<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி


ப.ம.க
(பச்சோந்தி மக்கள் கட்சி) இன்று முதல் பதிவு செய்யப்பட்ட கட்சி ஆகிறது...

நிறுவன தலைவர்: முகமூடி

மற்ற உயர்மட்ட பதவிகள் ஏற்கனவே பகிர்ந்தளிக்கப்பட்டன... சென்னை ஏரியாவை பெரிய மகனும் (1.1); செங்கை கிழக்கு, வடாற்காடு, தென்னாற்காடு ஏரியாவை மற்றொரு மகனும் (2.3) ; மதுரை, திருச்சி ஏரியாவை ஏதோ ஒரு மகனும் (1.4); வட இந்தியாவை மருமகனும் கவனித்துக்கொள்ள பெருந்தன்மையுடன் இசைந்துள்ளார்கள்...
(x.y புரியாதவர்களுக்கு :: x=மனைவி நம்பர். y=மகன் நம்பர்)

மேலும் ராஜ்யசபா வழியாக மத்திய மந்திரியாக வேண்டும் என்ற நம் கட்சி தொண்டர்களின் அழுகாச்சியை ஏற்று மந்திரி ஆவதாக சேலை கட்டிய என் மருமகள் பெரிய மனசுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

காலியாக இருக்கும் கீழ்க்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன ::

ராமநாதபுரம், கோவை, நெல்லை, மும்பை ஏரியா பிரதிநிதிகள் :: தலைவருக்கு குடும்பமாக இருக்க விருப்பப்படும் அழகான பெண்மணி (கள்). வயதுக்கு வந்த மகன் (கு.ப வயசு 32) இருந்தால் கூடுதல் தகுதி. தலைவர் 'வளர்ப்பு' மகனாக சுவீகரித்து மூட்டை நிறைய பணமும், பதவியும் கொடுத்து சிறப்பாக கல்யாணமும் பண்ணி வைப்பார்.

கொள்கை பரப்பு செயலாளர் (hot: அடுத்த முதல்வராகும் வாய்ப்பு) :: அழகான இளம்பெண்கள்... நடிப்பு அனுபவம் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதும் திறமை கூடுதல் தகுதியாக கருதப்படும்.

கொள்ளை பரப்பு செயலாளர் :: நிதி வசூல் செய்யும் திறமை. நம் கட்சி அலுவலக வாசலில் இருக்கும் இரண்டு மாடி அளவு உண்டியலை தலைவர் பிறந்த நாள், தலைவர் கல்யாண நாள் போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் நிரப்பும் துடிப்பு

மாவட்ட செயலாளர் :: கனமான பெட்டியை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு காட்டுக்குள் மிக அதிக தூரம் ஓடும் திறமை.

மகளிர் அணி :: புடவை கட்டி விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்த அனுபவம்.

தொண்டர்கள் :: வீட்டில் கோடாரி, வீச்சரிவாள் வைத்திருக்கும், தலைவருக்கு பணமாலை, காலில் விழுவது போன்ற சுயமரியாதை பழக்கம் கொண்ட எவரும்

கட்சி கொள்கைகள் ::

1. இந்த கட்சி, அந்த கட்சி என்று பாகுபாடெல்லாம் பார்க்க மாட்டோம்... யாரோடு சேர்ந்து எக்கேடு கெட்டாலும் எப்போதும் 4 மந்திரி பதவியை கைவசம் வைத்திருக்கும்படி பார்த்துக்கொள்வோம்... அதுதானே தமிழக நலனுக்கு நல்லது.

2. ஓட்டு போடும் மக்கள் கஷ்டப்பட விட மாட்டோம்... கஷ்டம் தெரியாத அளவில் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள 'சூடு இருக்கிறது அதோடு சேர மாட்டேன், சொரணை இருக்கிறது இதோடு சேர மாட்டேன்' என்றெல்லாம் காமெடி பண்ணுவோம்... அப்புறம் உதிர்ந்த ரோமம், நடத்தை கெட்ட குடும்பம், மானம் கெட்ட பொளப்பு முதலிய கோஷங்களை போடுவோம்

3. 'சிறை சிங்கங்கள்', 'பழைய மெட்ராஸ்' போன்ற உதிரி கட்சிகளை பிழைப்பில்லாமல் சோர்ந்து போக விடமாட்டோம். பிரச்சார பீரங்கிகளாக உபயோகித்துக்கொள்வோம்.. ரோடு போடுவது, தார் ஊற்றுவது போன்ற வேலைகளுக்கும் அவர்களை பயன்படுத்துவோம்.

