<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மீன், மனிதன் மற்றும் பச்சோந்தி


மீன் சாதாரணமாக செய்யும் ஒரு செயலை நம்மால் செய்ய முடியாதது ஏன். ஆக்ஸிஜனும் ஹைட்ரஜனும் கலந்தது செய்த கலவைதான் தண்ணீர் என்றால் தண்ணீருக்கு அடியில் ஏன் நம்மால் சுவாசிக்க முடிவதில்லை... மீன் சுவாசிப்பது H2Oவில் இருக்கும் ஆக்ஸிஜன் வாயுவை அல்ல. பதிலாக தண்ணீரில் கலந்திருக்கும் O2 எனப்படும் ஆக்ஸிஜன் வாயுவை.. நிறைய வாயுக்கள் திரவங்களில் கலந்திருக்கும் (சோடாவில் வரும் குமிழிகள் சோடா தண்ணீரில் கலந்திருக்கும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேருவதால் வருவது)

மீன் தண்ணீரில் கலந்திருக்கும்ஆக்ஸிஜன் வாயுவை முள்ளால் "சுவாசிக்கிறது"... தண்ணீரில் இருந்து ஆக்ஸிஜனை பிரித்து எடுப்பது மிகவும் கடினமான வேலை. ஒரு கரண்டி காற்றில் 20 பங்கு ஆக்ஸிஜன் இருக்கிறதென்றால், ஒரு கரண்டி தண்ணீரில் ஒரு மடங்கு ஆக்ஸிஜன்தான் இருக்கும். மேலும் தண்ணீர் காற்றை விட பல மடங்கு எடை அதிகம்... ஆகவே இந்த பிரித்தெடுக்கும் வேலை முதுகுத்தண்டை பிரிக்கும் ஒரு வேலை... மீனுக்குத்தான் முதுகுத்தண்டே கிடையாதே... மீனுக்கு முள்ளே போதுமானதாக இருப்பதற்கு காரணம், மீன் ஒரு ஜில்லு ரத்த பிராணி என்பதால். அதனால் அதற்கு தேவைப்படும் ஆக்ஸிஜனின் அளவு கம்மி. சூட்டு ரத்த பிராணியான திமிங்கிலங்கள் தண்ணீருக்கு மேலே வந்து புஸ்ஸ¤ புஸ்ஸ¤ன்னு மூச்சு விடுவதன் காரணம் அதுதான். (அத காமிக்க கூட்டிட்டு போறேன்னு சொல்லி இங்க நெறய க்ரூஸ் கம்பெனி கப்பல் ஓட்டிகிட்டு இருக்காங்க)

சரி நாம் ஏன் தண்ணீருக்கு அடியில் சுவாசிக்க முடியல. நம்ம லங் இயந்திர வடிவமைப்பு அப்படி. தண்ணீரில் இருக்கும் வாயுவை பிரித்தெடுக்கும் அளவு நுரையீரல் பரப்பளவு பெரிதாக இல்லை. மேலும் வடிவமைப்பும் தண்ணீர்க்கு பதிலாக காற்றையே கையாளும் படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மனிதர்கள் திரவங்களை 'சுவாசிக்க' முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். ·ப்ளூரோகார்பன்ஸில் ஆக்ஸிஜன் வாயுவை நன்கு கலந்து அதை மனிதன் 'சுவாசித்தால்' நுரையீரல் ஆக்ஸிஜன் வாயுவை பிரித்தெடுத்துக்கொள்கிறது

தலைப்பு படி பாத்தா மீன் ஆச்சி, மனிதன் ஆச்சு... பச்சோந்தி... அது கவித கவித...

உனக்கு இரு உலகிலும் இருக்கும் நல்லது மட்டும் வேண்டும்
ஆனால் உனக்கு இரண்டுமே கிடைப்பதில்லை...
வேலியிலேயே (மதில்மேல்) இருக்க பிரியப்படுகிறாய்
எந்த பக்கம் பச்சையோ, வேலியில் இருப்பதே நல்லது...
சிலர் கடினமாக உழைக்கிறார்கள்
img crtsy: www.natures-image.co.ukசிலர் போராடுகிறார்கள்
சிலர் அனைத்தையும் இழக்கிறார்கள்
அதெல்லாம் நமக்கெதுக்கு...
நடிப்பதும் இதமாக இருப்பதும்
விரும்பியதை பெற்றுத்தரும் நமக்கு...

