<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe", messageHandlersFilter: gapi.iframes.CROSS_ORIGIN_IFRAMES_FILTER, messageHandlers: { 'blogger-ping': function() {} } }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ப.ம.க.வின் புதிய சட்டங்கள்


பச்சோந்தி மக்கள் கட்சி இயற்ற இருக்கும் புதிய சட்டங்களின் வரைவு நகலை அக்கட்சி பொது செயலாளர், (அடுத்த) தலைவர் சின்ன முகமூடி இன்று வெளியிட்டார். மேலும் அவர்களின் சட்டங்களால் யாரும் பாதிப்படையக்கூடாது என்ற அக்கரையில் அதற்கான மாற்று யோசனைகளையும் தெரிவித்தார். அதன் விபரம் ::

1. வன்புணர்தல் (கற்பழிப்பு) காட்சி என்றால் சேவல், கோழியை துரத்துவது போல் காண்பிக்கலாம்... பின்பு திரை வெறுமை ஆக வேண்டும். "மோசமான காட்சிக்கு பின் படம் தொடரும்" என்று ஸ்லைட் போட வேண்டும்... இந்த முழு காட்சியிலும் கோழியின் அலறலோ மத்த எந்த சத்தமோ கேட்காமல் இசை ம்யூட் செய்யப்பட வேண்டும். இந்த காட்சியின் போது திரை வெறுமையாக இருப்பினும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கண்களை மூட வேண்டும். மூடவில்லையெனில் பக்கத்தில் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்டோர், உட்பட்டோரின் கண்களை மூட வேண்டும். (சட்டம் 18)

2. சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்றாலும் வில்லன் கெட்டவன் என்று சித்தரிக்க அவன் வாயில் புகை வைக்க வேண்டியிருப்ப்பதால் இனி மைதா (அ) கோதுமை மாவு மூட்டையில் இருந்து மாவை அள்ளி போட்டு வில்லன் அதை புகையாக விடுவதாக காட்ட வேண்டும்... அந்த மூட்டையின் மேல் மைதா/கோதுமை என்று எழுதி இருக்க வேண்டும். (சட்டம் 37)

3. வில்லன் தண்ணி அடிப்பதை காண்பிக்க பழரசச்சாறு அருந்துவதாக காண்பிக்கலாம்... என்ன பழரசம், என்ன ப்ராண்டு என்பது தெளிவாக காண்பிக்க வேண்டும்... மேலும் வில்லன் தோன்றும் போதெல்லாம், வில்லனால் சமுதாயத்துக்கு ஏற்படும் பாதிப்புகளை subtitle ஆக போடவேண்டும் (சட்டம் 54)

4. எது திரைப்படம், எது வாழ்க்கை? எது நிழல் எது நிசம்? என்றெல்லாம் பகுத்துணர தெரியாத அறிவுகெட்ட கூமுட்டைகளான இளைஞர்களை அரசியல்வாதிகள் வெட்டியாக பயன்படுத்துகிறார்களே, நாமும் அவர்களை வெறுமனே விசிலடிச்சான் குஞ்சுகளாக மட்டும் வைத்துக்கொள்வோம் என்று எண்ணாமல் கலைஞர்கள் அதிலும் வெகுசன ஊடகமான திரைப்பட நடிகர்கள் தமக்கு மற்றவர்களைவிட அதிகம் சமூகப்பொறுப்புணர்விருக்கின்றதா?? என்று தினமும் காலை ஒருமுறை மாலை ஒரு முறை கேட்டுக்கொள்ள வேண்டும் (சட்டம் 89ஆ)

5. உலக நாகரீக இயக்கம் எடுத்த புள்ளிவிவரப்படி இளைஞர்கள் பெண்களை பார்த்து ஜொள்ளு விடுவதில் உலக அளவில் தமிழ்நாடுதான் முன்ணனியில் இருக்கிறது. இதற்கு காரணம் சினிமாவில் பெண்களை காண்பிப்பதுதான் என்றும் அந்த பு.வி சொல்கிறது... ஆகவே இனி இளைஞர்கள் சமுதாயம் சீர்திருந்தும் வகையில் பெண்களை திரையில் காண்பிக்கவே கூடாது. (சட்டம் 13.அ) கதாநாயகி இல்லாமல் வருமாறு கதை எழுத எழுத்தாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தேவைப்படின் பெண் கதாபாத்திரத்துக்கு ஆண்கள் மாறுவேஷம் போட்டு நடிப்பதில் ஆட்சேபணை இல்லை. ஆனால் அப்படிப்பட்ட படங்களுக்கு A சர்டிபிகேட் வழங்கப்படும்.

