த்தரமான எக்காளம்... உமக்கும் எனக்கும் என்ன பகை... ஏன் இந்த ஆவேசம்... உமக்கு பின்னூட்டம் விடக்கூட மனமின்றி விலகி போகவே விரும்பினேன்...

கரப்பு கவிதையின் பாதிப்பே எனது நாய்க்கவிதை... ஆனால் அதை யாரும் அறிந்திருக்கவில்லை... ஒரு கவிதைக்கு எதிர்வினையாக எழுதிய கவிதையை ஒரு சமுதாய தலைவருக்கு எதிராக பாடியதாக அனர்த்தப்படுத்திக்கொண்டு ஒலிக்கும் பறை அவர் பதிவில் பிரசுரம் செய்தார்... நான் சொல்ல வந்த விஷயம் வேறு மாதிரி எடுத்துக்கொள்ளப்பட்டது... அவர் நோக்கம் எனக்கு தெரியும், எனினும் எனக்கு தேவையில்லாத விஷயம் அது... பிறகு சாமியார் என்பவர் கவிதைகள் தொடர்பை மோப்பம் பிடித்த போது கூட அக்கவிதை எதை குறித்து என்று நான் சொல்லவில்லை... உமது பதிவில் பின்னூட்டத்தை நிறுத்திய பொழுது (வந்தியத்தேவன் என்று தவறாக நினைத்து வருத்தப்பட்டாலும்) பெருந்தன்மையானவர் என்று நினைத்தேன்..

இப்பொழுது மீண்டும் மல்லுக்கு நிற்கிறீர்கள்...

// முகமூடியின் நாய்க்கவிதையும், அதற்கு முன்னான பச்சோந்திக் கவிதையும், மணிக்கூண்டு சிவாவின் பதிவில் நடந்த விவாதத்தின் கோழைத்தனமான தொடர்ச்சி. // ஏன் உங்கள் கரப்பு கவிதையை குறிப்பிடவில்லை... அது என்ன வீரத்தின் அடையாளமா... கோழைத்தனம் என்பதை ஆட்சேபிக்கிறேன். இப்படி அர்த்தம் கற்பிப்பது உங்கள் எண்ணத்தின் முதிர்ச்சியின்மை காரணம்.

// முகத்தை மறைத்துக் கொண்டு வந்தும், எதற்கு இவ்வளவு கோழையாக இருக்க வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை // இது ஒரு பல்லவி எங்கு பார்த்தாலும்... என் பெயர் முகமூடி.. அதில் உங்களுக்கு என்ன ப்ரச்னை... என் முகமும் முகவரியும் தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள். உங்கள் கருத்து மாறப்போகிறதா... உங்களுக்கு தேவை என் கருத்தா, அல்லது என் நிழல்படமா? எழுத்துதான் முக்கியம், பெயர் சொல்லி எழுதுவதை விட...

// இந்த மாதிரியான அணுகுமுறைகளுக்கு நண்பர்கள் காட்டும் உணர்வும், என்னை வியப்பிலாழ்த்துகிறது. // உங்கள் அபிப்ராயமே அனைவரின் அபிப்ராயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது வியப்பு வருவது சகஜமே...

// திருமாவளவனின் மீதான இவர்களின் ஈவிரக்கமற்ற அணுகுமுறைக்கு இவர்களிடம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை என்பதால் தற்போதைக்கு மெளனமாக இருக்கிறேன். // திருமாவளவன் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல... தலித் என்பதாலோ, தலித் எழுச்சிக்கு (என்பது மட்டும் என்ற நிலையில் அவர் இல்லை... பல தளங்களில் இயங்குகிறார் இப்போது) பாடுபடுகிறார் என்பதாலோ அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக முடியாது... அவரை மற்றவர் எல்லாம் அரசியல் தலைவராக பார்க்கும்போது நீங்கள் மட்டும் தலித்/தலைவராக பார்க்காதீர்கள்... இது குறித்த பதிவு ஏற்கனவே என்னிடம் உள்ளது... இந்த நீண்ட விடுமுறை முடிந்து பதிப்பிப்பேன்...

நிறைய பேருக்கு :: ஜாதியை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள் என்று சலித்துக்கொள்ளும் நீங்கள்தான் ஜாதியை தூக்கிக்கொண்டு அலைகிறீர்கள். எந்த ஜாதியாய் இருந்தால் என்ன? ஜாதியை தூக்கிக்கொண்டு அலைகிறீர்கள் என்பதுதான் முக்கியம்...

இதற்கு உங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தோன்றினால், தன்மையான முறையில் அளியுங்கள்... இல்லையெனில் நன்றி... மேலும் கீழ்நிலையில் சென்று இந்த விவாதத்தை தொடர - அதில் எனக்கு தயக்கமொன்றும் இல்லையெனினும் - எனது சக்தியை செலவிட விரும்பவில்லை... புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்... முகமூடி.
 



This comment has been removed by a blog administrator.
 