சுற்றுப்புறத்துடன் கலப்பதில் மன்னன் நீ...
நீ யார், எங்கிருந்து வந்தாய் யாருக்கும் தெரியாது.
காலத்துக்கேற்ப மாறிக்கொள்கிறாய்...
உன் ஈடுபாடு சமரசத்துக்குட்படுவது
நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும்
வெட்கமில்லாமல் சமரசம் செய்து கொள்கிறாய்...
முகத்திரையில் பின் மறைந்து கொள்கிறாய்...

உன் இருப்பே உனக்கு முக்கியம்,
அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வாய்...
உன் முகத்தில் மறைந்திருக்கும் சிரிப்புக்கு என்ன அர்த்தம்,
யாருக்கும் தெரியவில்லை...

வெளியே வா, வெளியே வா,
வெளியே வந்து தனித்து நில்...
கண்ணுக்கு தெரியா களம் என்று ஒன்றும் இல்லை...
கறுப்பு அல்லது வெள்ளைதான்,
இரண்டில் ஒன்று பார்த்துவிடு...
தப்பை சரியாக்க,
உன் வார்த்தை விளையாட்டை புரிந்து கொள்ள,
நேரம் இல்லை யாருக்கும்...
நீ முடிவெடுக்க வேண்டிய நேரம் இது...

தழுவல்: கருத்துக்கு howstuffworks.com ; கவிதைக்கு Petra வின் Chameleon


அறிவுப்பசி அண்ணாசாமி: ரொம்ப நாளக்கப்புறம் அரசியலே இல்லாம பதிவு போட்ருக்காப்ல இருக்கு...


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நல்ல பதிவு. தூள் தேவரே! சம்பந்தரே பால் குடித்து ஞானம் வந்து எழுதின மாதிரியான கவிதை.
 



தேவர் என்று அழைக்கப்படுவதை ஆட்சேபிக்கிறேன். அது வானுலக தேவரை குறித்தாலும் கூட
 



பச்சோந்தி என்று சொல்லி எங்கள் இராமதாசு அவர்களை மறைமுகமாகத் தாக்கிய முகமூடி அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர் ஒரு தேர்தலுக்கு தி.மு.கவுடனும் அடுத்த தேர்தலுக்கு அதிமுகவுடனும் கூட்டு வைப்பதைத்தானே சொல்கிறீர்கள்? உங்கள் ஜெயா மட்டும் ஒழுங்கா? ஒரு தேர்தலுக்கு காங்கிரஸ் அடுத்த தேர்தலுக்கு பாஜக.
 



ரொம்ப நாளக்கப்புறம் அரசியலே இல்லாம பதிவு போட்ருக்காப்ல இருக்கு... என்று அறிவுப்பசி அண்ணாசாமி சொல்லியிருக்க, அரசியலை புகுத்த நினைக்கும் லாடு அவர்களை *.*.* (இப்பதிவில் அரசியல் தவிர்க்கப்டுகிறது) வன்மையாக கண்டிக்கிறது
 



//சூட்டு ரத்த பிராணியான திமிங்கிலங்கள் தண்ணீருக்கு மேலே வந்து புஸ்ஸ¤ புஸ்ஸ¤ன்னு மூச்சு விடுவதன் காரணம் அதுதான். (அத காமிக்க கூட்டிட்டு போறேன்னு சொல்லி இங்க நெறய க்ரூஸ் கம்பெனி கப்பல் ஓட்டிகிட்டு இருக்காங்க)//

அங்கேயுமா? இங்கே கொஞ்சம் சுலபமாப் பாக்கக்கிடைக்குதுன்னு நிறையப்பேர் இதுக்காகவே இங்கே வராங்க!

சிலசமயம் 'பாக்கக் கிடைக்கலேன்னா' கொஞ்சம் காசுகூட திருப்பித்தராங்களாம்!!!

என்றும் அன்புடன்,
துளசி.
 