இதுவரை நம் கட்சிக்கு தமிழகம் முழுவதும் 10 கோடி உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று அறிகிறோம்... இந்த எண்ணிக்கையை மேலும் கூட்ட இளைஞர்கள் உழைக்க வேண்டும்... மக்களிடம் உள்ள காசு வளர்ச்சி நிதி உண்டியலில் வந்து சேர வேண்டும் என்ற உன்னத குறிக்கோள் கொண்டிருக்க வேண்டும். இதை விடுத்து வேறு மயக்கத்தில் இருந்தால் சாட்டை எடுக்க வேண்டி வரும்.

பி.கு :: கட்சியின் பெயர், சின்னம் ஆகியவை பேடண்ட் செய்யப்பட்டது. அனுமதியில்லாமல் இதை உபயோகிக்க வேண்டாம் என்று வலைப்பதிவாளர்களை (முக்கியமாக லாடு, மாயவரத்தான், துளசி, குயிலி) கேட்டுக்கொள்கிறோம்.

அறிவுப்பசி அண்ணாசாமி :: பட்டம் இல்லாமல் தலைவரா... தலைவர் ஒரு சிறந்த புகைப்பட கலைஞர் என்பதால் அவரை கலைஞர். முகமூடி என்று அழைப்பதா அல்லது எதிர்காலத்தில் அவரது சேவையை பாராட்டி யாராவது டாக்டர் பட்டம் கொடுக்கத்தானே போகிறார்கள், அதனால் அவரை மருத்துவர். முகமூடி என்று அழைப்பதா...

மிக முக்கிய அறிவிப்பு :: எங்கள் கட்சிக்கு என்று நாங்கள் கேட்ட பச்சோந்தி அல்லது குரங்கு சின்னத்தை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது தேர்தல் ஆணையம்... இன்னும் இரண்டு நாட்களுக்குள் தராவிட்டால் தாயகம் ..ச்சே.. தமிழகம் பசுமையாக இருக்காது... 5,6 பேரை தீக்குளிக்க வைத்து மேடை போட்டு அழும் அபாக்கிய நிலைக்கு என்னை தள்ளிவிடாதீர்கள்

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


P.M.K Thalaivar Vazhga...
 



***************
comment by ஞானபீடம்
****************

//நிறுவன தலைவர்: முகமூடி//

//ராமநாதபுரம், கோவை, நெல்லை, மும்பை ஏரியா பிரதிநிதிகள் :: தலைவருக்கு குடும்பமாக இருக்க விருப்பப்படும் அழகான பெண்மணி (கள்)....//

//கொள்கை பரப்பு செயலாளர் : ... அழகான இளம்பெண்கள்... //

//பட்டம் இல்லாமல் தலைவரா... கலைஞர். முகமூடி என்று அழைப்பதா அல்லது ... மருத்துவர். முகமூடி என்று அழைப்பதா...//


ச்சே... நார்மலா, பேசறப்பதானே வாய் திக்கும்; எனக்கென்னவோ இன்னக்கின்னு பாத்து இந்த எழுத்து திக்குது.

ஆங்... பட்டம் கே...க்கேட்டாரே... முகமூடி...
இ...இ...இப்டி குடுத்தா எப்டி? அது...

மா...மா.... மருத்துவர் முகமூடி அ... அப்டீன்னு ! ;-)

---------------
விளம்பரம்
---------------


ஒரு சரித்திரம் இங்கே எழுதப்பட்டுள்ளது... வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள்

***************
comment by ஞானபீடம்
****************
 



// P.M.K Thalaivar Vazhga... // நன்றி அனானி... ஆனாலும் இப்படி இங்க்லீஸ்ல கூப்பிடரீங்களே, வேற ஆரும் கோச்சிக்க மாட்டாங்களா??
 