//திருமாவளவன் ஒன்றும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரல்ல... //

திருமாவளவன் மட்டுமல்ல, அரசியல் பொது வாழ்க்கைக்கு வரும் யாருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களல்ல, ஆனால் அதற்காக கடைபிடிக்கப்படும் அளவுகோல்கள்? இங்கே பலரும் பாமகவை, திருமாவை, தாக்கும் அளவிற்கு வேறு யாரையும் எதற்காகவும் கண்மூடித்தனமாக தாக்குவதில்லை, ஒத்த கொள்கையுடைய திமுக வை தாக்குமளவுக்கு அதிமுகவை யாரும் விமர்சிப்பதே இல்லை, காங்கிரசை போட்டுத்தள்ளும் அளவிற்கு பாஜகவை தொடுவதில்லை, நடுநிலைமையான எழுத்தை எல்லோரிடமும் எதிர்பார்க்கமுடியாது ஓரளவாவது நடுநிலைமையாக எழுதலாம் ஆனால் ஒன்றை மட்டும் தாக்கி எழுதி ஒன்றை கண்ணைமூடிக்கொண்டால் இது மாதிரியான விமர்சனங்களை எதிர்கொண்டுதானாக வேண்டும்,
//

தலித் என்பதாலோ, தலித் எழுச்சிக்கு (என்பது மட்டும் என்ற நிலையில் அவர் இல்லை... பல தளங்களில் இயங்குகிறார் இப்போது) பாடுபடுகிறார் என்பதாலோ அவர் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக முடியாது...//

சிங்கப்பூர் பயணம் கோயம்பேடு பயணமாக மாறுவது விமர்சனமாகவும் எமக்கு தெரியவில்லை, நகைச்சுவையாகவும் தெரியவில்லை வேறொரு வெளிப்பாடாகத்தான் தெரிகிண்றது.

// அவரை மற்றவர் எல்லாம் அரசியல் தலைவராக பார்க்கும்போது நீங்கள் மட்டும் தலித்/தலைவராக பார்க்காதீர்கள்... இது குறித்த பதிவு ஏற்கனவே என்னிடம் உள்ளது... இந்த நீண்ட விடுமுறை முடிந்து பதிப்பிப்பேன்... //

யார் அந்த மற்றவர் எல்லாம்?? எங்கே காண்பியுங்கள்? அப்படியானல் மற்ற தலைவர்களையும் மீறி கடுமையான காழ்புணர்ச்சிய்யோடு வீசப்படும் நெருப்பு வார்த்தைகளுக்கு காரணமென்ன? போடுங்கள் உங்கள் பதிவை நியாயமாக இருக்கும் பட்சத்தில் பாராட்டுகின்றோம்...

//
நிறைய பேருக்கு :: ஜாதியை தூக்கிக்கொண்டு அலைகிறார்கள் என்று சலித்துக்கொள்ளும் நீங்கள்தான் ஜாதியை தூக்கிக்கொண்டு அலைகிறீர்கள். எந்த ஜாதியாய் இருந்தால் என்ன? ஜாதியை தூக்கிக்கொண்டு அலைகிறீர்கள் என்பதுதான் முக்கியம்...
//
இது ஒரு அற்புதமான ஜல்லியடிப்பான பேச்சு, வாதத்தால் இதற்கு எதிர்த்து பதில் சொல்லமுடியாதபடி ஒரு அருமையான மூலையில் தள்ளி மடக்கும் உத்தி,

தன்னைத்தானே பள்ளி,பறையன் என்று சொல்லிக்கொள்வதற்கும் அடுத்தவன் சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.

இன்னொருவன் தன்னை உயர்சாதி ஆதிக்க சாதி என வெளியிலே சொல்லிக்கொள்வதும் அந்த சாதி சார்பாக பேசுவதிலும் ஒடுக்கப்படவன் பேசுவதிலும் வித்தியாசம் உள்ளது. நான் ஒலிக்கும் பறையின் நாய் அழகுதான் - எதிர்க்கும் வரை பதிவில் கூறிய கருத்து உங்களை மட்டும் குறிவைத்தல்ல, திருமாவின் மீதான தாசுவின் கேள்விகளுக்கும் பொதுவாகவே ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பது போல திருமாவையும் இராமதாசுவையும் பலர் காழ்ப்புணர்ச்சியோடு தாக்கும் போக்கை எதிர்த்தும் தான் என்னுடைய கருத்தை கூறியுள்ளேன்.
 



மன்னிக்கவும் ஒரு வார்த்தை விடுபட்டுவிட்டது

சிங்கப்பூர் பயணம் கோயம்பேடு பயணமாக மாறுவது விமர்சனமாகவும் எமக்கு தெரியவில்லை, நகைச்சுவையாகவும் தெரியவில்லை வேறொரு வெளிப்பாடாகத்தான் தெரிகிண்றது. அதனால்தான் அந்தப் பதிவில் பின்னூட்டமிடவில்லை
 



குழலி முதலில் ஒரு விளக்கம்... ஒலிக்கும் பறை பதிவில் உங்களுக்கும் செய்தி உண்டு என்று சொன்னதன் அர்த்தம் :: நீங்கள் மணிக்கூண்டு பதிவில் சுந்தருக்கு அடுத்து செய்தி தொடர்ச்சியாக பின்னூட்டம் எழுதினீர்கள். ஒ.ப பதிவிலும்.... எதேச்சையாக இருப்பினும் என்ன நடக்கிறது என்பதின் முழு வீச்சும் அறியாமல் எழுதுகிறீர்களோ என்ற என் எண்ணமே உங்களுக்கான செய்தி...