/ தேவர் என்று அழைக்கப்படுவதை ஆட்சேபிக்கிறேன். அது வானுலக தேவரை குறித்தாலும் கூட/
மூடியண்ணே, பின்னாடி பாதாளபைரவின்னு கூப்பிடுடுவேன். நீங்க, "அமேதியில்லா என் மனமே என் மனமே" ன்னு பாடிட்டே வருவீங்களாம். இதுக்குப் போயி கவலப்பட்டுக்கீறீங்களே
 



-/பெயரிலி அவர்களுக்கு

அமேதியில்லா என்று ராகுல் காந்தியின் தொகுதி பெயரை குறிப்பிடுவதற்கு ஆட்சேபிக்கிறேன்... இப்பதிவில் அரசியல் கலப்பில்லாமல் இருக்க இம்முறை மட்டும் அமைதியில்லா என்று குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்
 



துளசியக்கா... நீங்க திமிங்கிலம் பாத்துருக்கீங்களா.. இங்க அத சர்க்கஸே பண்ண வச்சிருக்காங்க சீ வேர்ல்டுல.. அப்புறம் பச்சோந்தி பாத்துருக்கீங்களா?? ஏன்னா நீங்க *.*.*ல ... வேணாம் அரசியல் பேசக்கூடாது
 



/அமேதியில்லா என்று ராகுல் காந்தியின் தொகுதி பெயரை குறிப்பிடுவதற்கு ஆட்சேபிக்கிறேன்... இப்பதிவில் அரசியல் கலப்பில்லாமல் இருக்க இம்முறை மட்டும் அமைதியில்லா என்று குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்/
அய்யோ! ஷமிக்கணும் ஸ்வாமி. தமிழ் தகராறு பண்ணுதே. தடங்கலுக்கு மன்னித்துக்கொண்டு அமை தீயில்லா மனமே என்று வாசித்துக்கொள்ளுங்கள் முகமூடி அவர்களே.
 



-/பெயரிலி அவர்களுக்கு

ஷமிக்கணும் ஸ்வாமி என்று சொல்வதன் மூலம் சுப்ரமணிய ஸ்வாமியை எந்த விதத்திலாவது தாங்கள் குறிப்பாலுணர்த்த முயர்ச்சிக்கிறீர்களா, எனில் அது நல்ல விதமாகவா எதிர்விதமாகவா என்பதை சொல்லி, இந்த பதிவு அரசியல் தாக்குதலுக்குள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்
 



நானும் 'சேண்டியாகோ ஸீ வொர்ல்ட்'லேதான் பார்த்தேன். 'ஷாமு'ன்னு அதுக்குப் பேர்
சொன்னாங்க. கூடவே இன்னும் ரெண்டு திமிங்கிலமும் இருந்துச்சு. சர்க்கஸ் செஞ்சுதுங்க!!

உடம்புல்லாம் 'ப்ளாஸ்டிக்'லே செஞ்சதுபோல வழுவழுன்னு இருதுச்சா, எனெக்கென்னமோ அதெல்லாம்
'மேன்மேடோ'ன்னு ஒரு சந்தேகம் வந்துருச்சு!( சொல்ல முடியாதுப்பா! அமெரிக்காக்காரன் செஞ்சாலும்
செய்வான்1 நிலாவுலே ஆளை இறக்குன மாதிரி:-)))) அதுவே ஒரு பித்தலாட்டமுன்னு இப்ப ஒரு பேச்சு
வந்துகிட்டு இருக்குல்லே!)

நம்ம நாட்டுலே இருக்கறது 'ஹம்ப்பேக்' வகை. அதனோட இயற்கைச் சூழலிலேயே பார்க்கலாம். படகுலே
கொண்டு போறாங்க. ஹெலிகாப்டர்லேயும் போய்ப் பார்க்கலாம்! நம்ம வீட்டுலே இருந்து ரெண்டரை மணி
நேரக் கார்பயணம்! ஒருமுறை அங்கே போயிட்டு, காலநிலை சரியில்லைன்னு
அந்த 'போட் ட்ரிப் கான்ஸல்' ஆயிருச்சு. இந்தவருசம் சம்மர்லே போலாமுன்னு இருக்கோம்!