img crtsy:halwacity

6. ஆண் கதாபாத்திரம் என்றாலும் பெண் வேஷத்தில் இருப்பதால் கழுத்துக்கு மேலும், கை மணிக்கட்டின் கீழும், கால் பாதம் மட்டும் தெரியும்படி மட்டுமே உடை அலங்காரம் இருக்க வேண்டும். இடுப்பு காண்பிக்கவே கூடாது... தப்பி தவறி அந்த வேஷத்தை பார்த்தே யாராவது இளைஞர்கள் உணர்ச்சி வசப்படலாம் என்பதால் "இது ஆண், பெண் அல்ல" என்று கொட்டை எழுத்துக்களில் படம் முழுக்க திரையில் தோன்ற வேண்டும் (சட்டம் 13.ஆ)

சட்டம் 13.ஆ வை மீறிய குற்றத்திற்காக சத்யராஜ் (படம்) அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது... அவர் மன்னிப்பு கேட்க விரும்பினால் ஒரு நிபந்தனையின் கீழ் மன்னிக்கப்படுவார். இனி படங்களில் அவர் பெண் வேஷம் கட்டக்கூடாது... (சத்யராஜுக்கு அன்பு வேண்டுகோள்: வெகுளியான & நல்ல மனமுடைய சின்ன முகமூடி ஐயா அவர்களின் மனமார்ந்த பாராட்டுக்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஒரு கடிதம் எழுதி அனுப்பவும்.... அடுத்த படத்தில் நீங்கள் நடிக்கவே இல்லை என்றாலும் நாங்கள் பாராட்டு தெரிவித்துவிட்டு இந்த கடிதத்தை ரிலீஸ் செய்து கொள்கிறோம்)

நற்செய்தி: மரத்தை வெட்டி அவ்விடத்தில் செடி நடுதல், சைக்கிள் ஓட்டுதல், மாம்பழம் பறித்தல், தார் பூசுதல் முதலிய காட்சிகள் இடம்பெறும் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


கலக்கல் முகமூடி!!!
மதுரை தாஸ்....
 



அப்படியே கல்லூரிகளில் பேஷன் ஷோக்களை தடை செய்து கல்வி நிறுவனங்களின் நடத்தை விதிமுறை கமிட்டி ஒன்று போட்டு மதுரை ஆதினம், திருப்பனந்தாள் ஆதினம், காஞ்சி.. வேணாம் வம்பு, குன்றக்குடி ஆதினம் எல்லாரையும் வச்சி நன்நடத்தை வழிகாட்டும் விதிகள் ஏற்படுத்தி அத செயல்படுத்தவும் பசங்க எல்லாம் பட்டையும் மொட்டையும் அடிச்சி 'சம்போ சிவ சம்போ'ன்னு வரணும்னும் சட்டம் போட ஒரு யோசனை இருக்கு... அது அடுத்த கூட்டத்தொடர்ல
 



லாடு லபக்கு தாஸ் என்ற அருமையான பேர் இருக்க மதுரை தாஸ் என்ற பெயர் ஏனோ??
 



கலக்கல் போட்டால் மட்டும் நான் மதுரை.தாஸ் (இதுவரை புள்ளி வைக்க மறந்துட்டேன்)
 



என் அன்பிற்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் சொந்தத்துக்கும் பண்பிற்கும் உரிய அருமை அண்ணன் பெரிய முகமூடி தலைமையில், புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழியை நிரூபிக்க வந்த தளபதி சின்ன முகமூடியின் மூளையில் உதித்த தாயுள்ளம் கொண்ட திட்டங்கள் அனைத்தையும் இந்த செயற்குழு ஒருமனதாக வரவேற்கிறது.

ஒ.ம் தன்மான பச்சோந்தி,
மூத்த இணை துணை பொதுச் செயலாளர்,
ப ம க.
 



// கலக்கல் போட்டால் மட்டும் நான் மதுரை.தாஸ் // என்னய்யா தாஸ¤... நல்லாத்தானே எழுதுவீரு... இப்போ வசந்துங்க மாதிரி புரியாத பாஷையில என்னமோ சொல்றீரு...
 



// அன்பிற்கும் பாசத்துக்கும் நேசத்துக்கும் சொந்தத்துக்கும் பண்பிற்கும் உரிய // ம்ஹ¥ம் பேசற போக்க பாத்த பேச தெரியாத நம்ம பையனுக்கு ஆப்பு வச்சிருவாரு போலருக்கே இந்த சுரேசு.... பேசாம் கொல செய்ய முயற்சி செய்யறாருன்னு ஏதாவது சொல்லி கச்சிய விட்டே கட்டம் கட்டிட வேண்டியத்துதான்...
 



An addition to first point..

1) A hen can also rape a cock...
 



வலைப்பூக்களில் வரும் பதிவுகள் எப்படியாக அமையவேண்டும் என்பதையும், அவை மீறப்படும்பட்சத்திலல் என்ன நடவடிக்கைகள் எம்மால்மேற்கொள்ளப்படும் என்பதனையும் விரைவில் எமது தலைமை அறிவிக்கும்.