வாங்க ஞானபீட (இன்னிக்கின்னு பாத்து எழுத்து திக்குது... இந்த ம்கற வார்த்தை வாய்லயும் வர மாட்டேங்குது தட்டச்சிலயும் வர மாட்டேங்குது...

அப்புறம் மொத மொத பட்டம் கொடுத்திருக்கீங்க... (பட்டமா முக்கியம், அத கொடுக்கற அன்புதான் முக்கியம்... மகனே வெளில வா) ஏதாவது ஒரு பதவிய எடுத்துகுங்க... உங்க விளம்பரத்துல பாத்தேன்... சம்பந்தம் இல்லாம் படம் போட்ருக்கீங்க... தர்ம அடி வாங்க வாழ்த்துக்கள்... (அடுத்த பதிவு வர வரை இந்த விளம்பரம் தொடருமே....)
 



பதவி தரேன்னு சொல்லிட்டு இப்ப விளம்பரம் கொடுத்துருக்கறது எதுக்காக?

அது என்ன இளம் பெண்கள்?

அதுவும் அழகான ?
 



கொபச பதவி உங்களுக்குத்தான் துளசியக்கா... விளம்பரம் ஊர ஏமாத்த.. ஒரு கவர்ச்சிக்காக அப்படி டகால்டியா கொடுக்கறது
 



உங்களைய தாக்கிப் பேச எதிர்கட்சித்தலைவி போஸ்ட் ஏதுனா இருக்குதா?., ச்சே .. இதென்ன கேட்டுகிட்டு., எடுத்துக்குவமில்ல?. இத்தன மனைவிகளா உங்களுக்கு?., ஒரே ஒரு அம்மாவோட தொலைபேச ஏற்பாடு செய்யுங்க தொலைவ... அய்யோ... தலைவரே... அப்புறம் உங்களுக்கு கட்சி ஆபிஸ்தான் கதி!!. ப.ம.க வா?...ம்... என்னா கிருத்துருவம்?.
 



ஆக அப்டிபோடு எதிர்கட்சி தலைவியா ஆகிட்டீங்க... வாழ்த்துக்கள்... இந்த பதவி கொஞ்ச நாள்தான் என்சாய் பண்ணிகோங்க.. அப்புறம்தான் நாங்க உங்க்கூட கூட்டு சேர்ந்துக்குவோம்ல... (ஆமா அது என்னா நாங்க என்னமோ ஆச்சிய... ச்சே ஆட்சிய பிடிச்ச மாதிரி நீங்க எதிர்கட்சிங்கறீங்க... ப.ம.க என்னிக்குமே ஆட்சிக்கு வராதுங்க... ஆட்சியில இருக்கரவங்களோட கூட்டணியா இருப்போம்... எங்க கொள்கையிலேயே இருக்குதே)
 



எனக்கு ஒன்னும் பெரிசா வேனாம்.. சின்னதா ஒரு பொருளாளர் பதிவி போதும்.. அப்புறம் நம்ம கட்சி கொடி என்ன கலருப்ப்பா??
நம்ம சிவகாசி ஜெயாலட்சுமி யா கான்டாக்ட் பன்னுங்க..ஒரு போஸ்ட்டிங் தந்துடலாம்.. !
வீ எம்
 



//மகளிர் அணி :: புடவை கட்டி விமான நிலையத்தில் வரவேற்பு கொடுத்த அனுபவம்.//

விமான நிலையத்தில் மட்டுமல்ல கோர்ட் வாசலிலும் "வரவேற்பு" கொடுத்த அனுபவம்

ஆக மொத்தம் ஒரு கட்சியையும் விடாம தாக்கீட்டீரு! பாத்துவே! ஆட்டோ வந்துடப் போவுது வீட்டுக்கு!
 



எங்கள் திமுக(திட்டுவோர் முன்னேற்றக்கழகம்)வின் கொள்கைகளெல்லாம் காப்பி அடித்த உங்களை நம்ப தமிழர்கள் என்ன பீஸாவால் அடித்த பிண்டங்களா ? இல்லை சோற்றை சாப்பிடும் சொந்தங்கள் ..
 



எங்கேயோ தீய்ந்த வாசனை வருகின்றதே என்று பார்த்தேன், அது இங்கிருந்து தானா?
 