துளசிஅக்கா
 



/ஷமிக்கணும் ஸ்வாமி என்று சொல்வதன் மூலம் சுப்ரமணிய ஸ்வாமியை எந்த விதத்திலாவது தாங்கள் குறிப்பாலுணர்த்த முயர்ச்சிக்கிறீர்களா, எனில் அது நல்ல விதமாகவா எதிர்விதமாகவா என்பதை சொல்லி, இந்த பதிவு அரசியல் தாக்குதலுக்குள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்/
முகமூடி அவாள்களே
ஞான் ஷமிக்கணும் பறைஞ்செல்லோ? பிறகும் அதிலே கெட்டவிதமும் இருக்கமுடியுமா? :-(
 



//உனக்கு இரண்டுமே கிடைப்பதில்லை...
கலப்பதில் மன்னன் நீ
வெட்கமில்லாமல் சமரசம் செய்து கொள்கிறாய்
உன் முகத்தில் மறைந்திருக்கும் சிரிப்புக்கு என்ன அர்த்தம்
நீ முடிவெடுக்க வேண்டிய நேரம் இது//
- முகமூடி

ஞானபீடம். சொல்வது:

ஆஹா... கவித... கவித...

சுவாசிப்பு பற்றி விளக்கம் கொடுத்து,
தான் போலி மருத்துவர் அல்ல,
மெய்யாலுமே மெய்யாலுமே
எம்பி எம்பி படிச்ச மருத்துவர்தான்னு
முகமூடி நிரூபிச்சுட்டார்; வாழ்த்துக்கள்.

- ஞானபீடம்.
 



Please note the above comment by -l-l-d-a-s-u-- was not me.. some poli l-l-d-a-s-u--
 



-/பெயரிலி அவர்களுக்கு

தாங்கள் மலையாளம் பேசியது எதேச்சையானது, அதன் மூலம் தமிழக (மறைந்த) முன்னாள் முதல்வர் பற்றி எதுவும் குறிப்பால் சொல்ல வரவில்லை என்று உறுதியாக சொல்வீர்களேயானால் நான் மெத்த மகிழ்ச்சியடைவேன்..
 



தாஸ¤ உமக்கு எதிரிகளா?? யாராக இருக்க முடியும்.. அதில விசயம் என்னன்னா, நீர் சொன்னது கிண்டல்னு நினைச்சு பதில் எழுதிட்டேன்.. அது உமக்கு ஒரு நல்ல கவசம்யா.

அய்யகோ மோசம் போனேனே... பெயரிலி profile hidden profile ஆக முடிகிறதே... அவர் பெயரில் வந்த பின்னூட்டஙகளும் போலியா...

அடப்பாவிகளா, இப்படி எல்லா பேர்லயும் போலியா அலைஞ்சா உங்க குறிக்கோள்தான் என்னங்கடா..
 



// எம்பி எம்பி படிச்ச மருத்துவர்தான்னு // எம்பி எம்பி படித்து டாக்டராவது அந்தக்காலம், டாக்டராகி எம்பி ஆவது இந்த காலம் என்பதை ஞானபீடத்துக்கு நினைவு படுத்த விரும்புகிறேன்... (ஞானபீடம் போலி அல்ல என்பது முதல் சுற்று சரிபார்த்தலில் தெரிகிறது... அடுத்த சுற்றில் எப்படியோ... போலிதான் சித்து விளையாட்டு ஆடுகிறானே)
 



துளசியக்கா, திமிங்கிலம் கிடைக்க (காண) வாழ்த்துக்கள்... அர்விந்த் நாம் பார்த்து கூட இருக்கலாம். தமிழ் ஜாதியல்லவா கண்டும் காணாதது போல் சென்றிருக்கலாம். அடுத்த தடவை பார்க்கும் போது அலைவரிசை அடிக்கிறதா என்று பார்ப்போம்
 



மீன் H20 வில் இருக்கும் ஆக்சிஜனைப் பிரிப்பதில்லை. மாறாக தண்ணீருக்குள் இருக்கும் காற்றைத்தான் பிரிக்கிறது. அப்படி H2O விலுள்ள ஆக்சிஜனைப் பிரித்திருந்தால் மீன் தொட்டிகளிலுள்ள நீரெல்லாம் ஹைட்ரஜனாகி ஆவியாகிருக்கும். தண்ணீர் இருந்தும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மீன்கள் இறப்பதுண்டு. அதற்காகத்தான் மீன் தொட்டிகளில் காற்றுக் குமிழ் உமிழிகளை வைப்பதுண்டு.
 



ஐயா முகமூடி அவர்களே,
நீங்கள் எழுதியதைப் பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. உங்கள் பதிவு அனானிப் பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்திருக்கிறது. இப்போது உங்கள் வேலை சுலபம்தானே. எலிக்குட்டியை பெயரின் மேல் வைத்து பார்க்கக்கூடத் தோன்றவில்லையா? அதுதான் ஆக்டோபஸ் போல போலி டொண்டு செயலாற்றுகிறாரே.