மற்றபடி, நீங்கள் நம்ப வேண்டிய அவசியமில்லாவிட்டாலும், லூஸ் மோகன் கோயம்பேடு பயணம் எழுதிய போது ஒரு கிண்டலாகத்தான் எழுதினேனே தவிர திருமாவை மட்டம் தட்டும் நோக்கில அல்ல... இருப்பினும் திருமாவின் சிங்கப்பூர் பயணத்திற்கு என்னளவில் அவ்வளவுதான் முக்கியத்துவம் என்பது வேறு விஷயம்... எனக்கு கருணாநிதி பெங்களூர்/ஊட்டி போவது, அம்மையார் திராட்சை தோட்டத்துக்கு போவது, அன்புமணி SFO வந்தது எல்லாம் ஒன்றுதான்... அதில் ஒன்றும் விஷயம் இல்லை... (இது குறித்த என் கமெண்ட் ஜீன் டாப் 10ல்... விரைவில் எதிர்பாருங்கள் ஜீன் டாப் 10)

கம்யூனிஸ்டுகளை யாரும் தாக்குவதில்லை... அதனால் அவர்கள் செயல்கள் எல்லாம் விமர்சனமற்ற செயல்களா... அதற்கு வீரியம் அவ்வளவுதான்... மற்றபடி திருமாவுக்கும் ராமதாஸ¤க்கும் மட்டும் மட்டையடி என்பது அவர்களின் செயல்பாடுகளால் விளைவது... தார் அடித்த போது இவர்களை எல்லாரும் கடுமையாக விமர்சித்தார்கள்... மற்றபடி திருமாவை யாரும் அனாவசியமாக விமர்சிக்கவில்லை... (மணிக்கூண்டு விஷயத்தில் ராம்கியின் கேள்வி யதேச்சையாக கையாளப்பட்டிருக்கலாம் என்பதுதான் எப்போதுமான என் கருத்து... படிக்க என் பின்னூட்டம்) ராமதாஸ் விஷயமே வேறு... விமர்சிக்கப்படாமல் இருக்கும் செயல்களையா செய்கிறார் அவர்... அதனால் வேறு வழியில்லை... அவரை விமர்சிக்க கூடாது என்றால் அவரை நிறுத்தச்சொல்லுங்கள், நான் நிறுத்துகிறேன் (யப்பா, ஒரு டயலாக் டெலிவரிக்காக சொன்னது.. இதுக்காக கூண்டுல ஏத்திடாதீங்க)
 



மன்னிக்கவும் ஒரு வாக்கியம் விடுபட்டுவிட்டது

இப்போதாவது இப்பதிவுக்கும் திருமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நம்புவீ£ர்கள் என நினைக்கிறேன்
 



// இப்பதிவுக்கும் திருமாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று.... // இதையும் இதற்கு முன் உள்ள என் பின்னூட்டத்தையும் படித்த பின்பும் தன் பிறழ்ந்த கருத்தையே மீண்டும் பேசி சில ஓநாய்கள் உரத்து ஒலிக்கும்படி ஊளையிடுகின்றன... ஆச்சரியமில்லை, மற்றவர் சண்டைக்கு பின் கிடக்கும் எச்சங்கள்தானே ஒநாய்களுக்கு உணவே...
 



I didn't use a keyword, I was just hitting the Next Blog button at the to p of the page.
 



முகமூடி அண்ணாத்தே,
நாய்ப்படம் ஜூனியர் விகடன்லே இருந்து எடுத்ததா?

உங்க பதிவைப் படிச்சபோது இந்த நாய்ப்படத்தையும் எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தோன்ற, ஜூவியில் நாய் மாதிரி கத்தி இறந்துபோன ஒரு பையனின் புகைப்படமும் கட்டுரையும் பார்த்தது நினைவுக்கு வந்தது.

எம்.கே.
 



இல்ல எம்.கே... கவிதைதான் நம்ம சொந்த சரக்கு... படம் இணையம்தான்... என் வலைப்பூக்கள்ல இருக்கற படங்களின் மேல எலிக்குட்டிய வச்சீங்கன்னா, image courtesty: அப்படீன்னு அந்த படத்தோட ஆதி தெரியும்...
 



//இங்கே பலரும் பாமகவை, திருமாவை, தாக்கும் அளவிற்கு வேறு யாரையும் எதற்காகவும் கண்மூடித்தனமாக தாக்குவதில்லை,
//
I think Kuzali is mentioning this for the 97th (or 98th, have to go back and check again !!!) time :-))

Note to Kuzali: Pl. take the above as a JOKE ONLY !!!!
 



சரி, உங்க கருத்து ??