வீ.எம்... உங்க பேச்ச பாத்தா சம்பாரிக்கலாம்னு நினக்கிற மாதிரி தெரியுதே.... நம்ம கட்சில பொருளாளர் பதவிதானுங்கோ ரெம்ப கஷ்டம்... நம்ம உண்டிய ரொப்பரதுகுள்ள மூச்சு முட்டிடும்... நம்ம கட்சி கொடி எல்லாம் ரெடிதான்... ஆனா அத இப்பவே பாத்தா எல்லாம் பேஜாராயிடுவாங்கோ... அதான் பொதுக்குழு கூட்டத்துல ரிலீஸ் பண்லாம்னுட்டு

அப்புறம் நம்ம செயலட்சுமிதான் போலீஸ் மந்திரி... போலிஸ எல்லாம் ஒரு கட்டுகுள்ள வச்ச அனுபவம் உண்டே...
 



ஹாய் கோபி... நம்ம மகளிர் அணி மட்டும் ரெடியாவட்டும்... அப்புறம் ரெயில்வே டேஷன், பஸ்ஸ்டாண்டு ஒரு இடம் விடாம அல்லாருக்கும் வரவேற்பு கொடுத்திர மாட்டோம்.... அப்புறம் ஒரு விசயம்... ஏம்பா ஆட்டோவ எல்லாம் ஞாபகப்ப்டுத்தி பேஜார் பண்றீங்கோ...
 



எதிரிக்கட்சி தலைவர் திமுக. லாடு வழக்கம் போலவே பொய்யான பிலாக்காணம் பாடி நம்மை நோகடிக்க முயற்சி செய்கிறார்... இதை தொடர்ந்தால் அவரை இரவு நேரத்தில் கைது செய்ய வேண்டி வரும் என்று எச்சரிக்கிறேன்... (மருமகன், டிவி கேமரா எல்லாம் ரெடியாக வைத்துக்கொள்ளவும்)
 



நம்ம கட்சில PRO போஸ்ட் இருக்கு எடுத்தக்கறீங்களா குயிலி... (கட்சி மாறுரோமேன்னு குற்ற உணர்ச்சி எல்லாம் வேணாம்... உங்க சொந்தம் யாருக்காவது மந்திரி பதவி தாரேன்)
 



அடுத்த தேர்தலில் எல்ல இடங்களுக்கும் சொந்தக் காரங்க இருக்கங்களா.. நான் வேணா அமெரிக்காவையே தொகுதியாக்கி நிக்கவா..(தொகுதி சீரமைப்புல இதயும் சேர்த்து விட்டுருங்க) தமிழ்மணதில ஓட்டு பொட்டுடுவாங்க.. அப்படியே ஆதிகேசவன் போல தொழில் தொடங்கலாம்.. புஷ் கூட கூட்டணி வச்சி இந்தியாவ நல்ல வெலக்கி வித்துடலாம்..பில் கேட்ஸ் வாங்கிக்குவார்.

எப்படி திட்டம்..

விச்சு

பன்னாடை கட்சின்னு பேரு கிடைக்கும்..(அய்யோ.. பன்னாட்டு கட்சின்னு.. ) விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்வது எப்படின்னு ஒரு வகுப்பு நடத்தலாம்.. இந்தியால இருந்து செஞ்சு தரோம்ன்னு ஊழல் BPO நடத்தலாம்.. பட்டம் பதவி பற்றி சொன்னா இன்னும் நிறைய திட்டங்கள் இருக்கு....
 



நம்ம கட்சிக்குன்னு ஒரு சுப்ரமணிய சாமி இல்லாத குறையை போக்க வந்த vishytheking ஐ வருக வருக என்று பமக சார்பில் வரவேற்கிறோம்
 



வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முகமூடி வால்க!!!

வருங்கால ப்ரிட்டிஷ் இளவரசர் குட்டி முகமுடி (2,3) வால்க!!!

வருங்கால இந்திய பிரதமர் இராமநா...அஹெம்..
சாரி, தலீவா.. மன்சுல நினச்சது வெளில வந்துருச்சு!!
 