குறிப்பாக தமிழ் மீதும், தமிழ்த் தேசியத்தின் மீதும் களங்கமேற்படுத்தும் பதிவுகளை யாராவது இட்டால்...

தமிழ்மக்கள் மத்தியில் குழப்பங்களை மேற்கொள்ள முற்பட்டால்...

எமது இயக்கத்தை மீறி வேறெவராவது வளர முற்பட்டால்...

பட்டியல் நீளும். தலைமையின் தீர்க்கமான முடிவு விரைவில் அறிவிக்கப்படும்.

- புதியோன்
(ஊடுருவல் படையணி)

அநாவசியமான, தரக்குறைவான பதிவுகளை எழுதும் வலைப்பதிவாளர்களின் தளங்கள் எமது தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதை அறியத் தருகிறோம்.
எனவே ஒழுங்காக நல்ல பிள்ளைகளாக பதிவுளைப்போடுமாறு எமது இயக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இது எச்சரிக்கை மட்டுமன்று, கட்டளை! கட்டளை! கட்டளை!
எமது பலத்தைக் காட்டவே இது. வெறும் முன்னோட்டம் தான்.

அப்ப வரட்டுங்களா தோழர்களே, தோழியரே!
(இயக்கம் எண்டு வந்திட்டா இப்படியான பெயருகளிலதான் மற்றாக்களக் கூப்பிட வேணுமெண்டு முன்னோர் சொல்லியிருக்கினம்.)
இப்படிக்கு,
-உம்மாண்டி-
பெடியன்'கள்
 



போலி டோண்டு போல இது போலி பெடியன்கள்.... தன் அடையாளம், இனிஷியல் எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு மற்றவர் பெயரில் வாழ சுகம் காணுது மனசு... பாவம் யாருக்கோ மனப்பிறழ்வு நோய் முற்றிவிட்டது...
 



சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிப் போச்சு ஹாஸ்பிடல் போகனும் செலவு உங்கப் பொறுப்பு முகமூடி
 



எங்கள் கழக/கட்சி தலைவர், ஆருயீர் அண்ணன் , இதய தெய்வம், வருங்கால , நெடுங்கால , இறந்த கால , இருண்ட கால , நிரந்தர முதல்வர் முகமூடி அவர்களே,
மைதா/கோதுமை என்று எழுதி இருக்க வேண்டும்.
ரேஷன் கடை மைதாவா இருந்தா புழு , பூச்சி இருக்கும் , பார்த்துக்க சொல்லுங்க !
நற்செய்தில இதை விட்டுட்டீங்க : சினிமா நடிகரை நக்கலடித்து படமெடுத்தால் 100% வரி விலக்கு

பச் .. கட்சியின் விசுவாச தொன்டன்
வீ எம்
 



ப்ரியன் எவ்வளவு நக்கல் இருந்தா கட்சி தலைவர் கிட்டயே காசு கேப்பீங்க. இது ஒரு வழிப்பாதையப்பா... காசு கொடுக்கலாம், கேட்கக்கூடாது...

இருந்தாலும் கட்சி தொண்டர் என்ற முறையில் (நீங்க விரும்பினாலும் விட்டாலும் கட்சியில் உங்களை சேர்த்தாச்சு) உங்களுக்கு மருத்துவ வசதியும் செய்ய வேணும், ஆனா காசும் செலவாகக்கூடாது. அதுக்கு :: நிறைய ஊழல் பண்ணுங்க... பின்னாடி உங்கள கைது செஞ்சாக்கா, நெஞ்சு வலிக்குதுன்னு சும்மா சொல்லுங்க போதும்... அரசாங்க ஆஸ்பத்திரியில முதல் வகுப்பு சிகிச்சை கிடைக்கும்
 



அனாமதேயம் அதுக்குள்ள புரிஞ்சிடுச்சா... உன் மரமண்டைக்கு புரியணும்னு நான் இன்னும் என்னான்னமோ எழுத திட்டம் வச்சிருக்கேனே..

வீ.எம் சினிமா நடிகரை கிண்டலடித்தால் 100% வரிவிலக்கு அந்த காலம்.. இப்பல்லாம் ஒண்ணுக்குல்ல ஒண்ணாயிட்டோமே தெரியாதா? அப்புறம் உங்கள மாதிரி விசுவாச தொண்டர்கள் இருக்கற வரைக்கும் எனக்கென்ன கவலை... சரி கட்சி நிதி செலுத்திட்டீங்களா... நான் டைரக்ட் பண்ற படம் அடுத்த மாசம் வருது... எல்லா டிக்கட்டையும் நீங்களே வாங்கி மானம் கப்பலேறாம காப்பாத்துங்க
 



சரி, உங்க கருத்து ??