எலிக்குட்டியை பெயரின் மேல் வைத்து பார்ப்பதைக் கூட செய்யாது இவ்வாறு குழந்தையாக இருந்திருக்கீறீர்களே.

சென்னை பஸ்களில் ஜேப்படி கும்பல் ஏறும்போது நடத்துனர் சில மறைமுக சமிக்ஞை தருவார். புரிந்து கொண்டப் பயணிகள் தங்கள் உடமைகளைப் பாதுகாத்து கொள்வர். மற்றோர் கோமணம் வரை பறிகொடுத்து நிற்பர்.

வழக்கம்போல இப்பின்னூட்டம் என் வழக்கமானப் பதிவில் நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



// மீன் H20 வில் இருக்கும் ஆக்சிஜனைப் பிரிப்பதில்லை. மாறாக தண்ணீருக்குள் இருக்கும் காற்றைத்தான் பிரிக்கிறது. // howstuffworks.com ல் நான் படித்த கட்டுரையில் "the fish are breathing O2 (oxygen gas) that is dissolved in the water." என்று இருக்கவும் அப்படியே மொழிபெயர்த்துவிட்டேன்...
 



டோண்டு அவர்களே, பெயரிலி உண்மையா போலியா என்று இன்னமும் எனக்கு தெரியாது.. அவர் profile எண் private என்று முடிகிறது, ஆகவே ஒரு சந்தேகம்தான். தாஸ¤ விஷயத்தில் சறுக்கியது, எதிர்பாராதது.. உங்கள் பெயரில் போலி வரும் என்று தெரியும், ஆனால் இப்படி எல்லார் பெயரிலும் போலி வரும் என்று எதிர்பார்க்காததால் நடந்த விஷயம் இது... இனிமேல் எல்லார் profile id யும் சோதிக்க வேண்டும் போல... வெறி பிடித்த நாய் ஊருக்குள் புகுந்தால் மக்களுக்குத்தான் எவ்வளவு கஷ்டம்.
 



/டோண்டு அவர்களே, பெயரிலி உண்மையா போலியா என்று இன்னமும் எனக்கு தெரியாது.. அவர் profile எண் private என்று முடிகிறது, ஆகவே ஒரு சந்தேகம்தான்./

என்ன சொல்லவருகிறீர்கள்?
 



இப்போது கண்டுகொண்டேன்.
இல்லை; இட்டது பெயரிலியாகிய பெயரிலியேதான். வேண்டுமானால், டோண்டு அய்யா மாதிரி என் பதிவிலும் போட்டுவிடுகிறேன்
 



எலிக்குட்டியைப் பெயரில் வைத்துப் பார்க்க ஒன்றும் தெரியவில்லை என்று தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றேன்.
 



விளக்கத்துக்கு நன்றி பெயரிலி... இனி ப்ரொபைல் ஐ.டி. வேறு சரிபார்க்க வேண்டும். உங்களை மாதிரி ப்ரொபைல் ஐ.டி தெரியாத பதிவுகளை எப்படி சரிபார்ப்பது என்று வேறு தெரியவில்லை... வாங்க கறுப்பி.. என்னோட றொறண்றோ கேள்விக்கு நீங்க பதில் சொல்வீங்கன்னு எதிர்பாத்து காத்திருந்து தாடி தரையை தொட்டதுதான் மிச்சம்
 



Mugamoodi,
Yaaruppaa Nee...Kalakku kalakkunnu kalakkarae. Vaazga nee Emmaan!

- Arun Vaidyanathan
(Elikutti maela vechchu blogger id therinjudhunna...adhukkappuram paeru en perudhaanaanu paarunga. If that is also true, then email me from your real email id, just in case to confirm whether it is me. If suppose you get a email back from my real email id, then most probably this comment is by me! (Abbaaaa.....moochchu vaangudhu!)
 



கவலப்படாதீங்க அருண்... உங்க ஐ.டிய செக் செய்ற காலம் வர இன்னும் நாள் இருக்கு... சீக்கிரம் உங்க பெயர்ல போலி வரணும்னா அஜெண்டா படி நீங்க எழுதணும்... விருப்பப்பட்டா, சில பல பதிவுகள்ல உங்களுக்கு க்ளூ இருக்கு
 



சரி, உங்க கருத்து ??