To
the Founder,
Chameleon people party

from
Chameleon

(since this is a inter-party communication, english can be accepted; I assure you i will not speak/walk/talk/breath english in front of public)

I wish to apply for the #2 position in your party.

my credentials are:

1. I dont have a policy, not even an LIC policy

2. I can support anybody you show.

3. I can create bent and twisted logic to justify your position.

4. I fluently use third class language

5. I have 420 cases pending against me in various courts, including tennis court.

6. I can use thiruppaachi veecharuva to cycle chain, soda bottle and RDX effectively.

In case of my appointment, i am willing to change my name to anbuchcheziyan or nettazhagan.

yours OBEDIENTLY,

chamelion

my titles:
. Honorary Engineer.
. puratchith thalapathi
. moscowaar
. inamaana pachondi.
 



அடேங்கப்பா சுரேஷ்... உங்க தகுதிக்கு தலைவர் பதவி ஒன்னுதான் தரணும்.. ஆனா அத தொண்டர்கள் வற்புறுத்துனதுனால பெரிய மனசு பண்ணி நான் வச்சிகிட்டேன்... வேணும்னா 'துணை பொது செயலாளர்' பதவி ஒன்னு ஏற்படுத்திடலாம்... நம்ம #2 வையும் மேடைக்கு மேடை உங்கள புகழ்ந்து பேச சொல்றேன்... என்ன ஒ.கே வா..
 



// வருங்கால இந்திய பிரதமர் இராமநா // என்ன இராமநாதன்... கஞ்சா கேஸ் வேணுமா...
 



நன்றி மூர்த்தி... வேலை பளு காரணமாக முன்பு போல வலையில் நிறைய நேரம் செலவழிக்க முடிவதில்லை... இப்பொழுதுதான் நீங்கள் வலையேற்றம் செய்ததை பார்த்தேன்.... மிகவும் நன்றி...
 



பதிவர் 1: அண்ணே வலைப்பதிவில புதுசா கட்சி ஆரம்பிச்சிருக்காங்க தெரியுமா?
பதிவர் 2: சே....சே.... தீஞ்ச நாத்தம் தாங்க முடியலை... வயிறு எரிஞ்சி கருகிடுச்சி போல
பதிவர் 1: அண்ணே... கட்சி ஆரம்பிக்கறதுக்கும் தீஞ்ச நாத்தத்துக்கும் என்ன சம்மந்தம்?
பதிவர் 2: புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரி....

"நம்ம" கட்சிக்கு மேற்கண்ட இலவச விளம்பரம் குழலி வலைப்பதிவில..

//நம்ம கட்சில PRO போஸ்ட் இருக்கு எடுத்தக்கறீங்களா குயிலி... (கட்சி மாறுரோமேன்னு குற்ற உணர்ச்சி எல்லாம் வேணாம்... உங்க சொந்தம் யாருக்காவது மந்திரி பதவி தாரேன்) //

அவரையும் வரவேற்றதுக்கு நன்றி.. அவர் பமக ல இருந்து பமக தான் வரப்பொகிறார்.. இதுல கட்சி மாற்றம் என்ன கவலை என்ன..குற்ற உணர்ச்சி என்ன.

அன்புடன் விச்சு
 



விஷி... நம்ம கட்சின்னு சொல்லி புல்லரிக்க வச்சிட்டீங்களே... உங்க கழக பாசம் என் கண்ணை மறைக்குது (ஆனந்த கண்ணீர்)

//அவரையும் வரவேற்றதுக்கு நன்றி.. அவர் பமக ல இருந்து பமக தான் வரப்பொகிறார்.. இதுல கட்சி மாற்றம் என்ன கவலை என்ன..குற்ற உணர்ச்சி என்ன.// நெத்தியடி அடிச்சீங்க..

அப்புறம் நாமலும் வலைப்பதிவு செய்திகள் போட்டாச்சி... பாத்தீங்களா?
 



கல்கி செய்தி பார்த்தேன்.. வாழ்த்துக்கள் முகமூடி..
 



நன்றி தாஸ¤... எதிர்காலத்தில் அல்லாரும் 5 நிமிட் பிரபலமாயிருப்பாங்கோன்னு ஒரு இங்கிலீஸ்காரர் சித்தாந்தம் ஒன்னு சொல்லிகீறாரு... அது இப்போ நடக்குது போல
 



சரி, உங்க கருத்து ??